Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. படாம், இந்தோனேஷியாவின் படாம் தீவுப்பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 6 பயங்கரவாதிகள் சிக்கினர். அவர்கள் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், இவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதி பஹ்ருன் நயிமுடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. மேலும் படாமில் இருந்தவாறே சிங்கப்பூரில் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. சிங்கப்பூருக்கு மிக அருகே வெறும் 15 கி.மீ. தொலைவிலேயே படாம் இருப்பதால் ராக்கெட் வீச்சு சாத்தியப்படும் என பாதுகாப்பு வல்லுனர்கள் கூறியுள்ளனர். படாமில் இருந்து சிங்கப்பூருக்கு படகு போக்குவரத்து நடக்கிறது. சுற்றுலா பிரதேசங்களான இந்த பகுதிகளில் மக்கள் அடிக்கடி கூடி தங்கள் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். எனவே இந்த பகுதிகள…

  2. இங்கிலாந்து நாட்டின் Derbyshire என்ற இடத்தில் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு பயங்கர விபத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 42 வயது தந்தை ஒருவர் தன்னுடைய 11 வயது மகளுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் அவருடைய மனைவி, தனது 9 வயது மகனுடன் இன்னொரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். இருவரும் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். முன்னாள் சென்று கொண்டிருந்த கார், திடீரென சாலையை விட்டு விலகி, ஓட்டுனரின் கட்டுப்பாடை இழந்து, அருகிலுள்ள ஆற்றில் விழுந்து கவிழ்ந்தது. பின்னால் வந்த அவருடைய மனைவியின் காரும், அதேபோல கட்டுப்பாட்டை இழந்து, அதே ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் இரண்டாவது காரில் வந்த மனைவியும், மகனும் முதல் கார…

    • 0 replies
    • 428 views
  3. 2012 லும் அதன் பிற்பகுதிகளிலும் உலகில்மாற்றம் வருமா? காண்ஓிள பார்க்க: http://freedocumentaries.org/theatre.php?f...amp;wh=1000x720

    • 0 replies
    • 1.1k views
  4. 'புன்னகையில் தொடங்குகிறது அமைதி' : இன்று உலக அமைதி தினம் உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் திகதி, உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1981இல், இத்தினம் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. உலகில் வன்முறை அதிகரிப்பதை தவிர்த்து அமைதி நிலவ, ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. இன்றைய சூழலில், ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் அனைத்து துறைகளிலும் போட்டி போடுகின்றன. இந்த போட்டி ஆக்கபூர்வமாக அமைந்தால் பாராட்டுக்குரியது. மாறாக சில நாடுகள், ஏனைய நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு பதில், பகைமை உணர்வுட…

  5. கோழைத்தனமும் ஊழலும் நிறைந்த இந்தியா உன் தூதரகத்தை மூடு மலேசியாவில் தமிழர்கள் கர்ச்சனை. [படங்கள்] மலேசியா தலை நகரம்கோலாலம் பூரில் அமைந்துள்ள இந்தியா தூதரகம் முன்பு தமிழர்கள் நேற்று முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். இதில் ஈழ தமிழருக்கு தமிழீழம் தான் ஒரே தீர்வு என போராட்டத்தின் போது மக்கள் தெரிவித்தனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13325:malesiya-news-13-03-2013&catid=37:india&Itemid=103 Share this post

    • 3 replies
    • 587 views
  6. சான்டா கிளாரா (கலிபோர்னியா): நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குடும்பச் சண்டை காரணமாக இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவரும் தற்கொலை செய்து கொண்டு விட்டார். நீலகிரி மாவட்டம் அய்யன்கோலி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன். இவரது குடும்பத்தினர் கலிபோர்னியாவின் சான்டா கிளாரா நகரில் வசித்து வருகின்றனர். தேவராஜன் குடும்பத்தினருக்கும், அவரது உறவினரான அசோகன் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. அசோகனும் குடும்பத்துடன் சான்டா கிளாராவில்தான் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தேவராஜனின் வீட்டில் வைத்து …

    • 19 replies
    • 5.4k views
  7. இன்றைய நிகழ்ச்சியில், * பேர்ள் ஹார்பர் தாக்குதல் நடத்தப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகள். போரின் கொடூரங்கள் இனி கூடாது என்கிறார் ஜப்பானியப் பிரதமர். * பிரிட்டனிலும் தேர்தல் முறைகேடுகள். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் மீதும் பெரும் குற்றச்சாட்டு. * வெளியே தெரியா பொக்கிஷங்கள் இவை. சீனா மக்களின் வன விலங்குகளை ஆராதிக்கும் படங்கள் பற்றிய சில தகவல்கள்.

  8. இந்தோனீசியா நிலநடுக்கம்: சுலவேசி தீவில் ஏற்பட்ட 6.2 அதிர்வு, 26 பேர் மரணம், சுனாமி ஏற்படுமா? 15 ஜனவரி 2021, 06:09 GMT பட மூலாதாரம், EPA இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பல இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. வெள்ளிக்கிழமை இந்த பெரிய நிலநடுக்கம் நிகழ்வ…

  9. லெபனான் தீவிரவாதிகளுக்கு சிரியா ஆயுத சப்ளை செய்வதாக இஸ்ரேல் புகார் கூறிவந்தது. இதை தடுக்கும் விதமாக சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 2 நாட்களாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் வீசிய குண்டு டமாஸ்கஸ் நகரை அதிர வைத்தது. அங்குள்ள ராணுவ முகாம், ஆயுதக்கிடங்கு மற்றும் போர் விமான பிரிவு ஆகிய 3 இடங்களை குறி வைத்து வீசப்பட்டது. இந்த தாக்குதலில் சிரியாவை சேர்ந்த 45 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஆனால் இந்த தகவலை சிரியா வெளியிடவில்லை. எனினும் இந்த தாக்குதல் குறித்து ஐ.நா.சபைக்கு கடிதம் எழுதியுள்ளது. இதற்கிடையே சிரியா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கவலை தெரிவித்துள்ளார். இரு தரப்பினரும் மோதல் போக்கை கைவிட்டு அமைதி காக்கவேண்டும் என…

    • 0 replies
    • 497 views
  10. நைல் நதியில் அணை கட்டும் எத்தியோப்பியா! எதிர்ப்பு தெரிவித்து சூயஸ் கால்வாயை மூடும் எகிப்து! கெய்ரோ: உலகின் மிக நீளமான நதியான நைல் நதியின் குறுக்கே எத்தியோப்பியா நாடு அணை கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூயஸ் கால்வாய் வழியே போக்குவரத்தை தடை செய்ய முடிவெடுத்திருக்கிறது எகிப்து. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் பாயும் சர்வதேச நதியான நைல், 11 நாடுகளுக்கு பயனளிக்கிறது. குறிப்பாக எகிப்தும் சூடானும் நைல் நதியால் பெரும் பயனடைகின்றன. அதே நேரத்தில் எத்தியோப்பியாவோ மின் உற்பத்திக்காக புதிய அணை ஒன்றை கட்டப் போவதாக அறிவித்து நீரின் போக்கை திசை திருப்பவும் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு எகிப்தும் சூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இத்தாலி மற…

  11. வன்னியில் மோதல் பிரதேசத்தில் நிலைமை மிக மோசமடைந்துள்ள கட்டத்தில், சூழலைச் சரிசெய்வதற்கு சர்வதேச சமூ கம் எடுத்த எந்த முயற்சியுமே பலன் தரவில்லை. எல்லாமே விழ லுக்கு இறைத்த நீராகிவிட்ட கட்டத்தில் பல்வேறு சர்வதேசத் தரப் புகளும் மாறி மாறி வெறும் அறிக்கைகளை வெளியிட்டு, வன் னியில் கொன்றொழிக்கப்படும் தமிழர்களுக்காக வெறுமனே நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லாதிக்க நாடுகள் கூட கொழும்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நீதியை நிலைநிறுத்த முடியாத கையறு சூழலில் வெறுமனே கையைப் பிச்ந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் பல நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முடியாமல் வெறுமனே பார்த்துக்கொண்டு வாளாவிரு…

    • 0 replies
    • 749 views
  12. 21 பில்லியன் டொலர் செலவில் உருவாகவுள்ள அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்பும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் திட்டத்திற்கு சுமார் 21 பில்லியன் டொலர் செலவாகும் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தச் சுவரை நிர்மாணிக்கும் பணிகள் சுமார் மூன்றரை வருட காலங்கள் நீடிக்கும் என்றும், சுவர்கள் மட்டுமல்லாது, இடையிடையே முட்கம்பி உட்படப் பலதரப்பட்ட வேலிகளும் அமைக்கப்படும் என்றும் தெரியவருகிறது. சர்ச்சைக்குரிய சுவர் நிர்மாணம் பற்றி தனது தேர்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்ட ட்ரம்ப், இதற்காக சுமார் 12 பில்லியன் டொலர்கள் செலவாகும் என்று அறிவித்திருந்தார். ஆனால்…

  13. நேத்து ராத்திரி - சுவீடனில... ஹம்மா.. இது டொனால்ட் டிரம்ப் ஸ்டைல். நேத்து ராத்திரி சுவீடனில நடந்த விசயத்தினை பாருங்கள்... நான் ஏன் பாதுகாப்பு தொடர்பில் அலெர்ட் ஆக இருக்கிறேன் என தெரிய வரும் என்று சொன்னாலும் சொன்னார் டிரம்ப். அவர் குறிப்பிடட நேத்து இரவு... அதாவது வெள்ளிக்கிழமை சுவீடனில் எந்த ஒரு தீவிரவாத நிகழ்வும் நடக்கவில்லை. இது குறித்து, அமெரிக்க அதிகாரிகளிடம், சுவீடன் அரசு விளக்கம் கேட்க.... முழித்த வெள்ளை மாளிகை... டிரம்ப் இடம் கேட்க... அதுதான் FOX நியூஸ்ல அப்படி சொன்னாங்களேப்பா, அதைத்தான் சொன்னேன்.. என்று நம்ம கப்டன் ஸ்டைல சொல்லி இருக்கிறார். அந்த நியூஸ்ல... சுவீடனில் அதிகமாக வரும் அகதிகளினால் உண்டாகும் பிரச்சனைகள். என்றே சொல்லப் பட்டது. தீவிரவாத…

  14. முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு (வயது 69) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். லக்னோவில் பிறந்த அருண் நேரு, நேரு குடும்பத்து உறவினராவார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது மிக முக்கிய நபராக இருந்தார். ராஜிவ் அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்றிருந்தார். அருண்நேருவின் ஆலோசனையின் பேரில் 1984ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமிதாப் பச்சன், சுனில் தத் மற்றும் மாதவ் ராவ் சிந்தியா ஆகியோரை ராஜிவ் களமிறக்கினார். இருப்பினும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் வி.பி.சிங்., ராஜிவ் அமைச்சரவையில் இருந்து வெளியேறிய போது அருண் நேருவும் விலகினார். வி.பி.சிங் முதலில் உருவாக்கிய ஜன் மோர்ச்சாவில் அருண் நேரு ஐக்கியமானார். பின்னர் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தள் அரசு அமைவதிலும் அருண் நேரு முக்கிய பங்கு வகித்…

  15. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * வடகிழக்கு ஆஸ்திரேலியாவை ராட்சத சூறாவளி ஒன்று தாக்கியதில் , ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம்; இதன் பாதிப்பு நீண்டகாலம் நீடிக்கும் என்று எச்சரிக்கை. * புவி வெப்பமடைவதை தடுப்பதற்காக ஒபாமா கொண்டுவந்த திட்டத்தை ரத்து செய்கிறார் டொனால்ட் ட்ரம்ப்; அமெரிக்க பொருளாதாரத்தை அது பாதிப்பதாக குற்றச்சாட்டு. * ஆப்ரிக்க பிள்ளைகள் தமது அடையாளத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் லண்டன் தாய்; இயற்கையான சுருட்டை முடியை நேசிக்க வலியுறுத்தி தொடர் பிரச்சாரம்.

  16. கொரோனாவின் தோற்றம், எங்கே என்பதைக் கண்டறிய... உளவு அமைப்புகளுக்கு 90 நாட்கள் காலக்கெடு! மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தோற்றம் எங்கே என்பதைக் கண்டறிய, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உளவு அமைப்புகளுக்கு 90 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸின் தோற்றம் தொடர்பான உறுதியான முடிவுக்கு வரத்தக்க வகையில், தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குங்கள்’ என கூறியுள்ளார்.’ கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டின் கடைசி பகுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இந்த வைரஸ் அந்த நகரத்தின் விலங்கு உணவுச்சந்தையில் இருந்து பரவியதாக கூறப்பட்டது. …

  17. காஞ்சிபுரம்: கல்பாக்கம் அருகே கடலுக்கடியில் எரிமலை இருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மைக் கழகத்தின் இணையத்தில் வரைபடம் உள்ளது. ஆனால் அரசு இதுகுறித்து எந்த பதிலும் தெரிவிப்பதில்லை என கல்பாக்கம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹிரோசிமா-நாகசாகி நினைவு தினமான இன்று கல்பாக்கத்தில், 'கல்பாக்கம் சுற்று வட்டார கிராம மக்களுக்கு அணு ஆற்றல் நகரியத்திற்கு வழங்குவதைப்போன்று தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். இனி கல்பாக்கத்தில் புதிய அணு உலைகள் அமைக்கக் கூடாது. மறுசுழற்சி என்ற பெயரில் மற்ற அணு உலைகளின் கழிவுகளை கல்பாக்கத்திற்கு கொண்டுவரக்கூடாது. கதிர் வீச்சு பாதிப்புகளை கண்டறியவும், கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் அனைத்து வசதிகளுடன் கூட…

    • 1 reply
    • 384 views
  18. இரான் நாட்டு அதிபர் தேர்தலில் கடுமையான போட்டிக்கு பிறகு எப்ராஹீம் ரையீசி, அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிகப்படியான வாக்குகள் பெற்று அவருக்கு சாதகமான சூழல் நிலவும் நிலையில், அவர் இரானியர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். இரானின் உச்ச நீதிபதியும் போட்டியிடும் 4 வேட்பாளர்களில் ஒருவருமான எப்ராஹீம் ரையீசி 62 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அவருக்கு வீழ்த்தமுடியாத முன்னிலையை தந்துள்ளது. எனவே கடும்போக்காளரான ரையீசி இரானின் அடுத்த அதிபர் ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பல வேட்பாளர்கள் போட்டியிடுவதில் இருந்து தடை செய்யப்பட்ட நிலையில், மற்ற மூன்று வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு ரையீசி முன்னிலை பெற்றுள்ளார். மிகப் பழமைய…

  19. சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா: வூஹானில் 1.1 கோடி பேருக்கு பரிசோதனை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சிறிய எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதால் சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கோவிட்-19 பரிசோதனை நடத்த அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டின் இறுதியில் உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று இங்குதான் கண்டறியப்பட்டது. அதன் பின்பு சுமார் 1.1 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த நகரம் உலகெங்கும் பேசுபொருள் ஆனது. வூஹானில் ஓராண்டு காலத்துக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் பாதிக்கப்பட்டது கண்டறியப்படாத சூழல…

  20. மேல்நிலை பாடசாலைகளில்... பெண்கள், கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை ஆப்கானிஸ்தானில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேல்நிலை பாடசாலைகளில் பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். அத்தோடு கற்பித்தல் நடவடிக்கைகளில் பெண் ஆசிரியர்கள் பங்குகொள்ள முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த செயற்பாடு காரணமாக மாணவிகளின் கல்வி முற்றாக ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக 1990 ஆம் ஆண்டு ஆட்சிபுரிந்த தலிபான்கள் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாரிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் விவகார அமைச்சினை மூடியுள்ள தலிபான்கள், அதற்கு பதிலாக முஸ்லீம் சட்டங்களை அமுல்படுத்தும் திணைக்களமாக அதனை …

  21. இந்தியாவில் புண்ணாக்கு ஏற்றுமதியில் வீழ்ச்சி புதுடில்லி: நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, சென்ற ஜூலை மாதத்தில், 1.77 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 2.83 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 37 சதவீதம் சரிவடைந்துள்ளது என, இந்திய எண்ணெய்உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சோயா புண்ணாக்கு:மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 36.42 சதவீதம் சரிவடைந்து, 1.07 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இதுகுறித்து, சோயா பதப்படுத்துவோர் கூட்டமைப்பு (எஸ்.ஓ.பி.ஏ.,) வெளியிட்டுள்ள அறிக்கை :சென்ற ஜூலை மாதம், கால்நடை தீவனம் தயாரிக்க பயன்படும், சோயா புண்ணாக்கின் ஏற்றுமதி, 1.0…

    • 15 replies
    • 1.1k views
  22. வடகொரியாவின் கிம் ஜோங் உன்: 'அமெரிக்காவின் அச்சுறுத்தலை முறியடிக்க வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்குவோம்' 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போவதாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம் என்றும் அந்நாட்டு அவர் தெரிவித்துள்ளார். தற்காப்புக்காக மட்டுமே ஆயுதங்களைப் பெருக்குவதாகவும் போரைத் தொடங்குவது வடகொரியாவின் நோக்கம் அல்ல எனவும் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். திங்கள்கிழமையன்று ஏவுகணைகள் உள்ளிட்டவ…

  23. முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசுக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து கூட்டம் நடத்துவதாக முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் கேரள அரசைக் கண்டித்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட மதுரை கண்டனக் கூட்டத்தை திமுக திடீரென தள்ளி வைத்து விட்டது. முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக வனப்பகுதியில் ஆய்வு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி வழங்கினார். இதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் மதுரையில் நவம்பர் 1-ந்தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. அறிவித்திருந்தது. இந்த நிலையில் டெல்லியில் திடீரென மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச…

  24. ஆப்பிரிக்க யானைகள் அடுத்த பத்து வருடங்களுக்குள் 30 நாடுகளில் அழிந்துபோய்விடும் என்பதுதான் விலங்கு பாதுகாப்புக் குழுக்களின் தற்போதைய மிகவும் முக்கியமான எச்சரிக்கை . யானைத்தந்தத்துக்காக பலாயிரக்கணக்கான யானைகள் வருடாந்தம் அழிக்கப்படுவதாகவும், கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவுக்கு இது அதிகமாகும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக சீனாவில் யானைத்தந்தத்துக்கான தேவை அதிகமாகக் காணப்படுகிறது. இவை குறித்த பிபிசியின் செய்திப் பெட்டகம். http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/10/131019_africanelephant.shtml

  25. உயிரைப்பணயம் வைத்து மத்தியதரைக்கடலில் பயணித்த ஆயிரம் குடியேறிகள் ஒரே நாளில் மீட்பு! ஆட்கடத்தல் படகுகளை அழிப்பதன் மூலம் இவர்களின் எண்ணிக்கையை குறைக்க இத்தாலிய கடற்படை முயற்சி; பிரெகெஸிட்டுக்குப்பின் ஆசிய நாடுகளில் புதிய வர்த்தக வாய்ப்புகளை நாடும் ஐக்கிய ராஜ்ஜியம், ஆனால் மூடப்பட்ட சீன சந்தையின் கதவுகள் பிரிட்டனுக்குத் திறக்குமா? மற்றும் வானிலிருந்து வரும் பாதுகாப்பு! பிரிட்டனின் புத்தம்புது ஆளில்லா விமான காவல்துறை குறித்த பிபிசியின் பிரத்யேக படப்பிடிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.