உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26619 topics in this forum
-
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது வவுனியா அலுவலகத்தை நேற்றுடன் மூடியுள்ளது. இதன்படி வட பகுதியியில் இயங்கிவந்த ஐ.சி.ஆர்.சி.யின் ஒரேயொரு அலுவலகத்தின் பணிகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்தவாறு தமது பணிகளை முன்னெடுக்குமாறு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினையடுத்தே வவுனியா அலுவலகத்தை மூடி விடவும், கொழும்பு அலுவலகத்தின் மூலம் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானித்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சீ.ஆர்,சி.யின் கொழும்பு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பாதுகாப்பு சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு உதவுவதற்கென 1987ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் தமது அலுவலகத்தை திறந்தது. 1989 ஆம் ஆண்டு முதல் வவுனியா பிரதேசத்தில் ஐ…
-
- 1 reply
- 929 views
-
-
கொழும்பில் இருந்து வவுனியாவுக்கான பணிகளை மேற்கொள்ளுமாறு அரசு விதித்த அழுத்தம் காரணமாக, தமது வவுனியா அலுவலகத்தை மூடியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகம் மூடப்பட்டதுடன் பின்னர், மன்னார் அலுவலகமும் மூடப்பட்டது. இந்த நிலையில் வடபகுதியில் இயங்கி வந்த ஒரே அலுவலகமான வவுனியா அலுவலகத்தையும் மூட நேர்ந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 1989 ஆம் ஆண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா அலுவலகம் இயங்கி வந்தது. யுத்தத்தின் பின்னர், இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரி நடவடிக்கைகளை வவுனியா அலுவலகம் மேற்கொண்டு வந்ததது. கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்…
-
- 1 reply
- 713 views
-
-
லிபியா மீதான தாக்குதல்களுக்கு சீனா, இந்தியா, ரஸ்யா என்பன எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடைபெற்றுவருகின்றன. பிரான்சின் தாக்குதல் விமானங்கள் கடந்த மூன்று நாட்களில் கிட்டத்தட் 10 தாங்கிப்படையணிகளை அழித்துள்ளதாக பிரான்சின் பாதுகாப்பமைச்சர் Gérard Longuet தெரிவித்துள்ளார். லிபிய மக்களைக் காப்பதற்காக கவசவாகன மற்றும் தாங்கிப்படையணிகளைத் தாக்கியழிப்பதாகக் கூறினார். எந்த வழிமுறைகளிலாவது மக்கள் காக்கப்பட வேண்டுமென்பதே 1973ன் ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானமாகும். இதையே நாம் நடைமுறைப் படுத்துகின்றோம். கடாபியின் அரசு ஒரு மூடிய ஒருவழிப்பாதையினுள் சிக்கியிருப்பதாகக் கருத்துத் தெரிவித்த அவர் இந்தப் போர் லிபிய அரசின் ஆட்சியை உடைத்து ஜனநாயகம் மலர …
-
- 4 replies
- 906 views
-
-
பிரிட்டனில் ஆளும் கூட்டணி அரசாங்கம் மேற்கொண்டுள்ள பொதுச் செலவின குறைப்புக்களை கண்டித்து நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தியுள்ளனர். இந்தப் பேரணியில் சுமார் இரண்டரை லட்சம் பேர் வரையில் கலந்துகொண்டதாக தொழிற்சங்க காங்கிரஸ் கூறுகிறது. 2003 ம் ஆண்டில் இராக் போருக்கு எதிராக நடத்தப்பட்ட பெரும் போராட்டத்துக்கு பின்னர் இந்தப் பேரணியே மிகப் பெரியளவில் நடந்துள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசாங்கம் பொதுப் பணிகளுக்கான செலவினங்களில் மேற்கொள்ளும் குறைப்புக்களை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மக்கள் மத்திய லண்டன் பகுதியூடாக ஹைட் பார்க் மைதானத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர். போராட்டத்தில் சிலர் காவல்துறை வாகனத்தை தாக்கினர்கன்…
-
- 1 reply
- 442 views
-
-
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் கடைசியாக ரிலீஸ் ஆவதும் அதில் குளறுபடிகள் குத்தாட்டம் போடுவதும் தேர்தலுக்குத் தேர்தல் அரங்கேறும் சம்பிரதாயம். இருந்தாலும், இந்தத் தேர்தலில் கொஞ்சம் ஓவர்! காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளில் 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட... உடனடி எதிரொலியாக பாடை கட்டுவது, கொடும்பாவி எரிப்பு, கொடிக் கம்பங்கள் சாய்ப்பு, சத்தியமூர்த்தி பவன் சூறையாடல் என்று கதர் வேட்டிகள் கபடி ஆடுகின்றன. 'கூட்டணி சேரவும் தெரியலை... ஸீட் ஒதுக்கவும் தெரியலை’ என்று கொந்தளிக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். இந்தப் பட்டியலில், இப்போது இருக்கும் 28 எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. வழக்கம்போலவே பட்டியலில் ஜி.கே.வாசனின் 'கை’யே ஓங்கி …
-
- 1 reply
- 1.2k views
-
-
அரசாங்கத்தின் வியூகங்கள் ஜனநாயக சூழலுக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன. தற்போது வடக்கு மக்கள் அனுபவிக்கும் இராணுவ அடக்கு முறையிலான ஆட்சியை எதிர்வரும் நாட்களில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்கள் அனுபவிக்க நேரிடும் என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கான முன்னேற்பாடே உள்ளூராட்சி சபைகளை ள்ளடக்கிய நகரக் கூட்டுத்தாபனமாகும். இதற்கு ஆளுனராக நியமிக்கப்படுபவர் 100 வீதம் இராணுவ அதிகாரியாகவோ அல்லது சர்வாதிகாரியாகவோ அல்லது சர்வாதிகார கொள்கையுடையவராகவோ இருப்பார் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தற்போதைய அரசாங்கத்தின் காய் நகத்தல்கள் தொடர்பாக ஜே.வி.பி. கடந்த காலங்களில் கூறி…
-
- 1 reply
- 796 views
-
-
'நாகரிகம் இல்லாமல் உரத்த குரலில் பேசுகிறவர். தெருச் சண்டை, ரவுடியிஸம் என சகலத்துக்கும் ஈடு கொடுத்து அரசியல் செய்பவர். மேற்கு வங்க கம்யூனிஸ்ட்களையே ஒரு கை பார்க்கக்கூடியவர். மாநிலத் தொழில் வளர்ச்சிக்கே அடையாளமாக வந்த நானோ கார் தொழிற்சாலையை மாநிலத்தைவிட்டு விரட்டியவர்...’ என்று மம்தா பானர்ஜியைப் பற்றிப் பலவித கருத்துகள். ஆனால், அவரை விமர்சித்தவர்கள்கூட, அவரது தேர்தல் அறிக்கையைப் பார்த்து வாயடைத்துப்போய் உள்ளனர்! 'நல்லாட்சி’ என்ற தலைப்பில் அந்த 55 பக்கத் தேர்தல் அறிக்கையில், 'இது இலவசம், அது இலவசம்... வறுமையை ஒழிப்போம்... வேலை இல்லாத் திண்டாட்டம் போக்குவோம்’ என்று வெறுமனே கிளிப் பிள்ளை மாதிரி ஒப்புக்காக எதையும் சொல்லவில்லை. கடந்த 35 ஆண்டு கால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில்…
-
- 1 reply
- 728 views
-
-
அரசியல் மிக்ஸ்! இன்றைய நிலை!!!! இந்த அனானிங்க தொல்லை தாங்கலைப்பா. நான் பல்லிடுக்கில் சிக்கிய பாக்குதூளை பத்தி எழுதினதும் இவனுங்க ஆட்டம் தாங்கலை. இவனுங்க என்னா சொல்றாங்கன்னா என் அம்மாவை திட்டுவானுங்களாம் அதை நான் பிரசுரிக்கனுமாம். 4 பின்னூட்டம் அப்படி. பின்னாடி அதை ஏன் பிரசுரிக்கலைன்னு கேள்வி. உங்க கேள்வி நியாயம் தான். ஆனா என்னால பிரசுரிக்க முடியலை அனானி நாய்ஸ். பாவம் அம்மா, அது படு கிழவி, உங்க ஆசையை நிறைவேத்தி அது பாவத்தை ஏன் கொட்டிக்கனும்னு விட்டுட்டேன். அதை எல்லாம் விடுங்க. இப்ப பல்லிடுக்கில் சிக்கிய பாக்கு தூளுக்கு வ்ருவோம். இந்த அரசை எதிர்த்து போராட்டம்ன்னு ஆரம்பிப்பானுங்க பாருங்க. அங்க தான் காமடியே இருக்கு. "எனக்கு ஒபாமா மாதிரி சம்பளம் வேணும்"னு முதல்ல ஆர…
-
- 0 replies
- 719 views
-
-
அ.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளராக, தமிழகம் முழுக்க சூறாவளி பிரசாரத்துக்குத் தயாராகிக்கொண்டு இருந்தார் ராதாரவி. பத்தே பத்து தகவல்கள் சொல்கிறேன் என்று மடமடவென கொட்டத் தொடங்கினார். ''தமிழ்நாட்டு மக்களிடம் நான் சொல்லப்போகும் விஷயங்கள் இவைதான்'' என்கிறார்! ஐம்பெரும் தலைவர்கள் ''ராபின்சன் பூங்காவில் தி.மு.க-வை ஆரம்பித்தபோது, அறிஞர் அண்ணாவால் சுட்டிக்காட்டப்பட்ட ஐம்பெரும் தலைவர்கள்... நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், ஈ.வே.கி.சம்பத், கே.ஏ.மதியழகன், அன்பழகன் ஆகியோர்தான். இவர்களில் நெடுஞ்செழியன் மனைவி விசாலாட்சி, நடராசன் மகன் என்.வி.என்.செல்வம், மதியழகன் தம்பி கிருஷ்ணசாமி, மகன் முகிலன், சம்பத் மனைவி சுலோசனா என்று நான்கு பேரின் வாரிசுகளும் இப்போது அ.தி.மு.க-வில் அம்மாவு…
-
- 0 replies
- 584 views
-
-
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல ஸ்பைடர்மேன் என அழைக்கப்படும் மலையேற்ற வீரர் அலையன் ராபர்ட்டிற்கு உலகின் மிகவும் உயரமான கட்டடமான துபாயில்உள்ள பூர்ஜ்கலிபா கட்டடத்தில் ஏற நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் அலையன் ராபர்ட். இவர் அந்நாட்டின் ஸ்பைட்மேன் எனஅழைக்கப்படுகிறது. இவர் அந்நாட்டின் ஈபிள் கோபுரம், கோலாலம்பூரில் உள்ள இரட்டை கோபுரம், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் உள்ள கட்டடம் ஆகிய மிகவும் உயரமாக கட்டடங்களில் எந்தவித உபகரணங்களும் இன்றி ஏறி சாதனை படைத்தார். இந்நிலையில் உலகின் மிகவும் உயரமான கட்டடமான துபாயில் உள்ள பூர்ஜ் கலிபா கட்டடத்தில் ஏறி சாதனை படைக்க விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கான சாதனையை வரும் மார்ச் …
-
- 0 replies
- 436 views
-
-
உலக கோப்பை கிரிக்கெட் தற்போது கடும் உச்சக்கட்டத்தை தொட்டிருக்கிறது. பல கட்டமாக முடிந்து அரை இறுதியை எட்டியிருக்கும் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் இந்தியாவின் வெற்றி அதிக தொலைவில் இல்லை என்ற அபார நம்பிக்கையை வளர்த்துள்ளது. இந்த முறை இந்தியா உலககோப்பையை நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் இருந்து தட்டிப்பறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டம் என்றால் ஆர்வத்திற்கு சொல்லவே வேண்டாம். இரு தரப்பு ஆட்டம் யுத்தம் நடக்கும் போது யாருக்கு வெற்றி கிட்டும் என்ற முடிவை எதிர்நோக்கியிருப்பது போல் ரசிகர்கள் வரும் 30ம் தேதிக்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர். பஞ்சாப் மாநிலம் மொகாலியில் புதன்கிழமை நடக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்த…
-
- 0 replies
- 507 views
-
-
லிபியா அதிபர் கடாபி மக்கள் வெறுக்கப்பட்டு தற்போது பதவி விலகும்படி வலியுறுத்தப்பட்டுள்ளார். 68 வயதான இவர் கடந்த 42 ஆண்டுகளாக லிபியாவில் ஆட்சி நடத்தி வருகிறார்.முதுமை நிலையை அடைந்துள்ள அவர் கடந்த 1994-ம் ஆண்டு அதாவது தனது 53-வது வயதில் தன்னை இளமை ஆக்கி கொள்ள அதிநவீன ஆபரேசன் செய்து கொண்டார். அப்போது அவர் உடல் குண்டாகவும், முகம் மற்றும் கழுத்து பகுதியில் சுருக்கங்களுடனும் காணப்படுவார். எனவே, இளைய தலை முறையினர் தன்னை வயதானவர் என கூறி வெறுத்து விடக்கூடாது. எப்போதும் தான் இளமையாக காட்சி அளித்து மக்கள் மத்தியில் கவர்ச்சி கதாநாயகனாக வலம் வரவேண்டும் என விரும்பினார். அதற்காக அதிநவீன ஆபரேசன் செய்து கொண்டார். அவருக்கு இந்த அறுவை சிகிச்சையை பிரேசிலை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜர…
-
- 0 replies
- 541 views
-
-
பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். சீனாவில் உள்ள நாஜ்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதற் கான ஆய்வை மேற்கொண் டுள்ளனர்.முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன. அது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் …
-
- 0 replies
- 440 views
-
-
லிபியா அதிபர் கடாபியை கொல்லும் திட்டம் ஏதும் இல்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதை தடுப்பதற்காக,அமெரிக்கா தலைமையிலான நேசப்படைகள் லிபிய இராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் இந்த தாக்குதலில் அதிபர் கடாபியின் மாளிகையும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் கடாபியை கொல்லும் திட்டம் ஏதுமில்லை என்று அமெரிக்க நாடாளுமன்ற தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஒபாமா தெரிவித்துள்ளார் http://tamil.webdunia.com/
-
- 0 replies
- 516 views
-
-
கதிர்வீச்சு அபாயம் காரணமாக ஜப்பான் உணவு பொருளுக்கு அமெரிக்கா மற்றும் சிங்கபூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் தண்ணீர், பால் மற்றும் உணவு பொருட்களிலும் கதிர்வீச்சு பரவியுள்ளது. இதன் காரணமாக ஜப்பானில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடி நீரை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று அந்நாட்டு அரசே மக்களை எச்சரித்துள்ளது. கதிர்வீச்சு தாக்கம் உள்ள பொருட்களை மனிதர்கள் சாப்பிட்டால் அவர்களையும் கதிர்வீச்சு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.எனவே கதிர்வீச்சு பாதித்த பொருட்களை அழித்து வருகின்றனர். இந்நிலையில் ஜப்பானில் இருந்து வெளி நாட்டுக்கு அனுப்பப்படும் பொருட்களிலும் கதிர்வீச்சு பாதிப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே இந்தியா…
-
- 0 replies
- 367 views
-
-
ஜப்பானிலிருந்து சீனாவுக்கு சென்ற சரக்கு கப்பலில் அணு கதிர் வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்பானில் கடந்த 11 ஆம் தேதி அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக அணு உலைகளில் பாதிப்பு ஏற்பட்டு அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜப்பான் அணு உலைகளில் ஏற்பட்ட அணு கதிர் வீச்சுக்கு பின்னர் அந்நாட்டிலிருந்து புறப்பட்டு சென்ற இருந்து சரக்கு கப்பல் ஒன்று சீனாவில் உள்ள ஜியாமென் துறைமுகத்துக்கு சென்றடைந்தது. அந்த கப்பலை சீனாவை சேர்ந்த கதிர்வீச்சு ஆய்வுத் துறை சோதனை நடத்தியபோது, வழக்கத்தை விட மிக அதிகமான அளவில் அந்த சரக்கு கப்பலில் அணுக் கதிர்வீச்சு பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கப்பலில் இ…
-
- 0 replies
- 462 views
-
-
-
- 0 replies
- 817 views
-
-
கனேடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: இன்று மாலையில் காப்பர் அரசாங்கம் கவிழும்! கனேடியப் பிரதமர் காப்பரின் கென்சவேட்டிவ் அரசாங்கத்தினது நடவடிக்கைகள் தங்களுக்கு எதிருத்தியினையினை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைக் காட்டும் வகையிலேயே தாங்கள் வாக்களிக்கப்போகிறோம் என கனேடிய எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்திருக்கும் நிலையில் இன்று மாலை காப்பர் அரசாங்கம் வீழ்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனேடியப் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் மற்றும் அவரது சிறுபான்மை அரசாங்கத்திற்கு எதிரான பாராளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டுவரப்பபோவதாக கடந்த வாரம் லிபரல் கட்சியினர் அறிவத்திருந்தனர். லிபரல் கட்சியினர் கொண்டுவரும் இந்த நம்பிக்கையி…
-
- 1 reply
- 826 views
-
-
ஏலம் விடும் விலை எனக்குப் பிடிக்காது, ஜாலமும் பிடிக்காது-கருணாநிதி தஞ்சாவூர்: திமுக தேர்தல் அறிக்கைக்குப் போட்டியாக நீ 4 என்றால் நான் 5 என்பேன். நீ 5 என்றால் நான் 6 என்கிறேன் என்று ஏதோ ஏலம் விடுவதைப் போல தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த ஏலம் விடுகின்ற வேலையை நான் விரும்பவில்லை. எனக்கு ஏலமும் பிடிக்காது. ஜாலமும் பிடிக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். தஞ்சாவூரில் நேற்று திமுக தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது: நாம் இன்றைக்கு தி.மு.க.வை ஆக்கப்பூர்வமாக அமைப்பு ரீதியாக, அயல்நாட்டாரும் பார்த்து வியக்கத்தக்க அளவுக்கு வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த இயக்கம் ஜனநாயகத்தின் அடிப்…
-
- 0 replies
- 426 views
-
-
பத்திரிகையாளர் கொலை – சந்தேக நபர் முன்னாள் உக்ரேன் அதிபர் தராக்கி, லசந்த, நிமலராஜன் குடும்பங்கள் வடிக்கும் கண்ணீருக்கு உலகம் பதில் தரும் நாட்கள் வரும்.. இன்றைய உக்ரேன் நாட்டு செய்திப் பத்திரிகைகளின் காலைச் செய்தி : உக்ரேன் நாட்டின் முன்னாள் அதிபர் லினோய்ட் குற்ஜ்மா சுமார் 12 வருடங்கள் சிறைத்தண்டனை பெறும் அபாயத்தை சந்திக்கவுள்ளார். இவர் கடந்த 1994 முதல் 2005 வரை உக்ரேன் நாட்டின் அதிபராக இருந்தவர். தேர்தல் மோசடி, ஊழல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களுக்கு சொந்தக்காரர். அக்காலத்தில் இவருக்கு எதிராக கடுமையான அரசியல் விமர்சனங்களை எழுதி வந்தவர் 31 வயதுடைய உக்ரேன் நாட்டு பத்திரிகையாளர் ஜோர்ஜி கொன்கேட்ஜ் என்பவராகும். இவருடைய எழுத்துக்கள் உக்ரேன் அதிபரின் சர்வாதிகார, ஜனநா…
-
- 1 reply
- 436 views
-
-
ரொறன்ரோ மருத்துவரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு ரொறன்ரோவின் குறிப்பிட்ட மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்குச் சென்ற 26 பெண்களை அந்த மருத்துவமனையின் மயக்கமருத்து ஏற்றும் மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியிருந்தார் எனக் குற்றம் சுமத்ததப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்களுக்கு நட்ட ஈட்டினை வழங்குவதற்கு குறிப்பிட்ட மருத்துவமனை முன்வந்திருக்கிறது. கடந்த மார்ச் 2010இல் தனது மூன்று பெண் நோயாளர்களை 62 வயதுடைய மருத்துவர் ஜொறேச் குட்னகுட் என்பவர் பாலியில் ரீதியாகத் துஸ்பிரயோகப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இந்த மருத்துவரால் தாமும் பாதிக்கப்பட்டதாக மொத்தமாக 26 பெண்கள் முறையிட…
-
- 0 replies
- 602 views
-
-
கிழக்கு மியான்மார் பகுதியில் இன்று ரிக்டர் அளவு கோலில் 7.0 என்று பதிவான பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் மையம் தாய்லாந்து, லாவோஸ் எல்லைப்பகுதிக்கு அருகே மலைப்பகுதியில் 10கிமீ ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதன் தாக்கத்தினால் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் கட்டிடங்கள் குலுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1103/24/1110324071_1.htm
-
- 2 replies
- 886 views
-
-
ஜப்பானிலிருந்து சீனாவுக்கு சென்ற சரக்கு கப்பலில் அணு கதிர் வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்பானில் கடந்த 11 ஆம் தேதி அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக அணு உலைகளில் பாதிப்பு ஏற்பட்டு அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜப்பான் அணு உலைகளில் ஏற்பட்ட அணு கதிர் வீச்சுக்கு பின்னர் அந்நாட்டிலிருந்து புறப்பட்டு சென்ற இருந்து சரக்கு கப்பல் ஒன்று சீனாவில் உள்ள ஜியாமென் துறைமுகத்துக்கு சென்றடைந்தது. அந்த கப்பலை சீனாவை சேர்ந்த கதிர்வீச்சு ஆய்வுத் துறை சோதனை நடத்தியபோது, வழக்கத்தை விட மிக அதிகமான அளவில் அந்த சரக்கு கப்பலில் அணுக் கதிர்வீச்சு பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கப்பலில் இருந…
-
- 0 replies
- 375 views
-
-
(CNN) -- A powerful earthquake hit Myanmar Thursday near its borders with China, Thailand and Laos, the U.S. Geological Survey said. The quake hit in eastern Myanmar, about 55 miles (89 km) north of Chiang Rai, Thailand, the survey reported. It had a magnitude of 6.8, the survey said, revising the estimate down from an initial reading of 7.0. One person was killed by a roof collapsing in Chiang Rai, Thailand's MCOT network reported, and tremors were felt in the capital Bangkok, 479 miles (772 km) south of the epicenter. It was a relatively shallow quake, which can be very destructive. The Geological Survey initially said the quake had a depth of 1…
-
- 0 replies
- 904 views
-
-
நிலநடுக்கம், ஆழிப்பேரலை, அணுமின்சார நிலையங்களில் அணு உலைகள் வெடிப்பு என்று அடுக்கடுக்காக சோதனைகள் வந்த நிலையிலும், உழைப்புக்கும், நேர்மைக்கும் ஜப்பானியர்கள் தரும் முக்கியத்துவம் நெகிழவைக்கிறது. நாட்டுப்பற்றும் நாணயமும் வியக்கவைக்கின்றன. ஜப்பானிய அரசு தன்னாலியன்ற முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் வட கிழக்கு கடலோரப் பகுதியில் இன்னமும் வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பவில்லை. சாலைகள் சீரமைக்கப்படாததால் தரைவழி போக்குவரத்தும், கடலில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களால் கடல் வழிப் போக்குவரத்தும், அணுக்கதிர் வீச்சால் வான் வழிப் போக்குவரத்தும் மேற்கொள்ள முடியாமல் கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இப்பகுதி இருக்கிறது. இதனால் மக்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து - மாத…
-
- 2 replies
- 1k views
-