கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5133 topics in this forum
-
மணல் சுமக்கும் கடற்கரை , இந்தக் கன்னம் சுமக்கும் கை விரல் , . நித்தம் உன் நினைவுகள் சுமக்கும் இந்த இதயம் என மெல்ல நீள்கிறது இந்த கடற்கரை காட்சிகள் இன்னும் என்னுள் கரை தொடாத அலைகலென கனக்கிறது கைரேகை முழுவதும் அழியாத உன் ஞாபகங்கள் !.. - பனித்துளி சங்கர்
-
- 0 replies
- 1.6k views
-
-
தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்! சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற ஒரு நாடகத்தொடக்க விழாவில் பேசிய ஒரு பட்டதாரி சிறு கதாசிரியர், சில்லையூர் செல்வராசனின் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது அவை வெறும் Blank Verse என்று குறிப்பிட்டாராம். இத்தகைய தீர்ப்பை அளிக்க, ஒருவருக்கு யாப்பிலக்கணம், தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் வாயைப் பிளந்தால் அவரது அறியாமையின் நாற்றந்தான் ஊரெல்லாம் பரிமளிக்கும். பட்டதாரிச் சிறு கதாசிரியரின் பேச்சு இதற்கு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. நமது நாட்டிலுள்ள 'மரபு'களில் ஒன்று, நாலு நூல்களை நெட்டுருப் போட்டு, நான்கு முறை நூன சித்தியும் ஐந்தாம் முறை மூன்றாம் வகுப்பில் முழுச் சித்தியும் பெற்றுப் பண்டிதரோ…
-
- 0 replies
- 817 views
-
-
எனது உலகம்... போரில் தொலைந்த நகரத்தைச் சுற்றிலும் சிதறிக்கிடக்கும் ஓலங்களால் என் உலகத்தை வனைந்துகொண்டு கண்ணீராய் அருவிகளில் வழிந்தோடும் எம் மக்களின் துயரங்களில் மூழ்கிக்கிடக்கிறது என் ஆன்மா என் மன நிலத்தில் சுழன்றடிக்கும் துயர்க்காற்றின் அணல் உடலெங்கும் பெருநெருப்பாய் எரிக்கிறது பசியால் வாடுமெங்கள் குழந்தைகளை நினைத்து முகில் உரசும் முகடுகளில் பெருங்குரலில் காற்று மோதி இரைகிறது வயல் நிலங்கள் நீளவும் எம் இனத்தின் துயரங்களை உதிர்த்தபடி பெயர் தெரியாத பறவைகள் பிணங்களைக் கட்டி இழுத்துக்கொண்டு கழுகுகளைச் சபித்தபடி செல்கின்றன மேகங்கள் எம் மக்களின் அவலங்களைக் காவிக்கொண்டு கோபமாய் அலைகின்றன நாய்கள் ஊளையி…
-
- 1 reply
- 1.5k views
-
-
நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது! எமக்குப் பின்னால் பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது! தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது வெண்பனி தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி எம் செவி வழி நுழைந்தது வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை ! சந்தடி ஓய்ந்த தெரு வழியே நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் ! இப்படியே எத்தனையோ இரவுகளில் விவாதிப்போம் நெடு நேரம் முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன் பிரிந்து செல்வோம் ! பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில் உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் ! பரணி... உன் நினைவுகள் தேய்ந்து கொண்ட…
-
- 0 replies
- 684 views
-
-
ஆண்மை ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதிய நேரம் தெருமுடக்கில் நீட்டிக்கொண்டிருந்தது அன்று விசித்திரப்பிராணியாகிச் சொல்லாமல் வகுப்பினின்று வெளிநடந்தேன் ஓடும் பேருந்தில் திடுக்குற்று விழிதாழ்த்தி அவமானம் உயிர்பிடுங்க கால்நடுவில் துருத்தியது பிறிதொரு நாள் வீட்டிற்குள் புகுந்து சோபாவிலமர்ந்தபடிக் காட்சிப்படுத்திற்று இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி இறைச்சிக்கடைமிருகமென வாலுரசிப்போனது பின்கழுத்தை நெருங்கி சுடுமூச்செறியும் போதில் ஈரம் படர்ந்து திகைப்பிருள் சூழ்ந்த உன் கண்களை நினைத்தபடி ‘குறி’ தவறாது சுடுகிறேன் இதழ்க்கடையிரண்டிலும் முளைக்கின்றன பற்கள் என் சின்னஞ்சிறுமியே! http://koodu.thamizhstudio.com/thodargal_14_15.php
-
- 0 replies
- 1.4k views
-
-
. எல்லாம் நிறைந்ததே வாழ்க்கை வாழ்க்கையின் எல்லா மணித்துளிகளும் சந்தோசமானவையல்ல எவன் ஒருவன் துன்பத்தை எதிர்த்து போராடுகிறானோ அவனே வாழ்க்கையில் வெற்றிபெறுகிறான் இறக்கும் திகதி தெரிந்து யாரும் பிறப்பதில்லை பிறந்த எல்லோரும் சாதனை படைத்து இறப்பதில்லை எதைக் கண்டும் அஞ்சாதே எதை செய்வதாக இருந்தாலும் ஆழமாய் யோசி யோசித்தது சரியா என்று இன்னொரு முறை யோசி உன்னை நீ நம்பு யாரலும் முடியாததைக்கூட முயற்சித்தால் உன்னால் முடியும் என்று நம்பு வாழத் தெரியாதவன் தற்கொலை செய்து இறந்து போகிறான் …
-
- 4 replies
- 1.1k views
-
-
இன்னொரு அநாதை தமிழ்மொழி, பஹ்ரைன் பசியை போக்கிக்கொள்ளவே பழைய சோறு கேட்டு பலபேர் வீட்டு வாசலில் போய் நின்றேன். ஒரு சிலர் சுடச்சுட சோருபோடுவதாக வீட்டுக்குள் அழைத்து விருந்தும் வைத்தனர், உண்ட மயக்கத்தில் உறங்கினேன் என்று அன்று நினைத்தேன் ஆனால் இன்று தான் தெரிந்தது என் கர்ப்பை சூறையாட ஒரு பிடி சோற்றையும் ஒரு துளி மயக்கமருந்தையும் தியாகம் செய்த தியாகிகள் என்று. எது எப்படியோ என்னைப்போல் இன்னொரு அநாதை வீதியிலே கையேந்தி ஊர்வலம் போக என் கருவறைக்குள்ளே ஒத்திகை பார்க்கின்றன. http://www.koodal.com/poem/tamil/kavithai.asp?id=1666&c=1&title=another-orphan&author=tamilmozhi-baharain
-
- 0 replies
- 1.7k views
-
-
எனது நாள்... வடதுருவத்து நடு நிசியில் விழித்துக் கொள்ளும் என் உயிர்ப்பறவை மனவறையின் சுவர்களைப் பிளந்து வெளியேறுகிறது கண்டங்களைத் தாண்டி என் ஊரின் வீதிகளில் காலாற உலாவித் தீர்ப்பதற்காய்... வழிமறிப்புச் சாவடிகள் கொழுத்தப்பட்ட வீதிகளில் பாரதியின் கனவுகளும் புதுவையின் கனவுகளும் கூட தூரத்தே பயணிக்கின்றன... பச்சை அரக்கர்கள் விரட்டி அடிக்கப்பட்டதாக எல்லோரும் மகிழ்வுடன் பேசிக்கொள்கிறார்கள் முன்னரைப் போல மனிதர்கள் யாரும் தங்கள் அடையாளங்களை சட்டைப்பைகளில் சரிபார்த்துக் கொள்ளாத வீதிகளில்... என் மனக்கப்பல் அசைந்தலைந்த தொடுவானம் பால் வீதிகளில் என் கற்பனைச் சிறகடிப்பின் பயணங்களைச் சேமித்துவைத்த வி…
-
- 6 replies
- 1.4k views
- 1 follower
-
-
முன்னாள் பெண் புலியின் கண்ணீர் கதை http://www.munainews.com/news/index.php?option=com_content&view=article&id=2676%3A2011-06-22-23-46-22&catid=59%3A2011-04-09-15-25-47&Itemid=107 இடம் பெயர்ந்த பின்னர் இடிந்து போன துயிலுமில்லமொன்றின் அருகிருந்து கைவிடப்பட்ட நிலையிலிருந்த லுமாலா சைக்கிள் ஒன்றை(க்) கண்டெடுத்தேன் துயிலுமில்லமருகே இருந்த மகிமையோ என்னவோ இன்று வரை துருப்பிடிக்காதிருந்தது சைக்கிள் வேகமும், அதற்கே ஊரிய வீரியமும் சிறிதளவு குன்றாது உந்தி மிதிக்க உருண்டோடி, இவ் உலகின் மேர்சிடேஸ் காரின் மோகத்திற்கு நிகரான சுகத்தை அது எனக்குத் தந்தது! முதன்மைச் சாலையென முன்பொரு காலத்தில் அழைக்கப்பட்ட கிளி நொச்சி…
-
- 0 replies
- 960 views
-
-
என் மதத்தை கேலி செய்தேன் மாற்று மதத்தான் அரவனைத்தான் என் இனத்தை குறைகூறினேன் மாற்று இனத்தவன் புகழ்ந்தான் எம் போராட்டத்தை இழிவுபடுத்தினேன் மாற்றான் முற்போக்குவாதி என்றான் எம் போராளிகளை காட்டி கொடுத்தேன் என்னை புலனாய்வாளன் என்றான் எம் இனத்தின் உரிமைகளை தடை செய்தேன் என்னை அமைச்சராக்கினான் எம் இனத்தின் எதிரிக்கும் எதிராக ஆயுதம் தூக்காதே என்றேன் அகிம்சாவாதி என்றான் என் சனத்தின் சனநாயகத்தை சாகடித்தேன் என்னை சனநாயகவாதி என்றான் என் இனத்தின் அவலங்களை கண்மூடி பாராமல் காதை பொத்தி கேட்காமல் வாயை மூடி பேசாமல் இருந்தேன் காந்தியவாதி நீர் காந்தியவாதி என்றான்
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
"சாக்காட்டின் சரிதை" அவர்கள் தமது உரிமைக்காக உடமைகளை மட்டுமல்ல உடலுறுப்புக்களையும் ஒப்பற்ற "உயிரையும்" ஒப்புக்கொடுத்திருந்தனர். அவர்களது தியாக வேள்வி நியாயத்தின் அடிப்படையில் நம்பிக்கையை முதலீடாக்கி நடத்தப்படுவதாக அவர்கள் மட்டுமல்ல உலகமும் நம்புகிறது. ஆனாலும் அவர்களது வேகத்தை நம்பிக்கையை மழுங்கடிக்க, ஒரு வர்க்கக் கூட்டம் பல இடங்களில் ஒளிந்திருந்து ஓங்காரமாக பூசை செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் சுயமாக நாட்டி வளர்த்த மரங்களும், கட்டி வாழ்ந்த வீடும், வாழ்வாதாரங்களும், அடிக்கடி கொடிய விலங்குகளால் சுடுகாடாக்கப்பட்டபோது, ஏன் என்று ஒருவரும் கேட்கவில்லை. அவர்கள் ஒருமுகமாக ஒப்பற்ற தலைமையுடன் எதிர்கொண்டு எழுந…
-
- 0 replies
- 823 views
-
-
எட்டாவது அதிசயமே என் தலைவா !! எவர் கைகளுக்கும் நீ எட்டாத அதிசய -த்தை அறிவதற்கு-சில வல்லசருகள் வேவுபார்க்கிறது-விஞ்ஞானமே வியப் -படையும் மெஞ்ஞானம் கொண்ட உனை சிறைப்பிடிக்க எலிப்படைகள் அலைகிறது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, வலுவற்ற விஞ்ஞானம் விழிபிதுங்கி கிடக்கிறது-தன்மானத்தலைமகனே!!! உனை மண்டியிடச்செல்லிக்கெண்டு சில மடையர் கூட்டம் அலைகிறது -ஒரு வெற்றுடலை காண்பித்து அது உன் வித் -துடல் என்றார்கள் அக்கினிபுத்திரனே உனை நெருங்கவும் முடியாத கோழைகள் கூடிநின்று -பெருமி -தம் கொள்கிறனர்-மூடுபனி கூடிநின்று கொட்டாட்டம் போடுறது-சுட்டெரிக்கும் சுரியனே உனை தடுக்க சிங்களப்பனி உறை -ந்து எம் நிலத்தினில் கிடக்கிறது ,,,,,,,,,,,,,,,, வான் சிவ…
-
- 9 replies
- 2.1k views
-
-
[Wednesday, 2011-06-15 21:36:15] முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயலும் சிறிலங்கா அரசு:செனல்-4 வினால் அல்ஜெஸீராவிடம் மாட்டிக் கொண்ட ரஜீவ் விஜயசிங்க எம்.பி அறிவிப்பாளரைக் கேள்வி கேட்கவிடாமல் கதையளக்கும் காணொளி.. http://youtu.be/sdrCR-X4iH0 http://www.seithy.com/breifNews.php?newsID=44922&category=TamilNews
-
- 0 replies
- 976 views
-
-
நீ என்னை பார்க்காதே, என் மனம் உன்னை காணாது! நீ ஒன்றும் சொல்லாதே, என் உள்ளம் கேட்காது! கண்முன்னே மறைந்தாயே, கானல் நீர் போல.... உயிர் போகும் நேரத்தில் காண கண் துடித்திருக்கும், உள்ளம் இளகுதடி உன்னை காணமல் போனதற்கு! வராமல் போனதற்கு மன்னிப்பாயா.... தொடரும் தோல்விகளாய், துரத்துதடி ஞாபகங்கள். மாறி போன வாழ்க்கையில், மறந்து போன நினைவுகள் வாழ்ந்த வாழ்க்கையே மாயமாய் போன பின் வாழ்க்கையை துறந்து விட, வயது என்னை தடுக்குதடி! முற்றும் துறந்து நான் முனிவனாய் மாறினால். அங்கும் நீ அமர்ந்திருப்பாய் அம்மன் சிலையாக... வல்லக்கோட்டை முருகா வல்லமை தாராயோ.... சந்திரிகா தேசம் தமிழ் கூடல்.
-
- 1 reply
- 838 views
- 1 follower
-
-
-
-
முத்துப் போன்ற தீர்மானம்-நம் முதல்வர் காத்தார் தன்மானம் ஒத்துப் போக அனைவருமே-நல் ஒற்றுமை காட்டி தமிழினமே சத்தாம் வழிவகை வடித்தாரே-புகழ் சரித்திர முடிவு எடுத்தாரே பத்தொடு ஒன்றா ?இதுவல்ல-இந்த பாட்டில் முழுவதும் நான்சொல்ல அருளாதாரம் அணு அளவும்-என்றும் அறியா பக்சே உள்ளளவும பொருளாதார தடை ஒன்றே-சிங்களர் போக்கினில் மாற்றம் தருமென்றே ஒருநாள் கூட எண்ணாதீர்-வந்த ஒற்றுமை கெடவே பண்ணாதீர் திருநாள் காணின் தனிஈழம்-எட்டுத் திசையும் தமிழினப் புகழ்பாடும் ஒன்றே செய்யினும் நன்றாமே-அதை உடனே செய்தீர் இன்றாமே குன்றே எதிரே மறித்தாலும-கை குறுக்கே குழியே பறித்தாலும நின்றே முதல்வர் ஆய்வீரா-ஈழம் ந…
-
- 1 reply
- 643 views
-
-
அன்பின் நண்பனே... பட்டாம்பூச்சி பெண் என்னை விழிகளுக்குள் சிறைபடுத்தி கொண்டாய் ... எப்போது விடுவிக்கப் போகிறாய்... உன் நெஞ்சை மஞ்சமாக்கி துயில் கொள்ள என் நெஞ்சம் கெஞ்சுகின்றதே... எப்போது என்னருகில் வரப்போகிறாய்... விழி மூடி தூங்க முயற்சித்தால் இமைகளுக்குள் வந்து இம்சிக்கிறாய்... எப்போது தூக்கம் தரப்போகிறாய்... மயக்கும் சிரிப்பிலும் வசீகர குரலிலும் உயிரை வசியம் செய்தவனே... எப்போது என்னுயிரை திருப்பி தரப்போகிறாய்... சிரிக்க வைத்து ரசிக்க வைத்த என் நண்பனே எப்போது என்னுள் நுழைந்தாய் காதலனாக... நண்பன் காதலனான கதை இருக்கட்டும் அன்புக்காதலா எப்போது மீண்டும் என் நண்பனாகப் போகிறாய்... அறுசுவை.- அனுதீபா
-
- 0 replies
- 941 views
-
-
உந்தப் பழைய பேப்பரை வைச்சு என்ன செய்யப்போறியள்? இது எங்கட சொந்த வீடேயப்பா? வீடு மாறேக்கை பிறகு எல்லாத்தையும் கொண்டு திரியேலாது................ என்றதும் ஒருமுறை வெள்ளம் கெல்லருக்குள்(நிலவறைக்குள்) புகுந்ததில் நனைந்தவை போக மிகுதியாக இருந்த எரிமலை, விடுதலைப்புலிகள் போன்றனவற்றைத் தட்டிப் பார்த்தேன். மனம் கனமானது. எப்போது எரிமலை, விடுதலைப்புலிகள் வரும் என்று எதிர்பார்த்திருந்த காலமொன்று இருந்தது. ஆனால் இன்று.......... அவற்றில் காலம் கடந்தாலும் இன்றைய காட்சிகளோடு அப்படியே பொருந்துகிறது. உலைக்களத்திலே வியாசனவர்களால் 2003 இல் எமுதப்பட்ட கவிதையான " கை தவறிப் போகிறது எம் காலம்" ஆம்! இப்போதும் அதே நிலமைதான்.............. படித்துப்பாருங்கள் யாழ்க் கள உறவுகளே! …
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
.... "நல்லூர் புத்தசாமி கோயில்" ... நாலு வரி எழுதுங்கள்
-
- 2 replies
- 1.7k views
- 1 follower
-
-
வெள்ளி முளைக்கும் ஒரு மாலை நேரத்தில் முள்ளிவாய்க்காலின் பரந்த மணல் வெளிகளில் புதிதாகத் தோன்றியிருந்த குழிகளைக் கண்டு பூமித் தாயின் முகம் கூடத் தனது முகம் போலப் பார்க்குமிடமெல்லாம் எரி வெள்ளி விழுந்து வெடித்த எரிமலைகளின் வாய்களைப் போல, வட்டமாகத் தனது முகத்தைத் தானே கண்ணாடியில் பார்ப்பது போல, எண்ணிய படியே தன் பாதையில் நகர்ந்தது நிலவு! இரண்டு வருடங்களாக, இந்தப் புதை குழிகளுக்குள் மறைந்து கிடக்கும் கதைகளும், மனிதக் கூடுகளும் துரத்தித் துரத்தி வேட்டையாடப் பட்ட அவர்களின் சரித்திரமும், செத்துப் போன நினைவுகளும் புதையுண்டு கிடக்கும் புனிதக் கனவுகளும், ஒரு நாள் விதையில் இருந்து துளிர் விடும் மரங்களாய், வளரும் என்ற கனவி…
-
- 9 replies
- 2k views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்காலில் புதைந்த முகங்கள்.... கவிதை - இளங்கவி பாத்தி கட்டி நீர் பாச்சிய வயல்களில் இரத்த ஆறு உடைப்பெடுத்து ஓடிய இறுதி நாட்கள்.... வருடங்கள் இரண்டின் முன்தான் எங்கள் வலிகள் உச்சங்கண்ட நாட்கள்..... அழுத குழந்தையின் ஏக்கம் தீரமுன் அதன் மூச்சே நின்றுபோன கொடூர நாட்கள்..... எங்கள் மரண ஓலங்கள் மண்ணுக்குள்ளேயே புதைந்துபோன நாட்கள்... எங்கள் வயிற்றுப் பசிக்கு மரணத்தைப பரிசளித்த நாட்கள்..... எங்கும் கொலைகளின் உச்சம்.... கூக்குரல்களின் உச்சம்.... காம வேட்டையின் உச்சம்.... கொண்டொளித்த பிணங்களும் உச்சம்..... ஆம்...மிஞ்சிப்போன எம் உயிரின் மரணத்தின் விளிம்பில் அவனின் இரும்புக் கையின் கொட…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
போராளிகளான அப்பாவிகளையும் அடிமைகளான பயங்கரவாதிகளையும் பற்றி பேசுதல் சம்பூர் வதனரூபன் தேசங்கள் பலதும் தேசங்களாயிராத பொழுதுகளில்.. தேசமாக்குவதற்கும் முடியாத போது உருவாக்குவதற்குமென அடிமைகள் எழுவர். அடிமைகள் என்பவர் எப்பொழுதும் அடிப்படையுரிமைகளுமில்லாத அப்பாவிகள் என்பதே உண்மை. ஆட்சியாளர்கள் அடக்குமுறையாளர்களாவதும் அதிகாரமுள்ளவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாவதும் அப்பாவிகளை அடிமைப்படுத்துவதும் அடிமைகள் விடுதலை கேட்பதும் நாளடைவில் அடிமைகள் போராளிகளாவதும் போராளிகளான அப்பாவிகள் பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுவதும் பின்பு பயங்கரவாதிகள் என்றழைக்கப்பட்ட அப்பாவி அடிமைகள் அழிக்கப்படுவதுமென.. இதற்கு நீண்ட வரலாறும் உதாரணங்களுமுண்டு உலகமெங்…
-
- 0 replies
- 862 views
-
-
புத்தம் புதியதோர் இராம கதை.....! முப்பத்தொரு ஆசனங்கள் மட்டும் முழுமையாய்க் கிடைக்கப் பெற்று ஒப்பரும் பதவியைத் துறந்து ஓதரும் கலைஞர் சென்றார் கட்டிய காவியோடு அன்னார் கால்நடை ஆகச் செல்ல கனிமொழி கண்ணீர் சிந்தி கதாநாயகன் பின்னே செல்ல சண்டையிட்ட மைந்தர்களும் சரிவரப் பின்னே செல்ல உற்ற நல் மனைவி மாரும் உளம் நொந்து வழி அனுப்ப காவியம் பாடிய கவிஞர் எல்லாம் கண்ணீர் சொரிந்து நிற்க சோனியா அம்மையாரும் இதை சோர்வுற்று பார்த்து நிற்க புத்தம் புதியதோர் இராமகாதை புவி மீது அரங்கேறிற்றன்றோ? இப்படித் தீர்ப்பை மக்கள் இணைத் தொன்றாய் அளிப்பாரென்று கற்பனைக் கனவில் கூட கண்டிரார் கலைஞர் அன்றோ? வித…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழுக்காய், தமிழ்மண்ணுக்காய் தற்கொடை தந்த தமிழ் சகோதரியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திய குட்டிரேவதியின் கவிதைக்கான பதில் அம்மணமாய் நிற்பவர்களே! சினிமாக் குப்பைகளிலும் சின்னத்திரை குழறல்களிலும் சிந்தனையைத் தொலைத்துவிட்டு குழாயடிகளிலேயே வீரங்காட்டும் விவஸ்தையில்லா வீணர்களுக்கு தாய்மண் காத்தலையே விரதமாக்கி வித்தைகள் புரிவது வீணானதாய்ப் படலாம் கட்டிளம் காளைகளின் கடைக்கண் பார்வைக்காய் காலமெல்லாம் காத்திருப்பதும் களியாட்டங்களில் கரைவதுமே கன்னியர்க்கு விமோசனம் என்றெண்ணும் சிங்காரிகளுக்கு களத்துத் தியாகங்களும் தீரங்களும் ஏளனங்களாகலாம். அந்நிய மொழியும் அடுத்தவன் கலாச்சாரமுமே கண்ணில் தெரிய அடுத்தவனின் அழுக்குகளையே அரவணைத்து ஆராதித்து அடுக்களைய…
-
- 16 replies
- 5.2k views
- 1 follower
-