Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காதல் சிட்டுக்கள்..... கவிதை - இளங்கவி அந்தி மாலைப்பொழுது மங்கிய மின்னொளியில் உணவகமொன்றில் ஜோடியாய் இரு காதல் சிட்டுக்கள்.... காம்புடன் குடிய கருஞ்சிவப்பு ரோஜாவை நீட்டியது ஆண்புறா... ரோஜா கொடுக்கிறாய் ஆனால் ஏன் அதை அழகில்லாத காம்புடனும் முள்ளுடனும் தருகிறாய் என்றது பெண் சிட்டு.... அழகில்லாத இந்தச் செடி அழகிய ரோஜாவை எப்படி தாங்கி நிற்கிறதோ நானும் உன்னை என் தேவதைபோல் என்றும் தாங்கி நிற்பேன் என்று சொன்னது ஆண் சிட்டு.. அவன் காதல் வார்த்தையில் மயங்கிய பெண் சிட்டு தன் இரு கைகளாலும் அவன் முகத்தைத் தழுவி ஒட்டிய முத்திரை போல் தன் இதழைப் பதித்தாள் அவன் இதழில்.... முத்தத்தின் சில நிமிடமும் சில யுகங்…

  2. காதல் மொழியை புரிய வைத்த அகராதியே காலை எனை எழுப்பும் காணக் கடிகாரமே மாலை எனை மயக்கும் மந்திர மகுடியே உன்னை தனிதனியாக வர்னித்தால் சக அங்கம் என் மீது வழக்கு தொரலாம் என முழுதாய் வர்னிக்க வார்தைகளை தேடினால் பாவிக்கவிஞர்கள் சகலதையும் திருடி விட்டார்கள். காப்புரிமை இல்லையாம்.அதானாலென்ன உன் மீது எனக்கும் என் மீது உனக்கும் இருக்கும் உரிமை பிரிவு இல்லாது நிலைக்கும்

  3. Started by nochchi,

    காதல் காதல்......! ------------------- தவழும் வயதில் தாய் மீது காதல் நடக்கும் வயதில் முற்றத்தின் மீது காதல் படிக்கும் வயதில் பாடங்கள் மீது காதல் இரசிக்கும் வயதில் இயற்கை மீது காதல் துடிக்கும் வயதில் பெண்மீது காதல் மயங்கும் வயதில் மன்மதக் காதல் முதிரும் வயதில் இறைவன் மீது காதல் முடியும் வயதில் பாய் மீது காதல் முடிவின் வழியில் தீயின் மீது காதல்

    • 6 replies
    • 1.1k views
  4. Started by Eelathirumagan,

    இன்று உலகெலாம் காதலர் தினத்தை கொண்டாடுகிறது. உங்களில் பலர் காதலை உணர்ந்திருக்கக் கூடும். என்னுடன் சேர்ந்து கவிதையை அனுபவிப்பீர்கள் என நினைக்கிறேன். காதல் என்ற மூன்றெழுத்தை கண்டு சொன்ன கடவுள் யார்? மந்திர வித்தை கொண்டிந்த சொல்லை செய்த சிற்பி யார்? சீறும் புலியாய் இருந்தவர்கள் பெட்டிப்பாம்பாய் போன கதையென்ன ! கையால் எழுதா, காதால் கேளா வாயால் பேசா மொழி இதுவே இரு இதயம் மட்டும் பேசுகின்ற கடவுள் தந்த அன்பு மொழி ஒன்றை ஒன்று விட்டகலா ஈர் உயிர்கள் சேர்ந்து கட்டுகின்ற அன்பு என்னும் ஆலயத்தின் அர்ச்சனை மந்திரம் காதல் மொழி எத்தனை ஆண்டு, எத்தனை தூரம் எத்தனை ஜென்மம் பிரிந்திருந்தும் அத்தனை நாளும் என்னிதயம் உன்னை நினை…

  5. இளமையை தொலைத்த தலைமுறை இளமையை புதைத்துவிட்டு விடுதலைகையில் ஏந்திஉலகை உலுப்பியவர்கள்எம் இளையேர். தொலைக்காட்சி பெட்டியிலே கிரிகட்டைப் பார்துவிட்டு மைதான்ம் போய்நின்று பந்தடிக்க இவனுக்குஎங்கே நேரம். தாயைப் பார்பானோ தங்கயை நினைப்பானோ நம் ஊரின் அலறல்களை உடல் பிளந்த உறவுகளை தொலைக்காட்சி பெட்டியிலேதினம் பார்தவன் துடுப்பாடப் போவானோ துயர் துடைக்கப் போவானோ அடிவாங்கி இடிவாங்கி தமிழன் சாகும் நாளில் ஆடு களம் ஒன்றில் மட்டும் ஆட்டமிளக்காமல்ஆடவேண்டும் அது அரசியல்க் களம் - பொன் பாலராஜன் -

  6. (அடியேனுக்கு கவி மணத்துக்கும் வராது, இரசித்தவைகளை கத்தரித்து காவி வரமட்டும் முடிகிறது.)

  7. புலத்துக் கரும்புலியாய் ஓர் பேரொளி.... கவிதை - இளங்கவி போரின் கூக்குரல்கள் புகுந்தது தமிழ் நெஞ்ச்சுக்குள்... போரை நிறுத்தென்று மக்களில் ஒருவனாய்ப் புலம்பினான்.... உலகின் காதில் எம் குரல்கள் கேட்கவில்லை..... ஈழத்து அழுகுரல்கள் அவன் ஆயுளைப் பிழிந்தது.... அவன் கைகள் எழுதியது மரண சாசனம்..... கால்கள் இலக்கு நோக்கி ஓர் நீண்ட பயணம்..... திடீரென தோன்றிய முடிவல்ல அவன் சிந்தனையில் தோன்றிய தெளிவு..... பல்லாயிரம் உயிருக்கு பார்காத ஐ. நாவா பாவம் இவன் உயிரைப் பார்க்கும்.... அவனுக்கும் தெரிந்திருக்கும் ஆனாலும் ஈழத்து அழுகுரலில் அவன் ஆன்மா கரைந்திருக்கும்... அமைதி காக்க தோன்றிய ஐ.நா பொய் முகம் காட்ட..... புலத்துக் கரும்…

  8. என் ஐயராத்து அம்மணி கவிதை - இளங்கவி... என் ஐயராத்து அம்மணி நீ அழகான என் கண்மணி.... உன் ஒற்றை மூக்குத்தியால் என்னை கொழுவி இழுத்தவள் நீ.... உன் தெத்திப் பல் சிரிப்பில் என்னை சிக்கவைத்தாய் நீயடி... உன் ஆளுயரக் கூந்தலில் என்னை அசரவைத்தாய் நீயடி.... உன்னை வீதியெங்க்கும் துரத்தி நம் வீதியெல்லாம் உடைஞ்சு போச்சு.... அதனாலே நம் வீ.சி க்கு அதைத் திருத்துவதே வேலையாச்சு.... உன் கன்னக்குளி பார்க்க 'சுண்டுக்குளி' வரை வருவேன்; அதனால் தெருவில் இருந்த குளி விழுந்து என் காலெலும்பபு உடைஞ்சிருந்தேன்... வீட்டில் மீன் பொரியல் விடலைக் கோழிக்கறி விரும்பிய நேரம் உண்ண பூநகரி மொட்டைகறுப்பன் சோறு... அத்தனையும் சமைத்துவைத்து அம்மா …

  9. பள்ளிச் சீருடையில் பட்டென்று வந்தவளா இவள்.. கண்கள் அகல விரிய பார்வை விழுந்தது அவள் மீது..! நேற்று அவள் வகுப்பில் என்னோடு கதிரைக்கு சண்டை பிடிக்க தள்ளி விட்டதில் சிறு உரசல் கத்தியே உயிரை எடுத்தாள் வாத்தியார் தந்த அடியோடு அது நினைவில் பதியும் வரை. அன்று அவள் சிறுமி நான் சிறுவன். வளர்ந்தோம் இருவரும் பருவமும் வந்து சேர்ந்தது அவள் கடைக்கண் பார்வை வீச நானும் பதிலுக்கு பேச ஆசைகள் அரும்பின அதற்கு அன்பு என்று பெயரிட்டோம். கடிதங்கள் பரிமாறி கடலையும் போட்டு கையும் கோர்த்து வலண்டைனும் கொண்டாடினோம். காலமோ ஓட்டமாய் ஓடியது.. ஓர் நாள் சொன்னாள் "அப்பாக்கு லண்டனில் நிரந்திர விசா வந்திட்டுது நாங்களும் போகப் போறம்." மின்னலா…

  10. Started by rajeeve,

    இந்த கவிதையை வாசித்து விட்டு அவசரப்பட்டு பெண்ணியவாதிகள் என்னைத்திட்டவேண்டாம். நகைச்சுவையாக (dark comedy) நான் எடுக்க இருந்த ஒரு குறும்படத்திற்காக எழுதிய கவிதை. ஆனால் அப்படத்தை எடுக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டேன். சுயநலம் சுயநலம் சுயநலம் பெண்ணியத்தின் மறுபெயரே சுயநலம் கணவனுக்கு பணிவிடை செய்தால் கசக்கும் பிள்ளைகளை பராமரித்தால் புளிக்கும் மாமா மாமியைக் கண்டால் வயித்தைப்பிரட்டும் சுயநலம் மட்டுமே இனிக்கும் இனிக்கும் இனிக்கும்.

    • 5 replies
    • 1.2k views
  11. புதிய கிளிநொச்சி அழகு தேசமே எழில் கொஞ்சும் பேரழகே-உன் இறக்கை ஒடிந்து இயற்கை வற்றி இடிந்து போனதேனோ உறக்கம் அறியா-எங்கள் ஊர்களின் மெளனம் தான் என்ன..? பட்டுப் போய் கிடக்கும்-என் பழைய ஊரே கிளிநொச்சி மண்ணே-நீ கிலி கொண்டு இருப்பதேனோ...? உன்னில் கொட்டுண்டு கிடக்கும் அத்தனை அழகும் எங்கே...? சாலையோரம் உயர்ந்து நின்ற கட்டடங்களே........... டிப்போ பேருந்து தரிப்பிடமே... யாருக்கு ஏது செய்தீர் தெருவின் ஓரம் சிரித்து நின்ற சந்திரன் பூங்காவே உன்மீதும் புதியதோர் சிலையா..? சிங்கள வெறியன் நினைவுத் தூபியா நீ அதிர்ந்தாவது வீழ்த்திடமாட்டாயா..? இதமிதமாய் குளிரவைத்த சேரன் பாண்டியன் சுவையூற்றுக்களே உங்கள் அத்திவாரங்கள் எங்கே...? நீதி …

    • 5 replies
    • 1.7k views
  12. Started by nochchi,

    இழவுச் சங்கம் ! ஆர்.மணிகண்டன் ஆலமுண்ட சிவன் சூலத்தால் குத்திக் கொண்டு செத்துப் போனான் போதி மரத்தில் மேலங்கி சுற்றித் தூக்கிட்டுக் கொண்டான் சித்தார்த்தன் சிலுவையில் தொங்கிய தேவகுமாரனும் எழுந்திருக்கவில்லை உள்ளுக்குள் அழுததாய் ஊருக்காய்ப் பிதற்றியவனின் ஆசனவாய் ஆபத்து நீங்கிய இரண்டொரு பகலில் நான்காம் முறையாக இழவுச் சங்கம் இசைத்தார்கள் முத்துக்குமரனின் ஆவி அறிவு தப்பி அரற்றும் தென்வனத்தில் வலைப் பூக்களில் நெளியும் விரல்புழுக்களுக்கு இரையாகிறது எம் இரத்தம். 1/28/2010 5:04:57 PM நன்றி - பொங்குதமிழ் இணையம்

    • 0 replies
    • 807 views
  13. புலம் பெயர்ந்த என் ஈழத்து நண்பர்களை இப்போது நான் சந்திப்பதில்லை அவர்களது மின்னஞ்சல்களை நான் திறப்பதில்லை கணினியின் உரையாடல் அறையில் அவர்களது வணக்கங்களுக்கு இப்போது நான் பதில் வணக்கம் சொல்வதில்லை வரலாற்றில் இதற்கு முன்பும் இது போல்தான் இருந்ததா அழிவின் மௌனங்கள்? * நிறைய பார்த்தாகிவிட்டது சிதைக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களை நிறைய காண்பித்தாகிவிட்டது படுகொலைகளின் படச்சுருள்களை நிறைய படித்தாகிவிட்டது கொரில்லா போர் முறையின் யுத்த தந்திரங்களை வரலாற்றில் இதற்கு முன்பும் இப்படித்தான் சொல்லப்பட்டதா விடுதலையின் கதைகள்? * முப்பதாண்டுகளின் குருதிவெள்ளம் ஒவ்வொரு சதுரமைலாகச் சுருங்கி இப்போது …

  14. இளைஞனே எழுந்திடு!!!! நாளை வருமென்று நாளைக் கடத்தாதே வேளை வருமென்று வெருண்டு திரியாதே நாளை உனதாக வேண்டும்-அதில் வீரத்தமிழனின் புலிக்கொடி பறக்க வேண்டும் கோழைத்தனம் துறந்து வீர உணர்வோடு எழுந்துவா நீ உனக்கென்று ஒரு நாடுகாண நாளையல்ல இன்றே அதன் ஆரம்பம்காணப் புறப்படு போலி சுகங்களில் பொய்வாழ்வு வாழாதே மதங்களென்று மயங்கித் திரியாதே பிறந்ததிற்காக நல்லதைச் செய் இன்றே நாளை அது உன்வாழ்வைச் சிறப்பிக்கும் உன் கனவு தமிழீழம் நிறைவேற உன் மக்கள் உன் புகழ்பாட உணர்வுகொண்டு எழுந்துவா குழந்தைத் தனம் துறந்து உன் கொள்கை வெறிகொண்டு உலகம் புலி என்று கூற-நீ நம்பி எழுந்துவா உன் கனவு நிறைவேறும் குட்டக் குட்டக் குனிந்தது போதும்-இனி தமிழன் என்ற உணர்வ…

    • 2 replies
    • 1.1k views
  15. பிம்பங்களைத் தொலைப்போம் கண்ணாடிச் சுவர்களுக்கு அப்பாலும், இப்பாலும் இருந்து கண்ணாமூஞ்சி விளையாட்டு! ஆயிரம் கோடி அற்புதப்பிரசவங்களின் வலியையும், வலுவையும் வருடி மோகித்துப் பயணிக்க முடியாமல் பிம்ப பேதம் வேதனை செய்கிறது. அடிமனதில் ஆழ அமர்ந்த சமூகக் கோட்பாடுகள் கண்ணுக்குத் தெரியாமல், மனதிற்கு விலங்கிட்டு மானுட நட்பின் விரிதளத்திற்கான கதவை அடைக்கிறது. நட்பின் பரந்த தளத்தில் பயணிக்க எந்தக் கடவுளிடம் கையேந்த வேண்டும்? பிம்பங்களைத் தொலைத்துவிட வழி இருந்தால் கூறு! தொலைத்து விட்டு, இயற்கையோடு இயைவோம் யாராலும் அறிய முடியாத பூமிப்பந்தின் பிரணவ ஒலியை எங்களின் இருப்பிடமாக்கிக் கொள்வோம். மொழிகளுக்குள் முடங்காத மானுடக…

    • 7 replies
    • 928 views
  16. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐயாக்களே! ------------------------------------------------------- வாக்குத் திருவிழா முடிந்தது போக்குக் காட்டிப் பிடிக்க முனைந்த வாக்குகள் யாவும் வராமல் போனதால் சிறிலங்கா மீண்டும் வழமைக்குத் திரும்பியது! மீண்டும் எங்கும் சோதனைச் சாவடி ஓமந்தையில் தனிதனித் தனித்தனியாக உடற் பரிசோதனைக் கெடுபிடி எடுபிடிகள் ராச்சியத்தில் எதுவுமில்லை என்பதை நன்றாக உணர்ந்துகொண்ட ராயபக்ஸயாக் கூட்டமது தமிழ் மக்களைத் தினந்தோறும் கசக்கிப் பிழிந்து காழ்ப்புணர்வைக் காட்டி சிங்களத்து வாக்குகளை முழுவதுமாய் பெறுவதற்காய் வகுக்குமினித் திட்டங்களை… திட்டங்களில் முதற்பலியாவது தமிழினமே சம்பந்தருக்குமென்ன சரத்துக்குமென்ன சாவதும் அழிவதும் யாரோ எவரோத…

    • 0 replies
    • 895 views
  17. வானம் கறுத்து வடித்தது கண்ணீர் – மர வேரினை நனைத்து வீழந்தது மண்ணில்! உயிரது வாழ உதவிய அந்நீர் – அன்று மழையைப் போலே மண்ணில் சிலரும்! மானத்தமிழன் வாழ்ந்திட வேண்டி மரணத்தைக்கொடையாக கொடுத்திட்ட பலரில் உயரிய சிந்தனை பல கொண்டு உயர்ந்திட்ட உறவாய் நீயும் நின்றாய் எம் சோதரா! ஈழம் ஒன்றே தாகமாய்க்கொண்டு ஈய்ந்த உயிர்கள் பல எம்மண்ணில் உண்டு! தாயகக் கனவை நெஞ்சில் கொண்டு வாழ்ந்திட்டாய் நீயும் எம்முள் ஒன்று! நல்லது தீயது நெருப்பறியாது – தலைகீழாய் பிடித்தாலும் கீழ் பார்த்தெரியாது – காவிய காலத்தின் பின்னே மீண்டும் அக்கினி பூத்து உன்னால் புனிதமானது சகோதரா! மானத் தமிழரை உறவாய் கொண்டாய்! எங்கள் மனதை தமிழா நீ வென்றாய்! வாழ வேண்டும் ஈழம் என்றே வங்…

  18. மாதந்தை வேலுப் பிள்ளை மரணித்தார் என்றதுமே வேதனை தாங்கவில்லை வெம்பியழ இடமுமில்லை சோதனைகள் மத்தியிலே சோர்ந்தவர் மடிந்தாரோ பாதகர்கள் கொடுமையினால் புனிதரவர் இறந்தாரோ சாதனைகள் புரிந்தவொரு தமிழ்த்தலைவன் கருகொடுத்து மாதரசன் மணியாட்சி மகிழவொரு காலத்தே அதனழகைப் பார்க்காமல் உயிர்விடுத்தல் தகுமாமோ? சீதாவின் நிலையுறுத்தி சீரன்னை பார்வதியும் சேதியொன்று மறியாது சித்தங்கலங்கி நிற்க பேதையென வாடியங்கே புலம்புவது சரிதானோ? ஆதரிக்குந் தமிழரணி அணியணியாச் சிதறுதற்கு போதனைக்கு ஒருபெரியோன் இல்லாத குறையன்றோ வேதமொழி தாயகமாய் கொண்டவரால் நீதியங்கே அணிவகுத்த காலத்தை அழித்தங்கே அரக்கருடன் தாயகத்துக் கனவுகளை தகர்த்தெறியும் ஆட்சிவெறி தமிழ்மானம்…

  19. ------------------------------------------------------------------ எல்லா அறிவிப்புகளும் முடிந்துவிட்டன. செய்திகளும் புகைப்படங்களும் எல்லோரையும் நம்பவைத்து சென்றுவிட்டன. அதே முட்கம்பிகளுக்குள் அம்மாவின் முகம் சுருங்கிக்கிடக்கிறது. தங்கையின் கூந்தல் வளராமலிருக்கிறது. எங்களுக்கிடையில் அதே முட்கம்பிச் சுருள்கள் அம்மாவின் அருந்திக்கொண்டு வந்த புன்னகையை காயப்படுத்திக்கொண்டிருக்கிறது. தங்கையின் கையிலிருக்கிற புத்தகத்தை கிழித்துக்கொண்டிருக்கிறது. எனக்காக அம்மா பிட்டினைச் சுமந்து வந்தாள். காத்திருப்பின் எல்லைகளை வீடு செல்லுகிற கனவினை நகரத்திற்கு மீள்கிற நம்பிக்கையை அம்மா முட்கம்பிகளில் சொருகியிருக்கிறாள். நுளம்புகள் கூடாரத்தை தூக்கிச் செல்லும்…

  20. 1 மாலை நேரக்காற்று முன்னிற்க மணநாளில் பவ்யமாய் விடை பெறுகிறாள் மணப்பெண் அவளது பர்தாவுக்குள் முகம் புதைத்தபடி மலர்களின் வாசனையோடிணைந்த புணர்ச்சியைப் போதிக்கிறாள் தமக்கை. தானே அறிந்திராத தடித்த புத்தகத்தின் பக்கங்களை துரிதகதியில் புரட்டுகிறாள் எந்த நாளில் புணர்ந்து கருவைத் தள்ளிவைக்கலாம் எனவும் ஹராமாக்கப்பட்டதெனவும்* கூடவே புணர்ச்சிக்குப் பிந்தைய சுத்த பத்தங்களையும் தன் குள்ள உருவத்திற்கேற்ற குற்றக் கண்களில் குறுக்கிடுகிற வாழ்வின் சுகவீனங்களையும் நைந்து போன புணர்ச்சியின் வெற்றுச் சூத்திரங்களையும் தனக்குள்ளாக ஒளித்தபடி அவ்வப்போது வெட்கத்தில் துவண்டு விழுகிற வார்த்தைகளை சிறுமியின் அசட்டுத் தன்னம்பிக்கையு…

  21. எல்லாம் உயிர்பெறும் ச.ச.முத்து எங்கே அந்தக் கவிஞன்? இங்கேதான் நின்றானே.-யாரும் பார்த்தால் மெல்ல என்னிடம் காதருகில் சொல்லுங்களேன். எங்கே அந்தக் கவிஞன்? இங்கேதான் நின்றானே.-யாரும் பார்த்தால் மெல்ல என்னிடம் காதருகில் சொல்லுங்களேன். வன்னிமண்ணின் மொத்தஅழகும் நந்திக்கடலின் அலைவடிவும் அழகான என் தேசத்து எழில்அனைத்தும் அவன் இல்லாமல் எப்படியாய் உறைந்து கிடக்குது பாருங்கள்.-கால் படர்ந்த கல் எழுந்து அகலிகை ஆனதுபோல் அந்தக் கவிஞன் எழுதி என் தேசம் எழுந்து வரட்டுமே. மூச்சும் பேச்சும் இன்றி ஒரு மூலையில் கிடந்துவி;ட்டு போய்விடலாம்.-ஆனால் அவன் பாட்டும் சந்தக் கவியும் இன்றி எப்படியாய் காலம் இனிக் கரையும்.? எதிரிராணுவத்தில் சின்னஓய்வுப்பொழுதில் …

  22. அவனும் இவனும்.. அவனும் கொலை செய்தான்.. இவனும் கொலை செய்தான்.. முன்னவனை தியாகி என்றனர்.. பின்னவனை துரோகி என்றனர்..

  23. இன்பமில்லாத பொங்கலில்.... -------------------------------- காலையெழுந்தவள் கடமை தனதென்று பொங்கினாளவள் பிள்ளைகளுக்காகவென்று...... நித்திரை தொலைந்த இரவுகள் ஆனதால் அதிகாலையிலே படுக்கையைத் துறந்து நீராடிவிட்டு சமையலறையை எட்டிப் பார்த்தேன் பொங்கியிருந்தாள் ! பொங்கியழுதது என் மனம் அப்போ...... நம்பிக்கை பொங்கிய நாட்களை எண்ணி நம்பிக்கை தந்தோர் நடைபிணமானது எண்ணி விழுப்புண்ணடைந்தோர் விதியினை எண்ணி விலங்குகள் போல சிறைகளில் வாடும் தமிழரை எண்ணி தை பிறந்தால் வழி பிறக்குமாம்(!) தமிழன் வாழ்வில் எப்போது பிறக்கும் பிணங்களின் மேலே கண்டிய நடனம் தமிழன் எலும்புகளாலே மாலைகள் சூடும் தமிழ்த் தலைமைகள் இருக்கும் வரையிலே இ…

    • 3 replies
    • 777 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.