கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இனிய நண்பர்களே! என் மனதில் நட்பின் வலியில் பிறந்த ஒரு கவிதை. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பிரியப்படுகிறேன். அன்றொருநாள் ஒரு சின்னப் பையன் மாலைப்பொழுதின் மயக்கும் இசையில் உள்ளம் மகிழ்ந்து ஓடி வந்தான் தென்றல் ஒன்று தவழ்ந்து வந்தது முல்லைச் செடியும் அணைத்துக் கொண்டது எத்தனை வண்ணம், எத்தனை வாசம் தன்னை மறந்து ஒவ்வொரு பூவாய் கட்டி அணைத்து முகர்ந்து கொண்டான் முல்லைச் செடியும் அன்பை பொழிந்தது காலைப் பொழுதில் கண்கள் திறந்து முல்லைப் பூவை கண்டு மகிழ்வான் மதிய நேரம் முல்லை இல்லா உணவும் உண்ணான் அடம் பிடிப்பான் அந்திப் பொழுதில் முல்லை பூவுடன் காதல் பேசி கண்கள் சிமிட்டி நடுநிசி தன்னில் முல்லை செடியுடன் ரகசியம் பேசி தூங்கி போவான் …
-
- 3 replies
- 1.2k views
-
-
மணிக்கூட்டுக் கோபுர வளைவில் மெதுவாக தலை நிமித்தும் என் சைக்கிள் உச்சி பிழக்கும் வெய்யில் நாற்பது நிமிடம் விடாமல் வலித்த களைப்பு நாக்கு வறண்ட தாகம் அத்தனையும் முற்ற வெளியில் பஞ்சாய் பறக்கிது உன் தரிசனம் கிடைக்கும் என்ற அந்த ஒரு நினைப்பில் மாத்திரம் விடுதியை விட்டு புறப்பட்டு சுப்பிரமணியம் பூங்காவை தாண்டிவிட்டாயா பொல்லாத பௌதிகம் என்று லைபிரரி வாசிப்பறையிலேயே படுத்துவிட்டாயா படித்தது பத்தாது என்று முனியப்பரின் சன்னதியில் வரம் கேட்டு நிற்கின்றாயா எல்லாம் முடித்தாச்சு என்று றீகலில் நண்பிகளுடன் ஆங்கில சினிமாவிலா என்ன நடந்தது இன்று வளைவில் வந்தவுடனே கண்ணுறும் உனை இன்று என் …
-
- 4 replies
- 969 views
-
-
போர்த்திட்டாண்டா.. தமிழன் பொன்னாடை போர்த்தித்தாண்டா..! காலம் காலமாய் வரலாறாய் எழுதி வைத்து.. தமிழினத்தை.. அழித்து துன்புறுத்தியவனுக்கே சொந்த இனத்தை.. ஊரை விட்டே துரத்தி அடித்தவனுக்கே.. தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா.. பாரடா பார்.. உலக மைந்தா. தமிழன் போல் சன நாய் அக வாதி உலகில் உண்டோ சொல் அவன் போல் வீரம் உனக்கும் வருமா கேள்..??! மானம் கெட்டதுகள் வாழ்ந்தென்ன வீழ்ந்தே தொலையட்டும் என்றே அன்னை சோனியாவின் எடுபிடிகளாய் வடக்கிருந்து வந்து.. தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா சிங்களத் தானைத் தளபதிக்கு பொன்னாடை போர்த்திட்டாண்டா..! வாழ்க தமிழ் வீரம் எழுக தமிழக புதிய வரலாறு.. காட்டிக் கொடுப்பதில் காக்கவன்னியன…
-
- 21 replies
- 3k views
-
-
நிர்வாணமாக கொலையுண்டவர்களின் பின்பக்கம் தேங்கிய நீரில் துடித்து மிதந்து கொண்டிருக்கின்றன பிடரிகளும் கண்களும் கைகளும். நிருவாணம் எல்லோரது உடைகளையும் களைந்து விடுகிறது. மிகவும் அஞ்ச வைத்தபடி கோணல் துவக்கு தலையின் பின்பக்கம் துளையிடுகிறது. நிலம் பரிதாபமான குருதியால் நனைகிறது. யாருடைய முகமும் தெரியவில்லை. எல்லோரிடமும் எங்கும் குருதி கொட்டிக்கொண்டிருக்கிறது. பேரூந்திலும் நகரத்தின் உள் தெருக்களிலும் வீட்டிலும் தொலைக்காட்சிப்பெட்டியிலிரு
-
- 14 replies
- 5.2k views
-
-
இரவல் உணர்வுக் கவிஞனின் கண்ணீர்..... கவிதை - இளங்கவி.... இரவல் உணர்வுக் கவிஞனின் இதயத்து வலிகள் சில வரிகளாய்....... சுமங்களாவின் தங்கையின் சோகத்தில்... அமங்களமான எங்கள் தங்கைகளைப் பார்க்கிறேன்..... மாலைச் சூரியன் மறையும் நேரம் நம் தங்கைகளின் இதயங்களோ இடைவிடாமல் படபடக்கும்.... மரணத்தின் வாசலில் கழியப்போகும் பல மணி நேரங்கள் வந்து நிற்கும்..... நிமிடங்கள் செல்லச் செல்ல அவள் நிழலே தன்னைப் பயமுறுத்தும்.... நீண்ட ஓர் இரவுக்காய் அவள் நெற்றியோ வியர்த்து நிற்கும்..... எம் தங்கைகளின் அம்மணக் கிடக்கைகள்.... அவன் மதுவெறியில் கிடக்கும் சந்தனப் படுக்கைகள்.... தற்காலிக விடுதலையின் பின் அவள் உடையெல்லாம் இரத்தங்கள்...... போருக்கு…
-
- 0 replies
- 604 views
-
-
தொண்டர்களாள் வளர்ந்த தலைவனுக்கு சரித்திரம் உண்டு தொண்டர்களாள் வளர்ந்த எதிர்கட்சி தலைவனுக்கும் சரித்திரம் உண்டு தொண்டா உனக்கு உண்டோ ஓர் சரித்திரம். ரசிகர்களாள் வளர்ந்த கதாநாயகனுக்கு சரித்திரம் உண்டு. ரசிகர்களாள் வளர்ந்த வில்லனுக்கும் சரித்திரம் உண்டு. ரசிகா உணக்குண்டோ சரித்திரம். பக்தரால் வளர்ந்த சாமிகளிற்கு சரித்திரம் உண்டு பக்தரால் வளர்ந்த ஆசாமிகளிற்கும் சரித்திரம் உண்டு. பக்தா உனகுண்டோ சரித்திரம். வாசகர்களாள் வளர்ந்த எழுத்தாளரிற்கு சரித்திரம் உண்டு வாசகா உனகுண்டோ சரித்திரம். போராட்ட குழு தலைவனுக்கு சரித்திரம் உண்டு ஒட்டுகுழு தலைவனுக்கும் சரித்திரம் உண்டு. போராளி உனகுண்டோ சரித்திரம். உனக்கு நீயே நாயகனாக,தலைவன…
-
- 4 replies
- 754 views
-
-
தலைப்பைப்பாத்திட்டு சண்டைக்கு றெடியா யாரும் வரவேண்டாம். கீழேயுள்ள கவிதையை மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அததனை இங்கு பதிவிடுகிறேன். இழு தேரை ! இறுகப்பிடி வடக்கயிற்றை…! சமீபத்தில் இங்கிலாந்து நடந்த ஒரு தேர் உற்சவத்தில் 20.000 பேர் கலந்துகொண்டதாக வந்த செய்திக்கு, அங்கு வாழும் கவிஞர் இளம்பறவை எழுதி அனுப்பியுள்ள கவிதை. இழு தேரை.. இறுகப்பிடி வடக்கயிற்றை. பக்கத்துச் சுரிதார் பார்வைபட இன்னும் செய்! பார்த்து இளி!! முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன் உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும் காயவில்லை…பரவாயில்லை..புலத்த ு தெருக்களில் தேர் இழு! உன் தா…
-
- 13 replies
- 2.3k views
-
-
மூடிய சிறையில் கவிதை - இளங்கவி....... குடிசைக்குள் ஓர் கூடல்..... கொஞ்சும் நிலவின் ஒளியின் கீழ் மனதால் கூடி நிற்கும் ஓர் காதல்...... அவன் அடிக்கும் செல் இங்கேயும் வரப்போது இந்த நேரத்தில் இது தேவையா.... உனக்கு இப்போ இப்படியொரு ஆசையா..... அவன் தொடுதலில் கிறங்கி அவள் உதடுகள் புலம்ப....... அவள் புலம்பலில் மயங்கி அவன் உணர்வெல்லாம் மழுங்க...... சில்லென்ற குளிர் தாங்கும் சுகமான தென்றல்...... இருள் வானின் நட்சத்திரம்...... ஒளிந்து பார்க்கும் பிறை நிலவு.... ஆட்காட்டிச் குருவியின் ஆள் காட்டும் ஒலியோசை..... ஊளையிடும் நரியோசை... வியர்வையில் ஒட்டிய மேலாடை.... அதை ஓரங்கட்டும் அவனின் இரு கைகள்..... களி மண் தரையிலே …
-
- 0 replies
- 524 views
-
-
சிறையிலே வாடும் பெண்புலிக் கூட்டங்கள்........ கவிதை - இளங்கவி..... மனதிலே பட்டாம் பூச்சிகள் பறக்கும் நினைவுகள்..... காளைகள் பேச்சில் கிறங்கும் உணர்வுகள்..... பொத்தி வைப்பதில் பெட்டகம் போல் ஆசைகள்...... காதல் நினைவில் தென்றல் போல் குளிர்ச்சிகள்.... திராட்சை கண் கொண்டு ஓர் தினுசாய்ப் பார்ப்பாள்... நாம் ஓடிய சயிக்கிளும் உடைந்து விழுந்திடும்.... ஒழித்து நின்று மெதுவாகச் சிரிப்பாள் பசியால் ஒட்டிய வயிறும் உணவால் நிரம்பிடும்.... ஒரே பார்வையில் வா என்றும் சொல்லுவாள்..... போ என்றும் கலைப்பாள்...... அது புரியாமல் நம் சித்தம் கலங்கிடும்...... இப்படிச் சிக்க வைத்து சிரிக்க வைக்கும் வைத்தியம் தெரிந்த…
-
- 42 replies
- 5k views
-
-
பிறந்தால் எங்கள் மண்ணில் பிறக்க வேண்டும்! இறந்தால் எங்கள் மண்ணில் இறக்க வேண்டும்! எரித்தால் என் ஊர் சுடலையுள் எரிய வேண்டும்! புதைத்தல் என் ஊர் மண்ணுள் புதைய வேண்டும்!
-
- 2 replies
- 821 views
-
-
நியூயோர்க் ஜம்பரில் (NYjumper) லண்டன் ஸ்ரைலில் (style) அரைப் பென்ரர் (pender) தெரிய டெலிம் (denim) போட்டு.. பி.எஸ் 3 (ps3) வாங்க பிளாசா (plaza) போனேன்..! அங்கே.. பிற்சா கட் (pizza hut) பிற்சாவோடு (pizza) ஸ்ரைலா நிற்கையில் லப் ரொப் (laptop) அடக்கமாய் நீ இருந்தாய். திறி டி விசனில் (3D vision) உன்னைக் காண ஐ.ஆர் (IR) கொண்டு ஸ்கான் (scan) செய்தேன் எக்ஸ் பொக்ஸ் கேம் (XBox game)போல திறில்லாய் (thrill) இருந்தாய்..! உடனே.. புளூருத் (bluetooth) சிக்னலாய் என்னைத் தந்தேன் பதிலுக்கு.. மொபைல் போன் (mobile phone) கமராவாய் (camera) நீ என்னைப் பார்த்தாய். அதுதான் சாட்டென்று.. ஐபொட்(iPod) ஒன்று வாங்கியே அருகில் வந்தேன் எம்பி…
-
- 23 replies
- 3.5k views
-
-
இன்பம் துன்பத்தைத் தாண்டித் தருவான் தூயவன். ------------------------------------ (கடவுள்) துன்பமும் இன்பமும் சமம் என ஞானவான் --------------------------------- (அறிவாளன்) சவம் செய்வான் யாவர் அறிய பயன் பெருவான் சர்ந்தப்பவாதி இரண்டிலும் ---------------------------------- (சர்ந்தப்ப வாழ்க்கை கொண்டவன்) மாயவர் காலில் மண்டியிடுவார் தும்பத்து மக்கள், இன்பம் பெற. ---------------------------- (வாக்கு கொடுப்பவர் காலின் ஆண்டிகள்) மாண்டவ்ர், நெஞ்சினில் துன்ம விதை…
-
- 0 replies
- 778 views
-
-
இது எங்கள் கவிகளுக்கன திரி, 1995 இடப்பெயர்விற்க்கு நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பிபோய், எங்களுடைய வாழ்வை மெல்ல மெல்ல தொடங்கிய காலம், எல்லாம் இழந்து உயிரை மட்டும் கொண்டு போய் வாழ்வை தொடங்கிய காலம், எங்கட பீடத்தில் நடத்த கவிதைப் போட்டிக்கு கொடுத்த தலைப்பு "இந்தளவும் போதும் எனக்கு" உண்மையில் இது ஒரு " எதிர் மறையான" தலையங்கம்.. எங்களது இழப்பை எல்லாம் சொல்லிவிட்டு, ஆறுதலுக்காய், "இந்தளவும் போதும் எனக்கு" என்று முடிப்பது.. அப்பா சொல்லுவார், முஸ்லீம் சாகோதரர்க்கள் சொல்லுவார்களாம், " வீடு எரிந்தாலும் அல்லா சுவரைக் காத்தார்" என்று.....யாரும் குறையாக எடுக்க வேண்டாம். புலத்தில் உள்ள கவலைகளையும் சொல்லலாம்.. நான் நல்ல ரசிகன்...ஆனால் எழுத தெரியாது.. உங்கள் ஆக்கங்களை …
-
- 15 replies
- 2k views
-
-
கண்ணுக்குள் சூரியச் சிரிப்பும் வாய்ச் சொல்லுக்குள் இனிமையும் கனிவும் நெஞ்சுக்குள் விடுதலைப் பெருநெருப்பு கண்ணால் யாவையும் பேசியே மனசில் சிம்மாசனமிட்ட தம்பி ஊர் போனதில் உறவானவருள் ஒருவன் உயிர் கரைக்கும் இசையால் மனங்களைத் தன்னோடு ஒட்ட வைத்த தன்னினிய குரலில் தந்தவொரு பாடல்….அவன் நினைவுகள் சுமந்து அவன் பாடிய பாடலிது.... பாடலை நேரடியாகக் இங்கே அழுத்துங்கள். பாடலை தரவிறக்கிக் கேட்க இங்கே அழுத்துங்கள்.
-
- 3 replies
- 1.9k views
-
-
கொலைக் களத்தில் கோல மயில்..... கவிதை - இளங்கவி.... மாஞ்சோலை ஒன்றிலே மாமர நிழலின் கீழ் மன்னவனின் மடியிலே மயிலொன்று படுத்திருக்கு..... மாங்கனிகள் பாரத்தில் கிளைகள் எல்லாம் நிலம் தடவ.... மயக்கும் விரல் கணையால் மடி கிடந்த பொன்மயிலின் மென் ஸ்பரிசம் அவன் தடவ... ச்சீ.. வேணான்டா.... கையை எடு.... நான் வீட்டை போப்போறன்.... இல்லை..இல்லை நாளைக்கு வயல் வேலை நான் வர மாட்டேன்டி.. அதனாலே இன்று உன்னை தொட்டுவிடப் போறேன்டி..... இல்லையடா... செல்லம் இது வேண்டான்டா... இப்போ நீ வேளைக்கு வயலுக்கு பொகவென்றால் நாம் வீட்டைபோவோம் இப்போ... சரியடி போவோம்.... காலையிலே எனக்கு என்ன சாப்பாடு கொண்டருவாய் நான் மண்வெட்டி பிடிக்கம…
-
- 22 replies
- 2.9k views
-
-
எழிதிட எழிதிட ஆசை வர்னங்கள் நிறைந்த எண்னங்களை எழித்தில் வடித்திட ஆசை பொய்கள் நிறைந்த கவிதைகளை எழிதிட ஆசை உன் அழகை முத்தமிழில் வடித்திட ஆசை உன் புன்முறுவலை முத்தமிலில் எழிதிட ஆசை உன் மீதுள்ள காமத்தை கன்னியத்துடன் கதை கதையாய் எழுதிட ஆசை வழமை போல் எழிதிய கிறுக்கலை கிழித்திட நினைத்தேன் என்றாலும் இந்த ஒரு தடவை என் கிறுக்கலுக்காய் நிந்தை அடைந்திட துணிந்தேன்
-
- 6 replies
- 914 views
-
-
அம்மாவின் கனவு தம்பிகளின் தங்கையின் நம்பிக்கை சுதர்சனா ! நீயெப்படி ? நெருப்பில் எரிந்து கரித்துண்டமானாய்….? எப்போதோ செய்தியாய் சந்தேகமாய் கேள்விப்பட்டது…. அது மறந்து போன ஒருநாளில் தோழனொருவன் ஊடாய் தொடர்பில் வந்த உன் அம்மாவின் கண்ணீர் இன்னும் நனைத்தபடியிருக்கிறது நினைவுகளை…. அம்மாக்களுக்கு நிரந்தர துயராய் பிள்ளைகளின் இழப்புகள் எங்களுக்கென்ன எழுதப்படாத விதியா சுதர்சனா…? உன் நினைவாய் நீ போன இடம் வரப்போவதாய் புலம்புகிற அம்மாவின் கனவுகளில் ஏன் தீமூட்டினாய்…..? அக்காவின் ஞாபகங்களில் தொலை தூரங்கள் வரையாகத் தங்கள் கனவுகளை எறிகிற உன் உடன்பிறந்தோரின் உள்ளெரியும் தீயில் அவர்கள் உயிர்வாழ்வையே வெறுப்பதை….! எந்த வா…
-
- 1 reply
- 866 views
-
-
எதிரிக்கு தீயாக இருந்து எம்முள் தீபமாகிவிட்ட எங்கள் திலீபனே! உன் நினைவுகள் தீயாகவும், தீபமாகவும் நெஞ்சினில் நிறைகின்றது மனம் கண்ணீரில் நனைகின்றது. பூமியில் அஹிம்சையை புதிதாய் காட்டிய புண்ணிய தேசத்திற்கு அஹிம்சையின் ஆகயம் காட்டிய கண்ணியவாளனே எம் சனம் கதறுவதை நீ அறியவில்லையா? காந்தியின் தேசத்து மூன்றாம் தலைமுறை சூழ்சிச்யுடன் சூது கொண்டு எம் மண்ணையும் வாழ்வையும் சிங்களம் சீரழித்ததை நீ அறியவில்லையா? கருணையே இல்லாத கருணாவும் பாழாய்ப் போன பிள்ளையானும் வீறுகொண்ட விடுதலைப்போரை சதிராட வைத்ததை சத்தியமாக நீ அறியவில்லையா? உன்னைக் கொடுத்த எம் இனத்தில் இம்மாதிரி தறுதலைகளும் தலையெடுத்தது எப்படி? அரிவாயா நீ? …
-
- 3 replies
- 2.1k views
-
-
விழுகை என்பது விதிப்படியும் எழுகை என்பது வினைப்படியும் நிகழ்ந்தே ஆகவேண்டும். நேற்றொரு நாள் சத்திய வேள்வியில் திலீப சொரூபம் தீய்ந்த போது கண்ணீரில் கருத்தரித்தது கால நெருப்பு இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம், புனைவெல்லாம் விடுதலைத் தழலில் வெந்து போயின. சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது. இந்தியத்தை விட்டு காந்தீயம் கப்பலேறிக் காணாமல்போனது. இனத்தின் நித்திய வாழ்வுக்கு நிம்மதியைக் கேட்ட சத்தியத்தேவன் சருகாய் உலர்ந்து உயிர் களைந்தான். பிராந்திய வல்லரசின் சூழ்ச்சி தோற்றதன் எதிரொலியை ஈழத்தின் முற்றம் வடுக்களாய் ஏந்தியது. மக்களின் தோள்களே மண்மீட்பைச் சுமந்தன. ஒப்பாரியின் உள்ளொலியில் பறைகளும் முரசுகளும் அதிர்ந்தன. கால நெ…
-
- 9 replies
- 1.7k views
-
-
____________________ இன்று விடுவிக்கப்படாதவர்கள் மற்றொரு பக்கத்தில் கம்பிகளுக்குள் நிற்கிறார்கள். அவர்களின் இடுப்பில் இருந்த குழந்தைகள் அழுகின்றன. இந்தக் குழந்தை கொண்டாடத் தொடங்கிய மகிழ்ச்சி முட்பம்பிகளில் மோதி சிதறுகிறது. தனது அம்மா அப்பபாவின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறதா என உறுதி செய்யப்பட்டு ஒலிபெருக்கியில் அறிவித்துவிட்டு குழந்தையை ஒலிபெருக்கியில் அவர்கள் புன்னகைக்க விட்டார்கள். உன்னை வரவேற்பதற்காக சொற்களை கொண்டு வந்திருக்கிறேன். கைளில் கட்டியிருந்த அடையாள இலக்கை அவிழ்த்து உன்னை வெளியில் அழைத்துச் செல்லுகிறேன். குழந்தை முகத்தைப் பொத்திக்கொண்டு புன்னகைத்துக்கொண்டிருக்கிற
-
- 0 replies
- 761 views
-
-
மருதம் :- வயலும் வயல்சார்ந்த இடமும் எதுவும் விதைக்கப்படாத வயல்வெளிகள் யாரும் புதிதெடுக்காத தரிசுநிலங்களாக… கண்மூடித் திறப்பதற்குள் கற்சிலையாய் அமைந்துபோன மனிதர்கள் வாழ்தல் எப்படிக் கொடூரமானது? கரடுமுரடான பாதை போல் கடினமானதா என்ன? எதுவுமே புரிவதில்லை… கால் பதிக்க முடியாத சேற்று வயல்வெளிகள் கட்டாந்தரையாகிக் கண்ணீர் வடிக்கக் கண்டேன். ஆற்றுப்படுக்கைகளில் ஆங்காங்கே பிளவுகள்.. வெடிப்புகள். உடைப்பெடுத்துப் பாயும் வெற்றுக்குளங்களில் செத்துக் கிடந்தன நீர்க்காக்கைகள். குளக்கட்டின் மரநிழலில் சிலையாகச் சமைந்திருந்தார் பிள்ளையார்…
-
- 0 replies
- 893 views
-
-
(15.09.09 தடைமுகாம் ஒன்றிலிருந்து வந்த அழைப்பில் தொடர்பு கொண்ட பெண் போராளி ஒருத்தியின் குரல் இது) கன்னங்கள் நனைத்த கண்ணீர்ச் சொட்டுக்கள் மெல்லக் காய்ந்து போகிறது. காலத்திடம் தோற்றுப் போய் மர்மம் நிறைந்த இருட்பொழுது தன் இருப்புக்காய் இயல்பாகிறது. எல்லாம் இழந்து நடுத்தெருவில் சனங்கள். புதைகுழிகளுக்கான அகழிகள் புதிது புதிதாய் பிறப்பெடுக்கிறது. அற்புதங்கள் அநாமதேயமாய் வியாபாரிகளின் கணக்குகளிலிருந்து விடுபடுகிறார்கள்…. நாங்கள் போனதும் உயிர் கொடுத்ததும் இதற்காகத்தானா….? *‘போராடுங்கள் சாவு உங்களுக்குச் சர்க்கரையல்லவா* சொன்னவர்களல்லவா நீங்கள்…. இன்று சாவோடு கம்பிவேலிகளுக்குள் சமராடிய கைகள் ஓய்ந்து சத்தமிட்ட குரல்கள் ஒட…
-
- 11 replies
- 1.6k views
-
-
மண்ணிறங்குகிற கால்கள் By தீபச்செல்வன் ____________________ பந்து எட்டாத தூரத்திலிருக்கிறது கால்கள் இறங்காமல் எப்பொழுதும் தூக்கி மடக்கி வைத்திருந்தபடி அவள் எல்லாருடைய கண்கள் வழியாகவும் நடந்து செல்லுகிறாள். பதுங்குகுழி உடைந்து மண் விழுகையில் தனது கால்கள் மேலும் நசிந்தன என்கிறாள். கால்களை ஷெல் கிழித்த பொழுது தனது கண்கள் குருதியில் நனைத்து கிடந்தன என்று கூறியபடி சக்கரத்தை உருட்டுகிறாள். எனது கால்கள் இல்லாததைப்போலிருக்கின்றன. நடப்பதற்கு ஆசைப்படுகிற கால்கள் எப்பொழுதுமே தொங்குகின்றன. மண்ணிறங்கும் கால்களுக்காக கனவு காணுகிற இராத்திரிகளில் அவளது மனம் நாற்காலியின் கீழாக தூங்குகிறது. எப்பொழுதும் எங்கும் உருள மறுக்கிற சக்கரங்…
-
- 3 replies
- 1.2k views
-
-
1987 செப்ரம்பர் 15 அன்று நல்லூர் வீதியில் தியாக தீபம் திலீபனின் நீரேந்தும் அருந்தாத உண்ணாவிரதம், இந்திய வல்லாதிக்கத்திடம் ஈழத் தமிழ் மக்களின் 5 அம்சக் கோரிக்களை நிறைவேற்றக் கோரி ஆரம்பமானது. (திலீபன் தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவன். யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி இருந்த மாணவன்.) ----- நினைவுப் பதிவு----- தியாக தீபமே விடுதலைத் தீயே.... அன்னை மடியில் நீ கிடந்த நினைவுகள் அழியவில்லை..! தமிழீழ மண்ணில் நீ பதித்த பாதச் சுவடுகள் கருவறைகளாய் சாதனைகளைப் பிரசவிக்கின்றன...! அண்ணா.. உன் உயிர் தந்து தமிழீழ விடுதலைக்கு நீ.. உயிர் கொடுத்தாய்..! உன் தியாகம…
-
- 6 replies
- 3.3k views
-
-