கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
காலம் கரைந்ததோடுகின்றது இன்னமும் வாழ்க்கை தடுமாறுகின்றது நாலுபேர் தூக்கிச் செல்லும் பாடையும் தள்ளாடியே சுடுகாடு செல்லும் இருந்தும் ஆட்கள் இல்லா ஊர்களில் அழுகிய பிணங்களாக நிறைய நேற்றய மனிதர்கள் இருந்தார்கள் மயானத்தை அடைய முடியாத ஆயிரமாயிரம் சவங்கள் குறித்து பின்னொரு நாளிலும் யாரும் ஒப்பாரி வைப்பதில்லை எட்டுச்செலவும் அந்திரட்டியும் அறியாத பாவப்பட்ட பிரேதங்களுக்கு படையல் செய்ய தப்பிய தாய்களும் எஞ்சிய பிள்ளைகளுக்காகவும் ஒரு நாளைக் கூட காலம் தரவில்லை இன்னும் பல நுறு கோயில்களும் சாமிகளும் படையல் இன்றி பட்டிணியாகத்தான் கிடக்கின்றது பொங்கிப் படைக்கவும் அல்லது மூன்று பழத்தை வெத்திலையில் வைக்கவும் ஊர் திரும்பும் எசமானர்கள் வருகைக்காக …
-
- 0 replies
- 659 views
-
-
-
அவர்களை விடுவிப்போமா.... முட்கம்பியின் பின்னால் நீர் நிறைந்த விழிகளுடன் பல திசையும் நோக்கி பல ஆயிரம் கண்கள்..... இரவு பகல் பாராது எட்டுத்திசையும் நோக்கி எவராவது வருவாரா எம் ஏக்கம் தீர்க்க.... இது தான் இன்றைய கேள்வி அங்கே... பதில் தெரியாமல் துடித்து பிணமாகும் உயிர்கள் அங்கே.... படுக்கை மலசல கூடத்தில் மலசல கூடமோ படுக்கையில்.... பகைவென்று நிலமாண்ட பிரபாகரன் தேசம் பகைவனின் கூடாரத்தில் பல நூறு சித்திரவதையில்.... ஏங்கும் விழிகளுக்கு தூக்கம் கொடுப்பதற்கும் பட்டினி வயிற்றை பசியாற விடுவதற்கும் நாம் என்ன செய்தோம்...? இனியாவது என்ன செய்வோம்...? முடியாத காரியமும் முடித்துக் காட்டிய தலைவனின் பாசறையில் தவண்ட …
-
- 6 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=OCsAMIe_kdY&NR=1 Thank you! for C S Baskaran
-
- 1 reply
- 1k views
-
-
ஏ மிலேச்ச நாடே! எத்தனை கொடுமைகள் செய்து விட்டாய் எங்கள் தமிழினத்திற்கு.... எத்தனையோ வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்த்தாயிற்று... எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்று மிச்சம் உண்டு என்னிடம்... பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து அழுது வீங்கிய கண்களோடும் அரற்றிய துக்கத்தோடும் கலைந்த கூந்தலோடும் வயிறெரிந்து இதோ விடுக்கிறேன்... கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்! குறள்நெறியில் வளர்ந்து அறநெறியில் வாழ்ந்தவள் அறம் பாடுகிறேன்! தாயே என்றழைத்த வாயால் பேயே என்றழைக்க வைத்து விட்டாய்! இனி நீ வேறு, நான் வேறு! ஏ மிலேச்ச நாடே! ஆ…
-
- 0 replies
- 860 views
-
-
அ. எலும்பும் தோலுமாக தூரத்தில் முட்கம்பி ஒனறில் அம்மா கொழுவப்பட்டிருந்தாள். இருவரது முகங்களையும் முட்கமபி கிழித்துத்கொண்டிருக்கிறது. மெலிந்த கைகள் முட்கம்பிகளுக்குள புகுந்து கலந்துகொண்டிருக்க நடுவில் இரண்டு முட்கம்பிச் சுருள்கள் ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கப்பட்டிருக்கிறது. அம்மா புன்னகையை இழந்துபோயிருக்கிறாள். தாழ்ந்து மறைந்துவிட்ட கண்களுக்குள் படிந்த புழுதியை கண்ணீர் கரைக்கிறது. காலத்தின் பெருந்துயர் நிரம்பி பிள்ளைகளுக்காக ஏங்கும் அம்மாக்கள் பலர் என் அம்மாவின் பின்னால் வரிசையில் நிற்கின்றனர். எல்லா அழுகைகளும் எல்லா விசாரிப்புக்களும் பரிமாறல்களின் துயரங்களும் ஓலைக்கொட்டிலினுள் நிரம்பிக்கொண்டிருக்கிறது. அம்மாவி…
-
- 2 replies
- 992 views
-
-
சாம்பலாக்கப்பட்ட நிலத்தின் நடுவிலிருக்கிற சிதைக்கப்பட்ட நகரம் ‐ தீபச்செல்வன்: :தீபச்செல்வன் 01 மாடுகள் அலைந்து திரிந்து கண்ணிவெடிகளையும் மண்ணையும் மேய்ந்து கொண்டு சாணியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக நகரத்திற்கு வேறு பக்கம் திரும்புகின்றன. எரிந்து கருகிப்போயிருக்கிறது சனங்களின் நிலம். அழிந்து சமதரையாகிப்போன வெளியில் பேய்கள் வாழ்ந்து திரிகிறது. நிலம் எரிந்து சாம்பல் பூத்திருக்க தலைகள் பிடுங்கப்பட்ட மரங்கள் மண்ணில் குத்துண்டு நிற்கின்றன. தலையிழந்த பனைகளால் மிகுந்த வெளியில் நோடட்மிடுகிற காவலரண்களை சுமந்து நிற்கிறது வேர் பட்ட பனங்குத்திகள். உப்பு விழைந்த வாடிகளில் இல்லாத சனங்களின் குருதியும் துயரும் சேர்ந்து விளைந்து…
-
- 5 replies
- 1.1k views
-
-
இது ஒட்டுமொத்த தமிழினத்தின் சாபமாக இருக்கட்டும் இதை இயன்ற அளவில் பரப்புரை செய்வதே நாம் நம் இனத்திற்கு செய்யும் களப்பணி. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு... எத்தனை வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று... எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்... பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து அழுது வீங்கிய கண்களோடும் அரற்றிய துக்கத்தோடும் களைந்த கூந்தலோடும் வயிரெரிந்து இதோ விடுகிறேன்.. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! …
-
- 1 reply
- 885 views
-
-
விழவிழ எழுதிய வீரவணக்கம் என்னவானது ? விழவிழ நீங்கள் வீரவணக்கம் எழுதினோம் நாங்கள். அழஅழக் கவிதையும் ஆறாத்துயர் நிறையக் கண்ணீருமாய் கடைசிச் சொட்டு வீழ்ந்து காயும் வரையுமாய் நினைவள்ளி நினைவள்ளி நீண்ட தூரமெங்கும் நெருப்பு மூட்டினோம். இழந்தவை யாவையும் எழுகையும் நிமிர்வும் என்றெம் எழுத்துகள் யாவிலும் எழுதியே அழிந்தோம். பரணி பாடினோம் பாவினால் உங்களைப் பரவசப்படுத்தியும் பாடையின் முன்னின்று போர் முரசு கொட்டியும் சோடித்து மறைத்துச் சுதந்திரம் பாடினோம். ஈரம் சொட்டச் சொட்ட நீங்கள் சிந்திய குருதியில் எழுதினோம் ஏராளம் ஏராளம்…… கட்டாயங்களை மறைத்து அவை கட்டாயமென்று எழுதினோம்…. காதல் வாழ்வு குழந்தைகள் உறவு முழுவதும் காப்பரண் தேட…
-
- 70 replies
- 9.3k views
-
-
எமக்கொரு நாடு கேடா.... வெறுப்பு உமிழும் காலம் மீது வாழ்வு சூழ் கொள்கின்றது ஒரு கண்ணை மறு கண் பிடுங்குது தான் பார்க்கா காட்சிதனை நீ பார்த்தல் ஆகாது என ஆவேசம் கொள்ளுது எதிரியின் தணல் எடுத்து மறுகண்ணை சுடுது இது எம் சாபம் யுகங்கள் தோறும் நாம் இப்படி தான் இருந்தோம் ஒரே காட்சியை ஒவ்வொருவரும் வர்ணம் பூசி பார்த்தோம் என் வர்ணம் பார்க்காத கண்னை வீதியின் முடிவில் குச்சொழுங்கையில் குடி வைத்தோம் எம் கண்ணை நாமே குருடாக்குவோம் எம் கைகளில் நாமே விலங்கிடுவோம் வரலாற்றின் நீண்ட பக்கம் எங்கும் எம் தோல்வியை நாமே எழுதிக் கொள்வோம் எம் முதுகெலும்பில் எதிரியின் மாட்டுச் சாணத்தை அப்பியது நாம் எம் குடிசைகளி…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஒற்றை வார்த்தை வேலை முடித்து மாலை வேளையில் சாலை நெரிசலில் சிக்கித் தவித்து விரையும் வண்டியில் வீடு விரைந்து இருட்டும் பொழுதிலே கட்டியணைத்து நெஞ்சில் புதைத்து முத்தம் கொடுத்து ஆரத் தழுவி உச்சி மோர்ந்து உள்ளம் குளிர என் செல்லக் குழந்தை சொல்லி அழைக்கும் "அம்மா" என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனை களைப்பும் அமுங்கிப் போகும்
-
- 0 replies
- 591 views
-
-
உலகம் இப்போ ஒரு உருண்டை வீடு அதில் மனிதர் எல்லாம் -தினம் அலையும் வெறும் கூடு இயந்திரங்கள் மனிதராகி வேர்வை சிந்தாது உழைக்கலாம் மனிதரெல்லாம் ஒன்று கூடி இயந்திரமாய்ப் பிளைக்கலாம் காலம் போற போக்கில் நாளை கலியாணங்கள் நடக்கலாம் ஒற்றைப் பிள்ளை பெற்றிடாத தம்பதியர் கூடியே தத்துப் பிள்ளை தத்தெடுக்க இயந்திரங்கள் சமைக்கலாம் வீட்டுக் காவல் வேலைகென இயந்திரத்தில் நாய்களாய் தோட்டம் முதல் தொலைவு வரை ஓடியோடி உழைத்திட இயந்திரமாய் மனிதனை சந்தையிலும் வாங்கலாம் .
-
- 2 replies
- 860 views
-
-
நெருப்பு தமிழனின் வாழ்வை கருக்க வந்த பிறப்பு..... முள்ளிவாய்க்காலில் பரிசளித்தாய் வகை தொகையின்றி இறப்பு.... தமிழரின் அடிவயிற்றில் நின்றெரியும் வெறுப்பு.... தமிழன் பட்டினியாம் நீயோ சிங்களனின் அடுக்களையில் நின்றெரிவாய் சிரித்து.... எங்கள் எதிரிக்கு அமைந்துவிட்டாய் அவன் சொல்கேட்கும் செருப்பு.... மறுபடியும் ஓர் நாள் எதிரிகளின் படையெரிக்க அக்கினிக்குஞ்சாய் பிறந்திடுவாய்.... அதைப் பார்த்து எதிரி ஓடிடுவான் உன்னை வெறுத்து.... காவியனின் சிந்தனைகளில் இருந்து.... அன்புடன் காவியன்
-
- 0 replies
- 550 views
-
-
கண்ணெதிரே கலையுமா கனவு? மண்ணெனவே உதிருமா மனது? நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம் ஒப்பேற முன்னரே உருகியா போகும்? இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை? இது காலச்சுழி சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது. சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும். தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும். நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும். மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும். மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும். உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும். இன்றைய பொழுதுகள் எமக்கானவை. ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர் முக்காற்சுற்று முடித்துவிட்டது. சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ள…
-
- 36 replies
- 3.3k views
-
-
இனிய வணக்கங்கள், வடலிபதிப்பகம் மூலம் வாங்கிய வசீகரனின் 'தமிழர் திருநாள்' புத்தகத்தை வாசித்தேன். வாசிச்ச அரைவாசியில... உணவு அருந்தச்சென்றபோது சுமார் பத்துவருசங்களின் முன்னர் நான் 'பகிடிவதை' எனும் தலைப்பில எழுதின கவிதை ஒன்று திடீரெண்டு நினைவில வந்திச்சிது. அதை உங்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன். பகிடிவதை ஆவென்ற ஆகாசம் வாயினுற் போய்ப்புத்தி பாவென்று பன்னீரால் கால்கழுவிக் கலையாட பூவொன்று தோன்றி புத்தாடை தான்கேட்கச் சோவென்று பெய்தமழை சொக்கிப்போய் நின்றது! நீர்கண்டு மாங்கன்று கிளைவிட்டுப் பழஞ்சொரிய ஊர்நண்டு உயில்காட்டி வேரினுள் இடம்தேட பார்வண்டுப் பிள்ளைகளும் விதையுள் விளையாட சீர்கொண்டு வந்தகன்று கண்ணீர் விடுகிறது! வாழா வெட்டியிவன்! வாடிய மட…
-
- 0 replies
- 941 views
-
-
பிணக் காடுகளில்..... கவிதை - இளங்கவி.... பிணக் காடுகளில் பேய்களின் ஊர்வலம் நடக்க..... நாம் பிறந்த தேசம் நாயின் வாயில் கேவலமாய்க் கிடக்க..... ஈழத்து வளங்களெல்லாம் எதிரியின் காலடியில் நசுங்க.... எம் உறவின் எலும்புகளை அவன் நாய்கள் திண்டு ருசிக்க.... ஆடுகிறான் பேயாட்டம் அதை அடக்க இல்லை ஓர் கூட்டம் உலகத்தின் அசிங்க அரசியலில் அழிந்தது எம் உயிரோட்டம்.... அன்றொரு நாள் இரவில்.... ஓலைக்குடிசை இடுக்கினிலே ஒற்றை நிலவைப் பார்த்துக்கொண்டு மயங்கிய பூவினிலே மது அருந்தும் வன்னிவண்டு.... இன்றைய இரவினிலே..... இரவின் கோரப்பல்லின் இடுக்கினிலே கொடிமல்லிகைகள் சிக்கிக்கொண்டு எதிரியின் கோரப்பசிக்கு சிதையும் நம் மலர்கள் இன…
-
- 12 replies
- 1.6k views
-
-
கித்தாளம் சின்னையா என்பது என் மாமன்.... 60 வயது இருக்கும் அவருக்கு....ஒரு மனைவி மூன்று பிள்ளைகள் என்பது official அறிக்கை. படலை பாய்ந்து, வேலி பாய்ந்து வாரிசை உருவாக்கியதில் அவர் தான் ஊரில் மன்னன் என்பது ஊர் பேச்சு இப்போ எல்லா மனுசியும் விட்டுப் போய், ஒரு கருத்த 35 வயது பெண்ணை வைத்திருக்கின்றார் என்பதும் ஊர் பேச்சுதான்...ஆனால் இடைக்கிடை இன்னும் வேலி பாய்கிறார் என அவரின் 35 வயது கடைசி மனுசி பக்கத்து வீட்டுக்காரனுக்கு சொன்ன செய்தி (சொல்லும் போது இரவு 11:30) அவருக்கு நான் "எழுதுவது" பற்றி பெரிய சந்தோசம்...திடீர் திடீரென தன்னுடைய சில கவிதைகளை அனுப்புவார்....எங்கே அனுப்பினாலும் உடனே திரும்பி வரும் அவரின் கவிதைகளை தரவேற்ற வேறு இடம் கிடைக்கவில்லை.....ஆகவே யாழை தேர்ந்தெட…
-
- 8 replies
- 1.2k views
-
-
தோற்று விட்டோம் நேற்றய தோல்விகண்டு விழ்ந்து விட்டோம் கலைத்து விட்டோம் நாளைய கனவும் தொலைத்து விட்டோம் இதயம் மட்டும் துடிக்கிறது என்றோ ஒரு நாள் எம்மக்கள் விடிவுக்காய்
-
- 0 replies
- 508 views
-
-
நான் வாழ்ந்த மண்னை நினைதத்துப் பார்த்தேன் . சுடும் வெயிலில். நடைசெய்தாலும் மரநிலலின் காற்றின் குளிர்மை. நெடும் துரம் நடை செய்தாலும் அந் கால் பட்டமண்ணின் ஒருசுகம். வியர்வை சிந்த சிந்த . தாகத்தை தேடி போனேன் தரைகளில் இருந்த மரத்தின் கனிகளை உண்டேன். தண்ணீரே தேவை இல்லை . திரும்ப வீடு வந்தேன். சுவையுடன் சமைத்துக்கிடந்த உணவை சுவையாகவே உண்டேன்: மாமரகிளையில் ஊஞ்சல் கட்டி கால் மேல் கால் போட்டு விசுகின்ற காற்றின் ஒளியில் நித்திரை செய்த நாள் அந்தநாள். இன்று என்மண்ணையும் உறவுகளையும் நினைத்து நினைத்து உள்ளம் வருகி உருகிபோகிற மொளுகு திரி போல் என் மனம் உருகிறதம்மா . நான் வாழ்ந்த மண்ணின் வாழ்க்கை . திரும்ப வருமா திரும்ப வருமா
-
- 1 reply
- 674 views
-
-
நான் துரோகி! நீயும் துரோகி! என்னையும் உன்னையும் பெற்ற பெற்றோர் துரோகி! பெற்றவரைப் பெற்ற பேரன்,பூட்டன் முப்பாட்டனாரும் துரோகி! அவன் துரோகி! இவன் துரோகி! அவனைத் தெரிந்த அவள் துரோகி! அவளுக்கு தெரியாமல் தெரிந்த அதுவும் துரோகி! கடல் துரோகி! காற்று துரோகி! கடலையும் காற்றையும் இணைக்கின்ற கதிரவன் துரோகி! கதிரவனை சுற்றிவருகின்ற பூமியும் துரோகி! கடவுள் துரோகி! கடவுளுக்கு கோயில்கட்டிய பக்தன் துரோகி! பக்தனுக்கு சோறுபோட்ட பக்தை துரோகி! பக்தையுக்கு பின்னால் அலைந்த பித்தனும் துரோகி! புத்தனும் துரோகி! பறவைகள் பல்லி பாம்பு பூச்சி புழுக்கள் அனைத்தும் துரோகி! நினைத்துப்பார்க்க நினைவில் வருகின்ற நினைப்பும் துரோகி! நினைப்பைத் தூண்டுகின்ற நரம்பு துரோகி!…
-
- 22 replies
- 5k views
-
-
Tuesday, September 20, 2005 அவள் அவள் வீட்டு கதவு தானே திறக்கும் உள்ளே அணைப்பதற் கென்றே ஏற்றப்பட்ட விளக்கெளியில் உரிவதற்காய் உடுத்திய சேலையில் கலைப்பதற்கென்றே செய்த ஒப்பனையில் கசக்குவதற்காக சில மலர்களை காதேரம் வைத்து அழிப்பதற்காக வைத்த அகன்ற அழகிய பொட்டுடன் காத்திருக்கிறாள். உடம்பில் எங்கும் உணர்சியில்லை வயிற்றைதவிர என்வாயிற்று இன்று ஆணினமே அழிந்துவிட்டதா சுனாமி வந்து சுத்திக்கொண்டுபோய்வட்டதா படுக்கைவிரிப்பு பத்திரமாய் இருக்கிறதே வைத்தபொட்டு வைத்தபடியே இருக்கிறதே அதுஅழியா விட்டால் அவளிற்கு அமங்கலமல்லவா செல்லாத இராத்திரி சிறுகச் சிறுக விடியும்பகல் ஜயோ..பட்டினிப்பகலா?? எங்கோ ஒருகட்சி தலைவன் …
-
- 4 replies
- 809 views
-
-
இங்கு விசமாகிபோகும் மனிதர்களும் உண்டு உணர்வுகளை புரிந்துகொள்ளாத மனிதர்களும் உண்டு உடுத்தியிருக்கும் உடையின் உள்ளிருக்கும் பாகத்தை பார்க்க துடிப்பவர்களும் உண்டு சக மனிதனை தாக்கி அளிக்க துடிப்பவர்களும் உண்டு சக மனிதனின் உணர்வுகளை கொச்சைபடுத்தும் மனிதர்களும் உண்டு ஆறறிவு படைத்த மனிதனுக்குள்ளே எத்தனை விதமான எண்ணங்கள் ஐந்தறிவு படைத்த விலங்கினங்களுக்கு இல்லாத அத்தனை குணமும் இங்கு மனிதர்களுக்கு இருக்கிறது அத்தனையும் வன்முறையா? இல்லை குரூரமா? புரியாத புதிராய்!
-
- 1 reply
- 854 views
-
-
புதிய பௌத்தம் யு9 பாதை திறந்தாயிற்று ஈழத்தமிழர்களின் வாழ்வுபோல் தலை இல்லாத் தென்னையும் பனையும் தான் தெருவெங்கும் தோற்றுன்றன. துக்கத்திலும் அவமானத்திலும் தலைகுனிந்து நிற்கும் மரங்களுக்கும் எம்மக்களுக்கும் துப்பாக்கி காட்டியே ஆறுதல் சொல்கிறார்கள் படைகளும் அவர்களின் குடைகளும். துப்பாக்கி தூக்கிய கைகள் வெறுமையாக உயர்த்தப்பட்டபோது வெளிநாட்டில் எம்தமிழ் மனங்கள் விதைவையாய் போயின. மாறிநின்றவர்களுக்குக் கூட மாண்டவர்கள் தமிழரின் அடையாளமாய் போயினரே. திவசத்துக்குக் கூட அடையாளம் இன்றி வன்னி வடுவின்றி எலும்புகள் கூட எரியத்தொடங்கிவிட்டன- ஆனால் …
-
- 2 replies
- 941 views
-
-
சுதந்திரத்தைத் தேடி….ஓடி….டயானா!........ மனிதநேயங்கள் உன்னுள் நிறைய இருந்தன -உன் மலர்ச்சிரிப்பினால் அவை உலகை மயக்கின!..... பிரபலங்களோ என்றும் உன்னை பின்தொடர்ந்தன உன்பிரிவினிற்கும் ஏனோ அவை துணையாய்ப் போயின!...... தாய்மை கொண்ட பெண்மையாலே பலர் பெருமை கொண்டனர் தாரமாகி உலகை நீயும் உன்பால் கொண்டனை! கோடி கொடுக்கும் அரண்மனையில் கூடி வாழந்;தனை-இரு குழந்தைகளைப் பெற்றுநீயும் அந்த தாய்மை கண்டனை! ஆண்இனத்தின் உரிமைகளோ ஆதிகமானவை-அதிலும் அரண்மனையில் வாழ்ந்துவிட்டால் அவை புனிதமானவை! பெண்மையிலும் உணர்வுகள் தான் பள்ளிகொள்வதால்-அதைப் புரிந்துகொண:டு பின்நாள் நீயும் வுpலகி வாழ்ந்தனை! பெற்றுவிட்ட…
-
- 5 replies
- 1.3k views
-
-
யார் இவர்கள்..... கவிதை - இளங்கவி தமிழர்களை அழவைத்த அந்தக் கொலைக்காட்சி இதுவும் போதாதா உலகத்துக்கு எங்கள் இனப்படுகொலைக்குச் சாட்சி.... இறந்த உடல்களெல்லாம் நிர்வாணமாய் கிடக்க உயிருள்ள ஓர் உறவின் உயிர் குடிக்கிறது துப்பாக்கி..... அவர் உதிரம் நிலம் நனைக்க அவன் சிர்ப்போசை கேட்கிறது.... நாம் சிந்திய இரத்தத்தில் அவன் சந்தோசம் மிதக்கிறது..... யார் இவர்கள்....? எமைக் காத்த தெய்வங்களா.... இல்லை..ஈழத்து இளம் மயிலா... அல்லது... எம் ஊரு காளைகளா.... எம் மொட்டுக்களின் பெற்றோரா...? புலியாக இருந்தாலும் பொதுமகனாக இருந்தாலும் அவன் இறந்தது உனக்காக..... உன் தேச மீட்புக்காக....... கண்ணீரும் வற்றி விட்டோம் கலங்க நேரமில்லை... ப…
-
- 10 replies
- 1.5k views
-