கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
சமாதானத்தின் பெயரால்.. முந்தியெல்லாம் நாங்கள் விழிநீர் சிந்தியதே இல்லை தந்தனத்தோம் பாடி கெந்தித்தொட்டு ஆடி தெரு மந்திகளைப் போல வாழ்ந்திருந்தோம் முந்திய வாழ்க்கை எல்லாம் நாம் சந்தித்த எதிரியாலே பந்தி விட்டு ஓடியது சந்தி கூடிச் சிரித்தது... வந்தவன் ஆட்டி வைக்க சொந்த மண் விட்டு வெந்த புண் மனத்தோடு சொந்த பந்தமதைப் பிரிந்து குந்தியிருந்த நிலத்தையும் இழந்து மரம் விட்டு மரம் தாவும் மந்திகளைப் போல ஊர் விட்டு ஊரோடினோம் கூடு பிரிந்த வாழ்க்கையது தேடி வந்தது எம்மை கேடென்று நினைக்கலாமோ நாமதனை..? நாடற்ற நமக்கு வீடெதற்கு ? வீண் வம்பெதற்கென பாடித் திரிந்த பண்பட்ட குயிலொன்…
-
- 3 replies
- 1.1k views
-
-
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் [ சு. பிரசாத் ] வியாழன், 26 மார்ச் 2009 19:10 மூத்த தமிழனே எம் தமிழகத்தின் முதல்வனே, எம் கண்ணீரை ஒரு கவி பாடும் உம் சங்கத் தமிழ் கொண்டு தெருவில் நிற்கிறோம் தமிழன் என்று தலை குனிந்து நீ ஆட்சி செய் தமிழனென்று தலை நிமிர்ந்து சங்கம் வளர்த்த எம் தலைவனே தமிழை வார்த்த எம் வேந்தனே எம் சாவில் ஒரு கவி பாடும் உம் சரித்திர தமிழ் கொண்டு குண்டு மழை பெய்தபின்னர் கொலை கொலையாய் பிணங்கள் அங்கே ஓட்டு மழை பெய்தபின்னர் வாழ்க உம் வெற்றி இங்கே பெரியாரின் புதல்வனே பெரியாரை புகழ்ந்தவனே எம் கதறலை ஒரு கவி பாடும் உம் பொய்யா மொழி கொண்டு இலவச மருந்து என்றாய் மருந்தின்றி சாகிறோம் பார் …
-
- 1 reply
- 993 views
-
-
ஒரு புலம்பெயர்ந்தவனின் புலம்பல் தை பிறந்தால் வளி பிறக்கும் பயிர்கள் எல்லாம் தழைத்தோங்கும் மாசியில் மாம்பழம் மறக்கேலா நினைவு அது பங்குனியில் கதியால் வெட்டு பரபரப்பாய் நாட்கள் நகரும் சித்திரையில் வேம்பு பூத்து சிறப்பாய் சிலிர்த்து நிற்கும் வைகாசியில் விசாகம் தமிழர் வரலாற்றுப் பாரம்பரியம் ஆனியில் அனல் வெயில் அப்பப்பா என்ன புழுக்கம் ஊரெல்லாம் வெப்பத்தால் உறங்கிவிடும் வீட்டுக்குள் எங்களுக்கோ கொண்டாட்டம் எவ்வளவு சந்தோசம்........... பின்னேரம் கிளித்தட்டு காலையில் பாட்டுக்குப்பாட்டு கனவுகளில் கவலையின்றி களிந்தது எம் இழமைக்காலம் இடையில் வீடு வந்தால் இருக்கும் சாப்பாடு இடையிடையே அம்மாவின் வசைப்பாட்டும் வழமையங்கே உப்பிடியே பு…
-
- 1 reply
- 945 views
-
-
வரிசை வரிசையாக நெல் மணிகள் விதைத்து அழகான அகண்ட வாய்க்கால் கட்டி தேவையான குளத்து நீரை மண் குளிர ஓட விட்டு வளர்த்த நெல் மணிகள் பொன் நிறமாகி நாணத்தால் அவை மண் பார்த்து தலை வணங்கி நிற்கையிலே மண்ணுக்கு சொந்தக்காரன் அறுவடை நேரம் என சரியாக குறிப்பறிந்து அதை வெட்டி அரிசி ஆக்கி தானும் உண்டு தன் அயலானுக்கும் உண்ணக் கொடுத்த வன்னி மண்ணின் சொந்தக்காரன் ஒரு நேர கஞ்சிக்காய் கால் கடுக்க காத்திருக்கிறான் றோட்டோரமாய் கொதிக்கும் வெய்யிலிலே........ வலிக்கும் மனசுடன் உங்கள் தமிழ்மாறன்
-
- 0 replies
- 631 views
-
-
எழுந்து வா என்னோடு கை கோர் நீ எழுமுன்னே உன் கால்களை உடைக்க காத்திருக்கும் பகைவர் கரங்களை உடைத்து-நீ எழுந்து வா என்னோடு கை கோர் சிதறிப்போனது உன் உறவுகள் அல்லவா உன் கண்கள் இன்னும் கசியவில்லையா? தினம் தினம் கேட்கும் மரண ஓலங்கள் உன் காதில் விழவில்லையா? பலாத்காரம் செய்யபட்டவள் உன் சகோத்ரி அல்லவா உன் இர்த்தம் இன்னும் கொதிக்கவில்லையா? உன் இனத்தின் இறுதி மூச்சு ஊசலாடுதே இன்னும் அதை நீ உண்ரவில்லையா? எழுந்து வா என்னோடு கை கோர் நீ எழுமுன்னே உன் கால்களை உடைக்க காத்திருக்கும் பகைவர் கரங்களை உடைத்து-நீ எழுந்து வா என்னோடு கை கோர் கை இழ்ந்து கால் இழந்து காண சகிக்காது உடல் சிதைந்து ஒவ்வொருவராய் உயிர் துறக்க உலகையே எதிர்த்து உயிரை துச்சமென நி…
-
- 0 replies
- 657 views
-
-
இனவெறி கொண்ட சிங்களவன் கொலைவெறிதாண்டி மதவெறி தாண்டி ஏதுமறியாப் பிஞ்சு பிறந்தபின் கொன்ற காலம் போய் கருவிலிருந்ததை மட்டும் கலைத்தழித்தது போய் தாயொடு சேய் சேர்த்துக் கொல்லும் காலமடா தண்ணீர்சிந்திய தேசத்தில் இன்றுகண்ணீர் சிந்தியே வெள்ளபெருக்கோடுதடா கொதிக்கும் சட்டிக்கும் தண்ணீர் படக்கூடாது வெடிக்கும் அடிக்கும் திண்ணையில் என்னை விடக்கூடாது ஒடிக்கும் அந்த நொடிக்கும் எனக்கும் இருக்கும் பந்தம் துடிக்கும் அப்போது வந்தவர் மனமெல்லாம் துடிக்கும் அதைப்பார்த்து நாலஞ்சு நன்றாக இங்கே நடிக்கும் என்றெண்ணி கொடிக்கும் வளரும் இடும்பை கூட மடிக்கும் தன் கொடி நிலம் நோக்கி வெடிக்கும் என் நெஞ்சு கொடுக்கும் அவர்களுக்கு விளக்கம் மூலப் பிரதியைக் காண இங்கே ச…
-
- 5 replies
- 1.2k views
-
-
வானம் வைகறை ஏறும் என்றவன் காணும் போதினில் சாகும் என்சனம், ஏறும் கிபிர்கூட ஏகும் குண்டினால் வேகும் உடல்கூட வெந்தணலாடும் வேளையில் என்மனம் வேகும் போதிலே சாகும் போதிலும் காக்க எமனா வருவான் இனி நாமே போகும் இடம் தேடி நாடும் போதினில் கிடைத்திடும் தனித்தமிழீழம் www.nilavan.tk
-
- 0 replies
- 575 views
-
-
நான் உன்னைப் பார்க்கையில் நீ என்னைப் பார்க்கின்றாய்… நான் என்னவள் நினைவோடு பார்க்கையில்… உன் முன்னாடி நின்று மணிக்கணக்கில் பேசுவேனே… தலைவாரி தலைவாரி முடி போனதே… நீ என்னை அறியாது சிரித்தாய் நான் என்னை அறியாமற் சிரித்தேன்…. இப்போது புரிகின்றது ஏன் நீ சிரித்தாய் என்று… கள்ளியடி நீ… முடிபோன என் தலை உன் சகோதரமாகப் போகின்றது என எண்ணித்தானே சிரித்தாய் குறும்புக் காரக் கண்ணாடி ஓ நான் அவளைக் காதலிக்கவில்லை… அப்படியானால் உன்னையா காதலித்தேன்?… www.nilavan.tk
-
- 0 replies
- 540 views
-
-
இந்தத் தண்டவாளங்களுக்குத்தான் என்ன மனமோ? ஒன்றை ஒன்று ஆழமாய்க் காதலிக்கின்றன…. அருகருகே இருந்தும் தொட்டுக்கொள்ளாத பாசக் காரர்கள்…. முத்தம் மட்டும் பிறக்கும் போதும் பிரியும்போதும் கொடுத்துக் கொள்கின்றன… ஆனாலும் கள்ளன் தொடர்வண்டி அடிக்கடி வந்து போவான்… அணைத்துமே முத்தமாய்க் கொடுப்பான்… மறுபடி ஓடிவிடுவான்…. ஆனால் நேரந்தவறா முத்தம் அதுமட்டும் கொடுப்பான்… முத்தமிடும்போது உடற்சூடேற்றுவான்.. அவனது உள்ளமும், ஏன் உதடுகளும் கூட கொதித்துக் கொண்டிருக்கும்… ஆனால் இவ்விரு தண்டவாளங்களும் அப்படியல்ல… மானசீகக் காதலர்கள்…. ஒருவரை ஒருவர் பிரியாது காதலிக்கும் காதலர்கள்…. இவர்கள் பிரிந்தால் வந்துபோனவனின் இறப்பு நிச்…
-
- 0 replies
- 702 views
-
-
நண்பர்களே நாமும் ஒரு சிலநிமிடம் கற்காளாகுவோம்… கற்களின் வேதனை எம் மனதின் வேதனை ஒத்துப் போகின்றது…. தார்வீதி… தறிகெட்டோடும் வாகனங்கள்… என்மீது ஏன் இத்தனை அழுத்தமோ? என்றெண்ணிக் கண்ணீர் வடித்தேன் கீழே பார்த்தால் என்சுமையும் சேர்த்துச் சுமக்கும் என் காதலி… அடடா என்னதான் என்மீது பாசமோ? பாரவூர்தி வந்தாலும் என்னை அணைப்பாள் முத்தமாய் கொடுப்பாள் பாழ்பட்ட வீதி செப்பனிடும் மானிடன் வந்து எம்மைப் பிரித்துவிட்டான் அதனாற்தான் மானிட வர்க்கத்தில் விவாகரத்துக்களே நடக்கின்றன… என்னவள் எங்கே இருக்கின்றாளோ? எப்பாரம் சுமக்கின்றாளோ? என்றெண்ணும் நாம் பாதுகாப்பாக அடியில் இருந்தேன் இன்று மழையிலும் வெயிலிலும் வேர…
-
- 0 replies
- 548 views
-
-
குளிர் காற்று… சுற்றிலும் மழை… என்னவள் நினைவோடு ஆற்றங்கரையில் நடை.. கையிலே ஓர் குடை… கதவற்ற ஓர் குடிசை… என்னவள் நினைவு என்மனது வாட்ட… கால்களோ மணலிலே புதைந்து போக… குளிர்காற்றும் வெப்பம் தேட… என்னவள் கைப் பற்றினேன் .. இறுக்கியே பிடித்துக் கொண்டேன்… குளிர் வாட்டி எடுத்தது… கட்டியே அணைத்துவிட்டேன்… பின்னர்தான் தெரிந்தது… வயதான பாட்டி என்று… குளிருக்கு சூடு கொடுத்ததற்காய் நன்றி சொல்லிச் சென்றாள் அந்த வயதான பிச்சைக்காரி …. www.nilavan.tk
-
- 0 replies
- 495 views
-
-
என் ரோசாப்பூ சேலைக்காரி.... கவிதை - இளங்கவி........ குட்டைப் பாவாடையுடன் மனதை கொள்ளை கொள்ளும் சிரிப்பு கொண்டு நல்லூர் வீதியெல்லாம் சுற்றிடுவாய் நானும் உன்னை சுற்றிடுவேன்...... கரம்சுண்டல் வாங்கி வந்து என் கைகளிலே வைத்திடுவாய் வாங்க மறுத்துவிட்டால் என் காலை மிரித்திடுவாய்..... கடைக்கண் பார்வைகொண்டும் அடித்திடுவாய்.... நல்லூர் முருகனை மறந்துவிட்டு உனை உன்முடிபோல தொடர்ந்திடுவேன் முழு கண்கள் பார்க்கமுதல் இருளாக மறைந்திடுவேன்.... சில திருவிழாக்கள் ஓடி உன் சிறு அழகெல்லாம் வளர்ந்துவிட ரோசாப்பூ சேலைகட்டி என்மனதை ஜோராக இழுத்தவளே...! சிறுவயதில் நீ தந்த பொரிகடலை சுவையும் போய்.... நீ சிறிதாக வாங்கித்தரும் கரம்சுண்ட…
-
- 12 replies
- 1.7k views
-
-
உலகினினில் இழிய நாடு சிறீலங்கா - மனித உரிமையை மதியா நாடு சிறீலங்கா ஞாலத்தில் இழிய நாடு சிறீலங்கா - புத்த ஞானத்தை மறந்த நாடு சிறீலங்கா பாரினில் இழிய நாடு சிறீலங்கா -கொலைப் போரினை நாடும் நாடு சிறீலங்கா புவியினில் இழிய நாடு சிறீலங்கா - பல புதைகுழி கொண்ட நாடு சிறீலங்கா வையத்தில் இழிய நாடு சிறீலங்கா - இன வெறியர் வாழும் நாடு சிறீலங்கா அவனியில் இழிய நாடு சிறீலங்கா - சில அரக்கர்கள் ஆளும் நாடு சிறீலங்கா தரணியில் இழிய நாடு சிறீலங்கா -அப்பாவித் தமிழர் சாகும் நாடு சிறீலங்கா http://gkanthan.wordpress.com/index/izhiya-naadu/
-
- 0 replies
- 566 views
-
-
வன்னிமண்ணே வன்னிமண்ணே வானைப்பிழக்கும் உன்குரல் வந்து என்னை வாட்டுகிறது தன்னிச்சையாய் போர் தொடுத்து தருணம் பார்த்து உன்னுயிர் பறிக்க தென்னாசியச்சிங்களங்கள் தோளோடு தோள் சேர்ந்து செறிந்து நிற்கின்றனவாம் உலகத்தமிழன் உறங்காமல் எப்போதும் உனக்காக குரல் கொடுத்தும்- சிங்களவன் அடங்காமல் நிற்கிறானாம் ஆணவத்துடன் குடிக்க நீருமில்லை குழந்தைக்குப்பாலுமில்லை பசிக்குப்பஞ்சமில்லை படுக்க நிழலுமில்லை-அதை கடிந்து கேட்க யாருமில்லை மருந்துப்பொருளுமில்லை மயக்க ஊசியில்லை மரணத்தை தடுக்கவும் யாருமில்லை வணங்காமண் வருகிறான் உனக்காக இணங்காமல் அழிக்கலாம் உந்தச்சிங்களங்கள் கணம் போகும் போதும் காத்திரு- உன்னை பிணம் தின்னும் பேய்கள் சூழ்ந்திருக்கின்றனவாம் …
-
- 3 replies
- 977 views
-
-
தரணியில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - அறம் தருமத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு ஞாலத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - மெய் ஞானத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு அவனியில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - மெத்த அறிவினில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு உலகினில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - விருந்து உபசாரத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு வையத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - உண்மை வீரத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு புவியினிற் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - கவிப் புலமையில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு பாரினில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - உயர் பண்பிலே சிறந்த நாடு எம் தமிழீழ நாடு http://gkanthan.wordpress.com/i…
-
- 3 replies
- 970 views
-
-
நலமறிய ஆவலுடன்....., "அன்புள்ள அக்கா, நலம் நலமறிய ஆவல்" அம்மாவுடன் கதைத்தேன் அக்காவுடன் சண்டை பிடித்தேன் பேச்சுவார்தைகள் நடக்கிறது புலிகளின் நிலவரம் போர்ப்பிள்ளைகளின் துணிகரம் என இணையஞ்சல் ஊடாய் நேசமொடு - என் நெஞ்சில் இடம் கொண்டான். "ஊருக்கு வா அக்கா உனைக்காண வேண்டும் போருக்குள் நின்று வன்னி பாருக்கு அறிமுகமாய் ஆனகதை சொல்ல ஊருக்கு வா அக்கா" அடிக்கடி அஞ்சல் எழுதிய புலி. பூவுக்கும் அவனுக்கும் பொருத்தம் நிறைய. அத்தனை மென்மையவன். போராளிப் பிள்ளையவன் போர்க்களம் புடமிட்ட புலியவன். புலம்பெயரா உறுதியுடன் பலம்பெற்ற தம்பியவன் ஞாபகத்தில் நிற்கின்றான் - என் நினைவகத்தில் பத்திரமாய். அம்மாவின் கதை அண்ணாவின்…
-
- 5 replies
- 1.3k views
-
-
படைப்போம் படைப்போம் புரட்சிகள் படைப்போம் உடைப்போம் உடைப்போம் இயலாமை உடைப்போம் எடுப்போம் எடுப்போம் அறிவாயுதம் எடுப்போம் தவிர்ப்போம் தவிர்ப்போம் அறியாமை தவிர்ப்போம் துறப்போம் துறப்போம் சுயநலம் துறப்போம் தடுப்போம் தடுப்போம் இருளினை தடுப்போம் மறப்போம் மறப்போம் வேற்றுமை மறப்போம் நிறைப்போம் நிறைப்போம் ஒற்றுமை நிறைப்போம் மறுப்போம் மறுப்போம் புறங்களை மறுப்போம் தெரியோம் தெரியோம் கறைகளாய்த் தெரியோம் அறிவோம் அறிவோம் தன்பலம் அறிவோம் புனைவோம் புனைவோம் புதியன புனைவோம் அழிப்போம் அழிப்போம் மடமையை அழிப்போம் வளர்ப்போம் வளர்ப்போம் இனமானம் வளர்ப்போம் பயில்வோம் பயில்வோம் சரித்திரம் பயில்வோம் முயல்வோம் முயல்வோம் …
-
- 2 replies
- 793 views
-
-
நம் தலைவனின் கனவு நிஜமாக..... கவிதை - இளங்கவி..... அடிமை வாழ்வில் குப்பையாய் கிடந்தோம் கூட்டுவார் இன்றி காற்றுக்கும் பறந்தோம் ஏய் தமிழா...! உன் தேச மண்ணில் குப்பையாய் கிடக்கின்றாய் கூனிக் கிடந்து கூன் விழுந்திட்டாய் ; என்று இந்தக் குப்பை மேட்டிலே ஓர் பொறியாக விழுந்தாய் சிறுதணல் மூட்டினாய் சிறிதாகவும் புகைந்தாய்; ;பின் செந்தணல் ஆகி விடுதலை தீயை மூட்டினாய் இன்றோ கோடி தமிழனின் மனங்களில் கொழுந்து விட்டெரிந்து விடுதலைத் தீயாய் வீறுகொண்டு எரிகிறாய்......! வேதனை வாழ்விலும் வீரியம் தந்தவன்..... எங்களின் வாழ்வுக்காய் தன் வாழ்வையும் மறந்தவன்...... இருபதில் தொடங்கி இருபதினாயிரம் கண்டாய்...... இன்னமும் காண்பாய் இற…
-
- 6 replies
- 1.4k views
-
-
மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட தேசியத் தலைவனை தோளிலே தாங்குவோம் தமிழ் தேசியக் கொடியினை பாரிலே தூக்குவோம்,அவன் சேனையின் யாகத்தை யாகித்து ஏந்துவோம்,பகை நோற்றிடும் தோல்வியின் சாரத்தை சாருவோம் தேச மீட்புப் போரை நேசமாய் பேணுவோம் வசமாகிடும் வீரத்தால் வளங்களை குவிப்போம், களம் வீச்சிடும் யோகத்தை வீச்சாக்கி நூற்போம்,எங்கள் பாக விடுதலை கீதத்தை ஏற்றியே சாற்றுவோம். வீம்பினின் பகை சாய்த்த மாவீரம் புனைவோம் வீசாத நகை கொள் நஞ்சினர் களைவோம், தமிழ் மூச்சினில் முகிழ்ந்திடும் முனைவனால் முகிழ்ந்தது தமிழீழ தேசமென இசைப்போம் கந்தக காற்றினி தேசத்தில் வீசாது, பல் குழல் எறிகணை சிந்த அகம் சீந்தாது. மந்தமாய் பகை சாயமும் சாயாது,அன்றி பூந்தளிர் பாலகர் …
-
- 0 replies
- 719 views
-
-
மங்கையின் கூந்தலை கார் முகில் என்றார் பூங்குழல் என்றார் நதி என்றார் நறுமணம் வீசும் சொத்தென்றார் மயக்கத்தில்..! சூடிய மலர்களும்.. முக்கிய சந்தனப் புகைகளும்.. தடவிய பன்னீரும் திரவியமும்.. தப்பிய சீயாக்காயும்.. கும்பிய கெட் அண்ட் சோல்டரும் (H&S).. கொட்டிய கண்டிசனர்களும்.. அடித்த ஸ்பிரேயும்.. வாசம் வீசியதென்பதால்.. அப்படிச் சொன்னார். உண்மையில்.. பெண்களின் கூந்தலில் வாசம் செய்வது.. பேனும் ஈரும்..!
-
- 34 replies
- 7.9k views
-
-
ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து நகைக்கிறான் எதிரி பாப்பா தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா பொய்யும் வெல்லுதடி பாப்பா - …
-
- 5 replies
- 1.5k views
-
-
என் அன்னை கலைப்பொழுதினிலே என் கடமை முடிக்க முன்னே சேலைத்தலைப்பை தூக்கிச்சொருகி பின்னே வேலைப்பழுவை தன் தோளில் சுமந்து மூலை முடுக்கெல்லாம் தேய்த்துக்கழுவி பாலைக்காய்ச்சி பதம் பார்த்துச்சமைத்து- பாட சாலைக்குச்செல்லும் தன் சேய்க்கு- வாழை இலையில் வதக்கிய கறியுடன் சாதம் இட்டு சாலைவரை தன் கரம்பற்றி வழியனுப்பி- பின்னே காலை விரைந்து வைத்து கடைவீதி சென்று வந்து மாலை வருமுன்னே மதியமும் உண்ணாது நூலைப்போல் இழைத்து என் முகம் காண ஓலைவேலிக்குள் ஒளிந்திருப்பாள் என் அன்னை.
-
- 1 reply
- 1.1k views
-
-
கருகும் பிணங்களிலே புத்தக் கடவுளே உந்தன் கரிய நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே பட்ட மரங்களிலே புத்தக் கடவுளே உந்தன் பச்சை நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே விதவையின் புடவையிலே புத்தக் கடவுளே உந்தன் வெள்ளை நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே சிந்தும் குருதியிலே புத்தக் கடவுளே உந்தன் சிவப்பு நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே குண்டின் வலியினிலே புத்தக் கடவுளே உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையே யுத்தக் கடவுளே கதறும் ஒலியினிலே புத்தக் கடவுளே உந்தன் கீதம் இசைக்குதையே யுத்தக் கடவுளே அலறும் ஒலியினிலே புத்தக் கடவுளே உந்தன் அகிம்சை வழி தெரியுதையே யுத்தக் கடவுளே http://gkanthan.wordpress.com/index/budha
-
- 0 replies
- 887 views
-
-
வியூகம் யாவும் விடை காண்பார். நினைவிலும்,கனவிலும்,தமிழீழம் பற்றிய பற்றுதலாலான நினைவுகள் ஏந்தி ஒரு சாந்தி தரும் செய்தி ஒன்று பூம்புனலேந்தி ஐம் புலன்களை ஆதங்கமாக நீவி ஆத்ம, ஆதரவுக்கரம் தாராதோ? வனையும் நெஞ்சகத்து கதவின் காந்தங்களை, புனையும் பொய்யர்களின் பீற்றல்களை, புரட்டி,பகை விரட்டி ஏகாந்தமாகும் நமதான ஆதங்கக்கரம் பற்றி! தினையும்,ஆங்கு தினமும் எம் விடுதலை வேங்கைகளின் திளையும் வெற்றிச் சேதி ஆற்றி எம் உளவுரணேற்றி தீந்தான வாகை பகைபுலம் காட்டி நமதான வரமாக்கி மாந்தமாகும் எம் மனவிருளகற்றி,விளக்கேற்றி, விடியல் செய்தித் தீ சுமந்து, நீ எம் அகமாக சுகமான, சுமைஏந்தி சுற்றம் சூழ, மகிழ வலம் வருவாயா? ஏதிலியாக தினம் அங்கு மாயும் எம் இன மாந்தர் ஆ…
-
- 0 replies
- 1k views
-
-
விழித்திடு பெண்ணே! விடியலைப் படைத்திடு சமுத்திரம் ஒன்றே இலக்கெனக்கொண்ட ஆறுகள் சோர்வது உண்டா? சரித்திரம் படைத்திட புறப்பட்ட பின்னால் தடைகளால் உடைந்திடல் நன்றா? வெளுத்தது எல்லாம் பாலென நம்பிய மனத்துக்கு இது ஒரு பாடம்! நீ குழந்தையல்ல குமரி ஆனாய் இனி விழித்திரு பெண்ணே எப்போதும்! இடையினில் தடை வரும் தடுக்கிடப் பார்த்திடும் தலைவலி உடன் வரும் கடு கடு சொல் வரும் களங்கமும் சேர்ந்திடும் நெருப்பென்று ஆனாய் பெண்ணே நெருப்பினை ஈக்கள் மொய்ப்பது இல்லை சளைக்காமல் நீ தொடு இலக்கினை! பொடி வைத்துப்பேசும் நாக்கு பொய் கூசாமல் சொல்வோர்க்கு விளக்கங்கள் கொடுத்திடல் நன்றோ?! சூரியன் மேற்கினில் உதிப்பது உண்டோ? தோல்விகள் வெற்றியின் படிகள் அன்றோ? இறைவனின் அருளொடு நல்லோர்கள…
-
- 0 replies
- 1.7k views
-