Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by nedukkalapoovan,

    1993 தைத்திங்கள் 16ம் நாள் இந்திய மத்திய அரசின் நயவஞ்சகச் சதிக்கு வங்கக்கடல் நடுவே தன்னை அர்ப்பணித்த கிட்டு மாமா உள்ளிட்ட வேங்கைகள் நினைவாக..! வெடியோசை எழுந்தது எங்கள் நெஞ்சோசை அழிந்தது களத்தோடு களமாடி கோட்டைக்குள் அடித்தெழுந்த அந்தப் புயலும் ஓய்ந்தது...! தங்க தமிழீழ வேங்கையது வங்கக் கடல் நடுவே சரிந்தது...! அசோகச் சக்கரத்தின் அகோரத் தாண்டவம் - எங்கள் மாமாவின் உடல் கிழித்தது...! ஆதிக்க வெறி பிடித்த அகிம்சா தேசமது அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...! தமிழீழ அன்னையவள் கொடிதனைச் சுமந்தவன் ஆழி தன் அலையோடு மீண்டிட்டான் தமிழ் மண்ணை...! குரலோசை எழுந்தது - அது அவன் புகழோசை சொன்னது விடியலின் தாய் மகன் விடிவெள்ளியான கதை மு…

    • 3 replies
    • 2.5k views
  2. இன்று நினை நன்றே நினை ............. பிறந்து விட்டது புது வருடம் , தை பிறந்தால் வழி பிறக்கும் . வலிகளை மறந்து ஒரு புறம் தள்ளி விட்டு இறை யுணர்வுடன் வழி பிறக்க வேண்டுவோம் கோபம் கொள்வதாலோ விரக்தியடைவதாலோ கணணி வேகத்துக்கு ஈடு கொடுத்து , வெற்றி சேதிகளை பெறவேண்டும் என்று , அவா படுவதை விட்டு ,வலிகள் மூலம் தான் வழி பிறக்கும் என்று சிந்தித்து நமது கடமைகளை உணர்ந்து மற்றவர்களும் உணர வைத்து,எமது பணியை முன்னெடுப்போம் .தாயக வலிகள் மூலம் நாமும் பங்கெடுப்போம் எமக்கு முன் நீண்ட பணி காத்து இருக்கிறது சிந்திப்ப்போம் சிந்திக்க் வைப்போம். இதுவே என் கள உறவுகளுக்கு என் பொங்கல் புதுவருட வாழ்த்து .(சங்கல்பம் ). நட்புடன் நிலாமதி அக்கா.

  3. அழிவின் உச்சத்தில் வன்னிமண்.... கவிதை.... அழிவின் உச்சத்தில்; இன்று நம் அழகான வன்னிமண் ஆனந்தத்தின் உச்சியிலோ நமை அழிக்கும் தென்னிலங்கை..... ஆறாய் ஓடிடுதே; நம் அரும்புகளின் இரத்தங்கள்.... அதைக் கண்டு ரசித்திடுவான் அதிகாரச் சிங்களவன்.... உயிர்காக்க ஓடும் வழி உயிர்களின் மரணப் பாதையாகி நம் மழலையெல்லாம் வீதிகளில் மண்ணாகிக் கிடக்கிறதே.... இக்கொடுமை பார்க்காமல் ஒருகணம் கண்மூடி திறப்பதற்குள் அடுத்தகுண்டு எடுத்திடுமே மழலைகளின் தாயின் உயிர்.... ஐயையோ பரிதாபம் இதைக் கேட்டாலே நம் உயிர்போகும்..... அதைக் காணொளியில் கண்டதுமே நம் கண்களிலே நீர்த்தேக்கம்.... நம் வன்னியிலே இன்று ஜனனத்துக்கு விடுமுறையா…

  4. கண்ணீர்ப் பொங்கலை….. ------------------------------------------- கண்ணீர்ப் பொங்கலுமாய் செந்நீர்ப் பொங்கலுமாய் எம் தாயக தேசமன்றோ ! நகரும் மக்களை நரபலி எடுக்கின்றது சிங்களப் படைகளன்றோ ! நாங்கள் சர்க்கரை போட்ட பொங்கலைப் பொங்குவதா எம் தேசம் காத்திடப் பொங்கி எழுவதா ! பொங்கி எழுந்து நாம் எம் தேச மக்களின் துயரினை துடைப்போமா இல்லை இன்னும் கதைகள் பேசியே காலத்தை கழிப்போமா ! எங்களின் உறவுகள் ஏதிலியாகியே தங்கள் வாழ்வினை தொலைத்து விட்டாரே ! தங்கள் வாழ்வைத் தொலைத்தது ஏனோ தாயகம் மீட்டெழும் முடிவினில் தானே ! கண்ணீர்ப் பொங்கலும் செந்நீர்ப் பொங்கலும் கடக்கும் பலமென்றும் உலகத் தமிழர் கைகளில் தானே உலகெங்கும் எழுவோம் பொங்கி எழ…

    • 0 replies
    • 821 views
  5. Started by s.kumaar,

    ஏங்கும் மனதாலும் தாங்கும் செயலாலும் தூங்கும் நிலை மறந்து தூயதான விடியலிற்காய் தூய்மைகள் அங்கே வியூகமாய் பொங்கும் நாள் தேடி பூம்புனல் தானாகி எங்கும் மங்களமாய் எங்கள் மண் எமதாக்க துய்ப்பதற்காய் சுதந்திரத்தை தூயவர் அவர் படைக்க,கங்குலாகியவர் களம் காண நோக்குகையில், புலம் பெயர்ந்து நிலம் நோக்கும் பலம் வேர்க்க உளம் நோகும் இங்கெவர்க்கு பொங்கல் இதமாக இனித்திருக்கும் இனம் நோக இதனை நீ இயல்பாக நோக்காதே ஈழ மலரங்கு, ஈகையாய் முரசொலிக்க மண்வாசம் நமதாக மனமெல்லாம் நிறைவாக இனியவர்களுடன் இழைந்திருந்து இயல்பாக பொங்குதலே இமயமான , இங்கிதமான இணையிலாப் பொங்கலாகும்.

    • 0 replies
    • 739 views
  6. அழுகின்ற பிள்ளைக்கு கொடுக்க உணவில்லை.. குளிரைத் தாங்கிட போதிய உடுப்பில்லை.. விழுகின்ற குண்டுகளின் வேகத்தை பொறுத்தே, அடுத்த நிமிடங்கள் உயிர்வாழ்கிற நிலை.. எங்கெல்லாம் குண்டுகள் விழுகின்றனவோ அங்கெல்லாம் அழுதபடி தமிழ்த் தாய்மார்கள்... இங்கெல்லாம் நடக்கிற இன்னல்கள் கண்டும் இனிக்குமா நமக்கு புத்தாண்டும் பொங்கலும்? காந்தியம் பேசிவிட்டு களவாணித் தனமாக "இந்தி"யன் அளித்த ஆயுதங்கள் கொண்டு, சிங்கள வெறியன் தொடுக்கிறப் போரில் "இந்தி"யர் என்பதால் நமக்கும் பங்குண்டு..! கொல்லாதே என்று கூக்குரல் எழுப்பினால் தேசத் துரோகமாம் இந்தியம் சொல்கிறது... கொலைகார "இந்தி"யனாய் வாழ்ந்து தொலைப்பதைவிட தமிழனாய் தேசத் துரோக…

    • 4 replies
    • 2.4k views
  7. Started by theeya,

    காதலின் வலி நீண்டிருந்த கடற்கரை மணல் வந்து கரையை தொட்டு விட்டு மீளும் அலை கடலை அள்ளி தின்று ஏப்பம் விடத் துடிக்கும் வானம் கடலுடன் கைகோர்த்தபடி கட்டித் தழுவியது நடுக்கடலில் தவிக்குது துடுப்பிழந்த ஒரு படகு கரைசேரும் ஆவலுடன் காதலில் விழுந்த என் இதயம் போல - தியா -

    • 11 replies
    • 2.9k views
  8. வன்னி ஒரு வரலாறு படைக்கும் ............ எதிரி எக்காளமிடுகிறான் கிளி நொச்சி விழுந்து விட்டது , முல்லை விழுந்தது ஆனையிறவு விழுந்தது ,என்று அவனுக்கு சொல்லுங்கள் தலைவன் வழியில் தமிழன் விழ விழ எழுவான் என்று கடந்த காலத்தை ,சற்று புரட்டி பார் , நம் வீரர் பதுங்கி தான் பாய்ந்தார்கள் ,புலத்து உறவுகளுக்கு ஒரு சஞ்சலம் "என்றும் நாம் வீழ மாடோமேன்று " உரத்து சொல்லுங்கள். அது காலத்தின் தேவை என்று ". ஏன் கலக்கம் சுனாமியும் உள் இழுத்து தான் வாரிக்கொண்டு போனது , ஏன் இது நம் தலைவனின் உள்நோக்கிய இழுப்பாக இருக்க கூடாது ? பிடிப்பார் பிடிப்பார் எப்படி? மக்கள் இல்லாமல் தக்க வைப்பார். இருந்து பாருங்கள்" பெரும் அதிரடி" ஒன்று கருக்கொள்ளும் பின் மழையாக பொழ…

    • 16 replies
    • 4.1k views
  9. அணையாது விடுதலைத்தீ வஞ்சகர் சிங்களவர் வார்த்தையில் நம்பி-எங்கள் முந்தையர் முடங்கியதால்-எம் தந்தையும் தாயும்-எதிரி சிந்தையில் சிறியரானார் நெஞ்சிலே நெருப்பெடுத்து வஞ்சகர் இருப்பழிக்க குஞ்சுடன் குருமன்களும் வெஞ்சினம் கொண்டெழுந்து வேட்கையில் குதித்திருந்தால் அஞ்சக என்றெழுந்து அன்னையின் அடிமை நிலை இன்றுடன் தொலைந்ததென்று கன்றுடன் தாய்ப்பசுவும் களத்திலே குதித்திருந்தால் இன்று நாம் இவ்வுலகில் இறைமையுள்ள நாடாகி சந்திரன் தாண்டி-பல சாதனை புரிந்திருப்போம் கன்றுடன் தாயையும் கதறிய சேயையும் பிஞ்சுடன் பூவையும் கெஞ்சிய கிழடையும் நெஞ்சிலே ஈரமில்லா நெறிகெட்ட சிங்களம் கொன்றிடத் துடித்தது-முன் கொடி கொண்ட தமிழினம் என்…

  10. பல்லவி தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா உன் தாய் மண்ணை முத்தமிடு தமிழா ஈழ மண்ணை வட்டமிடு தமிழா - உன் ஈர மண்ணை அள்ளியெடு தமிழா எம் மண்ணை அள்ளித் தின்றேனும் நாம் ஈழத் தமிழனாய் வாழ்வோம் குருதியில் தோய்ந்த பிஞ்சுகளை எதிரியின் குண்டுகள் தின்கிறதே போரிலே பாயும் பிள்ளைகளை பதுங்கிடும் குழிகள் காக்கிறதே சரணம்-1 வீட்டினை இழந்து நாட்டினை இழந்து காட்டிலே நாங்கள் வாழ்ந்திடலாமா உணர்வினை இழந்து உறவினை இழந்து சோற்றிலே கைளைப் புதைத்திடலாமா போரை நிறுத்தென தமிழரின் குரல்கள் உலகத்தின் செவிகளில் ஒலிக்கிறதே செவிகளை விழிகளை மூடிய உலகம் செக்கு மாட்டினைப் போல நகர்கிறதே எதிரிகள் வருகிற திசைகள் பார்த்து ஈழத் தமிழரின் படைகள் பாய்ந்திடுமே சரணம்-2 …

  11. காலத்தின் தேவை கருதி கணப்பொழுதில் வரைந்த கிறுக்கல் . . ஈழப்புதையல் தேடி உழுது தேய்ந்த சந்தணக்கலப்பைகளை மனதில் இருத்தி கிறுக்கியுள்ளேன் . . . காலம் கண்மூடி திறப்பதற்குள் கரைந்து போய்விடுகின்றது. எம் உறவுகளே கரங்கள் எம்முடன்தானே பலமாக இருக்கின்றுது. உழைக்கின்றோம் ஒரு சிறு தொகை மனமுவந்து உதவுவோம். ஈழப்போர் இறுதிக்கு வந்து நிற்கின்றது. எதிரியின் எறிகணை எல்லைக்குள் எம்மக்கள் தவிக்கின்றார்கள். இந்தக்கணத்தில் நாம் செய்யவேண்டியது அவர்கள் கேட்டுக்கொள்வதும் ஓன்றே ஒன்றுதான். அன்பின் புலம்பெயர் உறவுகளே உதவிக்கொள்ளுங்கள். இது ஒரு கடன் நாம் கட்டாயம் திருப்பித்தருன்றார்கள் ஒருவர் கேட்கும்போது கைவிரிக்கும் பழக்கமற்றவர்கள் நாம். கொடுத்துச்சிவந்த கரங்கள் எமது கரங்கள் இன்னும் கொடுப்போம் கொட…

    • 5 replies
    • 1.3k views
  12. Started by karu,

    தாயிருந்த மண்ணைவிட்டு சமச்சிருந்த சோத்த விட்டு ஊரழிய வந்தோமே ஒன்றுமின்றிப் போனோமே தோல் நிறமும் மாறலியே சொந்த குணம் போகலையே தேரிழுத்து வீதியெல்லாம் செய்த தவம் காக்கலையே புலம்பெயர்ந்து வந்து புலம்புவதால் என்னபயன் மட்டக்களப்போடு மன்னார்தான் போனாலும் வன்னி இருக்குதென்று மகிழ்வோடிருந்தோமே! வெட்டி அரிந்தெம்மை வேரோடு சாய்க்க வென்று வாசலிலே நிற்பவனெம் வாழ்வை அழிப்பானோ! சுற்றிவர நின்று சுடும் பகையைக் காலெடுத்து எற்றி இறைவா எமக்குதவி செய்யாயோ! (யாராவது இந்த ஒப்பாரியைத் தொடருங்கள்.)

    • 9 replies
    • 2.2k views
  13. இனியேனும் நாமிங்கு ஒன்றாகுவோமே ! -------------------------------------------------------------------- காலத் துயர் வலி தாக்கிடும் வேளையில் கைகளைக் கோர்த்தொரு உறுதியெடுப்போம் வீணிற் பொழுதுகள் போனது வேயென்று காணற் பேச் சொலி காதிற் கேட்குது போனது போனது விடுதலை போனதாம் ! எங்கே போனது விடுதலை என்று நாம் சற்றே சிந்தனை கொள்வதே நல்லது எப்போ விடுதலை வந்தது என்றே சற்றே சிந்தனை கொள்வதும் நல்லது ! நித்திரை போலவே நடித்தவர் சிலர் நித்திரை விட்டெழுந்தவர் போல் சிலர் நின்று பேசியே நிமிர்ந்து பார்க்கிறார் போனது போனது விடுதலை போனதாம் ! நேற்று வரைக்கும் தூங்கி யிருந்ததும் காற்று வாங்கக் கடற்கரை போனதும் கதவை மூடிக் கதைகள் சொன்னதும் காலத்துயரின்…

    • 0 replies
    • 703 views
  14. எனக்குள் எரியும் ஓர் நெருப்பு செந்தீயில் என் தேசம் வெந்தணலில் என் மக்கள் பந்தாட வந்தோரால் நொந்தேதான் மெய்சோர்ந்தார் வந்தோடி வந்தோர் நாம் சிந்திக்க ஏன் தயக்கம்? என் மண்ணின் மீட்புக்காய் அங்கே ஓர் பெரும் யாகம் இங்கோ நாம் களிப்போடு உல்லாசம் தரும் கோலம் சோகங்கள் எம் மண்ணில் தொடர்கின்ற இந்நேரம் போகங்கள் ஏன் இங்கு பாரங்கள் தான் அங்கு என் மண்ணின் வசந்தங்கள் எங்கோ போய் ஒளிந்ததனால் என்றுமே நிரந்தரமாய் இலையுதிர் காலங்கள் விரக்தியின் விளிம்பினிலே துடித்திடும் உயிர்க் கூட்டை விடுத்திட விரும்புகின்ற மிடிமையில் என் மக்கள் சொந்தங்கள் சுடராகத் துடிக்கின்ற பொழுதிங்கு நெஞ்சங்கள் உருகாமல் நிலைக்கின்ற நிலைகண்டு என்நெஞ்சி…

  15. இவனும் எழுதுவான்... ஈழ.. வரைபடம் வற்றியதில் வயிற்றைக் கலக்குகின்றதாம்... வான்புலி யாவும் முடங்கிப்போயிற்றாம் கடல்புலி எங்கோ காணாமல் போனதுவாம்.. இராணுவத்துக்கே வெற்றி வெற்றியாம்... சொல்வார் சொல்லட்டும் தமிழா... நடப்பு...இதய நமைச்சலா உனக்கு தோல்வி என்ற சொல் துவள வைக்கிறதா உன்னை நீ என்ன ஆற்றாமை கொண்டு அழப்பிறந்தவனா? உன் எதிரி பலம் மிக்கவன்தான்.. உலகத்தை திரட்டி நிற்கிறான் அதற்காக மண்டிபோட்டு மடிந்து போவாயா? அறு பதிலிறுக்காமல் மக்கிப் போவாயா? அப்படியானால் நீ தமிழனல்ல.. தமிழன் இருக்கிறான் வீரத்தமிழன்.. அவன் பதிலிறுப்பான் வரலாறுகள் பார் ரசியாவில் சிதைந்த கிட்லர் படைகள் சிதைந்த விதம் கேட்டுப்பார்... …

  16. பள்ளி நினைவுகள் தோழிலே பையுடன் தோழர்கள் புடைசூழ பள்ளி சென்ற பருவ நாட்கள் சிந்தையில் விரிகையில்-இதயத்தில் சின்னதாய் ஒரு நெருடல் நிலவு அல்ல-பள்ளி நினைவுகள் தேய்வதற்கு நித்தமும் விழி எதிரே நிஜங்களாய் மலர்பவை பருவமழை அல்ல-பள்ளி நினைவுகள் வந்துபோக பசுமையாய் பதிந்து பாதத் தடங்களாய் தொடர்பவை காலச்சக்கரம் விரிகையில்-வசந்த காலத்தின் சுவடுகளாய் பதிந்து காற்றினும் பரந்து விரிந்து காவியமாய் நெஞ்சிலே ஒளிர்பவை நேற்றைய நட்புகளே - பள்ளி நாட்களின் உறவுகளே இதயச்சுவர்களில் உங்களின் இனிய நினைவுகள் அழியாத புத்தகமாய் ஆண்டாண்டு வாழும்

  17. வெல்லும்! வெல்லும் எம் ஈழம்! தலை போனால் போகட்டும் தன்மானம் சாகாது உயிர் போனால் போகட்டும் உணர்வுகள் சாகாது நிலம் போனால் போகட்டும் பலமிங்கு குறையாது தோல்விகள் வந்தாலும் மனமிங்கு சளைக்காது! விடுதலை ஒன்றேதான் குறிக்கோளாய் ஆனபின் இடையில் வரும் எதுவுமே இடைஞ்சலாகாது! இலக்கொன்றே எம் வெற்றி அதுவரை போராடு தலைவன் வழிசென்ற தலைகளென்றும் குனியாது! களத்தினில் நிற்பவன் பலத்தை எடை போடாதே சிங்கள அரசுக்கு நீ சிபாரிசு செய்யாதே!உள்ளிழுத்து பின் பொங்கும் சுனாமியாய் வருவார்கள் தமிழ் ஈழமே வென்றுதான் புலிகள் வெளிவருவார்கள்! வலிகளை எல்லாம் உள்வாங்கிக் கொள்ளாதே புலிகளை நம்பிக்கொள் உன்வீரம் சாகாதே!! தமிழினம் நிமிரணும் எதற்குமே சோராதே! ஈழம் வெல்…

  18. எங்களது வாழ்க்கையின் அவலங்களை, அதன் வலிகளை, என்னைப்பாதிக்கும் நிகழ்வுகளை, நான்வாழும் சூழலது சமகால மாற்றங்களை எழுத்துருவாக்க முனைகின்றேன். 1. இடப்பெயர்வு அவசரத்தில் அவிழ்க்காமல் விட்டு வந்த மாடு பூட்டிய கூட்டுக்குள் கோழியும் , குஞ்சும் உலையில் புட்டு வரும்போது அரையவியல் எரிந்துபோயிருக்கும் இப்போது யார் சோறுவைக்கப்போகிறார்கள் பூனைக்கும் , நாய்க்கும் வெட்டி அடுக்கியமாதிரி வேலிக்கான கதிகால்கள் வாஞ்சையுடன் வளர்த்த பயிர்கள் வாடிப்போய்விடும் பராமரிப்பில்லாமல் பாழாய்ப்போன யுத்தம் வீடுகூடப் பூட்டவில்லை வாழ்ந்தவரெல்லாம் மாண்டுவிட மிஞ்சி இருப…

  19. நான்கு வருடங்களுக்கு முந்தைய பதிவு இது. ஒரு பெருங் கவிஞனின் வாயில் உதிர்ந்த ‘துருப்பிடித்துப் போனவளோ?’ என்ற ஒற்றைக் கேள்விக்கு எழுதுகோல் உதிர்த்த பதில் இக்கவி வரிகள். மீண்டும் மானுட வாழ்வின் அசை போடலில் மீட்பித்துப் பார்க்கிறேன். இங்கு கீழ்க்காணும் கவிவரிகள் நேற்றைய காலங்களுக்கு உரியன. இருப்பினும் இன்றும் சில விடயங்கள் மாற்றமடையாமல் தொக்கி நிற்கின்றன. தூர தேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல். கட்புலன் அறியாக் காற்றே! உட்புலன் அசைக்கும் உந்து பொருளே! உயிர்ப்பில், இயற்கை அணைப்பில் நின்னை உணர்த்தும் உயிர் மூலமே! தூரதேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல் தந்தேன். தாயகக் கவிஞனவன் உலைக்களப்புலவனிடம் உரியபடி சேர்த்து விடு! - இல்லாவி…

  20. எனக்கொரு வரமருள் பராபரமே.... புழுதி எழும் ஊரின் புண்பட்ட வீதிகளில் விழுது விட்ட ஆலமரத்தின் பழுது பட்ட திண்ணையில் தொழுது எழும் கோயிலின் அழகு மிகு தேரடியில் உழுது நாற்று நடும் ஊரின் வயல் வரப்பில் பொழுது விழும் நேரம் களித்து மகிழ்ந்து நாங்கள் கால்பந்து விளையாடும் கல்லூரித்திடலில் ஒழுகும் வழி சொன்ன பள்ளியின் வகுப்பறையில் ஆழ வேரெடுத்து அழகாய் கிளைபரப்பி நீள நெடுத்து நிற்கும் முற்றத்து மாநிழலில் வீழமாட்டேனென-திணவெடுத்து சோளக்காற்றிடையும் வாழ நிமிர்ந்து நிற்கும்-தென்னஞ் சோலை மர நிழலில் வாழ வழி பல தந்து வளமும் தந்து-எம் நீள நெடும் பரம்பரையின் வரலாறு தந்த வீரம் படுத்துறங்கும் விடுதலைத்திருநாட்டில் என் வாழும் நாட்களில்-இன…

  21. மழை எப்போது எங்கே விழவேண்டும் என்பதை தீர்மானிப்பது காற்று எதிரியே நீ எதுவரை வரவேண்டும் எங்கே விழவேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் விடுதலைப் புலிகள் புலிகள் முன் நகராது இருக்கும் வரைதான் வெற்றிக்களிப்பில் கர்ஜனை செய்வீர்கள் பொன்சேகா படைகளே ஒன்றன் பின் ஒன்றாய் ஏவுங்கள் எறிகணைகளை பறந்து வந்து போடுங்கள் குண்டுகளை பொறுத்துக் கொள்கின்றோம் எமது தேசத்தின் அமைதி குலைத்த சிங்களமே… எங்கள் தலைவனின் மௌனம் கலையும்போது வதைபடுவாய் பொறுத்துக்கொள்… எதிரியே உன் தளத்தில் வந்து நின்றவாறு புலிகள் ஏவும் உனது எறிகணைகள் உன் தலையில் வீழ்ந்து வெடிக்கும் என்பதைக் கருத்தில்க்1கொள் குதித்து வ…

  22. புன்னகைச் செல்வனை இழந்து நாமழும் கண்ணீர் ஓலமல்லயிது நெஞ்சில் விடுதலைக் கனவுகளோடு இலட்சியச் சிரிப்புடன் வாழ்ந்தமகன் கல்லான மனங்களையும் கனியவைக்கும் பிள்ளைனிலா வெளிச்சம் அவன்சிரிப்பு நடக்கும் பேச்சு வார்த்தைக்குள் இருக்கும் மனிதனேயக் கூட்டம் இயற்கும் விந்தையைக்காடடும் மாயவன் கனிவான வாயிதழ் திறந்ததும் சிந்தும்னகைத் தயக்கம் தீர்க்கும் எழிதான கவிதைவரிப் புயல் எதிரியின் முகத்தில் மோதும் மெதுவான வார்த்தை மின்னல் நாழுமவன் செய்தியாய்த் தெறிக்கும் நாடெங்கும் வாழும் தமிழரின் வீட்டிலும் குதுகலப்பாய் விரிக்கும்! எங்கள் இனத்தின் வலம்புரிச்சங்கை சாய்த்து விட்டானே தறுக்கன்! பாய்கின்ற புலிகள் வெற்றிக்குப் பகுப்பாய்வு விளக்கம் அளிப்ப…

    • 0 replies
    • 1k views
  23. எதுவரை நீளுமோ அதுவரையும் எதுவரை தொடருமோ அதுவரையும் அந்தங்கள் இல்லா அறுபடாச் சங்கிலியாய் தொடருமடி - நம் நட்பின் சங்கீதம் ………………………………………….. எங்கோ இருந்தபடியே என்னை கடிகார பொம்மையாய் ஆட்டி வைக்க உன் நட்புக்கு மட்டுமே முடிந்ததடி ………………………………………….. நீ உனக்காக உனக்காக என்று கவிதைகள் கேட்கிறாய் நான் உனக்காக உனக்காக என்று என்னையே எழுதுகின்றேன் ………………………………………….. நீ நேசிக்கின்றாய் என்றெண்ணி மகிழ்ந்து போகிறேன் என்னையல்ல நிழல்படங்களை என்றறியாத சின்னக் குழந்தையாய் ………………………………………….. என்னைப் போலவே எந்தன் கவிதைகளும் உன்னால் நிராகரிக்கப்பட்டவுடன் உடைந்து துண்டாகின்றன …

  24. ஏன் வந்தாய்? ஊரென்ன பார்க்க வந்தாயா? உன் உறவுக்கு சொல்லி வந்தாயா? சோரம் போகா வன்னி மண் தீரம் தெரியாமல் வந்தாயா? தீயவனே ஆவி ஒடுங்கி-உன் உடல் ஊர்போகும் நாள்தெரிய வந்தாயா? பண்டார வண்ணியனின் பரம்பரை பிறந்த மண்ணில் சிங்கம் புணர்ந்து பிறந்த வம்சத்தின் சிறு நரிக்கென்னவேலை? வணங்கா மண் வன்னியின் வரலாறு தெரியாமல்-மூடனே களங்காணா உன் அமச்சரின் கதை கேட்டு வந்தாயோ? அகங்காரம் தலைக்கேற ஆணவம் மிகக்கொண்டு இளக்காரம் என எண்னி தமிழய்ச்சியின் வளைய்க்கரம் சீண்டிப்பார்க்க வன்னிக்கு வந்தாயோ? வளைக்கரம் வலிமை கொண்ட வண்ணிமண் எங்களது இங்கே கொலைக்களம் உனக்காக கொடியவனே நாளை எண்ணு அடங்காப்பெருவீரம் பிறப்பெடுத்து ஆர்ப்பரிக்கும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.