கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அழிவின் உச்சத்தில் வன்னிமண்.... கவிதை.... அழிவின் உச்சத்தில்; இன்று நம் அழகான வன்னிமண் ஆனந்தத்தின் உச்சியிலோ நமை அழிக்கும் தென்னிலங்கை..... ஆறாய் ஓடிடுதே; நம் அரும்புகளின் இரத்தங்கள்.... அதைக் கண்டு ரசித்திடுவான் அதிகாரச் சிங்களவன்.... உயிர்காக்க ஓடும் வழி உயிர்களின் மரணப் பாதையாகி நம் மழலையெல்லாம் வீதிகளில் மண்ணாகிக் கிடக்கிறதே.... இக்கொடுமை பார்க்காமல் ஒருகணம் கண்மூடி திறப்பதற்குள் அடுத்தகுண்டு எடுத்திடுமே மழலைகளின் தாயின் உயிர்.... ஐயையோ பரிதாபம் இதைக் கேட்டாலே நம் உயிர்போகும்..... அதைக் காணொளியில் கண்டதுமே நம் கண்களிலே நீர்த்தேக்கம்.... நம் வன்னியிலே இன்று ஜனனத்துக்கு விடுமுறையா…
-
- 0 replies
- 1k views
-
-
கண்ணீர்ப் பொங்கலை….. ------------------------------------------- கண்ணீர்ப் பொங்கலுமாய் செந்நீர்ப் பொங்கலுமாய் எம் தாயக தேசமன்றோ ! நகரும் மக்களை நரபலி எடுக்கின்றது சிங்களப் படைகளன்றோ ! நாங்கள் சர்க்கரை போட்ட பொங்கலைப் பொங்குவதா எம் தேசம் காத்திடப் பொங்கி எழுவதா ! பொங்கி எழுந்து நாம் எம் தேச மக்களின் துயரினை துடைப்போமா இல்லை இன்னும் கதைகள் பேசியே காலத்தை கழிப்போமா ! எங்களின் உறவுகள் ஏதிலியாகியே தங்கள் வாழ்வினை தொலைத்து விட்டாரே ! தங்கள் வாழ்வைத் தொலைத்தது ஏனோ தாயகம் மீட்டெழும் முடிவினில் தானே ! கண்ணீர்ப் பொங்கலும் செந்நீர்ப் பொங்கலும் கடக்கும் பலமென்றும் உலகத் தமிழர் கைகளில் தானே உலகெங்கும் எழுவோம் பொங்கி எழ…
-
- 0 replies
- 816 views
-
-
ஏங்கும் மனதாலும் தாங்கும் செயலாலும் தூங்கும் நிலை மறந்து தூயதான விடியலிற்காய் தூய்மைகள் அங்கே வியூகமாய் பொங்கும் நாள் தேடி பூம்புனல் தானாகி எங்கும் மங்களமாய் எங்கள் மண் எமதாக்க துய்ப்பதற்காய் சுதந்திரத்தை தூயவர் அவர் படைக்க,கங்குலாகியவர் களம் காண நோக்குகையில், புலம் பெயர்ந்து நிலம் நோக்கும் பலம் வேர்க்க உளம் நோகும் இங்கெவர்க்கு பொங்கல் இதமாக இனித்திருக்கும் இனம் நோக இதனை நீ இயல்பாக நோக்காதே ஈழ மலரங்கு, ஈகையாய் முரசொலிக்க மண்வாசம் நமதாக மனமெல்லாம் நிறைவாக இனியவர்களுடன் இழைந்திருந்து இயல்பாக பொங்குதலே இமயமான , இங்கிதமான இணையிலாப் பொங்கலாகும்.
-
- 0 replies
- 735 views
-
-
வன்னி ஒரு வரலாறு படைக்கும் ............ எதிரி எக்காளமிடுகிறான் கிளி நொச்சி விழுந்து விட்டது , முல்லை விழுந்தது ஆனையிறவு விழுந்தது ,என்று அவனுக்கு சொல்லுங்கள் தலைவன் வழியில் தமிழன் விழ விழ எழுவான் என்று கடந்த காலத்தை ,சற்று புரட்டி பார் , நம் வீரர் பதுங்கி தான் பாய்ந்தார்கள் ,புலத்து உறவுகளுக்கு ஒரு சஞ்சலம் "என்றும் நாம் வீழ மாடோமேன்று " உரத்து சொல்லுங்கள். அது காலத்தின் தேவை என்று ". ஏன் கலக்கம் சுனாமியும் உள் இழுத்து தான் வாரிக்கொண்டு போனது , ஏன் இது நம் தலைவனின் உள்நோக்கிய இழுப்பாக இருக்க கூடாது ? பிடிப்பார் பிடிப்பார் எப்படி? மக்கள் இல்லாமல் தக்க வைப்பார். இருந்து பாருங்கள்" பெரும் அதிரடி" ஒன்று கருக்கொள்ளும் பின் மழையாக பொழ…
-
- 16 replies
- 4.1k views
-
-
கிளிநொச்சி உன் பார்வைகாய்........ கவிதை...... கிளிநொச்சி..! கிளிநொச்சி...! வாயில் சொல்லப்பட்ட தடவைகள் அதிகம் எதிரியின் வாயிலல்ல தமிழனே..! இன்று உன் வாயால்.... கிளிநொச்சி போய்விட்டதாம்...! கிளிநொச்சி போய் விட்டதாம்...! அழுதழுது இன்றுடன் ஐந்து நாட்கள்மேல் போக்கிவிட்டாய்...! அழாமல் அடுத்த அடி வைத்திருந்தால் மறுபடியும் ஐந்து அடி முன்னெறியிருப்பாய்....! எம் மனவுறிதி போய்விட்டதா..? சொல்..! உன் கொள்கைதான் தோற்றதா..! சொல்..! தமிழீழமே உன் குறிக்கோள் கிளிநொச்சி அல்லவே...! கிளிநொச்சி எங்களின் தமிழீழத்தின் நகரம் தான் அழகான நகரந்தான் இன்று எதிரியின் வல்வளைப்பில் சிக்கிவிட்ட நகரந்தான்... முழுமையாய் செத…
-
- 23 replies
- 4.7k views
-
-
பல்லவி தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா உன் தாய் மண்ணை முத்தமிடு தமிழா ஈழ மண்ணை வட்டமிடு தமிழா - உன் ஈர மண்ணை அள்ளியெடு தமிழா எம் மண்ணை அள்ளித் தின்றேனும் நாம் ஈழத் தமிழனாய் வாழ்வோம் குருதியில் தோய்ந்த பிஞ்சுகளை எதிரியின் குண்டுகள் தின்கிறதே போரிலே பாயும் பிள்ளைகளை பதுங்கிடும் குழிகள் காக்கிறதே சரணம்-1 வீட்டினை இழந்து நாட்டினை இழந்து காட்டிலே நாங்கள் வாழ்ந்திடலாமா உணர்வினை இழந்து உறவினை இழந்து சோற்றிலே கைளைப் புதைத்திடலாமா போரை நிறுத்தென தமிழரின் குரல்கள் உலகத்தின் செவிகளில் ஒலிக்கிறதே செவிகளை விழிகளை மூடிய உலகம் செக்கு மாட்டினைப் போல நகர்கிறதே எதிரிகள் வருகிற திசைகள் பார்த்து ஈழத் தமிழரின் படைகள் பாய்ந்திடுமே சரணம்-2 …
-
- 5 replies
- 1.3k views
-
-
காலத்தின் தேவை கருதி கணப்பொழுதில் வரைந்த கிறுக்கல் . . ஈழப்புதையல் தேடி உழுது தேய்ந்த சந்தணக்கலப்பைகளை மனதில் இருத்தி கிறுக்கியுள்ளேன் . . . காலம் கண்மூடி திறப்பதற்குள் கரைந்து போய்விடுகின்றது. எம் உறவுகளே கரங்கள் எம்முடன்தானே பலமாக இருக்கின்றுது. உழைக்கின்றோம் ஒரு சிறு தொகை மனமுவந்து உதவுவோம். ஈழப்போர் இறுதிக்கு வந்து நிற்கின்றது. எதிரியின் எறிகணை எல்லைக்குள் எம்மக்கள் தவிக்கின்றார்கள். இந்தக்கணத்தில் நாம் செய்யவேண்டியது அவர்கள் கேட்டுக்கொள்வதும் ஓன்றே ஒன்றுதான். அன்பின் புலம்பெயர் உறவுகளே உதவிக்கொள்ளுங்கள். இது ஒரு கடன் நாம் கட்டாயம் திருப்பித்தருன்றார்கள் ஒருவர் கேட்கும்போது கைவிரிக்கும் பழக்கமற்றவர்கள் நாம். கொடுத்துச்சிவந்த கரங்கள் எமது கரங்கள் இன்னும் கொடுப்போம் கொட…
-
- 5 replies
- 1.3k views
-
-
அணையாது விடுதலைத்தீ வஞ்சகர் சிங்களவர் வார்த்தையில் நம்பி-எங்கள் முந்தையர் முடங்கியதால்-எம் தந்தையும் தாயும்-எதிரி சிந்தையில் சிறியரானார் நெஞ்சிலே நெருப்பெடுத்து வஞ்சகர் இருப்பழிக்க குஞ்சுடன் குருமன்களும் வெஞ்சினம் கொண்டெழுந்து வேட்கையில் குதித்திருந்தால் அஞ்சக என்றெழுந்து அன்னையின் அடிமை நிலை இன்றுடன் தொலைந்ததென்று கன்றுடன் தாய்ப்பசுவும் களத்திலே குதித்திருந்தால் இன்று நாம் இவ்வுலகில் இறைமையுள்ள நாடாகி சந்திரன் தாண்டி-பல சாதனை புரிந்திருப்போம் கன்றுடன் தாயையும் கதறிய சேயையும் பிஞ்சுடன் பூவையும் கெஞ்சிய கிழடையும் நெஞ்சிலே ஈரமில்லா நெறிகெட்ட சிங்களம் கொன்றிடத் துடித்தது-முன் கொடி கொண்ட தமிழினம் என்…
-
- 3 replies
- 983 views
-
-
வெல்லும்! வெல்லும் எம் ஈழம்! தலை போனால் போகட்டும் தன்மானம் சாகாது உயிர் போனால் போகட்டும் உணர்வுகள் சாகாது நிலம் போனால் போகட்டும் பலமிங்கு குறையாது தோல்விகள் வந்தாலும் மனமிங்கு சளைக்காது! விடுதலை ஒன்றேதான் குறிக்கோளாய் ஆனபின் இடையில் வரும் எதுவுமே இடைஞ்சலாகாது! இலக்கொன்றே எம் வெற்றி அதுவரை போராடு தலைவன் வழிசென்ற தலைகளென்றும் குனியாது! களத்தினில் நிற்பவன் பலத்தை எடை போடாதே சிங்கள அரசுக்கு நீ சிபாரிசு செய்யாதே!உள்ளிழுத்து பின் பொங்கும் சுனாமியாய் வருவார்கள் தமிழ் ஈழமே வென்றுதான் புலிகள் வெளிவருவார்கள்! வலிகளை எல்லாம் உள்வாங்கிக் கொள்ளாதே புலிகளை நம்பிக்கொள் உன்வீரம் சாகாதே!! தமிழினம் நிமிரணும் எதற்குமே சோராதே! ஈழம் வெல்…
-
- 10 replies
- 2k views
-
-
எனக்குள் எரியும் ஓர் நெருப்பு செந்தீயில் என் தேசம் வெந்தணலில் என் மக்கள் பந்தாட வந்தோரால் நொந்தேதான் மெய்சோர்ந்தார் வந்தோடி வந்தோர் நாம் சிந்திக்க ஏன் தயக்கம்? என் மண்ணின் மீட்புக்காய் அங்கே ஓர் பெரும் யாகம் இங்கோ நாம் களிப்போடு உல்லாசம் தரும் கோலம் சோகங்கள் எம் மண்ணில் தொடர்கின்ற இந்நேரம் போகங்கள் ஏன் இங்கு பாரங்கள் தான் அங்கு என் மண்ணின் வசந்தங்கள் எங்கோ போய் ஒளிந்ததனால் என்றுமே நிரந்தரமாய் இலையுதிர் காலங்கள் விரக்தியின் விளிம்பினிலே துடித்திடும் உயிர்க் கூட்டை விடுத்திட விரும்புகின்ற மிடிமையில் என் மக்கள் சொந்தங்கள் சுடராகத் துடிக்கின்ற பொழுதிங்கு நெஞ்சங்கள் உருகாமல் நிலைக்கின்ற நிலைகண்டு என்நெஞ்சி…
-
- 6 replies
- 1.3k views
-
-
தாயிருந்த மண்ணைவிட்டு சமச்சிருந்த சோத்த விட்டு ஊரழிய வந்தோமே ஒன்றுமின்றிப் போனோமே தோல் நிறமும் மாறலியே சொந்த குணம் போகலையே தேரிழுத்து வீதியெல்லாம் செய்த தவம் காக்கலையே புலம்பெயர்ந்து வந்து புலம்புவதால் என்னபயன் மட்டக்களப்போடு மன்னார்தான் போனாலும் வன்னி இருக்குதென்று மகிழ்வோடிருந்தோமே! வெட்டி அரிந்தெம்மை வேரோடு சாய்க்க வென்று வாசலிலே நிற்பவனெம் வாழ்வை அழிப்பானோ! சுற்றிவர நின்று சுடும் பகையைக் காலெடுத்து எற்றி இறைவா எமக்குதவி செய்யாயோ! (யாராவது இந்த ஒப்பாரியைத் தொடருங்கள்.)
-
- 9 replies
- 2.2k views
-
-
இனியேனும் நாமிங்கு ஒன்றாகுவோமே ! -------------------------------------------------------------------- காலத் துயர் வலி தாக்கிடும் வேளையில் கைகளைக் கோர்த்தொரு உறுதியெடுப்போம் வீணிற் பொழுதுகள் போனது வேயென்று காணற் பேச் சொலி காதிற் கேட்குது போனது போனது விடுதலை போனதாம் ! எங்கே போனது விடுதலை என்று நாம் சற்றே சிந்தனை கொள்வதே நல்லது எப்போ விடுதலை வந்தது என்றே சற்றே சிந்தனை கொள்வதும் நல்லது ! நித்திரை போலவே நடித்தவர் சிலர் நித்திரை விட்டெழுந்தவர் போல் சிலர் நின்று பேசியே நிமிர்ந்து பார்க்கிறார் போனது போனது விடுதலை போனதாம் ! நேற்று வரைக்கும் தூங்கி யிருந்ததும் காற்று வாங்கக் கடற்கரை போனதும் கதவை மூடிக் கதைகள் சொன்னதும் காலத்துயரின்…
-
- 0 replies
- 700 views
-
-
-
- 0 replies
- 711 views
-
-
எனக்கொரு வரமருள் பராபரமே.... புழுதி எழும் ஊரின் புண்பட்ட வீதிகளில் விழுது விட்ட ஆலமரத்தின் பழுது பட்ட திண்ணையில் தொழுது எழும் கோயிலின் அழகு மிகு தேரடியில் உழுது நாற்று நடும் ஊரின் வயல் வரப்பில் பொழுது விழும் நேரம் களித்து மகிழ்ந்து நாங்கள் கால்பந்து விளையாடும் கல்லூரித்திடலில் ஒழுகும் வழி சொன்ன பள்ளியின் வகுப்பறையில் ஆழ வேரெடுத்து அழகாய் கிளைபரப்பி நீள நெடுத்து நிற்கும் முற்றத்து மாநிழலில் வீழமாட்டேனென-திணவெடுத்து சோளக்காற்றிடையும் வாழ நிமிர்ந்து நிற்கும்-தென்னஞ் சோலை மர நிழலில் வாழ வழி பல தந்து வளமும் தந்து-எம் நீள நெடும் பரம்பரையின் வரலாறு தந்த வீரம் படுத்துறங்கும் விடுதலைத்திருநாட்டில் என் வாழும் நாட்களில்-இன…
-
- 4 replies
- 1.3k views
-
-
பள்ளி நினைவுகள் தோழிலே பையுடன் தோழர்கள் புடைசூழ பள்ளி சென்ற பருவ நாட்கள் சிந்தையில் விரிகையில்-இதயத்தில் சின்னதாய் ஒரு நெருடல் நிலவு அல்ல-பள்ளி நினைவுகள் தேய்வதற்கு நித்தமும் விழி எதிரே நிஜங்களாய் மலர்பவை பருவமழை அல்ல-பள்ளி நினைவுகள் வந்துபோக பசுமையாய் பதிந்து பாதத் தடங்களாய் தொடர்பவை காலச்சக்கரம் விரிகையில்-வசந்த காலத்தின் சுவடுகளாய் பதிந்து காற்றினும் பரந்து விரிந்து காவியமாய் நெஞ்சிலே ஒளிர்பவை நேற்றைய நட்புகளே - பள்ளி நாட்களின் உறவுகளே இதயச்சுவர்களில் உங்களின் இனிய நினைவுகள் அழியாத புத்தகமாய் ஆண்டாண்டு வாழும்
-
- 0 replies
- 935 views
-
-
எதுவரை நீளுமோ அதுவரையும் எதுவரை தொடருமோ அதுவரையும் அந்தங்கள் இல்லா அறுபடாச் சங்கிலியாய் தொடருமடி - நம் நட்பின் சங்கீதம் ………………………………………….. எங்கோ இருந்தபடியே என்னை கடிகார பொம்மையாய் ஆட்டி வைக்க உன் நட்புக்கு மட்டுமே முடிந்ததடி ………………………………………….. நீ உனக்காக உனக்காக என்று கவிதைகள் கேட்கிறாய் நான் உனக்காக உனக்காக என்று என்னையே எழுதுகின்றேன் ………………………………………….. நீ நேசிக்கின்றாய் என்றெண்ணி மகிழ்ந்து போகிறேன் என்னையல்ல நிழல்படங்களை என்றறியாத சின்னக் குழந்தையாய் ………………………………………….. என்னைப் போலவே எந்தன் கவிதைகளும் உன்னால் நிராகரிக்கப்பட்டவுடன் உடைந்து துண்டாகின்றன …
-
- 2 replies
- 947 views
-
-
மழை எப்போது எங்கே விழவேண்டும் என்பதை தீர்மானிப்பது காற்று எதிரியே நீ எதுவரை வரவேண்டும் எங்கே விழவேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் விடுதலைப் புலிகள் புலிகள் முன் நகராது இருக்கும் வரைதான் வெற்றிக்களிப்பில் கர்ஜனை செய்வீர்கள் பொன்சேகா படைகளே ஒன்றன் பின் ஒன்றாய் ஏவுங்கள் எறிகணைகளை பறந்து வந்து போடுங்கள் குண்டுகளை பொறுத்துக் கொள்கின்றோம் எமது தேசத்தின் அமைதி குலைத்த சிங்களமே… எங்கள் தலைவனின் மௌனம் கலையும்போது வதைபடுவாய் பொறுத்துக்கொள்… எதிரியே உன் தளத்தில் வந்து நின்றவாறு புலிகள் ஏவும் உனது எறிகணைகள் உன் தலையில் வீழ்ந்து வெடிக்கும் என்பதைக் கருத்தில்க்1கொள் குதித்து வ…
-
- 3 replies
- 2.5k views
-
-
பொங்க வேண்டும் .......... பொங்க வேண்டும் பொங்கல் வயிற்றுக்கு உணவாகும் வெறும் அரிசி பொங்கல் அல்ல .உள்ளத்து உனார்வுடன் , வீர விடுதலை வேட்கையுடன் , பொங்கி எழ வேண்டும் புலம் பெயர் உறவுகள் , உணர்வுகள் பங்களிப்புடன் பொங்கி எழ வேண்டும் வேடுவ சாதி வெடி கொழுத்தி பொங்கி மகிழ்கிறான். என் இனம் வேதனை தீ ,வெறுமை தீ விரக்தி இரத்த ஆற்றில் பொங்கி எழுகிறது. அவனுக்கு ஆயிரம் ஆயிரம் பேர்,உதவிப் பொங்கல் .நம் மானத் தமிழனுக்கு தமிழ் உதவி , உறவுகளின் கை நீட்சி தான் பொங்கல். இன்னும் கரையாத நெஞ்சமுண்டோ , என் சமுதாயமே , பொருளாக பொங்குக உணர்வுகாளால் பொங்்குங்கள் பரப்புரைகளால் போங்குங்கள் கொக்கரிக்கும் கூட்டம் பெட்டி பாம்பாய் ஒரு வேளை அடங்க…
-
- 8 replies
- 1.8k views
-
-
புன்னகைச் செல்வனை இழந்து நாமழும் கண்ணீர் ஓலமல்லயிது நெஞ்சில் விடுதலைக் கனவுகளோடு இலட்சியச் சிரிப்புடன் வாழ்ந்தமகன் கல்லான மனங்களையும் கனியவைக்கும் பிள்ளைனிலா வெளிச்சம் அவன்சிரிப்பு நடக்கும் பேச்சு வார்த்தைக்குள் இருக்கும் மனிதனேயக் கூட்டம் இயற்கும் விந்தையைக்காடடும் மாயவன் கனிவான வாயிதழ் திறந்ததும் சிந்தும்னகைத் தயக்கம் தீர்க்கும் எழிதான கவிதைவரிப் புயல் எதிரியின் முகத்தில் மோதும் மெதுவான வார்த்தை மின்னல் நாழுமவன் செய்தியாய்த் தெறிக்கும் நாடெங்கும் வாழும் தமிழரின் வீட்டிலும் குதுகலப்பாய் விரிக்கும்! எங்கள் இனத்தின் வலம்புரிச்சங்கை சாய்த்து விட்டானே தறுக்கன்! பாய்கின்ற புலிகள் வெற்றிக்குப் பகுப்பாய்வு விளக்கம் அளிப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
ஏன் வந்தாய்? ஊரென்ன பார்க்க வந்தாயா? உன் உறவுக்கு சொல்லி வந்தாயா? சோரம் போகா வன்னி மண் தீரம் தெரியாமல் வந்தாயா? தீயவனே ஆவி ஒடுங்கி-உன் உடல் ஊர்போகும் நாள்தெரிய வந்தாயா? பண்டார வண்ணியனின் பரம்பரை பிறந்த மண்ணில் சிங்கம் புணர்ந்து பிறந்த வம்சத்தின் சிறு நரிக்கென்னவேலை? வணங்கா மண் வன்னியின் வரலாறு தெரியாமல்-மூடனே களங்காணா உன் அமச்சரின் கதை கேட்டு வந்தாயோ? அகங்காரம் தலைக்கேற ஆணவம் மிகக்கொண்டு இளக்காரம் என எண்னி தமிழய்ச்சியின் வளைய்க்கரம் சீண்டிப்பார்க்க வன்னிக்கு வந்தாயோ? வளைக்கரம் வலிமை கொண்ட வண்ணிமண் எங்களது இங்கே கொலைக்களம் உனக்காக கொடியவனே நாளை எண்ணு அடங்காப்பெருவீரம் பிறப்பெடுத்து ஆர்ப்பரிக்கும் …
-
- 3 replies
- 1.1k views
-
-
கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர் தீபச்செல்வன் 01 நமது வாழ்வின் கனவு நகரமே படைகள் உன்னை மிதிக்கும் பொழுது நமது மனம் மிதிபடுகிறது. கிளிநொச்சிக்குளத்தில் கந்தசாமிகோயில் மூழ்கியது. அதிகாரத்தின் கைகளிற்குள் அடங்க முடியாத நகரம் நேற்றிரவு பின்வாங்கியது. ஆழமான கிணறுகள் வசந்தநகரை விட்டு பின்வாங்கின. நமது நகரம் வீழ்ந்தது என்று அறிவிக்கப்படுகையில் பெரும்துயர் சூழ்கிறது. மெல்ல மெல்ல படைகள் கடிக்கத்தொடங்கிய நாட்களில் வீடுகள் எங்கோ போயிருந்தன. கடைகள் கரடிப்போக்கைவிட்டு பின்வாங்கின. எனது வீடு முழுவதையும் தின்றுவிட்டு பெருமிதம் கொள்ளுகிற படைகள் நகரமெங்கும்; நுழைந்து கொடிகளை பறக்க விடுகையில் காயம் ஆறாதிருந்த கட்…
-
- 1 reply
- 1.2k views
-
-
உடைந்த மாதாவும் உடையாத மாடுகளும் கொம்பு முளைத்த எங்கள் மாடுகளோடு கொம்பில்லாத மாடுகள் வந்து மோதிப் பார்க்கின்றன. கொழும்பில் இருந்து தடித்த கொழுப்போடு பறந்து வரும் எருமைகளால் மாதாவின் தலையைத்தான் உடைக்க முடிகிறது. வானத்தில் புல் முளைத்தால் எங்கள் மாடுகளுக்கு சிறகுகள் முளைக்கும் என்பதை மறந்துவிட்டன பறந்து வருகிற எருமைகள். உடையாத மனதோடு உயிர் காக்கும்படி அடைக்கலம் தேடும் கோவில் வாசலில் மாதாவின் தலை தலைகிழாய் கிடக்கிறது. எண்பத்தைந்து மாக்கள் செத்தால் என்ன? எண்பதினாயிரம் மக்கள் செத்தால் என்ன? எந்த நாடும் கேட்காது. மதம் பிடித்த யானைகள் மதம் பிடிக்காத பூனைகளோடு கைகுலுக்கி மகிழ்ந்து மௌனமாகிப் போனது. …
-
- 7 replies
- 1.8k views
-
-
உரையாட இது நேரமா-தமிழ் உணர்வாலே உளமார கொடுக்கின்ற நேரத்தில் உரையாட இது நேரமா? (உரையாட) கணநேரப் பொழுதோடு கடல் வந்து கரையேறி இன்பத்தை இரை கொண்டு இதயத்தில் சுமை ஏற்றிய நேரத்தில் உரையாட இது நேரமா? (உரையாட) யார் செய்த சதியோ? விதி போட்ட புதிரோ ? மதி கெட்ட அலை வந்து பதில் தருமோ? விடிவொன்று வருமென்று விழியோரம் ஒளி தோன்ற கனவாகி சிதைகின்ற நேரத்தில் உரையாட இது நேரமா? (உரையாட) புலத்தோடு வாழ்கின்ற உறவெல்லாம் ஒன்றாகி பலத்தோடு நிலம் பற்றுவோம். நலத்தோடு அவர் வாழ நிறைவோடு தினம் நல்கி இனம் காக்கும் நேரத்தில் உரையாட இது நேரமா? (உரையாட)
-
- 0 replies
- 545 views
-
-
சென்று வா இரண்டாயிரத்து எட்டே வென்று விட்டதாய் நினைத்தால் வெற்றி உனக்கல்ல என்பேன் பற்றி எரிவது தமிழ் ஈழக் கனவே! பொறுமையை இழந்தோம் தனிமையாய் தொடர்ந்தோம் இனிமையான வாழ்வுக்காய் தனி நாட்டைக் கேட்டோம்! பொறுக்காத நாடுகள் வெறுக்கவே செய்தனர் விடை தர மறுத்து தடையினைப் போட்டனர்! குனிந்ததும் குட்டு வாங்கியதும் வலி பட்டவர்க்கே வலிக்கும் எலி வளையானாலும் எமக்கு தனி வளை வேண்டும் என்றோம்! சிங்களம் வெங்களம் விரும்பியது கங்கணம் கட்டி தமிழினம் அழிக்க விரைந்து படை திரட்டியது உலகிடம் இரைந்து ஆயுத பிச்சை கேட்டது! சர்வமும் மயங்கி சர்வதேசமும் சோரம்போனது ஐ.நா.…
-
- 1 reply
- 603 views
-
-
என் கல்லறைச் சினேகிதியே...... கவிதை....... என் கல்லறை சினேகிதியே உன்னை காணவென்று வந்தேன் உனை காக்க வரவில்லை....! நீ சொல்லிவிட்டுச் சென்ற என் கடமைகள் ஏராளம் அதிலும் சில நிமிடங்கள் உனக்காய் தருகிறேன்... அதுவே ஏராளம்....! பல வருங்களாய் நம் தேசத்துக்காய் போரிட உன் தூக்கம் இழந்தாய்.... உன் தாமரை விழியிரண்டும் செண்பக விழியானாய்.... உன் பஞ்சுப் பாதங்களால் பாறையிலும் நடந்தாய்.... எதிரியை எதிர்த்து மண் காக்கும் சமரில் விதையாக விழுந்து என் விழியையும் திறந்தாய்..... கல்லூரிக் காலத்தில் நீ என் கண்கவரும் காதலி நானோ உன்னைத் தேடுவேன் ; நீயோ விடுதலையைத் தேடிச்சென்றாய்... மூடிய சிறையில் உலவும் சுத…
-
- 9 replies
- 1.7k views
- 1 follower
-