Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நீங்கள் அத்தனை பேரும் ............. அத்தனை பேரும் வாழ்கையை ...வாழ்கிறீர்களா? மனைவியை மாதமுருமுறை என்றாலும் "வெளியில் " அழைத்துச்செல்கிறீர்களா?.. மனைவி பிள்ளைகளுடன் ....மரடிக்கிராலா? ....ஒரு மாற்றதிக்கு பிள்ளைகளை கவனிப்பீர்களா? இரவு வேலை பார்க்கிறீர்களா? நீங்கள் காலையில் வர பிள்ளைகள் பாடசாலை போய்விடுவார்கள்..பிள்ளைகள் பாடசாலையால் வர நீங்கள் போய்விடுவீர்கள்?....பிள்ளைகளுக்கு இரவில் தன் முத்தமா? மனைவி வேலைக்கு போவதானால் நீங்கள் இரவும் அவள் பகலும் .. ஒருவரை ஒருவரை கான்பீர்களா?......இரண்டு வேலை மூன்று வேலை என்று மாரடித்து விட்டு ...எங்கே இன்பம்?........... எங்கே நிம்மதி ?........ போதும் என்ற... மனமே ..வேண்டும் ....அவன் போல கார் வேண்டு…

  2. முதல் கோணல் முற்றும் கோணல் பழமொழியாம்... முதல் கோணல் முன்னேறும் அறிகுறி என்பேன் நான்.. முதல் முறை உயர்தரம்.. தோற்றபோது கவலையுற்றேன் இரண்டாவது முறையில் உயர்வான பேறு கொண்ட போது உவகையுற்றேன் முதல் காதல் கண்டதும் காதல் வழமைபோல் தோற்றது வேதனை கொண்டேன் என் சகியைக் கண்டதன்பின் அத்தோல்விதான் விதிக்கெதிராக நான் செய்த சாதனை என்பேன் உலகத்தில் ஒரு விஞ்ஞானியும் முதல் முயற்சியில் வெற்றிகொண்டதாக சரித்திரம் இல்லை.. பின்பு ஏன் நீ நினைக்கிறாய் தரித்திரம் என்று.. நண்பா என்னனுபவத்தில் சொல்கிறேன் முதல் தோல்விதான் முன்னேறும் முதல் படி மறந்துவிடாதே.. ஆகவே நண்பா தோல்வியைக்கண்டு துவளாதே,முயற்சிசெய் முடியாதது எதுவும் இல்லை

    • 9 replies
    • 2.2k views
  3. Started by Thamilthangai,

    தசாவதாரம்: குழந்தையாய் நான் பண்ணும் குறும்புகள் ரசித்து உன்னுள் மகிழும் போது தாயாகிறாய்! விளைகின்ற பலாபலன்கள் யோசியாது செய்யும் போது கனிவுடனே கண்டிக்கும் தந்தையாகிறாய்! எப்போதும் முதல் நானே என்றெண்ணும் எண்ணத்தை நீயே போற்றி விட்டுக்கொடுக்கும் தமக்கை ஆகின்றாய் வேறொருவர் வந்தென்னை தாக்குகையில் காத்து நின்று எப்போதும் மானம் காக்கும் அண்ணன் ஆகின்றாய்! வாழ்வினைகற்பித்து வழிகாட்டி நெறி காட்டி நல்லனவே எண்ண வைக்கும் குருவாகின்றாய்! சோகங்கள் சொல்லுகையில் தோள் கொடுத்து சோராமல் உற்சாகம் தரும் போது தோழனாகின்றாய்! மகிழ்வூட்டி என்னையே மனசாரப் பாடி உன் மடி சாய்த்து என் உயிரே நீ ஆகின்றாய்! என் உயிர்க்குடங்கள் தான் நிறைத்து உணர்வுகளிலே பூச்சொரிந்து உ…

  4. மனங்களிலே பல ......நிறம் ....கண்டேன் உதிரத்தை பால் ஆக்கி வளர்த்தது ஒரு உள்ளம் தோல் மீது போட்டு ,மார்பிலே அனைத்து உயர் கல்வி தந்தது ஒரு உள்ளம் முன்னும் பின்னும் காவலுக்கு ஒரு உள்ளம். அழகாய் அணிவித்து பார்த்து ஒரு உள்ளம் ... விழியில் நுழைந்தது ..உயிரில் கலந்தது ஒரு உள்ளம் . மழலை சிரிப்பால் உள்ளம் கவர்ந்தது ஒரு உள்ளம் , நடுக்கடலில் மூழ்கடித்தது ஒரு கல் நெஞ்சம் . .புண் ஆக்கி வெந்நீர் ஊற்றி கண்ணீர் பார்த்து ஒரு தலை கவிழ்த்தது ஒரு உறவு .... .இத்தனைக்கும் மத்தியில் போராடும் ஒரு உள்ளம் .அது கண்ணீரில் நீராடி .கரையாமல் காப்பது ஒரு மனது . போராடி போரராடி ...மண்ணடி சேர்வது எப்போது .

  5. இது நான் அறிந்த சம்பவம். ஒரு பெண்ணாய் என்னால் உணரமுடிந்தது. உதவ முடியவில்லை வலிக்காமல்..... துள்ளித் திரிந்தவள் மெல்லப் பிடித்திருத்தப்பட்டாள் காயப்படுத்தப்படாமலேயே இறக்கைகள் கத்தரிக்கப்பபட்டன. பேதை, போதை என்பதற்கான கருக்கூட்டலே கதைப்படுத்தப்பட்டது. பதின்மவயதில் பதுமை நிலை திணிக்கப்பட்டது. எதிர்கால மேதை ஒருத்தியின் பாதை சம்பிரதாயச் சடங்குகளால் சத்தமில்லாமலே பூட்டப்பட்டது.

    • 5 replies
    • 1.5k views
  6. ஒரு பிடி ................................வேண்டும் தலைவனின் மண்மீட்பில் ஒரு பிடி மண் வேண்டும் மண்கொண்ட அன்னையின் நினைவாக ஒரு பிடி முத்து மண்ணில் நான் போட்ட கோல மண் முன் வீட்டு மாமியின் வேலிக்கும் ஒரு பிடி மாமர நிழாலில் மண் வீடு கட்டிய என் தோழி மலர்விழி மண் மீட்பில் மாண்டு விட்டா மாமா வின் கடைசி மண் மீட்க போய்விட்டான் நான் நட்ட மாங்கன்று கிளை விட்டு பழ்ம் கொடுத்து என் பிள்ளை ருசிபார்த்து ,பசியாற மண் வேண்டும் கோமத்யின் இரு நாள் பசுகன்று பார்க்க வேண்டும் கோழியும் குஞ்சுமாக ஒரு கூட்டம் காணவேண்டும் கோவில் மணி ஒலி என் துயில் எழுப்ப வேண்டும் . வயல் வரம்பில் காலரா நடை பயில வேண்டும் விளைந்துநிட்கும் நெற்கதிர் அளைந்து வரவே…

  7. அத்தை மகளோ... அம்மான் மகளோ.... எந்தத் தலைமுறை தாண்டிவந்த உறவோ....... நானறியேன்.....! சிந்தைக்குள் உன் நினைவிருக்கு சிதையாதே என் கனவிற்கு - என கதைகதையாய் பல சொல்லி உன் காலடியில் போட்டவளே..... மடியோடு எனைச் சாய்த்து தலைகோதி தாலாட்டி மனதோடு ஒன்றி போனவளே.... நான் கேட்டா உன் மடி தந்தாய்.... நீதானே என் பதியென்றாய் நீயாக நெருங்கிவந்து - எனை தீயாக்கி போகாதே... அணைத்து முத்தமிட்ட உன் இதழில் பதிக்க மறந்தேன் என் முத்திரை - அதுதான் தேடி அலைகிறேன் உன் முகவரி இன்று உணர்வுகள் தரும் உறவை விட உன் உறவுகள் சொல்லும் உரைகளோ சரி உனக்கு....? மனசுகள் பேசும் வாழ்வை விட உன் மாமன் மகன் மதனா பெரிது உனக்கு.....? காய்வெட்ட நி…

    • 23 replies
    • 4.3k views
  8. வந்தது கடிதம் முத்தான எழுத்துக்கள் கொண்டு முத்தங்கள் பல இட்டு சுருக்கமாக நீ எழுதிய மடல் சுணக்கமாக கிடைத்தது இன்று விரித்து வாசித்த வேளை சிரித்தது என் உதடு சின்ன சின்ன சொல்லெடுத்து செதுக்கிய அழகிய காதலை உன் கடிதத்தில் கண்டதும் கண்கள் சந்தோசமாக கண்ணீரை உதிர்த்து நன்றி சொன்னேன் மனசுக்குள் நான் உனக்கு எத்தனை தடவைகள் அன்பான உன் மடலை வாசித்தேனோ நானறியேன்... என் மென்மையான நெஞ்சத்தில் அவ்வரிகள் ஆழமாக பதிந்தன "அன்பே என் நிலா உன் காதல் விண்ணப்பத்தை இன்று நான் ஏற்றுக்கொண்ட்டென் உன்னையே என் இதயவீட்டில் குடியேற்றிவிட்டேன் ஆதலால் ஓடி வா என்னிடம் நீ.. முத்தங்கள் பல தந்து முடிக்கின்றேன் இம்மடலை. என்றும் உன்னவன் ...........…

  9. மலர் கொண்டு வருவன் .......... புலம் பெயர் நாட்டிலே என் தாய்க்கு ஒரு நினைவலை தாலாட்டு பத்து மாதம் சுமந்து பெற்று பண்புமிகு பாசமுடன் பேறு எடுத்த கடைக்குட்டிபேட்டை நான் ,பாலுட்டி தாலாட்டி பண்புடன் ,நல்ல பழக்கமுடன் பாங்கை அனைத்து வளர்த்திடாள் பள்ளி சென்று நானும் படிகையிலே பக்குவமாய் இ பாடங்கள் பலதும் சொல்லிதந்தவளிகாட்டி கடை குட்டி என் மீத கூடிய கரிசனம் கண்ணன் மணி போல காத்து கல்லூரிக்கு அனுய்பி வைத்தாள்விடுதி விட்டு வீடு வந்தால் விசேடமாய் சாப்பாடு விதவிதமாய் பல்கலைக்கு காலடி நான் வைத்த போது கண் கான தேசம் கவனமடி கன்ன்மனியே கருத்தாக படித்து பட்டமும் பெறப்பட்ட போது .................

    • 12 replies
    • 2.2k views
  10. மீண்டும் மீண்டும்........ இன்னுமா....உறக்கம்? இடியேறு உன்னில் விழ.. ஈழத்தில் உன்னினம் அழிப்பு. இங்கு நீ இன்னும்..... இதமாய் உறங்கு! ஊருக்கொரு சங்கமென்று கூறுபோட்டதுதான் மிச்சம் ஊர்ச்சனத்தின் வாழ்வு உனக்கெதற்குப் போய் உறங்கு! நிலம்விட்டு வந்த உந்தன் புலன்போற திக்கைப் பார்த்து புல்லரிப்புப் பொங்குது! பூரிப்பாக் கிடக்குது! புளுகுக்குச் சொல்லவில்லை பக்குவமா உறங்கு! எல்லாம் முடிந்த பின்னால் எங்கே?....... ஏது பிழை? ஆயிரமாய்க்கூடி அங்கலாய்க்க வேண்டுமே.. அதற்காக உறங்கு! கறுப்புப் படிந்துவிடக் கதவோரம் நிற்கிறது களையாகக் கைகூப்பி வரவேற்க நிற்கவேணும் இப்போது கண்ணுறங்கு! பிடறியில கொண்டு வந்து வெடிகுண்டைப் போட்டாலும் புண்ணாக்குத் தி…

    • 3 replies
    • 1.2k views
  11. அந்திமந்தாரை திரைப்படத்தில் வரும் உன்னிகிருஷ்ணன் பாடிய பாடல்: சகியே நீதான் துணையே! விழிமேல் அமர்ந்த இமையே" அந்த மெட்டுக்கு என் வரிகளில் ஒரு புது முயற்சி : உயிரே நீதான் உறவே என் உணர்வுக்குள் பூத்த காதலின் தாயே உயிரே நீதான் உறவே! (2) கனவுகளில் நீ காட்சிகளில் நீ காண்பது எங்கணும் நீதான் உறவே(2) வலிகளை தாங்கி சுகங்களைக் கொடுத்தாய் என் இதயத்தில் நீதான் என்றுமே துடிப்பாய்! இடர்களைக் களைந்து இனிமைகள் தந்தாய் உறவே உயர்வாய் எனக்குள்ளே நின்றாய்! (உயிரே நீதான் 2) கரைகளைத் தொடுகின்ற அலைகளைப்போலே உன் நினைவுகள் என்னை அணைப்பதினாலே உயிருக்குள் ஊறும் புது சுகம் கண்டேன் உன்னால் அன்பே காதலைக் கண்டேன் வேருக்கு வார்த்திடும் வான்முகில் போலே என் வாழ்வின் வளமாய் நீ வந்தாய…

    • 10 replies
    • 2.4k views
  12. யாழ் நூலகம் எரிப்பு ஆயிரம் ஆயிரம் புலவர்களை, எழுத்தாளரை, ஆய்வாளரை பலி கொண்ட இனவெறித் தீ புலமைகளையும், வித்தகங்களையும் ஆய்வுகளையும்கூட... நன்றி: ஓவியர் புகழேந்தி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது: 1981 மே மாதம் 31ம் திகதி

  13. செக்கு செக்கில் கட்டிய மாடுகள் சுற்றின. போராட்டம் முடிச்சவிழ்த்தது. பழக்கத்திலிருந்து விடுபடாமல் செக்கையே திரும்பத் திரும்பச் சுற்றின. முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டிருப்பதை உணர்த்தியபடியே போராட்டம் வளர்ந்தது. அருகாமையில் குண்டுகள் வீழ சிதறித் திக்கெட்டும் பிரிந்தவை பசுமை வெளிகளையும், பனிபடரும் குளுமை தேசங்களையும் தம் வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டன. வழமையில் இருந்து மாற்றமடையாது முடிச்சுகளுக்குள் தத்தம் கழுத்துகளை நுழைத்து அரவி அரவித் தழுவும் சுகிப்பில் திளைத்தபடி இரைமீட்டிகள் சுற்றி வருகின்றன. நாகரீக வெளிகளின் மெருகேற்றலில் செக்கிழுப்புகள் பரவி விரிகின்றன.

  14. தமிழுக்காய், தமிழ்மண்ணுக்காய் தற்கொடை தந்த தமிழ் சகோதரியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திய குட்டிரேவதியின் கவிதைக்கான பதில் அம்மணமாய் நிற்பவர்களே! சினிமாக் குப்பைகளிலும் சின்னத்திரை குழறல்களிலும் சிந்தனையைத் தொலைத்துவிட்டு குழாயடிகளிலேயே வீரங்காட்டும் விவஸ்தையில்லா வீணர்களுக்கு தாய்மண் காத்தலையே விரதமாக்கி வித்தைகள் புரிவது வீணானதாய்ப் படலாம் கட்டிளம் காளைகளின் கடைக்கண் பார்வைக்காய் காலமெல்லாம் காத்திருப்பதும் களியாட்டங்களில் கரைவதுமே கன்னியர்க்கு விமோசனம் என்றெண்ணும் சிங்காரிகளுக்கு களத்துத் தியாகங்களும் தீரங்களும் ஏளனங்களாகலாம். அந்நிய மொழியும் அடுத்தவன் கலாச்சாரமுமே கண்ணில் தெரிய அடுத்தவனின் அழுக்குகளையே அரவணைத்து ஆராதித்து அடுக்களைய…

  15. சில நாட்கள்... சில நாட்கள் சந்தோசமானவை சில நாட்கள் சோகமானவை சில நாட்கள் சுறுசுறுப்பானவை சில நாட்கள் சோம்பேறித்தனமானவை சில நாட்கள் அறிவுபூர்வமானவை சில நாட்கள் முட்டாள்தனமானவை சில நாட்கள் உயிர்ப்பானவை சில நாட்கள் தூங்கிவழிபவை சில நாட்கள் பையில் காசு உள்ளவை சில நாட்கள் கை கடனில் ஓடுபவை சில நாட்கள் நண்பர்களுடன் கழிபவை சில நாட்கள் எதிரிகளுடன் கழிபவை சில நாட்கள் நீதிவழி செல்பவை சில நாட்கள் திருட்டுத்தனமானவை சில நாட்கள் வெற்றியில் வருபவை சில நாட்கள் தோல்வியில் செல்பவை சில நாட்கள் அமைதியில் கழிபவை சில நாட்கள் அலைச்சலில் கழிபவை சில நாட்கள் பாடம் படிப்பவை சில நாட்கள் பாடம் எடுப்பவை சில நாட்கள் சிரிப்பவை சில நாட்கள் அழுபவை சில நாட்கள…

    • 12 replies
    • 2.1k views
  16. என் காதலுக்கு, காலை வணக்கம் சொல்லித் தொடங்கும் என் வேலை இன்று போட்டாலும் பதில் இல்லை எனும் போது தளர்கிறதே என்நிலை! வண்ண வண்ண எழுத்தால் என் எண்ணம் நிறைப்பாயே அள்ளிக் கொஞ்சும் அன்பால் வளைத்து அணைப்பாயே கரும்பினிக்கும் கருத்தால் கவிதை வடிப்பாயே ஓடிவந்துனை கட்டிக்கொள்ளத் தோன்றும் என் உயிரின் பெரும்பேறே! நீ இன்றி ஓடவில்லை வேலை இங்கு இப்படியோர் நிலைகொடுத்தாய் சரியோ சொல்லு!? பாதி வழி வந்த போது தாயைத் தொலைத்த குழந்தை போல் தவிக்கிறதே என் மனது! நிழலாகித் தொடர்கிறது உன் நினைவு உயிருக்குள் வழிகிறது உன் உறவு அன்பு தந்து என்னை சொந்தம் கொண்டாய் அன்பே! நீ இன்றி நகரவில்லை என் பொழுது! உன் குறும்புத்தமிழ் கேட்கும் போது மனம் குளிரும் செந்தமிழின் செழிப்பினிலே த…

    • 8 replies
    • 1.9k views
  17. பிரபல ஆங்கிலப் பாடகி Amy Winehouse (24) இன் பிரபல்ய பாடலான.. " Love is a losing game " பாடல் வரிகள் பற்றி.. ஒப்பீட்டு விமர்சனம் அளிக்க.. (இரு வெவ்வேறு கால பாடல்களுக்குரிய பாடல்களில் அமைந்த வரிகளின் தன்மைகளை ஒப்பிட்டு..) கேம்பிரிஷ் பல்கலைக்கழக ஆங்கில பாடப் பரீட்சையில் கேட்கப்பட்டுள்ளது. எங்கே.. எம் கவி வித்தர்கள்.. நீங்களும்.. உங்கள் கருத்தை இவ்வரிகள் தொடர்பில் சொல்லுங்கள் படிப்போம்... (உங்களை ஒப்பிடச் சொல்லவில்லை) Though I battled blind Love is a fate resigned Memories mar my mind Love is a fate resigned Over futile odds And laughed at by the Gods And now the final frame Love is a losing game Amy Winehouse இன் இணையத்தளத்தில் பாடலை…

  18. சந்தையின் மாலை வெறுமை. விலைபேசல்களும் விற்பனைகளும் முடிந்்தபின் சந்தைகனளும் சலனங்களும் கலைந்தபின் எந்த வியாபாரிக்கு என்ன ஆதாயம் கிடைத்திருக்குமென்பது பற்றிய அக்கறையெதுவுமின்றி சந்தைச் சதுக்கம் வெறுமையுற்றிருக்கிறது எந்தத் தராசு எதை நிறுத்தது ? எந்தக் கணக்கீடுகளின்படி விலைகள் நிர்ணயமாயின ? யார் யார் வந்தார்கள் ? எவற்றையெல்லாம் வாங்கினார்கள் ? எவற்றையெல்லாம் விற்றார்கள் ? தோட்டக்காரர்கள் யார் ? தோற்றங்கள் பெற்ற மதிப்பீடுகள் என்னவாயிருந்தன ? உள்ளீடுகளின் பெறுமதிகள் எங்கேனும் உள்வாங்கப்பட்டதா ? ஆதாயமற்ற கேள்விகள் வழங்கக்கூடிய ஊகப்பதில்களின் பயனின்மைபற்றிய தன் முன்னனுமானங்களைக் கூட்டிவாரிக் குப்பைக் கூடையில் கொட்டியப…

    • 4 replies
    • 1.3k views
  19. ஜம்முபேபி நிலாக்காவின் பிறந்ததினத்தை மறந்து நின்ற பொழுது எதிர்பாராத நாளில் யாழில் வெண்ணிலாவின் பிறந்ததினம் என்பதை அறிந்து மறாந்துபோயிட்டேன் என ரொம்ப ரொம்ப கவலைப்பட்டு நின்ற ஜம்முபேபியை ஆறுதல் படுத்த நான் அடைந்த கஸ்டத்தை என்னவென சொல்ல முடியும்? ஜம்முபேபிக்காக என் அன்பளிப்பு கவிதை

  20. ஈழக்கருவறையைக் காத்து வளர்த்தவன் ஆர்த்தெழுந்து தமிழ் தொடுத்துத் தாலாட்டுப் பாடிடவும், அனல் கொட்டும் வீரத்தின் மிடுக்கெடுத்து வனையவும், போக்கற்ற புரட்டனைத்தும் எழுத்தீயில் எரிக்கவும், எழுந்த என் எழுத்தாணி... இன்றுமட்டும், இலக்கு விட்டு.. ஏன் அழுது நிற்கிறது? புறம் படைக்கும் தமிழ் மகளின் போர்க்குணத்தை மொழியவும், புனை கவியில் எழுகை எனும் பெருநடப்பை விதைக்கவும், இணையில்லா விடுதலையில் வனப்பெடுத்துப் புனையவும் இலக்கெடுத்த என் பேனா இன்றேன் நலிகிறது? ஒப்பாரிப் பாடல்களை எப்போதும் பாடாத என் இதயம் இப்போதேன் அழுதபடி ஒப்பாரி உரைக்கிறது? அன்னை மண்ணிலே குருதியாறுகள் காயவில்லையே, உறையவில்லையே... இலக்கெடுத்த நம் தாயின் வேதனை ஆறவில்லையே,.. …

  21. முன்னபோனா முட்டுது பின்னவந்தா உதைக்குது மிஸ்டுகால் பார்த்து ரிங்குனா அப்பா இருக்கார் அப்புறம் பண்ணு சாயங்காலம் பாக்கலாமா சாரி அம்மாவோடு கோயிலுக்கு போறேன் நேத்து ஏன் பார்க்க வரலை நேரமில்லையா? நெனைவு இல்லையா? சிகரெட்டு புடிப்பியா தண்ணி அடிப்பியா செருப்பால அடிப்பேன் தறுதலை ப்ளூகலர் ட்ரெஸ் நல்லாருக்கா? ஏய் அந்த ப்ளாக் சுரிதாரை சைட் அடிக்காதே! புது ரிசப்ஷனிஸ்ட் என்னைவிட அழகா? கண்ணை நோண்டிடுவேன் முண்டக்கண்ணா சம்பளம் வந்திடுச்சா மாயாஜால் போலாமா எம்ஜிஎம் போலாமா எனக்கு சத்யம் கூட ஓக்கேதான் மாப்பிள்ளை பார்த்திருக்காங்க செம ஸ்மார்ட் டேக் ஹோம் 80கே எனக்கு டபுள் ஓகே ம்ம்ம்ம்.... …

  22. நெஞ்சைத் தொடுகுது அண்ணா உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது நெஞ்சைச் சுடுகுது அண்ணா உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது. ஆனையிறவின் நாயகனே வன்னிவிக்கிரமவில் புயலவனே..! தீரத்தின் விளைநிலமே வன்னியின் செல்வ மைந்தனே..! நெஞ்சைத் தொடுகுது அண்ணா உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது நெஞ்சைச் சுடுகுது அண்ணா உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது. தமிழர் சேனைத் தலைவனின் வீரத் தளபதியே தலைவன் செய்திகள் சேருமுன் சாதிக்கத் துடித்தவனே..! நெஞ்சைத் தொடுகுது அண்ணா உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது நெஞ்சைச் சுடுகுது அண்ணா உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது. கூவி வந்த யாழ்தேவி புரட்டி விட்டவனே திமிரெடுத்து வந்த சிங்களத்தின் கதை முடித்தவனே..! நெஞ்சைத் தொடுகுது அண்ணா உன் வீர…

  23. பால்ராஜ் அமரனுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன் அமரா நீ மீட்ட ஆனையிறவில் சுடப் பட்ட செங்கால் நாரைகள் போல் வன்னியெங்கும் தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே. என் கவிதையிலே நீ இருக்க ஈழம் கதறியழும் நியாய மென்ன. நீயோ முடங்கிய காலில் மூண்டெரிந்த விடுதலைத் தீ. தீவெட்டியாய் உன்னைச் சுமந்து சென்ற தோழருக்கு 'இத்தாவில்' பகையிருட்டில் வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா. உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு. களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல் காலங்கள் ஊடே என் கவிதை இனிச் சுமக்கட்டும் அவனை ஆழப் புதைக்காதீர் ஆலயங்கள் கட்டாதீர். நாளை மணலாற்றை மீட்டு வாழ திரும்புகையில் நம் சனங்கள் மசிரை விட்டுதுகள் தம் மனம் நிறைந்த நாயகனை. …

    • 26 replies
    • 7.5k views
  24. நான் தனிய இல்லை தலைநகராம் கொழும்பில் காலையில் குண்டுவெடிப்பு தொலைக்காட்சி பார்த்ததில் மலைத்து போனேன் வலைப்பின்னலில் கண்களை சுழல விட்டதில் கண்டுகொண்டேன் மீண்டும் பல செய்திகளை குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கையை விட தேடிப்பிடித்த தமிழர்களின் தொகையோ பன்மடங்கு என ஒவ்வோர் இடமாக தேடி வெவ்வேறு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை நினைக்கையில் பகலவனுக்கே தாங்க முடியாமல் இருளைக் கக்கினான் வெண்ணிலவும் மங்கலாக உருண்டது வானமதில்.. அடையாள அட்டையை எடுத்து தலையணைக்கடியில் வைத்து ஆடம்பரமின்றி ஆனால் அழகாக ஆடை அணிந்து படுக்கையில் புரண்ட போது உறக்கம் எனக்குள் தூரவாகிப் போனபோதும் உறங்கினேன் என்னையும் மறந…

  25. என் உயிர் எழுத்தே!! அன்பே அன்பே அன்பின் அன்பே என்பை உருக்கி நின்றால் கூட அன்பைக் காட்டும் அன்பே அன்பால் உன்பால் இணைந்தேன் அன்பே அதனால் என்னுள் உயர்ந்தேன் நானே!! ஆறுதல் தரும் ஆருயிர் நீயே ஆறாய் என்னுள் பாயும் தமிழே ஆரிருள் நீக்கிட என்னுள் வந்தாய் செல்லம்! ஆறுதல் என்றும் உன் திருமடியே! இடிகள் கூடத்தாங்கும் இதயம் பழிகள் தாங்க முடியாப்பொழுதில் இன்னிசை தந்து இன் தமிழ் தந்து இன்னல் போக்கி இன்பம் தந்து இணைத்துக்கொள்ளும் இன்னுயிரே இசைந்தே நிறைந்தேன் உந்தன் மடியே!!. ஈட்டி போல குத்தும் வார்த்தைகள் கேட்டதும் உடனே வாடிவிடுவேன்!! ஈர்த்தாய் உன்பால் இணையில்லாத் தமிழால் ஈரம் உள்ள நெஞ்சைக் கண்டேன்…ஈரேழுலுகமும் வாழ்த்தவேண்டும் ஈடில்லா உறவே உனைச் சேர்ந்திட வேண்டும…

    • 8 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.