கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தேநீர் கவிதை: அம்மாவின் கைராட்டை ஓவியம்: முத்து சிம்னி விளக்கொளியில் இரவும் பகலுமாய் அம்மா சுற்றிய கைராட்டை உறங்கவிடாமல் சுற்றிக் கொண்டேயிருக்கிறது என் கவிதைகளில். அறுந்து புனைந்த நூல்கண்டுகளில் முடிச்சு முடிச்சாய் அவிழ்த்தெறிய முடியாத அவள் ஞாபகங்கள். தனக்கு மட்டும் கேட்கும்படி அவள் பாடிக்கொண்டே நூற்றுக் கொண்டிருந்த பொழுதுகள், சோடி முடிந்த நாட்கள் எல்லாத் திசைகளில் இருந்தும் எதிரொலிக்கிறது எனக்குள். எவருக்கும் தெரியாமல் அவள் அழுத கண்ணீரின் …
-
- 0 replies
- 1k views
-
-
மாவீரன் திலீபன் பாரதத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உண்ணவிரதமிருந்து தன் வாழ்வை உகுத்த 30 ஆவது ஆண்டு நினைவு அனுட்டிக்கப்படுகிறது. மாவீரன் திலிபன் உண்ணா நோன்பிருந்து தன வாழ்வை உகுத்து சில மாதங்களுள் அன்னை பூபதியும் காந்தீய அறவழியில் தன் சாத்வீகப் போரைத்தொடர்ந்து ஒரு பயனும் கிட்டாமல் இறந்தார்.அவர்களிருவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை கீழே. (குறிப்பு- இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் அரசின் உதவியோடு வேற்றினத்தவர்கள் குடியேற்றப்பட்டதைத் தடுக்குமாறு கூறியே உண்ணவிரதம் பிரதானமாகச் செய்யப்பட்டது). திலீபனின் உண்ணா விரதம் தீயிலுடலை எரிக்கவா - கொடுந் தேளெனைக் கொட்டச் சிரிக்கவா காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன் கண்களைக் குத்திக் …
-
- 0 replies
- 751 views
-
-
தேனீர் கவிதைகள்: தொலைந்து போன நாட்கள் ஓவியம்: வெங்கி எப்படி இழந்தோம் என்பது தெரியாமலேயே தொலைந்து போய்விட்டன அந்த இனிய நாட்கள். கணக்கன் தோட்டத்து உப்புநீரில் குளித்தால் மேனி கருக்குமென்ற அம்மாவின் அதட்டலுக்கு அஞ்சி வியாபாரி தோட்டத்து நன்னீர் கிணறு அதிர குதித்தாடிய ஈர நாட்கள்... ஓடைநீர் ஊற்றில் சிக்கிய உறுமீனுக்காய்த் துள்ளி விலாங்கு மீன் வேட்டைக்காரனாய்ப் பீற்றிக்கொண்ட நாட்கள்... கவட்டைக் கொம்பொடிய நுங்கு மட்டை வண்டியு…
-
- 0 replies
- 556 views
-
-
அனிதாவை எரித்த நெருப்பு! - கவிதை மனுஷ்ய புத்திரன் - படம்: ஜெ.வேங்கடராஜ் நீதிகேட்கும் பயணத்தில் மற்றவர்களுக்கு என்ன நடந்ததோ அதுதான் அனிதாவுக்கும் நடந்தது நீண்ட காயம்பட்ட இரவுகளுக்குப் பின் கழுத்து அறுபட்ட பறவையாக பாதி திறந்த கண்களுடன் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறாள் அனிதா ஒரு மூட்டை தூக்குபவரின் மகளாக இருந்தாள் தங்கள் மேல் சுமத்தப்பட்ட வரலாற்றுச் சுமையை இறக்கிவைக்க விரும்பினாள் நூற்றாண்டுகளாக மூட்டை தூக்குபவர்கள் தங்கள் விதியின் சுமையினால் முதுகு வளைந்தவர்களாக இருந்தார்கள் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் முதுகு வளைந்தே பிறந்தார்கள் அவர்கள் எப்போதும் ஒரு கடைமட்ட வேலையின் நுகத்தடியில் பிணைக்கப்பட்ட…
-
- 0 replies
- 585 views
-
-
நாம் ஆயிரம் எழுதலாம். ஆனாலும் ஒரு கவிஞர் எழுதுவது போல் வருமா? கவிஞர் பழனி பாரதி புதிய இந்தியா என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கவிதை மோடியின் டிரவுசரைக் கழட்டுகிறது.. விவசாயிகளுக்கு வாய்க்கரிசி போடுவதுதான் புதிய இந்தியா நெசவாளர்களுக்கு சவத்துணி நெய்வதுதான் புதிய இந்தியா சில்லறை வணிகர்களுக்கு நெற்றிக்காசு வைப்பதுதான் புதிய இந்தியா மாட்டுக்கறி உண்பவரை கொன்று கொன்று மனிதக்கறி உண்பதுதான் புதிய இந்தியா இல்லாதவனின் கோவணத்தை பிடுங்கி இருக்கிறவனுக்கு கம்பளம் விரிப்பதுதான் பு…
-
- 3 replies
- 2.8k views
-
-
கள்ளத்தோணி இம்முறையும் குழந்தையை நாங்கள்தான் கொன்றோம் ஏனெனில் அவனுக்கென்று எம்மிடம் எதுவுமில்லை மூன்று வயதுச் சிறுவனொருவனுக்கு ஆழ்கடலில் என்ன வேலையென நீங்கள் கேட்கக்கூடும்? அவன் தன் தந்தையைச் தேடிச்சென்றான் தந்தை எதற்காகச் சென்றார்? யாருக்கும் இங்கு ஒன்றுமில்லையே அதனால் அக்குழந்தையை நாம்தான் பேர்த் நகருக்குச் செல்லுமாறு துரத்தினோம் தந்தைக்கு கொடுப்பற்காக நெடுநாளாக வைத்திருந்த முத்தங்களைத் தவிர அவன் எதையும் எடுத்துச்செல்வில்லை கடலில் இறங்கிய பொழுது முன்னால் எதிர்கரையும் மரணமும் மிதந்தது எனினும் அவன் சென்றான் ஏனெனில் அவனுக்கென்று நிலம்தான் இல்லையே …
-
- 0 replies
- 438 views
-
-
கல்லறைகளைத் தின்னும் பேய்கள் அல்ல நாங்கள்! செத்தவன் மேல் வன்மம் தீர்க்கும் நாய்கள் அல்லவே நாங்கள்! கல்லறைகளை கிண்டும் பன்றிகள் அல்லவே நாங்கள்! கற்பை தின்றதும்... கழுத்தை வெட்டியதும்.... சுட்டுக்கொன்றதும்.... குழந்தையை பிய்த்து எறிந்ததும்... ஆசுப்பத்திரியில் அடிச்சுக்கொன்றதும்.. "புள்டோசரால்" ஏத்திக்கொண்டதும்... நீங்கள் மறந்திருப்பியள் நாங்கள் மறக்கவில்லை! அடிச்ச அடியின் தழும்புகள் மாறவில்லை. வலிச்ச வலிகளும் மறக்கவும் முடியவில்லை! நாங்கள் கல்லறை தின்னும் பேய்கள் அல்ல! கல்லறைகள் மீது போர்தொடுக்கும் மோடையர்களும் அல்லர்! உங்கள் கல்லறைகள் எங்கள் மண்ணில் பத்திரமாகவே இருந்தது! இனியும் இருக்கும்! …
-
- 0 replies
- 455 views
-
-
நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்? காலியில் எங்கள் கழுத்து வெட்டப்பட்ட பொழுது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! மூதூரில் சிறுமிகளை வன்புணர்வு குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தினேர்கள் நீங்கள் தமிழர் இல்லை -முஸ்லிம்கள். கொழும்பில் குற்றுயிரும் குலையுயிருமாய் நாம் எரிக்கப்பட்ட பொழுது நீங்கள் வாய்புதைத்து பேசா மடந்தைகளாய் இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! அடங்கிக் கிடந்த நாங்கள் ஆயுதம் ஏந்திக் களம் புகுந்த பொழுது உங்களில் எல்லோரும் எங்களுக்குக் கைகொடுக்க வரவில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! ஆனால…
-
- 2 replies
- 1.8k views
-
-
எல்லாமே ... கடந்துபோகும் .... நீ மட்டும் ... விதிவிலக்கா ....? ஆயிரம் காலத்து .... பயிர் -திருமணம் .... காதலின் ஆயிரம் .... நினைவுகளை .... கொன்று நிறைவேறும் ...!!! வாழ்க்கை ஒரு .... நாடக மேடை .... காதலர் .... விட்டில் பூச்சிகள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 A
-
- 70 replies
- 10.9k views
-
-
உனைக் காணாத கணங்களில் காதல் எண்ணம் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடுகிறது பெருக்கெடுத்து ஓடும் உன் எண்ணச் சுமைகளின் திண்ணம் தாளாமல் தவித்துப் போகிறேன் திறன்பேசியில் குறுஞ்செய்தி தேடி நொடிக்குகொருமுறை நெருடுகிறேன் குறுஞ்செய்தி காணாது குன்றிப் போகிறேன்... அருகலையில் ஐயம் கொண்டு திசைவியை திருகிப் பார்க்கிறேன்.. என் கனவுக் கூட்டங்களின் பிறப்பிடமே அவற்றின் இருப்பிடமே….!! வீசும் தென்றலும் விசும்பின் சாரலும் உன் நினைவுகளை அள்ளித் தெளிக்கிறது!! ஆதவனின் கதிரொளிகளும் உன் எண்ணங்களால் சுட்டு விட்டுச் செல்கிறது !! என் கனவுகளை நீயே பிரசவிக்கிறாய் அவற்றை போற்றுகிறாய் அழிக்கவும் செய்கிறாய்..!! ஐம்பூதங்களும் என் வேட்கை அறியும் அர…
-
- 5 replies
- 866 views
-
-
நன்றி முகநூல். நன்றி முகநூல். (படத்தில் அழுத்தி.. பெரிதாக்கியும் வாசிக்கலாம்.)
-
- 0 replies
- 2k views
-
-
நீ எதற்காகப் பயப்படுகிறாய் இரைச்சலுக்கா இல்லையேல் அமைதியான பொழுதுகளுக்கா எதைத் தவிர்க்க விரும்புகிறாய் தனிமையா அன்றேல் அதன் கடினத்தையா உன் அயலில் யாராவது குழந்தை புன்னகைத்தாலும் வாணொலி காதலைப்பாடினாலும் உன் கண்கள் கசிவது ஏன். நீ அலைகளாலேயே தொடர்புற மறுத்த, ஆழத்திலுள்ள தண்ணீர். நீ யாருமே அணுக மறுந்துபோன மலை. எனக்கு நன்றாக உன்னைத் தெரியும் நீ கடினமான டைட்டானியத்தால் செய்யப்பட்ட மனதையுடையவன் இருந்தாலும் உன் அயலில் யாராவது குழந்தை புன்னகைதால் உன் கண்கள் கசிவது ஏன். எனக்குப் புரியும் மொழியையும் சொற்களையும் தெரிவுசெய்து, என்னுடன் உரத்தகுரலில் பேசு எதைக்கூறுகிறாயோ அதையெல்லாம் நான் ஒரு கவிதையில் அடக்குகிறேன் …
-
- 0 replies
- 1.8k views
-
-
வெந்நிப் பழசு கவிதை: தமிழச்சி தங்கபாண்டியன் - ஓவியம்: ஸ்யாம் அப்பாவிற்கு வெந்நிப் பழசு பிடிக்கும். அம்மா அருகிருக்க முன்னிரவுகளில் வெந்நிப் பழசும் சின்ன வெங்காயமும் நிலவும் நட்சத்திரங்களுமாய் எங்களுக்குக் கதை சொல்லும். கண்ணோரங்கள் சுருங்கி விரிய ருசிப்பின் சுவையை உதடு கடத்தும் அப்பொழுதில், ஒதப்பழம்போல் அப்பா கனிந்திருப்பார். எச்சிலூறப் பார்க்கும் என்னோடு கட்டெறும்புகளும் காத்துக்கிடக்கும் முழு நிலவொன்றில் சிந்திவிட்ட ஒரு சுடு பருக்கை நினைவின் குளிரிடுக்கில் உறைந்து போனது சுருங்கி விரியும் ஓதப்பழக் கண்களாய் இந்த இரவில் உணவு மேசையில் தனியொருத்தியாய்த் தட்டெடுக்கிறேன். மதியத்தின் எச்சமாய்ச் சுருங்கியதொரு பரு…
-
- 1 reply
- 2k views
-
-
இருபத்தேழு ஆண்டு முன்னால் இதே போன்ற ஒரு நாளில் இருளிலே வெடிச் சத்தம் இஷாவின் பின் உலுக்கியது புலி நாய்கள் பூந்து புள்ளைகளையும் ஆட்களையும் பலியாக்கிப் போட்டாண்டா பாதையிலே அவலக் குரல். பக்கத்துப் பள்ளிக்கு பறந்து வந்த செய்து கேட்டு திக்கற்று ஓடினோம் விக்கித்துப் போனோம் அள்ளாஹ் அள்ளாஹ் என்று அடங்கும் உயிரோடு பிள்ளைகள் துடி துடிக்க.. உள்ளம் நொறுங்கியது இருண்ட பள்ளிக்குள் எங்கும் மரண ஓலம் கரண்டிக் கால் நனைய காட்டாறாய் ரத்தம் காயப் பட்டோரை கைகளால் தூக்கும் போதே சாய்கின்ற தலை கண்டு வாய் விட்டு அழுதோம். கலிமாவைச் சொல்லி கண்களை மூடி விட்டோம் புலி நாயைப் பிடித்து பொசுக்க வெறி கொண்டோம் நூற்றி சொச்சம…
-
- 0 replies
- 424 views
-
-
(Mohamed Nizous) தெருக்கள் எங்கும் செய்தி தீயாகிப் பரவியது குருக்கள் மடத்தில் கடத்திக் கொன்று போட்டான்களாம் விடுதலை என்ற பெயரில் தறுதலைக் கூட்டம் செய்த கொடூர பேயாட்டத்தில் குருக்கள் மடமும் ஒன்று வாப்பா வருவாரென்று வாசல்நின்ற குழந்தையிடம் பேச முடியாமல் தவித்து பிள்ளையின் தாய் அழுத நாள் அப்பாவி இவர்கள் என்று அறிந்தும் கொடியவர்கள் துப்பாக்கி முனையில் செய்த துரோகத்தின் நினைவு நாள் பொருட்களை கொள்ளையிட்டு பொதுமக்களை தள்ளிச் சென்று பொறுக்கிகள் போல சுட்டார் பொறுக்காது எவரின் மனமும் எத்தனை அழுகைகள் எத்தனை சாபங்கள் அத்தனையும் பலித்தன அப்புறம் நந்திக் களப்பில் அம்பலாந்துறையில் தேடி அகழ்ந்து பார்த்தால் தெரியும் …
-
- 3 replies
- 1k views
-
-
உயிரடங்கிய சிறு பறவை - நல்ல சமாரியனின் நாட்குறிப்பு - கவிதைகள் உயிரடங்கிய சிறு பறவை கவிதை: பாப்பனப்பட்டு வ.முருகன், ஓவியங்கள்: ரமணன் அதிகாலை நடைப்பயிற்சியில் நெடுஞ்சாலையோரம் காணக்கிடைத்தது விரைந்த வாகனம் மோதி விழுந்துகிடந்த சிறு பறவையொன்று. இதயம் படபடக்க இரு கைகளிலும் அதை ஏந்திக்கொண்டேன். அதற்காகவே காத்திருந்ததைப்போல் அடங்கிப்போனது அதன் உயிர். கனத்த மனதோடு கைவிரல்களால் மண்பறித்து போதுமான அளவில் அகழ்ந்தெடுத்த குழிக்குள் அதைப் புதைத்துவிட்டு வீடு திரும்பினேன். செந்நிறப் பிசுபிசுப்புப் போக கைகளை நீரால் அலசிய பின் மென்சோகத்தையும் நுண்வலியையும் கடந்து வரவென்று சிவப்பு மசிப் பேனாவால் கவிதையொன்றை எழுதி முட…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாயும் ஞாயும் - கவிதைகள் ஓவியங்கள்: ரமணன் பழைய முகப்படக்காரி தன் பழைய புகைப்படத்தை பீரோவுக்குள்ளிருந்து கண்டெடுத்தவள் புதையுண்ட இளமை கிடைத்தவளாய் உற்றுப் பார்க்கிறாள். இப்போதில்லாத நீண்ட தலைமுடியின் இரட்டை ஜடைப் பின்னலை விரலால் தடவிப்பார்க்கிறாள். தொலைத்ததற்காய் அப்பாவிடம் அடிவாங்கிக்கொடுத்த அசையாதிருக்கும் வலதுகாது ஜிமிக்கியை விரலால் சுண்டிவிட்டுச் சிரித்துக்கொள்கிறாள். கடன்வாங்கி அணிந்திருந்த தோழியின் நீலநிறத் தாவணியில் நட்பின் வாசத்தை நுகர்கிறாள். `ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற புகைப்படக்காரன் தவறவிட்டப் புன்னகையை நினைவூட்டிக்கொள்கிறாள். அழுக்கேறிய தாலிக்கயிறு உரசி உண்டான கருத்தத் தழும்புகள் அறியா கழுத்தின…
-
- 0 replies
- 3.3k views
-
-
A POEM WRITTEN IN கடற்புறம் - வ.ஐ.ச.ஜெயபாலன் . 1979ல் எனது யாழ்பாணம் பலகலைக்கழக நாட்களில் எழுதிய கவிதை. முதலில் பல்கலைகழக மாணவர் சங்க அறிவித்தல் பலகையில் ஒட்டப்பட்டது. பின்னர் பெருந்தோழர் டோமினிக் ஜீவா அவர்கள் தனது மல்லிகை சஞ்சிகையில் பிரசுரித்தார். அதன்பின் பலதடவை மீழ் பிரசுரம் செய்யப்பட்டது. மலையகத்தைச் சேர்ந்த தோழி ஞானாம்பிகை ( gnana chitraranjan ) இலங்கை உயர்கல்வித் துறையில் பணியாற்றியபோது பாடபுத்தகத்தில் இக்கவிதை சேர்க்கபட்டதால் இலங்கை தமிழ் ஆசிரியர்கள் மாணவர்களிடையே பிரபலமானது. . இக்கவிதையை தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே.எஸ்.சுப்பிரமனியன் ஆங்கிலத்தில் மொழி பெயர்திருக்கிறார் யாரிடமாவது பிரதி இருந்தால் அனுப்பி உதவுமாறு கேட்…
-
- 1 reply
- 757 views
-
-
1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உயிர்த்தெழுந்த நாட்கள் -வ.ஐ.ச.ஜெயபாலன் அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம் துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல. மீண்டும் காற்றில் மண் வ…
-
- 6 replies
- 1.6k views
-
-
விலைமாது விடுத்த கோரிக்கை..! ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு. என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரகளும் உண்டு. சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதி பார்ப்பதில்லை. திருந்தி வாழ நான் நினைத்த போதும் என்னை தீண்டியவர்கள் யாரும் திரும்ப விட்டதில்லை. பத்திரிக்கையாளர்களே! விபச்சாரிகள் கைது என்றுதானே விற்பனையாகிறது.. விலங்கிடப்பட்ட ஆண்களின் விபரம் வெளியிடாது ஏன்...? பெண்களின் புனிதத்தை விட ஆண்களின் புனிதம் அவ்வளவு பெரிதா? காயிந்த வயிற்றுக்கு காட்டில் இரை தேடும் குருவியைப் போல் …
-
- 0 replies
- 3.6k views
-
-
கடவுளின் ஞாயிறு - கவிதை கவிதை: அ.வால்டர் ராபின்சன், ஓவியம்: ரமணன் ஞாயிறென்றும் பாராமல் இன்பாக்ஸில் தொடர்ச்சியாக வந்துவிழும் வேண்டுதல்களால் எரிச்சலுற்ற கடவுள் தனது கைப்பேசியை எதிர்ச்சுவற்றில் ஓங்கி அடிக்கிறார் இதுவரை நிறைவேற்றிய வேண்டுதல்களுக்காக ஒருமுறைகூட நன்றியை ருசித்ததில்லையென வருத்தம் கொள்கிறார் தான் மிகக் கடுமையான மனஅழுத்தத்தில் இருப்பதாகச் சிதறிக்கிடக்கும் கைப்பேசிச் சில்லுகளைப் பார்த்து ஆவேசமாகக் கத்துகிறார் ஆசுவாசப்படுத்திக்கொள்ள மனிதக்கூட்டத்தில் ஒளிந்துகொள்வது சரியெனப்படுகிறது கடவுளுக்கு பூமிக்குத் திரும்ப நினைத்த மறுகணம் ஒரு புறவழிச்சாலையின் திருப்பத்தில் இறங்கிக் கொள்கிறார் வெயில் சுடும் உடலி…
-
- 1 reply
- 1.9k views
-
-
அப்படிப் பார்க்காதே மகளே! - கவிதை திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் - ஓவியங்கள்: ரமணன் நுரைத்தப் பழங்கஞ்சியாய்ப் புளிப்பேறிய வயோதிகத்தின் இரவு ஒரு பாராங்கல்லாய் மார்மீது படுத்துறங்குகிறது எப்படி இறங்கச் சொல்ல... எப்படி இறக்கிவிட? பாதரசம்போன கண்ணாடி எனது முகத்தைக் காட்டி இன்றோடு இருபது வருடங்கள் ஆகிவிட்டன மகளே. கறையான் அரித்த நமது குடும்பப் புகைப்படத்திலும் நீ பார்த்திருக்கக்கூடும் துருவேறிய எனது மிருகக் கண்களை மட்டும். `இடுப்புல ஆறு மாசம் வயித்துல மூணு மாசம் பப்பாளி, எள்ளு, அன்னாசிக்கு தப்பித் தளச்சவடி நீ' என்ற கதையைக் கேட்கும்போது என்னென்ன நினைத்திருப்பாய் மகளே? அப்படி என் வயிற்றைப் பார்க்காதே மயானத்துப் புழுக்க…
-
- 1 reply
- 933 views
-
-
மாய வித்தைக்காரனின் புறாக்கள் - கவிதைகள் கவிதை: சுகுணா திவாகர், ஓவியம்: ரமணன் மாய வித்தைக்காரனின் புறாக்கள் அந்த மேஜிக் நிபுணர் எப்போதும் வெள்ளைக் கைக்குட்டையைத் தன் தொப்பிக்குள் நுழைத்து புறாக்களை வெளியே எடுப்பார். தாங்கள் பிறந்ததே இந்தத் தொப்பிக்குள்தான் என்று நம்ப ஆரம்பித்தன புறாக்கள். கொறித்துக்கொண்டிருந்த தானியங்களில் எல்லாம் கீறிக்கீறி மேஜிக் நிபுணரின் பெயரை எழுதிவைத்தன. பிறகு அவர் கைவித்தை அனைத்திலும் ஊடாடிப் பறந்து திரிந்தன. அழகான யுவதியை மேஜையில் கிடத்தி கத்தியால் இரண்டு துண்டாக்கிப் பின் ஒன்றாக்கவேண்டும். ஆனால், அவள் வயிற்றிலிருந்து சிறகடித்தபடி புறாக்கள் வந்தபோது மேஜிக் நிபுணரும் மலைத்துதான் போனார். காற்றிலிருந்த…
-
- 0 replies
- 834 views
-
-
வரலாறு காடுகளை பூக்க வைக்கும். HISTORY WILL BLOOM FOREST. . பாடா அஞ்சலி வ.ஐ.ச.ஜெயபாலன். . உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டு மலைக் காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட. . வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... . இந்த உலகிலும் பெரிய இடுகாடெது? பல்லாயிரம் சாம்ராட்சியங…
-
- 2 replies
- 863 views
-
-
அப்பா என் அப்பா ஏழை தான்! ஆனாலும் என்னை எப்போதும் ஏழையாக வளர்க்க நினைத்தது இல்லை. என் தாய் என்னை இடுப்பில் வைத்திருக்கும் பொழது தனக்கு தனக்கு இணையாகத்தான் தந்தை யை காட்டினாள். ஆனால் என்தந்தையோ என்னை தோளில் ஏற்றித் தான் கான இயலாத ஒன்றையும் காணவைக்கிறார். அப்பா என்னும் பொக்கிசம் நாம் அருகில் இருக்கும் போது நமக்கு தெரிவதில்லை, தாயை இழக்கும்பாசத்தையும் . தந்தை இழக்கும் போது பாதுகாப்பையும் இழந்து விடுகின்றோம் . மரமாய் வளர்ந்து கிளை பரப்ப உரமாய் இருந்தவர் தந்தை, எந்த உறவு பக்கத்தில் இருந்து எதைசொன்னாலூம். அப்பாவின் ஒரு வார்த்தைக்கு இடாகுமா? அப்பா எப்பவும் எங்களுக்கு காவல் தெய்வம். முடிந்த வரை எமக…
-
- 4 replies
- 2.7k views
-