கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கருக்கலைப்பு மூலம் கொல்லப்பட்ட சிசு. உயிராய் முளைத்த அவர் காதலில்... பூவாய் மலர்ந்தேன் செடியாகும் கனவோடு..! கருவறை தந்தவள் கருணையே இன்றி பாதியில் பறித்தாளே சாய்த்தாளே என்னுயிர்.! கண்ணீர் கூட காணிக்கை இல்லை உரிமைகள் கூட எழுத்தில் இல்லை கருக்கலைப்பென்று வாழ்வை அழிப்பவரே ஒரு கணம்... எனக்காய் அழுவீரோ..??! இல்லை தொலைந்தது தரித்திரம் சரித்திரம் படைபீரோ..??! நீரும் ஓர் நாள் கருவோடு இருந்தீர் மறந்தீரே துணிந்தீரே பாதகரே..! கண நேர சுகத்துக்காய் ஏனென்னை பலியிட்டீர்... சிதைக்கின்றீர் தளிருடலை..! பிறந்ததும் கொஞ்சும் உறவு பிறக்க முன் பாடையில் போவது பாவமில்லையோ..??! தளைக்க மானுடம்..!!! கரு…
-
- 11 replies
- 5.3k views
-
-
தொலைந்து போன சுயங்கள் அங்கீகாரமே தேடலென்றாகி, மாற்றார் மதிப்பீட்டில் சுயத்தை அளப்பதால், மற்றவர் கணிப்பே தீர்ப்பென்றாகித், தொலைந்து போனது எத்தனை சுயங்கள்? அம்மா மகிழ வைத்தியராகி, அயலார் மதிக்க பட்டங்கள் அடுக்கி, மனையாள் மகிழ ஊதியம் கூட்டி, மனதுக்குள் புழுங்கி யாருக்கு லாபம்? "பத்திஞ்சி"யைப் பன்னிரண்டாக்கும், மின்னஞ்சல் விளம்பரம் மெய்யெண்டு நம்பி, இல்லாத காசைக் கடனாகப் புரட்டிக், களிம்பு தடவுவோர் உள்ளது எதனால்? சிலிக்கன் நிரப்பும் சில்லெடுப்புக்களும், "கன்னிமை"ப் பம்மாத்துச் சத்திர சிகிச்சையும், உதட்டுக்கும் மூக்கிற்கும் பிட்டத்துத் தசையிற்கும், வயிற்றிற்கும் தோலிற்கும் அறுப்புக்கள் எதனால்? நாலு பேரிற்கு நாலாயிரம் சதுரஅடி, …
-
- 19 replies
- 2.9k views
-
-
உறங்கிய காதல் பார்த்ததும் உன்மேல் பூத்தது காதல் என்னில் பழகாமலே ருசித்தேன் விலகியே நடந்தேன் விண்ணில் இருந்தே மண்ணில் இருக்குமுனை தொட நினைத்து நீட்டினேன் கைகளை முடியாமல் தவித்தேன் சிட்டாக மாறியுனை கட்டியணைக்க எண்ணி சட்டென வந்தேன் மண்மீது அருகிருந்தே உனை நான் அளந்தேன் பார்வைகளால் இதமாக இருந்த போதிலும் இமைகள் படபடத்தன பயத்தில் பூவான நான் காதலை இயம்ப புயலாக நீ மாறி எனை காயமாக்கி அனலான பார்வையால் எனை தகனம் செய்துவிடுவாய் என்று சொல்ல நினைத்த காதலை சொல்லாமலே புதைத்தேன் இன்றுதான் தெரிந்துகொண்டேன் அன்று நீயும் எனைபோலவே..... ம்ம்ம்ம்ம்...! உன்மீதான என் காதலும் என்மீதான உன் காதலும் உச்சரிக்கப்படாம…
-
- 20 replies
- 4k views
-
-
கார்த்திகைப் பூக்களின் யாத்திரை இத் தேவகுமாரர்களின் சீரான பாதம் பட்டு புதை குழிகள் கூடப் புதுப்பிறப்பெடுக்கும் இவர் சுவாச வெப்பங்கள் மோதும் திசையெங்கும் வீரவிடுதலையின் வேதங்கள் சொல்லும் ஆர்ப்பரித்துப் பொங்கி எழும் ஆழிமகள் கூட இவர் அக்கினிப் பார்வையிலே அரைவினாடி மூச்சடங்கும் வானத்துத் தேவதையும் இவ்வனதேவதைகளுக்கு தூவானமாய் வாழ்த்தினை தூவி வழியனுப்பும் பூவரசம் பூவும் இப் புனித யாத்திரைக்கு சாமரம் வீசிவிட்டு தனக்குள்ளே சிலிர்க்கும் இக் காவிய நாயகர்கள் கவிதை வரிகளுக்குள் ஜீரணிக்க முடியா திவ்விய பிரபந்தங்கள்
-
- 16 replies
- 2.7k views
-
-
கடற்புறம் காலமகள் மணலெடுத்து கோலமிட்ட கடற்புறத்தில் ஏழை மகள் ஒருத்தி. முன்னே கடல் விரியும் முது கடலின் பின்னாடி விண்ணோ தொடரும் விண்ணுக்கும் அப்பாலே விழி தொடர நிற்கின்றாள். தாழை மர வேலி, தள்ளி ஒரு சிறு குடிசை; சிறுகுடிசைக்குள்ளே தூங்கும் சிறு குழந்தை ஆழ்க்கடலில் ஆடுகின்ற தோணியிலே தாழம்பூ வாசம் தரைக் காற்று சுமந்து வரும். காற்று பெருங்காற்று காற்றோடு கும்மிருட்டு. கும்மிருட்டே குலைநடுங்கி கோசமிட்ட கடல் பெருக்கு. கல்லுவைத்த கோவிலெல்லாம் கைகூப்பி வரம் இரந்த அந்த இரவு அதற்குள் மறக்காது. திரை கடலை வென்று வந்தும் திரவியங்கள் கொண்டு வந்தும் இந்த சிறு குடிசை, இரண்டு பிடி சோறு, தோணி உடையான் தரும்பிச்சை என்கி…
-
- 14 replies
- 2.5k views
-
-
-------------------------------------- மீன்பாடும் தேன்நாடு வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு. எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது. காலமெல்லாம் இங்கே கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும் தெம்மாங்குபாட திசைகாணும் தாய் எருமை. திசைதோறும் புற்கள் முலைதொட்ட பூமியிலே கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும். காடெல்லாம் முல்லை கமழும் வசந்தத்தில் வயல்புறங்கள் தோறும் வட்டக்களரி எழும். வட்டக்களரியிலே வடமோடிக் கூத்தாடும் இளவட்டக்கண்கள் தென்றல்…
-
- 8 replies
- 2.2k views
-
-
கண்ணீரும் குருதியுமாய் ஈழம் ! செந்நீரின் மையெடுத்து நம் கண்ணீரின் கதையெழுதி புண்ணாகிப் போன நெஞ்சின் வலிகொண்டு கவிதை வரைந்தேன் அந்நாளில் நானும் குழந்தையாய் அம்மண்ணில் தவழ்ந்திருந்த ஆனந்தமான பொழுதுகள் அவை போன இடமெங்கே ? என் சொந்தங்கள் தூக்கமின்றி ஏக்கத்தில் வாழ்ந்திருக்கும் எண்ணத்தின் சுமை கொண்டு என் விழிகள் நிறையுதம்மா எரிகின்றது என் ஈழத் தேசமம்மா எண்ணை வார்க்க ஆயிரம் பேர் எவருமில்லை தீயணைக்க, அழுவதின்றி என் செய்வோம் ஆற்றாமையால் நாம் தவிப்போம். தவிக்கின்றார் தம்பி தங்கையர் தமிழர் என்னும் ஒர் காரணத்தால் தமைத் தாமே இழக்கின்றார் தமிழன்னை பாராளோ ? பதிலொன்று கூறாளோ ? சேறும் சகதியுமாய் நன்னிலங்கள் சீரழிந்து போவதுண்டு.…
-
- 1 reply
- 1k views
-
-
இவன் ஒரு சிவன் புலியாடை அணிந்தவன்! சூலம் சிவனது ஆயுதம் சுடுகலன் இவனது ஆயுதம் பூதகணங்கள் புடை சூழ வருபவன் சிவன் சேனைத் தலைவர்கள் தனைச் சூழ வருபவன் இவன்! நஞ்சுண்ட கண்டன் அவன் நஞ்சைக் கழுத்திலே கட்டிய வீரன் இவன்! சுடுகாடு சிவன் நடமாடும் வீடு பலநாடு இவன் புகழ்பாடும் பாரு! சிவன் பாத தொழ அறுபடும் பிறவித் தளை பிரபாகரன் பாதம் தொடர நமதாகும் நாளை விடுதலை!
-
- 3 replies
- 8.6k views
-
-
நிலா அக்காவின் கவிதைகள் நேக்கு மிகவும் பிடிக்கும் நேரம் கிடைக்கிற நேரம் பழையகளம் யாழ்களத்தில் போய் படித்தேன் அதில் பல கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன சோ அங்கே இருந்து தூக்கி கொண்டு வந்துட்டேன் ................நிலா அக்கா ஏசமாட்டீங்க தானே (அது தானே போட்சாச்சு பிறகு என்ன என்று கேட்கிற மாதிரி இருக்கு ) வெண்ணிலா அக்கா யாழ்களம் 2 யில் எழுதிய கவிதைகளிள் சில!! காத்திருக்கிறேன் வாழ்வின் தேடுதலுக்காக நகர்ந்த நாட்களில் என்னை நீதான் அடையாளப்படுத்தினாய் உன் மௌனத்தின் வேர்களில் பூத்திருக்கிறது என் காதல் பூ பனித்துளியை பேட்டி காணும் மேகங்கள் விண்மீனைப் பிடிக்கும் மூங்கில்களில் அவசரம்.. இப்படியான என் கனவுகளின் தொடர்ச…
-
- 5 replies
- 3.9k views
-
-
மாவீரர்கள் பற்றிய கவிதைகள் வேண்டும். யாழில் பல கவிஞர்கள் இருக்கிறார்கள். உங்களிடமிருந்து மாவீரர்களின் தியாகங்கள், சாதனைகள் பற்றிய கவிதைகளை எதிர்ப்பாக்கிறேன். வான்புலிகள்,கரும்புலிகள் பற்றிய கவிதைகளும் வேண்டும். வருகிற செவ்வாய்கிழமைக்கு முதல் வந்தால் நன்றாக இருக்கும்.
-
- 1 reply
- 1.3k views
-
-
காலநதியின் வேகமென்ன? பனிக்காலக் காலைப்பொழுது பகலவன் இல்லாமலேயே விடிந்தது வழக்கம்போல, இறக்கைகளற்ற கடிகாரப்பறவை சிறகடித்துப் பறக்க காலக் கண்ணாடியில் என் முகம் பார்க்க முயன்றேன் கண்ணுக்குள் கலைந்திட்ட பல நூறு கனவுகள் நினைவுத் திரையில் நிழற்படமாய் காட்சிகள் மணித்துளிக்குள் கூவின எத்தனையோ மனக்குயில்கள் அருகே'அம்மா"என்ற அழைப்பொலி பக்கத்தே பள்ளிச் சீருடையில் என் பருவ மகள் என் நினைவப் புத்தகத்தின் பக்கங்கள் படபடக்க பள்ளிச் சீருடையில் துள்ளும் இளமையுடன் நான் அந்த மின்சாரக் கனவை மெல்ல உதறிவிட்டு பக்கத்தில் நிற்கும் பதினாறு வயதுப் பருவப் பெண்ணை நோக்கினேன் ஓ....நாளை இவளும் என்னைப் போல..... வீதிக் கடவையில் விசிலடிக்கும் மின்ச…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஒப்பிலாது நீ உலவினை உலகிடை!- பாவலர். பரணன் குழந்தை யோவெனுஞ் சுபதமிழ்ச் செல்வனே குழைந்த தோவுடல் கோழையர் குண்டினால் விழுந்தை யோநிலம் வென்றிடப் போகையில் இழந்த மேமதி யென்செய்கு வாமினி ஒப்பி லாதுநீ யுலவினை யுலகிடை ஒப்பி யேற்கிலா நாட்டினர் கூடவுன் செப்பு வாயதன் சிரிப்பினா லொப்பியே எப்ப வுந்துணை யாகுவம் என்றரே! அண்ணன் பாலசிங் கத்தையி ழந்தபுண் இன்னும் ஆறவில் லையதற் குளேயுமே அன்ன ரோடுநீ கலந்துமே சூழவும் பின்னர் அங்குதான் பெயர்ந்துந டந்தையோ! அண்ணன் பாலாவின் அரசியல் வடிவமே கண்ணைப் பிசையவே கடந்துமேன் சென்றனை மண்ணிற் புதைந்துநீ மறுபடி யெழுவையோ? விண்ணிற் பாலாவிடம் வெற்றிவி ரிப்பையோ? முங்கி னாரவர் மூழ்கடித் தோமெனச் சிங்கள நாய்களும் சிர…
-
- 0 replies
- 1k views
-
-
கல்லறை காயாது - தணிகைச் செல்வன் சிரித்தபடியேதான் நீ சாவையும் சந்தித்திருப்பாய் என்பதில் சந்தேகமில்லை எமக்கு. சமர்க்கள வீச்சாயினும் சமாதானப் பேச்சாயினும் இரண்டிலும்- சலவை செய்த உன் சிரிப்பைச் சந்திக்க எதிரிகளே அஞ்சினார்கள். உன்-புன்னகையின் வெண்ணிறமே புரட்சியின் விடிவெள்ளியாய்த் தோன்றியது புலித் தோழர்களுக்கு அந்தப் - புன்னகைக்குள்ளே ஒரு புரட்சியே பதுங்கியிருப்பதாகத் தோன்றியது பகைவர்களுக்கு. ஞாலச் சிறப்புக்கு வான்படையை ஊக்கிய உன் ஞானச் சிரிப்புக்கு நடுங்கினான் மகிந்தன். கருவிப் போரில் யுத்த தந்திரத்யுைம் அறிவுப் போரில் ராஜதந்திரத்தையும் கற்றுச் செரித்த களகர்த்தனே, எதிரிகள் உன்னைக் குறிவைக்கக் காரணம் உன் பெயரின…
-
- 0 replies
- 927 views
-
-
தேசத்தின் புன்னகை - இன்குலாப் மறுகரையில் தேற்றுதலின் தணியாத விசும்பல் கேட்கும் மரத்துப் போகாத செவிகளில். மாவீரர் விரும்பாத ஒப்பாரி காலம் காலமாய் மக்களின் மனசிலிருக்கிறது. இன்றென் சொல்லும் கண்ணீரில் நனையட்டும்! பகைநடந்ததற்குச் சாட்சியங்களான கருகிய பனை தென்னை ஊடாக நாங்களும் நடந்திருந்தோம். சிதைந்து கிடந்த டாங்கியும் சிதறிக் கிடந்த ராக்கெட் கூடுளும் பிணமாய் மிதக்கும் எதிரியின் கப்பலும் முடிந்த யுத்தத்தின் மிச்சங்களாகுமோ? கண்ணி வெடிகளுக்குப் பக்கத்திலேயே புதைந்து கிடக்கும் விதைகள் பசுமையாய் முளைவிடும் என்ற எல்லோருக்குமான எனது நம்பிக்கையும் துளிர்க்குமோ? கருகுமோ? உப்பு மிளகாய் அரிசி மருந்துகூட ஆயுதமாய்த் தடைப்பட்ட …
-
- 0 replies
- 983 views
-
-
இதயம் மட்டும் பேசட்டும் இசை மழைதனில் இன்பமாய் நனைந்து பசை கொண்ட மனிதருடன் பாங்காய் அசைந்து ஆடும் ஆட்டத்தின் உச்சம் இசைந்திடும் மனதின் ஆதாரம் என்றிருந்தேன் இதழுடன் இதழ் ஒன்றாய் இணைந்து பின்னிக் கொள்வதில் அந்த இன்பமான பிணைப்பே இணைப்பாய் அதுவே பேரின்பம் தரும் போதை என்றிருந்தேன் புண்பட்ட மனம் இங்கே நிதம் நிதம் புண்ணாகிப் போனதால் நாளாருபொழுதாய் புகைவிட்டு ஆற்றுகின்றேன் ஆஹா இதுவே புத்துயிர் தரும் டொனிக் என்றிருந்தேன் இத்தனை ஆனந்தம் எனக்குள்ளிருந்து இதுவே வாழ்வின் சொர்க்கம் என்றே நனைந்தவேளை இடப்பெயர்வு இன்னல்கள் சுமந்திடும் இதயங்களின் கதை கேட்டுணர்ந்தபோது இதயத்து சுகங்கள் இமைவழி மறைந்தோடிட இடையறா பங்களிப்பு இரட்டிப்ப…
-
- 9 replies
- 2.1k views
-
-
காலம் யார் பற்றியும் கவலைப் படாமல் தன் சுழற்சியில் கவனமாய் இருக்கிறது. வருடம் தோறும் பல நூறு பண்டிகைகள் ஒவ்வொரு இனச் சமூகத்திற்கும் சொந்தமாக இருக்க... நம்மவரும் பல பண்டிகைகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது வழமை. தீபாவளி தமிழர் பண்டிகையா என்கின்ற வாதத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு அது தருகின்ற செய்தியோடு ஐக்கியம் ஆவது நன்மை பயக்கும். அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் அதை அழிக்கக் கூடிய வல்லமையோடு சக்தி ஒன்று தோன்றும். அதன் பின்னர் ஒளி மயமான வாழ்வு கிடைக்கும்... இன்றைய காலத்தில் தீபாவளி தருகின்ற செய்தி அர்த்தம் நிறைந்தது. ஏதேனும் ஒளி பிறக்குமா? எதிர்பார்ப்புடன்... இக்கவிதை... பாவம் படர்ந்த வாழ்வது தொலைந்த தீபாவளி! தீண்டும் த…
-
- 4 replies
- 3.8k views
-
-
செல்வண்ணை! உன் பெயரை உச்சரித்துவிட்டு கண் கலங்குவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சிரிக்கும் புலி நீ சீறும் சினத்தை சின்னச் சிரிப்புக்குள் அடக்கிவைத்திருக்கும் பேராற்றல் உனக்கு. நெருப்பு வானத்தில் ஒரு குளிர் நிலவு நீ உனக்குள்ளும் நெருப்பாறுகள் ஆனாலும் அதை பக்குவப்படுத்தி பயன்படுத்தத் தெரிந்தவன். பத்திரிகைகளுக்கூடாகத்தான் உன்னோடு பழகியிருக்கிறேன். தீயாக தினேசாக சுழன்றடித்த சூறாவளியாய் உன்னோடு பழக்கமில்லையென்றாலும் உன் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் பனிபூசிய அனல்கள் பறக்கக் காண்பேன். ஒரு தவறிப் பிறந்தவனின் காட்டிக்கொடுப்புக்கு தமிழன் இழந்து நிற்பது "ஒரு பிரிகேடியரை". எதிரியின் எத்தனை பிரிகேடியர்களை கொன்றொழி்த்தாலும் ஈடாகுமா உ…
-
- 4 replies
- 1.8k views
-
-
இலக்கியமே நீ தூங்கு இழப்புக்கள் எமக்குப் புதிதல்ல இருந்தும் இம் மாவீரனின் இழப்பறிந்து ஏனோ? ஏங்கோ? வலிக்கிறதே ஏன் என்று தெரிகிறதா? மத்தாப் பூவாக மனங்களிலே மலர்ந்திருக்கும் சித்திரச் சிரிப்பொன்று நித்திரையாகியதா? வரலாற்றில் நிலைத்திட்ட வண்ணத் தமிழ் காவியமே மரணத்தை வென்றிட்ட மாவீர மன்னவனே சித்தமெல்லாம் தமிழீழக் கனவோடு உறவாடி வித்தாகி விதையான சத்தியனே நீ தூங்கு காற்றைவிட வேகமாய் கடுகிவரும் வேகமெங்கே? களத்தினில் புயலாக புகுந்திடும் தீரமெங்கே? சீற்றமுறும் சிறுத்தையாய் சினந்தெழும் வீரமெங்கே? மாபெரும் சபைகளில தோள் சேர்ந்த மாலையெங்கே? இலட்சியத்தின் வேட்கையுடன் இறுதிவரை போராடும் இலக்கணங்கள் இங்குண்டு இலக்கியமே …
-
- 7 replies
- 1.7k views
-
-
புன்னகை மழையே நீ எங்கே பொன் நகைகள் கொண்டாடும் புன்னகைக்கு புலிப்படையில் ஓர் அடையாளம்! தமிழ் ஈழத்தின் தரை மெழுகும் நிலவாய்... புலம் பெயர்ந்தோர் விழிகளிலும் தவழ்ந்து வந்த பூந்தென்றலாய்... எங்கள் இதயமெங்கும் பூத்துக் குலுங்கிய பூந்தோட்டமே! நீ சென்ற இடமெல்லாம் புன்னகை மழை பொழிந்து உன் தமிழால் உலகத் தமிழை உயர்த்தினாய்! எத்தனை செல்வங்கள் தமிழில் இருந்தாலும் தலைவனுக்கெனவே தனித்துவமாய் வாய்த்த தமிழ்ச்செல்வா எங்கே போனாய்? இதயத்தில் வலிகள் பெருகி கண்ணீர் வழிகிறது. இமயத்தின் இழப்பை எண்ணி இதயம் கனக்கின்றது.! அண்ணா உந்தன் புன்னகை எமக்கு வேண்டும் தமிழீழம் பூக்கும் நேரத்தில் புன்னகை சிந்…
-
- 4 replies
- 2k views
-
-
போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய புன்னகை மன்னவனே! போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய புன்னகை மன்னவனே! தூர் முட்டும் தீயின் ஓரத்தில் வீசிய சில்லென்ற நதிக்காற்றே! ஆர் சுற்றம் பிரித்தறியா ஈழத்தின் உறவான இன்முகத் தமிழ் எழிலே! பார் சுற்றி தாய் முற்றக் கதை சொல்லிப் பயணித்த பண்புநிறை தமிழ்செல்வா! உலகின்....... தீர்வற்ற நெடுங்கதைக்கு தீர்வெழுதி முடிக்கவா, நீ தூங்கிப் போய்விட்டாய்? ஊர் முற்றம் அணைத்த இதமான அணைப்பிலா, நீ உறங்கி ஓய்வெடுத்தாய்? நாரோடு மலர் தொடுத்து நாடு சூடும் வேளையிலா, நயனத்தை மூடிக் கொண்டாய்? - எங்கள் நாயகனின் தோளான நல்லதொரு தோழனே! நம்மைவிட்டு ஏன் பிரிந்தாய்? யார் குற்றம் செய்தோம்? விழிநீர் முட்டிக் காயாத விதி வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
காலை வந்தது காபி வந்தது நா இனிக்கவில்லை! சேதி கேட்டதும் உள்ளம் உடைந்தது யாருக்கும் புரியவில்லை! ஆதி முதல் தலைவன் கூட இருந்த ஒருவன் பாதி வழியில் போவான் என்று யார் அறிவான்? பாவி ஒருவன் செய்த செயல் ஆவி துடிக்க வைத்ததம்மா! சிரிக்கின்ற ஒரு புலி எரிகின்ற தீயில் வேகுதம்மா! தெரிகின்ற ஈழத்துவாசல் பார்க்குமுன் விரிகின்ற சிரிப்படக்கி பறந்தாயே செல்வா...! முதலில் ஒரு சிங்கம் போனது இப்போது ஒரு புலியும் போகுது வலியும் வஞ்சகமும் எம் ஈழப்பாதை எங்கும் விரிந்தே கிடக்குது! தமிழ்ச் செல்வா... வலிக்குது நெஞ்சம்... கோபத்தின் கொந்தளிப்பில் எரியுது உள்ளம்... ஏய்! பகையே அடாது செய்தாய் விடா…
-
- 0 replies
- 994 views
-
-
அஞ்சலிப் பரணி - வ.ஐ.ச.ஜெயபாலன் எவர்க்கும் பணியா வன்னி பிள்ளைகளைப் பறிகொடுத்து விம்மி அழுகிறது. எதிரிகள் அறிக எங்கள் யானைக் காடு சிந்துவது கண்ணீர் அல்ல மதநீர். விழு ஞாயிறாய் பண்டார வன்னியனும் தோழர்களும் கற்சிலை மடுவில் சிந்திய குருதி செங்காந்தள் மலராய் உயிர்த் தெளுகிற மண்ணில் எங்கள் விடிவெள்ளிப் புன்னகையை புதைத்து வருகின்றோம். புலருகிற ஈழத்தின் போர்ப்பரணி பாடுதற்க்கு. எங்கள் மூன்று அம்மன்களும் பதினெட்டுக் காதவராயன்களும் முனியப்பர்களும் எங்கே ? அசுரப்பறவைகளின் சிறகில் வருவதாய் வாகைகள் பூத்துக் காத்திருந்தேனே என வன்னிக் காடு வாய்விட்டு அரற்றுது. போராளிகளுக்காக தேன் வாசனையை வாகை மலர் அரும்புகளில் பொதிந்து காத்த…
-
- 22 replies
- 4.9k views
-
-
தமிழ்ச்செல்வனையும் போராளிகளை இழந்த துயர்ப் பொழுதில் ஈழத் தமிழருக்கு ஆறுதலான கலைஞருக்கு நன்றி. கலைஞருக்கு வாழ்த்து -வ.ஐ.ச.ஜெயபாலன் காலத்தில் சோழனுக்கு நீர் ஏந்திக் கல்லணை நிழலேந்திக் கோவில். சேரனுக்கோ சிலம்பேந்தி வந்த தமிழிச்சி. பாண்டடியற்கோ சங்கம். அடையா நெடுங்கதவும் ஆஞ்சல் எனும் சொல்லுமாய் எம் புகலான தமிழகத்தின் தலைவனுக்கு? கலைஞா உனக்கு காலச் சுவடாக விலங்கொடித்தால் ஈழம் இருக்கும் ஐயா நீ உலகுள்ள வரை வாழ்வாய் visjayapalan@gmail.com
-
- 22 replies
- 7.8k views
-
-
கத்திக் கதறுது மனது-நீ இன்னும் இருக்கிறாய் என்று புழுதி புரண்டழுது. தெருவெல்லாம் இழுத்து வந்தேன் - என் இதயத்தை தேம்பியழும் அதை எங்கு மறைக்க ? அண்ணா அவசரப்பட்டயோ - நாம் அங்கீகாரம் உலகில்லல்லவா கேட்டோம் - நீ விண்ணிற்கு சென்றதேன் ? இனி அந்தச்சிரிப்பை எங்கு நாம் தேட ? உன் விழியில்லாத் தேசம் இருண்டல்லவா கிடக்கு ! தலைவருக்கு தோள் கொடுக்க யாரைத் தேடுவோம் ? நீயில்லாத செய்தி - வந்திருக்கவே வேண்டாம் !
-
- 1 reply
- 1.2k views
-
-
தள்ளாத வயதில் ஊண்டும் தடியை - முதுமை இல்லாத வயதில் ஊண்டியவன். தள்ளாடி சாகத் துடிப்போர் உலகில் - களத்தில் மல்லாடி சாகத் துணிந்தவன். அமைதி விளக்கு அணைந்த உலகில் - அமைதி காண நடந்த வீரன். குண்டு விழாத தேசம் காண - விமான குண்டேந்தி விழுந்த வேங்கை. நால்வர் வேண்டும் தூக்கி செல்ல - இவனோ ஐவரோடு சேர்ந்து நடந்தவன். காந்திக்குப் பின் கைத்தடி ஏந்தி - அமைதிக்கு பாடுபட்ட அழிவில்லா வேங்கை. பேசத்தெரியா சிங்கள அரசுடன் பேசுவதில் - இனி பயனில்லை என்று கண்டவன். பேச்சுக்கள் முடிந்துவிட்ட செய்தியை உலகிற்கு - தன் பேச்சற்ற முடிவால் சொன்னவன். அவன் பெயரைச் சொன்னால் எதிரியின் - வாய்க்குள்ளும் தமிழ் நுழைந்து போராடும். …
-
- 0 replies
- 1.9k views
-