கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கழிவறையில் ஓவியம் தீட்டுவதில் அலாதி சுகமெனக்கு. மனதிற்கு உகந்தவளை சுவற்றில் தீட்டுவதும் மனதார இகழ்ந்தவர்களை சொல்லத்தகா திட்டுவதும் இங்கேதான்.. சில புகழ்பெற்ற ஓவியங்கள் வரையக்கற்றுக் கொண்டதும் இங்கேதான். இங்கே சுழிப்பவர்கள் அங்கே இளிப்பார்கள். கழிவறைக் கதவைத் திறந்து வெளியே செல்லுகையில் ஆழ்ந்த திருப்தி எனக்கு. இன்னும் நால்வர் அதைக் காணக்கூடுமல்லவா?
-
- 6 replies
- 1.9k views
-
-
-
அன்பே: ஏன் பிரிந்தாய்? நம் பிரிவை உயிர் மட்டும்தான் பிரிக்கும் என்றுதானே நானிருந்தேன். எப்படி பிரிந்தாய்? நீ இல்லாமல் வாழத்தெரியாத நான் நீ இருந்தும் இல்லாமல் எப்படி வாழ்வேன். சொல் கண்ணே சொல் நீ இல்லாத உலகத்தில் நான் பிணமாய் வாழ்வதைவிட நீ இருக்கும் உலகில் நான் கல்லறையாய் வாழலாம். எங்கே நீ சொல் அன்பே சொல்.. உனக்கான என் காதல் மரத்தில் இருந்து தினமொரு கவியிலையாய் விழுந்து கொண்டிருக்கிறது என் கண்ணீர் எனும் மழையாலும் உன் நினைவெனும் புயலாலும். வா அன்பே வா... நீ என்னை வாழ வைக்க வேண்டாம் வாழ விடாமல் வைத்துவிடு அது போதும் உனக்காய் வாழ்ந்து உன்னால் இறந்…
-
- 1 reply
- 886 views
-
-
நெடுந்தீவு ஆச்சிக்கு வ.ஐ.ச.ஜெயபாலன் அலைகளின்மீது பனைக்கரம் உயர எப்போதும் இருக்கிற என்னுடைய ஆச்சி காலம் காலமாய் உன்னைப் பிடித்த பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின போத்துக்கீசரின் எலும்புகள் மீதும் தென்னம் தோப்பு நானும் என் தோழரும் செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு. தருணங்களை யார் வென்றாலும் அவர்களுடைய புதை குழிகளின்மேல் காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி. என்ன இது ஆச்சி மீண்டும் உன் கரைகளில் நாங்கள் என்றோ விரட்டி அடித்த போத்துக்கீசரா ? தோல் நிறம் பற்றியும் கண் நிறம் பற்றியும் ஒன்றும் பேசாதே அவர்கள் போத்துக்கீசரே எந்த அன்னியருக்கும் நிலை இல்லை எனது ஊர் நிலைக்கும் என்பதைத்தவிர எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன். நா…
-
- 4 replies
- 1.6k views
-
-
யாராவது கவிஞருக்கு சிலேடையாக கவிதை எழுதமுடியும் என்றால் தயவு செய்து பதில் அனுப்பவும். எனக்கு ஓரளவுக்கு Rap பாடல்கள் பாடத்தெரியும் ஆனால் கவிதை வருது இல்லை ஆகவே உங்களால் முடிந்தால் எனக்கு உதவவும் ஒரு விடயம் எனக்கு புலிகளின் வான்படை தொடர்பாக கவிதை வேண்டும்
-
- 18 replies
- 3.1k views
-
-
பேனாவோடு நான்... என்னவளே... என்ன யோசிக்கிறாய்.. உனக்காய் நான் எழுதுவதை இன்னும் என் பேனா நிறுத்தவில்லையென்றா..? ஆமாம்.. அதைத்தான் நானும் யோசிக்கிறேன் உனக்கு தெரியுமோ தெரியாது ஏன் என் கவிதைகளில் எழுத்து பிழைகள் அதிகமென்று ஏன் தெரியுமா... என் கவிதைகளை நான் வாசிப்பதில்லை வாசித்தால் ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன் என்பதை படித்துக் கவலைப்படுவேன் என்பதால்தான். பேனா எடுத்தவர் யாரும் பேனாவால் இறந்ததில்லை நான் மட்டும்தான் உனக்காய் எழுதி எழுதி இறந்து கொண்டிருக்கிறேன் இந்த உலகம் கவலைப்படுகிறது உனக்காக மட்டும்தான் எழுதுகிறேன் என்று உண்மைதான் அதற்காக நான் அதிகம் வருத்தப்படுவதுண்டு ஆனால் அவர்களுக்கு எப்ப…
-
- 20 replies
- 3.1k views
-
-
இந்து நான் இந்தியா புனிதம் எனகென்றாய் கிறிஸ்தவன் நான் ஜெருசலம் புனிதம் எனகென்றாய் முஸ்லிம் நான் மக்கா புனிதம் எனகென்றாய் வடக்கு கிழக்கின் பூர்விக குடிமகன் என்பதற்காக என்ன ஆதாரம் காட்டினார் நீ புத்தன் ஆசிர்வதித்த சிறிலங்கா அவனது பூர்வீகம் உரிமை கூறுகிறான் சிங்கள பேரினவாதி- இப்படி சிறிலங்கா அவனுக்கு புனிதமாம்
-
- 6 replies
- 1.5k views
-
-
ஆயிரம் கைகள் கூட்டி மறைத்திட வானம் மறைந்திடுமோ - இப் பாரில் நடந்திடுமோ - எங்கள் செந்தமிழ் மீதினில் ஏறி மிதிக்கநம் வீரம் குறைந்திடுமோ - எங்கள் மானம் மறைந்திடுமோ பொய்கள் விதைக்கிறார் புரளி கிளப்பிறார் ஒன்றும் பலிக்காது - அட பொய்கள் விதைத்துப்பின் நாளை விளைச்சலில் மெய்கள் முளைக்காது சூது என்றும் ஜெயிக்காது யாரும் அழுத்தலாம் கேடும் நினைக்கலாம் கண்ணீர் வடிக்கோம் யாம் - எவர் காலும் துடைக்கோம் யாம் இப்பாரில் தமிழினம் ஓங்கி வளர்ந்திட யாகம் வளர்ப்போம் யாம் - அதில் வாழ்வைக் கரைப்போம் யாம்
-
- 7 replies
- 1.7k views
-
-
தமிழ்த்தாய் தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் (தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார், ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்துத் தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத் தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன் நேர்ந்த தனைத்தும் துடைத்து ம…
-
- 0 replies
- 942 views
-
-
கனத்த மனதுடன் உங்களைக் கேட்கிறேன் கனிந்த மனதுள்ள உங்களைக் கேட்கிறேன் படித்த மனிதரே உங்களைக் கேட்கிறேன் பாரினில் புகழ்பெற்ற உங்களைக் கேட்கிறேன் இளகிய மனதது உங்களுக்குள்ளது இயற்கையின் அழிவையே தாங்கிடவற்றது பச்சை இலையதன் காடுகள் காப்பவர் பாசத்துடனே விலங்கினை பார்ப்பவர் விலங்கை விடவும் கேவலமாகிய விசயங்கள் ஈழத்தில் விஞ்சிக் கிடக்குது பச்சைக் குழந்தை செத்துக் கிடக்குது பாகம் பாகமாய் வெட்டிக் குவிக்குது நித்தம் நித்தமிங்கு சாவுகள் நடக்குது நினைத்திடாத பல கேவலம் நடக்குது உங்கள் கண்களில் ஏன்படவில்லை உங்கள் நெஞ்சினை ஏன்தொடவில்லை எங்கள் இனமது ஏதிலியான எதுவும் அடைந்திட அருகதையற்ற செத்துப் போகவே பிறந்த இனமென்று செய்வத…
-
- 14 replies
- 2k views
-
-
நாளை நான் உயிரோடு இருப்பேனா ஈழத்தில் நண்பனின் இறந்தவிட்டில் இன்று நான் * அம்மா அங்கே அம்மாக்காக அகதியாய் இங்கே நான் * காணாமல் போனால் கண்டுபிடித்து தருவார்கள் பிணமாக * தினமும் இறப்பவர்களின் பட்டியலில் சேரதவர்கள் சுனாமியால் இறந்த ஈழத்தமிழர்கள் * வகுப்பறையில் மகள் படிக்காட்டியும் உயிரோடு திரும்ப வேண்டும் சாமியறையில் தாய் * நான் இறந்தால் கொள்ளிவைக்க வந்துவிடாதே நான் பெற்றதில் உன்னை மட்டும்தான் காப்பாற்ற முடிந்தது * அம்மாவோடு ஆசையாய் பேச தொலைபேசி எடுத்தால் அம்மா கவலையாய் பேசுவதை கேக்கவே நேரம் முடிந்துடும் * என் தாயை நான் பார்த்தே இருபது வருசமாச்சு எப்படி சொல்ல…
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழ் களக் கவிஞர்களுக்கு வணக்கம். வாரமொரு தலைப்பிலே கவிவடிக்க வாருங்கள் என்று அழைக்கிறேன். இது குறித்த தலைப்பில் கவி வடிக்கும் திறனை வளர்ப்பதற்கும் ஒரே விடயத்தை பல கோணத்திலும் அணுகும் அழகை ரசிக்கவும் உதவும் என்று நினைக்கிறேன். இந்தப் பகுதியில் இணைக்கப்படும் கவிதைகளில் சிறந்தவை வேறு வெகுசனத் தொடர்பு ஊடகங்கள் வாயிலாக வெளிவரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வகையில் முதல் தலைப்பாய் அவனியிலே நாம்சிறக்க அனுதினமும் கனவு காணும் அன்னையின் பெருமையைக் கவியாக்குவோமா? இத்தலைப்பிலே ஏற்கனவே நீங்கள் எழுதியிருந்த கவிதைகளையும் இணைக்கலாம். 10 - 09 - 2007 வரை இந்தத் தலைப்பிலான கவிதைகளை இங்கே இணைப்போம். எங்கே கவிதைகளை எதிர்பார்க்கிறேன்
-
- 19 replies
- 2.9k views
-
-
மதமதை மதமதை நீயிழிப்பாய் மடமையில் இன்றதை நீ செய்வாய் ஒன்றதை ஒன்றதை நீ மறந்தாய் உன்னிலை மீதிலே நீ உமிழ்ந்தாய்... அறிவுரை அறிவுரையென விரித்தாய்- அந்த அறிவினையதிலே நீ வீழ்ந்தாய் ஊழ்வினை ஊழ்வினை உள்கணக்க வேறென்ன வேறென்ன நீயுரைப்பாய்... இரும்பது மீதிலே ரயிலோடும் இல்லென இல்லென நீயுரைத்தால் உன்னிலை உன்னிலை என்னவென்போம் ஊழ்வினையதுவே மேலே என்போம்... பார்வையிழந்தவர் குருடராவார்- நீ பார்வையுள்ள குருடனானாய் எத்திசை எத்திசை பார்த்திடினும் எல்லாம் உனக்கு இருளதுவே... மெய்யது பொருளது என்னதுவோ மெய்யென நீயானால் சொல்லிடுவாய் வேரது இல்லா மரமேயென்றால்- நீ வேறு கண்டத்து பிறவியாவாய்...
-
- 95 replies
- 10.5k views
-
-
காலப் பாலை நடுவினிலே வினோதங்கள் வற்றி உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே வாழும் கனவாக என் முன்னே வளரும் சிறு நதியே. உன் தோழமையின் பெருக்கில் துயர்கள் கரையுதடி வாழத் துடிக்குதடி கண்ணம்மா என் வார்த்தைகள் காவியமாய் கூதிர் இருட் போர்வை உதறி குவலயம் கண் விழிக்க போதியோடு இலை உதிர்த்த இருப்பும் புன்னகைத்தே துளிர்க்க மனிதருக்கிடையே நாணற்றுச் சூரியன் மண்ணைப் புணருகின்றான். மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மா மூச்சால் உயிர் மூட்டி. கடைசித் துளியும் நக்கி காலி மதுக் கிண்ணம் உடைத்து என் வாழ்வின் ஆட்டம் முடிந்ததென்றேன். நீ கள்நதியாக நின்றாய். உயிர்த்தும் புத்துயிர்த்தும் இந்த உலகம் தொடர்வதெல்லாம் உன் பொற்கரம் பற்றியன்றோ . மாண்டவர் மீள்வதெல்லாம் ப…
-
- 5 replies
- 1.5k views
-
-
மலைப் பனியோடு மனதின் பனியும் உருக வான் நோக்கிக் கை பரப்பி சூரியன் கை வீணையாய் இசைக்கின்றாள். இது புலம் பெயர்ந்த பின்னாடி அவள் கோடைதொறும் நிகழ்த்துகின்ற கூத்துத்தான். பொன்னி நதி பண்டைப் பழசானாலும் மாரிப் புதுவெள்ளத்தில் கன்னிதானே. வாழிய தோழி வளர்க உன் பாடல் என்றேன். வாடா என் சூரியத் தோழனே வந்தென்னை அள்ளி அணைத்திடடா. கந்தல் வெண்பனிப் போர்வை வீசி வானவிற் சேலைகட்டி என்போல் குதூகலமாய் சூழும் துருவத்து மலை சிகரங்களே. கண் இறங்கும் பாதை எல்லாம் வண்ணக் கம்பளமாய் விரிகின்ற பள்ளத்தாக்கே. சாரல் பாறைகளிடையே துளிர்க்கின்ற திராட்சைகளே. போதை தருகின்ற புது வசந்தத் தேன் காற்றே. என்தேச விடியலின் பல்லியத்தை என்னுடைய சன்னலைத் தேடி இசைக்…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஆரிடம் முறையிடுவோம்? ஆரிடம் முறையிடுவோம்? எவரை நம்புவோம்? அவனியிலே எம்மை அணைத்திட யாருளர்? போரியல் வாழ்வினைப் பழக்கத்திற் கொண்டோம் புதியவை யல்லஇத் துன்பங்கள் எமக்கு சூரியத் தலைவனங்கு எதிர்வு கூறுகின்றான் சாற்றும் நூறாண்டு நூறாண்டு காலம் நேரிய பாதையிற் பதிலடி கொடுத்திட நேரம் வந்ததெனத் திடமுரைக் கின்றான் மனிதநேயப் பணியாளர் தாமங்கு செயலாற்ற மிக்கவே அச்சுறுத்தல் நிறையிழி நாடென மனிதவுரிமை அமைப்பொடு ஐ நா சபையினரும் மட்டிலாக் கண்டனம் மனதாரக் கூறுகிறார். நனிவுயர் எம்மக்கள் நாடோறும் மடிதல் நன்றாக அறிந்துமிவர் எதுவுமே செய்திலர் கனியமுத வார்த்தையிற் சிங்களர் அவரைக் கட்டுக்குள் வீழ்த்தித் தம்பக்கம் சாய்க்கின்றார் அறிக்கைகள் விடுகி…
-
- 2 replies
- 1.1k views
-
-
மின்னலிடை தேடி பெண்களிடை நாடி பொருத்தமதின்றி பொறுமையிழந்தேன்..! (எதிர்பார்த்து.. சந்தித்த..முதலாவது பெருத்த ஏமாற்றம்) பிறை நுதல் தேடி வீதி வழி ஓடி கண்டதில்லை வானத்து மூன்றாம் பிறை..! (கிரமமான இயற்கை நிகழ்வைக் கூட ரசிக்க நேரமில்லாத தேடலின் தொடர்ச்சி) காந்தளது தேடி கரங்களது நாடி களைத்தேன் ஓவியமாய் காணும் வரை..! ( காந்தளைக் (அழகான மலர். அருகிய மலர்) காண வேண்டும் என்ற ஆசை.. ஓவியத்தில் நிறைவடைகிறது) கொவ்வையிதழ் தேடி கோதையிதழ் நாடி கேவலம் கண்டேன் மைப் பூச்சு..! (கொவ்வை தெரியும்.. கொவ்வை இதழ்.. தெரியாமல்.. தேடல் செய்து ஏமாற்றமடைதல்.. போலியை செயற்கையைக் கொண்டு.. மெரு கூட்டிய பெண்கள் வாழும் உலகு என்பது அர்த்தப்படுகிறது..!) பருவமும் …
-
- 37 replies
- 5k views
-
-
இங்கே தொடராக இந்து மதத்தை இழிவு படுத்துவதன் நோக்கமாக திட்டமிட்டு இவர்களுடைய பரப்புரை தொடர்கிறது... இலங்கையில் உள்ள இந்து மதம் ஆட்சி செய்யவில்லை இந்துவாதம் ஆளவில்லை...இதனை தெளிவாக பலர் சுட்டி காட்டீயும் இந்த நாஸ்தீக வாதிகள் அல்லது அரைகுறை பண்டிதர்கள் புரிய முணையவில்லை... இந்தியா இந்துவாத அரசியலை இலங்கை அரசியலுடன் ஒப்பிடுவதானது ஏற்பபுடையதல்ல... எமது ஈழத்தமிர் ஆட்சியல் இந்துவாதம் தலை தூக்கவில்லை..ஆளவும் இல்லை... நீங்கள் மதங்களை இழியுங்கள் அது உங்கள் மடமை இந்த மதங்களை இழிப்வர்கள் அவர்களுடைய குடும்ப உறவுகள் எந்த மதத்தை சர்ந்திருக்கின்றன என்பதை புரிதல் வேண்டும்...ஒரு மதத்தில் உள்ள தவறுகளை சுட்டி கட்டுவது தவறல்ல மாறாக கடவுளே இல்லை மனிதனின் மேலொரு சக்த்தியி…
-
- 19 replies
- 2.9k views
-
-
என்ன செய்ய??!! பூக்களை தருவதற்காய் நான் வந்து கொண்டிருக்கிறேன் மாட்டுவண்டி ஒன்றிலே கரடு முரடான பாதையிலே மெது மெதுவாய் வந்து கொண்டிருக்கிறேன் கண்ணைப் பறிக்கும் வண்ணம் கொண்ட சொகுசுக் காரிலே எனக்குப் போட்டியாக அவர்களும் வருகிறார்கள் வாண வேடிக்கைகள் முழங்க சுவரெல்லாம் செய்திகள் சொல்ல ஆடம்பரமாய் அவர்கள் வருகிறார்கள் நான் தருவதற்கு பூக்களை கொண்டு வருகிறேன் அவர்கள் விற்பதற்கு மலத்தைக் கொண்டு வருகிறார்கள் மக்கள் எல்லோரும் காரை நோக்கியே கட்டுக்கடங்காமல் ஓடி வருகிறார்கள் ஓடி வந்து தங்கத் தாம்பாளத்தில் வைத்து அவர்கள் கொடுத்ததை சந்தோசமாய் வாங்கிச் செல்கிறார்கள் என்னையும் பூக்களையும் சீண்டுவார்தான் யாரு…
-
- 25 replies
- 3.5k views
-
-
-
ஆதிமூலத்தில் அந்தணண் பக்தி வேலி இட்டான் ஆலயத்தில் அயலவர்கள் சாதி வேலியிட்டனர் அலுவலகத்தில் அதிகாரிகள் அதிகார வேலியிட்டனர் பாடசாலையில் ஆசிர்யர்கள் கல்வியால் வேலியிட்டனர் காதலர்கள் அன்பால் வேலியிட்டனர் கணவன்,மனைவி தாம்பத்திய வேலியிட்டனர் பேரினதவாதம் பயங்கராவாத வேலியிட்டது விடுதலை போராளிகள் விடுதலை வேலியிட்டனர் தம் உயிர் தியாகத்தால்!
-
- 55 replies
- 4.9k views
-
-
பேரலையோடு பரள் பேசும் புதுக்கவிதை சங்கமச் சத்தம்... பூ அவிழ பூக்காம்பு கேட்டு மயங்கும் மரகத வனப்புச் சத்தம்.. இளவெயில் பட்டு இலையூஞ்சல் ஆடும் குயில் பாட்டு குழையும் சத்தம்... மூங்கில் காட்டில் முட்டும் காற்று முத்தம் தந்து முனகும் சத்தம்.. மெல்விரல் படின் இலை மூடும் தொட்டாச்சிணுங்கி நாணிச் சிணுங்கும் வெட்கச் சத்தம்... காதல் மொழி பேசும் அழகு பேடைக்கிளி இரண்டும் கொஞ்சும் சத்தம்... நள்ளிரவு நிலாநேரம் நீரின் மேலே தவளை தாவும் தளுக் சத்தம்... வண்டு வரும் பூச்செண்டு அறியும் ரம்மிய கமக ரீங்காரச் சத்தம்... கேட்கா சத்தம் கேட்கும் நித்தம் கேள்விக் குறியாய் வாழ்க்கை மட்டும்.. வாழச் …
-
- 12 replies
- 2.2k views
-
-
வஞ்சிக்கொடியே வாஞ்சையுடன் என்னோடு கொஞ்சிப் பேசிப் பேசி கொள்ளை கொண்டவளே எனக்கே தெரியாமல் என்னுள் புகுந்து என்னையே கேட்காமல் எண்ணில்லா முத்தங்கள் தந்து என்னை கோபப்படுத்தினாய் என்னை செல்லமாக அழவைத்தாய் என்னுள் உனைத் தேடிக்கொண்டே உன்னில் எனை தேட வைத்தாய் கண்டேன் எனை உன்கண்ணில் கொண்டேன் அளவில்லா இன்பம் மீண்டும் எனை நீங்கி சென்றாய் உன் இருப்பிடம் சற்றேனும் எதிர்பாராபோது சினுங்கிய தொலைபேசியில் உன் அன்பான குரல் கேட்டு என் கையில் இருந்த லொலிபொப் புளிச்சது ஏன்?
-
- 51 replies
- 6.3k views
-
-
நீ என்னைக் காதலிக்கவில்லை என்ற சொல்லை எறிந்தால் பதிலுக்கு உனக்கு மட்டும் கவிதைகளை தந்து கொண்டே இருக்கும் மரம் நான் * நான் மழைக்கு பள்ளிக்கூடம் ஒதுங்காததில் கவலைப்பட்டது என்றால் அது உனக்கு கவிதை எழுத துடித்த போது மட்டும்தான் * நல்ல வேளை நான் கவிதை எழுத முயற்சிக்கவில்லை அப்படி எழுதியிருந்தால் உன்னை விட அழகான கவிதையை என்னால் எழுதியிருக்க முடியாது * நீ கட்டி அணைத்தால் தூங்காது தலையணை நான் கட்டிப்பிடித்தால் தூங்காது பேனா * உன்னைப் பார்த்து யார் யாரெல்லாம் பொறாமைப் படுகிறார்களோ தயவு செய்து அவர்களைப் பார்த்து நீ கோவித்து விடாதே அவர்கள்தான் என் கவிதை…
-
- 2 replies
- 990 views
-
-
காதலித்தால் இதயங்கள் இடம் மாறுமாமே வா இதயங்களை மாற்றிவிட்டு காதலித்து பார்ப்போம் * நான் வார்த்தை தேடி அலைந்தபோது வந்து கிடைத்த கவிதை நீ * பயந்து பயந்துதான் உன்னை என் அம்மாவுக்கு அறிமுகப்படுத்தினேன் அவா உன்னை ஆலாத்தி எடுத்து வரவேற்பா என்று தெரியாமல் * வறண்ட பூமியை விட நீ வைத்திருக்கும் குடைதான் மழைக்காக தவிக்கிறது * உலகம் அழியும் நாளில் நான் உயிரோடிருந்தால் தற்கொலையாளியாய் உன் மேல் பாய்ந்துதான் என்னை அளித்துக் கொள்வேன் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.1k views
-