கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
காதலை தருகின்றேன் இரண்டாண்டுகளுக்கு முன் இதயத்தில் உதித்த காதலை இன்று என்னிடம் சொல்லிய இளங்காளையே நீ நலமா? இன்று எனை சந்தித்த போது உன் கைவிரல்கள் நடுங்கியதேனோ பேச்சுக்கள் தடுமாறியதுமேனோ வியர்வைத்துளிகள் பூத்ததுமேனோ "எந்தன் குரல் கேட்டு உந்தன் பேச்சதனை மறந்தனையோ என் கண்களைப் பார்த்து உன் தூக்கத்தையும் தொலைத்தனையோ" ஓ...! இதைச் சொல்லத்தானோ இவ்வளவு தயக்கங்களா இருப்பினும்... நீ சொல்லிய காதலை உடன் ஏற்க மறுத்த என்னில் கோவங்கள் சிறிதுமின்றி சோகமான சிரிப்போடு நாளை என் பிறந்ததினம் நீ கட்டாயம் வரணும் என என் தலையில் கைவைத்து சத்தியம் செய்து சென்றவனே உன் பிறந்தநாள் பரிசாக என் காதலை உன்னிடம் தருகின்றேன்
-
- 46 replies
- 5.5k views
-
-
இலங்கை சிறு தீவில் சூழ்ந்தது போர் மேகங்கள் அணி வகுத்தது இரு தரப்புக்கள் ஆதிக்கவெறி இன வெறி கொண்ட ஒரு தரப்பும் சுதந்திரத்துக்காய் விடுதலைக்காய் மறுதரப்பும் உள்நாட்டு பிரச்சினை என உலகம் கண்ணை மூடிக்கொண்டிருக்க கொலை கொள்ளை பலாத்காரம் என இன அழிப்பில் கொக்காளம் இட்டது சிங்கள தரப்பு வீரம் கொண்ட தமிழ் இனம் தனது சொந்தக்காலிலே நின்று பதிலடி கொடுக்கத்தொடங்கியபோது விழித்துக் கொண்டது உலகம் மூன்றாம் தரப்பு இணைத்தலைமை அமைதிப்படை சமாதானத்தூதுவர் இன்னும் என்னவோ பெயர்களிலெல்லாம் போதும் போதும் இவர்களெல்லாம் மத்தியஸ்தம் செய்வதுக்கு நாங்கள் நடத்துவது விடுதலைப் போரா இல்லை குறுக்கெழுத்துப் போட்டியா?
-
- 5 replies
- 1.5k views
-
-
-
வான வில்லின் வர்ணங்கள் வளைத்து எண்ணம் என்னும் வண்ணம் எடுத்து கற்பனைத்தேன் கலந்து காரிகை உனைக் கிறுக்க தூரிகை நான் எடுத்தேன் காவியம் பேசும்- அவள் கண்கள் வரைய கரு முகிலை தூதுவிட்டு கருவிழியாக்கினேன் சிறகடிக்கும் சிட்டுக்குருவியின் இறகை- அவள் இமைக்கு மடலாக்கினேன் வளர்ந்து வரும் வளர் பிறையை வளைத்து-அவள் வதனத்தில் வைத்தேன் இளம் தளிர்-அவள் இதழ் வைக்க இதழோடு-பூ இதழ் வைத்தேன் கார் காலத்து கரும் இருளை காதல்-கள்ளியின் கூந்தலாக்கினேன் தேன் நிலவு தேவியை தேடி-பிடித்து திருமகளின்-திரு திலகமாக்கினேன்.
-
- 17 replies
- 2.4k views
-
-
காற்று வந்து காது துடைத்து கலைத்துப் போகும் பஞ்சு மேகம்...!! விண்ணில் கோடி விதைகள் கொண்டு விதைத்த பருத்தி பஞ்சு மேகம்...!! நட்சத்திர மழலை கண்ணாமூச்சி ஆட வைக்கும் பிஞ்சு பஞ்சு மேகம்..!! நனைந்த நிலவு நுதல் முற்றும் சுற்றிக் கொள்ளும் பஞ்சு மேகம்...!! பகலவன் கொஞ்சம் இளைப்பாறிச் செல்லும் சொகுசு பக்கணம் பஞ்சு மேகம்...!! கடலோடு மணம் கொண்டு கருவாகி மழை ஈன்று பஞ்சரிக்கும் பஞ்சு மேகம்...!! வானத்தோடு மின்னல் சண்டை அமைதித் தூது வெளிர் பஞ்சு மேகம்...!! அண்டையோடு சண்டையிட்டும் அன்பு குழகி ஆர்ப்பரிக்கும் தரணி மெச்சும் பஞ்சு மேகம்...!! அர்த்தங்கள்: பஞ்சரித்தல் - கொஞ்சிப் பேசுதல்…
-
- 27 replies
- 6.3k views
-
-
அன்னை தேசம் சிந்தும் குருதி அகிலம் எங்கும் உறைய வைத்தும் ஈழத் தமிழன் ஈந்திடும் கண்ணீர் ஈரம் கண்டும் இரங்காத உலகம் சிங்கள வெறியன் சீண்டிடும் கைகள் சீறும் படையால் சிதைந்திடும் காணீர் எம் நிலம் வந்து எம்மையே கொல்லும் துரோகிகள் துரோகம் தூர்ந்திடும் விரைவில் தீந்தமிழ் வீரர் தியாகம் வேள்வி தன்னிலை மாறி தமிழீழம் பிறக்கும்...
-
- 8 replies
- 1.8k views
-
-
குருவிக்கு வேண்டுகோள் : ஞானக்கூத்தன் கூடுகட்ட விடமாட்டேன் சின்னக் குருவியே! என் வீட்டு சன்னல்கள் திறந்திருக்கக் காரணம் பருவக் காற்றுகள் உள்ளே வர எஞ்சிய உணவின் வாசம் மறையவும் துவைக்கப்படாத துணிகளின் வாடை போகவும் இன்னும் ஏதோ ஒன்று என்னவென்று தெரியாத ஒன்றின் சிறு நெடி போகவும் பருவக்காற்றுகள் உள்ளே வீசத் திறந்துள்ளன எனது சன்னல்கள் எனது வீட்டுக்குள் வருவோர் தனது வாசத்தோடு வந்து போகிறார் திரும்பிப் போகும் போது அதிலே கொஞ்சம் விட்டு விட்டே போகிறார் தெரியுமா? சன்னல் வழியே சிறகை மடக்கி வர முயலாத சின்னக் குருவியே கூடு கட்டப் பொருந்தி இடங்கள் இல்லை குருவியே எனது வீட்டில் நாட்டின் வளர்ந்த மரங்கள் எல்லாம் என்ன ஆயின? நீயேன் கூட்டை…
-
- 1 reply
- 819 views
-
-
இனி!! பதுங்குது பதுங்குது புலி! பாயும் காலம் இனி! தமிழரைக் கொண்ட கலி! இனி பகைவன் மண்ணில் தானே கிலி!. மெளனத்தின் பலத்தை மறந்து தோற்றதாய் எம்மை நினைத்து எங்கள் மண்ணைப்பறித்து! கொண்டாடினீர் வெற்றி களித்து! அண்ணனின் ஆணைக்குப் பணிந்து! வருவோம் பகையே துணிந்து! வருமே காலம் கனிந்து! ஈழம் மலரும் வேளையே எம் விருந்து!. நன்றி..!
-
- 7 replies
- 1.5k views
-
-
"வெற்றிக்கனி" எட்டுத்திக்கும் முட்டட்டுமே பகை!! உடைத்தே எறிவோம் எம் கைவிலங்கை! அடிமையாய் வாழ்வது ஈனம்! வீரம் தமிழரின் மானம்!. எட்டடா! எட்டு வெற்றிக்கனி!- பகை ஓட்டி வெல்வோம்! நாங்கள் புலி! கட்டுண்டு கிடப்பதோ இன்னும்?! எழுந்துவிட்டால் எம்கொடி விண்ணில்! ஈழம் எங்கள் உடமை தமிழா காப்பது நம் கடமை! உரிமை மறுக்கும் சிங்களத்தின் வேரை அறுத்தே நாட்டு உந்தன் பேரை! 'விதி வசம் என்பதை விட்டு! தடை உடைத்தே புறப்படு இது நம்நாடு! எரிமலையாய் இருடா! தமிழா! இருட்டினை விரட்டத் தீயாய் எழடா!.
-
- 7 replies
- 1.9k views
-
-
இங்கே தொடராக இந்து மதத்தை இழிவு படுத்துவதன் நோக்கமாக திட்டமிட்டு இவர்களுடைய பரப்புரை தொடர்கிறது... இலங்கையில் உள்ள இந்து மதம் ஆட்சி செய்யவில்லை இந்துவாதம் ஆளவில்லை...இதனை தெளிவாக பலர் சுட்டி காட்டீயும் இந்த நாஸ்தீக வாதிகள் அல்லது அரைகுறை பண்டிதர்கள் புரிய முணையவில்லை... இந்தியா இந்துவாத அரசியலை இலங்கை அரசியலுடன் ஒப்பிடுவதானது ஏற்பபுடையதல்ல... எமது ஈழத்தமிர் ஆட்சியல் இந்துவாதம் தலை தூக்கவில்லை..ஆளவும் இல்லை... நீங்கள் மதங்களை இழியுங்கள் அது உங்கள் மடமை இந்த மதங்களை இழிப்வர்கள் அவர்களுடைய குடும்ப உறவுகள் எந்த மதத்தை சர்ந்திருக்கின்றன என்பதை புரிதல் வேண்டும்...ஒரு மதத்தில் உள்ள தவறுகளை சுட்டி கட்டுவது தவறல்ல மாறாக கடவுளே இல்லை மனிதனின் மேலொரு சக்த்தியி…
-
- 19 replies
- 2.9k views
-
-
கோவம் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லி குதூகலப்படுத்துபவனே சபை நடுவே துணிவுடன் உலாவரும் சகலகலா வல்லவனே விடிய விடிய தூக்கமின்றி விருப்போடு பேசிப் பேசி சிரிப்புகளோடு கூடிய அரட்டையில் சிந்திக்கவும் சிறகடிக்கவும் வைப்பவனே தேடலின் நாயகனே வானொலியின் தலைவனே அரட்டையில் மன்னவனே எனதன்புத் தம்பியே அன்றொரு நாள் எனை நீ திடீரென சந்தித்த போது அடைமழை பெய்கையில் குடையின்றி நான் நனைந்ததையும் பெரியம்மா வீட்டு நாயை தைரியமாக களவாடியதை தெருவோரமாக ஒதுங்கி நின்று தெரியாமல் பார்த்த நீ சொல்லமாட்டேன் யாருக்கும் லொலிபொப் வாங்கித் தா என செல்லமாக கேட்டதும் செலவழிக்கின்றேன் இப்போதும் நான் ஆனால்... யாவற்றையும் யமுனாவாக …
-
- 12 replies
- 3.4k views
-
-
சிறு துளி பெருவெள்ளம் உன் கூந்தல் துவட்டிய பின்னும் தூறும் துளிகள் எனக்கு * உன்னைக் காதலித்ததால் அல்ல நீ என்னை காதலிக்காததால்தான் ஆனேன் கவிஞனாய்.... * விரும்பித்தான் காதலித்தேன் உன்னை விரும்பாமல் காதலிதுக்கொண்டே இருக்கிறது கவிதைகள் மட்டும் என்னை * நீ சூடும் பூவுக்கு எப்படி கற்றுக்கொடுத்தாய் நீ சிரிக்காத போதும் சிரிக்க * உன் கண்களில் படித்துவிட்டுத்தான் வெளியிடுகிறேன் என் ஒவ்வொரு கவிதைகளையும் பல கண்களுக்காய் * உன்னைக் காதலித்ததால் தலைக்கனம் எனக்கு நீ காதலிக்காததால் தலைக்கனம் என் கவிதைகளுக்கு -யாழ்_அகத்தியன்
-
- 4 replies
- 1.3k views
-
-
ஆதிமூலத்தில் அந்தணண் பக்தி வேலி இட்டான் ஆலயத்தில் அயலவர்கள் சாதி வேலியிட்டனர் அலுவலகத்தில் அதிகாரிகள் அதிகார வேலியிட்டனர் பாடசாலையில் ஆசிர்யர்கள் கல்வியால் வேலியிட்டனர் காதலர்கள் அன்பால் வேலியிட்டனர் கணவன்,மனைவி தாம்பத்திய வேலியிட்டனர் பேரினதவாதம் பயங்கராவாத வேலியிட்டது விடுதலை போராளிகள் விடுதலை வேலியிட்டனர் தம் உயிர் தியாகத்தால்!
-
- 55 replies
- 4.9k views
-
-
எங்குதான் கற்றாய் நீ பொய்.. இளமை சொல்கிறதா... ஆசை சொல்லத் தூண்டுகிறதா.. இதுவரை இல்லாமல்.. இப்போது.. பொருத்தம் இல்லாமல்.. பொய்சொல்கிறாயே.. நீ உரைப்பதை நம்பிவிடும்.. முட்டாளா நான் மாறிவிட்டேன் என்று எண்ணிவிட்டாயா..முட்டாள்க் காதலனே... நீ நிற்பது கடல் நடுவில்.. நான் நிற்பது கரைமணலில்.. நீதான் இங்கு வரவேண்டும் நானல்ல.. காதல் மனதைத் தொடும் கலை.. உடலைத் தொட அலைவது கொலை காமம் தாம்பத்யத்தை ஸ்திரப்படுத்த... காதலைப் பலவீனப்படுத்த அல்ல நீ நேசிப்பது என்னையென்றால்.. நான் என் இதயத்தை என்று எடுத்துக் கொண்டேன்.. நீ உடலை என்பதைக் காட்டிச்சென்றாய்.. உன் வேலையாகவில்லை என்று எரிகிறாய்.. என் காதலன் கண்ணியத்தை எண்ணி நான் அழுகிறேன்.. பரிபூரண இதயத்தைக் க…
-
- 37 replies
- 4.6k views
-
-
உமிழ்ந்தது தப்பு... குடு குடுப்பை காறனவன் குழிக்காதே எண்கிறான் பர பரப்பில் வந்துயவன் பகுத்தறிவு என்கிறான்... மூடர்கள் நீர் போலும் முளையில் ஏதுமில்லை ஏனென்று கேளாது ஏற்றீரோ நீரும்..? ஆலயங்கள் தோறும் ஏறி ஆண்டவனை வணயங்கியவன் இன்று வந்தேனோ இல்லை சாமி என்றானோ...?? காலயிலே நீராடி காசிக்கு மாலையிட்டு ஊச்சி மலையேறி உண்ணா நோன்பிருந்தான்.. பின்னாளில் வந்தேனொ பிதற்றல்கள் செய்தான்..? இன'னாளு வரைக்கும் இதையென் சொல்லலயோ...?? தாசி மகளுக்கு தரணியிலே விலை வைத்தான் இத்தனை இழியாரையோ இன்று பெரியார் என்பீர்...?? கட்டி தளுவி கலவியதை நீயாடு பிள்ளையதை வேண்டாமென்று பிதற்றிய செம்மலிவர்... இன்னாரின் இலட்சியத்தை ஏ…
-
- 2 replies
- 971 views
-
-
துடைத்து வைத்த கண்ணாடி போல இருந்ததடி என் உள்ளம்! இப்போதெல்லாம் அதில் தெரிகின்றதடி உன் விம்பம்! சலனம் இன்றிப் பயணித்தவன் நான் என்னுள்ளே நீ வந்தபின் உன் பெயரை மனனம் செய்யப் பழகிக் கொண்டவன் மரணம் வரும் எப்போதோ நானறியேன் அதுவரை சரணம் என்றுன்னை அணைப்பேன் ஊரெல்லாம் ஏதேதோ கதைக்க நீயும் நானும் வாய்மூடி மெளனிகளாவோம் உன் மனம் நானறிய என் மனம் நீயறிய உதவாத கதையெல்லாம் எமக்கெதற்கு? சிந்தை சிதறாது காதலி முந்தை வினையெல்லாம் கூடி எம்மை அலைக்கழிக்கும் பந்தை பக்குவமாய் வெட்டி விளையாடும் கால்பந்து வீரனாவோம்! விந்தை எதுவுமின்றி விரண்டோடும் வினையெல்லாம்…
-
- 2 replies
- 1.2k views
-
-
எத்தனை எத்தனையோ பிறந்தநாள் பாடல்கள் வந்திருக்கு... சரி நம்ம பாட்டையும் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால் உங்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் விழவாவிலும் போட்டு எங்கள் செல்ல மழலைகளை ஆடவிடுங்கள். http://vaseeharan.blogspot.com/ பல்லவி பிறந்த நாளைக் கொண்டாடும் பிஞ்சு மழலைகளே இந்த வீட்டின் சந்தோஷத்தை கொண்டு வந்தவர்களே அம்மாவின் அன்புபிள்ளை அப்பாவின் நல்ல பிள்ளை ஆண்டவனின் செல்லப் பிள்ளையாய் நல்ல நல்ல பாட்டைக் கேட்டு தன்னாலே ஆட்டம் போடுங்க நல்லாய் படிச்சு பட்டம் முடிச்சு உலகை நீங்கள் வெல்லுங்க சரணம்-1 தரணியெங்கும் சென்று நீயும் தமிழைப் பரப்பிட வேண்டும் நெஞ்சை நிமிர்த்தி நின்று நீயும் தமிழில் கதைத்திட வேண்டும் உன்தன் மூ…
-
- 7 replies
- 1.7k views
-
-
ஈழத் தமிழ்க் குலமே! எழுக!!!!! புத்தனா,நீ? போய்விடு! போதி மரத்தைத்தான் எத்தனை நாளாக நம்பி யிருப்பது? அகிம்சை போதிக்கும் அண்ணலும் வேண்டாம்! பகையை வளர்க்கும் பாலமும் வேண்டாம்! பிஞ்சுக் கொடியை மொட்டு மலரை நஞ்சுக் கொடியை நசுக்கிய பாவியைக் காணவா, கண்கள்? இருக்கும் உயிரைப் பேணுதல் வேண்டோம்! களத்தில்நில்! நம்முள் இருப்பதும் ஓருயிர்! என்பதை,எண்! செங்களத்தில், அரும்புகளைக் கொன்ற அகந்தை அழிப்போம்! சிங்கள நாயின் சிரந்தனைக் கொய்துநமைப் பங்கப் படுத்தும் படையை ஒழிப்போம்! புலிகளை வெல்லுமோ பசுக்களின் கூட்டம்! அலிகளுக்கா ஆண்மை பணியும்? தமிழா, இறுதிக் களமிது, போராடு! நெஞ்சில் உறுதிகொள்! உள்ளத்துள் ஈழம் தனைநினை! …
-
- 3 replies
- 1.1k views
-
-
ஆறு ஊரின் வெளியே ஆறு - அது ஓடும் அழகைப் பாரு! மாரி பொழிந்தால் வெள்ளம் - கரை புரண்டு ஓடும் எல்லாம்! ஓய்வு சிறிதும் இல்லை - அது ஓய்ந்தால் வருமே தொல்லை! ஆய்வு செய்தால் நிறைய - ஞானம் பிறக்கும் மடமை மறைய! மலையின் மீது தோன்றி - ஊற்று நீராய் வருமே தாண்டி! கலையாய் பூக்கள் எங்கும் - மலர நீரும் போயே தங்கும் துள்ளிக் குதித்து ஆடும் - தங்கப் பாப்பா நீரில் ஓடும்! பள்ளி செல்லும் நேரம் - தேனீ போல விரைந்து போகும்! தடைகள் வந்தால் ஆறு - அவற்றைத் தகர்த்துச் செல்லும் கேளு! மடைகள் திறந்து நீராய் - வெல்லும் படையாய் இருக்க வாராய்!
-
- 1 reply
- 1.3k views
-
-
பள்ளிக்கூடப் பிள்ளைகள் இடையில் Among the School Children - W.B.Yeats தமிழில் - நோயல் ஜோசப் இருதயராஜ் செல்லுகிறேன் நீண்ட வகுப்பறையின் ஊடே சிறுமுறுவல் சிலவினாக்கள் சிந்திக் கொண்டே; வெள்ளை உடை முக்காட்சில் முதய கன்னி விடைகனிவாய்ச் சொல்லுகின்றாள்: ``சிறுமியர்கள் மெல்லிசைப் பண், வரலாறு, கணிதம், தையல் மேலும் நவ நாகரிகம் கற்கின்றார்கள்`` எல்லோரின் விழிகளும் ஓர் கணவியல்பில் எழுகிறது அறுபதினைக் கடந்த என்மேல்! காணுகின்றேன் நின்றபடி கனவில், ஹோமர் காவியத்து ஹெலன்போன்ற என்றன் காதல் ராணியினை. தாழும் தீக் கணகணப்பில், ராப்போதில் அன்றொருநாள், அரட்டை கேலி வீண் அற்பச் சிறுபிள்ளைத் தனங்கள் எல்லாம் விபரீதம் விளைத்தகதை சொன்னாள்! கேட்டேன்! ஊன்கலந்த…
-
- 1 reply
- 967 views
-
-
வானத்தில் வெள்ளிகள் சிதறிக்கிடக்கின்றது அண்ணாந்து பார்தபடி மரத்தடியில் அவள் இருபக்கமும் சின்னன் இரண்டும் நித்திரையாக கண்கள் நனைய கண்ணீரில் நிலவெளி தெறித்தது வீடிளந்து வீதியோர வாழ்வில் மழைக்கு முன் கூடாரம் அமைக்க கடவுள் வழிவிடவேண்டும் மனதுக்குள் பிரார்தனை விடியாத வாழ்வில் விடிந்தது காலை அருகில் மூன்று கல்லு வைத்து அடுப்பு ஊத ஊத புகையை காற்று சுழற்றி முகத்தில் அடித்தது நாசிக்குள் போக பிரக்கடித்தது கண்ணெரிந்து கண்ணீர் வந்தது ஏனிந்த கண்ணீர் நிற்காமல் வருகிறது விறகு புகைக்கும் வருகிறது வீட்டுக்காரனை ஆமி சுட்ட போதும் மானாவாரியாய் வந்தது நினைக்கும் போதும் நிற்காமல் வருகின்றது தோட்டம் துரவை விட்ட…
-
- 7 replies
- 1.4k views
-
-
இன்றைய மது வ.ஐ.ச.ஜெயபாலன் உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரைபொங்குவது புதிய மது. அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது வேறு ஒருவன் காத்திருப்பான். நிச்சயம் இல்லை நமக்கு நாளைய மது அல்லது நாளை. எனக்காக இன்று சூரியனை ஏற்றி வைத்தவனுக்கு நன்றி. அது என் கண் அசையும் திசைகளில் சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது. மயக்கும் இரவுகளில் நிலாவுக்காக ஓரம்போகிற சூரியனே உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா. கள்ளு நிலா வெறிக்கின்ற இரவுகள்தோறும் ஏவாளும் நானும் கலகம் செய்தோம். ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே கடவுளையு…
-
- 5 replies
- 1.2k views
-
-
என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீழே நகரும் பாலையில் தேங்கிய பாசி படர்ந்த குளமென்றிருந்தேன். ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி ஜாடை காட்டினாள். மறுநாள் அங்கிருந்தது என் கூடு. இப்படித்தான் தோழதோழியரே எல்லாம் ஆரம்பமானது. தண்ணீரை மட்டுமே மறந்துபோய் ஏனைய அனைத்துச் செல்வங்களோடும் பாலை வழி நடந்த காதலர் நாம். அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை. நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது. சிறகுகளில் மிதக்கும் எனக்கோ நிலைத்தல் இறப்பு. மண்ணுடன…
-
- 7 replies
- 1.3k views
-
-
மரம்போல்வர் -நோயல் ஜோசப் இருதயராஜ் பகல் வெளிச்சத்தில் பச்சையச் செழிப்பால் துர்காற்றை உணவுப் பண்டங்கள் ஆக்கித் தர்மப் பிரபுத்துவம் செய்தும் உயிர் மூச்சாய்ச் சுழற்றியும் பெயர் நாட்டுவர். இரவில் துர்காற்றைப் பரப்புவர்; துதிமாரியில் சிலிர்ப்படைவர்; விமர்சனத் தகிப்பில் நரம்பு சுருங்கிச் சாயம் திரிந்த இலை சிந்துவர்; அணில்கள், பறவைகள், வழிஞரை மட்டும் இல்லாமல் பச்சோந்திகள், பாம்புகள், பல்லிகள், அட்டைகள் குரங்குகள், மரநாய்கள், சிறுத்தைகளையும் ஒளித்துக் காப்பர். மாடுகள் உரசி முட்டித் தேய்த்துச் சொறிந்து கொள்ளக் காட்டி நிற்பர்; இடி மழைக்குத் தம்மிடம் நம்பி ஒதுக்கியவர் வெந்து கருகி உயிரிழக்க உறுப்பிழக்க விடுவர். விவரமின…
-
- 2 replies
- 861 views
-
-
செடியின் துயரம் பலநூறு மொக்குகள் மலர புன்னகையுடன் பேசத் தொடங்கியது செடி முந்திக் கொண்ட ஒவ்வொரு மலரும் முணுமுணுத்தது தனித்தனி மொழியில் தானாகக் கண்டறிந்து சேர வழிகேட்டது கூந்தலுக்கும் கோயிலுக்கும் தோட்டத்தைச் சுற்றி இலைகளாய்ச் சிதறின சொல்சொல் என அவை முன்வைத்த வேண்டுகோள்கள் ஆளற்ற வெளியில் பரிதவிக்கும் பார்வையற்றவர்களென காற்றின் திசைகளில் விடைவேண்டி கைதுழாவி நடுங்கிக் களைத்தது காலம் சற்றே கடந்தாலும் ஒப்பந்தப்படியும் உரிமைப்படியும் பறித்தெடுத்தன பூக்காரனின் விரல்கள் போகுமிடம் தெரியாத இழப்பின் வலியில் கிளைகழற்றிக் குமுறியது செடி
-
- 9 replies
- 1.9k views
-