கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பறவைகள் குறித்த கவிதை உவமையை யாரும் புரிந்து கொள்ளவில்லை தச்சனே! - கவிதை வெய்யில் கவிதை: வெய்யில், ஓவியம்: ரமணன் “உழைப்பாளர்கள் சிலையிலிருப்பவர்கள் உழைப்பாளர்களே அல்ல ஒரு சிற்பியின் விருப்பத்திற்காக வெறுமனே அவர்கள் பாறையைப் புரட்டுகிறார்கள்” -கலைவிமர்சகருக்கு வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்தேன். “பொன்னுலகுக்குச் செல்லும் வாயிலின் அடைப்பைத் திறக்கிறார்கள் வெகுகாலமாய்” -சரிதான். அவருக்கும் வணக்கம் தெரிவித்தேன். “புரட்சி என்பது காலாவதியாகிப்போன இருமல் மருந்து” -ஓ...உங்களுக்கும் நன்றி. கீழே இறங்குங்கள் இதற்காகவா நண்பர்களே நாம் மெரினாவுக்கு வந்தோம் போதும் அந்த நீள மரத்துண்டங்களைக் கைவிடுங்கள் உங்கள் தசை முறுக்…
-
- 0 replies
- 2k views
-
-
இரு கவிதைகள்: தீபச்செல்வன் தணல்ச் செடி சமுத்திரத்தில் மண்டிய மையிருள் போல மறைந்திருந்த முகத்தில் அடுக்கியிருந்த இரகசியங்கள் சொல்லாத எண்ணற்ற கதைகள் கலந்தன தீயில் கருணைமிகு உன் புன்னகை கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின் சிறகுகளில் ஒழுகுகிறது தணல் நெருப்பை தின்று காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர் கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக வெடிக்கின்றன விதைகள் கந்தகம் சுமந்து வெடித்துருகிய இடத்தில் …
-
- 1 reply
- 1.1k views
-
-
வேண்டாம்... - கவிதை கவிதை: லிவிங் ஸ்மைல் வித்யா, ஓவியம்: ரமணன் சிற்றாறு எதிரிலிருக்க, காம்பௌண்ட் சுவருக்குள், தோட்டமும், தோட்டத்திற்கு நடுவேயான பாரம்பர்யமான உங்கள் வீட்டில், தலைவாழை விருந்துக்கு என்னை அழைக்க வேண்டாம்... நகரின் மையமான பகுதியில், ஆடம்பர அப்பார்ட்மென்ட்டில் ``கம் ஓவர், லெட்ஸ் ஹேவ் எ பியர்’’ என்றும் அழைக்க வேண்டாம்... கருங்கற்களால் வேய்த, செவ்வண்ணம் பூசிய, சிறிதும், பெரிதுமாய் டெரகோட்டாக்கள் நிரம்பிய, கலைவண்ணமான உங்கள் இல்லத்திற்கு கவிதை விவாதிக்க அழைப்பு விடுக்க வேண்டாம்... ``வாங்க, எங்கூருக்கு, நம்ம தோப்பு எளநிக்கும், அம்மா வக்கிற நாட்டுக்கோழி வறுவலுக்கும் ஈடே கிடையாது’’ எனத் தூண்டில் ப…
-
- 0 replies
- 1.7k views
-
-
கடனில் முளைத்த பூ - கவிதை கவிதை: நிலாகண்ணன், படம்: அருண் டைட்டன் சில்லறை மீன் வியாபாரி விபத்துக்குள்ளாகிக் கிடக்கின்றான் கூடையிலிருந்து சிதறிய மீன்கள் அவன் குருதியில் நீந்திக்களிக்கின்றது. பாவம் வியாபாரிதான் காற்று குடித்து மூர்ச்சையானான்... தவிர வண்ணமீன்கள் சுற்றும் தட்டைப்பேழைக்குள் நான் என் சைக்கிள் பெல்லை அடித்தபடி கவனமாய் நீந்திவந்தேன் என் வீட்டிற்கு. *** தையல் எந்திரத்திற்காக வாங்கிய கடனால் உறவில் ஒரு கிழிசல் நேர்ந்துவிடுகிறது. நல்லவேளை துணைவி கத்தரி நிறத்தில் அதன்மேல் ஒரு பூ வரைந்துவிடுகிறாள். ஒரு தாவரத்தைப்போல் படருகின்ற கடனால் மறைந்துகொள்ள ஒரு காடும் கிடைத்துவிடுகிறது. என்னைத்தேடி வனம்புகும் …
-
- 0 replies
- 1.3k views
-
-
படித்தவனும் இங்கே தான். படியாத மக்களும் இங்கே தான். பணம் சேர்த்தவனும் இங்கே தான். பரம ஏழையும் இங்கே தான். குடித்தவனும் இங்கே தான். புகைத்தவனும் இங்கே தான். நடித்தவனும் இங்கே தான் நல்லாய் இருந்தவனும் இங்கே தான். கடவுள் காப்பான் என்று இருந்து கடைசியில் வருபவனும் இங்கே தான். இனி கடவுள் தான் காக்க வேண்டும் என்று சிலருக்கு செல்வதும் இங்கே தான். சமரசம் உலாவும் இடமும் இங்கே தான். மனித வாழ்வில் இயற்கையின் இரண்டு நிலை ஐனனம் மரணம் இங்கே தான்.
-
- 0 replies
- 744 views
-
-
முன்புபோல யாழிணையத்தில் கவிதை மற்றும் பதிவுகளை பிரசுரிப்பதே கருத்துக்கள் விவாதங்களில் இருந்து கற்றுக்கொள்ளவே, அந்த நாட்கள் சுவடுகளுமின்றி மலையேறிவிட்டது சோகம் ? எல்லோரும் மெல்ல மெல்ல விடுபட்டபடிக்கு. இது இன்னும் பிரசுரிக்கப் படாத கவிதை. . என்னுள் காதலாய் நிறைகிறது. . அக்கினி நட்சத்திர வெய்யிலை வீழ்த்திய தென்றல் மழை என்னை அன்புடன் தொட்டு உசுப்பிவிட்டது. சிலநாட்கள் சன்னலின் வெளியே அங்குமிங்குமாக ஊஞ்சல் ஆடி பார்த்த வேப்பமரம் ”டேய் கபோதி நான் பூப்படைந்துவிட்டேண்டா” என்றபடி சன்னல்வரை வந்து வெண் முத்துச் சாரமாடும் தன் பசிய கூந்தலை அசைத்துக் காட்டியது. எல்லாவற்றையும் மிஞ்சி இப்பகூட என்னை சுற்றிக் குயில்கள் பாடுகின்றன. . எனது குட்டித்தோழியும் பத்திரிகை…
-
- 1 reply
- 821 views
-
-
கணமொன்றில் நிகழவிருப்பவை - கவிதை கவிதை:கார்த்தி, படம்: அருண் டைட்டன் யார் முதலில் சொல்வதெனும் காத்திருப்புகள் துயரம் கண்கட்டாத உறியடிபோல் உடைக்கத்தான் வேண்டும் சில மௌனங்களை. மழையினூடான தேநீர் உரையாடலில் கரைக்கவிருப்பது கெட்டிப்பட்டுப்போய் தேங்கிக்கிடக்கும் சில கசப்புகளை. எங்கோ தூரத்தில் யாரும் பார்த்திடாதபடி காட்டுப்பூக்கள் சேகரித்திருப்பது பிரியத்தின் அடைக்கான சில வாசனைகளை. பிம்பங்களற்ற தனிமையில் ரசம் குறையும் நிலைக்கண்ணாடி இன்னும் நினைத்துக்கொண்டிருப்பது நீங்கிடாத சில முகங்களை. சிவப்பின் எரிச்சலோடு பச்சைக்கான காத்திருப்பில் சில்லறை நீட்டி ஊக்கப்படுத்தாவிடினும் கண்ணாடி இறக்கி அள்ளிக்க…
-
- 0 replies
- 873 views
-
-
ஆனால் நீங்கள் துரோகிகள். (சாந்தி நேசக்கரம்) ----------------------------------------- வீரமென்போம் விடுதலை தாகமென்போம். போராடிக்களம் வென்ற வேங்கைகள் கதைகள் சொல்வோம். ஓயாத எம் போர்க்குணத்தை உலக அரங்கில் ஒலிக்கச் செய்வோம். நினைவு தினங்கள் ஒன்றையும் மறக்க , தவற விடோம். கவனமாய் கவிபடித்துக் கண்ணீர் வடித்து தேசியத்தின் பொருளைரைப்போம். செல்பியெடுத்துச் செல்லுலாபேசிக்குள் சேமித்து முகங்களை சமூகவலைகளிலே பகிர்ந்து சத்தியம் செய்வோம். வெல்வோம் வீரம் எங்கள் முகம் போராட்டம் எங்கள் பெருங்கொள்கை. புலத்திலிருந்து போராடுவோம். குடியெல்லாம் போர் தின்னக்கொடுத்து கடன்பட்டு கப்பலேறி புலம்பெயர்ந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
அம்மாவின் டிரங்குப் பெட்டி - கவிதை லீலாதர் மண்டலோயி இந்தியிலிருந்து மொழிபெயர்ப்பு : மணிபாரதி, ஓவியம்: செந்தில் மூன்றாம் நாளுக்குப் பின் பொறுமையிழந்த வீட்டுப் பெண்டுகள் ஒன்றுகூடித் திறந்துவிட்டனர் அம்மாவின் டிரங்குப் பெட்டியை சற்றே விவாதத்தின் பின் பகிர்ந்து கொள்ளப்பட்டன நகைகள் பெரிய பூசல் ஏதுமின்றி பெண்கள் மூன்றுபேர் ஆனதால் சேலைகளின் பகிர்தல் எளிதாக இருக்கவில்லை பூச்சி அரித்துவிட்ட கல்யாணப் புடவை மூலையில் கிடக்க உடைந்த மூக்குக் கண்ணாடி இன்னொரு பக்கம் இளமை தொட்டு வயோதிகம் வரையிலும் அம்மா கண்ட ஈரம் நிறைந்த காட்சிகள் அதில் பதிந்திருந்தன ஆனால், அவர்களுடைய கண்களுக்குத் தெரியவில்லை ஒரு மடிச்சீலை இருந்தது ர…
-
- 1 reply
- 730 views
-
-
கிழவியும் அவள் புருஷனும் - கவிதை கவிதை: கார்த்திக் நேத்தா, ஓவியம்: ஹாசிப்கான் மலை மாடு சாய்வதாய் வெளியில் சரிகிறது இரவு. முதுகில் ஒட்டிய மணல் உதிர்வது போல மழை விழுந்து கொண்டிருந்தது. அந்தி பத்திக் கொண்டு போகும் வெள்ளாட்டங்குட்டியாய் நிலவு. தூரத்துக் குடிசையில் விளக்கு விடும் எச்சில் முட்டையாக சுடர். சுடரின் விரிந்த கூந்தலாக சுற்றிலும் அலையும் இருள். பரதேசம் போன புருசனுக்காக பணியாரம் சுட்டு வைத்து வாசலில் செத்தக் குந்துகிறாள் கம்பூணிக் கிழவி. குளிரில் நடுங்கும் ஆட்டு வால் போல அவள் உதடு எதையோ முணுமுணுத்தது. சாராய கவிச்சியோடு வந்து சேர்கிறான் அவளின் புருஷன். கிண்ணியில் பணியாரம் அடுக்கித் தந்து விட்…
-
- 0 replies
- 1.9k views
-
-
சிங்கள நண்பா! உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்! ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை! உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்! உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்! முடியவில்லை என்னால்; காரணம் இதே போல ஒரு மாதத்தில்த்தான் அவற்றை நீ வெட்டிவிட்டாயே! நீ மறந்திருப்பாய். என்னால் மறக்கமுடியவில்லை. காரணம் என்னால் நடக்கமுடியவில்லை! நினைவிருக்கிறதா உனக்கு.. நீ மறந்திருப்பாய். நீ கொலைவெறியோடு விரட்டும் போது; ஒரு கையில் குழந்தையும் இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம். நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள் உனக்காய் அழமாட்டமா? ஆனால்; மன்னித்துவிடு சகோதரா... இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை! நீ தண்ணீரில் தான் தத்தழிக்கிறாய் நாங்கள…
-
- 20 replies
- 3.9k views
-
-
1991. 06.12 அன்று மகிழடித்தீவு கிராமம் இரண்டாவது படுகொலையை எதிர் கொண்டது. எரிகிறது வீரம் நிறைந்த மண் உருகிறது உயிர்கள் கருகிறது உறவுகள் ஓடுகிறார்கள் எம் மக்கள் கதறுகிறார்கள் வாலிபர்கள் பாதகர்கள் கையில் யுவதிகள் சிக்குண்டு தவிக்கிறார்கள். தஞ்சமடைந்தனர் ஞானமுத்து குமாரநாயகத்தின் அரிசி ஆலையிலே துப்பாக்கிக்கு இரையாகி வெந்த அனலில் கருகிப் போகியது எம் உறவுகள். தாயவள் முலைப்பால் ஊட்டிய நிலையிலே தான் பெற்றெடுத்த கைக்குழந்தையுடன் கறைபடிந்திருந்தாள் இறந்த உயிர்கள் ஓவியங்களாகவே இருந்தன. அன்றைய நாள் இருட்டானது எம்மூர் மக்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட உறவுகளை இழந்து நின்றோம் கைக்குழந்தையும் வயோதிபத்தையும் பார…
-
- 1 reply
- 1.4k views
-
-
என் அன்பே! !! முழு நிலவான உன்னை பற்றி ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன். என் மேசை எங்கும் வார்த்தைகள் நட்சத்திரங்களாய் கொட்டி க்கிடக்கின்றன. என் அன்பே! என் வெளிச்சம். உன் காதல் எனக்கு காவல். உன் பேச்சு. .... எனக்கு இன்பம் உன் குரல். .. என் தேடல். உன் நலம் என் நிம்மதி. உன் நிம்மதி என்சந்தோசம். உன் உயிர் அது என் உயிர். என் அன்பே. ........
-
- 1 reply
- 1.3k views
-
-
வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்கள் அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய தனித்தலைபவனின் காலடிகளைத் தொடரும் நாரைகளும் மௌனம் கலைத்தேதும் பேசவில்லை 02 அன்று உன் முன்னே குழந்தைகளை துரத்திச் சுட்டழித்த ஹெலிகெப்டர்கள் இன்றுன…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிகள் முத்தமிட்டுக்கொள்ளும் குகை ஓவியம் - கவிதை கவிதை: வெய்யில், ஓவியங்கள்: செந்தில் 1 நிலமிழந்த சிறுவர்கள் மிச்சமிருக்கும் ஒரு பனங்கிழங்கை சூரியனின்மீது வைத்துச் சுடுகிறார்கள் சனமிழந்த காகத்துக்கும் நாய்க்கும் இரு துண்டுகளை ஈயும் அவர்களை கடலின் கண்கள் வெறித்துப் பார்க்கின்றன ஈழத்துக்கும் தனுஷ்கோடிக்கும் மாறிமாறி நீந்தும் ஆமைக்கு அந்த ஒரு சேதி இன்னும் சொல்லப்படவில்லை. 2 முப்பது வயதிருக்கும். பிள்ளைகளை உறக்கத்தில் ஆழவிட்டு புலியேறிப் போனாள். காட்டில் நிறைய்ய நிறைய்ய மூங்கில்கள் வளர்ந்தன பூத்தன எரிந்தன வளர்ந்தன எரிந்தன பூத்தன. தள்ளாடி வருகின்றன கால்கள் திரும்பி காற்றை நரைகூந்தல் நடமிடுகிறது கிழட்டுப்புலிகள் அவள் தோள…
-
- 0 replies
- 1.4k views
-
-
காதல் ....எந்த. .....? நிச்சயித்து காதல் செய்தால் -பாசம் .. நிறத்திற்காக காதல் செய்தால் -காமம் . அழகிற்காக காதல் செய்தால் -மோகம் . பணத்திற்காக காதல் செய்தால் -வேஷம். குணத்திற்காக காதல் செய்தால் -நேசம். கண்டவர்களை யெல்லாம் காதல் - செய்தால் நாசம். இதில் நாம் காதல். .எந்த.....? எங்கெங்கு போவேனோ. என்னென்னஆவேனோ . தலையில் எழுதியது தலைகீழாக போகுமோ. சுற்றித்திரிந்தும் கிடைக்காத வரமென்றெண்னி உன்னை பார்க்க செருப்பாய்தேய்ந்தேன். வாழ்வென்னும் வெகுமதியை கடவுள் நமக்கு வழங்கியிருக்கிறார். நம் வாழ்தலைப் பொறுத்தே அது மகிமையடைகிறது என காட்டியவன் நீ. எந்த கனவையும் நன…
-
- 0 replies
- 1.1k views
-
-
அளவுகள் தொடர்பான பிரச்னை! - கவிதை செல்வி ராமச்சந்திரன், ஓவியம்: ரமணன் உன்னை எனக்கு எவ்வளவு தெரியுமென்று நம்புகிறேனோ அவ்வளவு தெரியாமலும் இருக்கிறது முதல்முறையாக இன்று உனக்கு ஓர் ஆடை வாங்கச் சென்றபோது உன் அளவு எனக்குத் தெரியாமல் போய்விட்டது எதிர்பாராத ஒரு பரிசுக்கான அளவை உன்னிடமே எப்படிக்கேட்பது என்றும் எனக்குத் தெரியவில்லை இருளில் தழுவிக்கொண்டபோது உன் தோள்கள் எப்படி விரிந்திருந்தன என்றோ உன் மார்புகள் எப்படிப் பரந்திருந்தன என்றோ நான் அறிபவை எல்லாமே உத்தேசமான அளவுகளாக இருந்தன எனது ஒவ்வொரு மனநிலையிலும் அவை வேறு வேறு அளவுகளாக குறுகலாகவோ பரந்ததாகவோ இருக்கின்றன உன்னைப்போலவே இருந்த மாடல் பொம்மையின் முன் நி…
-
- 0 replies
- 879 views
-
-
தேநீர் கவிதை: வேனல் கோடையின் வாசனையை வேப்பம்பூ காட்டிவிடுகிறது. செய்கூலி இல்லாமல் வெயில் அதிகமாகவே ஜொலிக்கிறது. . பகல் பொழுது மிக நீண்டதாய் ... திண்ணைகளும் காலியாகின்றன செல்சியசும் புரியவில்லை பாரன்ஹீட்டும் விளங்கவில்லை எல் நினோ அத்துப்படியில்லை ஓசோனில் ஓட்டையும் அறியவில்லை போன வருஷத்தைக் காட்டிலும் வெயில் ஜாஸ்தி என்பதே பழகிப்போச்சு சூரியனுக்கும் பூமிக்கும் லட்சம் மைல்கள் தூரம் இல்லை கைக்கு எட்டும் தூரம் தான் சோஷலிசமாய் வெப்பம் …
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்: உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொர பொண்ணு கிறங்குறேன் நொருங்குறேன் பாரு நான் உன் மாப்புள்ள இல:உன்னோட இவ ஒன்னு உன்ன மறந்தா வெறும் மண்ணு கிறங்குறேன் நொருங்குறேன் ஆனால் அவனே என் மாப்புள்ள இந்:கொஞ்சி நான் மிஞ்சுறேன் மிஞ்சி நான் கொஞ்சுறேன் ஏன்டி இந்த நாடகம் இல: கெஞ்சி நான் அஞ்சுறேன் அஞ்சினா கெஞ்சுற நானும் அவன் ஞாபகம் இந்:சொல்லாம சொல்லாம மூடி வெச்சு என்ன அங்கேயும இங்கேயும் அலையவிட்ட இல: அல்லாம கில்லாம நோக வெச்சு என்ன முன்னாலும் பின்னாலும் மொன இந்: ஓத்துக்கிட்டா மாமன் தான் கட்டிக்க வாரேன் வாரேன் இல: வெட்டுனா ஒட்டுறா ஒட்டுனா வெட்டுறா லூசு பையன் மாதிரி …
-
- 3 replies
- 1.7k views
-
-
சிங்கள நண்பா! உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்! ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை! உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்! உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்! முடியவில்லை என்னால்; காரணம் இதே ஒரு மாதத்தில்த்தான் அவற்றை நீ வெட்டிவிட்டாயே! நீ மறந்திருப்பாய். என்னால் மறக்கமுடியவில்லை. காரணம் என்னால் நடக்கமுடியவில்லை! நினைவிருக்கிறதா உனக்கு.. நீ மறந்திருப்பாய். நீ கொலைவெறியோடு விரட்டும் போது; ஒரு கையில் குழந்தையும் இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம். நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள் உனக்காய் அழமாட்டமா? ஆனால்; மன்னித்துவிடு சகோதரா... இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை! நீ தண்ணீரில் தான் தத்தழிக்கிறாய் நாங்கள் கண…
-
- 7 replies
- 1.4k views
-
-
தேநீர்க் கவிதை: அவள் இல்லாத... முத்து சுகா அவள் இல்லாமல் சபிக்கப்பட்ட என் பொழுதுகள் விடிந்துகொண்டிருக்கின்றன ஏழு மணிக்கும் எட்டு மணிக்கும். ஜீவனில்லாத வீட்டுக்கு எத்தனை கதவு..? எத்தனை பூட்டு..? எப்போதும் ஊளையிடும் ஜன்னல் காற்றுகூட உன்னைத்தான் கேட்கிறது. நீ தொட்டெடுக்கக் காத்திருக்கும் வாசற்படி செய்தித்தாளாய் நான். அருகில் இருந்தாலும் அப்பால் இருந்தாலும் …
-
- 0 replies
- 1k views
-
-
தேநீர் கவிதை: ஓவியங்கள்! பிசிறின்றி நேர்த்தியாய் வரையப்பட்ட ஓவியங்கள், அழகான சட்டமிடப்பட்டு கண்காட்சிக்கென எடுத்து வைக்கப்பட, ஓவியக் கூடத்தில் வரையும்போது கீழே சிந்தப்பட்ட வண்ணப் பிசிறுகள் பார்வையை ஈர்க்கின்றன... சட்டமிடப்பட்ட ஓவியங்களை விடவும் கூடுதல் அழகோடு. ***** வரைந்து முடித்த ஓவியத்தில் ஏதோவொன்று குறைவதான நிறைவின்மையில் ஆழ்ந்திருந்தான் ஓவியன். உள்ளே ஓடி வந்த …
-
- 0 replies
- 1.7k views
-
-
தன்மானம் இழந்து தலைகுனிந்து தரையில் தமிழன் வீழ்ந்திட்ட நாள் இன்று ....... என்று இனி நாம் நிமிர்வோம் ??????? ஏகாதிபத்தியத்தின் எமாற்றலில் எமக்கானவை எல்லாம் இழந்தோம் இன்னும் தான் வரவில்லை எவரும் செருக்கிழந்து உருக்குலைந்து செல்வமெல்லாம் இழந்தபின்னும் சேர்ந்திடாதிருக்கிறோம் நாம் கொலைக்களங்கள் பல கண்டு கொடுமைகள் நிதம்கொண்டு அடிமைகளாய் வாழ்கையிலும் கோபமின்றி குரலின்றி கோழைகளாய் வாழ்கின்றோம் செங்குருதி தோய்ந்து செத்தழிந்து போனவர்கள் கந்தகக் காற்றில் கரைந்து போனவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து போனவர்கள் அத்தனை பேரிடமும் மண்டியிட்டு மன்னிப்புக் கோருகிறேன் …
-
- 5 replies
- 1.2k views
-
-
நாங்கள் பிறை காண முன் அவன் சிறை காண வேண்டும் நாங்கள் கஞ்சி குடிக்கும் போது அவன் அஞ்சி துடிக்க வேண்டும் நாங்கள் நோன்பு பிடிக்க முன் அவன் கம்பி பிடிக்க வேண்டும் நாங்கள் ஈச்சம் பழம் உண்ண முன் அவன் பேச்சுப் பலம் மறைய வேண்டும் நாங்கள் கேட்டு அழும் துஆவால் அவன் கூட்டுள் விழ வேண்டும் நாங்கள் நம்பி எண்ணும் திக்ரால் அவன் கம்பி எண்ண வேண்டும் நாங்கள் எழுந்து சஹர் செய்ய முன் அவன் ஒழிந்து போக வேண்டும் நாங்கள் தானம் செய்யும் மாதத்தில் இந்த ஞானம் பொய்யனாக வேண்டும் நாங்கள் கேட்டு அழும் குனூத்தால் அவன் ஆட்டம் நிற்க வேண்டும்…AkuranaToday.com | Read more http://www.akuranatoday.com/news/?p=138917 .
-
- 4 replies
- 1.1k views
-
-
வைகாசி 18.......? எங்கள் முகவரியை முற்றாக தொலைத்த நாள். அகத்தினிலே தீராத வலியை புதைத்த நாள். யேகத்தினிலே எல்லோரும் விழிசொரிய சொந்த நிலத்தை இழந்த நாள். வைகாசி காற்று கூட தனது வழமையான செயலைக் கூட செய்ய முடியாமல் கண்ணீர் விட்டநாள்.......
-
- 9 replies
- 1.6k views
-