கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
உன் கூந்தலுக்கு அழகு என வாங்கினேன் மல்லிகைப்பூ, தென்றலே நீ கொடுத்தாய் ஒரு மாபெரும் வெறுப்பு நீ நடந்தாய் அழகாக நான் சொன்னேன் என் விருப்பு, நடந்த உன் பாதம்தனில் நீ எடுத்தாய் செருப்பு உன் முத்துப் பல் தெத்துப் பல் அழகினை காட்டியதுன் சிரிப்பு, எடுத்துச் சொன்னேன், உன் அப்பன் கொண்டுவந்தான் பிரம்பு. நீ பிறந்த அந்நாளில் யாவருக்கும் நீ கொடுத்தாய் இனிப்பு, எனக்கு மட்டும் நீ கொடுத்தாய் நா தாங்கா ஒரு உறைப்பு. என் காதல் நீ அறிய நான் மிதித்தேன் நெருப்பு, நீ சொன்னாய் உன்னிடம் இதுவெல்லாம் வேகாத பருப்பு. உன் மீது நான் கொண்ட காதலால் அடைந்தேன் வெறுப்பு நீ உணர்ந்தாய் காதலையே நான் அடைந்தேன் மலைப்பு. எம் காதல் கதை…
-
- 0 replies
- 585 views
-
-
ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... ஒரு கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....!!! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி என் மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறிய செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....!!! # என் இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்கு தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும் இதயத்துக்கு ... புரியும் ..... ரசிகனே உனக்குத்தான் புரியும் .... நான் படுகின்ற வலியின் வலி ......!!! # ஒருதலையாக காதலித்தேன் ... காதலின் இராஜாங்கம் …
-
- 0 replies
- 4.2k views
-
-
உன்னைக் காட்டிலும் ரோஜா செடி பரவாயில்லை , நீ என்னை மறந்த போதிலும் எனக்காக தினம் தினம் மலர்தூவிக்கொண்டிருக்கிறது அந்த அன்பு ரோஜாச்செடி...
-
- 0 replies
- 667 views
-
-
எல்லோரும் புறப்படுவார்கள் ஆயத்தங்கள் மிக மிக இலாவகமாகவே நடக்கின்றது நேற்று ஒருவன் புறப்படிருந்தான் இன்று ஒருவன் புறப்பட்டுவிட்டான் நாளை ஒருவன் புறப்படுவான் சிலர் அடம் பிடிக்கின்றார்கள் நிச்சயமானவர் தாங்கள் என்று அவர்களை அதட்ட முடியவில்லை அது அறியாமையின் முதற்புள்ளி வலுக்கட்டாயமாக இழுக்கவும் முடியவில்லை அழுத்தங்கள் கொடுப்பது அறிவுடையவன் செயலன்று இப்போது என்ன செய்வோம் இந்த பயணத்தை நினைத்து உறக்க அழுவோமா? இல்லை இருக்கும் காலத்தை இனிமையாக்குவோமா? யாரெல்லாம் ஆசைப்படுகிறார் கோவப்படுகிறார் கொஞ்சித்திரிகிறார் கொள்கை பரப்புகிறார் வாருங்கள் உரக்கத்சொல்வோம் எங்கள் பயணத்தை எங்கலோடு விட்டு விடுங்கள். கட்டாயம் திணிக்காதீர்கள் அத…
-
- 0 replies
- 697 views
-
-
கிளைகளை வெட்டி விட்டேன் பக்கத்துவீட்டுக்காரன் ஒரே சத்தம் காணியை கடத்து கொப்பு வருவதாக மீண்டும் மீண்டும் துளிர்த்து அத்திசையே போகிறது கொஞ்சம் யோசிச்சேன் மரம் இருந்தால் தானே மாதம் மாதம் வெட்டும் வேலை நச்சரிப்பு தாங்கும் எண்ணம் இல்லை இனி ஆதலால் மரத்தை அறுத்து விட்டேன் அட ஆறுதலா அமரும் இடம் எந்த போக்கத பயல் வெட்டியது பக்கத்துக்கு வீட்டு கிழவி இது ஒம்மென ஆச்சி என்றால் பேத்தி எதிரில் வந்த வேலிக்காரன் ஏன் மரத்தை வெட்டினியல் என்றான் இருக்கும் போது என்னை நீ இருக்க விட்டியா இப்ப சோகம் வேர் இருக்கு மீண்டும் துளிர்க்கும் கிளை என் பக்கம் வரட்டும் பிள்ளைக்கு ஊச்சல் கட்டனும் இது அவன் சேர்த்து இருத்து கதை பேசலாம் இனி இது நான் .
-
- 0 replies
- 769 views
-
-
தொழிலாளர் தினம் பாரிலுள்ள தொழிலாளர் பர்ர்த்திருந்த மே ஒன்று ஊரெங்கும் உன்னதமாய் உருவெடுக்கும் ஊர்வலங்கள் தினக்கூலி ஊழியரும் ஆர்ப்பரிக்கும் மேதினத்தில் மனக்கெழிர்ச்சி பொங்கியங்கே முழக்கமிடும் நாளின்று அலுவலகத் தொழிலாளர் ஆலை நிறுவனங்கள் கல்லுடைப்போர் மற்றும் கட்டிட வல்லுனர்கள் உழவுசெய்து உணவளிக்கும் உத்தமத் தொழிலாளி வழக்கம் போல் விதைகளைத் தூவிநிற்க இன்று மூழ்கிநிற்கும் இயற்கையின் வருகையிலே நன்றேயுழைத் தால்தான் உணவில்லா நிலைமாறும் அன்னாளே பொன்னாளாய் ஆறுகின்ற வார்த்தையொடு உழைப்பவரின் வியர்வையிங்கே உலருமுன்னே ஊதியங்கள் அழைத்தங்கே அளித்திடல் வேண்டுமென ஆன்றோர்கள் அன்போடு அறவார்த்தை அனைவர்க்கும் பொதுவாக உன்னத கருத்துக்கள் உவந்தார்கள் அந்நாளில் உ…
-
- 0 replies
- 1k views
-
-
பார்த்தீபன் அன்று பசியோடு உந்தன் வாசலில் படுத்திருந்தானே முருகா! அவன் தேசப் பசி போக்க கண் திறந்து நீ அன்றுபார்த்திருந்தால்..., தனை வருத்தும் எவருக்கும் நீயருள்வாய் என்றவர்கள் உணர்ந்திருப்பர். குண்டுமழை பொழிகையில் குடியிருந்த வீடுவிட்டு எஞ்சிய உயிர் காக்க ஏதிலியாய் அவர் தன்னிலம் நீங்கி உன்னையும் தான் விட்டு ஓடோடிப்போகையிலும் கந்தனே நீயுமோ எம்மை கைவிட்டாய் என்றுதான் கண்ணீர் உகுத்து கரம்கூப்பினர் அன்று அசுரனை அழித்த உன் ஆறுமுகம் காட்டி அபயம் அளித்திருந்தால்..., கூப்பிட்ட குரலுக்கும் குவித்த கரங்களுக்கும் செவிசாய்த்து நீ அவர் துயர் துடைப்பாய் என்றவர்கள் நம்பியிருப்பர். ஈற்றில் முள்ளிவாய்க்கால் தன்னில் முடிவற்று செத்தொழ…
-
- 0 replies
- 739 views
-
-
"அன்புக்கோர் இலக்கணம் ஆனவள் அன்னை" "அன்புக்கோர் இலக்கணம் ஆனவள் அன்னை அகிலத்தில் அவளைப்போல் வேறெவரும் இல்லை? துன்பங்கள் தாங்குமவள் தியாகமோ பெருவியப்பு தூயபெரும் இறைவனுக்கோ உலகிலிவள் மறுபதிப்பு!" "சுமையென நமையொரு கணமும் நினையாதாள்; சூழும் இடர்கள்நோவு துயரங்கள் பொறுப்பாள்; குமையாள்; கொதியாள்; குலுங்காமலே நடப்பாள்; குழவி, மடி தவழ்கையிலோ கொண்டதுன்பம் மறப்பாள்!" "நடைதவறி வீழ்கையிலே நாடிவந்தே அணைப்பாள்; நமதவறுகள் மறந்தே மன்னித்தன்பால் பிணைப்பாள்; கடையனென்று பிறர்சொலினும் கைதடுத்துக் காத்திடுவாள்; கருமத்தில் வெல்ல மெல்ல நெஞ்சில் துணிவேற்றிடுவாள்!" "வானும் கடல்மலையும் கானகமும் விந்த…
-
- 0 replies
- 426 views
-
-
கிழிந்த சட்டையுடன் துணிக்கடைக்கு போனேன்....! ஒரு சட்டையை காட்டியவன் மற்றொன்றை காட்ட மேலும்,கீழும் பார்த்தான்..! பட்டு சட்டை போட்டவன் கைக்குட்டை கேட்டான் மலைபோல் குவித்து காட்டினான் அவனுக்கு...! நான் எடுத்து வந்தேன் அவன் மறுத்து சென்றான்...! -வேடந்தாங்கல் http://www.ilankathir.com/?p=6291
-
- 0 replies
- 516 views
-
-
ஈழத்தமிழருக்காக பிரளயனின் கலைக் குரல். -வ.ஐ.ச.ஜெயபாலன் இரண்டு இரவுகளும் ஒரு பகலும் என்னால் எழுத முடியவில்லை. பண்டிச்சேரி பல்கலைக் களக நடபகத்துறையினர் தயாரிப்பில் பிரளயன் இயக்கிய பாரி படுகளம் நாடகத்தின் தாக்கத்துள் இருந்து இன்னும் வெளிவர இயலவில்லை என்பதுதான் அதற்க்குக் காரணம். மூவேந்தர்களால் சுற்றி வழைக்கப் பட்ட பரம்பும் கூலிக்குப் போராட வந்த மூவேந்தர் படையும் மண்ணையும் மக்களையும் மீட்க்கப் போராடும் பெண்களும் ஆண்களும். மாவீரர் தின நடுகல் வழிபாடும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் தமிழால் ஒன்றுபடுவோம் என்றும் எழும் வானதிரும் கோசங்களும். சுவடிக்குள் உட்சுவடியாக ஈழத்தமிழர் போராட்ட ஆதரவு கலைத்துவமாக வெளிப்பட்டு மனசு கனக்க நிறைந்தது. மாவீரர் நடுகல் வழிபாட்டில் போர…
-
- 0 replies
- 770 views
-
-
உன் நினைவால் வாடுகிறேன்...... கவிதை.... காலையிலே எழுவதற்கு மறுக்கும் கண்கள்... சில நாளாய் அதிகாலை விழிக்கிறது.... மனதெல்லாம் லேசாகி பஞ்சாகப் பறக்கிறது.... இந்த மாற்றம் என் மனதில் சில நாள்தான்.... என் மனதை வாடகைக்கு எடுத்துக்கொண்ட வஞ்சிமகள் நினைவால்தான்.... வாடகை தராதே நிரந்தரமாய் வந்துவிடு... சொல்ல நினைக்கிறேன் முடியவில்லை; காரணம் நான் அவளின் முகமின்னும் பார்க்கவில்லை.... என் காதலை சொல்வதா விடுவதா...? அவளின் கண்பார்த்தால் தெரிந்துவிடும்... இல்லையேல் அவள் கதை கேட்டால் புரிந்துவிடும்... அவளின் கண்ணும் பார்க்கவில்லை... அவள் பேச்சும் கேட்கவில்லை... ஆனாலும் அவளின் கண்ணாடி உருவம…
-
- 0 replies
- 787 views
-
-
தேநீர் கவிதை: பகையொன்றுமில்லை பறவைகளே! எனக்கும் என் குடியிருப்புப் பகுதியின் பறவைகளுக்கும் பல ஆண்டுகளாகவே பகை நிலவுகிறது! மின் தடையால் ஊர் இருண்ட ஒரு முன் இரவு நேரத்தில் நெருப்பு விளக்கேந்தி - நான் தெருப் பக்கம் வந்தபோது குபீரெனப் பறந்த - என் வாசல் மரத்துப் பறவைகள், அந்த சம்பவத்திற்குப் பிறகு ஏனைய பறவைகளையும் எனக்கெதிராகத் தூண்டி வருகின்றன! அலைபேசியைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வெளியே - நான் ஓடிவரும் நேரங்…
-
- 0 replies
- 734 views
-
-
பரமேஷ்வரா எங்கேயடா உன் அந்த அழகிய புன்னகை!!!!! ஆகாரம் தண்ணி இன்றி இருந்த போதும் முகம் நிறைய புன்னகையை அள்ளி தந்தாய் உன் உடல் சோர்ந்து போய்க் கொண்டிருக்கையிலும் உன் புன்னகையை அள்ளி தந்தாய் மக்கள் வெள்ளம் உனை சூழ்ந்து கொண்டிருந்த போதும் உன் புன்னகையை அள்ளி தந்தாய் உன் முடிவில் மாற்ரம் இல்லை என மன உறுதியுடன் நீ உரைத்த போதும் உன் புன்னகையை அள்ளி தந்தாய் உன் அருகில் வந்தவர்க் கெல்லாம் உன் புன்னகையை அள்ளி தந்தாய் தற்போது மட்டும் உன் புன்னகையை எங்கே புதைத்து விட்டாய் ஒரு முறையேனும் உன் புன்னகையை எமக்காக தருவாயா உன் வலி தெரிகிறது இருந்தும் உன் புன்னகைக்காக எம் மனங்கள் ஏங்குகின்றன......... காத்துக் கிடக்கின்றன........... எங்கள் உடன் பிறவா உறவே ஒரு …
-
- 0 replies
- 1.4k views
-
-
மாவீரர் தினம் 2012 எதிரி புலத்தில் களத்தில் மாணவர்கள் நேற்று அழித்தோம் இன்று உருவாக்கினோம் ஆண்கள் மேல் தடை பெண்கள் விளக்கால் உடை கைப்புலிகளை அழித்து உணர்வுப்புலிகளை உசுப்பித்து உலகத்திற்கும் சிங்களத்திற்கும் வெல்ல முடியாது தமிழன் விடுதலை உணர்வை !!!!!!!
-
- 0 replies
- 310 views
-
-
மரத்திலிருந்து விழும் ... பழுத்த இலை சொன்னது ...!!! நான் எத்தனையோ முறை .. வானத்தை தோட முயற்சித்தேன் .. முடியவில்லை -என்றாலும் .. கலங்கவில்லை என் அடுத்த .. வாரிசு நிச்சயம் தொடும் ...!!! என் குழந்தை துளிர் .. நிச்சயம் எட்டுவான் ... தந்தை செய்து முடிக்காத .. நாற்காரியத்தை -மகன் நிறைவேற்றியே ..... ஆகவேண்டும் .....!!! & கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
-
- 0 replies
- 947 views
-
-
மனிதம் செத்து விட்டதோ – என் மனம் சொல்கிறது மனிதம் செத்து விட்டது. செய்யாத குற்றத்துக்காக இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள என் மனம் குறுகுறுக்கிறது . என் செய்வேன் எனக்கென்று பேச யாருண்டு எங்களுக்கென்று எங்கே நாடுண்டு எவரிடம் கேட்பேன் நீதி..! என் குடும்ப சுமையை இறக்குவதற்காக – என் தலைமேலே நான் ஏற்றிய சிலுவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது தான் மனிதாபிமானமற்ற அரக்கர்களிவர்கள் என உணரவைத்தது. இதைவிட என் குடும்பத்தோடு எனது நாட்டிலிருந்து … பட்டினியால் செத்திருக்கலாமோ என எண்ணுகிறேன். ஒரு பச்சிளம் குழந்தையை நான் கொண்றேன் என்று பழி என்மீது விழுந்தது. அந்த பிள்ளையினால் தானே எனக்கு கிடைத்தது வாழ்வு நானேன் கொல்ல வேண்டும். பால் குடிக்கும் ப…
-
- 0 replies
- 513 views
-
-
எழுதியதெல்லாம் மொழிபெயர்ப்புத்தான். இளைஞர் விழிகளில் எரியும் சுடர்களையும், போராடுவோரின் நெற்றிச் சுழிப்புகளையும் இதுவரை கவிதையென்று மொழிபெயர்த்திருக்கிறேன்! ******* உயிர்ப்பின் முதல் நொடியை உணர முயல்கிறேன் மீண்டும் பொருளில் உணர்வு தோன்றிய கணம் ஓடுவரா முட்டையின் முதல் அசைவு வித்தின் மண்தேடும் ஆதி விழைவு நரைத்து ஒரு முடி உதிர்ந்த சமயம் உணர்ந்தேன் அது என் மறதியின் முதல் நொடி ****** மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா எங்களோட மானம் என்ன தெருவில கிடக…
-
- 0 replies
- 816 views
-
-
புத்துணர்ச்சியூட்டிப் புதுவாழ்வைக் காட்டுத்காய் பொங்கல் நன்னாள் எம்முன் புன்னகைத்து வருகிறது. வாருங்கள் நண்பர்களே வரவேற்போம் புத்தாண்டை நீர்மேல் எழுத்தாகி நிலைகுலைந்து எம் வாழ்வு போரால் அழிந்ததனைப் புதுப்பிக்க, எங்களது இன்னல்கள் நீங்கி இனியதொரு பொற்காலம் மின்னி ஒளிர விளக்கேற்றி வாருங்கள். போனதெல்லாம் போகட்டும் புது வாழ்வு இனிவேண்டும் காய்ந்து நிலம்பிழந்து கட்டாந்தரையாகி ஓய்ந்ததனால் எல்லா உயிர்ப்பும், எம் தாயகத்தில் சாய்ந்தவைகள் மீண்டும் சாம்பரிலே நின்றெழும்ப பாடிடுவோம் தோழர்களே பண்ணெடுத்துப் பாடிடுவோம் வேதமுதல்வன் விழிதிறந்து நெற்றியிலே ஊதிப் பொறிசிதற உள்ளங்கள் ஒன்றிணையச் சந்தமெடுத்துத் தமிழினிக்கப் பாடிடுவோம். ஆதிசிவன் பெற…
-
- 0 replies
- 928 views
-
-
ஈமத்தாழி - கவிஞர் தீபச்செல்வன் மஞ்சளும் சிவப்புமான ஏதேதோ பொருட்களெல்லாம் தோரணங்களாக துயிலும் இல்ல நினைவுப்பாடலை முணுமுணுக்கிறான் யாரோ ஒரு சிறுவன் அழ முடியாதவர்களுக்காய் வானம் உருக விளக்குகளின் ஒவ்வொரு துளி நெருப்பிலும் தெரிந்தன களம் சென்ற வீரர்களின் புன்னகை மற்றும் இறுதிக் கையசைப்பு துயிலும் இல்லங்களின்மேல் முகாங்கள் கல்லறைகளின் மேல் காவலரண்கள் சிதைமேடுகளின் மேல் துப்பாக்கிகள் மண்ணுக்காய் மாண்டுபோனவர்கள் உறங்கும் மயானங்களைகளிலும் துப்பாக்கிகள் புதையுண்ட சிதைகளோடான யுத்தம் இன்னும் முடியவில்லை வாழ்தலும் இல்லை நினைவுகூர்தலும் இல்லை கண்ணாடிகளெங்கும் தெறிக்கின்றன தடைசெய்யப்பட்ட முகங்கள் சிதைக்கப்பட்ட கல்லறையை சுற்…
-
- 0 replies
- 591 views
-
-
1957ல் களபலியான திருமலை நடராசனில் இருந்து விடுதலைகாக உயிர்நீத்த அனைத்துப் போராளிகளுக்கும் என் அஞ்சலிகள் - வ.ஐ.ச.ஜெயபாலன் 1957ல் ஈழத் தமிழர் விடுதலைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்துத் தியாகிகளுக்கும் அஞ்சலி மரியாதை செய்யவேண்டும் என்கிற கருத்தை கால்நூற்றாண்டுகளுக்கும் முன்னிருந்தே நான் கேட்டு வருகிறேன். வன்னியிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நான் கலந்துகொண்ட நிகழ்வுகளில் ”திருமலை தியாகராசன் முதல் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் கழபலியான அனைத்து அமைப்பு தியாகிகளுக்கும் அஞ்சலி” செலுத்தியே ஆரம்பித்திருக்கிறேன். எங்கும் எனக்கு எதிர்க்குரல் எழுந்ததில்லை. . இந்த கருத்தியலை போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே பலர் வாயிலாக நான் கேட்டிருக்கிறே…
-
- 0 replies
- 1.1k views
-
-
அன்றாட நிகழ்வுகள் என்னை அழ வைத்துக் கொண்டிருக்கின்றன. கூண்டோடு மாண்டு போவதாய் கனவு கண்டேன்; அது கொஞ்சம் பலித்தது போலும். அடுப்படியில் அம்மாவும், அரை உடலாய் அப்பாவும், அக்காவை காணவில்லை, அண்ணனாக யாருமில்லை. ஆனாலும் நான் தனியாகி விட்டேனா? - அதுவுமில்லை! ஊரில் என்னைப் போல் பல்லாயிரம் பேர் உண்டாம். எண்ணைக் கொள்ளைக்காக என்னை, மண்ணைத் தின்னச் செய்தார்கள் இந்த மாயாவிகள். உயிரியல் ஆயுதம் மறைத்து வைத்தோம் எனக் கூறி என் உடன் பிறப்புகளை அனுதினமும் உயிரோடு புதைத்து விட்டார்கள் இந்த கொடுங்கோலர்கள். பழமொழிகள் பலவற்றை உண்மை என்றிருந்தேன். "அழுத பிள்ளைக்கு பால்" என்றான். நான் அழாமலே அன்று என் தாய் தந்தாள். இன்று நான் அழுகின்றேன். இந்த அன்னியர…
-
- 0 replies
- 806 views
-
-
-
- 0 replies
- 692 views
-
-
இந்த பிஞ்சு வயதினிலே உனக்கு நேர்ந்த கொடுரம் நினைக்கும் போது வாழ்வே வெறுகுதே நெஞ்சு முழுதும் சோகம் கண்களில் எல்லாம் ஈரம் இமைகள் மூடித் தூங்கும் வேளை பகை மீது கோபம் (முகநூல்)
-
- 0 replies
- 473 views
-
-
தமிழக ........ இறவாத தலைவியே...... உம்மை எனக்கு பிடிக்கும்..... காரணம் நீங்கள் அம்மா.......!!! அரசியல் ................. எனக்கு தேவையில்லை...... அம்மாவாக நீங்கள் எனக்கு ....... தேவை .....................!!! அம்மா என்றால் உருகாத........ உயிரினம் உண்டோ............. அம்மாவுக்கா கண்ணீர் விடாத...... மனிதன் உண்டோ........? தமிழகத்தின் தலைவியாகி...... தமிழ் மக்களின் மனதில்....... தலைவியாகிய தாயே.........!!! உலகெங்கும் இருந்து கண்ணீர்...... விடும் தமிழ் உள்ளங்களில்...... என் கண்ணீரும் கலந்திருக்கும்....... அம்மா என்றால் கண்ணீர் விடாத...... உயிரினம் உண்டோ...........??? & கவிப்புயல் ,கவி நாட்டியரசர் இனியவன்
-
- 0 replies
- 1.3k views
-
-
நீயே எனக்கு வேணுமடா! - அஞ்சனா உனை மறந்து எனக்கோர் வாழ்வா என் அன்பே?! கண்ணை மறந்து இமையும் பிரியுமோ சொல் அன்பே?! உள்ளுக்குள் உன்னை நினைத்தே வாழ்கின்றேன்! உன் சொல்லால் தானே ஆனந்தம் நான் காண்கின்றேன்! பண்ணைக்கொண்டே பண்ணைக்கொண்டே என்னைச்செதுக்கினாய்! உன் உள்ளம் தந்தே என்னை எனக்கு அன்பே உணர்த்தினாய்! கள்ளமில்லா மொழியால் காதல் நீயும் செப்பினாய்! கவிதை வடிவே ஆகி என் உயிரை நிரப்பினாய்! தெள்ளுத் தமிழே தேனின் சுவையே.. வண்ணக் கனவே வடிவே எழிலே.. பிள்ளை மொழியே.. என் உயிரின் அழகே.. எண்ணம் எல்லாம் நிரப்பும் சுவையே! நீயே எனக்கு வேண்டுமடா! யாவுமாகி!! - அஞ்சனா நீ இன்றிப்போனால் என் உலகம் சுத்தாது! நீதான் அன்பே என் உடல் வெப்பத்தின் உயிர் மூச்ச…
-
- 0 replies
- 1.1k views
-