கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வாழ்வுண்டோ? மண்ணை இழந்து மனையைத் துறந்து வருந்தியும் வாழ்வுண்டு! பொன்னை இழந்து பொருளைத் துறந்து புழுங்கியும் வாழ்வுண்டு! கண்ணை இழந்து கருத்துச் சிதைந்து கலங்கியும் வாழ்வுண்டு! உன்னை இழந்தால் தமிழே உலகில் ஒருநொடி வாழ்வுண்டோ? இன்பத் தமிழே! இயக்கும் இறையே! இனிமை படைத்தவளே! துன்பப் பொழுதில் துணிவைக் கொடுத்துக் துயரைத் துடைத்தவளே! அன்பாம் நெறியை அமிழ்தாம் சுவையை அளிக்கும் அருந்தமிழே! உன்றன் புகழை உலகில் பரப்ப ஒருநாள் மறவேனோ! ஒன்றே குலமாம்! ஒருவனே தேவாம்! உயர்மிகு நன…
-
- 0 replies
- 459 views
-
-
தமிழ் மொழி! தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... சிரிக்கும்போது மட்டும் இ..ஈ.. சூடு பட்டால் மட்டும் உ...ஊ.. அதட்டும்போது மட்டும் எ..ஏ... ஐயத்தின்போதுமட்டும் ஐ... ஆச்சரியத்தின்போதுமட்டும் ஒ...ஓ... வக்கணையின் போது மட்டும் ஒள... விக்கலின்போது மட்டும் ...? என்று தமிழ் பேசி மற்ற நேரம் வேற்று மொழி பேசும் தமிழரிடம் மறக்காமல் சொல் உன் மொழி தமிழ் மொழியென்று !!! http://pudhiyatamilan.blogspot.com.au/2011/08/blog-post_31.html#!/2011/08/blog-post_31.html
-
- 0 replies
- 507 views
-
-
எனக்குள் ஒருவன் இருக்கின்றான் எனக்குள் ஒருவன் இருக்கின்றான் அதிகமாய் அவன்தான் என்னை ஆள்கின்றான் அதிக தடவை அவனை ஆள நான் நினைத்ததுண்டு அது நினைப்போடே போன சம்பவங்கள் நிறையவுண்டு அவன் சொற்கேட்டு ஆடிய போதெல்லாம் - இந்த அவனியே என் காலடியில் அடைக்கலம் போல் தோன்றும் அகங்காரம் நெஞ்சமெல்லாம் குடி கொள்ளும் அவனை நான் எதிர்த்து ஆள முனைந்தபோது அவனியில் புகழாலே ஓங்கியதுண்டு - என் ஆழ் மனமும் ஆண்டவன் குடியிருக்கும் ஆலயம் போல் அமைதியானதுண்டு. 01.06.2004 http://inuvaijurmayuran.blogspot.ch/2013/12/blog-post.html
-
- 0 replies
- 582 views
-
-
அபகரிக்கப்பட்ட சிட்டுக்குருவியின் பூமியில் குருதி வார்த்துக் குருதி வார்த்து வளர்க்கப்பட்ட பெருமரங்களின் அகண்ட நீழலின்கீழ் கழுத்தில் ரை சுருக்கிக்கட்டியபடி ஞானசம்பத்தக் கூத்தாடிய கவிஞர்களெல்லாம் காணாமற் போயிருந்தனர் கொஞ்சக் காலமாய் கல்லெறி விழுந்து கலைந்தோடிய இலையான்கள்போல் இவர்களன்றோடிய நாட்கள் நினைவிருக்கிறது நன்றாயின்னமும் சிட்டுக் குருவிக்கு. மேற்குத் திசையில் வெடிச்சத்தம் கேட்ட மேதினத் தோர்நாள் தான் அது. சஞ்சீவி இலைகளில் தோரணங்கட்டி அகண்ட மர நிழலில் கடை பரப்பி கதை கவிதை ஒப்புவித்த காலங்கள் போட்டது போட்டபடி கிடக்க, தலைதெறிக்க ஓடிப்போய் வலுத்தவர் வாலில் நூலேணி பிடித்தேறிய காலங்கள் பொற்காலமல்லவோ உமக்கு ? வலுத்தவர் மகிழ…
-
- 0 replies
- 517 views
-
-
பாய் விரித்து படகெடுத்து பாய்ந்து கடல் ஆண்டவர் பார் முழுதும் தமிழர் என்று போய்த் திரும்பி மீண்டவர் தாய் மடியில் மீண்டெழுந்து நாங்கள் அன்று ஆளுவோம் தாவும் கடல் புலிகளினால் நாளை கடல் ஆளுவோம் ஏறி வரும் பகை யாவும் இனி இல்லை எனும் நிலை ஆகும் மாறி அடித்திடும் காற்று கடல் மீதினில் புலிக்கொடி ஏற்று - நன்றி முகநூல்
-
- 0 replies
- 1.2k views
-
-
மல்லுக் கட்டி நிற்கின்றோம் ஜல்லி கட்டை நடத்திவிட கொள்ளிக் கட்டை கொண்டு வந்து தமிழ் குல தொன்மம் அழித்துவிட மல்லுக் கட்டும் உலகமயமாக்கலோடு நாமும் மல்லுக்கட்டி நிற்கின்றோம். புல்லுக் கட்டு போல எங்கள் புராதன தொன்மைகளை புதைத்துவிட்டு பல்லுக்காட்டி நிற்கச் சொல்லி பாடம் சொல்லும் கயவரோடு மல்லுக்கட்டி நிற்கின்றோம் #ஈழத்துப்பித்தன் 19.01.2017
-
- 0 replies
- 817 views
-
-
நான் இரசித்த கவிதை -காதல் நட்பு
-
- 0 replies
- 7.1k views
-
-
"உனக்கு தலை குனியும் !" நேற்று: "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!" இன்று: "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!" நாளை: …
-
- 0 replies
- 222 views
-
-
எனக்கொரு முகவரி தேடிஇரவினைப் புரவிகளாக்கிசாட்டையில் புறத்தினை தோய்துதனிமையில் சொர்ப்பணம் கொண்டாள் இருதயம் துடித்திடும் போதுஎன் கணம் நீண்டிடும்போதுவிடத்துடன் நாகத்தை தேடிவிடை கொடு உடலிம் உயிரேசருகினில் பற்றிய தீயேகொடியிடம் செந்நிறம் கொண்டாய்புலவியில் பிதற்றளும் முறையேபுன்னகை கொண்றிடும் மனமேதிதியது நெரிங்கிடும் நேரம்கனிகளும் விதைகளாய் விழுமேகாந்தளின் தொடுகையில் விழவேமேகமும் கரையுது நிலவேகுறையது நிறையதைக் கொள்ளும்குற்றமும் தண்டனை தூக்கும்இரு நிலை இயங்கியல் உலகில்இடைவெளி சேர்தலின் காளமேஇறந்திடாத் தூடித்திடு மனமே
-
- 0 replies
- 749 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐயாக்களே! ------------------------------------------------------- வாக்குத் திருவிழா முடிந்தது போக்குக் காட்டிப் பிடிக்க முனைந்த வாக்குகள் யாவும் வராமல் போனதால் சிறிலங்கா மீண்டும் வழமைக்குத் திரும்பியது! மீண்டும் எங்கும் சோதனைச் சாவடி ஓமந்தையில் தனிதனித் தனித்தனியாக உடற் பரிசோதனைக் கெடுபிடி எடுபிடிகள் ராச்சியத்தில் எதுவுமில்லை என்பதை நன்றாக உணர்ந்துகொண்ட ராயபக்ஸயாக் கூட்டமது தமிழ் மக்களைத் தினந்தோறும் கசக்கிப் பிழிந்து காழ்ப்புணர்வைக் காட்டி சிங்களத்து வாக்குகளை முழுவதுமாய் பெறுவதற்காய் வகுக்குமினித் திட்டங்களை… திட்டங்களில் முதற்பலியாவது தமிழினமே சம்பந்தருக்குமென்ன சரத்துக்குமென்ன சாவதும் அழிவதும் யாரோ எவரோத…
-
- 0 replies
- 890 views
-
-
சுதந்திரம் கறுப்புநாள் சுதந்திம் என்பது ஏது..!? சுதந்திரத்தால் வந்ததே கேடு..! வனவேடன் தருவானா..? மானுக்கு சுதந்திரம் சுதந்திரம் கேட்டால் பரிசாக தருவானே குண்டு..! குளத்து மீனுக்கு கொக்கு கொடுக்கலாம் சுதந்திரம் காட்டு முயலுக்கு வீட்டுநாய் கொடுக்கலாம் சுதந்திரம் சிங்கள ஆட்சி கொடுக்குமா..? தமிழர்க்கு சுதந்திரம் தமிழர் பிணம்தின்னும் இனவாதஆட்சி தந்திடுமா சுதந்திரம்..!? கடலலைக்கு தடைபோட நினைத்திடும் காவிமொட்யைர் ஆட்சி சுடுமணலுக்கு தடைபோட நினைத்திடும் சித்தாத்தர் ஆட்சி வரும் போர்குற்றமென்ற பெரும்புயலை தடுக்க நினைத்திடும் ஆட்சி பொங்கியெழும் உலக நீதிக்கனலில்; வெந்திட போகும் ஆட்சி..! கிழக்குதிக்கும் கதிரவரனை கையால் மறைக்க…
-
- 0 replies
- 387 views
-
-
ஒரு கதை ******** அருள்வேல் ....என்னம்மா ...?மகனே இன்று கோயிலுக்கு போகணும் . நீ வேலையால் வந்தவுடன் போவமா மகன் ? நிச்சயமா.. அம்மா.... அப்பாவையும் ஆயத்தமாக இருக்க சொல்லுங்கோ வேலையால் வந்தவுடன் ஒரு ஆட்டோ பிடித்து போவம் அம்மா ....!!! என்னங்க ..நம்ம மூத்த மகனின் பிறந்த நாள் அடுத்த கிழமை வருகிறது நம்ம கோயிலில் ஒரு பூசைக்கு பதியவேணும் மாலை கோயிலுக்கு எல்லோரும் போகும் போது அதையும் பதிந்திட்டு வருவமப்பா -அன்னம் -மனைவியின் பரிந்துரை அது . நல்லது அன்னம் நிச்சயமா மாலை கோயிலுக்கு போய் அத்தனை வேலையையும் செய்வோம் . .அருள்வேல் நடுத்தர வருமான குடும்பம் தான் ஆனால் அழகான அன்பான குடும்பத்தை நினைத்து சந்தோஷ பட்டபடி வேலைக்கு புறப்பட்டார் -அருள் வேல் - ஒரு…
-
- 0 replies
- 483 views
-
-
கற்பு அது எனக்கும் இல்லை என்னவளுக்குமில்லை கடிதம் அதை அனுப்பமட்டுமே தெரியும் வஞ்சனை அது தான் மூலதனம் குழிபறிப்பு பிறந்ததிலிருந்து தமிழ் பற்று அது தமிழனை முட்டாளாக்க சினிமா பணம் மற்றும் பறவை சுட பத்திரிகை பந்தி பந்தியாக எழுதி உடன்பிறப்பை முடக்க தொலைக்காட்சி இனாம் என்று தொடங்கி இருட்டடி அடிக்க கட்சி அது குடும்பச்சொத்து பிள்ளைகள் உலகவரிசை பணக்காறராக உண்ணாவிரதம் அது உண்மையைப்புதைக்க.........
-
- 0 replies
- 730 views
-
-
நான் மறுபக்கத்தைப் பார்க்க விரும்பவில்லை ஒரு நியாயத்தின் மறுபக்கம் நமது நியாயங்களை மறுதலித்துவிடும் ஒரு கண்ணீரின் மறுபக்கம் நமது கண்ணீரை அர்த்தமற்றதாக்கிவிடும் ஒரு மனிதனின் மறுபக்கம் அவனை நிரந்தரமாக நம்மிடமிருந்து பிரித்து விடுகிறது நான் மறுபக்கத்தைப் பார்க்க விரும்பவில்லை நாம் மறுபக்கத்தைப் பார்க்கும்போது நம் கைகள் கட்டப்பட்டுவிடுகின்றன நமது இதயம் கனத்து விடுகிறது நமது அம்புகள் முனை முறிந்துபோய் விடுகின்றன நமது எல்லா வழிமுறைகளும் பயனற்றதாகிவிடுகின்றன நான் ஒரு மறுபக்கத்திற்குள் நுழையும்போது ஒரு இருண்ட அறைக்குள் நுழைகிறேன் நான் ஒரு மறுபக்கத்தை தொடும்போது இருளில் வழுவழுப்பான எதையோ தொடுகிறேன் நான் ஒரு மறுபக்கத்தின் மூச்சுக்காற்ற…
-
- 0 replies
- 1k views
-
-
காத்திருப்பேன் அவள் வருவாள் ..பக்கத்தில் அவள் அண்ணன் ...சைக்கிளில் வருவார் ..அருகிலே செல்வேன் ..கண்ணால் கதைப்பேன் ..அவள் யாடையால் கதைப்பாள் ..அண்ணன் கிட்டவரும் போது..என் நடை வேகமாகும் ...பாடசாலைதான் எனக்கு காதல் சாலை ..கொப்பியை பரிமாறும் போது ..கடிதமும் பரிமாறும் ...விழுந்தது கடிதம் நிலத்தில் ..கண்டார் ஆசிரியர் தந்தார் ..முதுகில் நல்ல பூசை ..நண்பர்கள் கிண்டல் நண்பிகள் அவளை கிண்டல் ..காலம் காதலாகியது ..கல்வி கரைக்கு வந்தது ..காதலும் கரைக்கு வந்தது ...^பள்ளி காதல் தொடரும் பள்ளிவரை இல்லை பள்ளி படலைவரை ஏண்டீ மீனாஷ்சி காலையில என்ன இருக்கு ..வேலைக்கு போகணும் எதண்டாலும்..தாவன் திண்டுட்டு போட்டுவாரன் ..ஆமா மகராசா சாமான்களையெல்லாம் வாங்கி தருவாறு காலையில்லை சாப்பி…
-
- 0 replies
- 505 views
-
-
சுவரோரம் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் பதினெட்டாவது தென்னங்கன்றை நடுகிறார் தலையாரி சுப்ரமணி சிதிலமடைந்த மடப்பள்ளிக்குள் பசித்த எறும்புகளும் கொழுத்த எலிகளும் குடியிருக்கின்றன குதிரை வாகனத்தின் குறியை அசைத்து சிரிக்கும் சிறுவர்கள் செவ்வரளிச் செடிகளின் நிழல் மறைவில் திருட்டுப் புகையூதும் இளவட்டங்கள் பாத்திரங்களில் விழுந்த துளை அடைக்கும் பொருட்டு சிலைகளின் எண்ணெய்ப் பிசுக்கைச் சுரண்ட அபூர்வமாய் வரும் பெண்கள் எதிர்க்கடையிலிருந்து தேநீர் பீடிக்கட்டு வரவழைத்து நந்திக்குப் பின்புறம் வட்டமிட்டு சீட்டாடும் ஆண்கள் என எப்போதும் ஆள் நடமாட்டமுள்ள எங்கள் ஊர் சிவன் கோயிலில் …
-
- 0 replies
- 683 views
-
-
கை தவறிக் கீழே விழுந்த கடலை எல்லாம் சாமிக்கு. துறட்டிக்கு எட்டாமல் தூரப்போன முற்றல் முருங்கைக் காயெல்லாம் கிளிகளுக்கு. கறவைகளுக்குச் சுருக்காமல் காம்பில் எக்கின பால் எல்லாம் கன்றுக்கு. திருவினை ஆகாத முயற்சித் திராட்சை எல்லாம் பந்தலுக்கு. எட்டுவது....கிட்டுவது எல்லாம் எனக்கு. முடியாதது....படியாதது முழுவதும்... உனக்கே உனக்கு. ******************************************************* தண்ணீர்த் தொட்டியில் செத்துக் கிடந்த காக்கைக் குஞ்சுகளுக்கு மனதார வருத்தப் பட்டாயிற்று. வாசலில் நிற்கும் வயசாளிக்கு ..... "ஒன்றுமில்லை" என்று அனுப்பிவிடலாம். இன்றைக்கு ..... என்னால் முடிந்தது இவ்வளவே. **********************************…
-
- 0 replies
- 14.1k views
-
-
காலம் கரைந்ததோடுகின்றது இன்னமும் வாழ்க்கை தடுமாறுகின்றது நாலுபேர் தூக்கிச் செல்லும் பாடையும் தள்ளாடியே சுடுகாடு செல்லும் இருந்தும் ஆட்கள் இல்லா ஊர்களில் அழுகிய பிணங்களாக நிறைய நேற்றய மனிதர்கள் இருந்தார்கள் மயானத்தை அடைய முடியாத ஆயிரமாயிரம் சவங்கள் குறித்து பின்னொரு நாளிலும் யாரும் ஒப்பாரி வைப்பதில்லை எட்டுச்செலவும் அந்திரட்டியும் அறியாத பாவப்பட்ட பிரேதங்களுக்கு படையல் செய்ய தப்பிய தாய்களும் எஞ்சிய பிள்ளைகளுக்காகவும் ஒரு நாளைக் கூட காலம் தரவில்லை இன்னும் பல நுறு கோயில்களும் சாமிகளும் படையல் இன்றி பட்டிணியாகத்தான் கிடக்கின்றது பொங்கிப் படைக்கவும் அல்லது மூன்று பழத்தை வெத்திலையில் வைக்கவும் ஊர் திரும்பும் எசமானர்கள் வருகைக்காக …
-
- 0 replies
- 658 views
-
-
மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கைகளோடு…… ஈரம் காயாத உனது குருதிச் சுவடுகளின் மீதேறிச் சென்று கொண்டிருக்கிறது வன்மங்களின் வெறியடங்கிய மெளனம்…… உறைந்து போன கனவுகளை அள்ளியபடி அலைகிறது உனது உயிரின் காற்று…… நீ நேசித்த நிலவும் நிசப்தம் நிறைந்த இரவும் உனது ஆத்ம அலைவின் எச்சமாய் இரவெல்லாம் காய்ந்து பகலில் பயங்களோடு தேய்கிறது….. கடைசிச் சாட்சியங்களுடன் கடல் கடந்திருப்பாயென்ற எங்களது நம்பிக்கையை கடைசிவரை உன்னோடிருந்து காலொன்றையிழந்து கடைசியாய் மீண்ட தோழனின் சாட்சியங்களுடன் நீயில்லையென்பதை நிரந்தரமாக நம்புகிறோம்…. கண்முன் இறந்த குழந்தைகளுக்காய் நீயழுததும் களத்தில் கூட நின்ற தோழர்களுக்காய் நீ வாழ்ந்ததும் கடைசிவரையும் நீ ந…
-
- 0 replies
- 674 views
-
-
-
- 0 replies
- 506 views
-
-
இன்றைய நாள்: அன்று அண்ணன் திலீபன் சொன்னது போல "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்" "விடுதலை வேண்டும் தமிழினமே விடுதலை சும்மா விளைவதில்லை" "அழுது கொண்டும் தொழுது கொண்டும் இன்னும் வாழ்வதோ அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரி ஆழ்வதோ" தமிழ் உறவுகளே : எங்களிடம் நாங்களே கேட்போம் இன்று நான் தமிழினத்துக்காக என்ன செய்தேன்? அதை பிடித்து விட்டான் இதை பிடித்து விட்டான் என்று அங்கும் இங்கும் ஆர்ப்பரிக்காமல் ஆகவேண்டியதை பார்ப்போமா? இன்னும் பிந்தவில்லை இனியும் வெல்லலாம் ,இன்றே தொடங்குங்கள் அவன் செய்வான் இவன் செய்வான் என்று ஆறி இருக்காமல் நான் செய்வேன் என்று நகருங்கள் முன்னே நன்றி www.tamiloosai.com Source Li…
-
- 0 replies
- 931 views
-
-
தோசை - கவிதை கவிதை: சௌவி, ஓவியம் ஸ்யாம் அன்னபூர்ணாவில் மசால் தோசை ஆரிய பவனில் வீட்டு தோசை சரவண பவனில் ஆனியன் தோசை வசந்த பவனில் பொடி தோசை கௌரிகிருஷ்ணாவில் நெய் தோசை அஞ்சப்பரில் சிக்கன் தோசை ஹரி பவனில் காடை தோசை ஆனந்த பவனில் பூண்டு தோசை முருகன் இட்லிக் கடையில் காளான் தோசை முனியாண்டி விலாஸில் முட்டை தோசை ஆச்சி மெஸ்ஸில் பேப்பர் தோசை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஸ்கை தோசை தள்ளுவண்டிக் கடையில் தட்டு தோசை இவை எதுவும் சின்னப் பலகையின் மேலமர்ந்து புகை சூழ விறகு தள்ளிவிட்டுக்கொண்டே அப்பாவின் கிழிந்த வேட்டியின் சிறுதுண்டை காய்ந்த மரக்குச்சியில் கட்டி கண்ணாடி பாட்டிலுக்குள் கீழிருக்கும் எண்ணெயைத் தொட்டுப் பூசி ஓரங்கள் கருக…
-
- 0 replies
- 3.9k views
-
-
மேலும் ஒரு முயற்சி தமிழ் நிலவன் - கைக்கூ கவிதைகள் புத்தர் சிலைக்கு நடுக்கல் நடாதீர்கள் நாம் கீழே புதைந்து கிடக்கிறோம்.. -----முள்ளிவாய்க்கால் புதையுண்ட குழந்தைகள் ------------------------ மாவீரர் கல்லறைக்கென்று பெருமைப்பட்டோமே நாம் இன்று அங்கே ஆடுகள் உறங்க்குகிறதே...! ------கார்த்திகைப்பூ ----------------------- புதைந்த உடல்களுக்கருகில் எங்களால் உறங்கமுடியவில்லை எமை சிறைமீட்க வாருங்கள்....! ------துப்பாக்கிகள் தமிழ் நிலவன்....
-
- 0 replies
- 937 views
-
-
ஆதி மனிதன் பேச மொழியற்று ஆடைகள் அற்று திரிந்த அந்நாளில் எல்லாம் இருந்தன அண்டவெளி அழகாக இருந்தன. பூமி ஆடை கட்டி பூரித்திருந்தது. பச்சை நிறத்தில் பாவாடை, நீல நிறத்தில் மேலாடை பூவாடை கட்டிய பூமி தாய், நீராடையும் கட்டி இருந்தாள். மரங்களை விறகுக்காக வெட்டாத கோடரி பாவனைக்கு வராத காலம் காடுகள் கற்பழிக்க படாது காயங்களின்றி கிடந்தன. குயில்களின் பாட்டை எல்லோரும் கேட்டனர் எவரும் கல்லெடுத்து அடிக்கவில்லை. கந்தக கலப்பில்லாத காற்றும், அமிலமற்ற ஆற்று நீரும் கிருமி நாசினியற்ற கிழங்கு வகையும் பேசா மனிதனை போசித்தன. இயற்கை மாசற்ற மனிதனை உருவாக்கியது. பேச மொழி அற்று இருந்த போதும் மனிதன் சிரித்தான். யானையை வாலில் பிடித்து தூக்கும் வல்லமை அவனுக்கிருந்தது. கூட்டமாக ந…
-
- 0 replies
- 565 views
-
-
நரம்பு நாடிகள் துடித்து இரத்தம் கசிந்து உறவுகளின் உயிர் பிரிந்தாலும் தளர்ந்து விடதே தமிழா... வருவான் புலி வீரன் பொங்கி எழுவான் உமை காக்க.. உம்மை கொன்ற சிங்கள காடையர்களை கொன்று குவிக்க... கண்ணீரை சிந்தாதே தமிழா உன் கண்ணில் மகிழ்ச்சியை உரு வாக்க புலி வீரன் இருப்பன் உன்னுடன் உன் இறுதி முடிவிலும் நம்பிக்கையை இழந்து விடாதே தமிழா.. உம் மக்களையும் நாட்டையும் காப்பாற்ற புலி வீரன் இருப்பான் தமிழிழம் ஒரு நாள் மலரும் சோகம் கொள்ளாதே தமிழா...
-
- 0 replies
- 795 views
-