கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
[size=5]விழியோரங்களில் மலரும் துளிப்பூக்களின் வாசங்களை நுகர்ந்துமகிழ்ந்த யந்தொன்றின், தேடிக்களைத்த கேவலச்சிறகுகளை, மொய்த்துரீங்காரமிட்ட நோக்கல்களை, கணநேர ஈனப்பிதற்றல்களை, பொய்நாக்குகளின் வீணிகளை, விலக்கி சீராக்கமுடிகிறது படுக்கையொன்றை இலகுவாக அவளால். இது திணிக்கப்பட்டதா என்றாலும் தவிர்க்கமுடியாதா என்றாலும் தெரியாதென்பதே பதிலாகுகிறது. வகையறியும் பார்வைகளை தகையுரியும் நாவுரைகளை முகைகருக்கும் வசவுகளை பகைபெருக்குமோர் பல்லவிகளை நகைத்தேவிலக்கி யுள்யெரிதலவள் வழக்காயிற்று. தினவெடுத்த மிருகங்களின் நாவுகளில் படிந்திருக்கும் அழுக்குவேர்களின் அடிநுனியறிந்தவள், தினப்பொழுதுகளின் பின்னான ஒதுங்குதலில் இழிந்த கௌரவவிம்பம் உடைத்தவள்…
-
- 10 replies
- 1.4k views
-
-
படித்ததில் பிடித்தது. ஆனாலும் பல கேள்விகள் மனதில்.. அதனால் பகிரப் பிடித்தது.
-
- 0 replies
- 549 views
-
-
கனடாவில் மொன்றியலில் வசிக்கும் கே.செல்வகுமார் இயற்றிய இந்த 2 பாடல்களை கேட்டு உங்கள் அபிப்பிராயங்களை சொல்லுங்கள். http://www.esnips.com/doc/e2dffaf4-f393-4d...ngam-(Srilanka) http://www.esnips.com/doc/93efb0c8-d1f3-4d...---Krishnarajah உயிரான காதல் என்ற பாட்டில் வரும் " நீ ஓம் என்று சொன்னால் நான் ஒழுங்காக படிப்பேன்" நாங்கள் ஊரில் யாருக்கோ சொன்ன ஞாபகம் வருகிறது அல்லவா ? ஒழுங்கை, புளிய மரம், பங்குக்கிணறு ஞாபகமா? பாடிய நிலுக்ஷி ஜெயவீரசிங்கம் எங்கள் பாடகி. இனிமையான குரல் வளமுள்ளவர்!
-
- 10 replies
- 2k views
-
-
-
-
நான் - உறக்கம் நீ - கனவு உன் வரவுக்காகவே விடிய விடியத் தூங்குவேன் * என்னைத் தொலைக்காமல் உன்னைத் தேடினேன் என்பதில் பெருமை எனக்கு என்னை நான் தேடவே நீ கிடைத்தாய் என்பதில் பெருமை உனக்கு * என் சொந்தங்களில் நான்தான் முதல் கவிவாசகன் என்பதில் சிறியகவலை எனக்கு இதுவரை யாருமே உன்னை பார்த்து யார் எழுதியது என்று விசாரித்ததில்லையே * உன் தாயைப்போல் என் நேரமும் உன்னைக் கவனிக்க என்னால் முடியாமல் போனாலும் உன்னைக் காணத நேரங்களில் தாயாக நான் ஏங்கித் தவிப்பதுண்டு * உனக்காக காத்திருந்தால் என் கால்கள் வலிப்பதில்லை என் மனசு ஏறி நிற்பதால் என் தலைதான் வலிக்கும் -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 928 views
-
-
மொழியென்று ஒன்றாய் திரண்டாலே...! ------------------------------------ தமிழரின் உடல்கள் அடுக்கப்பட்டன நிலத்தின் இருப்பைத் தக்க வைக்க ஒற்றுமை மணி சிதறியதால் ஒற்றர்களாகப் பலர் நுளைந்தார் சத்தியம் காப்பதே உறுதியென சளைக்காது உடல்களால் எல்லையிட்டார் சத்தியம் வெல்வது உறுதியெனச் சண்டாளர் கணித்தார் கவனமுடன் பட்டினியாலும் மடியவில்லை பரிசுகளாலும் வீழவில்லை உறவாடி வீழ்த்துதல் நல்லதென உலகெங்குமிருந்து உள்நுளைந்தே அரசொன்றை வீழ்திய மகிழ்வினிலே நரந்தின்னும் நாடுகளானதன்றோ நாடுகள் வாழ நாம் சாகும் சூனியமான சூழலன்றோ சூனியமான சூழலை நாம் எம் சாதுரியத்தால் மாற்றிடவே மதமென்று நின்றால் தோல்விகளே மொழியென்று ஒன்றாய் திரண்டாலே உலகெங்கள் உரிமைக்கு வழிவிட…
-
- 8 replies
- 736 views
-
-
என் காதலியும் என் கல்லறையும் ________________________________________ என் சவப்பெட்டியை செய்து எத்தனித்தேன் உள்ளே செல்ல வந்தாளே காதலி இடுகாட்டில் இருந்த பெட்டிக்கு மெல்ல அன்பே இன்னும் இற்க்கவில்லை காத்திருந்தேன், நான் சொல்ல பெட்டியில் அடிக்காமல் ஆணியை நெற்றியில் அடித்தாள் என்னை கொல்ல இறந்தேன் - இறப்பைப் போன்று உறுதியான உண்மை. தந்தை வந்தார் அழுதுச் சென்றார் தாயும் நின்றாள் சோர்ந்து தம்பி வந்து தேம்பி அழ அக்காவோ புலம்பி அழுது சுற்றமும் முற்றமும் தோழர்களும் ஏங்கி சேர்ந்து அவளை தேடி அலுத்தது கண்கள் அங்குமிங்கும் பாய்ந்து இறந்தாலும் - இருந்தேன் அங்கே ஆன்மாவாக. அவளும் வந்தாள் கல்லறைக்கு பூக்கள் நிறைந்த கரங்கள் ஆகா என் கண்மணி அறிவாள் எனக்கு…
-
- 4 replies
- 1.5k views
-
-
போர் வெறி ________________________________________ எழுத்து: மோகன் கிருட்டிணமூர்த்தி பிணம் தின்னி கழுகுளாக மாறிய மனிதர்கள் மதம் என்ற மதம் பிடித்த மடையர்கள் நிலம் கேட்காத நிலத்திற்கு நீட்டிய வாள்கள் தன்னவரையும் எதிரியையும் துளைக்கும் குண்டுகள் கொன்று கூவித்துவிட்டு கூச்சலிடும் பீரங்கிகள் அலைந்து பறந்து மரணத்தை அடித்த உலோகப் பறவைகள் கால்களை காகிதமாய் துண்டித்த கண்ணி வெடிகள் ஆடவரை இழந்து விதவையான பெண்களின் ஒப்பாரிகள் தந்தையை இழந்து அனாதையான பிஞ்சுகளின் கூக்குரல்கள் காதலியை தொலைத்து நாட்டிற்காக உயிர்தொலைத்த வீரர்கள் மரணத்தை விட கொடுமையான ஊனங்கள் அந்த ஊனத்தை குறைக்க மருந்தை விற்கும் வியாபாரிகள் நீர் போல ஓடிய ரத்த ஆறுகள் குருதியை குடித்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
அம்மா யாரென்று தமிழனை கேட்டால் ஜெ என்கிறான் அப்பா யாரென்று தமிழனை கேட்டால் கருணாநிதி என்கிறான் அண்ணன் யாரென்று தமிழனை கேட்டால் வைகோ என்கிறான் அரசியல்வாதிகள் குடும்பமாக நிற்க நீ அநாதையானாயே தமிழா -------------------------------------------------------------------------------- கலர் டிவி கண்டதும் பசித்த வயிறு மறந்தது சமத்துவ பொங்கலில் உடம்பில் பட்ட கறை மறைந்தது பள்ளிகள் இணையத்தில் இணைய பேரன் கலாம் ஆனான் துண்டுபிடி குடித்த உதடுகள் 555க்கு ஏங்க, சே என்ன ஆட்சி இது -------------------------------------------------------------------------------- ஆங்கிலம் பேசினால் பாவம் சும்மாவிடாது ஹிந்தி பேசினால் கடவுள் உன்னை தண்டிப்பார் கோவிலுக்கு போனால் நீ …
-
- 7 replies
- 1.9k views
-
-
அடிமை வாழ்வு வாழ்வதற்கு அகதியாதல் மேலதாம் அறிவு மெல்ல உந்தி நிற்க அணியணியாய்ப் பறந்தவர் அனைத்தையுமே துறந்து இங்கு அன்னியராய் நிற்கையில் அணைத்துச் செல்ல இணையவழி தந்தவரை நினைக்கிறேன். திசை தெரியாப் பயணம் தந்த திகில் நிறைந்த வேளையில் தவித்த எங்கள் தாகம் தீர்க்க தரணியிலே ஓர் களம் தமிழால் மட்டும் சேர்ந்து நிற்க தனித்துவாய் யாழ் களம் தந்த எங்கள் மோகன் அண்ணா விருட்சமாகத் தெரிகிறார் யாவரையும் அரவணைத்து கருத்துகளைப் பகிர்ந்திட யாழ்களத்தை அமைத்து எம்மை உணர்வினாலே இணைத்தவர் யாருமில்லை என்ற எங்கள் மனக்கிலேசம் தகர்த்தவர் யாதுமாகி நின்று களத்தை வழிநடத்தி வந்தவர் ஆண்டு பல சென்று விட்ட அகாலமான போதிலே அறிவுடனே ஆட்சிசெய்த அதிசயத்தை வியக்கிறேன் அடுத்தவரை நொந்திடாமல் …
-
- 38 replies
- 3k views
-
-
மோகிப்போம் வா......... ( 18+) மெதுமெதுவாய் மேல் எழும்பும் கறையான் புற்றைப்போல் , என் மனதை அரிப்பவளே வா ......... பள்ளியறையில் மோகிப்போம் வா . ஆனானப்பட்ட வாத்ஸசாயனனே முயற்சி செய்துதான் எழுதினான் காமசூத்திரத்தை . எனக்கும் உனக்கும் என்னதான் வெட்கம் சயனவறையில் ??? அடி என்னவளே !!!! மோகம் என்றால் என்னவென்று தெரியுமா ??? கண்டவுடன் ருசிப்பதல்ல கண்டு ரசிப்பது ........ அடி சூரியகாந்தப்பூவே !!!!! இரவின் மடியில் என் ஆண்மையும் , உன் பெண்மையும் அவசியம் . இதைவிடப் , பொறுமையும் திறமையும் என்ற இரு மைகள் அத்தியாவசியமடி ........ அடி என் வெல்லக்கட்டியே !!!!!!! நாங்கள் என்ன மிருகங்களா உச்சக்கட்டத்தை நோக்கி உடனே செல்ல ....... காதல் இல்லாத காமமும் ,…
-
- 25 replies
- 17.6k views
-
-
-
- 1 reply
- 593 views
-
-
மௌனக்காதல்...... ஒத்தையடிப் பாதையில ஒதுங்கிநான் நடக்கையில ஓரக்கண்ணாலே என் உசிர்குடிச்சுப் போனவளே அப்போ போனஉசிர் அப்புறமா திரும்பலையே இப்போ தனிச்சுஎன் உடல்மட்டும் நிக்கிறதே சின்னச் சிரிப்பாலே சிதறவிட்ட புன்னகையால் கன்னக் குழியோரம் கவுத்துஎனைப் போட்டவளே கன்னங் கருங்கூந்தல் காற்றிலாடும் ரட்டைஜடை கண்ணில் இளசுகளை கட்டிவைக்கும் பேரழகு என்னை ஒருசிரிப்பில் எங்கோ தொலைச்சுப்புட்டேன் இன்னும் தேடுகிறேன் இருக்குமிடம் நீயறிவாய் கரும்புப் பார்வையொன்றை காட்டிவிட்டுச் சென்றுவிட்டாய் கலைஞ்ச எம்மனசு இப்போ காற்றிலாடும் இலவம்பஞ்சு *** ஊரும் ஒறங்கிருச்சு ஊர்க்குருவி தூங்கிருச்சு பச்சைப் பாய்விரிச்சு பயிர்கூடத் தூங…
-
- 22 replies
- 2.1k views
-
-
மௌனங்கள் பேசட்டும் அன்பே நீ பூமியில் அவதரித்த நேரம் நிசப்த நேரமா??? அதனால் தானோ என்னவோ நீ உன் மொழியாக மௌனத்தை தேர்ந்தெடுத்துள்ளாய் போதும் உன் மௌனம் பிறப்பில் இருந்து நீ மௌனமாய் இருந்தது பேசிவிடு உன் மௌனத்தை கலைத்து விட்டு என்னுடன்... உன் மௌனங்கள் பேசும் என்ற நம்பிக்கையில் நான்...
-
- 4 replies
- 1.1k views
-
-
கடந்துவிட முடிந்தாலும் தொடர்கின்றன ஒருபகல் நிலவைப்போல இறந்துபோன நேசிப்புகளும் காயங்களும், சப்தங்களை பிரிந்த சங்குகளாய் வெதும்புகின்றன இன்றைய பொழுதுகளில் - இந்த இதயத்தின் துடிப்புக்கள்.. விழிகரைந்துருகி விடை கொடுத்தும், கரைந்துமழிந்திடாத நதிக்கரை படுக்கைகளாய் உள்நிறைந்து போகிறது நேசிப்புக்கள். நல்ல நிலக்காலங்களிலும், சில அதிகாலைகளிலும், தேவதைகள் இறங்கிஅலங்கரிக்கின்றனர் நேசிப்பு மீதான கனவுகளை, நேசிப்பின் கொடிமரங்களில் அலங்கரிக்கப்பட்ட கனவுகள் அறைந்துகொள்கின்றன தங்களை, நிதர்சனங்களின் வலிகளை சுமந்து மௌனமாக, இந்த மௌனங்கள் திரண்டொரு பெரும் ஒலிக்குறிப்பாய் எழும்! அது ஒரு, நேசிப்புக்கான மரணத்தை உங்கள் முகங்களில் அறையும்.
-
- 7 replies
- 950 views
-
-
மௌனம் மௌனம் தேவைதான் - ஆனால் காலமெல்லாம் மௌனிக்காதே! நாவைப்புூட்டி வைத்தல் நாளைய சந்ததிக்கு நல்லதெனில் மௌனத்தைக் காத்துக்கொள்! தேவை ஏற்படின் மோனம் கலையலாம். தென்றலை மீறிப் புயலாவும் வீசலாம். மௌனம் நிலைக்கும்வரை - அதன் மகிமை புரியாது. மாறி எழுந்த பின் மௌனிக்க முடியாது.
-
- 16 replies
- 2.7k views
-
-
பழைய மொந்தையில் புதிய கள்ளோ புதிய மொந்தையில் பழைய கள்ளோ யானறியேன். மௌனம் நெஞ்சையழுத்த மௌனமாய் பதிந்துள்ளேன் மௌனம் பேசுகின்றேன் - உன் மனதோடு பேசுகின்றேன் மழைமேகமாய் மலர்வாசமாய் மௌனமாய் பேசுகின்றேன் மண்வாசம் நாசமாகி மாண்டவுடல் மண்ணாகி மாண்புமிகு தமிழினம் மழிகின்றதே - நான் மௌனம் பேசுகின்றேன் தோன்றிய முதல் குடியாய் வீழ்ந்த முதல் குடியாய் வெற்றிவாகை சூடி மறைந்து போகுதே எம்மினம் - நான் மௌனம் பேசுகின்றேன் என் மனதோடு பேசுகின்றேன் புல்பூண்டு பூவையே புணரத்துடிக்கும் பேரினவாதத்தால் பூந்தையர் எல்லாம் கருகி மாள - நாமோ புலம்பெயர்ந்து புலனறுந்து வழிமாறி மொழிமாறி மெனம் பேசுகின்றோம் நட்படன் என்.பரணீதர…
-
- 12 replies
- 2.2k views
-
-
மௌனித்த வெளியில் நின்று முனகும் குரல் - வெற்றி துஷ்யந்தன் அச்சப் பிராந்திய இரவுகளோடு நகர்ந்த நரக நாள்களின் நினைவுகளால் சூழ்ந்து கிடக்கின்றது இந்த காற்று மண்டலம். யாரெனத் தெரியா உடலங்களின் மீது பாதங்களை பதிந்து பாதைகளை தேடிய -எங்கள் ஆற்றாமைகளும் இயலாமைகளும் அரங்கேற்றம் கண்ட பெருவெளியில் எல்லாவற்றையும் தொலைத்தோம். உருப்பெற முடியா உணர்வுகள் அனைத்தையும் அடக்கி கொண்டு உள்ளுக்குள்ளே புதைத்து வெடித்தோம். விதைகளின் கனாக்களை விழிகளில் சுமந்தபடி விடுதலை பற்றிய சொல்லாடலின் பெரும் அர்த்த புஷ்டியை உணர்துகொண்டோம். ஒரு இனத்தின் பெரும் கனவின் சாத்தியம் பற்றியும், ஒரு இனத்தின் தனித்த தேசத்தின் வல்லமை பொருந்திய சுய வாழ்வுரி…
-
- 0 replies
- 687 views
-
-
நாவீரமாய், விலக்கவோ இழக்கவோ முடியவில்லை நினைவுகளை ............. கள்,கள்ளகசிப்பு ௬ட தந்ததில்லை வெடித்தெழும் போதை _உன் விழி மடிக்கையில் விழுதுப்பாலாய் ஒட்டிவிட்டது வெண்சிரிப்பு _இனி அழுது முடியுமோவென் பிழைப்பு . பாடை மேளம் எல்லாம் தயாராக, ஊர்வலம் பிந்துகிறது . அட நான் இன்னும் சாகவில்லையே ............! வத்தாக்கிணற்றடியில் முத்தாதகொவ்வை பளபளப்பு , பாவற்காய் மினுமினுப்பு , என்னவோ செய்யுது , சரம் தூக்கி நடப்பது , றோட்டில் நாயை துரத்தி ஓடி மகிழ்வது _என் மட்டுமிருந்த எனை தாடி சொறிந்து வானம் பார்க்க வைத்த கொடுமை ....... காத்தடிக்க நீவர சைக்கிள் கடையிலிருந்த எனக்கல்லவா வேர்த்தது ? எப்பவோ …
-
- 10 replies
- 1.6k views
-
-
நல்ல கற்பனை. பலர் வெளிச்சத்தில் நிற்பதற்காய் சிலர் இருட்டில் நிற்கவேண்டியது அவசியமாய் இருக்கிறதே. மணிவாசகன்
-
- 2 replies
- 1.1k views
-
-
மறக்க முடியாத உன் முதல் முத்தம் வேண்டாம் நான் இறக்க வேண்டும் கடைசி முத்தம் கொடு * நீ தூங்குவதே இல்லையா என் தூக்கங்களில் கனவாய் வருகிறாயே * எல்லாரும் கவிதைக்குள் கருத்தைதான் தேடுவார்கள் நீ மட்டும் உன்னைத் தேடுவாய் * நீ வாங்கிக் கொடுத்த செருப்போடுதான் இன்றும் நடக்கிறேன் கைகளில் சுமந்தபடி * என் கவிதைகளை எப்படி படிக்க வருகிறாய் என்பதை கற்றுக்கொடு நீ குளிப்பதை எப்படி எட்டிப் பார்ப்பது என்பதை கற்றுக் கொள்கிறேன் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 989 views
-
-
தம்பி பாத்து மெதுவா ஆடு- உன் காலடிக்கு கீழே இன்னொரு “கிருசாந்தி” புதைக்கப்பட்டிருக்கலாம். நீ பிடித்திருக்கும் “பியர்” போத்தலுக்குள்ளே கனடாவில் குளிரிலும் பனியிலும் நித்திரையில்லாமல் ஓடி ஒடி உழைக்கும் - உன் அண்ணனின் வியர்வை இருக்கிறது. சிந்தாமல் வீணாக்காமல் குடி..!!! கனடாவில் உன் அண்ணன் கடற்கரை பக்கம் போனதேயில்லை... அதற்கு நேரமும் இல்லை ... நிம்மதியும் இல்லை...!! “கசூறினா” கடற்கரையில் “கையேஸ்” வாகனம் “கயர்” பண்ணி நீ காற்று வாங்கு... உன் அண்ணன் மூச்சு வாங்கி உழைக்கும் காசில்...!!! என் தம்பி “கம்பஸ்” என்று கருவத்தோடு உன் அண்ணன் அவன் தம்பி நீயோ ஒண்டரைக்காலில் “பைலா” பாடு.. நீ “கலோ” என்றால் உனக்கு “காசு” வரும். அந்த காசைத்தேடி நாலு “கூட்டு” வரும். …
-
- 40 replies
- 3.1k views
-
-
நிலம்கீறி வெளிவரும் முளையங்களாய் புலன்கீறி விழுமென் வார்த்தைகள் _என்றுமே யாதொன்றினதும் கைதிகள் அல்ல, ஒப்புக்காகவும் ஒப்பனைக்காகவும் அலங்கரித்துக்கொண்டவை என்றோ, கற்பனைகள், சுமந்த கனவுகள் என்றோ, தேவதைகளின் ஆசீர்வாதங்கள் என்றோ, சட்டமிடவும் இயலவில்லை. சில இரவுகளில் நிகழுமிந்த ஒளிப்பகுப்பில்_என் அந்தரங்க நிர்வாணத்தை ரசிக்கமுடிகிறது. அந்த கணங்களில், அம்மணமாய் கிடக்குமென் மனவெளியில் தேவதைகளின் கொலுசுகள் ஒசைலயமிடுகின்றன. ஆழ்ந்த பெருமூச்சுக்களை வெளியேற்றும்_இந்த பிரசவிப்பின் பின்னான வெற்றிடத்தில் குடியேறும் ஆத்மதிருப்தியின் வாசம் அலாதியானது. அமைதியானது. இதுவெல்லாம் எனக்கானது. நீ என் இடத்தில் இருந்தால் உனக்கானது. இப்படி…
-
- 11 replies
- 897 views
-
-
யாயும் ஞாயும் - கவிதைகள் ஓவியங்கள்: ரமணன் பழைய முகப்படக்காரி தன் பழைய புகைப்படத்தை பீரோவுக்குள்ளிருந்து கண்டெடுத்தவள் புதையுண்ட இளமை கிடைத்தவளாய் உற்றுப் பார்க்கிறாள். இப்போதில்லாத நீண்ட தலைமுடியின் இரட்டை ஜடைப் பின்னலை விரலால் தடவிப்பார்க்கிறாள். தொலைத்ததற்காய் அப்பாவிடம் அடிவாங்கிக்கொடுத்த அசையாதிருக்கும் வலதுகாது ஜிமிக்கியை விரலால் சுண்டிவிட்டுச் சிரித்துக்கொள்கிறாள். கடன்வாங்கி அணிந்திருந்த தோழியின் நீலநிறத் தாவணியில் நட்பின் வாசத்தை நுகர்கிறாள். `ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற புகைப்படக்காரன் தவறவிட்டப் புன்னகையை நினைவூட்டிக்கொள்கிறாள். அழுக்கேறிய தாலிக்கயிறு உரசி உண்டான கருத்தத் தழும்புகள் அறியா கழுத்தின…
-
- 0 replies
- 3.3k views
-