Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உயிர் மெய்யெழுத்தால் உனை கோர்க்க நினைக்கின்றேன் என் உயிரே கரைகிறது ஓலமிட்டழுகிறது கோர்த்துவைத்த மணிமாலையின் முத்தொன்று தனித்து கழன்று தன்னை தொலைக்கிறது அண்ணா எம்மை மாலையாக்கி மகிழ்ந்தவனே உனை ஓசையின்றி ஔியுமின்றி மறைத்து சென்றதும் ஏனோ வெற்று காகிதம் என்னுள்ளே வெளிச்ச ரேகைகளை விசிறிக்காட்டியவன் நீ வேர்விட விளைநிலம் காட்டினாய் நீர் விட்டு நிதம் நின்றாய் ஊர்விட்டு வந்த எமக்கு உன் எழுத்துக்களால் உயிர் தந்தாய் வெற்றுக்கூடாக்கி விரைந்து எங்கே பறந்தாய் நினைவால் கொல்கின்றாய் நெஞ்சினுள் கனக்கின்றாய் உன்தன் ஆசிக்காய் உயிர்க்கும் எங்கள் எழுத்துக்கள்

    • 0 replies
    • 641 views
  2. உறுதியுடன் நடத்திச் செல்ல எவர; வருவார;? நெருங்குகிறது தேர;தல் திருவிழா நெருக்கியடித்து உள்ளே நுழையவும் அடித்துப் பிடித்து இருக்கையை கைப்பற்றவும் ஆள்படை அம்புகளுடன் அணிகள் தயார; வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கவும் வாய்ஜால இலவசமழையில் மக்களை மயக்கவும் கூட்டங்கள் போட்டும் கூத்துக்கள் ஆடியும் ஆட்களை பிடிக்கும் வேட்டைகள் ஆரம்பம் சாமியைக் கும்பிட செல்லும் சாகசக்காரருக்கு சாட்சிக் கையெழுத்திட்டு அனுப்ப மட்டும் வேண்டுமா நாங்கள் என யாரும் கேட்டால் உத்தரவாதம் எவர; உயிருக்கும் இல்லை வெந்து நொந்து வேதனையில் வாடுவார; வாழ்வினை பந்தாடி விளையாடி வதைக்க போட்டிகள் ஆரம்பம் எத்தனை உயிர;போனாலும் எவர;க்கும் கவலையில்லை வெற்றி கிடைத்தால் போதும் என்பதே …

    • 0 replies
    • 507 views
  3. அனிதாவை எரித்த நெருப்பு! - கவிதை மனுஷ்ய புத்திரன் - படம்: ஜெ.வேங்கடராஜ் நீதிகேட்கும் பயணத்தில் மற்றவர்களுக்கு என்ன நடந்ததோ அதுதான் அனிதாவுக்கும் நடந்தது நீண்ட காயம்பட்ட இரவுகளுக்குப் பின் கழுத்து அறுபட்ட பறவையாக பாதி திறந்த கண்களுடன் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறாள் அனிதா ஒரு மூட்டை தூக்குபவரின் மகளாக இருந்தாள் தங்கள் மேல் சுமத்தப்பட்ட வரலாற்றுச் சுமையை இறக்கிவைக்க விரும்பினாள் நூற்றாண்டுகளாக மூட்டை தூக்குபவர்கள் தங்கள் விதியின் சுமையினால் முதுகு வளைந்தவர்களாக இருந்தார்கள் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் முதுகு வளைந்தே பிறந்தார்கள் அவர்கள் எப்போதும் ஒரு கடைமட்ட வேலையின் நுகத்தடியில் பிணைக்கப்பட்ட…

  4. குறிப்பு: இக்கவிதை நான் வாசிக்கும் போது ஈழ மக்களின் அழிவும் அண்டைய தேசத்து அரசியல் "பருந்து/கழுகுகளுமே" என் கண்ணுக்கு புலப்பட்டார்கள் பருந்து உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா, பருந்து ஒன்று கோழிக் குஞ்சொன்றை அடித்துச் சென்ற காட்சியை? அதன் கூர்மையான நகங்களால் உங்கள் முகம் குருதி காணப் பிராண்டப் பட்டதுபோல் உணர்ந்திருக்கிறீர்களா? பறவை இனத்திற் பிறந்தாலும் விண்ணிற் பறக்க இயலாது குப்பை கிண்டித் திரியும் அதனை துடிக்கத் துடிக்க ஓர் உயரத்திற்கு அழைத்துச் சென்ற அந்தக் காட்சி! அக் குஞ்சோடு குஞ்சாய் மரித்து அப் பருந்தோடு பருந்தாய் பறந்து திரிந்திருக்கிறீர்களா பாதையில்லா வானத்தில்? குப்பைகளை ஆங்கே நெளியும் புழுக்களை கோழிக…

  5. இது ஈழமுரசில் வெளிவந்த கவிதை. பூக்கள் சரிந்த பூனகரி நன்றி - ஈழமுரசு

    • 0 replies
    • 1.2k views
  6. Started by ilankathir,

    கண் ஒரு நாள் சொன்னது.. “பாலைவனத்திற்கு அப்பால் ஒரு பனி மூடிய மலை தெரிகிறது பாருங்கள்.. எவ்வளவு அழகாக இருக்கிறது..?” காது கொஞ்ச நேரம் உன்னிப்பாய்க் கேட்டு விட்டுப் பிறகு சொன்னது.. “மலையா?? எந்த மலை?? எனக்கு எதுவும் கேட்கவில்லையே..!!” கையும் பேசியது.. “என்னால் எவ்வளவு முயன்றும் அந்த மலையைத் தொட முடியவில்லையே.. மலை நிச்சயம் இருக்கிறதா..??” மூக்கு உறுதியாகச் சொன்னது.. “மலை எதுவும் கிடையாது.. எனக்கு எந்த வாசனையும் தெரியவில்லை..!!” கண் வேறு பக்கமாய்த் திரும்பிக் கொண்டது.. மற்ற உறுப்புக்களெல்லாம் தங்களுக்குள் பேசிக் கொண்டன.. இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தன.. “கண்ணில் ஏதோ கோளாறு ஏற்பட்டு விட்டது..!!” -கலீல் கிப்ரா…

    • 0 replies
    • 660 views
  7. கவிதையின் கவிதைகள் http://1.bp.blogspot...d-sad-poems.jpg என் அழுத விழிகளின் கண்ணீரிலும் ஓவியங்கள் தெரிகின்றதாய்... உணரும் மனதின், அப்பாவித்தனத்திற்குப் பெயர்தான்... "என்னைக் கடந்து சென்ற காதல் என்"பதா? இன்றுவரை விடைதெரியாத கேள்வி! அனுபவங்கள் பலவிதம்...!-அதில் இதுமட்டும் தனிரகம்! கவிதை அனுப்பிய கவிதை 03 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105542

  8. வரலாற்றின் மகள் - கவிஞர் தீபச்செல்வன் தந்தையே.! வரலாறு முழுவதும் இப்படித்தான் இருந்ததா ? நாங்கள் எப்போதும் அடிமையாகவே இருந்தோமா ? என் சிறு குழந்தையே.! நீ ஆக்கிரமிப்பாளர்களையும் அறிவாய் .. பாதுகாவலர்களையும் அறிவாய்.. நம்முடைய மூதாதையர் தம்மைத் தாமே ஆண்டனர்.. எம் நிலத்தின் அரசுகளை அந்நியர்கள் விழுங்கிக் கொண்டனர்.. தந்தையே! போர்த்துக்கீசர்கள் போய்விட்டனர்.. ஒல்லாந்தர்கள் வெளியேறிவிட்டனர்.. பிரித்தானியர்களும் புறப்பட்டு விட்டனர்.. ஆனாலும் இன்னும் ஏன் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம் ? அவர்கள் வெளியேற இவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர்.. அவர்கள் திருப்பித் தந்ததை பின்னர் இவர்கள் பறித்துக்கொண்டனர்.. இவர்களின் விடுதலை…

  9. பிரளயத்தின் சாட்சி கண்கொண்டு பார்க்க முடியாது ஒரு பறவை இரத்தம் சொட்டச் சொட்ட நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள் பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர் பின்னர் ஆண்குறிகளால் பின்னர் துப்பாக்கிகளால் அழுகிய பிணங்களைப் புணரும் வீரமிகு படைகள் வேறெதைச் செய்வர்? யாருமற்ற கடற்கரையில் ஈனக்குரல் எழுப்புகையில் ஒரு ஊர்க்குருவியும் துணைக்கில்லை வற்றப்பளையம்மன் எங்கு சென்றாள்? யாராலும் எழுத முடியாது நேரிட்ட நிர்க்கதியை சிந்திய கண்ணீரை உறிஞ்சபடப்ட்ட இரத்தத்தை பிய்த்தெறியப்பட்ட கதையை இறுதிக்குரலை நிராயுதயபாணிகளை வேட்டையாடும் கொலையாளிகளிடம் ‘அது நானில்லை’ என்று சொன்னாய் யாரை அவர்கள் விட்டு வைத்தனர்? அன்றொ…

  10. அன்பே, நான் உன்னிடம் என் காதலை சொன்ன பின்பு உனது தொலைபேசி அழைப்பு வரும் என்று ஒவ்வொரு நொடியும் காத்து இருந்தேன். அந்த ஒவ்வொரு நொடியும் எனக்கு ஒவ்வொரு யுகமாய் இருந்தது. என் இதயத்துடிப்பும் பலமாக அடித்துக் கொண்டது என் மனதில் இடம் புடிச்ச என் அழகிய மன்னவனே எனது ஆருயிரே உன் தொலைபேசி அழைப்பும் வந்தது. நீ எனக்காக சம்மதம் சொல்லுவாய் என்று நினைத்து மகிழ்ச்சி வெள்ளம் கரை ஓட ஓடோடி ஓடி வந்து தொலைபேசியை தூக்கினேன். ஆனால் உயிரே நீ சொன்ன சேதியைக் கேட்டு என் இதயத்துடிப்பு நின்று விட்டது. என் கண்ணாளனே நீ எனக்காக சம்மதம் சொல்லுவாய் என்று நினைத்தேன் ஆனால் நீயோ என் இதயத்துடிப்பை நிறுத்தி விட்டு இன்னொருத்திக்கு மாலை சூட்ட போகின்றாயே?

  11. போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும் -------------------------------------------------------------- 01 வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அம்மாவை அக்கராயனில் நான் தேடிக்கொண்டிருந்தேன் ஷெல்களுக்குள் அம்மா ஐயனார் கோயிலை விழுந்து கும்பிட்டாள் ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது. நேற்று நடந்த கடும் சண்டையில் சிதைந்த கிராமத்தில் கிடந்தன படைகளின் உடல்கள் கைப்பற்றப்பட்ட படைகளின் உடல்களை கணக்கிட்டு பார்த்தபடி சிதைந்த உடல்கள் கிடக்கும் மைதானத்தில் பதுங்குகுழியிலிருந்து வெளியில் வந்த சனங்கள் நிறைகின்றனர். பக்கத்து வீட்டில் போராளியின் மரணத்தில் எழுகிற அழுகையுடன் இன்றைக்க…

    • 0 replies
    • 912 views
  12. வாழ்த்தொலிகள் கேட்கும் தூரத்தில் நீயிருந்தால் எம் தலைவா! கைகட்டி ... வாய்பொத்தி பார்த்திருப்பாயோ ஈழத்தில் எம்மினம் எதிர்கொள்ளும் இன்னல்களை சேய் தவிக்க தாய் விடுவதில்லை எம் தாயுமானவே! நாம் தவித்திருக்க நீ ஒழித்தி…

  13. தீப்பிடித்த தேசம் இது

    • 0 replies
    • 548 views
  14. இரு கவிதைகள் – தீபச்செல்வன்… தணல்ச் செடி சமுத்திரத்தில் மண்டிய மையிருள் போல மறைந்திருந்த முகத்தில் அடுக்கியிருந்த இரகசியங்கள் சொல்லாத எண்ணற்ற கதைகள் கலந்தன தீயில் கருணைமிகு உன் புன்னகை கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின் சிறகுகளில் ஒழுகுகிறது தணல் நெருப்பை தின்று காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர் கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக வெடிக்கின்றன விதைகள் கந்தகம் சுமந்து வெடித்துருகிய இடத்தில் …

  15. Started by Sembagan,

    மாவீரர்அஞ்சலி கார்த்திகை மாதம் கடுங்குளிர் காலம் - எம் காவல் தெய்வங்களுக்கோ கனிவான மாதம் தமிழரின் இருளை நீக்க அவர் எழுந்தார் தரணியில் தமிழர் புகழ் ஓங்கவும் செய்தார் தாய் தந்தை உறவை இடையிலே துறந்தார் தமிழீழ விடுதலையைத் தலையிலே கொண்டார் உடல் பொருள் அனைதையும் உரிமைக்காய் கொடுத்தார் உரிமைப் போரிலே தம்மை முழுமையாய் இணைத்தார் மண்மீட்கப் போராடி- அம் மண்மீதே சாய்ந்தார் தமிழ் மண்ணேடு மண்ணாக அதன்மீதே வீழ்ந்தார் காற்றிலும் கடலிலும் அவர் தம்மைக் கரைத்தார் கடலலையும் அக்கதையை கரைக்கு கூற வைத்தார் காந்தள் மலர்கள்மேல் காதலும் கொண்டார் கார்த்திகைத் தீபத்தின் ஒளியிலே ஒளிர்ந்தார். தமிழர் இதயங்களில் இருப்பிடம் கொண்டார் தமிழீழக் கனவுடனே களமாடி வீழ்ந…

  16. ஆசையாய்ப் பெயரிட்டு மெல்ல நடை பழக வைத்து சிந்திய சோற்றுப் பருக்கைகளை சிரித்தவாறு சாப்பிட்டு " **கா " வை மிதிக்காதே என்று அதைக் கையினால் எடுத்ததுவும் பல முறை தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு நெஞ்சின் மேல் தாலாட்டியதவும் பள்ளியில் சேர்ப்பதற்கு பல மணிநேரம் வரிசையில் நின்றதுவும் மானத்தை விற்றுக் கடன் வாங்கி் இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததுவும் தினமும் துடைத்து அதற்கு பெட்ரோல் வாங்கக் காசு கொடுத்ததுவும் இருந்த நிலத்தை விற்றுக் கல்லூரிக்கு அனுப்பியதுவும் கண் பார்வை மங்கிய பின்னும் அதிகாலை எழுந்து பால் வாங்கி வந்ததுவும் இல்லாத பரிட்சைக்குப் பணம் கொடுத்ததுவும் வேலைக்கு சேர்வதற்காக உயிராய்க் கலந்திட்ட வீட்டை விற்ற…

  17. அது ஒரு கோடைக் காலம் இரவு நேர கிரிக்கெட் மைதானத்தில் வீசும் ஒளி வெள்ளத்தை மிஞ்சும் கண் கூசும் உப்பளங்களில் அது போன்ற ஒரு பளபளப்பு எங்கெங்கு காணினும் கருப்பு வெண்மையும் கானல் நீரும் அழுக்கு நிறைந்த சிறு சிறு கற்கள் கலங்கிய சிறு சிறு ஓடைகளும் சிறகுகள் கொண்ட மீனவர்கள் புறந்தள்ளி விடுகின்றனர் இந்த கோடை காலத்தை சங்கிலிக்கருப்பு

  18. அன்பே விழியாக நான் இருக்க இமைகளாக நீ வர வேண்டும் மலராக நான் இருக்க மணமாக நீ வர வேண்டும் கடலாக நான் இருக்க புயலாக நீ வர வேண்டும் ஒவியமா நான் இருக்க ஒவியனாய் நீ வர வேண்டும் மேகம்களாய் நன் இருக்க மழயாக நீ வர வேண்டும் வானவில்லாய் நான் இருக்க நிறங்களாய் நீ வர வேண்டும் உன் நினைவகா நான் இருக்க உயிராக நீ வர வேண்டும் ஆருயிரே நான் வாழ்த போதுதான் எனக்கு மாலை சூட்ட நீ வர வில்லை நான் இறந்த பிறகு ஆவது என் கல்லறைக்கு ஆவது மாலை சுட்ட நீ வருவயா? உயிரே நீ என்னை விட்டு சென்ற பின்பு நாம் இருவரும் பேசிக் கொண்டதை நினைத்து இரவில் போர்வைக்குள் அழுகிறேன் வேறு என்ன நான் செய்ய முடியும் உன்னை நோக அடிக்கவா முடியும் உன் இதயம் …

  19. கு.முத்துக்குமாரனுக்கு ஈழத்தமிழரின் வீரவணக்கம்... (முத்துக்குமரனின் வீரவணக்க மேடையில் வினியோகிக்கப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரம்) ஈழத்தமிழர்களின் விடிவிற்காய் ஈழமைந்தர்கள் குருதி சிந்தி இலங்கையில் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடி இன்னுயிர்கள் பல வேள்வியாகி விட்டன உன் உயிர் தியாகம் இன்று உலகையே எட்டிப்பார்க்க வைத்திருக்கிறது. உனக்காக ஒரு கவிதை எழுத - நம் பேனாக்களுக்கு பலமில்லை - ஏனெனில் எம் உணர்வுகள் என்றோ மரணித்து விட்டன. ஈழத்தமிழர்களெல்லாம் இன்று நடைப்பிணங்கள் கண்ணீரில் எழுந்த பல புரட்சிகள் காற்றோடு காற்றாய் பறந்து விட்டன மறத்தமிழனாய் இன்று - நீ ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில்.... ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களிலிருந்து - முத்துக்குமாரனே …

    • 0 replies
    • 978 views
  20. ஒரு போராளியின் மகனின் மரணத்தை மற்றொரு பதிப்பாக கண்ட கோலம் ... நெஞ்சுக்குள் எரிமலையை வெடிக்கச் செய்தது. மனிதநேயம் செத்தவர்கள் செய்கின்ற படுகொலைகளில் இதுதாம் உச்சகட்டம். போகட்டும். அணையப் போகும் விளக்கு பிரகாசமாகத்தானே எரியும்? தமிழ்க்குடிகளுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெல்லாம் நிச்சயம் பதிலடி உண்டு. ஒரு பாலகனை அழைத்து வைத்துக்கொண்டு உணவுகொடுத்து நெஞ்சில் சுட்டுக் கொல்வதற்கு எப்படி மனம் வந்தது? மிருகம் கூட அப்படி எண்ணாதே? சிறிது நேரத்தில் தாம் கொல்லப்படுவோம் என அறியாது பசியாறிக்கொண்டிருக்கும் அந்தப் பிஞ்சைக் கொல்ல எப்படி ஐயா துணிச்சல் பிறந்தது? மனிதனுக்குப் பிறந்தவர் செய்கிற காரியமா இது? இந்திய தூக்குத் தண்டனைக் குற்றவாளிகள…

    • 0 replies
    • 413 views
  21. மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட தேசியத் தலைவனை தோளிலே தாங்குவோம் தமிழ் தேசியக் கொடியினை பாரிலே தூக்குவோம்,அவன் சேனையின் யாகத்தை யாகித்து ஏந்துவோம்,பகை நோற்றிடும் தோல்வியின் சாரத்தை சாருவோம் தேச மீட்புப் போரை நேசமாய் பேணுவோம் வசமாகிடும் வீரத்தால் வளங்களை குவிப்போம், களம் வீச்சிடும் யோகத்தை வீச்சாக்கி நூற்போம்,எங்கள் பாக விடுதலை கீதத்தை ஏற்றியே சாற்றுவோம். வீம்பினின் பகை சாய்த்த மாவீரம் புனைவோம் வீசாத நகை கொள் நஞ்சினர் களைவோம், தமிழ் மூச்சினில் முகிழ்ந்திடும் முனைவனால் முகிழ்ந்தது தமிழீழ தேசமென இசைப்போம் கந்தக காற்றினி தேசத்தில் வீசாது, பல் குழல் எறிகணை சிந்த அகம் சீந்தாது. மந்தமாய் பகை சாயமும் சாயாது,அன்றி பூந்தளிர் பாலகர் …

    • 0 replies
    • 718 views
  22. தமிழ் நிலவன் கைக்கூ கவிதைகள்: காதல், தமிழ் தேசியம், தமிழின உரிமை.... சூரியனா உன் விழிகள் அது சுட்ட வலி என் இதயத்தில் தெரிகிதே..... -------அவள் பார்வை... --------------- நீ என்ன பாண்டியனின் வாரிசா நீ இதயத்தில் அடித்த வலி என்முழுதும் ரணத்தின் தடங்களாய்.... -------காதலினால் மனவலி.... -------------- நீ பார்த்தாய் பரவசமானேன் நீ பேச வானில் பறந்தேன் இன்றோ பள்ளத்தில் நீ எனை நீங்கியதால்... ------காதல் தோலவி.... ---------------- ஓட்டியை தொலைத்துவிட்டு பல தலை(வர்)களின் உரிமைப்போரில் சிக்கித் தவிக்கும் ஓடம் -------தமிழ்த் தேசியம்... --------------- ஒரு வரி தமிழிலக்கியம் உரிமைப் ப…

  23. "என்றும் உன் நினைவில் வாழும்" "என்றும் உன் நினைவில் வாழும் ஒன்றும் அறியா குழந்தை இவன் இன்றும் உன் அணைப்பைத் தேடி நின்று கண்ணீர் சொட்டும் மகனிவன்!" "கன்றுகள் நாலா பக்கமும் பிரிந்தாலும் குன்றுகளில் பள்ளங்களில் பயணம் செய்தாலும் வென்று தோற்று வாழ்வைக் கடந்தாலும் ஈன்று எடுத்தவளை என்றும் மறந்ததில்லை!" "ஊன்று கோலாய் அவள் கட்டளைகள் சான்று பகிரும் அவள் வாழ்க்கைகள் மென்று தின்ற அவள் கொள்கைகள் இன்றும் என்றும் எம் இதயத்திலேயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  24. ஆடி பாடி திரிந்த குழந்தைகளை நம் நாட்டின் வருங்கால முத்துக்குகளை கொலை வெறி கொண்ட சிங்கள அரசு கொன்று குவிக்குறது எத்தனை குழந்தைகள் ஆனதைகளாய்.. எத்தனை குழந்தைகள் ஊனமாய்.. அலயோசை அடித்து சத்தம் கேட்பது போல் நம் குழந்தைகளின் அலறல் ஓசை உங்கள் காதில் விழ வில்லயா உலக நாடுகளே?

  25. மறுக்கப்படுதல் நான் அழுவேன் உங்களுக்காக உங்களது துயரங்களை காயங்களை வலிகளை எனது மொழியால் சுமப்பேன் உங்கள் குருதி கண்டு எனக்கு உயிரலையும் எல்லாமே சிவந்த குருதி துயரப்பட்டவர்களின் குருதி கையாலாகதவர்களின் குருதி என்பார்கள் அவர்கள் நீங்கள் என்னை ஒதுக்குவீர்கள் உங்களுக்காய் ஒரு கண்ணீர் விழுவதை விரும்பமாட்டீர்கள் எங்களது பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்ள தயங்குவீர்கள் ஏன் எப்படி எதற்கென்ற கேள்வியெழும் உங்களிடம் எப்படியும் இருந்து விட்டுப்போகலாம் உயிரில்லா பிணங்கள் முன் கூச்சலிடுவதை விரும்புகிறவள் நானில்லை உங்களை போல தான் எங்களுக்கும் அழுவதற்கு கூட சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது அந்நாட்களில் இருந்தும் நான் ஒரு உணர்வுள்ள மனுஷி என்பதாலே நான் அழுவேன் உங்களு…

    • 0 replies
    • 654 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.