கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
https://www.youtube.com/watch?v=LaINo30pO8o&feature=youtu.be
-
- 0 replies
- 581 views
-
-
மாவீரர்அஞ்சலி கார்த்திகை மாதம் கடுங்குளிர் காலம் - எம் காவல் தெய்வங்களுக்கோ கனிவான மாதம் தமிழரின் இருளை நீக்க அவர் எழுந்தார் தரணியில் தமிழர் புகழ் ஓங்கவும் செய்தார் தாய் தந்தை உறவை இடையிலே துறந்தார் தமிழீழ விடுதலையைத் தலையிலே கொண்டார் உடல் பொருள் அனைதையும் உரிமைக்காய் கொடுத்தார் உரிமைப் போரிலே தம்மை முழுமையாய் இணைத்தார் மண்மீட்கப் போராடி- அம் மண்மீதே சாய்ந்தார் தமிழ் மண்ணேடு மண்ணாக அதன்மீதே வீழ்ந்தார் காற்றிலும் கடலிலும் அவர் தம்மைக் கரைத்தார் கடலலையும் அக்கதையை கரைக்கு கூற வைத்தார் காந்தள் மலர்கள்மேல் காதலும் கொண்டார் கார்த்திகைத் தீபத்தின் ஒளியிலே ஒளிர்ந்தார். தமிழர் இதயங்களில் இருப்பிடம் கொண்டார் தமிழீழக் கனவுடனே களமாடி வீழ்ந…
-
- 0 replies
- 504 views
-
-
போயகலும் பொல்லாப் பொழுது விடுதலைப் போரில் விழுந்த உறவுகளே! மண் பட்ட வேதனையை மாற்றத் துடித்தெழுந்து புண்பட்டு மண்ணில் பூவாய் உதிர்ந்தோரே! நெஞ்சுருகி உங்கள் நினைவைச் சுமக்கின்றோம் அஞ்சாத நெஞ்சோடு அந்நியர் தமைத் துரத்த வெஞ்சமர்கள் செய்தீர் வெற்றி பல கண்டீர் ஆனாலு மந்தோ! அடைந்த பல வெற்றியெல்லாம் போனதென்ன மண்ணாய் புகழழிந்து தோற்றதென்ன? எங்கள் சரித்திரத்தை எழுதிடவே உங்களது செங்குருதி தன்னையன்றோ தீந்தையாய்த் தந்தீர்கள் சிதைந்த உடல்களன்றோ சித்திரங்களாயிற்று நீர்மேலெழுத்தாகி நிலைகுலைந்து உங்கள் புகழ் பார்மீதில் இன்று பழங்கதையாயப் போவதனை விட்டு விடலாமோ! வீணே எமையழித்த துட்டர்களெம் முன்னே தோளுயர்த்தி நிற்பதுவோ! தோற்றான் தமிழன் இனித் தொல்லையழிந்ததென்று ம…
-
- 0 replies
- 645 views
-
-
புதியசூரியன் பூமிக்கு வந்த பொன்னான நன்னாள் சிங்கள இனவெறி அரசின் கோரத்தாண்டவத்தால் எங்கள் தமிழினம் வதைக்கப்பட்டு சிதைக்கப்பட்ட பொல்லாத காலமதில் புதியசூரியன் பூமிக்கு வந்த பொன்னான நந்நாள் நவம்பர் இருபத்தியாறு தவித்த தமிழினம் இனித் தலைநிமிர்ந்தே வாழவேண்டுமென இதயத்தில் உறுதிபூண்டு போராடப் புறப்பட்ட தமிழர்தலைவன் ப+மிக்கு வந்த புனிதநாள் நவம்பர் இருபத்தியாறு அடக்குமுறைக்குள் அவதியுற்று ஆழ்மனதுள் துயரை அடக்கவைத்து விடிவே இல்லை என வெதும்பிய பெண்ணினத்தை புதுமைப்பெண்ணாக, படைநகர்த்தும் திறனில் வல்லமை மிக்கவராக, அவனிக்கு அறியவைத்த தமிழப்பெண்ணின் ஆற்றல்கண்டு தரணியைத் திகைக்கவைத்த, புரட்சிவிஞ்ஞானி பிறந்தபொன்னாள் நவம்பர் இருபத்தியாறு ‘ஆணும் பெண்ணும் இணைந்தே அடிமைப்பூட்டை உடை…
-
- 7 replies
- 965 views
-
-
நாள்கள் நெருங்கிறது .. நினைவெல்லாம் நாட்டை நோக்கி .. சிறகுகள் இருந்தும் பறக்க முடியா .. பறவைகள் எல்லாம் கூட்டில் .. அமைதியா வேடிக்கை பார்க்கிறது .. தன் எஞ்சிய குஞ்சுகளை காப்பதா ... இல்லை இழந்த குஞ்சுக்கு ஒளி ஏற்றவா .. சிறகுடைந்த குஞ்சுக்கு உணவு தேடவா .. என்ன செய்வேன் சிறு கூட்டில் நான் ... உணவு தேடி போன என்னவன் வரும்வரை .. கொஞ்சம் கீச்சிட்டாலும் பக்கத்தில் உள்ளவர் ... கூண்டோடு பிடிங்கி எறிவர் அல்லவா ... எனக்கு ஏது நிரந்தர கூடு இவ்மண்ணில் .. பாலையில் ...வீரையில் ..பனையில் என்று ... மாறி மாறி தங்கிய களைப்பு இன்னும் போகவில்லை .. மீண்டும் ஒரு கூடு பின்னும் எண்ண இல்லை .. இருக்கும் கூண்டில் இருப்பவரை வளர்த்து விட்டால் .. தனிமரத்தில் நான் மட்டும் உற…
-
- 0 replies
- 714 views
-
-
தியாக சரித்திரங்களின் நாயகர்கள் தாயக மண்ணின் காவலர்கள் தீயாலே தீர்த்தமாடிய தீரர்கள் - தமிழீழத் தாய்க்காக களமாடிய.... மாவீரர்கள்! கந்தகக் காற்றைச் சுவாசித்து... விடுதலை ஒன்றையே யாசித்து... அவர்கள் புரிந்தது பெருந்தவம் தம்மையே உருக்கி.... எம்மைக் காத்த காவல் தெய்வங்கள் ! மண்ணின் நிரந்தர விடியலுக்காய், நிரந்தரமாய் மண்ணுள் உறங்கும் வீரத் தமிழ்ச் செல்வங்கள் ! எதிரியின் தோட்டாக்கள் கூட இவர்களைப் பார்த்து அஞ்சும்! மரணம் கூட இவர்களிடம் கெஞ்சும்! இவர்களின் தியாகம் மரணத்தையும் விஞ்சும்!! புன்னகைத்தபடியே போர்க்களம் புக இவர்களால் மட்டுமே முடிந்தது! எம் தேசமே இவர்களால்தான் விடிந்தது!! தாயக மண்ணைத்தான் நேசித்தார்கள்- அதன் விடுதலை ஒன்றைத்தான் சுவாசித்தார…
-
- 2 replies
- 18.3k views
-
-
காந்தாளே..! கார்த்திகை முழுதும் கணலாய் எரிக்கும் பூவே..! நாமெல்லாம் சுமந்த விதி தின்ற பெருங்கனவொன்றின் அடையாளம் நீயென்று அறிவாயா..? இரத்தம் சேறான தேசத்தின் நினைவு நூற்கையில் நதியாய் பின்னும் கண்ணீரை நீயறிவாயா..? பெருங்கோடையில் நீரற்ற நதியைப்போல வற்றிப்போனது எம் சந்ததியின் கடலாயிருந்த தாகம் சருகுகளைப்போல உதிர்ந்துபோயின எங்கள் நிழலாயிருந்த மரங்கள் ஊழிக்காலமொன்றில் உப்புமற்றுக் கடலுமற்றுப்போயிற்று எம் மிச்சமிருந்த கண்ணீரும்.. எம்மைத்தவிர யாரறிவார் சுடுகாடொன்றில் உயிரோடெரியும் பிணமொன்றின் வலியை.. காந்தாளே..! எம் கனவெல்லாம் வாங்கிப்பூத்தமலரே..! அறிவாயா.. எம்தேசத்தின் வீதிகளும் வீடுகளும் வயல்களும் காடுகளும் ஞாபகங்களின் ஞாபகங்களும் சேர்ந்தேயழும் துயரை ந…
-
- 9 replies
- 1.1k views
-
-
துயர் காவிகளாய் இருண்டு கிடக்கின்றன வான்முகில்கள் முகம் மழுங்கிச் சிதைந்து எழுகிறது ஒளிமுதல் விதை விழுந்த நிலத்தில் கிளையெறிந்த பெருமரங்கள் இயலாமையோடு மௌனித்துக் கிடக்கின்றன, நீண்ட வீதிகள் இனங்களை இணைத்துவிடவென்று மக்கிப்போகாத உடலங்கள் மீதேறிப் போகின்றன, முள்வேலிகட்டிய பகை, நெஞ்சுக்கூட்டில் பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்புரை நிகழ்த்துகிறது. காற்றினில் கந்தகநெடி இல்லை வானில் மிகையொலி விமானங்கள் இல்லை கடலினில் செங்குருதி மிதக்கவில்லை தீசூழ்ந்து எம்மூர்மனைகள் அழியவுமில்லை இருந்துமொரு, தீபம் ஏற்றிட வழியில்லை மணியொலித்துக் காந்தள் தொடுத்து, கல்லறை தொழுதிடவொரு களமும் இல்லை. மண்சுமந்த வேழங்கள் நடந்த தடத்தில் கண்ணீர் சொரிந்த…
-
- 1 reply
- 584 views
-
-
ஆதவனின் கட்டில் இமைகளின் கொட்டகை இரவின் விழி கால வழிப்போக்கன் ஞால சித்தன் நேர ஈடாளன் இருள் அவன் இருள் அரசன் இருள் அற்றவன் என் உயிர் கள்வன் என் துயர் துலக்கி என் தோழன் நின் முகத்தை கண்டவர் இலர் நான் காண்கிறேன் உன் பாதம் என் பள்ளியறை கண் அயர்ந்திட நய வஞ்சகர் பிறழ் சூழ்ச்சியர் எதிரில் கண்டிலேன் துப்பாக்கி ஓய்ந்திடும் தோட்டாக்க.ள் உறங்கிடும் புதை அறையில் உன்னில் இணைவேன் அன்புடன் அமைதியுடன் வாங்கிக் கொள் விடியும் முன் உன் இமை உறங்கும் முன் என்னை!
-
- 0 replies
- 539 views
-
-
எங்களுக்காகத் தங்களை உதிர்த்து எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து உயிர் என்னும் கொடை தந்து தம் உணர்வுகள் துறந்து நின்றார் தாய் மண்ணின் தடையகற்ற மன ஓசை அடக்கி மகிழ்வாய் ஆசைகள் தாண்டி வந்தார் பருவ வயதில் பாசம் அடக்கி பசியடக்கிப் பலதும் அடக்கி எதிரி அடக்கும் ஆசை கொண்டார் எங்கள் நிலம் எமதேயாக தங்கள் நிலம் தான் துறந்து காடுமேடெல்லாம் கால் பதித்தார் எத்தனை உயிர்கள் எம்மினமானதில் அத்தனை பெரும் அவலம் தாங்கி எத்தனை ஈனமாய் எருக்களாயினர் எத்தனை தடைகள் எங்கு தாண்டியும் அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும் ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம் தோல்வி கண்டு துவண்டோமாயினும் தோள்கள் துடிக்க திருக்களமாடிய துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம் மண்ணை இழந்து மறுகினோமாயினும் உதிரமிழந்து …
-
- 2 replies
- 746 views
-
-
மானின் விழி கண்டு மருண்டு நான் நின்றபோது அன்ன மொன்று வந்து அவள் நடையைக் காட்டியதே.
-
- 3 replies
- 1.2k views
-
-
மண்ணுக்கு வித்தாகிப் போன மாவீரர்களே! விண்ணிலும் கடலிலும் காற்றிலும் நெருப்பிலும் கரைந்து போன புலி வீரர்களே! இன்று மாவீரர் நினைவு நாள்! ஒரு கணம் கண்திறந்து எம்மைப் பாருங்கள்! பெற்ற தாய்தனை சேய் மறந்தாலும் சேய் தனைத் தாய் மறந்தாலும் உற்ற உடலை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்ணை இமை காக்க மறந்தாலும் பிறந்த மண்ணின் விடுதலைக்காய் தங்கள் தங்க நிற மேனியை விடுதலை வேள்வியில் ஆகுதி யாக்கிய எங்கள் மாவீரர்களை கைதொழ மறப்போமா? தங்கள் இளமைக் கனவுகளை தொலைத்து மண்ணின் விடுதலையை நெஞ்சிலே சுமந்து தங்கள் குருதியால் தமிழ்மண்ணைச் சிவப்பாக்கி மண்ணின் வ…
-
- 0 replies
- 453 views
-
-
வேலிப் பொந்தினில் பிறந்த நேசத்தில் கருக்கொண்டவள் வைக்கறைப் பொழுதினில் வைத்தியசாலையில் நன்கே பிறந்தவள். அழகு பெயரும் சூட்டி அடுக்குச் சட்டை போட்டு கொண்டாடிய பிறந்த நாட்கள் பல களிப்புறக் கண்டவள்..! தங்கத் தட்டினில் பல்லுக் கொழுக்கட்டை அவிச்சுக் கொட்ட இன்புற்றவள்.. மங்கையாய் பருவமடைந்த வேளையதில் பல்லக்கில் பவனி வந்தவள்..! அந்நிய நாடுகளில் அதிசய வாழ்க்கை தந்திட கண்கவர் கள்வர்கள் படையெடுத்த போதினில் அழகு கன்னியாக வீதி வலம் வந்தவள்..! தேசத் தாயவள் அவதி கண்டவள்.. நொடிப் பொழுதினில் உந்தித் தள்ளிய தேவையின் வேகத்தில் வேங்கையாகி பாய்ந்து நின்றவள். தாய் நிலம் தின்ற சிங்களப் பாசறை நொருக்கி வீழ்ந்தவள்.. மாவீரர் வரிசையில் நிமிர்ந்து நின்…
-
- 0 replies
- 592 views
-
-
1 ‘மாவீரர்கள் சாவையே வென்றவர்கள் மக்கள் மனங்களுக்குள் வாழ்பவர்கள்’ நவம்பர்27ல் எங்கே நாங்கள் வருவோம்? நேசம் மிக்க எங்கள் தேசச்செல்வங்களே! உங்களைக் கண்டு எம் உள்ளத்துணர்வூகளை எடுத்துச்சொல்ல எங்கே நாங்கள் வருவாம்? நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தவர்களல்ல எங்களுள் நிலைத்து வாழும் மாவீரர்கள் எங்களை நேசித்தவர்கள் நீங்கள் எமக்காக உங்கள் உயிர்ப்பூக்களை உதிர்த்தவர்கள் எங்கள் நிம்மதிக்காக உங்கள் சுகங்களைத் துறந்து போராடினீர்கள் நாங்கள் வாழவேண்டும் என்பதற்காக உங்கள் சாவூக்கான நாளை குறித்தவர்கள் நீங்கள் உண்மையாக எங்களை நேசித்தவர்கள் நீங்கள் -அதனால் உங்களிடம் மட்டுமே எங்கள் உள்ளத்து வலிகளை சொல்லி அழமுடியூம் அதனால்த்தான் உங்களைப்பெற்றவர்கள் உங்களின் சோதரங்கள்இஉறவினர்கள் த…
-
- 0 replies
- 617 views
-
-
எங்கே என் பிள்ளையென ஏங்கும் ஒரு தாயின் உள்ளம் எங்கே என் அண்ணா என விம்மும் ஒரு தங்கையின் மனசு எங்கே என் அக்கா என சத்தமாய்க்கேட்கிறான் ஒரு தம்பி இதையெல்லாம் பார்த்தும் ..... உள்ளுக்குள் மட்டுமே அழுகிறான் ஒரு தந்தை கந்தக சூட்டினில் சந்தண மேனிகள் கருகின குண்டுமழை நடுவினில் குருதியாற்றின் கரையினில் விதைக்கப்பட்டன காந்தள் விதைகள் கண்ணீரும் செந்நீரும் ஊற்றி தியாகங்கங்களையும் வெற்றிகளையும் உரமாக்கி நிமிர்ந்து வளர்ந்தன கார்த்திகைக்கொடிகள் வெட்டிப்போட்டாலும் புடுங்கி எறிந்தாலும் கார்த்திகை மாதமானால் மண்ணை விலக்கி மீண்டும் மீண்டும் வளர்ந்து பூப்பூக்கும் மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் சயணைட் குப்பிகள் துருஏறிப்போனாலும் கார்த்திகை கிழங்குகளாய் மீண்டும் மீண்டும் மண்கிழித…
-
- 6 replies
- 957 views
-
-
உயிரின் வலி அறிவாயோ மானிடா ஊனுருக்கி உடல் கருக்கி உள்ளனவெல்லாம் மறக்கும் உயிரின் வலி அறிவாயோ உள்ளக் கருவறுத்து ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயிர் வதைத்து உணர்வு கொல்லும் உயிரின் வலி அறிவாயோ எதுவுமற்று ஏதுமற்று எங்கெங்கோ மனம் அலைத்து ஏக்கங்கள் கொள்ளவைக்கும் உயிரின் வலி அறியாயோ எதிரியாய் எமை வதைத்து எட்டி நின்றே வகுத்து எல்லையில்லா துன்பம் தரும் உயிரின் வலி அறியாயோ எண்ணத்தை எதிரிகளாக்கி எல்லையற்று ஓடவைத்து என்புகள் மட்டுமே ஆனதாய் என் உயிரின் வலி அறியாயோ சரணடைந்து சரணடைந்து சர்வமும் இழக்க வைத்து சக்தியெல்லாம் துறந்து நிற்கும் உயிரின் வலி அறியாயோ மானிடா உயிரின் வலி அறிவாயோ
-
- 2 replies
- 634 views
-
-
அன்னை மண் சிந்திய கண்ணீர் .. அணையாது காக்கப்படும் தீபம் .... அண்ணனவன் ஆளும் காலம் .. அனைவரும் இணைவோம் பலமா .. ஆளான ஆலமரங்கள் .. ஆழியில் அகப்பட்ட துரும்பு போல் .. ஆழமா உள் இழுக்ப்படும் மூச்சு .. ஆணிதரமா முகத்தில் அறைந்தது .. இலை என்று நினைத்தவர் எல்லாம் .. இல்லை இது இமயம் என்று வியக்க .. இன்னொருவன் வருவான் எமக்கு .. இனத்தின் இருளை போக்க .. ஈ ஆக பறந்து போகாது .. ஈட்டி போல பாய்வோம் நாம் .. ஈனர் செயல் அறுத்து வீழ்த்த .. ஈன்றவள் பெரு மகிழ்வு கொள்ள .. உலகம் ஒருநாள் புரியும் எம்மை .. உண்மை அறிந்து தலைகள் குனியும் .. உன்னத இலட்சியம் வெல்லும் காலம் .. உணர்வுடன் நாம் மாவீரம் போற்றுவோம் .
-
- 2 replies
- 696 views
-
-
ஒவ்வொரு இலைகளாய் உதிர்த்த பின்னும் ஒரு துளி இசையில் தன்னுள் தளும்பியபடி நிறைந்திருக்கும் மனதிற்கு வாழ்வின் அடர் வனத்துள் தனித்து நின்று கதறியழும் தருணமென்று ஒன்று கிடையாது.. எங்கோ தூரத்தில் வானவில்களோடு பேசுகிறோம் சொந்தமாயிருந்த வண்ணங்களை தொலைத்துவிட்டு...
-
- 13 replies
- 1.3k views
-
-
நீ வரும் வேளை வரை ! (போராளி அம்புலி எழுதிய கவிதை. மாவீரர் வாரத்தை முன்னிட்ட மீள்பதிவு இது.) 10வருடங்கள் முன்னர் ஒலிபரப்பான கவிதை. 10வருடம் கழித்து மீண்டும் இன்றைய காலத்திற்கு எற்ப இக்கவிதையானது வருகிறது. http://www.youtube.com/watch?v=kEyzd1Whmwk
-
- 0 replies
- 583 views
-
-
நீண்ட பெரு மரங்களிலும் தரவைப் பனைகளிலும் மோதி அவிழ்கிறது கார்த்திகைக் காற்று, பெருநிலமெங்கும் நனைந்துபோக குளிர்ந்து கருக்கூடிக் கவிழ்கிறது கார்த்திகை வானம், எண்திசைகளாலும் சூழ்ந்து பெருகும் இருளை ஊடுருவுகிறது கார்த்திகை நட்சத்திரங்கள், வைகறைப் பொழுதின் வாசலில் சூரியதேவனின் தீண்டலோடு முகிழ்க்கின்றன கார்த்திகை மலர்கள், வாழ்த்துக்கூறி ஒவ்வொருவரையும் கடக்கிறது கூட்டமாக, கார்த்திகைப் பறவைகள். தீவிழுந்த நிலத்தின் பெருந்துயர் சுமந்து மெல்ல எழுகிறது பாடல், கல்லறைகள் மீதேறி மண்மேடுகள் தீண்டி கரைந்தநீர் வெளிகள் தழுவி எங்கும் பரவுகிறது பாடல், கேளுங்கள், இது கார்த்திகைப் பாடல். உங்களின் உறவுகளின் பாடல். வேரோடி மண்ணில் நிறைந்துபோன வேழங்களின் பாடல். …
-
- 6 replies
- 630 views
-
-
தமிழீழம் என்னும் விருச்சம் வளர்ப்போம் மாவீரர் ஈழத்துக்காக மாவீரர் தம் உயிர் தந்தார் மாவீரர் தமிழீழம் வாழ தம் இனம் வாழ பினமாகினர் அவர் நினைவு அது நம் இன நிமிர்வு களம் கண்ட அவர் சிரம் சாயவில்லை அவர் உடல் மட்டும் மண்ணுக்கு தமிழீழ உரமானது அவர் தந்த கொடி இது அவர் உயிர் தந்து பறந்த கொடி இது தமிழ் மானம் காத்த கொடி அவர் நினைவு உரமாக்கி புலிக்கொடி நாட்டி தமிழீழம் என்னும் விருச்சம் வளர்ப்போம் சரவணை மைந்தன் http://www.eelampoem.tk/2014/11/tamileelam.html
-
- 0 replies
- 3.3k views
-
-
அந்த ஆண்டவனும் ஊனம் தான் வழமையானது என் பிராத்தனைகளை அவன் கேட்பதை, நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், காது கேளாதவன். என் கேள்விகளுகெல்லாம் அவன் அமைதியாய் சொல்லும் பதில்களை நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், வாய் பேச முடியாதவன். என் செயல்களில் உள்ள நல்ல வற்றை அவன் பார்ப்பதை நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், பார்வை அற்றவன். என் பிரச்சனைகளை தீர்த்துவெய்க்க ஒவ்வொறு முறையும் அவன் கைகொடுப்பதை நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், கைகள் இல்லாதவன். என் தனிமையான பயணங்களில் என் தோழனாய் என்னுடன் அவன் நடப்பதை நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், கால்கள் இல்லாதவன். நாம் உணராவிட்டால், அந்த ஆண்டவனே ஊனமாகி விடுகிறான்!!! நம் ஊனமுற்ற நண்பர்களின் கெதி? ஆதரிப்போம் நம் உணர்வுகளால்!!!…
-
- 0 replies
- 644 views
-
-
என்ன பார்க்கிறீர்கள்? மஞ்சள் குளித்து மரமொன்று நின்றது பச்சைப்பசேலென பார்ப்பதற்கு குளிர்ச்சியாய் நிழல் தந்து நின்றது இப்படி மாறிவிட்டதே! பார்த்து நின்றேன். என்ன விகைப்பாய்ப் பார்க்கிறீர்கள்? நாங்கள் பருவ காலத்துக்கேற்ப கோலத்தை மாற்றி வாழுகிறோம். உங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களோ நேரத்துக்கு நேரம் பணத்துக்காகவும் பதவிக்காகவும் குணமும் மாறுகிறார்கள் கொள்கையும் மாறுகிறார்கள் அவர்களைப் பார்க்காமல் என்னை ஏன் பார்க்கிறீர்கள்? வாயடைத்து தலைகுனிந்து வந்தேன். செண்பகன் 18.10.14
-
- 1 reply
- 948 views
-
-
மாவீரம் குறள்: 1 மண்ணின் கண் மகிமை கொண்டோர் மாட்சிமை மேலுயிர் துறந்தவத்தார். (தொடர்ந்து நீங்களும் ஆக்குங்கள். ஆளுக்கு ஓர் குறள் மட்டுமே ஆக்கலாம்.) இக்குறள் மாவீரர்களின் வீரம்.. ஈகை.. கொடை.. தன்னலமற்ற பண்பு.. இலட்சிய வேட்கை.. வாழ்க்கை.. சாதனைகள்.. இனப் பற்று.. மண் பற்று.. அவர் தம் மக்கள் பற்று.. சக போராளிகள் மீதான பற்று.. மக்கள்.. மாவீரர் மீது கொண்ட மகிமை.. என்ற கருத்துக்கள் பட அமைவது நன்று. இந்த தன்னமலற்ற தியாகிகள் மீதான அவதூறுகள் வரவேற்கப்பட மாட்டாது. கள நிர்வாகம் அப்படியான ஆக்கல்களை அகற்றி உதவுதல் வேண்டும். திருத்தம்: ஆளுக்கு ஒரு குறள் மட்டுமே ஆக்கலாம் என்பது கீழ் வருமாறு தளர்வு செய்யப்பட்டுள்ளது.
-
- 42 replies
- 2.8k views
-
-
பெரும்பாலும் கவிதை என எங்காவது தென்பட்டால், தலைதெறிக்க எதிர்புறம் ஓடும் வழக்கம் எனக்கு..! தற்செயலாக தினசரியில் படித்த இந்தக் க... வி... தை.... யை படித்தவுடன் குற்ற உணர்வால் மனம் சலனப்பட்டது. உங்களுக்காக இதோ..! யாரிடம் கொடுப்பது… மனு? கொல்லாமையை வலியுறுத்தி கொள்கைகள் பேசும் உங்கள் நாக்குகளால் – நான் வாரந்தோறும் புசிக்கப்படுவது வழக்கமாகி விட்டது. ஐந்தறிவு கொண்ட ஆடுகளைக் காட்டிலும் ஒரறிவு குறைவான என் இனத்தை அதிகமாக பலியிடுவது ஏன்? சுவையும் மிகுதி - விலையும் குறைவு ~ சுயநலம்தான் காரணம். நெற்பயிரை கொத்தவரும்போது என்னை நித்தமும் துரத்தியடிக்கும் மனிதர்களே… என் முட்டைகளைத் திருடும்போது மட்டும் உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? …
-
- 3 replies
- 651 views
-