கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
சத்திய சோதனை-பா.உதயன் கொடிய இரவின் பிறப்பில் எலும்பும் சதையுமாக எரிந்து கொண்டு இருந்தது முள்ளிவாய்க்கால் இருளின் நடுவே சிலுவை தாங்கி இறைவன் வருவான் என நிலவை பார்த்தோம் இறந்த தாயின் முலையில் குழந்தை பால் குடிக்க இழுத்து வந்து நெருப்பு மூட்டினர் எங்களின் வீட்டில் யூதர்கள் வந்தனர் ஜேசுவை கேட்டனர் ஆயிரம் ஆயிரம் சிலுவையில் அவர்களை அறைந்தனர் உயிர்த்து இருந்தவர்களை இன்னும் ஒரு முறை புதைத்தனர் கனவுகள் உடைந்து கல் அறைக்குள் ஒழித்து கொண்டன முள்ளிவாய்க்கால் முழுமையாக மூச்சு இழந்தது மிஞ்சி கிடக்கும் சாம்பலில் இருந்து எலும்பை எண்ண அங்கு யாரும் சாட்சிக்கு இல்லை …
-
- 2 replies
- 633 views
-
-
· கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு… எத்தனை வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று… எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்… பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சிக் குழந்தைக…
-
- 1 reply
- 387 views
-
-
ஆரியகுளத்து தாமரைப் பூவிற்கு அடித்தது யோகம்! பீக்குளத்து பூக்களும் பூசைக்கு போகும்! நாகவிகரையில் பூசை நடந்ததாம் ரூபவாகினி சொல்லிற்று.. இனி என்ன? “காமினி டீ றூம்” கதவுகள் திறக்கும்! சிட்டி பேக்கரியும் சீனிச் சம்பலும் நகரப் பகுதியில் அறிமுகமாகும்! புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போட ரத்வத்த வரக்கூடும்! சிங்கள மகாவித்தியாலயம் திரும்ப எழுமா? எழலாம். வெசாக் கால வெளிச்சக் கூட்டை எங்கே கட்டுவார்? ஏன் இடமாயில்லை? வீரமாகாளியின் வெள்ளரசிற் கட்டலாம், முனியப்பர் கோவில் முன்றலிலும் கட்டலாம், …
-
- 1 reply
- 483 views
-
-
மே 1 தொழிலாளர் தினம் உழைப்பவன் காவும் இந்த உலகத்தில் இல்லாமை என்றோர் காலம் இல்லாது இருக்க வேண்டும் எங்குமே சமத்துவமாய் வாழ்வு வேண்டும் எப்போதும் சுரண்டல் ஒழிய வேண்டும் உழைப்பவனுக்கே உலகமதாக வேண்டும் எல்லோர்க்கும் இவ்வுலகில் உணவு வேண்டும் ஒரு போதும் யுத்தம் இல்லா உலகு வேண்டும் இனி எப்பவுவே தர்மமாய் நீதி கொண்டு உலகு சுழல வேண்டும் எங்குமே குழந்தைகளின் பாடல் அது இசைக்க வேண்டும் எப்போதும் ஒரு பூ பூப்பதோடு உலகமது விடிய வேண்டும். பா. உதயன் சக்தி படைத்த முதலாளித்துவவாதிகள் உழைக்கும் ஏழை மக்களின் உழைப்பை சுரண்டுகின்றான். Dominant capitalists group within society exploit the proletariat social group. …
-
- 6 replies
- 478 views
-
-
இலங்கையின் குரங்கு வியாபாரம் Sri Lanka’s monkey business 🙊 -பா.உதயன் மனிதம் கொண்ட மக்களுக்காய் குரங்கு நான் எழுதுவது குரங்குகள் எங்களையே விற்று கடனை அடைக்க நினைக்கும் இலங்கை இது தம்பி இனி நாய் பூனை எலி என்று எதையும் விடாமல் ஏறும் கப்பல் நாளை நாடு போற போக்கை பார்த்தால் காக்கை குருவி கூட இங்கு வாழ பயந்து ஓடும் வரப் போறான் பிடிக்க வென்று இனி அவையும் அகதியாய் ஓட நினைக்கும் காணி நிலம் கடல் என்று கடனுக்காய் சீனாவுக்கு வித்துப் போட்டு கடைசியில தமிழரையும் அகதி வாழ்வாய் அலையவிட்டு அவன் நிலத்தையும் உழைப்பையும் பறித்துப் போட்டு தம்பி இப்போ எங்களையும் அதே வாழ்வாய் வி…
-
- 6 replies
- 405 views
-
-
அழியா என் இருப்பு அன்னையும் தந்தையும் அருந்திய உணவின் ஒரு துளி திரண்டென் உயிரைச் சூழ்ந்தது. அது வரை நானெனை அறியாச் சூனியம் அதன்பின் மெய்யுணுர்வென்று பல் பகுதியாய் சிந்தனை செயலென்றின்னும் மேலாய் தன்னுணர்வோடு தரணியில் விழுந்து நானெனவானேன் நானோர் வெற்றிடம். சூழ்ந்ததனைத்துமிச் சூத்திரப் பாவை வாழ்ந்து முடிக்கும் வரையிலிருக்கும் வீழ்ந்த பிறகு விண்ணிலும் மண்ணிலும் ஆழ்ந்து கரைந்து அனைத்தும் மறைய பாழ் வெளியதனில் பழைய நானாய் ஒன்றையுமுணராச் சூனியமதனில் என்றும் அழியா இருப்பில் கலந்து அன்றை இன்றை நாளையையுணரா அதிலும் இதிலும் எதிலும் சேரா அமைதி வெளியில் ஐக்கியமாகி நிரந்தரமாவேன் நிர்க்குணனாவேன் …
-
- 2 replies
- 609 views
-
-
காலைப் பொழுதொன்றில் கூவும் குயிலொன்று-பா.உதயன் 🌺 காலைப் பொழுதொன்றில் கூவும் குயிலொன்று யாரை அழைக்கிறது ஒரு கீதம் கேட்கிறது வானம் திறந்திங்கு மழைகள் பொழிந்திங்கு பூக்கள் மலர்கின்றதே பூமி வாசல் திறக்கின்றதே காலைக் கனவொன்று என் வாசல் வரை வந்து காதில் ஏதோ சொல்கிறது ஒரு கவிதை பிறக்கிறது யாழில் சுரம் ஒன்று தானாய் வந்திங்கு காதில் விழுகின்றது கல்யாணி ராகம் இசைக்கின்றது கடலும் நதியும் ஏதோ காதல் கதை பேசி வந்து கரையில் தவழ்கின்றது காலம் மெல்ல விடிகின்றது பாடும் பறவை எல்லாம் வானில் பறந்து அங்கு வாழ்வை வரைகின்றது வசந்தம் தெரிகின்றது வானம் திறக்கையிலே காலைப் பறவை வந்து பாடி ஏதோ சொல்லி நான் தொலைத்த கவிதை ஒன்றை கையில் தந்து போகின்றது…
-
- 0 replies
- 362 views
-
-
பனி உமிழும் மாலைப்பொழுதில் மொழிபெயர்ப்பு: பேராசிரியர் மு.விஜயகுமார் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி ஆவடி, சென்னை – 600062 யாருடைய பனித்துகள்கள் இவைகள்? தெரிவது போல உணர்கிறேன். அவரின் வீடோ அருகே உள்ளகிராமத்தில் நானோ இங்கு ஓய்வில். என்இருப்பை அறிய வாய்ப்பில்லை. காடுகள் முழுவதும் பனித்துளிகளின் கைகள் படர்ந்துள்ளது. என் இளமை ததும்பும்குதிரை பனிஉதிரும் காடுகளுக்கும் சிலைபோன்ற ஆறுகளுக்கு இடையைவீடுகளற்ற இடத்தை கண்டு சற்றே குழம்பியது. அதன் கழுத்தில் உள்ள மணிகள் அசைந்து தவறுகள் நேராமல் கவனமாக இருக்க வேண்டி கட்டளையிட்டது. …
-
- 2 replies
- 508 views
-
-
முதுமை என்பதோர் புதுமை முதுமை என்பதோர் புதுமை - அதை முழுதும் உணர்ந்தோர் யாரிங்கு? முதுமை தருவது அறிவாகும் - அதில் முழுமை பெறுவோர் சிலராவர் முதுமை என்பது எதுவரை - அதன் முடிவைச் சொல்பவர் யாருளர்? முதுமை தருவது நோயென்று - தினம் முடங்கிக் கிடத்தல் தகுமோ? இனிதே, தமிழரசி
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
அன்று கையில் புத்தகமும் கையுமாய் கல்வியும் கண்ணுமாய் அன்னை தந்தை ஆசிரியன் சொற்படிமாய் தமிழ்த் தம்பிமார் இருந்தார்கள் இன்று வாயில் புகையும் தண்ணியுமாய் கையில் கத்தியுமாய் வாளுமாய் கொன்று திரிகிறார்கள் அன்று ஒரு காலம் மேய்ப்பவன் ஒருவன் இருந்தான் ஏன் என்று கேட்க அங்கு ஒரு ஒழுங்கு இருந்தது அமைதி பேண தமிழருக்காய் ஒரு படை இருந்தது இன்று என்ன இருக்கின்றது இன்று எவரும் இல்லாமல் ஏன் என்று கேட்க தானாய் தம்மையே அழிக்கிறார்கள் தமிழர் தெரிந்து கொள்ளுங்கள் எம்மை ஆக்கிரமித்து இருப்பவனுக்கும் நாம் அழிவது தானே விருப்பம் இனி என்ன தான் மிஞ்சி இருக்கப் போகிறது கஞ்சிக்கு கடைசியில் என்ன செய்வீர் …
-
- 8 replies
- 564 views
-
-
ஹெர்மன் ஹஸ்ஸி- கவிதை தமிழில் மொழிபெயர்ப்பு : பேராசிரியர் மு. விஜயகுமார் ஜெர்மன் எழுத்தாளர். நோபல் பரிசு பெற்றவர். (1970) தலைப்பு: நிலைகள் நிலைகள் ஒவ்வொரு பூக்களும் தோன்றி மறைதல் போல இளமையும் மறைகிறது வாழ்வின் நிலைகளில். ஒவ்வொரு ஒழுக்கத்திலும் உண்மையை அறிகிறோம் மலரின் பருவங்கள் நிலையானதல்ல ஏனெனில் வாழ்க்கை ஒவ்வொரு வயதிலும் உள்ளது வருந்தாமல் தைரியமாக எதிர்கொள்ளுங்கள் பழைய உறவுகள் மறக்காமல் புதிய ஒளியைக் கண்டுபிடிங்கள் எல்லாத் தொடக்கமும் ஒரு மாயசக்தியாக வழிநடத்துகிறது. அதுவே நம்மைப் பாதுகாத்து உதவுகிறது அமைதியாக நெடுந்தூரப் பயணத்தைத் தொடங்குங்கள். வீட்டு நினைவுகள் நம்மைத் தடுக்கிற…
-
- 0 replies
- 321 views
-
-
அன்னையர் தினம்- “அன்னை என்பவள் அனைவர்க்கும் தாய் இவள் பெண்மை என்பவள் போற்றுதலுக்கு உரியவள் இவள் இன்றி இவ்வுலகில் உயிர் இல்லை.” தான் பெற்ற பிள்ளைகள் மாத்திரம் இன்றி தன் கணவனைக் கூட பிள்ளை போல் காப்பாற்றக் கூடிய வீரமும் பெருமையும் பெண்மைக்கு மட்டும் தான் உண்டு அவள் தான் தாய். இன்று நோர்வே அம்மாக்களின் தினத்தை கொண்டாடுகிறது என் அம்மாவுக்கும் எல்லா அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.🙏 ———————————————————————————————————————————- அம்மா-பா.உதயன் எத்தனையோ கவி சொல்லி எதை எதையோ எழுதி வந்தேன் பொய்யை கூட மெய்யாக்கி புதுக் கவிதை என்று போட்டுடைத்தேன் இன்னும் நான் எழுதவில்லை என் அம்மாவுக்காய் ஒரு கவிதை அவளி…
-
- 3 replies
- 449 views
-
-
01. உடலின் முன் மண்டியிட்டொரு மன்னிப்பு மஞ்சள்நிறக் கரைசல்கள் வழியும் சுவர்கள் மாத்திரைகளின் உபயம். காய்ச்சலின் தகிப்பைத் தம் குரலிலேற்றிப் பாடுகின்றன பறவைகள் உடலை இருபாதியாய் வகிர்ந்து பரவுகிறது வெப்ப மின்னல் பாதங்கள்தாம் எத்தனை கனம் உலகமோ எனக்கு எட்டாத தொலைவில் 'இதுதான் கடைசி; இனிமேலில்லை' உடலின் முன் மானசீகமாக மண்டியிடுகிறேன் பொதியுடன் மலையேறும் கழுதைபோல என்னைக் கொண்டிழுக்க எவ்வளவு சிரமப்பட்டாய் நீ. இந்த உலகின் நிறம் குருதி சுவையோ வட்ட நீள வில்லைகளின் கசப்பு மணம் சிறுநீர் ங்.....ஙென்றொரு சுநாதம் அ…
-
- 1 reply
- 1k views
-
-
காலை புலர்ந்தது காலை புலர்ந்தது- பா.உதயன் காலை புலர்ந்தது காலை புலர்ந்தது காலைச் சேவல் கூவிச் சொன்னது கதிரவன் எழுந்தான் கனவுகள் உயிர்த்தது பொழுது புலர்ந்தது பூக்கள் மலர்ந்தது உழவனுக்கு என்றே உலகம் செய்து உன்னையும் என்னையும் உயிரோடாக்கி மண்ணையும் தந்து மகிழ்வித்த தாயினை எண்ணுக மனமே எண்ணுக எண்ணுக காலை புலர்ந்தது காலை புலர்ந்தது எழுக தமிழா இன்னும் துயிலுவியோ இன்றைய காலை உனக்காய் விடிந்தது பொங்குக மனமே பொங்குக பொங்குக ஆலய மணிகள் அன்பினை ஒலிக்க ஆயிரம் பறவைகள் கூடியே பாடின அழகிய குயில்கள் கூவி இசைத்தன கதிரவன் வாசலை திறந்து இங்கு வந்தான் வயல் வெளி எங்கும் தீபங்கள் எரிய வானத்து தேவனை விருந்துக்கு அழைத்து வாசல்கள் …
-
- 2 replies
- 428 views
-
-
மார்கழிப் பொழுதினில் பூக்குதோர் வாழ்வு மரியாளின் மடியிலே தவழ்கிறான் ஜேசு அடிமையின் விலங்கினை அறுத்திட பாலகன் அவதாரம் எடுத்து இங்கு வருவானே தூதன் தேவனின் வருகையால் தெருவெங்கும் பாட்டு தெரியுதோர் விளக்கு ஒன்று வானதில் பாரீர் கவிதையாய் எங்குமே பூக்களாய் பூக்குதே காலை புலர்கையில் தெரியுதோர் வெளிச்சம் பூக்களே பூக்களே புனிதனை பாடு புனித மரியாளின் மடியிலே பூக்களை தூவு குருவியும் குயில்களும் கூடியே பாடுது குறை ஒன்றும் இல்லை இனி மனிதர்க்கு என்றே வானத்து நிலவிலே பூக்களாய் சொரியுதே தேவன் வருகிறான் என்று வெளிச்சத்தை கொளுத்துதே கடலினுள் அலைகளும் கவிதைகள் எழுதுதே கர்த்தரின் வரவினை கரையிலே வரையுதே எங்குமே சமத்துவம் எல்லோர்க்கும…
-
- 2 replies
- 377 views
-
-
லண்டனில் ஒரு மாமி மாமியைப் போல புருஷன் பாவம் இவோ புருஷன் பயந்த சுபாபக்காரன் மாமி ஒருக்கா பார்த்தால் மனுஷன் பயந்து போவேர் இரண்டு பேரும் சேர்ந்து காசு காசாய் உழைத்து இன்னும் போதாது என்று இரவு பகல் வேலை வட்டிக்கு எல்லாம் கொடுத்து குட்டி போடுது காசு காசு மட்டும் மாமிக்கு கடவுள் போல காணும் சீட்டு கீட்டு என்று சேர்த்து வைச்சு காசை போட்டு போட்டு பாங்கிலா காட்ட மாட்டா வெளியில மாளிகை போல் வீடு மனது மட்டும் சிறிது யாரும் உதவி கேட்டால் வாரும் பிறகு பார்ப்பம் என்று நைசா மாமி நழுவிப் போடுவா வெறும் கசவார மாமி கை இறுக்கம் பாரும் காசை வச்சு மாமி என்ன செய்யப் போறா கட்டிக் கொண்டா போவா. பா .உதயன்
-
- 7 replies
- 1.8k views
-
-
கெசொனில் மீண்டும் பறந்தது புலிக்கொடி 1990 மாசி பிறந்தது, என் நகரை விட்டு நாசி படைகள் வெளியேற வழியும் திறந்தது. தன்னைதானே வல்லரசுப் படை என பீற்றி கொண்ட ஒரு காட்டுக்கூட்டம், மூட்டை கட்டிக்கொண்டு ஓடியது. கூடவே ஓடியது, கூட்டியும், காட்டியும் கொடுத்த கொள்ளை கூட்டம். எங்கள் ஆட்டை, கோழியை, எலுமிச்சையை, மாம்பழத்தை ஆட்டையை போட்ட மிருகங்கள். எங்கள் மங்கையர் மானத்தை விலை பேசிய அரக்கர்கள். நாசி அரிக்கும் நாற்றத்துடன் அலைந்த வாழும்-பிணங்கள். கையில் கிடத்தைதை எல்லாம் அள்ளி கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். எங்கள் நகரின் மத்தியில் அவர்கள் நாட்டு கொடி அலங்கோலமாய் கிழிந்து தொங…
-
- 34 replies
- 1.9k views
-
-
ஆட்டம் காண்கிறதா ஐக்கிய இராச்சியம்-பா.உதயன் அனைத்து உலகுக்கும் அரசியல் படிப்பித்தவையாம் அந்தப் பெரிய பிரித்தானியாவாம் அண்மைக் காலமாய் ஆடிப்போய் கிடக்கினமாம் அடிக்கடி தலைவர்கள் மாறியும் போகினம் சங்கீத கதிரை போல் எப்போதும் சுத்துகினம் பகிடி அரசியலோ என்று பார்க்கிறவ கேட்கினம் பவுண்டின் பெறுமதி குறைந்திப்போ போச்சுதாம் பணவீக்கம் எல்லாம் கூடிப் போச்சுதாம் கோணிப்பை நிறைய பணத்தை கொடுத்து பாலும் பாணும் வேண்டத்தான் காணுமாம் இனி வரும் காலம் பிரச்சனை தானம் எப்படி சனங்கள் சமாளிக்கப் போகினம் உலகம் எல்லாம் உன்னிப்பாய் பார்க்கினம் என்னப்பா இனி நடக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு …
-
- 6 replies
- 642 views
-
-
-
- 7 replies
- 1.1k views
-
-
இந்தியாவையும் சீனாவையும் இழுத்து வந்து போட்டீர்-பா .உதயன் இந்து சமுத்திரத்தில் வந்ததொரு சீனக் கப்பல் இலங்கைக்கு வந்திருக்காம் சிக்கல் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இதனால விக்கல் அண்ணன் அமெரிக்காவும் அதனால முறுகல் பூகோள அரசியலில் இங்கே புதிதாய் கயிறிளுத்தல் போட்டி இனி என்ன நடக்கும் இந்து சமுத்திரத்தில் இந்த சிறிய தீவில் புகுந்து இருந்ததெல்லாம் அறுத்துக் கொட்டிப் போட்டு எல்லாப் பெருச்சாளிகளும் இப்போ இந்து சமுத்திரத்தில் கண்ணாம் தங்கள் பாதுகாப்பு என்று சொந்த நலன் போட்டி பட்டுப் பாதை திட்டம் என்று பாதி உலகை சுறுட்டிய சீனா இலங்கைக்கும் வந்து இருந்ததையும் சுருட்டிப் போட்டான் இது சீனாவின் இன்னும் ஓர் ஆசியக…
-
- 0 replies
- 387 views
-
-
அழகான அதிபர் உரை-பா .உதயன் அழகான அதிபர் உரை என்றாராம் அனைவரும் வாழ்த்து சொன்னாராம் நேற்று வரை தூற்றி நின்றவரும் அழகப்பெருமாளை ஆள வைக்க நினைத்தவரும் இன்று அவர் காலடியில் விழுந்தாராம் இதுவெல்லோ நாட்டுக்கு தேவையென்றாராம் சும்மாவா ரணில் என்றால் நரி என்றும் சிலர் சொன்னாராம் அனைவருமே இன் நாட்டு மக்கள் என்றாராம் இருள் கடந்து வெளிச்சம் வரும் என்றாராம் அது தனக்கு தெரிகிறது என்றாராம் அனைவருக்கும் வெளிச்சம் வர செய்வாராம் முன்பு ஆறு தடவை பிரதமராய் இருந்தாராம் அப்பவெல்லாம் ஏன் இவற்றை செய்ய மறந்தாராம் ஆட்டத்திலே இழந்தாலும் அசையாராம் எந்தப் பதவியையும் எப்போதும் வி…
-
- 4 replies
- 689 views
-
-
கால் மாறுதல் ...!! என்ன இருக்கிறது பார்ப்பதற்கு அந்த மாளிகையில்... அதிமேதகு தூங்காமல் புரண்ட கதையை அந்த மெத்தையிடம் கேட்பதற்குப் பொழுதில்லை எனக்கு. என் குழந்தைக்கு வாங்கியாக வேண்டும் பால்மா. மன அழுக்கு மென்மேலும் சேர, உடலைக் கழுவிக் குளித்த தடாகத்திடம் இல்லை இப்போதைக்கு நான் அவாவும் குளிர்ச்சி. நெருப்பில் நிற்கிறேன் அடுத்த வேளைச் சமையலுக்கு இல்லை எரிவாயு அகிம்சையின் சைகைமொழி. புரிவதில்லை ஒருபொழுதும் ஆயுதச் சீரூடைக்கு. அது உட்கார்ந்த ஆடம்பரச் சிம்மாசனத்…
-
- 0 replies
- 770 views
-
-
அதிகாரத் திமிர் ஒன்று அடங்கிப்போனதின்று-பா.உதயன் அதிகாரத் திமிர் ஒன்று இடிந்து விழுந்தது இலங்கைத் தீவில் இன்று இனவாதத்தின் இன்னும் ஒரு முகம் எரிந்து வீழ்ந்தது வீரம் பேசிய கோத்தா வீட்டுக்கு போய் விட்டார் தோல்வியை சுமந்தபடி பேரினவாதத்தின் போர் முகம் ஒன்று போன இடம் தெரியவில்லை சர்வாதிகார ஆட்சி ஒன்று சரிந்து விழுந்திருக்கிறது பசியோடு கிடந்தவனுக்கும் உரிமைக்காய் போராடியவனுக்கும் தொலைந்து போன மக்களுக்கும் நீதி கிடைத்தது போல் இருந்தது இன்றைய நாள் கூட நின்றவனுக்கும் கூடிக் குடிச்சவனுக்கும் முண்டு கொடுத்தவனுக்கும் போலிச் சோஷலிசக்காரனுக்கும் அபிவிருத்தி என்று அந்த மக்களை ஏமாத்தியவனுக்கும் திருடர்…
-
- 0 replies
- 379 views
-
-
போகிறார் பொறிஸ் ஜோன்சன் 🇬🇧 பிழை செய்த பொறிசார் கதிரையை விட்டு போகிறார் ஏதோ சில ஜனநாயகம் இங்க இருக்கு ஆனால் இலங்கையில் அத்தனை சனமும் கத்தியும் என்ன கோத்தா கோ கோம் என்று சொல்லியும் என்ன இயமன் தான் வந்தாலும் இவர் போகாராம் இன்னும் இருக்கிறார் கோத்தா இலங்கையை தின்ற படி இறுக்கிக் கதிரையை பிடித்தபடி அங்க ஏது ஜனநாயகம். பா.உதயன் ✍️
-
- 7 replies
- 585 views
-
-
இரண்டு கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்...!! இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!! இருநூறு கோடிகள் கொடுத்து கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்..!! இரண்டாயிரம் கோடிகளை கடன் சுமையாய் தள்ளுபடி செய்யும் எங்கள் தேசத்தில்...!! இருபதாயிரம் கோடிகளை பொழுதுபோக்க ஒதுக்கும் எங்கள் தேசத்தில்...!! இரண்டு இலட்சம் கோடிகளுக்கு அலைக்கற்றை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்...!! எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான் எவருமில்லை....!! விளைவித்தவன் பிச்சைக்கா…
-
- 1 reply
- 454 views
-