Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இயற்கை எம்மை இயன்றவரை விட்டு வைத்திருக்கின்றது எதோ தன்னாலான இரக்கத்தோடு எல்லோரையும் இட்டு நிரப்பியபடி தூயனவாய்க் காற்று துகள்களற்று தலைவிரித்தாடாததால் நாம் தப்பிப் பிழைக்கிறோம் தரையில் நடக்கிறோம் கோபத்தின் உச்சியில் ஆழ்கடல் கொந்தளிக்காததால் கூரைகளின் கீழ் நாம் குதூகலங்கள் சுமந்தபடி குளிர் காய்கிறோம் தீயின் நாக்குகள் தீவிரமற்று திசைமாறி இருப்பதனால் தீங்குகள் அற்று நாம் தில்லுமுல்லுகள் செய்தபடி தினாவெட்டாய்த் திரிகிறோம் பயிரிடா நிலங்கள் பரிதவிப்பின்றி பக்குவமாய் இருப்பதனால் பசுமை குன்றினும் பாறைகளாகி பயன்பெறா மாந்தனின் போலி முகம் கண்டும் தாம் பொறுமை கொண்டு நிற்கின்றன வானப்பெருவெளி வீழ்ந்துவிடாது வெடிப் பிளம்புகள் சூழ்ந்துவிடாது வெட்ட…

  2. அலை கடலாய் ஆர்பரிக்கும் அப்பப்போ அமைதி கொள்ளும் எட்டாத எல்லையெல்லாம் எப்படியோ கடந்துவிடும் ஏட்டிக்குப் போட்டியாக எதுவும் செய்துவிடும் ஏக்கம் கொண்டு பின்னர் எதை எதையோ எண்ணிவிடும் மார்க்கம் கண்டபின்னர் மட்டிலா மகிழ்ச்சி கொள்ளும் முந்தை வினைப்பயனை முழுதுமாய் நம்பிவிடும் அன்பு கொண்டு ஆட்படும் அகந்தை கொன்று அகப்படும் சிந்தை நிறைந்து சிரிக்கவைக்கும் செம்மை கொண்டு சிலிர்க்கும் சொந்தங்கள் தேடி சொர்கங்கள் கூட சந்தங்களாகி சத்தங்கள் ஓய நித்தமும் ஓய்வின்றி நித்தியக் கடனாகி நினைவின்றி ஓடும் மனம்

    • 1 reply
    • 577 views
  3. எண்ணங்கள் எப்போதும் எதிரொலிகளாய் நிரப்பப்பட்டிருக்கின்றன எல்லையற்ற வெற்றிடங்களின் ஏகாந்தத்தில் கற்பனைகள் கண்டபடி பாய்கின்றன மனதின் விருப்பத்துக்கும் ஆசைகளில் அலைதலுக்கும் அங்கீகரிக்காதவை கூட அகலக்கால் வைத்தபடி எத்தனை தூரமும் எத்தனை வேகமும் கொண்டதாய் எந்திரங்கள் போலன்றி எதிர்ப்பற்று எங்கெங்கோ அலைகின்றன ஏன்தான் இத்தனை ஆசைகளோ எவரோடும் ஒப்பிட்டு ஒப்பற்று எதிரிகளாகின்றன எண்ணங்கள் எப்போதும் எம் மனதுக்கு ஏற்ராற்போல் எம்மை மட்டும் நினைவில் கொண்டபடி

  4. மரங்களும் மனிதர்கள் போலவே தாம் செய்த வினைப்பயனில் வேண்டுவது போல் வளராது விதைத்தலுடனும் விடைபெறுதலுடனும் மனிதர்கள் மரங்கள் மட்டுமல்ல அத்தனை உயிர்க்குமானது தாம் விதைத்த வினையின் வடிவில் வினையறுக்க நாதியற்று விடியலை நோக்கியபடி அழகாய் நீண்டு நெடிதுயர்ந்து கொள்ளை அழகுடன் கிளை பரப்பி காண்போரை வசீகரிக்கும் அழகற்ற இலைகளும் வளர்வதர்க்கை வளர்ந்தபடி முட்களோடு முசுட்டை இலைகளுடன் வண்ண மலர் கொண்டு மயக்கும் மனம் கொண்டு காய்கள் கனிகள் என கவர்ந்திழுக்க கவனிப்பும் அதற்கானதாய் காலங்கள் முழுதும் காட்சிகளாய் காண்போரை மயக்கிடும் நெட்டையாய் குட்டையாய் நிறையவே காண்கின்றேன் தினமும் ஆனாலும் மனிதர் போல் அவை மற்றவரைப் பார்த்து ஏங்கித் தவிப்பதில்லை பொறாமை கொண்டு பொழுதைக் …

  5. ஏய் அப்பு! ஏன் உனக்கு மப்பு? நானொரு வப்பு! ஆடாத எங்கூட தப்பு! பத்திரமா ஓடித் தப்பு! போட்டிடுவன் ஆட்டுக்காலு சூப்பு! அந்தாபாரு லொலி பப்பு! வச்சிடுவன் உனக்கு ஆப்பு! சும்மா சும்மா பம்பலுக்கு!

  6. என் வீடும் அயலும் என் நினைவில் வந்து போனது பக்கத்து வீட்டு பாட்டியும் பாட்டனும் பொக்குவாய் கொண்டு சிரிக்கும் சிரிப்பும் பாக்கு வெற்றிலை இடிக்கும் சத்தமும் பழைய நினைவாய் வந்து போனது எதிர் வீட்டு அக்காள் எமக்குத் தெரியாமல் எம்வீட்டுப் பூக்களை பறித்து வந்ததும் எதுவும் கூறாமல் கொடுப்புள் சிரித்து எதிரி வேறென எமக்கே சொன்னதும் இன்று நினைப்பினும் சிரிப்பு வருகுது எங்கள் துலாவில் ஏக்கங்கள் அற்று எவ்வளவு தண்ணியும் அள்ள முடித்ததும் வாக்கால் வழிந்தோட கால்கள் நனைத்து வரம்புடைந்து வளவு நனைந்ததும் வீட்டுக்காரரின் வசைகள் கடந்து வசந்தமாய் சிரித்ததும் நினைவில் நிக்குது கிட்டிப் புள்ளும் கிளித்தட்டும் கீரைக் கறியும் கிழங்குகளும் பக்கத்து வீட்டில் பறித்த மாங்காய் பருவம் …

  7. கண்கள் மேய விரல்கள் தடவ வெளிச்சத்தில் இது நடக்க.. அவள் வேண்டும். பக்கம் பக்கமாய் பாகம் பாகமாய் பிரித்துப் படிக்க.. காரியம் முடிக்க சித்தி பெற அவள் வேண்டும். சிந்தனைக்கு ஓர் புத்துணர்ச்சி இரத்த நாளங்களுக்கு ஓர் கிளர்ச்சி..! அவள் சேவை தேவை வாழ்க்கை எங்கும்..! சோம்பல் போக்க படுக்கையில் கூட எனக்கு அவள் வேண்டும். இன்றேல் பைத்தியம் தான் பிடிக்கும்..! இத்தோடு சிந்தனைக்கு சிறையிடுங்கள் அவள் வேறு யாருமல்ல.. நான் படிக்கும் பாடப் புத்தகம்..! Spoiler படுத்திருந்து புத்தகம் படிப்பதே எனக்கும் பிடிக்கும். இதில் பல இலாபம் அதில் ஒன்று.. அப்படியே நித்தாக்குப் போயிடலாம்.

    • 21 replies
    • 1.4k views
  8. எங்களை நாமே கேட்டுக் கொள்வோம்? நிலம் பறிபோகிறது ஆத்திரப்பட்டு அழுகின்றார்கள் அவர்கள் எமக்கென்ன எதுவும் நடக்கட்டுமே புpள்ளைகள் கடத்தப்படுகின்றார்கள் என அலைந்து உலைந்து அரற்றுகின்றார்கள் அவர்கள் நாம் ஏன் கவலைப்படவேண்டும்? பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படு மோசமான சித்திரவதைக்குள்ளாகின்றார்கள் எமது பிள்ளைகளுக்கு ஒன்றும் நடக்காதுதானே நாங்கள் ஏன் கவலைப்படவேண்டும் வலுக்கட்டாயமாக பிள்ளைகளை இராணுவத்தில் இணைக்க பிடித்துச் செல்கின்றார்கள் என வெந்து நொந்து அவர்கள் அழுகின்றார்கள் எங்களுக்கு என்ன நாங்கள் இங்கே வெளிநாட்டுக்குடியுரிமை பெற்று வசதிகள் எல்லாம் பெற்று வளமாக வாழ்கின்றோம் நாங்களும் அழுகின்றோம்தான் சின்னத்திரைகளில் வெள்ளித்திரைகளில் கதாநாயகனும் கதாநாயகிய…

    • 0 replies
    • 728 views
  9. அறம் -வ.ஐ.ச.ஜெயபாலன் கண்ணகி உயர்த்திய ஒற்றைச் சிலம்புக்கே மதுரையோடு மன்னனும் அழிந்தான். முள்ளிவாய்க்கால் ஊழியின்போது குருதி சிந்தச் சிந்த உயர்ந்த ஆயிரம் ஆயிரம் ஒற்றைச் சிலம்பால் கொடுங்கோல் மன்னனின் தோழ தோழியர்கள் முடியிழந்தின்று தெருவினில் அலைகிறார்.. சிலம்பே சிலம்பே ஒற்றைச் சிலம்பே இசைப்பிரியாவும் தோழ தோழியரும் உயர்த்திப் பிடித்தத தர்மச் சக்கரமே கடலில் வீழ்ந்த தமிழக மீனவன் கைகளில் உயரும் ஒற்றைச் சிலம்பே தமிழன் குருதியைச் செங்கம்பளமாய் இன்னும் எத்தனை நாட்கள் விரிப்பரோ தர்மம் நசியக் கொடுங்கோல் விருந்து இன்னும் எத்தனை நாட்க்கள் வருவரோ

    • 6 replies
    • 1.3k views
  10. சம்பவம் – இலங்கை, எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி, தனது கல்வி நடவடிக்கைகளுக்காக கொழும்பு செல்வதற்காக 24.05.2014 அன்று விடிகாலை 3.30 மணிக்கு, எல்பிடிய பஸ் நிலையத்துக்கு வந்தவேளை, அங்கு நின்றிருந்த இராணுவ வீரனொருவனால் அருகிலிருந்த பாழடைந்த கட்டிடமொன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவி அங்கிருந்து தப்பிக்க முற்பட்ட வேளையில் இராணுவ வீரனால் கத்தியால் பல தடவை குத்தப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். மோப்பநாயின் உதவி கொண்டு தப்பித்துச் சென்ற குற்றவாளியைக் கைது செய்துள்ள போதிலும், குற்றவாளி இராணுவத்தினன் என்பதால் ‘இராணுவ வீரனது காதலை மறுத்ததால் அவனுக்கு ஏற்பட்ட சடுதியான கோபத்தின் காரணமாகவே கொலை நிகழ்ந்துள்ளது. திட்டமிட்டுச் செய்ததல்ல’ என இ…

  11. எழுதப்படாத ஓலைகள்! ------------------------------- எவருமே தழுவிக்கொள்ள மறந்த அந்த இரவுகளில் மரணம் மட்டும் மறக்காமல் எங்களைத் தழுவிக்கொண்டிருந்தது! தூரத்தே இருந்த சாக்குருவிகள் எங்கள் இழப்புகளிலும் பூபாளம் பாடிக்கொண்டிருந்தன! ........... ........... ........... ........... ........... அவை இப்போதும் பாடிக்கொண்டுதான் இருக்கின்றன! :0 முள்ளிவாய்க்காலில் சாவடைந்த அனைத்துப் போராளிகள் பொதுமக்கள் அனைவருக்கும் கண்ணீர் வணக்கங்கள்!

    • 2 replies
    • 611 views
  12. 1969ல் எழுதிய என் முதல் கவிதையும் 1970ல் எழுதிய எனது இரண்டாவது கவிதையும் வன்னி பற்றியது.அப்போதெல்லாம் இணைப்பாட்ட்சி அடிப்படையிலான பொது உடமையை வென்றெடுக்க புரட்சி வரப்போகிறது என்கிற நம்பிக்கையோடு செயல்ப்பட்டோம். புரட்ச்சி வன்னியில் மையம்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் நமது இராணுவப்புவியியலை கற்க்கவென்று அந்த சின்ன வயசுகளில் காடு காடுகளாக அலைந்தேன். இதோ கவிதைகள் http://noolaham.net/project/01/10/10.txt 1. பாலி ஆறு நகர்கிறது அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம்…

    • 1 reply
    • 1.4k views
  13. மூச்சடங்கிப்போன இறுதிப்பொழுதுகள் ஆண்டுகள் ஐந்தாகிப் போனதுவோ- எங்கள் உறவுகள் அணுஅணுவாய் வதைபட்டு அல்லல்கள் பலபட்டு துடிதுடித்து மரணித்து ஆண்டுகள் ஐந்தானதோ இரசாயன நெருப்புக்குள் உறவுகள் வெந்து துடித்து கருகி மடிந்த போது இங்கிருந்து நாம் கதறி அழுதோம் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய் ஆண்டுகள் ஐந்தானதோ இன்று பாழும் குண்டு மழைக்குள் எங்கள் பச்சிளங்குழந்தைகள் பதைபதைத்து துடித்து மரணித்து ஆண்டுகள் ஐந்தானதுவோ சதிவலைகள் பின்னிய நாடுகள் என்று தெரியாமல் அந்த நாடுகள் ஓடிவந்து உதவாதோ என்று இறுதிவரை நம்பிக்கையோடு காத்திருந்து அன்று எங்கள் உறவுகள் உயிர்கள் ஊமையாய் அடங்கிப்போயின. அதனை எண்ணி எண்ணி நாம் அழுது அரற்ற ஆரம்பித்து ஆண்டுகள் ஐந்து ஓடியே போனது பதுங்குகுழிகள் வெட்…

    • 9 replies
    • 1k views
  14. கந்தகக் காற்றிலே... கந்தகக் காற்றிலே... வெந்து மடிந்தோமே....! சொந்த மண்ணிலே... சொந்த மண்ணிலே...! செத்து விழுந்தோமே...!! முள்ளிவாய்க்கால் மீது கிடத்தி, கொள்ளி வைத்தான்... எதிரி! கொத்துக் கொத்தாய்க் குண்டு போட்டு, சாக வைத்தான்... சிதறி!! பிஞ்சுக் குழந்தையெல்லாம் பிஞ்சு போனதடா.... நஞ்சுக் குண்டிலே எரிஞ்சு போனதடா..........! நெஞ்சம் வெடிக்கிற சேதி தினமே.... பஞ்சமின்றித்தான் வந்து சேர்ந்ததடா........!!! காப்பாற்ற முடியலையே... கதறி அழுதோம் நாங்கள்...! கேட்பாரற்று நீங்கள் சிதற... பதறித் துடித்தோம் நாங்கள்...! ஊமையான சர்வதேசம்... செய்ததெல்லாம் சர்வநாசம்..! போலியான மனிதநேயம்... சொன்னதெல்லாம் வெற்று வேஷம்..!! உரிமைகேட்டு.... உயிரைக் கொடுத்து, எழுந்து நின…

    • 3 replies
    • 2.1k views
  15. பால்ராஜ் அமரனுக்கு அமரா நீ மீட்ட ஆனையிறவில் சுடப் பட்ட செங்கால் நாரைகள் போல் வன்னியெங்கும் தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே. என் கவிதையிலே நீ இருக்க ஈழம் கதறியழும் நியாய மென்ன. நீயோ முடங்கிய காலில் மூண்டெரிந்த விடுதலைத் தீ. தீவெட்டியாய் உன்னைச் சுமந்து சென்ற தோழருக்கு 'இத்தாவில்' பகையிருட்டில் வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா. உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு. களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல் காலங்கள் ஊடே என் கவிதை இனிச் சுமக்கட்டும் அவனை ஆழப் புதைக்காதீர் ஆலயங்கள் கட்டாதீர். நாளை மணலாற்றை மீட்டு வாழ திரும்புகையில் நம் சனங்கள் மசிரை விட்டுதுகள் தம் மனம் நிறைந்த நாயகனை. மணலாற்று அகதிகளின் புதையல் ஆழப் புதைக்காதீர். -வ.ஐ.ச.ஜ…

  16. அறுபது மாதங்களாய் ஆறாத் துயர் கடந்து ஆற்றமுடியா வடுக்கள் சுமந்து ஆற்றாமையுடன் காத்திருக்கின்றனர் அடிமைகள் ஆக்கப்பட்ட எம்மக்கள் கருகிய பூமியில் கால் பதிக்க இடமின்றி கசங்கக் கிடக்கிறது கந்தகம் சுமந்த பூமி கொடும் கனல் குருதி தோய்ந்து கோரங்கள் சுமந்த நந்திக்கடல் கேட்பார் ஏதுமற்றுக் கேவலுடன் கிடக்கிறது வீறுநடை போட்ட வெற்றிகள் கொய்த தேசம் ஏறுபோல் எழுந்து எதிகள் வீந்த தேசம் எதிரி கைபட்டு எள்ளி நகைபுரியும் எத்தர்களின் கைகளில் ஏக்கம் சுமந்து ஏதுமற்று ஏற்றமிழந்து கிடக்கிறது வந்தவரை வரவேற்று வயிறார வழிசெய்து வள்ளல்களாய் வாழ்ந்தவர்கள் வாய்க்கரிசி கூட இன்றி வக்கற்று கருணையற்ற கயவனிடம் கையேந்தும் கடை நிலையில் கண்ணிழந்து நிற்கின்றார் மானத் தமிழரென மார்தட்டி வாழ்ந்த…

  17. விடிவெள்ளி மீண்டும் வானில் தெரிகிறது வெடி கண்ட நிலம் போல் சிதறிய மனம் மீண்டும் விண்மீன்கள் கண்டு சிரிக்கின்றது கொடுவானின் இடி மின்னல் கொடுங் காற்று எல்லாம் கோரத் தாண்டவம் ஆடி முடித்து காற்று அலைகளின் சீற்றம் குறைந்து கோலங்கள் காட்டி நிற்கிறது வேருடன் மரங்கள் வீழ்ந்தன எனினும் வாடை அடங்கி மீண்ட வானின் மிதப்பின் வேகத்தில் மருண்ட மேகங்களின் மகிழ்ச்சி ஒலியாய் மீண்டும் மின்னல் கீறி மறைகின்றன ஓசை அடங்கக் காத்திருந்தேன் என் ஆசை அடக்கி மேகத் தீயுள் மோதும் உன் முகம் காண முடிவேதும் இல்லா மழை வானின் எல்லையில் மண்ணொடு மண்ணாய் மங்கியும் நானும் மகிழ்ந்திருப்பேன் முடிவுற்ற வெளியின் முகில்கள் கடந்து முடிவற்ற என் பயணம் முடிந்து மலர் கண்ட வனமாய் மலர்கின்ற மனம் க…

  18. மே15 சென்னையில் இருந்தேன். என் உறவினர்கள் பலர் களபலியான குமுதினிப் படகுப் படுகொலை சமபவச்சேதி கேட்டு மனசும் ஆன்மாவும் கந்தலாய்க் கிழிந்துபோனது. இரவு தூங்க முடியவில்லை. அண்ணா நகரில் வாழெத என் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றேன். அந்த இரவே "இரத்தம் எழுதிய கவிதை" என அஞ்சலி எழுத ஆரம்பித்தேன். அப்போது விடுதலை அமைப்புகளுக்கிடையில் ஐக்கிய முன்னணியை உருவாக்கும் கனவுகள் மெய்படாத துயரில் வாடியிருந்த காலம். அஞ்சலி எழுதி முடித்தபோது மே 16 விடிய ஆரம்பித்திருந்தது. விடியும். இரத்தம் எழுதிய கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன் மே பதினைந்தில் இந்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றெ…

    • 2 replies
    • 875 views
  19. திசைகள் கிழிந்துபோக வெளிகள் வறண்டு கிடக்கின்றது. எழுகதிரும் முகமிழந்து ஒளிய மொழியிழந்து வெற்றுடல் அலைகிறது மண் தின்ற பெரும் அரக்கன் மாலை சூடியின்று அங்கதம் கொள்கிறான். கொத்துக் குண்டுகளாலும் குறிசொல்லிகளாலும் கொன்றொழித்தை, பிணங்களையும், இயல்பிழந்த பெண்களையும் புணர்ந்ததை, மகுடமென்று சூடிக்கொள்கிறான். அறப்பரணியைப் புறம் சொல்லி, தீவிரவாதம் தோற்றது இனவாதம் இனியில்லையென்று கட்டியமடிக்கும் பல்லக்குத் தூக்கிகளே பாருங்கள். இன்னும் எங்கள் தரவைகளும் சதுப்புக் காடுகளும் உடலங்களை சுமக்கின்றன. கரியவால் குருவிகளும் காட்டுக் கோழிகளும் ஓலங்களால் ஒடுங்கி நிற்கின்றன.. நீண்ட மரங்களும் நாயுருவிப் பற்றைகளும் கொடிய கொலைகளுக்குச் சாட்சியாகின்றன.. …

  20. போர் கண்டு பொலிவிழந்த தேசம் எமது பேரல்லல் கொண்டு இன்றும் இருக்கிறது பெருமைகள் சொல்லி ஆற்றிட முடியா பேரவலம் கண்டேதான் பேசாது நிற்கிறது எத்தனை ஆண்டுகள் எம் காலில் நின்றோம் நாம் அத்தனையும் அழிந்து ஆவியாகிப் போனது கொத்தளங்கள் சுமந்து கொடிகட்டி ஆண்டவர் நாம் கேடுகள் சுமந்து கேட்பாரற்றுக் கிடக்கின்றோம் வீதிகள் எங்கும் விளக்கொடிந்து வழக்கொழிந்து வீடுகள் எங்கணும் விலையற்ற மனிதராய் கூடைகள் நிறைக்கும் குப்பைகளாய் நாங்கள் கூடுகளின்றிக் கூனர்களாய்க் கிடக்கின்றோம் பண்பாடு காத்து பார் புகழ வாழ்ந்தவர் நாம் பட்டினிகொண்டு பரிதவித்து நிற்கின்றோம் மானமிழக்கா மாண்பு மிக்கவர் நாம் மாசுபட மடையரிடம் மண்டியிட்டு நிற்கின்றோம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்தகுடி காலூன்ற நிலை…

  21. ஆட்காட்டிக் குருவிகள் அமைதியாய் இருக்கின்றன : ச. நித்தியானந்தன் நன்றிhttp://inioru.com/?p=40258

  22. பாடிப் பறந்த குயில் மாஞ்சோலையெங்கும் மாங்கனிகள் தோரணம் மரக்கிளைகள் மத்தியிலே மாங்கிளிகள் மோகனம்; தூங்கும் பழங்களிலே அணில்களின் மோகம்; துள்ளிப் பாய்வதிலே மந்திகளின் ஆர்வம் சோலையின் மறைவினிலே கோகிலத்தின் ராகம் சொற்கள் வந்த திசையினிலே அதைக் காணாத சோகம் நேரில் வந்து கூவுவதற்கு இதற்கேனோ தயக்கம் நெடுநாளாய் இதுபற்றி என் மனதிலே ஏக்கம் ஆவலுடன் காத்திருந்தேன் அடுத்த ஓசை கேட்க அலறிப் பறந்ததுவே காக்கையொன்று நுழைய தாழாத சோகம் என்னை வந்து தாக்க தவித்ததே மனம் பழசையெண்ணி ஏங்கி வேலைத் தலமொன்றில் வேலைதேடிப் போக வேலையின்றி இருந்தவரோ நீ யாரென்று கேட்க பயத்துடனே பதில்சொல்லி பதுமையாய் நிற்க பார்த்திருந்த மங்கையரோ புன்முறுவல் பூத்தார். வேலையங்கே கிடைத்தபின்னர் வேடிக்கைகள் பல…

    • 3 replies
    • 786 views
  23. பேசாத வார்த்தை நொடியில் ... கரைந்து போனது என் வலி ... மவுனம் என்னை மவுனியாக்கி .. வேடிக்கை பார்க்குது மனவெளியில் .. எதிர் திசை நீ வரும் போதும் .. உன்னை தொட்டு வரம் காற்று ... உன் மனக்கணக்கின் எண்ணம் சொல்லும் .. ஆனாலும் நான் மவுனமா .. என்னை கடந்து போகையில் .. நீ வீசி செல்லும் விழி கேள்விகள் .. என் இதயத்தை ஒருமுறை உசுப்பும் .. ஆனாலும் நான் மவுனமா .. உன்னை அறியா வயதில் பார்த்து ... தெரியாத காதல் மொழி பேசி .. இன்று காதல் வயதில் காணும் போது .. கலங்குதடி கண்கள் இரண்டும் ... நான் சொல்ல வரும் ஏக்கம் .. உனக்கு வலிதரலாம் ஆதலால் .. நான் மவுனமா .... ஒரு வேலி ...ஒரு ஓணான் என.. பேசி திரிந்த அழகிய காலம் .. மீண்டும் வராது என தெரிவதால் .. இப்பொழுதும் நான் மவுனமா ...…

  24. ஆயிரம் தான் கவி சொன்னேன்--அன்னையருக்கு சமர்ப்பணம் https://www.facebook.com/photo.php?v=864189466928913

    • 0 replies
    • 967 views
  25. Started by manthahini,

    எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உலகெங்கும் அன்னையர் தினம் அன்பான வாழ்த்துக்களுடனும் அழகான பரிசுப்பொருட்களுடனும் இனியநினைவுகளாய் ஆயத்தமாக எங்கள் தாய்மண்ணில் எப்படி நகர்கிறது? பத்துமாதம் சுமந்து பெற்று பகலிரவாய் கண்விழித்து கண்ணுக்குள் மணியாய் காத்து வளர்த்த மகன், நட்ட நடுநிசியில் வந்த கொடுங்கோலர் கூலிகளால் அடித்து உதைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட-அந்த கொடியநிகழ்விலிருந்து மீளாது துடித்து துவண்டு அழும் என் அன்பு அம்மா!-உனக்கு எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உடைந்த உள்ளமும் உடையாத நம்பிக்கையுமாய் படைமுகாம்கள்தோறும் பதைக்கும் மனதுடன்-என் தம்பியை தேடி அலையும்-உனக்கு எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உயிருடன் என் தம்பி மீள்வானா என இங்கிருந்து நான் தவிக்க, துள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.