கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள் உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள் எங்களைத் தெரிகிறதா? எம் நிலை புரிகிறதா எங்களின் எண்ணிக்கை அடிக்கடி கூறப்படும் எண்ணிக்கைகள் மாற்றப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்படும் ஆனால் எங்களை எவருக்கும் தெரியாது எங்கள் வாழ்நிலையும் எவருக்கும் புரியாது இப்போதாவது எம்மைத் தெரிகின்றதா? குடும்பத்தலைவர்களை இழந்தவர்கள் என சுட்டிச்சொல்லப்படுபவர்கள் நாங்கள். எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள் உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள் எத்துணை இடர்களுக்குள் எம் வாழ்வு தொடர்கின்றது என பாருங்கள் வாழ இடம், வசிக்க வீடு உழைப்புக்கு வழி உண்பதற்கு உணவு உடுக்க உடை இப்படி எதற்குமே வழியின்றி தனித்து விடப்பட்டு மெல்ல செத்துக்கொண்டிருக்கின்றோம் பசித்து அழும் குழந்தையை ஆ…
-
- 4 replies
- 734 views
-
-
பெண்ணின் பெருமை பேசி பெண்ணை அடிமை கொள்வார் பெண்ணைப் புகழ்ந்து பாடி பேதைமை கொள்ள வைப்பார் பொன்னே மணியே என்றும் பூவின் வாசமென்றும் பேசிப் பேசிப் பெண்ணைப் பேச்சிழக்க வைத்திடுவார் பூரணை நிலவுபோல் புகுந்தவீடு வருபவள் பத்தும் தேய்த்து தான் தேய்ந்து பழையதாய் ஆகியபின் பெண்ணா நீ என்று பேசியே கொன்றிடுவர் பாலைவனத்தின் பசுந்தளிரே போதை கொள்ள வைக்கும் பணக்கள்ளே பவளமே பென்னரங்கே பொன்மணியே போற்றி உனைத் தொழுவேன் பவளமே எனக் கூறிப் பத்திரமாய்ப் பூட்டிவைப்பார் பாவையரை வீட்டினுள்ளே பாழாய்ப் போன பெண்கள் பூட்டியது தெரியாது பெண்ணென்றால் இதுவென்று பெருமை மிகக் கொண்டிடுவார் பண்பாடு இதுவென்று பட்டிகள் போல் நடத்துவதை பெருமிதமாய் எண்ணி பொங்கும் மனதடங்க புத்தகமாய் ஆகிடுவார் பேதைப் பெண்ணே …
-
- 2 replies
- 756 views
-
-
பட்டினியில் ஓர் உலகம் பகட்டினில் இன்னோர் உலகம். இரண்டிலும்.. மனிதர்களே ஆட்சி. இப்பிரபஞ்சத்தில் இப் பஞ்சத்தை வேறு எங்கினும் காண முடியுமோ..??! தெரியவில்லை..!! சட்டங்களில் எழுத்துக்களில் கோட்டு சூட்டுப் போட்ட மனிதர்கள் எழுதி வைச்ச மனித உரிமைகள் பத்திரமாக... மனித உயிர்களோ.. இப்படிக் கேவலமாக..!
-
- 3 replies
- 900 views
-
-
குறுக்குக் கட்டி நீ குளிக்கையிலே குறுக்கு மறுக்காய் அலையுதடி மனசு! குறும்புக்காரன் மனசுக்குள்ளே குறுகுறுக்குதடி வயசு! தலைக்கு சீயாக்காய் தேய்ச்சு சிகைக்கு சாம்பிராணி காட்டி நீ குளிச்சு முடிந்தபின்னும், எனக்கு முடியவில்லை! என் இதயம் படியவில்லை!! புது உடையுடுத்தி வந்த பின்னும் என் படையெடுப்பு அடங்கவில்லை! மடையுடைத்த எண்ணத்தில்... தடையுடைக்கும் திட்டத்தில் என் கவனமெல்லாம் உன்னிடத்தில் உன் கவளம் போன்ற கன்னத்தில்! சமயலறைக் கட்டில் நீ சமைக்கையிலே, சமைந்தவள் உனைப் பார்க்கையிலே... என் சிந்தனையும் சமையுதடி! எண்ணெய் ஊற்றாதே...! என் எண்ணமெல்லாம் வழுக்குதடி!! சாமி சிலை முன்னாடி சாந்தமாய்த்தான் தெரிகிறாய்! திரைச்சீலை பின்னாடி காந்தமாய் ஏன் இழுக்கிறாய்…
-
- 11 replies
- 1.8k views
-
-
உவகை கொ(ல்)ள் மனம் உன்னை நினைத்து .. உயிரில் கலந்து நீரில் கலந்த உப்புபோல் .. என்னுள் என்றும் உறைத்து இருக்கும் பனி நீ .. என் வெப்பம் தாங்காமல் .. விலக கூடாது பெண்ணே .. யான் நேசிப்பது உன் இதய அறையில் ஒரு இடம் .. கிடைக்குமா என் கல்லறை கட்ட அங்கு என்றே .. இறுதிவரை உன் மூச்சுப்பட்டவது சிலவேளை நான் .. உயிர்தெழகூடும் உறங்கிய ஒரு சிறு விதையாய் .. நீ சிந்தும் கண்ணீரில் இருந்து நான் மெதுவா வளர ... உன்னுடன் வாழ்த்த காலத்தை நிழலா உனக்கு தர ... இருவரும் அடிக்கடி சந்தித்த குளத்தடி ஆலமரம் போல் .. நான் மட்டும் போரில் மரணிக்காமல் இருந்திருந்தால் .. காதல் வாழ்த்து இருக்கும் மங்கலமா .. நீனு ஏன் இப்பொழுது வாழவேண்டும் அமங்கலமா .. நல்லவர்கள் நாலுபேர் வாழ்த்த…
-
- 5 replies
- 946 views
-
-
நிதம் என் விழிகள் உன்னருகே விழுகிறதே, திசை தெரியா என் மனது உனக்காக ஏங்குகிறதே, சொற்களால் வரைய இது வாழ்க்கைக் குறிப்பா வார்த்தைகளால் வளைக்க இது வீரத் தழும்புகளா வானத்திற்கு வளையல் போடும் செயல், எளிதல்ல ஆனாலும் எண்ணம் ஏற்றமுடையது சிந்தித்து அடைகாக்க இது அவையுமல்ல, கைகள் பேச நிதம் பதில்கூறவேண்டும்.... திங்கள் மடிந்து ஞாயிறு மலராது, உன்னை பிரிந்து நானும் வாழமுடியாது.... கற்பது காதலாயினும் கற்பிப்பது என் தேவதையே.... அடிப்பது எதிர் நீச்சலாயினும் நீந்துவது அவள் மனதிலே.
-
- 1 reply
- 559 views
-
-
இயந்திர வயல் வெண்நாரைகளின் இயந்திரவயல்களில் கறுப்புக்காகங்கள் உருக்குலைய கரிய மை உதிர்க்கும் எழுதுகோல் உறைத்துப்போனது. மூன்றாந்தர உலகநாடுகளில் போரை வளர்க்கும் முதல்தர வல்லாண்மைகளின் பிடியில் சிக்கி மீளமுடியா வலிக்குள் புதைகிறது மனிதம் கந்தகப் பரீட்சிப்பு வளங்களைத் தின்ன, உயிருக்காய் அஞ்சிப் புகலிடம் தேடும் மனித வளங்களைத் தின்று கொழுத்தன வலியவை. நூற்றாண்டுகளின் கடப்பில் தொடர்ந்தபடி.. மனுநீதி வல்லரசுகளின் காலடியில் நசியுண்டு கிடக்க, போலி வெண்புறாக்கள் பூரித்துப் பறப்பது மூன்றாந்தர நாடுகள்மேல் திணிக்கப்பட்ட சாபம் எண்ணச் சூடேற்றலில் மனிதம் கொதிக்க இயந்திர வயல்களின் அழைப்பு.. உறைய வைத்தது.
-
- 5 replies
- 1.9k views
-
-
நெஞ்சில் உறுதிகொண்ட நேரிய பாவை அஞ்சி ஒழியாத அறிவாற்றல் கோவை வஞ்சி என அழைப்பேன் நான்மட்டும் முறைத்து முறுவல் தந்து மறைவாள்! தழும்பாத நடை தணலான குறி கொண்ட நேரான வழி இதுவே அவள்.
-
- 1 reply
- 522 views
-
-
மாவீரர் துயிலிடத்தில் மாமாவைச் சந்திக்கும் துயரோடு ஆளரவமற்ற வனாந்தரத்துப் பெருமுகத்தில் அலைகிறது ஆன்மா. மீள் பொழுதின் வரவில் - உன் நினைவுகளைத் தெளித்துவிட்டுக் கனவாகிப் போனாய்.... நீயெழுதிய கடிதங்கள் மஞ்சள் கடதாசிப்பூக்கள் மறக்காமல் அனுப்பும் பிறந்தநாள் புத்தாண்டு வாழ்த்து மடல்கள் - உன் நினைவாய்க் கிடைத்தவைகள் எல்லாம் கண் முன்னால் உன்னை நினைவுபடுத்திபடி.... 'போய் வருகிறோம்' போர் நிறுத்த காலத்துச் சந்திப்பு முடிந்து பிரியும் நேரம் 'சந்திப்போம்' என்றாய் இன்று வந்த செய்தியுன்னை இழந்தோமென்கிறது. மாமாவின் மரணம் கேட்ட உன் மருமக்கள் சொல்கிறார்கள். 'கடிதம் மாமா' இனியெங்களுக்கு இல்லை... இதயம் நொருங்கிச் சி…
-
- 9 replies
- 2.7k views
- 1 follower
-
-
போய்வரவா பிரியத்துக்கினிய தோழமையே ? கடற்காற்றின் மௌனம் உனது காலத்தை எழுதிச்சென்ற தடங்கள் கனவின் மீதத்தை இந்தக் கரைகளில் வந்தலையும் அலைகள் வந்து சொல்லியலைகிறது....! கால்புதையும் மணற்தரையில் உனது மௌனங்கள் நீ கரைந்த காற்றோடு வந்தலையும் வார்த்தைகளின் அர்த்தங்கள் ஒரு வரலாற்றின் சாட்சியாய்...! வழி நீளக்கிடக்கிற நினைவுத் துளிகளில் நீயும் நானும் எழுதத் துடித்த வாழ்வு ஈழக்கனவாய் ஆனபோது இடைவெளியின் நீளம் காலக்கரைவில் கண்ணீராய்....! நீ(மீ)ழும் நினைவுகளில் நிலையாய் காலம் கரையும் இந்தக் கடற்காற்று போய் வாவென்கிறது போய்வரவா பிரியத்துக்கினிய தோழமையே ? மறுபிறவி உண்டென்றால் மறுபடியும் இதே கரைகள் தொடும் அலைகளோடு அலையாவ…
-
- 12 replies
- 1.5k views
-
-
இசைப்பிரியாவும் கார்த்திகைப் பூக்களும்...! -எஸ். ஹமீத்- *செந்தாமரைகள் சிலிர்த்துப் பூக்க வேண்டிய அந்த சேற்று நிலத்தில், பெண் தாமரையே உன்னைப் பிடித்துத் தள்ளியது யார்...? *மானமும் கானமும் வாழ்வெனக் கொண்ட மாதரசியே, உன் துகிலைக் கிழித்துத் துப்பிய அந்தத் துச்சாதனர்கள் யார்...? *வெறி பிடித்த நாய்களின் நடுவே- தாயே நீ, தனித்து விடப்பட்ட ஆட்டுக்குட்டியாய்... விஷம் கொண்ட பாம்புகள் நடுவே- அம்மா நீ ஆதரவற்ற அணிற் குஞ்சாய்...! *நீ அசைத்து வந்த வெள்ளைக் கொடியா அது...? அது, உன்னுடையதாகத்தானிருக்கும்! இல்லாவிட்டால், அந்த நேரத்தில் அவர்களுக்கேது அந்தத் துணி...??? *சரணடையச் சென்ற வேளையுந்தன் சமாதானக் கொடியைப் பறித்து வைத்துவிட்டு-தம் பாவக் கரங்களால்-கோர நகங்களால் அவ…
-
- 8 replies
- 818 views
-
-
ரூபன் சிரித்திரன் 5ஆண்டு நினைவில்...! கையசைத்துப் போனவெங்கள் காலம் தந்த வீரங்களே ! கனவுடனே வானேறி கொழும்பு சென்ற கரு வேங்கைகளே ! காற்றினிலே கைவீசி முல்லைக் கடற்கரையும் காத்திருக்க கனல் மூட்டிச் சென்ற எங்கள் காவிய தீபங்களே ! அனலெறியும் தீப்பொறியாய் விழி கனலெறியத் தணலாகித் தமிழ் மானம் மீட்டுவரப் போனவெங்கள் தம்பிகளே ! மீளத்திரும்பா உறுதியோடு மீளும் தேச நினைவோடு போனவரே மீளாத்துயர் கொண்டெங்கள் மனசெங்கும் துயரலைகள் ! ஆண்டுகள் 5 தாண்டி உங்கள் ஆன்மக்கனவுகளைத் தாங்கியவெங்கள் பயணம் உங்கள் நினைவுகளோடு தொடர்கிறது.....! 20.02.2014
-
- 6 replies
- 808 views
-
-
திருக்கேதீஸ்வரத்து எலும்புகளுடன் ஓர் இதயம்...! எஸ். ஹமீத். **மன்னார் குடாவை மரணக் குழியாய் மாற்றிய மா பாதகர் யார்...? **மாந்தை வயல்களில் மனிதர்களை விதைத்த மனசாட்சியற்றோர் யார்..? **சிவ தலத்தை சவ தளமாய் ஆக்கிய சண்டாளர் யார்..? **அது ஒரு காலம்... **தோண்டத் தோண்ட மாணிக்கங்களும் இரத்தினங்களும் மரகதங்களும் வைரங்களுமாய். **இப்போதெல்லாம்... பல்லாங்குழியாடப் பள்ளம் தோண்டினாலும் பல்லிளித்தபடித் தெரிகின்றன மனிதக் கூடுகள்...! **உச்சக்கட்டத்தில் கண்டுபிடிப்புகள் உலகெங்கும் நிகழ்கின்றன... **மருத்துவத்தில்-தொழில் நுட்பத்தில் விண்வெளியில்-விவசாயத்தில் தொடர்பாடலில்-இடர் முகாமையில் பிரயாணங்களில்-ப…
-
- 24 replies
- 1.3k views
-
-
காதல் கடவுள் போல அன்பு கடல் போல நெஞ்சில்.. கருணை அள்ள அள்ள இருந்தும் என்ன பயன்.. கடனட்டையில் டொலரும் களுசான் பையில் பவுன்ஸும் பாண்டு பொக்கட்டில் ரூபாயும் மாடிமனையொடு நல்ல காரும் இல்லையேல்... இல்லானை இல்லாளும் வேண்டாள் இதுதான் மானுட உலகம் இன்று..! நோயென்று பசியென்று புசித்தலுக்கு உணவின்றி ஒரு பாதி உலகில்... மானுடர் பதை பதைக்கையில் மறுபாதி உலகில்.. பகட்டுக்கு செய்யும் செலவில் பாதி என்ன.. பருப்பளவு போதும் உண்டி சுருங்கிய வயிறுகள் கொஞ்சம் நிரம்ப...! இருந்தும் இல்லை என்று சொல்லும் உலகில்.. இல்லானை இல்லாளும் வேண்டாள்..! இதுதான் மானுட உலகம் இன்று. கத்தர் என்றும் அல்லா என்றும் சிவன் என்றும் விஷ்னு என்றும் சிலைக்கும் சிலுவைக்கும் பிறைக…
-
- 21 replies
- 4.7k views
-
-
அவளும் அலரி மாளிகை விருந்தும்...! -எஸ்.ஹமீத்- பாழும் போரில் பதியிழந்து பணியிழந்து நிதியிழந்து நிம்மதியிழந்து நின்ற வேளை சுதந்திரப் பசியெழுந்தது பெரிதாய்...! ***** அடிமைத் தளையறுக்கும் விடுதலைக் கனவால் ஆயுதங்களுடன் உறவாடி- ஆவேசத்துடன் போராடி- இரத்தத்தில் நீராடி- எதிரிகளைப் பந்தாடி ஈற்றில்... இலட்சியக் கோட்டை இடிந்துவிழ- தோற்றுத் துவண்டு சரணடைந்து- இன்றோர் மொட்டைத் திரியாய்- பட்ட கொடியாய் கெட்ட குடியாய்- ஓலைக் குடிலுள் ஒடுங்கிய வாழ்வு...! ***** சீராட்டி வளர்த்த சின்னக்கா, சிறு வயதிருந்தே சேர்ந்து வாழ்ந்த சினேகிதிகள், அப்பாவின் அண்ணன்மார் தம்பிமார் அவர்தம் குடும்பத்து அங்கத்தவர்கள் இன்னும்... உற்றார் உறவினர் ஊராரென அத்தனை பேரும் விட…
-
- 14 replies
- 1.4k views
-
-
பனையடி வினை பாடலெல்லாம் சிதைந்திருந்த தெருவழியே தனித்திருந்த பனை மரங்களைக் கேட்டேன் இந்த வெறி எங்கே கொண்டு போகும்? என்று எந்தப்பனையும் எதுவும் பேசவில்லை நூற்றாண்டுகள் பலவும் வாய் மூடி மௌனமாக இருந்த பழக்கத்தை விடுவதில் ஏராளம் தயக்கங்கள் ஒவ்வொரு தளும்பாய் பனை நீளம் படர்ந்திருந்தது. நானறிய நூற்றாண்டுகளை விழுங்கி விழுங்கி எல்லா வெறிக்கும் வழிவிட்ட பனையே முறிகின்றாய் பெரும் பழி சூழ் வினையில். ஒவ்வொரு பனையாய் முறிகின்றாய் முறிந்த பனைகள் துளிர்ப்பதுண்டோ? தோப்பெல்லாம் பெருந்தீ மூண்டெரிந்தாலும் புதுக் குருத்தெறியும் வரமுடைய தாலமே கால நிழலின் குழியுள் இதோ உனது நாட்கள் செத்தழிகின்றன எல்லா வெறிக்கும் வழி விட்ட முந்தைப் பெரும் பழியெலாம் …
-
- 6 replies
- 1.2k views
-
-
தலையின் மேல் தொங்கும் தூக்குக் கயிற்றின் கீழிருக்கும் துயரம் அவன்….. பெயருக்குள் பேரறிவைத் தாங்கிய தமிழின உணர்வின் ஊற்று அவன்…. சாவின் நிணம் அவன் நாசிக்குள் முட்டிக் கிடக்க சாவுமின்றி வாழ்வுமின்றி சந்தேகத்தின் பெயரால் இன்னும் செத்துக் கொண்டிருக்கிறான்….. வசந்தம் துளிர்த்த வயதில் வாழும் ஆசைகளுடன் போனவன் மரணம் கொல் இருளில் மன உழைச்சலும் மனப்பாரமிறக்க முடியா வலிகளுடன் பாழும் உயிரும் பாரமாய் பழியுடன் நீதி செத்துக் கிடக்கிற காந்திய மண்ணில் இன்னும் நீதிக்காய் காத்திருக்கும் ஏழை…… 19வருடச் சிலுவையின் பாரம் குருதியழுத்த நோயாளியாய் வாழ்வின் காலங்கள் நோயின் கோரங்களோடு கழிய காற்றணைத்த ஒளியில் கருகிக் கொண்டிருக்கிற திரிய…
-
- 13 replies
- 1.9k views
-
-
பாதச் சுவடுகளால் கலைந்திருந்த அழகிய முற்றத்தில்.. நிசப்தங்கள் நிறைந்துகிடக்கும்.. முல்லையும் பூவரசும் கருமை பூண்டு கனத்து நிற்கும் ஓணான்களும் அறணைகள் அமைதிக்குள் நகரும்.. குயில்களும் புலுனிக் குருவிகளும் அரைவிழியில் உறங்கிக் கிடக்கும்.. முழுதும் முழுதும் வற்றிப் போயிருக்கும், நேற்று நீ இருந்த முற்றம்... நேர காலமின்றி வரவுகளால் நிறைந்திருந்த முற்றம் அது.. தூணிலும் கதவிலும் படிந்த கருமை நிழல்களை தோற்றுவிக்கும் யாருக்காவது இப்போது... நீ பிரிந்தபின் மொழியின் இனிமை தொலைந்து போனது விழியின் வெளிச்சம் கலைந்து போனது வெளித்தெரியாத இறப்பொன்றுடன் கைகோர்த்து வளர்ந்து கொண்டிருக்கின்றன என் நினைவுகளும் கனவுகளும்... அந்த ம…
-
- 1 reply
- 507 views
-
-
பங்குனி விடியலின் அதிகாலைத் தக்பீர் முழக்கம் அவள்! சித்திரை வசந்தத்தின் முக்காடு போட்ட முதலாம்பிறை அவள்! கார்த்திகை நிலவின் காயம்படாத உமர்கயாமின் கவிதை அவள்! மார்கழித் திங்களின் சல்வார் போட்ட ரம்சான் அவள்!
-
- 17 replies
- 1.6k views
-
-
கொஞ்சங் கொஞ்சமாய்க் கொள்ளை அடிக்கிறாள்! என் மனசுக்குள்ளே வெள்ளை அடிக்கிறாள்! வண்ணங்களை அள்ளித் தெளிக்கிறாள்! என் எண்ணங்களைக் கிள்ளி எடுக்கிறாள்! மீண்டுமொரு புயல் வருதா? உயிரோடு சாகடிக்க! இன்னுமொரு முறை வருதா? காதலித்துப் பேதலிக்க! நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - அதுபோல நொந்த மனசுக்கு ஒரு காதல்! தோல்விகள் தருவது... வலிகளை மட்டுமல்ல, நல்ல அனுபவங்களையும்தான்!! காதலித்துத்தான் கட்டுறாங்கள்...! பிறகேன்... சத்தம் போட்டு கத்துறாங்கள்?! காதலித்தபோது இருந்ததெல்லாம், கல்யாணத்தோடு காணாமல் போச்சா?! அவளைத் 'தேவதை' என்றவன்- இப்போது 'அவளே தேவையில்லை' என்கிறான்! இவளே என் வாழ்வென்றவன் - இனி வாழ வழியில்லையென பிரிகின்றான்! காதல் எங்கே போச்சுது? அதுக்கு என்ன ஆச்சுது? காத…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஆணைப் படைத்தான்...! பெண்ணையும் படைத்தான்...!! இயற்கையை படைத்து... அவர்களை இயங்கவும் வைத்தான் !! அந்த வித்தைகாரன் பெயர்தான் - கடவுள் !!! ஆணுக்கு பெயர் வைத்தான், அது 'கணவன்' ! பெண்ணுக்கு பெயரிட்டான், அது 'மனைவி' ! இருவரையும்.... சேர்த்து வைக்க திட்டமிட்டான் அது 'திருமணம்' !! அத்தோடு விட்டானா....?!! 'காமம்' என்றும்... 'காதல்' என்றும்... எதிரும் புதிருமாய், எதையெதையோ வைத்தான் ... அதன் இடையில்!!! 'ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்' அப்படியொரு பழமொழியை... எவன் வைத்தான்... தெரியவில்லை!? தொண்ணூறு நாளின் பின்தான், பெரும்பாலும்... தொல்லைகள் ஆரம்பிக்கும்..!!! எல்லையில்லா அன்பென்றார்...!? தொல்லையில்லாமல் பிரிவோம் என்பார்...!! பிரியமாக இருந்தோரெல்…
-
- 21 replies
- 2.1k views
-
-
காதலை வரமாகக் கொடுத்தான் இறைவன் ! அதனை சாபமாக மாற்றிக்கொண்டான் மனிதன் !! காதல் எப்பொழுதும் தோற்பதில்லை ! காதலர்கள்தான் தாமே தோற்றுப்போகிறார்கள் !! காதலைக் காதலியுங்கள்...! காதலும் உங்களைக் காதலிக்கும்...!! வாழும் வாழ்வினை இனிதாய் வாழவைக்கும்...!!! அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 6 replies
- 954 views
-
-
அங்கே மழை பெய்கிறது! எங்கோ ஒரு நிலத்தில் புதைக்கப்பட்ட பிணங்கள் புரண்டு படுக்கின்றன அப்பிணங்களைத் தீண்டுகிறது நிலத்தில் இறங்கிய மழையின் நீர்க்கால் ஒன்று புதையுடல்கள் துயில் கலைந்தனபோல் உடல் முறித்து எழ முயல்கின்றன அவற்றின் உதடுகளில் இன்னும் பதியப்படாத சொற்களும் உலக மனசாட்சியின் மீது வாள்செருகும் வினாக்களும் தொற்றியிருக்கின்றன தாம் சவமாகும் முன்பே புதைபட்டதைத் தம்மைக் கடந்திறங்கும் வேர்த்தளிர்களிடம் கூறியிருக்கின்றன அவை தாம் இறக்கவில்லை தலை பிளந்து கொல்லப்பட்டோம் என்பதை மண்புழுக்களிடம் தெரிவித்திருக்கின்றன மழைத்துளியிடம் எமது மைந்தர்கள் மீது இதே குளுமையுடனும் கருணையுடனும் பருவந்தவறாது பயின்றிடு என்று மன்றாடுகின்றன ! -- மகுடேசுவரன்
-
- 1 reply
- 717 views
-
-
மாசி வந்தால் மனசில் ஒரு படபடப்பு .. மயங்காத மங்கை மனதை உடைக்க முன் .. மறுபடியும் போட்டுருவம் ஒரு விண்ணப்பம் ... கண்ணே என்று தொடங்கவா ;இல்லை பெண்ணே ... என்று பழைய பல்லவி பாடவா ,என் செல்லமே .. எல்லோரும் தாமரைக்கு ..ரோஜாக்கு ஆசைப்பட ... நான் மட்டும் செந்தாமரைக்கு ஆசைப்பட்டது தப்பா .. சேறு உன்னை சுற்றித்தானே இருக்கு உன்னில் இல்லையே .. உன்னை பறிக்குவரை என்னிலும் ஒட்டி பிடிக்கும் .. உன்னை கைப்பற்றி விட்டால் நான் கழுவி விடுவேன் .. உள்ளம் அது என்னது மெய்யடி நீ எந்தன் கவியடி .. காதலர் தினம் வேஷம் உன் அப்பன் மனது விஷம் .. என் அப்பத்தா பார்ப்பா தோஷம் நானோ உன் பாசம் .. என்னை கைகழுவி போகாதே மழை மேகமே ...நான் நெருப்பை உண்ணும் கோழியே உனக்கு கட்டுவேன் தாலியே .. ஜா…
-
- 11 replies
- 1.2k views
-