கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வாடிய பூ மீது ..விழுந்த இலையின் மீது . தேடிய காதல் மீது ..பாடிய பாடல் மீது .. கூடிய உறவுகள் மீது ..நாடிய சொந்தங்கள் மீது .. மறையும் சூரியன் மீது ..கரையும் சந்திரன் மீது .. துளிர் விடும் விதை மீது ..தூவும் மலர் மீது .. அதிகாலை கனவு மீது ...கம்பனின் கவி மீது .. முகம் மறைக்கும் கன்னி மீது ..முடியாத கடல் மீது .. வராத பணம் மீது ..வாங்கிய முத்தம் மீது .. பாட்டியின் கதை மீது ...பாட்டனின் கைதடி மீது .. மழலை அழுகை மீது ..மடிந்தவர் புன்னகை மீது .. அதீத ஆசைகள் மீது ...ஆர்ருயிர் நண்பி மீது .. என்னுள் தொலைத்தவள் மீது ..எழுதா கவி மீது .. கண்ணாடி பொட்டின் மீது ..மருதாணி கைகள் மீது .. தேய்த்து போன செருப்பின் மீது ..சுவர் படங்கள் மீது .. காய்த்த கருவாட்டின் மீது ..கடைசி வார்…
-
- 10 replies
- 1.2k views
-
-
தோழிகளின் கிண்டல் பேச்சில் "வெட்கித்து தலைகுனிந்திருந்த" தருணங்களவை.... எதிர்வரும் பேய்களின் கண்ணிற்க்கு "விருந்தாகி நாணிக்குறுகியிருந்த" தருணங்களவை.... தலைவனின் தழுவலில் "பெண்மையில் சிலாகித்திருந்த" தருணங்களவை.... குழந்தையின் அரவணைப்பில் "தாய்மையில் திளைத்திருந்த" தருணங்களவை.... கண்ணாடியின் பிம்பங்களில் வழிந்த "வனப்புகளில் பெருமித்திருந்த" தருணங்களவை.... . . . அவ்வாறு இருக்க கூடாதென "கடவுளை வேண்டியிருந்த" தருணங்களவை.... அப்படியேயென கும்பிட்ட "கடவுள் கைவிட்ட" தருணங்களவை... தனக்கு மட்டும் ஏன்? இப்படியென "ஆற்றாமையில் அழுதிருந்த" தருணங்களவை.... "கற்சிலைக்கேன் இத்துணை கலைநயமென" கண்கள் பூத்திருந்த தருணங்களவை ... "கடன்பட்டு புலம்பெயர்த்…
-
- 16 replies
- 1.2k views
-
-
சுனாமிப்பாதிப்பின்போது எழுதிய கவிதைகள் சுனாமியிலே மடிந்த எம் சொந்தங்களுக்குச் சமர்ப்பணம். ---------------------------------------------- கட்டடிப் போட்ட நாய்போல் காலை நக்கும் கடலே - உன்னை அழகியவோர் அவளாக நினைத்திருந்தேன் - உன் அலைச் சேலை உயர்ந்த பின்பு தான் தெரிகிறது நீ ஓர் அருவருக்கத் தக்க மிருகமென்று ஆங்கிலேயன் உனக்கு வைத்த தமிழ்ப் பெயர் சீ! ஐப்பானியன் தனக்குத் தெரிந்த தமிழில் உனக்கு வைத்தான் பெயர் சுனாமியென்று ஆமியடித்தது போதாதென்று சுனாமி நீ வேறு வந்திருக்கிறாய் பஃறுளி ஆற்றையும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோட்டத்தையும் கொடிய நீ கொண்டாய் பூம்புகார் உன்னால் புதையுண்டு போனது துவாரகா நகரம் துவம்சமானது இவ்வாறுதான் நீ தென் குமரியின் வாழ்வை உன் வக…
-
- 2 replies
- 617 views
-
-
ஒரு மார்கழி இருபத்தாறில்தான், பேராறுபோல் பெருக்கெடுத்தாய்.... எம் ஊருக்குள்ளே! பொறுமையாய் பொறுத்தாழ்ந்த பூமித்தாயை... நீ கண்ணீரால் நனைத்தது அன்றைக்குத்தான்! சொல்லாமல் கொள்ளாமல் வந்து, எங்களையெல்லாம் கொன்று போட்டாய்..! இத்தனைநாளாய் உன்னில் அள்ளியெடுத்த செல்வத்தையெல்லாம், ஒற்றைநாளில் மொத்தமாய் நீ அள்ளியெடுத்தாய்..!! கடல்தாயே... மறந்துவிட்டாயா? சுனாமியென்றால் எமனின் பினாமியென்று அன்றைக்குத்தான் தெரியும்! என்றுமே...இயற்கையைப் போற்றினோம்...! அன்றுதான் உன்னைத் தூற்றினோம்...!! என் பாட்டன் உன்மேல் வலைவீசினான், என் அப்பன் உன்னில் தூண்டில் போட்டான், எம் பிஞ்சுக்குழந்தை.... உனக்கு என்ன செய்தது? நீ அலையலையாய் அடிக்க... நுரைக்குமிழி பிடித்து விளையாடிய பிஞ்சுக…
-
- 14 replies
- 1.8k views
-
-
தேவனுக்கு ஒரு திறந்த மடல் அன்பான பாலகனுக்கு , உலகமே உம் வரவை உற்சாகமாய் கொண்டாட என் மண் மட்டும் ஏன் ஐயா சிரிப்பைத் தொலைத்தது ??? ஆழிப் பேரலையாய் ஆவேசமாய் வந்தீரோ ? ஆரவாரமாய் என்மக்களை உம்மிடம் இழுத்தீரோ? பல வடுவை சுமந்த எமக்கு உம் வருகை உவப்பாய் இல்லை....... வெளியே நாம் சிரித்தாலும் உள்ளே நாம் உறைந்துதான் போனோம். வருடங்கள் பல பறக்கும் காலங்கள் கலகலக்கும் ஆனாலும் நீர் வைத்த ஆழ வடு ஆறவில்லை எங்களுக்கு. வாரும் பாலகனே வாரும் .. என்மக்கள் நிலையில் மற்றதை தாரும்.. கோமகன் மார்கழி 24 2013
-
- 6 replies
- 793 views
-
-
நத்தார் நாயகனே பரிசுத்த இளைஞனே.. குழந்தை ஜேசுவாய் அன்னை மேரியின் தவப்புதல்வனாய்... இறை தூது கொண்டு.. நீ வந்தாய் தூசிகள் படித்த மனித மனங்களை தூய்மைப்படுத்த..! அகிலத்தில் - முதலாய் அகிம்சை எனும் ஆயுதம் தூக்கிய இளைஞனே அப்பாவியாய் நீ உலகை வலம் வந்தாய். மனித மனங்களை மாண்பால் பண்படுத்த நீ முயன்றாய்..! ஆனால்... அடப்பாவிகள் உன் தலையில் முட்கிரீடம் இட்டு தோளில் சிலுவை வைத்தார் இறுதியில் அதில் உனை அறைந்தே வீரம் கொண்டார்..! அதர்மத்தின் வீரம் அகோரம் தர்மத்தின் வீரம் சாந்தம்..! இளைஞர் எம் முன்னோடியே விடுதலைப் போராளியே.. நாமும் வருவோம் உனது தடம்படித்தே..! தோழனே ஜேசுவே உன் பிறந்த நாளில் உனை அன்போடே நினைவுகூறுகிறோம்..! வொட்காவுக்கோ.. வைனுக்கோ அல்ல கேக்குக்கோ புடிங்குக்கோ அல்ல சாண்…
-
- 8 replies
- 1.2k views
-
-
அடியே பெண்டாட்டி நீதான் என் உலகமடி வாடி பெண்டாட்டி நீதான் செல்லக்குட்டி நீ போனா போகும் என் உசிரும் சேர்ந்து உன்னைவிட்டா எனக்கு யார் இருக்கா சொல்லு (அடியே பெண்டாட்டி நீதான் ...) கண்ணை கட்டி நடந்தா பாதையை காட்டு பாதை மாறி போனா செல்லமா குட்டு உன்னை மட்டும் தானே நெஞ்சு மேல வைச்சு தூங்கவேணும் நானே பிள்ளை போல கொஞ்சு. (அடியே பெண்டாட்டி நீதான்.... ) சத்தியமா நீதான் சாகும் வரை எனக்கு மொத்தமா என்னை தந்துவிட்டேன் உனக்கு கண்ணுக்குள்ள நுழைஞ்சு காலம் வரை உறங்கு சாகும் வரை என்னை மடியில தாங்கு (அடியே பெண்டாட்டி நீதான் .....) சின்ன சின்ன கோபம் செல்ல செல்ல சண்டை போட வேணும் நாளும் என்கூட நீயும் ஊட்டி விடு சோறு உனக்கே என் உயிரு வாழ்கையில பாதி உங்கிட்ட தானே என் உசிரே போகும் உன…
-
- 3 replies
- 1.4k views
-
-
நாம்... ரொம்பவும் நேசிக்கும் ஒருவரால்தான், 'துரோகம்' எனும் பரிசையும்... புன்னகைத்தபடியே... கொடுக்க முடிகிறது! மனச்சாட்சிகள் எப்பொழுதும் தொடர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதில்லை..! அது... துரோகம் செய்தவரையும் ஒருநாள் தட்டியெழுப்பும்..!! காலம் கடந்த ஞானத்தால்... கோலம் மாற்ற முடியாது! காலைச் சுற்றிய பாம்பாக... மனச்சாட்சியின் தொண்டைக்குழியை, இறுக்கிக்கொண்டேயிருக்கும்...!! துரோகத்தின் தடங்களில்... அனுபவப்பாதை விரிந்து செல்லும்...! தாங்களே பின்னிய வலையில், துரோகிகள் சிக்கித் தவிக்க... மற்றவரின் பயணம் மட்டும் தொடரும்! மீண்டுமொருமுறை துரோகச் சந்திகளில் தரிக்காத, தனித்த நீண்ட பயணங்களில்...... மாற்றங்கள் இருக்கும்...! ஏமாற்றங்கள் இருக்காது...!! இனிமையான பொழுதொன்றி…
-
- 17 replies
- 4.5k views
-
-
இலைகளை உதிர்த்து நிர்வாணாமாய் நின்று கொண்டிருக்கும் மரங்கள் துளிர்க்க ஆரம்பித்து விட்டன ஒன்றும் செய்யாமல் அமைதியாக காத்திருந்த புல் தானாக முளைக்க தொடங்கிவிட்டது நான்காயிரம் மைல்கள் கடந்து வந்த மெக்சிகோ ஆண் ஹம்மிங் பறவையொன்று இணைதேடி ரீங்கார ஒலியெழுப்பிக் கொண்டிருக்கிறது பனிக்காலம் முழுதும் தூங்கிக் கழித்த பாண்டா குட்டியொன்று தன் முதல் மூங்கில் குருத்தை ருசிக்க தாயாராகி விட்டது இரையை பிடிக்க முடியாதவாறு ஊர்ந்து செல்லும் ஒசையை வெளிப்படுத்தும் பைன்மர சருகுகளை பாம்புகள் வெறுத்துக் கொண்டிருக்கின்றன 'களவு' எனும் உயிர்ப்பித்தலுக்கான முதல் பாடத்தை ஒநாய் தன் குட்டிகளுக்கு கற்பித்துவிட்டிருந்தது கலவி முடிந்தும் மூர்க்கம் குறையாத காடா மான் க…
-
- 10 replies
- 1.7k views
-
-
தண்ணியில் இருக்கும்போது முதலைக்கு பலம் ஈழத்தில் இருக்கும்போது அண்ணனின் பலம் என் மண்ணில் நான் இருந்தால் தான் எனக்கு பலம் என் உறவுகள் அக்கம் பக்கம் கூட இருக்கும் பலம் ... அகதியா வந்தபின் எனக்கு ஏது பலம் அசூல் கிடைத்த பின் இரட்டிப்பு பலம் அங்கின இங்கின உரக்க பேசும் பலம் யாரு கேட்பார் என்னும் நினைப்பு பலம் .. எவரையும் கேள்வி கேட்பேன் என்னும் திமிர் எழுந்தமானமா கருத்து சொல்லும் என் திமிர் தேசியத்தில் புதைத்து போனவர் கொடுத்த திமிர் எம் தேகம் எல்லாம் தீயை மூட்டியோர் விட்டு போன திமிர் ... எல்லாம் இன்றுதான் பார்த்தேன் அவர் முகம் சோகமா என்ன கதைப்பது எதை கதைப்பது என ஏங்கும் முகம் பாவமா தேசியம் பேசவா புரட்சி பேசவா சமத்துவம் பேசவா வேகமா கேட்பவர்களுக்கு தெரியும…
-
- 0 replies
- 643 views
-
-
பெருமை கொள்ளும் செயல் வீரன் கப்டன் ஊரான் இன்பசோதி' பெயரோடு இணைந்த சோதிபோல் நீயும் ஒளிபொருந்தியவன். காற்றிலேறிக் கைவீசிச் செல்லும் வண்ணத்துப் பூச்சியாய் உனது குழந்தைக்கால மகிழ்ச்சியில் நீயொரு ராசகுமாரன். காலம் உனக்காய் கட்டியெழுப்பிய கோட்டையில் நீயே கடவுளாய் காலவிதியின் கதையாய்....! நிலவாய் நீல வானமாய் நீயுருவாக்கிய காலத்தின் கோலம் உனது எண்ணங்கள் போல வர்ணங்களாய்.....! காலச்சக்கரம் மரணப்பொழுதுகளை நுகரத் தொடங்கி உனது வர்ணங்களாலான உலகை இரத்தச் சிவப்பாக்கிய போது நீயே யாவற்றையும் விட்டு விடுதலையாகி தேச விடுதலை தேடி வீரப்புலியானாய்.....! ஊரான் உனது பெயர் போலவே ஊரைக்கவர்ந்த புலிவீரன் நீ. உன் போல உருவாக உன்போல உடையுடுக்க உன்போல …
-
- 0 replies
- 774 views
-
-
புற்றில் நுழையும் பாம்புபோல மென்மையாக இறங்குகிறாய் இரைதேடியோ அன்றில் உறைவிடம் நாடியோ ? இழக்காத அந்தரங்கவேர்கள் மீதும் சொல்லெறிகிறாய் இடம்மாற்றவோ அன்றில் பிரட்டிப்போடவோ ? மௌனங்களை வென்றுபோக சலனமில்லாத விழிச்சுழற்சியை அனுப்புகிறாய்... என்னை கொள்ளவா கொல்லவா? எதுவென்றாலும் செய்துவிட்டுப்போ.. அதற்குமுன் வா .. இந்த குளிரைப்போக்க ஒரு தேநீர் அருந்தலாம்.. பின்பொரு முத்தத்தை பகிரலாம்.
-
- 10 replies
- 1.1k views
-
-
கடுநோய் கொண்டும் காற்றாய்ப் பறந்து கனலாய் தெறிக்கும் விதமாய் பேசி இடுமோர் வெற்றிக்கிணையே இல்லை எதிரிக்கிவரோ பெருமோர் தொல்லை எதானால் இவரை அழைத்தாய் எங்கள் இறைவாஉனக்கேன் இரக்கம் இல்லை பதமாய் பொங்கிப் படைக்கும்வேளை பானைஉடைத்தாய் பார்த்துக்கெடுத்தாய் மனதில் உரமும் செழிக்கும்வேளை மரணம்தந்தே மயங்கச்செய்தாய் கனவில்மட்டும் நிம்மதி என்று காலமெல்லாம் கலங்கச் செய்தாய் உரையைக்கேட்க இதயம் மகிழும் உண்மைப் பேச்சில் உணர்வும் கசியும் வரமாய் தமிழர்க் கொளியாய் வைத்து வழியில் செல்ல இருளைத் தந்தாய் இருந்தால் எங்கள் ஈழம் வெல்லும் என்றா இவரை கொண்டாய் சதியை பெரிதாய்போட்டே பிரிவைச்செய்தாய் பிழையை செய்தாய் பேசற்கரிய தமிழாம் ஈழத்தலைவர் எல்லாம் தர…
-
- 1 reply
- 620 views
-
-
1 எங்கள் தேசத்தின் குரல் ஓய்ந்திடவில்லை ஆண்டுகள் ஏழு ஓடி மறைந்ததா?- எங்கள் தேசத்தின் குரல் ஓய்வெடுத்து ஆண்டுகள் ஏழானதா? அன்பே மூலதானமாக அடக்கமே ஆளுமையாக அறிவே ஆயுதமாக தமிழினத்தின் குரலை தரணிக்கு எடுத்துக் கூறிய எங்கள் அன்பு பாலா அண்ணா உலகத்தைவிட்டு பறந்தோடி ஆண்டுகள் ஏழு ஆனதோ? உண்மையுள் உண்மையாய் உண்மையே உணர;வாய் உண்மையே இவராய் உண்மையாய் வாழ்ந்த உயரிய மகன்-இன்று எம்மைவிட்டு சென்றதை இன்னும் நம்ப மனம் மறுக்கின்றது உலகின் பார;வையில் இவரின் உறக்கம் மரணம் எனப் பெயர;பெறும் ஆனால், உலகத்தமிழர; உளங்களில்- இவர; என்றும் சீவித்திருக்கும் மனிதன். தமிழின விடிவுக்காகவே இறுதிவரை உழைத்த உறுதியான போராளி இவர;. பாழும் நோய் வந்து பாடையேறும் நாளை இரக்கமின்றி தெரிவித்தபோது பதட்டமின…
-
- 3 replies
- 664 views
-
-
அண்டப் பெருவெளியில் தனித்துவிடப் பட்ட நிலமொன்றில் மனித வாடையற்ற மிருகங்களினுடே எனக்கான ஏகாந்த இடமொன்றை தேடியலைகிறேன் நாய்களும் நரிகளும் எனை துரத்த இந்த கடுங்குளிரில் வெற்றுடலுடன் சாளரமொன்றின் அணைப்பிற்க்காக அரைப்பித்தனாக ஒடித்திரிகிறேன் நெடுநாளைய கோரப்பசி தீர்க்க மீளமுடியா இப்பெருங் கிணற்றில் குதிக்க எத்தனிக்கிறேன் இங்கே நீருமில்லை நிலமுமில்லை மேலே பகலுமிரவும் சிரிக்கின்றது இப்பெருங்கிணறோ முடிவதாய்த் தெரியவில்லை சுற்றிலும் மையிருட்டு எனக்கோ அழ திரனியில்லை எனக்காய் அழுபவர் யாரோ? ஏனில்லை இதோ என் தெய்வமுள்ளது அம்மா... உன் பிள்ளை வந்துள்ளேன் சொல் இந்த மானிட பேய்களிடம் நானென்றும் அனாதையில்லை யென்று என்னை அழ வைத்து சிரி…
-
- 4 replies
- 890 views
-
-
எழுத்தாக்கம் - குரல்வடிவம் : ஒருவன் ~ கவிதை கரைமணலைத் தொட்டுத்தொட்டு விளையாட... நுரையலைகள் விட்டுவிட்டு அலையாட... திரைகடல் மெட்டுப்போட்டு இனிதான, திரைப்பாடல் ஒன்றின் முதல்வரியை ஞாபகமூட்டும்! மெதுவாய் வீசுகின்ற உப்புக்காற்றின் ஈரம், பக்கம்வந்து பேசுகின்ற வார்த்தைகள்... முன்பொருநாளின் மாலைப்பொழுதில் அன்போடு மணல் அளைந்த இருபது விரல்கள் பற்றிய கதை பேசும்! உப்புக்காற்றில் உலர்ந்துபோன இருஜோடி இதழ்கள் காதலின் பருவமழையில் முழுதாக நனைந்துபோக... செக்கச் சிவந்த வானம்கூட அவளின் கன்னம் பார்க்க வெட்கப்பட்டு மேகத்தை அள்ளிப் போர்த்துக்கொள்ளும்! மெளனங்கள் பேசிக்கொள்ளும் ரம்மியமான மாலைப்பொழுதில் விரிந்த கடலுக்கும் வானத்துக்கும் இடையே எதிர்காலக் கனவுகளை தி…
-
- 9 replies
- 9.5k views
-
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிடை பொந்தினில் வைத்தேன் வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தத்தோம். கவிதை: மகாகவி: படம்:முகநூல்: எல்லாத்தையும் கலந்தது தந்தது: நெடுக்ஸ்
-
- 1 reply
- 1.3k views
-
-
நீயா அவள் ???? நித்தம் நித்தம் வந்து முத்தம் கொடுத்த என்னை சித்தம் கலங்கிய பித்தா என்று நெட்டித் தள்ளியதும் ஏனோ ?? எந்தன் பிழைதான் என்னவோ?? பள்ளியறையில் பங்காக சிந்து பாட வந்த பொழுது என்னை நீ , முட்டித் தள்ளியதும் ஏனோ ?? கொத்துக் கொத்தாக நீயாக , வந்து முத்தம் கொடுத்ததும் , முன்பு நீ , அத்தான் !! அத்தான் !! என்று நொடிக்கொரு தடவை அழைத்த நினைவு , என் நினைவில் முட்டித் தள்ளியதே........ அடி கள்ளி..... நீயா அவள் ???? கோமகன் 11 மார்கழி 2013
-
- 19 replies
- 3.3k views
-
-
தேடித் பார்க்கின்றேன் இன்னமும் பெரிதாக எதுவும் இங்கு மாறிவிடவில்லை எல்லாம் அப்படியே இருக்கின்றன இயல்பாகவே மண்ணில் இருக்கும் செங்குருதியின் நிறம் தோட்டத்தின் நடுவே இழுத்து போடப்பட்டு உருண்டு போய் பந்தாக காவிளாச்செடிகள் பச்சையாக வெட்டி சூடு மிதிக்கப்பட்ட பனை ஓலைகளும் மூரி மட்டைகளும் வேலிக்கரையில் வளர்ந்து ஆழமாக வேர் விட்ட அறுக்கம்புல் வேலியில் படந்து காய்த்து தொங்கும் பாவல்காய் முன்னர் பாட்டி வைத்த இடத்திலேயே அடுப்பு எரிக்க இப்போதும் பனையின் மட்டைகளும் கொக்காரைகளும் அதே சாணி மெழுகிய நிலம் தாத்தாவின் கயித்து கட்டில் கொடியில் படபடக்கும் தோய்த்த நாலுமுழ வேட்டி துலா கயிற்று கிணறு தாவாரத்தில் தொங்கும் தென்னோல…
-
- 4 replies
- 1.8k views
-
-
தீண்டத் தீண்டத் துடிப்பவளே நோண்ட நோண்ட நெருங்குபவளே தொடுகை எனும் மந்திரத்தால் தூரம் எனும் இலக்கை தகர்ப்பவளே..! அழகு முகம் காட்டி உடல்தனை வருடத் தருபவளே சுகிப்பின் களிப்பில் சூடாகிச் சிணுங்குபவளே..! அணைப்புத் தப்பினால் அலங்கோலம் ஆகி நிற்பவளே..! தொடாமல் நானிருக்க விரதம் கொள்ளத் தூண்டுபவளே கொண்ட கொள்கை நீளாமல்.. சிணுங்கி அழைத்து சில்மிசத்தில் சிக்க வைப்பவளே..! மணிகளை வினாடிகளாக்கி இனிய பொழுதை நொடியில் விழுங்குபவளே.. நீ இன்றிய தருணங்கள் நினைச்சும் பார்க்க முடியல்லையடி..! எட்ட நின்றாலும் கிட்ட வந்து சட்டைப் பையில் அடங்கி விடும் அழகினவளே நீ ..சட்டென்று தொலைந்து விட்டால் பதைபதைக்குமே மனசு..! பெற்ற இடத்தில் சொல்லாத ரகசியம் உன்னிடத்தில் சொல்லி வை…
-
- 24 replies
- 1.5k views
-
-
இரசியப் புரட்சியை காளியின் கடைக்கண் பார்வை எனவும் யுகப் புரட்சி எனவும் போற்றிப் பாடியதால் புரட்சிக் கவிஞன் ஆனவன் ஒவ்வொரு கவிக்கும் இசையோடு தாளமும் கொடுத்து ஓசையோடு நயம் கொடுத்து எழுதி வைத்ததால் இசைக் கவிஞன் ஆனவன் பெண்ணடிமையை எதிர்த்ததால் பாஞ்சாலி சபதத்தில் மனுதர்ம சாஸ்த்திரத்தை திரிபு படுத்திய சாஸ்த்திரம் என்றதால் புதுமைக் கவிஞன் ஆனவன் கோகுலத்துக் கண்ணனைத் தன் காம வேட்கை தீர்க்கும் காதலனாக்கிப் பாடியதால் தன்னினச் சேர்க்கைக் கவிஞன் ஆனவன் இன்னும் குழந்தையாக்கிப் பார்த்ததனால் paedophile கவிஞன் ஆனவன் தமிழர் ஆண்ட மண்ணை மறவர் வீரம் படைத்த நிலத்தை சிங்களத் தீவென்றழைது அறியாமையை வெளிப்படுத்தியதால் அறிவிலியான கவிஞன் ஆனவன். …
-
- 13 replies
- 1.8k views
-
-
=====> என்னவள் <===== விண்வரை வியாபித்த அன்பில்ஈடு இணையில்லாதவள்... வசந்தங்களால் வசப்படுத்த முடியா தென்றலவள்... தூரிகைகளில் தீட்ட முடியா தீண்டலவள்... ஏழுஸ்வரங்களில் இயற்ற முடியா இசையானவள்... தமிழின் இனிமையை தன்னகத்தே கொண்டவள்... தன்வேர்களை பூமியில் ஆழமாய் பதிந்தவள்... மனச்சிறையின் எல்லைகளை உடைத்து சிறகடித்து பறப்பவள்... காதலிலும் காதலுக்குள்ளும் உள்ளதையெல்லாம் கற்பிப்பவள்... சிறு பொழுதுகளில் நீராய் நிறைந்திருப்பவள் பெரும் பொழுதுகளில் நினைவாய் மலர்ந்திருப்பவள்... விடைபெறாமல் விடைபெறும் கேள்விகளையே தொடுப்பவள்... பின்னிரவின் மென்தூக்கத்தில் மெல்ல என்பெயரை சொல்பவள்... தீ சூரியனிலும் நீர் சம…
-
- 60 replies
- 4.6k views
-
-
தென்னாபிரிக்காவின் சேரிக் குடிசைகளின், கறள் படிந்த கூரைத் தகரங்களின் கீழும், சூரிய ஒளி நுழைய இயலாத, செம்மண் குடிசைகளின் இருட்டுக்களிலும், பெரு வீதிகள் குவிகின்ற, கூடார வளைவுகளின் கீழ்த்தளங்களிலும், தினமும் பசித்திருக்கின்ற, மனிதர்களின் வெற்று வயிறுகளிலும், உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்! ரொபின் தீவின் கரை தொடுகின்ற, கடலலைகள் எழுப்பும் அழுகுரலிலும், சுண்ணாம்புக் கற்களில் சம்மட்டிகள், செதுக்கிய துவாரங்களில் புகுந்து, வெளியில் வருகின்ற அனல்காற்று, எழுப்புகின்ற அவலம் கலந்த ஓசையிலும், ஆருமற்று அனாதைகளாய் இறந்து. புதைந்து போன சிறைக் கைதிகளின், உக்கிப்போன எலும்புக்கூடுகளிலும், உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்! காவலர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, கடல் வெளிக…
-
- 4 replies
- 667 views
-
-
கனவு .! காண்பவை எல்லாம் காட்சிகள் அன்றி நிஜம் இல்லை அப்படி ஒன்று இருத்தால் உழைப்பு ஒன்று இருக்காது ..!! நான் .! நான் எனக்கு சொல்லிக்கொள்ளும் மந்திர சொல் எனக்கு நான்தான் என்பதே .. உலகம் என்னால் மட்டும் தான் முடியும் என்கிற திமிர் இந்த நினைப்புதான் உலகத்துக்கு.. என்னால் மட்டும் மாற்ற முடியும் என்ற நினைப்பு எனக்கு இதில் யாரு வலியவன் யாரு எளியவன் ......?????? பூ .! அழகின் ஆரம்பம் முடிவும் அதுதான் மாலையில் உதிர்த்து விடுவதால் ...!!! கோவம் .! ஏனோ எனக்கு அடிக்கடி வருகிறது கோவம் ஏழையை எவனாவது திட்டினால் உடன் வருகுது முரட்டு கோவம்... சிறு பிள்ளையை யாராவது கைநீட்டி அடித்தால் அக்கணம் வருகுது பாச கோவம்... என்னேருவனை கேலி பண்ணினால் வருகுது பழிவாங்க…
-
- 0 replies
- 601 views
-
-
எழுகவே !!!!!!!!!!! ஒரு பேப்பருக்காக கோமகன் எழுகவே எழுகவே எட்டுத்திக்கும் எழுகவே !! பட்டி தொட்டி எங்கிலும் போர்பரணி , எழுகவே எழுகவே எழுக எழுக எழுகவே !! கட்டுச் செட்டு என்று வாழ்திருந்த எங்களை பட்டு பட்டு என்று எம்மை நீங்கள் சுட்டு விட்ட போதிலும் , கந்தகமும் பொஸ்பரசும் எம்மை எரித்து விட்ட போதிலும் , எழுகவே எழுகவே எழுக எழுக எழுகவே !!! கொத்துக் கொத்தாய் எம்மை நீங்கள் கொத்திக் குதறி எடுத்தாலும் , வீறுகொண்டு வீரியமாய் நாங்கள், எழுகவே எழுகவே எழுக எழுக எழுகவே !!! ஊனை உருக்கி உதிரம் பாச்சி வளர்த்த எங்கள் தேசமடா….. காட்டு நரியும் கூட்டு ஓநாயும் கூடிக் கொக்கரிக்க விட்டு விடுவோமா சொல்லடா ?? எழுகவே எழுகவே எழுக எழுக எழுகவே !!!!!!! கொண…
-
- 8 replies
- 1.1k views
-