கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஈழமண் என்றோர் நாடொன்று இருந்ததாம் இனிமையாய் தமிழினம் அதனிலே வாழ்ந்ததாம் உரிமையைப் பெற்றிட உறுதியாய் நின்றதால் உலகமே சேர்ந்ததந்த இனத்தினை அழித்ததாம் ஆண்டுகள் ஐம்பது கழிந்திட்ட பின்னதாய் அபலைகள் எம்கதை ஏட்டினில் மட்டுமோ ஏங்கியே நிற்கிற புலம்பெயர் தமிழரின் ஏக்கத்தைப் போக்கிட துணிந்திட்ட வீரரே மகிழ்ச்சியால் வாழ்ந்திடல் மங்கையைக் கவர்ந்திடல் மதுவினை ருசித்திடல் மட்டுமே மாணவர் மனதிலே இருப்பதாய் மட்டிட்ட மடையரே மடையெனத் திரண்டஎம் மைந்தரைப் பாரடா ஏழைகள் பணத்தினை எளிதினில் சுருட்டிட ஏற்றதே அரசியல் என்பதாய் எண்ணிய அராஜகர் கைகளில் சிக்கிய எம்விதி அகற்றிடக் கங்கணம் கட்டிய தீரரே! ஆண்டவர் மருண்டிட ஆள்பவர் கலங்கிட அலையெனத் திரண்ட எம் சோதரர் உங்களின் அன்பி…
-
- 14 replies
- 771 views
-
-
ஆண்ட இனம் அடிமைப்பட்டுக் கிடக்க அது அரசிழந்து ஆட்சி இழந்தது மட்டுமா குற்றம்..?! அது சக்தி இழந்து கிடப்பதும் குற்றமே..! எழுச்சி கொள் மாணவ இனமே குமுறும் இந்தக் குரல்களுக்கு.. சக்தி கொடு ஈழ தேசமதில் ஒரு விடுதலைப் பூப் பூத்திட...! அதிகார வர்க்கத்தின் பேசும் மொழி அடக்குமுறை.. காக்கிச் சட்டைகள் அதன் ஏவு இயந்திரம்.. அவை எதிர்த்து நில் அமைதி வழியில்..!! வரும் துயர் தாங்கி நில் சக்தி காட்டி நில்... மாணவர் ஒற்றுமையில்..! பொங்குவோம் நாம் தமிழராய் தரணியெங்கும் நீதி செப்பி மானுடம் போற்றும் தமிழினம் காக்கும் தமிழீழ தேசம் மீட்டிட...! போஸ்டர் மீளமைப்பு :- நெடுக்ஸ். இணைப்பு நன்றி:- முகநூல்.
-
- 5 replies
- 768 views
-
-
மழை சோ...... என்று பெய்த மழை சொல்லாமல் வந்த மழை சோம்பி இருந்த என் மனசு சோம்பலை ஓரத்தில் தள்ளி வைக்க..... சொட்டுச் சொட்டாய் வந்த மழை முற்றத்தில் முத்தமிட , வந்த புழுதி வாசம் மூக்கையடைக்க..... வண்டுவுக்கும் சிண்டுவுக்கும் கொண்டாட்டம் அவர் கொண்டாடம் காகிதகப்பலில் தெரியவர..... நானும் குழந்தையாகிப் போனாலும் , பெய்த மழையின் வேகத்தில் வீட்டுக்கூரை முகடு பிரிக்க !!!! என் வீட்டினுள் எட்டிப் பார்த்தது அழையாத விருந்தாளியாய் , நான் பானைகளால் கவசம் போட்டாலும் அங்கு என் ஏழ்மை சிரித்தது எக்காளமாய்..... மைத்திரேயி 05/02/2013
-
- 26 replies
- 3.2k views
-
-
வண்ணத் தமிழுக்கு வளைகாப்புப் போடவந்த வாலிபப் பீரங்கிக் குண்டுகளே..! ******************************************** மு.வே.யோகேஸ்வரன் ********************************* எரிமலையின் தீப் பிளம்பை எமது உறவுகளின் கண்களில் கண்டேன்.. கல்லூரி மாணவர்களா இவர்கள்..? இல்லை வல்லூறாம் சிங்களவரை விரட்ட வந்த நம்மூரின் நாயகர்கள்..தமிழ்ச் சொல்லூறும் எம்மினத்தின் போர்க் குயில்கள்! சின்னத் தளிருடல் வாடுதையா-உங்கள் சோர்வில் எம்மீழம் தோன்றுமையா..! உண்ணா விடுதலை நோன்பில் உங்களை ஆகுதி ஆக்கிக்கொண்ட எங்கள் திலீபர்களே..! வண்ணத் தமிழுக்கு வளைகாப்புப் போடவந்த வாலிபப் பீரங்கிக் குண்டுகளே.. நாளை மலரும் எம்மீழ வரலாற்று நூலில் தோளை நிமிர்த்தி நிர்ப்பீர்கள் ...திண்ணம் இது!…
-
- 3 replies
- 823 views
-
-
தொட்டுவிட்டவள் தொற்றிவிட்டவள் என்றிரண்டு பொண்டாட்டிங்க எனக்கு..! எங்களுக்க விவாகமுமில்ல விவாகரத்துமில்ல சண்டையுமில்ல சச்சரவுமில்ல கூவத் தெரிந்த நான் கூனியதுமில்ல.. கொண்டை வைச்ச நான் தலை சாய்த்ததுமில்ல..! இவ்வளவைய கட்டிமேய்க்கிறேன் கனகாலமாய்..! நானும் இரண்டு பொண்டாட்டிக்காரன் தான். Spoiler (இப்படிக்கு வெள்ளைக் கோழி.. சிவப்புக்கோழிகளின் கணவன் செஞ்சேவல்) படம்:முகநூல்
-
- 51 replies
- 7.4k views
-
-
கடந்துவிட முடிந்தாலும் தொடர்கின்றன ஒருபகல் நிலவைப்போல இறந்துபோன நேசிப்புகளும் காயங்களும், சப்தங்களை பிரிந்த சங்குகளாய் வெதும்புகின்றன இன்றைய பொழுதுகளில் - இந்த இதயத்தின் துடிப்புக்கள்.. விழிகரைந்துருகி விடை கொடுத்தும், கரைந்துமழிந்திடாத நதிக்கரை படுக்கைகளாய் உள்நிறைந்து போகிறது நேசிப்புக்கள். நல்ல நிலக்காலங்களிலும், சில அதிகாலைகளிலும், தேவதைகள் இறங்கிஅலங்கரிக்கின்றனர் நேசிப்பு மீதான கனவுகளை, நேசிப்பின் கொடிமரங்களில் அலங்கரிக்கப்பட்ட கனவுகள் அறைந்துகொள்கின்றன தங்களை, நிதர்சனங்களின் வலிகளை சுமந்து மௌனமாக, இந்த மௌனங்கள் திரண்டொரு பெரும் ஒலிக்குறிப்பாய் எழும்! அது ஒரு, நேசிப்புக்கான மரணத்தை உங்கள் முகங்களில் அறையும்.
-
- 7 replies
- 950 views
-
-
எட்டி உதை தருவீரா ?? தேனினும் இனிய தெள்ளு தமிழில் தெவிட்டிடாது பாட வந்தேன் உங்கள் முன் பாவிசைக்க வந்தாலும் பக்குவமாய் பாடுவேனா ?? தீர்ப்பைச் சொல்வீர் உங்கள் கையால்!! ஏறுமுகமாய் இருந்தவேளை பருத்தி விற்றது என்நகரம் அப்பதட்டிகளும் அடுக்கடுக்காய் நிரைகட்டியது ஒருகாலம் சுவையான வடையும் என்நகரில் சுவைக்கவே ஓடிவருவர் அந்நகரம் பெற்றெடுத்த ஆரணங்கு என்பெயர் மைத்திரேயி !! ஆவலாய் வந்தவளை அள்ளிக் கொள்வீரா ?? இல்லை..... எட்டியே நின்று எட்டி உதை தருவீரா ? மைத்திரேயி 02 / 01 / 2013 பி .கு :இது நான் முதல் எழுதி அரிச்சுவடியிலை போட்டனான் . வாசிக்காத ஆக்களுக்கு திருப்பி போட்டிருக்கிறன் .நிர்வாகம் இது பிழையெண்டால் எடுத்துவிடுங்கோ.
-
- 11 replies
- 929 views
-
-
காதல் இல்லாமல் வாழ முடியவில்லை காதலோடு வாழவும் தெரியவில்லை விரைவில் மரணத்தை கொடு இறைவா, அவளை அதிகம் கேள்வி கேட்கின்றேன் அவள் மீது அப்படி ஒரு பிரியம் - ஆனால் எனது போக்கு அவளுக்கு கசப்பாய் இருக்கின்றது, அது தெரிந்தும் என்னை மாற்றிக்க முடியவில்லை மாறாவிட்டால் அவள் எப்படி இன்பமாய் இருப்பாள் அவள் சந்தோசம் தான் எனக்கு வேண்டும், எனக்கு அவளை விட யாரும் இல்லை அவள் இருந்தும் அநாதை போல் உணர்கின்றேன் நான் மண்ணோடு மண்ணாக வேண்டும், அப்போது தான் அவள் பூமியில் பெண்ணாவாள் இப்போது என் உயிராக அவள் இருப்பதால் அந்த பெண் உணர்வுகள் அடங்கிவிட்டன, முடக்கப்பட்ட அவள் உணர்வுகள் விரைவில் தெளிவு பெற வேண்டுகிறேன் ஆனால் அதை தாங்கும் சக்தி எனக்கில்லை, அந்த பெண் பெண்ணாக வேண்டும் அ…
-
- 9 replies
- 1.2k views
-
-
அதிகாலை வேளை அந்தக் கோடை நடுவிலும் நனி குளிர் நடுக்கம்..! வந்த அழைப்பை... போர்வைக்குள் ஒளிந்திருக்கும் ஆசை முந்திக் கொள்ள அழைப்பு மிஸ்ஸானது. மீண்டும் சிணுங்கும் அந்தத் தொலைபேசி சினந்து எழுப்ப... "என்ன ரெடியோ வெண்புறா நிகழ்வு இருக்கு போகலாம்" மறுமுனைக் குரல் அழுத்த.. முடிவு... "காட்டாயம் அவைக்காகப் போகனும்.." மனது உறுதியானது. தமிழன் பரம்பரை பரம்பரையாய் நாற்று நட்ட வயல்கள் நடுவே சிங்களம் விதைத்த கண்ணிவெடிகள் கால் பிடுங்கி அழித்தது எம் மக்கள் வாழ்வு..!! அது கண்டு நெஞ்சுருகித் துணிவு கொண்டு புறப்பட்ட புறாக்களே இந்த வெண்புறாக்கள்..! சம்பிரதாயத்திற்கு ஒலிவ் கிளை ஒன்றை நுனிச் சொண்டில் உயரக் காவி வித்தை காட்டி.. வேட்டையாளர் வேடம் கலை…
-
- 5 replies
- 716 views
-
-
எனது கறுப்பு வானம் அகப்பை காம்பால் மாவு கிளறி அரிசிப் பேணியால் கொத்தி ஓலைப்பெட்டியில் அவியும் அம்மாவின் புட்டையும் பழங்கறிச்சட்டியையும் நான் ... பதம் பார்த்ததையும்... அக்காளும் தங்கச்சியும் மாத்துலைக்கை போட்டு கை வலித்த போது – விரல்களுக்கு நான் நல்லெண்ணை தடவியதையும்... ஒல்லித்தேங்காய்களை இணைத்து வாய்க்காலுக்குள் நீந்தப்பழகியபோது காற்சட்டை கழன்றதை பக்கத்துவீட்டு பார்வதி பார்த்து சிரித்ததையையும்... புத்து இடித்து கறையான் கொண்டுவந்து அப்பா வளர்த்த கோழி குஞ்சுகளை கீரியும் பிலாந்தும் சண்டை பிடித்து திண்றதையும்... வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் - அப்பா அப்பாவுக்கு பிடிக்கும் ஆடி அமாவாசை விரதத்தையும் ... ஓடியல் கூழும் ஒற்றை…
-
- 1 reply
- 642 views
-
-
இரும்புக்காட்டின் பூக்கள் வண்டிகள் எல்லாம் இரும்புக் குவியலாயிருக்க சக்கரங்களும் இல்லை ஓட்டமும் இல்லை துருப்பிடித்த பறவைகளின் நிழல் கவிந்த யாருமற்ற இடுகாட்டில் பிஞ்சுத் தலைகளின்மீது இரும்பு மூட்டைகளைச் சுமக்கின்றனர் சிறுவர்கள் இரும்பு படிந்த உடல்களிலிருந்து உதிர்கிறது துருவேறிய துகள்கள் மலிவான சிறுவர்கள் எவ்வளவு பாரமேனும் சுமப்பார்களென விலைக்கு வாங்கப்பட்டனர் வெடிக்காத குண்டுப் பொறிகளுக்குளிருக்கும் இரும்பை கொண்டு வருவார்களென இரும்புக்காட்டில் தொலைவுக்கு அனுபப்பட்டனர் அழுகிய இரும்பை நெறுக்கும் தராசுகளுக்குள் உறங்கி எழும் சிறுவர்களிடம் இருந்தவை இரும்புகளைவிட பாரமான கண்கள் கால்களுக்கு கீழேயும் தலைக்கு மேலேயும் வெடிகுண்டுகள் நிறைந்திரு…
-
- 0 replies
- 658 views
-
-
சிங்காரச் சிறகு விரித்து சிறகடித்த வானம் அழுகிறது.. நர்த்தன நடை பயின்று நடந்து திரிந்த பூமி கனக்கிறது.. சுதந்திர வானில் உயரப் பறந்த நீங்கள் உயிரற்ற உடல்களாய் உடை களைந்து கிடந்தீர் அங்கே... புதையுண்டு போன உண்மைகள் விக்கித்து நிற்கின்றன காட்சிகளோடு.. வினாக்கள் மட்டுமே மிச்சமாய்..! தமிழீழ மண்ணில் சென்ரி போட்டு தாய் நிலம் காத்து நின்று மக்கள் கையெடுத்து கும்பிட்ட வாழ்ந்தீர்..! இறுதியில்.. தாயக பூமியில் பேரினப் பிசாசுகளின் அடிமை விலங்கு உங்களை... விலங்கிலும் கேடாய் நசுக்கிக் கொல்ல கையறு நிலை சென்றோம் நாம்..! இன்று முற்றே கைவிட்டு விட்டோம் தப்பியோர் உம்மில் பலரை நட்டாற்றில்..! தேச விடுதலை என்றும் மகளிர் விடுதலை என்றும் அடுப்படிக்கு ராரா எ…
-
- 14 replies
- 918 views
-
-
கோவத்தின் பெறுமதி அறியாதவன் கண்ணீரின் கனதி அறியாதவன் அடிமைத்தனத்தை அழகென ஆரதிப்பவன் மானத்தின் மகத்துவம் புரியாதவன் அவன் யார்? நான் நான் இழவு வீட்டில் சண்டை பிடித்தேன் மயானத்துக்கு செல்ல முடியாத பிணங்கள் முற்றத்தில் நாறுகின்றது பாடை தூக்க நாலுபேரை ஒன்றாக நிற்க விடவில்லை ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழியை ஊர் ரெண்டுபட்டால் கொன்றவனுக்கு கொண்டாட்டமென்று புதுமொழியாக்கியவன் பேரினவாதம் கோவணங்களை அவிட்டு கொடியாய் பறக்கவிட்டுள்ள நிலையில் உரிமையாளர்கள் என்கோவணம் பெரிது உன்கோவணம் பெரிது என போட்ட சண்டையில் முன் நிற்பவன் சாவு வீடு நோக்கி நட்பு பகை மறந்து செல்வார்கள…
-
- 6 replies
- 793 views
-
-
தமிழ் அழகு மொழி - அறிவு சிறந்தோர் உதித்த மொழி தமிழுக்கு அழகு ழகரம் - அந்த தமிழ் இன்று இழந்தது பல நாடு இழந்தோம் நகரிழந்தோம் தன்னிகரிலா உறவுகளை இழந்தோம் தங்கி வந்த நாட்டில் தமிழில் எங்கள் பேரிழந்தோம் இத்தனையிலும் பெருமையும் கொண்டோம் இது எங்கள் சிறுமைதானே தமிழன் நாம் பலர் பேசுவது தங்கிலிஸ் பேசுவது தங்கிலிஸனாலும் அதிலும் பெருமை கொள்ளும் சிற்றரிவினர் எம்மில் பலர் லகரமும் ழகரமும் றகரமும் ரகரமும் எம்மில் பலருக்கு சரியாக வருதில்லையாம் தமிழை காதலி தமிழுக்காக வாழ்ந்து பார் அழகு தமிழ் உன்னோடு கொஞ்சும் தமிழன் என்று சொல்வது பெருமை தலை நிமிர்ந்து நிற்பது பெருமை தமிழ் காத்து வாழ்வோம் தலை வகுத்த வழி நிற்போம். வல்வையூரான…
-
- 7 replies
- 1k views
-
-
பலமுறை அவளைப் பார்த்ததால் எனக்கு உண்டானது அவள் மேல் காதல் அவளிடம் கேட்டேன் என்னை காதல் செய் என்று அவள் என் கன்னம் மீது மிதியடி தந்தாள் இம்சை காதலால் உழன்று நான் இறைவனிடம் கேட்டேன் எனக்கு கருணை செய் என்று அவன் தந்த கருணை மரணம் மகிழ்வோடு அவனடி சரணம். வல்வையூரான்.
-
- 7 replies
- 815 views
-
-
நாம் தான் தமிழ் மக்களின் அரசியல் வாரிசுகள்! தொடக்கி வைத்தவர் கொள்கை மறந்தார் இடையிலே கைவிட்டு எதிரிதம் வால் பிடித்தார் பயங்கரமாய் சட்டங்கள் ஆட்சியாளர் கைவர வாழாதிருந்தார்! அண்டையில் இருந்தவன் சொந்த நலனுக்காய் காய் நகர்த்த புரிந்தும் புரியாததுமாய் சொகுசு கண்டார்! தமிழன் கண்ணீர் கண்டு போலியாய் இரங்கி ஆளவந்தவனை ஆழக்கால்பதித்து வலுவாக உட்காரவைத்து கதிரைக்காய் சண்டையிட்டார்! வட்டம் என்றும் சதுரம் என்றும் மேசையில் உட்கார்ந்து வருடம் கடத்தினார் பயன் தான் ஏதுமில்லை! எதிரியோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வலுவாகி கொன்று குவித்தான் நாங்களோ தலை நகரிலே பஜ்றோவில் பவனிவந்தோம்! தமிழ் மக்களின் பிரதிநிதிகளாய்! அம்மாதான் விடிவின் விடிவெள்ளி என்று …
-
- 1 reply
- 736 views
-
-
நல்ல பாடம்! குருவி நானும் ஆலமர உச்சியில் ஒரு கூடுகட்டி நான்கு பிள்ளைகள் பெற்றிட அயலிருந்த காக்கையும் உயர பறக்கும் பருந்தும் வல்லூறும் எதிரிகளாகின! அன்றொருநாள் விசை கொடுகாற்றாய் புயலடித்திட கலைந்தது என் மனையொடு குடும்பமே! கலங்கினேன் வருந்தினேன் கவலையில் பிறந்தது உறதி! மீண்டும் கட்டினேன் ஒரு கூடு வலுவான கிளைதனிலே! பல சந்ததி கண்டு வாழ்கிறேன் சுதந்திரமாக! ஈழத்தமிழா நீ குருவியல்ல! மறத்தமிழன் வீணர்கள் காட்டுவர் வார்த்தையாலம்-அதில் மயங்கிடாது முயற்சி என் வாழ்க்கையை பாடமாய்க் கொண்டு! ஒரு நாள் உனது வெற்றித் திருநாளாகும்! யாழில் 2003 இல் பதியப்பட்டுள்ளது. http://www.yarl.com/kalam/viewtopic.php?f=6&t=1033 [காக்கை - இந்தியா பருந்து - …
-
- 1 reply
- 1.1k views
-
-
கசிந்துகொண்டிருக்கிறது தொலைக்கப்பட்ட அன்பின் மீதான கடைசி துளிகளும். முதல் சில நாட்களைப்போலவே இல்லை இந்த பிந்திய நாட்கள், அதீதமான அரவணைப்பை வெறுத்தொதுக்கும் மழலையொன்றின் பக்குவமற்ற நாட்களாய் கடந்துபோனது முந்தைய சில நாட்கள். எல்லை நோக்கி வளர்ந்துகொண்டிருக்கும் மரணமொன்றை, எல்லைகடந்து வளர்ந்துகொண்டிருக்கும் வாழ்தலொன்றை, உணர்த்தியழுதத்துகின்றன இந்த நாட்கள். தொலைக்கப்பட்ட அன்பு அழிந்துபோய்விடுவதில்லை - அது வேர்களில் அடங்கிக்கிடக்கிறது பின் அதுவே இலைநுனிகளில் நீராய் திரண்டும் வருகிறது. யாரவது ஒருவருடைய கண்களை பார்க்கும் போதும், யாராவதொருவர் முகத்தினை தடவும் போதும், யாரவது ஒருவர் கை அசைக்கும் போதும். தொலைக்கப்பட்ட அன்பு மிக கனதிய…
-
- 6 replies
- 676 views
-
-
கண்கள் அக்கிரமம் கண்டும் மூடிக் கொள்கின்றன....... காட்சிகளைக் கண்களுக்குள் படமாக்கி கண்ணீரில் கழுவிப் பின் உலர்விக்கின்றன தவிப்போடு என் நாவு பேச எழுந்து துடித்துப் பின் துவழ்கிறது.. முறுக்கேறி என் கரங்கள் முயல்கின்றன ஏதோ ஒன்றை..... எல்லாமே தோற்றுப் போகின்றன.. நான் தமிழச்சி என்பதால்... முள்வேலிக்குள் முடங்கிப் போகிறேன்.. பேசினால் ஒருவேளை அது தான் என் இறுதிப் பேச்சு....- இது கோழைத்தனம் என்று எனக்குள் குறுகிப் போகிறேன்....ஆனாலும் இன்றே நான் அழிந்து விட்டால்.. எனக்குள் சேமித்து வைத்திருக்கும் நம்மவர் தியாகங்களும்.. நம் இனத்தின் அவலங்களும் என் சந்ததிக்கு யார் பகிர்வார்... ஆனாலும்.... குமுறி எழுகின்ற யாவையும் கொட்ட முடியா வேதனை... பிரசவிக்க முடிய…
-
- 4 replies
- 917 views
-
-
அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் தாத்தாவும் பாட்டியும் இந்நேரம் முசிறியில் மூச்சோடு இருந்திருப்பார்கள்! அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் அக்கா அமெரிக்காவிலும் என் அண்ணன் கனடாவிலும் நான் இலண்டனிலும் சொகுசாகப் படித்துக் கொண்டிருப்போம்! என் அப்பாவா நீ இல்லையப்பா நீ நீ நீ எங்கள் அப்பா! எங்கள் என்பது... அக்கா அண்ணன் நான் மட்டும் இல்லை! எங்கள் என்பது... செஞ்சோலை காந்தரூபன் செல்லங்கள் மட்டும் இல்லை! எங்கள் என்பது... உலகெங்கிலும் உள்ள என் வயது நெருங்கிய என் அண்ணன்கள் என் அக்காள்கள் என் தங்கைகள் என் தம்பிகள் அனைவருக்குமானது! ஆம்...அப்பா! நீ எங்கள் அனைவருக்குமான 'ஆண் தாய்' அப்பா! அதனால்தான் சொல்கிறேன்... நான் மாணவனாக இருந…
-
- 5 replies
- 757 views
-
-
நாங்கள் மீண்டும் ஒருமுறை அழுது தீக்கிறோம். நீயோ எங்கள் அழுகையை ரசிக்கும் ஆவலில் எப்போதும் வரட்டும் என்கிறாய்…
-
- 2 replies
- 661 views
-
-
பெற்றால் தான் பிள்ளையின் பெருமை தெரியும் என்பார்கள் உண்மைதான் நாங்கள் எல்லாம் உனக்கு தெருவில் கிடந்து கரையை சேர்ந்தவர்கள் தானே அது தான் உயிர் வாழ உன் மீது வலை வீசிய எம் உயிர் பறிக்க அலை வீசினாய் அழித்த நீ எம்மை அடியோடு அளித்திருக்கலாம்,ஏன் அங்கொன்று இங்கொன்று விட்டு வைத்தாய் நீ அழியா வரம் பெற்றவள் என்ற திமிரிலையா எம்மை வதைக்கிறாய் தாயே ??? கொன்றுவிடு எம்மை மீதமின்றி கொன்றுவிடு,,, கொன்று விட்டு திரும்பி பார் உன்னை கண்டு கொள்ள ஒரு நாய் கூட வராது, அன்றாவது உணர்வாய் அர்த்தமற்ற உன் செயலின் விளைவால் நாம் பட்ட வேதனையை......... *எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது.
-
- 14 replies
- 885 views
-
-
நொடிப் பொழுதில் மடியக் குண்டு செய்யும் தொன் கணக்கில் அது கொட்டி.. மடிந்த பின் கட்டுப் போடும்..! மடியக் கொலைக்கருவி தரும் மடிந்த பின் ஒளித்து விட்ட அக்கருவி சாட்சியம் தேடும்..! மடியக் கொலைஞர்கள் ஏவி விடும் மடிந்த பின் ஏவியவர் யாரோ நீர்த்துவிட்ட நீதி தேடச் சொல்லும்...! மடியும் போது ஊடக வாய்கள் மெளனமாகும் மடிந்த பின் கூக்குரல்கள் அனுமதிக்கப்படும்..! மடியக் காரணம் யாரோ மடிந்த பின் மரண விசாரணை அவனிடமே பாடை தரும் ...! மடியும் போது ஒற்றைக் கரணம் மடிந்த பின் ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிக்கும்..! மடிய முன் பயங்கரவாதின்னு உச்சரிப்பு உச்சக்கட்டம்..! மடிந்த பின் தியாகின்னு உச்சரிப்பு முணு முணுப்பாய் மாறி நிற்கும். மடியும் போது …
-
- 7 replies
- 869 views
-
-
30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்... அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்கமென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞனெனில் நானோ கவிஞனில்லை என்பாட்டும் கவிதையல்ல. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய கதையுரைத்து வகுத்துணரும் வழியறியா மானிடத்து தலைவரென்று பிழைத்திருக்கும் ஆண்மையில்லா பேதையனே கவிஞனெனில் …
-
- 1 reply
- 697 views
-
-
எங்கே செல்கிறாய் என் தேவதையே? உனைத் தேடி அலைகிறேன் தெரியலையா? என் காதலும் உனக்கு புரியலையா? எதுவுமே உனக்கு நினைவில்லையா? என் பரந்த மனவெளிகளை, நினைவுகளால் நிரப்பிவிட்டு உன் மனம்மட்டும் வெறுமையாகி... என்னையும் வெறுமையாக்கிப் போனதேன்?? பிஞ்சுக் குழந்தையுன் மனதில்... யாரடி... கொடும் நஞ்சை விதைத்தது? கொஞ்சும் குரலில் குழைவாயே... நீயா என் நெஞ்சை வதைப்பது? மனதறிந்து மணங்கொண்ட என் மங்கையே! என் உளமறியும் குணங்கொண்ட நங்கையே! எனை மறந்து நீயும்... உனை மறந்து செல்கின்ற என் தேவியே...! உன்னை நேசிப்பவன் சொல்கிறேன்...! உன் மனதில் குறித்துக்கொள்!! என்றாவது ஒருநாள்... மீண்டும் வருவாய் எனைத்தேடி! அப்பொழுது எல்லாமே மாறிப்போயிருக்கும்... என் காதலைத் தவிர!…
-
- 8 replies
- 963 views
-