கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
சாள்ஸ் என்ற பெறுமதி….! (எழுதியவர் - நிக்சன்) சாள்ஸ் என்ற பெறுமதி….! சாள்ஸ் என்ற சரித்திர மனிதன் சாவின் விளிம்பிலும் சாதனை படைத்த சத்தியன்…. சிங்களத்தின் அழிவில் தான் ஆக்கமுண்டென்ற அறத்தை நம்பிய தோழன்….! ஓயாமல் உழைத்த ஒற்றைச்செடி நூறாய் ஆயிரமாய் சூரியன்களைச் செதுக்கிய சிற்பி….! தலைவர் தளபதிகள் எவருமவன் முன்னால் பொதுவேதான் பேதமில்லை…! நேருக்குநேர் விவாதம் செய்திடும் ஒரேயொரு வீரதளபதி அவன் என் தோழன்; சாள்ஸ்….! கோபத்திலும் சிரித்திடும் இனியன் கொடிய பகைமுன் வீரத்திலும் அவனை வென்ற பேரொன்றில்லை…! தலைவன் வழி அது எங்கள் சாள்ஸ்சின் விழி வரலாறு படைத்த சாதனைப்புலி….! கோபத்திலும் சிரித்திடும் இனியன் கொழும்பின் அழிவை இவனே கொள்கையாய் மாற்…
-
- 17 replies
- 872 views
-
-
நான் புல்லாங்குழலில் இருந்து கசியும் ஒரு மெல்லிய இசையாக உன்னை ரசிக்கிறேன் நீ புல்லாங்குழலுள் அடைபட்டு துளைகளூடு வேளியேறும் காற்றாக்கி என்னை வதைக்கிறாய் நான் பூவிலிருந்து ஒழுகும் பரவச வாசனையாக உன்னை நுகர்கிறேன் நீ பூக்களை தாங்கி நிற்கும் ஊமைக் காம்புகளாக்கி என்னை மறந்துபோகிறாய் நான் புத்தகங்களுக்கு நடுவே பொத்திவைத்த மயிலிறகாக உன்னை சேகரிக்கிறேன்.... நீ புத்தகங்களுக்கு உள்ளே கிழிந்துபோன பக்கங்களாக்கி என்னை புரட்டிப்போகிறாய்... நான் எல்லாவற்றிலும் உன்னை அழகாக ரசித்துக்கொள்கிறேன் நீ அனைத்திலும் என்னை அடிமையாக நினைத்துக்கொள்கிறாய்.. நான் ஓயாத உன் கவனிப்பின்மைகளுக்கு நடுவே கொடுக்க நிறைய அன்புடன் காத்திருக்கிறேன் நீ பேசாது உன் வனமங்களுடன் எடுக்க ஒரு புன்னகையைகூடதர நேர…
-
- 13 replies
- 1.2k views
-
-
முட்டுவதற்கு வளர்க்கப்பட்ட ஆடு வெட்டுண்டு கிடக்கிறது மற்றைய ஆடுகள் கதறுகின்றன கத்திக்கு சொந்தக்காரன் யார் என்று பதறுகின்றன முன்பு ஒரு நாள்.. ஆடு கட்டுக்குள் அடங்க மறுத்தது யாருக்கும் சொல்லாமல் கயிறு அறுத்தது ஆயினும் பின்பு ஆடு திருந்தியது தானாகவே வீடு திரும்பியது காலங்கள் ஓடியது.. ஓநாய்களை முட்டப் பழகிய ஆடு புதிய களத்திற்கு ஒரு நாள் வந்தது அங்கே ஓநாய்கள் நிற்கவில்லை உடன்பிறந்த ஆடுகள்தான் நின்றிருந்தன முட்டுவதில் பழைய வேகம் இல்லை முட்டுகிறதா? ஒட்டுகிறதா? எசமானர்களுக்கு சந்தேகம் வந்தது உண்மைதான். இன்றைக்கு ஆடு வெட்டப்பட்டுக் கிடக்கிறது மற்றைய ஆடுகள் எசமானர்கள் பின்னே நடக்கின்றன ஓநாய்களின் பற்தடம் தேடித் திரிகின்றன ஓநாய்க…
-
- 8 replies
- 940 views
-
-
அழகாகச் செதுக்கிய சிற்பங்களை உடைத்தெறிந்து ஆனந்தங்கொள்ளும் அணங்குகளிற்கு... தெறித்துக் கிடக்கும் சிற்பப் பிணங்களின் ஊமை அழுகுரல்கள் கேட்பதில்லை! சிற்பத்தை சீரெடுத்த உளிகளின் வலிகளும்... கலைஞனின் கதறல்களும்... எப்பொழுதும் புரிவதில்லை! உடைந்துபோன சிற்பச் சிதறல்களை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கியெடுத்து, ஒட்டவைத்து மீண்டும் உயிர்கொடுக்கும் ஆசையுடன், காணாமற்போன ஒருதுண்டை... இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றான் குருட்டுச் சிற்பி! கூர்மையான விழிகளுடன் காத்துக்கிடக்கின்றன உளிகள்... புதிதாய் ஒரு சிற்பம் வடிக்க...!
-
- 3 replies
- 525 views
-
-
கடப்பு வைச்சு காத்திருந்த வேளை - மர்மமாய் கழுத்திறுகி இறந்தது ஓர் ஆடு. கள்வரும் அது கண்டு.. கட்டியே இழுத்துச் சென்றார். கண்ணியமாய் நீதி உண்மை விளம்ப முன்..! கள்ளுக் கடையருகில் கள்ளக் கடை விரிச்சு கள்ளாடும் ஆனது பங்கிறைச்சி. கள்ளின் வெறியதில் கழிவு விலை கேட்ட இடத்தில் கன்னம் பறக்க கதறி அழ கட்டிப்புரண்டு.. கண்டபடி நடந்தது அடிபாடு. களத்திலும் அது கதை.. கட்டுரை என்றாக கடைசியில் கன்னம் பழுத்த கூட்டம் கழுதைக் கத்தல் கத்துது கதைகள் பல விடுகுது... கள்ளாட்டுக்கும்... யாரும் உரிமை கோரவில்லை.. கறுத்தாடு அதுவும் கோரை தின்றே.. "கேர்ணல்" ஆனது என்று. களவெடுத்தது நாமும் அல்ல கள்வரும் அல்ல - நாம் கண்ணியமானவரே என்று. கடைக்கண் விழி திறந்து கவனமாய் சிரிக்…
-
- 17 replies
- 1.1k views
-
-
காற்றில் விதை தூவி வெந்நீர் தனை ஊற்றி பஞ்சு வேலியிட்டு நெஞ்சில் உரமிட்டு பார்த்து வளர்க்காது உயிர் சேர்த்து வளர்த்த பயிராம் - காதல் இதில் மன்னவரும் மகுடமிழக்க விண்ணவரும் வீண் பகை சுமக்க பின்னவராய் நாம் மட்டும் என்ன விதி விலக்கோ ? மனக்காதல் மணக்காததால் மணக்காது போகும் பெண்ணை கண்கள் இமைக்காமல் கண்ட நிலைக்காதல் நினைக்காது நீக்கிடுமோ ? நெஞ்சு பொறுக்குதில்லையே நம் உயிரென நினைந்தவள் உதறிடும்போது.... புற்றரவு தீண்டிடினும் கொடும் நஞ்சு சுவைத்திடினும் மனம் பெற்றிடுமோ உற்ற உன்னை இழந்த வலி ? இறக்கும் வரை இவ்வலியை இழி மரணமும் கொணர்வதுண்டோ? இறந்தாயினும் ஓர் வழியில் இரு மனமும் புணர்வதுண்டோ? என்னை இறத்து உன்னை மறக்க உன் நினைவை மண் புதைக்க கோழை போல் இறக்கமாட்டேன்... …
-
- 0 replies
- 527 views
-
-
ஒரே ஒருமுறை சிந்திப்போம் ஓரணியில் சந்திப்போம். பேதங்கள் தொலைப்போம் - எங்களுக்காக தம்மை தந்தவர்கள் பாதங்கள் தொழுது வேண்டுகிறோம் எங்களுக்குள் இருக்கும் பேதங்கள் தொலைப்போம். தாயகம் மலரவும் தமிழ்க்கொடி பறக்கவும் தம்மையே தந்து தரணிக்கு எம்மை இனம் காட்டிய தவப் புதல்வர்களின் இலட்சியம் நிறைவேற பேதங்கள் தொலைப்போம். ஒன்று பட்ட ஓர் இனமாய் ஒருங்கிணைந்து செயற்படுவோம் உத்தமர் தம் உயிராலே நெய் ஊற்றி ஒளி ஏத்தி வைத்த தீபமதை சத்தியம் செய்து காத்து வைப்போம். அண்ணன் அடிக்கடி சொல்லிடுவான் அடுத்த சந்ததிக்கு வேண்டாம் நாம் பட்ட துன்பம் என்று அவன் வழித்தடத்தில் தடம் பதித்து வரும் நாம் அடுத்த சந்ததிக்காய் எதை விட்டுச் செல்லப் போகிறோம…
-
- 13 replies
- 975 views
-
-
விடை ஒன்று கொடுத்து புதியதை வரவேற்று விண்ணுக்கும் மண்ணுக்கும் துள்ளினர் ஒருபால் வித விதமாக, விழிகளை உயத்த வைத்த விலை கொண்ட ஆடையர் ஒருபால் கடிகார முள்ளை கன நேரமுற்று காத்திருந்து கையிலிருந்த வெடிதனை வெடித்தோர் ஒருபால் பெடிகளாய் நின்று கும்மி குத்தி பெண்கள் பக்கம் திரும்பி இளித்தவர் ஒருபால் கைகள் வலிக்க வலிக்க கஷ்டம் பார்க்காமல் கனகதியில் SMS அனுப்பினர் ஒருபால் லட்டு ஜிலேபி என்றி பட்சணங்கள் உண்டு பக்கத்துக்கு வீட்டுக்கு தந்து பறை சாற்றியோர் ஒருபால் பீர் ஒரு கையில் பிகர் ஒரு கையில் என்று பின்விளைவுகள் அறியாது சுத்தினர் ஒருபால். தேரடி வீதியிலும் திரும்பிய திசைகளிலும் சந்தோசம் கொப்பளிக்க இருந்தனர் இவர்கள் ஊரது…
-
- 4 replies
- 699 views
-
-
இறைவன் எங்குள்ளான் ? சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து, துதி பாடி, தோத்திரம் பாடி, கையால் ஜெபமாலை உருட்டி உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை நிறுத்தி விடு! கோயில் தனி மூலையில், கதவுகளை மூடி, கண்களை மூடிக் கொண்டு காரிருளில் நீ யாரைப் பூஜிக்கின்றாய்? கண்களைத் திறந்துபார், உன் இறைவன் முன்னில்லை என்பதை! மெய்வருந்தி இறுகிப் போன வயலை உழவன் எங்கே உழுது கொண்டு இருக்கிறானோ, வேர்வை சிந்தி நடைபாதை போடுபவன் எங்கே கல்லுடைத்து வருகிறானோ அங்கே உள்ளான் இறைவன்! வெட்ட வெயிலிலும் கொட்டும் மழையிலும் தூசி படிந்த ஆடையுடன், உழைப்பாளி உடன் குடியுள்ளான் இறைவன்! புனிதமான உன் காவி மேலங்கி உடையை எறிந்து விட்டு புழுதி நிரம்பிய பூமிக்கு இறங்…
-
- 1 reply
- 532 views
-
-
ஆண்டில நாளு 365 அதில நாங்க வைக்கிற பார்ட்டி 265 அதில "பாட்டிகளுக்கு".. "பார்டிகளுக்கு" வைக்கிற பார்ட்டி 165 அதில பேர்த்டே பார்ட்டி 125 அதில வெல்கம் பார்ட்டி 85 அதில உடான்சு பார்ட்டி 65 அதில வெடிங் பார்ட்டி 55 அதில சாமத்தியவீட்டுப் பார்ட்டி 35 அதில எக்ஸாம் பார்ட்டி 25 அதில ரிஸல்ட் டே பார்ட்டி 15 அப்புறம்.. கிரயுவேஷன் பார்ட்டி ஒரு மூணு.. அவவுக்கு மூட் அவுட்டானா அதுக்கும் ஒரு பார்ட்டி.. அட அழுகிற குழந்தையை அரவணைக்க அதுக்கும் ஒரு நாலு பார்ட்டி - அப்படியே ஆண்டு முழுக்க பார்ட்டி அதில கோலில வைக்கிற பார்ட்டி முக்கால்வாசி அருகில கோயில்ல வைக்கிற பார்ட்டி அரைவாசி அப்புறம் வீட்டில வைக்கிற பார்ட்டி கால்வாசி.. அங்கின ரெஸ்ரோரண்டு வழிய வைக்கிற பார்ட்டி அரைக்கால்வாசி…
-
- 8 replies
- 876 views
-
-
காற்றில் கரையும் இலையின் பனித்துளி போல் இந்த வருடமும் இனிதாய் நகர்ந்தது சுயநலத்தில் கரையும் மனிதநேயம் சொந்தங்களுக்காக வாழும் இரவல் வாழ்க்கை... மனசுக்கும் செயலுக்கும் இடையே செயற்க்கையாக செய்யப் பட்ட நாகரீக மதில்சுவர் – இவைகளின் மத்தியில் இந்த வருடமும் இனிதாய் நகர்ந்தது ... ஏழையின் வயிற்று பசி போக்காத இறை வழிபாடு... மனிததுவம் வளர்க்காத மானிட வளர்ச்ச்சி... அகம் மறை(ரு)க்கும் அறிவியல் வளர்ச்சி... பூவின் இதழினை ரசிக்க புள்வெளி பனித்துளி ருசிக்க அம்மாவின் அன்பில் மயங்க மனித வாழ்வின் உன்னதம் உணர இடமளிக்காத அவசர உலகில் இந்த வருடமும் இனிதாய் நகர்ந்தது ... மனதை ரணமாக்கும் கெளரவ கொலைகள்... கண்ணெதிரே மறையு…
-
- 0 replies
- 509 views
-
-
புத்தாண்டே நீ புதிதாய் வருகின்றாய் அத்தனை பேரும் ஆவலுடன் உனக்காய் அகமகிழ்ந்து எங்கும் காத்திருக்க எத்துனையும் அலுக்காது எப்படி நீயும் எழில் பொங்க வருகின்றாய் சாதிமத பேதமின்றி சண்டைகள் ஏதுமின்றி சமத்துவத்தோடு நீயும் சரிநிகராக சகலருக்குமாக எப்படி வருகின்றாய் புத்தாண்டிலாவது புதுவழி பிறக்குமென நம்பிக்கை கொண்டோரின் கனவை நனவாக்க நாடுகள் தோறும் நீ நளினத்துடன் வருகின்றாய் எத்துன்பம் வந்தாலும் அத்தனையும் களைய ஆவலுடன் உன்னை அத்தனை பேர் பார்த்திருக்க ஏற்றமுடன் நீயும் எப்படியோ வருகின்றாய் ஆனாலும் நாமும்தான் ஆசையுடன் உன்னை ஆண்டாண்டாய்ப் பார்த்திருந்தோம் ஆறுதல் தேடி ஊரூராய் அலைந்திட்டோம் ஆழக்கடல் கடந்து அகதியாய் அலைந்திட்டோம் ஊரெல்லாம் கூடி ஒப்பாரி வைத்த…
-
- 10 replies
- 741 views
-
-
விடியலோட வந்தவள் வியக்கும் பல வினாக்கள்... விடைகள் தந்தவள் விடைபெறும் தருணமிது..! விடலை இவன் விடயத்திலும் விதைத்து விட்ட தடயங்கள் பல. விரியும் அந்த வாழ்வெனும் வான்வெளியில் விரித்து விட்டால் வயதொன்றை கூட்டியே அதிகம்..! விந்தை இவள் வரவோடு வியந்து பல விடயங்கள் நடக்கும் என்றார் விபரம் இன்றியோர் - அவளோ விளையாடிச் செல்கிறாள் விலை கூட்டிய பொருண்மிய விடயங்கள் தந்துமே..! விடியலுக்காய் விழித்திருக்கும் தாய் மண்ணில்.. விழுமியங்கள் தொலைந்து விழும் பிணங்களே விடையாய் இம்முறையும்.! விடுதலைக்கும் விரியுது தூரம் இன்னும் நீண்டே..! விண்வெளியில் வியத்தகு மாற்றம் விரித்த மாயனின் கூற்றை விழுங்கி விட்டுச் செல்பவளே - நீ விட்டுச் செல்லும் தங்கையவள் பின் வர…
-
- 13 replies
- 752 views
-
-
இன்னும் எலும்புகள் - சுகுமாரன் எனது கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும். மரணத்தால் விறைத்திருக்கிறது என் வீடு நான் உனக்குத் தரும் சொற்களில் மிருகங்களின் கோரைப் பற்கள் முளைத்திருக்கலாம் உன்னுடன் பகிர்ந்து கொள்ளும் சிகரெட்டில் விஷத்தின் துகள்கள் இருக்கலாம் உன்னுடைய தட்டில் பரிமாறும் உணவில் சகோதரர்களின் மாமிசம் கலந்திருக்கலாம் உனக்குத் தயாரிக்கும் தேநீரில் கண்ணீரின் உப்பு கரைந்திருக்கலாம் இந்த நாட்கள் காக்கிநிறப் பேய்களால் நிர்வகிக்கப்படுகின்றன இன்று பூககளும் பறவைகளும் குழந்தைகளின் புன்னகைகளும் பெண்களும் எரிந்து போயினர் உறுப்புக்கள் வெட்டப்பட்டவர்களின் குரல்கள் …
-
- 0 replies
- 505 views
-
-
உன்னை முத்தமிட எனக்கு விருப்பமில்லை என் காதலை சத்தமிடுவதிலும் எனக்கு விருப்பமில்லை தொடுதலுக்காக மட்டும் காதலில்லை என்பதில் என் மனம் என்றுமே விட்டுக்கொடுப்பதில்லை மறதியை வெல்லும் ஆற்றல் உன் நினைவுக்கு மட்டும் தானடி உள்ளது சொல்லாமலேயே நீ சொல்லி விட்டுப் போன அத்தனை வார்த்தைகளும் உன் மௌனத்திற்கு இன்றும் அர்த்தம் சொல்லிக் கொண்டு தானிருக்கிறது உன் கண்கள் மட்டும் ஏனோ அதை மறுத்துக் கொண்டுதானிருக்கிறது எது வரை …என்பதில் தான் எனக்கும் உனக்கும் நடக்கிறது ஒரு காதல் யுத்தம் இதில் தோற்பதிலும் சுகம் இருக்கிறது என்று நினைக்கிறது இங்கு ஓர் மனம். http://vinmugil.blogspot.fr/2012/12/blog-post_29.html
-
- 0 replies
- 600 views
-
-
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வாறான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன. நாம் அதிகமாக இந்த எழுத்துக்களில் தவறு செய்கிறோம். அவற்றை பற்றி ஒரு அறிதலை ஏற்படுத்தவே இந்தப் பதிவு. கவிதை எழுதுபவர்கள் இதனை கவனத்தில் கொண்டால் கவிதை இன்னும் சிறப்பாக இருக்கும். என்னுடைய ஒரு சிறிய முயற்சி தான் இந்தக் மயங்கோகொலி சொல் விளையாட்டு. கவிதை எனக் கொண்டாலும் சிறப்புதான் குழவியுடன் குலவியிருக்கும்போது குளவியோன்று கடியிலிருந்து கடிதாக வ…
-
- 11 replies
- 7.2k views
-
-
இந்தியப் படைகளின் பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சி. இதே போன்ற காட்சிகள் ஈழத்தில் வன்னியில்.. சிங்களப் படைகளினால். அவர்களின் வழிகாட்டிகள் யார் என்பதற்கு இந்தப் படம் சாட்சி... [ http://southasiaspeaks.wordpress.com/2009/11/23/hr-collective-in-india-calls-for-total-repeal-of-armed-forces-special-powers-act/ ] வானலையில் குயிலாய் ஒலித்தவள் இதய நோயாளி.. வன்னி ஆக்கிரமிப்பில் பல்லாயிரம் தோழிகளோடு பிணமாய்..! தமிழ் பெண்களை புணர்ந்திழுத்தே கொன்ற சிங்கள இன வெறிநாய்களின் தமிழ் ஒட்டுக்குழு ஓநாய்களின் கொடூரத்தின் முன்னே.. மக்களின் கண்ணீர் காய்வதற்கிடையில்.. நாலே வயது நடக்கக் கூட தெரியாத பிஞ்சு – அதை காம வெறியில் பிரிச்சு மேஞ்சு மோச்சரியில் போடுகிற ஆக…
-
- 1 reply
- 762 views
-
-
முத்தம்மா பெற்ற பிள்ளை மூன்று பேர் உயிரோடு இல்லை முத்தப்பன் வளர்த்த பிள்ளை உடம்பில கை கால் இல்லை பத்துமாத தமிழ்ப் பிள்ளை படுத்துறங்க மடியில்லை படைவேரியன் பிடியில அழக்கூட முடியல்ல நன்றி - முகநூல்
-
- 1 reply
- 817 views
-
-
ஆழிக் கடலடி ஆட்டம் கண்டதால் ஆழப் பெருங்கடல் மேலெழுந்தது அதிர்வின்றி அமைதியாக ஆழ்கடல் அசைந்து வந்து ஓசையற்று ஒட்டுமொத்தமாய் ஒன்றுமிலாது கொண்டு போனது அன்னை மடியென ஆடிக் கழித்தவர் அலைகடலோடு கூடிக் கழித்தவர் ஆவலோடு உனைப் பார்த்திருந்தவர் அத்தனை போரையும் அரை நொடியுள் அள்ளிக் கொண்டு சென்று விட்டாய் அந்த நொடிவரை ஆயிரமாய் அகம் முழுதும் ஆசைகளோடு அடுத்தநாளின் கனவுகளோடு ஆடிப் பாடிக் களித்திருந்தார் அனைவர் மீதும் கோபமென்ன அடித்துக்கொண்டு சென்றுவிட்டாய் பத்து மாதம் சுமந்த பிள்ளையை பள்ளிக்கனுப்பிய பாலகனை கட்டிய கணவனை காதலனை அத்தனை உறவையும் அக்கணமே அகதியாக்கிச் சென்றுவிட்டாய் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வீடுகள் ஏகாந்தமாய்த் திரிந்த வீதிகள் எழில் பொங்கும் எங்களின் ஊர்கள் …
-
- 14 replies
- 792 views
-
-
கடலம்மா கடலம்மா கருணை கொண்ட தாயம்மா அலை மடி மீது தாலாட்டி அமுதூட்டிச் சீராட்டி வளர்த்திட்ட சேயும் நானம்மா…! முடிவில்லாப் பயணங்கள் உன் மடிமீது நாம் செய்தோம் அளவில்லாப் பொறுமை தந்து அருள்பவளும் நீயம்மா…! ஆதிக்க வெறியர்கள் அடுக்கடுக்காய் குண்டுதள்ள உன் வயிற்றில் அவை தாங்கிக் காத்தவளும் நீயம்மா..! அமைதியின் கோலமாய் சீரான அலை கொண்டு கரையோடு மோதுபவளே அழிவில்லா அழகு தந்து அகம் மகிழ அழைப்பவளே அழிவுக்கு வகை செய்ய ஆர்ப்பரித்ததுவும் ஏனம்மா…! இன்று…. கணமும் எங்கள் தொண்டைக்குழிக்குள் சிக்குமந்த ஏக்கத்தின் முதலாய் நீயம்மா…! உறவுகளின் உயிர் குடித்த பூதத்தின் விளை நிலமாய் ஆகினையே ஏனம்மா…?! மடி தாங்கிய மகவுகளின் மகத்தான் உயிர் குடித்து சாதிக்க நினைத்ததுவும…
-
- 5 replies
- 529 views
-
-
உச்சியில் வட்டம் ஒன்று வரைந்து நடிவில்.. வடிவாய் ஓர் கோடிழுந்தேன். பின்.. ஆங்கே கோளங்கள் இரண்டு சரியாய் பொருத்தினேன். கோடும் வளைய வளையிகள் கொண்டு சரி செய்தேன். ஈர்ப்பு மையம் மாறிப் போக பிறை ஒன்று உச்சத்தில் வைத்தேன் சமநிலை குழம்ப முக்கோணம் ஒன்று கூடச் சேர்த்தேன்..! கோடுகள் சேர்ந்து ஓவியமாக.. உயிரற்று நின்றது. கணிதத்தில் வகையீடு தொகையீடு சமன்பாடுகள் பல போட்டு திரிகோண கணிதமும் கேத்திர கணிதமும் எல்லாம் கலந்து அட்சர கணிதத்தில் ஒருபடி.. இருபடி எல்லாம் தாண்டியும்.. பயனில்லை..! அலுப்புத்தட்ட கட்டிலில் சாய்ந்தேன் நித்திரை வெளியில் கோடுகளின் எண்ணத்தில் உயிர் பெற்றது ஓவியம். வார்த்தைகள் தேடினேன் முந்திக் கொண்டு.. ஓவியம் பேசியது "உன்னவள…
-
- 21 replies
- 1.6k views
-
-
01, ஒரே பத்திரிகையில் பிறந்த நாள் வாழ்த்தும் நினைவஞ்சலியும் வாழ்க்கை 02, வீடு எரிகிறது ஒளி கிடைக்கிறதாம் வடக்கில் வசந்தம் 03, நெற்றிக் குங்குமப்பொட்டுக்கள் அழிக்கப்படுகின்றன கிழக்கில் உதயம் 04, கள்ளர் நாடாளுமன்றில் நல்லவர் தெருவில் வீடும் நாயும் 05, தேர்தலில் ராஜ பக்சர்களின் நாகாஸ்திரம் கள்ள வாக்கு 06, புளியமரத்தடி முனியை கண்டதில்லை,பயமுமில்லை கண்டதும் பயமும் வெள்ளை வானுக்குத்தான் 07, நிலவு உறங்கும் இரவு ,நாய்கள் ஊளையிடும், கோழிகள் கூவாது ஏனெனில் களவாடப்பட்டிருக்கும் இந்திய அமைதிப்படைக்காலம் 08, என்னைப்போல்எப்படி நீ நடித்தாலும் என் உணர்வை உணராய் விம்பம் 09, அம்பு துப்பாக்கிரவை ஆயிற்று சேலையும் அப்படித்தான் உலக …
-
- 8 replies
- 21.1k views
-
-
எட்டு ஆண்டானாலும் அவலம் மாறாத நிலை வேண்டும் என்று செய்து வேடிக்கை பார்த்தாயோ கடலம்மா தாய் என்று மதித்தோர்க்கு தயவற்ற செயல் செய்தாய் பேயாக நீமாறி பெருந்துயர் இளைத்தாயே கடல் அம்மா என்று வாயார வாழ்த்திய மக்களை வசைபாட வைத்தாயே உன் நியாயமற்ற செயலால் நடுத்தெருவில் எத்தனை பேர் நாதியற்று தனிமரமாய் சிறியோரும் பெரியோரும் சின்ன பச்சிளம் சிறாரும் சிதறி எத்தனை பேர் போனவர்கள் வருவார்கள் என பொய்த்த வரவுக்காய் வழியை வழிபார்த்தபடி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட ஆழாத் துயருடன் இன்றும் எத்தனை உள்ளங்கள் நன்றி : முகநூல்
-
- 2 replies
- 726 views
-
-
வேண்டாம் அம்மா வேண்டாம் !!! ஆண்டுகள் எட்டு ஆகித்தான் போனபோதும் ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம் ஆழிப் பேரலை கொண்டு வந்து - எம் அன்புச் சொந்தங்களைகடல் காவு கொண்டு ஆண்டுகள் எட்டு ஆகித்தான் போனபோதும் ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம் பட்ட காலிலே படும் என்பது பழமொழி – அது பலதரம் ஈழத் தமிழர் வாழ்வினில் நிகழ்வதேனோ? மணிக்கொருதரம் மரணித்தோர் தொகை மலைபோல உயர உயர – எம் மனம் பட்ட பாடு யார் அறிவார் இயற்கை அன்னையே ஈழத்தமிழன் மீது உனக்கும் என்னம்மா கோபம் சக்திக்கு மீறிய விலை கொடுத்து விட்டு சற்று சமாதானக் காற்றைச் சுவாசிக்க எத்தணித்த வேளையிலே இரண்டு தசாப்தமாய் எதிரியால் முடியாததை இரண்டு நொடிக்குள் அலை கொண்டு வந்து அள்ளிச் சென்றது ஏனம்மா? பாலகன் யேசு ப…
-
- 11 replies
- 922 views
-
-
ஆக்ரோசமான நீலவானில்... அரைமதி நிலவின் மீதேறி... அலைக்கழிந்த பயணம்! நிலமிழந்த நிலையில்... புலம்பெயரும் விலையில்... யாரோ தலைமையில்... போவோர் கவலையில்... ஏதேதோ தேவைகள்! சில கால முன்னெடுப்பில்... பல தடவை பின்னெடுப்பு! மனதில் அணையா அடுப்பாய்... நடுக்கடலில் அசையும் துடுப்பு! மலை அலை தாவி... நீர்த் திவலைகள் மேவி... புயல் மழை தூவ... கரு முகில்களுக்குள் நிலவு மெல்ல மெல்ல அமிழ்ந்து போகும்! பசியோடு தாகத்தோடும் பழகிய தொண்டைக்குழிகள் களைத்துப் போகும்! வந்தோர் கண்ணீர் உப்புநீரில் கலக்க, மீன் தின்றது போக... மீதி மிதந்து சில நாளில் கரையொதுங்கும்!
-
- 2 replies
- 691 views
-