கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
[size=5]ஆணிவேரை வாந்தியெடுத்த அகண்ட மரங்கள்... [/size] அபகரிக்கப்பட்ட சிட்டுக்குருவியின் பூமியில் குருதி வார்த்துக் குருதி வார்த்து வளர்க்கப்பட்ட பெருமரங்களின் அகண்ட நீழலின்கீழ் கழுத்தில் ரை சுருக்கிக்கட்டியபடி ஞானசம்பத்தக் கூத்தாடிய கவிஞர்களெல்லாம் காணாமற் போயிருந்தனர் கொஞ்சக் காலமாய் கல்லெறி விழுந்து கலைந்தோடிய இலையான்கள்போல் இவர்களன்றோடிய நாட்கள் நினைவிருக்கிறது நன்றாயின்னமும் சிட்டுக் குருவிக்கு. மேற்குத் திசையில் வெடிச்சத்தம் கேட்ட மேதினத் தோர்நாள் தான் அது. சஞ்சீவி இலைகளில் தோரணங்கட்டி அகண்ட மர நிழலில் கடை பரப்பி கதை கவிதை ஒப்புவித்த காலங்கள் போட்டது போட்டபடி கிடக்க, தலைதெறிக்க ஓடிப்போய் வலுத்தவர் வாலில் நூல…
-
- 0 replies
- 594 views
-
-
தம்பி ராஜாவும்... அண்ணன் டவாலியும்..! எதை பற்றி பேச வேண்டும் அதற்கெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள் வியாபாரம் என்ன என்று சொல்லுங்கள் இடம் வாங்க வேண்டுமா அதற்கும் எங்களிடம் நபர்கள் இருக்கிறார்கள் அணைத்து வியாபாரமும் இணைய தளம் மூலம் வைத்துக் கொள்வோம் கவிதை எழுத்து பதிவுகள் பிண்ணூட்டங்கள் இவை அனைத்தையும் எரித்து விடுவோம் அல்லது எறிந்து விடுவோம் பத்தாயிரம் அல்ல சில பத்தும்... பத்தும் போதுமானவை..? கியாரண்டி கொடுக்கப்பட்டு விட்டன..! மரணம் நிகழ்கிறது கொண்டு போய் எறிப்பீர்களா மண்ணுக்குள் செம்முவீர்களா..? ஆனாலும் ஏதோ ஒன்று மீன் முள் குத்தியதைப் போல நல்ல விருந்து உண்டு வாந்தி எடுத்ததைப் போல …
-
- 2 replies
- 700 views
-
-
[size=4]வெற்றிடமொன்றில் நிரம்பிக்கொண்டிருந்த நினைவுகளின் வெதும்பல்கள் விளிம்பு நிலையொன்றில் முனகிக்கிடக்கும் பகலின் நிர்வாணத்தின் முன் கூனிக்குறுகிக்கிடக்கும் அவை இரவுப்போர்வைகளில் கூர்ப்படைந்து அதீதமான பிரவாகத்துடன் [/size] ஓரங்களை தின்னத்தொடங்கும். [size=4]இரைமுகரும் எலியொன்றின் அச்சம் கலந்த கரியகண்களை, இரையாகும் தவளையொன்றின் ஈன அவல ஒலிகளை உள்ளெழுப்பி உணர்வுகளை சிதைக்கும். தகனமொன்றின் நாற்றங்களை பின்னான எச்சங்களை அருகிருக்கும் இலைகளில் படிந்திருக்கும் புகைகுறியீடுகளை விலகாதிருக்கும் மெல்லிய வெம்மையினை பரப்பி சூனிய தனிமையினை பிறப்பிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உருவேற்றும் அந்த துர்தேவதைகளின் கொலுசொலிகள் …
-
- 5 replies
- 751 views
-
-
தீவினில் ஒரு தீபம் அது வீர தீபம் உடல்தனை உருக்கி உயிரினை அளித்து மூட்டிய தீபம் கார்த்திகை மாதம் மலர்ந்திடும் மலரும் காட்டினில் சிறுத்தையும் வளவினில் செம்பகமும் வீதியில் வாகையும் வணங்கிடும் தீபம் அது வீர தீபம் மக்களின் மனங்களில் மலர்ந்திடும் நினைவுகள் சொரிந்திடும் விழினீரில் உருகியே தாழ்ந்திடும் தீபம் அது வீர தீபம் விடியலின் ஒளிதேட இருளோடு கலந்திட்ட தமிழீழ மைந்தரவர் ஏற்றிய தீபம் அது வீர தீபம் காற்றோடு சாயினும் மழையோடு மாழினும் தமிழீழ மண்ணிலது அணையாத தீபம் அது வீர தீபம் வேங்கைகள் உயிரது வேள்வியில் கலந்திட்ட வேளையில் பிறந்திட்ட மாவீர தீபம் அது வீர தீபம் அழியாத நினைவோடு நெஞ்சினில் வாழ்ந்திடும்…
-
- 4 replies
- 1.5k views
-
-
நாண் மற்றும் யாழ் ஒரு வயர் கம்பியா நம்மை பிரித்தெடுப்பது..! எப்படி பார்த்தாலும் யார் அவர்கள் நானும் யார்..? தந்தையை கேள்வி கேட்கும் மகனும் அம்மாவை கணைகளால் துளைத்தெடுக்கும் மகளும் ஆயிரம் பதிவுகள் போடுங்கள் நீங்களும் எங்கள் குடும்பம் என்று யார் சொல்ல முடியும்.? மெய் சிலிர்க்க வைக்கிறது எந்த பின்னூட்டங்களும் மூன்றாம் தரமாக இல்லை... நானும் ஒருவேளை உங்கள் குடும்பத்தில் இணைந்து விடுவேனோ.. என்ற அச்சத்தில் மீள்சிறகு
-
- 3 replies
- 778 views
-
-
விட்டம் வெறித்து மருத்துவர் கையில் இருக்கையில்.. பத்து வயதில் தாமிரபரணியில் பக்கத்து வீட்டு குமரேசனது போலிருந்த ஞாபகம்.. பதிமூன்றில் கண்ணாடி முன் அறியாத மனதில் லேசாய் வந்த கலவரம் ஞாபகம்.. பதினைந்து வயதில் பெருமூச்சோடு காகிதம் அடைத்தது இன்னும் ஞாபகம்.. இருபதில் ஊர்முன்னே நிமிர்ந்து நடக்க செருக்கு தந்த ஞாபகம்.. இருபத்தேழில் காதல் பொழுதில் கணவர் கண்பட்டு வெட்கமின்னும் ஞாபகம்.. முப்பதில் செல்ல மகள் பசி தீர்த்த திருப்தியும் ஞாபகம்.. நாப்பது வயதில் தட்டுப்பட்ட சிறு கட்டி தந்த கேள்விக்குறிகள் ஞாபகம்.. எல்லாம் கடந்து எனை அழித்து அவ…
-
- 17 replies
- 1.5k views
-
-
[size=5]மழைச்சத்தம் [/size] [size=5]தர்மினி[/size] முன்னொரு காலம் மழை சத்தமிடுவதைக் கேட்டேன். ஓலைக் குடிசையொன்று மூடக்கதவில்லை சன்னல்களற்றுச் சுற்றிவரச் செத்தைகள் அதிலே குறைச்சுருட்டு, பாதிப்புழுக்கொடியல், பற்பொடிப்பைக்கற் சொருகிக்கிடப்பன. சாரைப்பாம்பும் சரசரக்கும். ஓலைக் கூரையில் மழைக்குதியோசை. நடுக்கூரை மழையொழுக டப்…தொப்…டப்…தொப் சட்டியிலும் சத்தம் . தாழ்வாரம் குந்திக் கை நனைக்க முற்றத்தில் குமிழ்கள் ஓடி வெடிக்கும் என் முகத்திலடிக்கும் சாரல். மழைச்சத்தம் காதுகளில் குளிர்ந்து இறங்கி கிணறு தழும்ப நெல்லி முறிந்து முருங்கை சரியும் மாம்பிஞ்சுகள் உதிர்ந்து பரவ பள்ளத்து வெள்ளங்களில் தவளைகள் கத்தும் சற்று நேரத்தில…
-
- 3 replies
- 621 views
-
-
யாழ் மொழி பேசும் களவாணிகள் பல்கி பெருத்து விட்டனர் ஏதாவது ஒரு நொண்டிக் சாக்கு ஒரு சொல் போதும் கிளர்ந்து எழும் அடிமைகள் பதிவுகள் மற்றும் எழுத்துக்கள் இவை மற்றுமே முடிவுகள் என்று கருத முடியுமா என்ன.? பத்தாயிரம் பதிவுகள் போட்டால் நீ பெரியவன் சில பத்து பதிவுகள் போட்டால் நீ பிச்சைக்காரன் என்னங்கடா உங்கள் சைட்டு..? இணைய தளத்தின் அராஜகம்.. பிறகு எங்கு வினவுவது..? மனித மாண்புகளை.. சங்கிலிக்கருப்பு
-
- 12 replies
- 914 views
-
-
[size=4]நீ பேசும் பேச்சு,நான் வாங்கும் மூச்சு.. நீ கொடுத்த முத்தம்,என் இதயத்தில் ரத்தம்.. உயிரில்லாத என் உடலுக்கு,உயிர் கொடுத்தவள் நீ.. துடிக்காத என் இதயத் துடிப்பை,துடிக்க வைத்தவள் நீ.. என் உயிரை நீ அழிக்கலாம், உன் மீது கொண்ட காதலை ஜென்மத்திற்கும் அழிக்க முடியாது...[/size]
-
- 3 replies
- 608 views
-
-
இசை ஞானி காலத்தை வென்றவர்..! தயை கூர்ந்து இசை ஞானி அவர்களை ஈழ விசயத்தில் இழுக்காதீர்கள்..? அவர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல..! அவர் ஒன்றும் திராவிட/ ஆதி திராவிட அரசியலுக்கு மாற்று அல்ல..! அவரை ஏன் இழுக்க வேண்டும்..? ஈழ அரசியலில்..! கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு இவர் எப்படியும் பொறுப்பாளர் என்ற அவசியப் பொருள் முத்திரை ஏன்..? தடுமாற்றம் கொள்கிறார்களோ..? காலம் பெருவெளி சூனியம் அந்திவெளி வண்ணங்களில் தோன்றும் ராக ஓசைகள் இவை மிஞ்சியவை அல்ல அனைத்தும் என்று தெரியுமா உங்களுக்கு..? பழந் தமிழனின் கொடுந் துயரமோ இசை ஞானி அவர்கள்..? சங்கிலிக்கருப்பு
-
- 3 replies
- 828 views
-
-
அந்தோ பரிதாபம் ..! யப்பான்,சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, தென் கொரியா... இந்த நாடுகள் எல்லாம் என்ன செய்யப் போகின்றனர்..? மூன்றாம் உலகப் போர்..? அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது நண்பரே..? ஆனால் ஒன்று தெரியுமா.. உங்களுக்கு..? உலக பாட்டாளிகளின் முன்னணிப் படை இலங்கை தமிழர்கள் என்று..! உலகப் பாட்டாளிகள் வசம் இழப்பதற்கு ஏதுமில்லை.. ஆனால் ஈழத் தமிழர்கள் இழப்பதற்கு உயிரை மிகப் பத்திரமாக வைத்துள்ளார்கள். பாட்டாளிகளை மிஞ்சிய ஈழத் தமிழர்கள் ஒரு கேலிப் பொருளாக மாற்றப்பட்டு விட்டார்களோ..? ஒரு மூன்று ஆண்டு காலமாக சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 705 views
-
-
சவுக்கும் ... குப்பி சாராயமும் காற்றில் சுழன்று சுழன்று வீசியது கிர் கிர் செவிப்பறையில் அறைந்து மறைந்தன பார்வை வழி உள்நுழைந்த அசிரீரி உள்புகுந்து வெளியேறிய வெளி உள் நுழைந்து சிவப்பு நிறம் கொண்ட சவுக்கு குப்பி சாராயம் ஆள் கிணற்றுக்குள் சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 544 views
-
-
அது ஒரு கோடைக் காலம் இரவு நேர கிரிக்கெட் மைதானத்தில் வீசும் ஒளி வெள்ளத்தை மிஞ்சும் கண் கூசும் உப்பளங்களில் அது போன்ற ஒரு பளபளப்பு எங்கெங்கு காணினும் கருப்பு வெண்மையும் கானல் நீரும் அழுக்கு நிறைந்த சிறு சிறு கற்கள் கலங்கிய சிறு சிறு ஓடைகளும் சிறகுகள் கொண்ட மீனவர்கள் புறந்தள்ளி விடுகின்றனர் இந்த கோடை காலத்தை சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 451 views
-
-
[size=5]கதவு[/size] கதவை மூடிக்கொண்டும் திறந்துகொண்டும் இருந்தான் ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்டேன கதவு திறப்பதற்கா? மூடுவதற்கா? என்று அவன் கேட்டான் அவன் மேலும் சொன்னான் கதவுகள் சில நேரம் இமைகளாகத் தெரிகின்றன சில நேரம் பூ விதழ்களாக மலர்கின்றன சில நேரம் உதடுகளாகின்றன பயணம் முடிந்து வீடு திரும்புகிறவனுக்கும் சிறையில் கிடப்பவனுக்கும் கதவு திறப்பது என்பது ஒரே அர்த்தம் உடையதல்ல கதவுகளுக்கும் சிறகுகளுக்கும் ஏதோ இனம் புரியாத சம்பந்தம் இருக்கிறது கதவின் திறப்பிலும் மூடலிலும் கேள்வியும் பதிலும் இருக்கிறது கதவுகளில் சந்திப்பும் இருக்கிறது பிரிவும் இருக்கிறது …
-
- 11 replies
- 1.3k views
-
-
என்ன மாயம் நீ செய்தாய் யாழ்களமே என்ன மாயம் நீ செய்தாய் நீ கட்டிளம் காளையா கன்னிப் பெண்ணா தமிழைத் தாயென்று போற்றுதனால் உனையும் நான் பெண் என்பேன் அழகிய பெண்ணே நீ இத்தனைநாள் என்முன்னே உன் முகம் காட்டாது எங்கே மறைந்திருந்தாய். இரவு பகலென்று ஊனுறக்கம் இல்லாது கன்னியரும் காளையரும் உனைச்சுற்றி நிற்கின்றார் உற்சாகம் தரு மருந்தாய் உன்னை உணர்வதனால் உலகெங்கும் உள்ளோரை ஒன்று கூட்டி ஊர்ப்புதினம் அத்தனையும் உணர்வோடு சொல்லி ஆக்கம் தருவோரை அரவணைத்தும் நிற்கின்றாய் திண்ணையிற் கூடி திகட்டும்வரை நாம் பேச தடையொன்றும் சொல்லாத தாராள மனதோடு தொண்டுதான் செய்கின்றாய் தொடர்ந்தெமக்கு உன்னை அறிந்ததனால் உன்னோடு இருப்பதனால் உலகில் பிறந்திட என…
-
- 21 replies
- 1.4k views
-
-
ஒரு துளி இறுக்கியணைத்த விறைப்பு இறங்க ஓடத்தொடங்கிய ஒரு இலட்சம் வீரியங்கள் விழ விழ எழ முடியாமல் ஒன்று மட்டும் திரும்பி பார்த்து வீழ்வேன் என நினைத்தாயோ? உட்புகுந்தது :lol: :lol: வேறையார் நான்தான். சும்மா ஏதோ தோன்றியது கனக்க யோசிக்க வேண்டாம்
-
- 4 replies
- 676 views
-
-
[size=5]கிரிக்கெட்[/size] நடு ரோட்டில கிரிக்கெட் ஆடினதும் நடுச்சாமத்தில அவுட்டான மாதிரி கனவுகண்டு திடுக்கிட்டு எழும்பினதும் அடிச்ச ஸ்கோரை கொப்பியில எழுதி வச்சதும் வீணாக ரன் அவுட்டானதுக்கு அழுது ஃபீல் பண்ணினதும்... இனிமையான கிரிக்கெட் வாழ்க்கை! இப்பொழுது ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரன்! நன்றி : கவிதையின் கவிதைகள்
-
- 0 replies
- 613 views
-
-
வரலாற்றில் புதையுண்டு போன நிலங்களில் இருந்து மீண்டும் குதிரைகள் வெளிக் கிளம்பும்.. நூற்றாண்டுகளாக சாம்பல் மூடிய வீதிகளில் அந்நிய பாதச் சுவடுகளை மேவி தம் கால்கள் பதிக்கும். இருண்ட கானகங்களில் மழையின் பின் மரங்கள் பொந்துகளுக்குள் பொத்தி வைத்த நீரை வாரி இறைக்க நுதல் வழி வழியும் நீர் படர்ந்து காய்ந்த மண்ணின் துகள்கள் ஒவ்வொன்றும் உயிர்த்து எழும். எம் கடற்கரைகளில் எங்கள் கூழைக்கிடாக்கள் சேர்த்து வைத்திருந்த மீன் குஞ்சுகளின் ஆரவாரங்களில் கடலின் மெளன வெளிகளில் தாண்டு போயிருந்த எம் படகுகள் மீண்டும் எம் கடல்களில் வலம் வரும் கால அசைவியக்க காற்றில் எப்பொழுதும் மரங்கள் காய்ந்து கிடப்பதில்லை எப்போதும் வானம் …
-
- 38 replies
- 3.5k views
-
-
சிந்தனை செய் ஆதியும் கல்வியிற் சிறந்த ஜலஜாவும் வீரத்தில் வல்ல கட்டை சாந்தியும் மஞ்சள் முகமாம் மலர்வதனியும் கோள் செய் வல்ல கோமதியும் ஜப்பான் குண்டு தாரணியும் கண்களாலே மோகன வலை வீசும் மா. கௌரியும் சாந்தமே உருவான ச. சொரூபாவும் புள்ளிமானாய் வெருண்டோடும் கட்ட கௌரியும் நித்திரைக்குயின் ரொனிக் ரேணுகாவும் கொடியிடையாள் நடைபயிலும் ச. வத்சலாவும் மூக்காலே ரெயில்ஓடும் மூக்குச்சளி மீராவும் பூங்குயிலாம் இசைபாடும் பொருக்குவண்டு வத்சலாவும் வெடுக்கென்ற பேச்சால் கொடுக்காய் கொட்டும் கொடுக்கு சாந்தியும் (எனது பள்ளித் தோழிகளை பற்றி ஒன்பதாம் வகுப்பில் எழுதியது) இதில் ஒருத்திக்கு என்னில் சரியான கோபம், கொஞ்ச காலம் என்னுடன் க…
-
- 10 replies
- 888 views
-
-
அடி முடி தேடினாலும் அகராதியை புரட்டினாலும் முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர்ச் சித்திரம். அம்மா!!! 2008ம் ஆண்டு அன்னையர்நாளின் போது தமிழ்க் காற்று வானொலியூடாக ஒலிபரப்பப்பட்டது. 2010 அன்னையர் நாளின்போது லங்காசிறீ இணையத்தளமூடாகப் பிரசுரிக்கப்பட்ட கவிதை. http://inuvaijurmayu...rch/label/கவிதை http://www.poems.lan...567&pidp=202577
-
- 22 replies
- 1.5k views
-
-
நாள்.. நட்சத்திரம் சொல்லி ஒரு கல்யாணம் அடுத்து வந்த ஆண் பெண் உடல் கலவி கூட அடுத்தவன் சொல்லி வைத்த சுப முகூர்த்தத்தில்.. தென்னிந்திய சினிமா பார்த்து வளைகாப்பு அது கூட சுப நேரத்தில்..! "இது அதிஸ்டக் குழந்தை" ஊராரின் வாழ்த்தொலிகளோ கரு முதல் தொட்டில் வரை..! முதல் பிறந்த தினம் வெகு கொண்டாட்டம்.. குடும்பக் "குண்டுமணிக்கு" குதூகலத் திருவிழா..! பட்டென்ன பள பளக்கும் நகையென்ன..! அழகு கொஞ்சும் என் மேனி முத்தமிடா இதழ்களில்லை பதியாத கரங்களில்லை ஜொலிக்கும் நட்சத்திரமாய் அன்று நான்..! அடுத்து வந்த ஆண்டுகளும் அளவில்லா மகிழ்ச்சி தான். பள்ளிப் பருவத்தில் சுட்டிக் குழந்தை புளுகாத ஆசிரியர் இல்லை புகழாத ஊரார் இல்லை.…
-
- 24 replies
- 1.9k views
-
-
[size=5]பனியில் மொழி எழுதி - கவிஞர் சோலைக்கிளி[/size] சோலைக்கிளி இலங்கையின் கிழக்கும் மாகாணத்தின் கல்முனையைச் சேர்ந்த கவிஞர். இவரது இயற்பெயர் உதுமாலெவ்வை முகம்மது அதீக் ஆகும். இவர் 1980களிலே எழுதத் தொடங்கியவர். ஈழத்து கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். பாம்பு நரம்பு மனிதன், காகம் கலைத்த கனவு, பனியில் மொழி எழுதி, எட்டாவது நகரம் போன்றவை இவரின் கவிதை தொகுப்புகளில் சிலவாகும். அந்த வகையில் இம்மாத சுவடுகள் பதியுமொரு பாதையில் கவிஞர் சோலைக்கிளியோடு பயணிப்போம். இதைத்தான் இவன் இவ்வளவு நாட்களாகப் படித்துக் கொண்டிருந்தான் மேசைப் புத்தகத்…
-
- 1 reply
- 850 views
-
-
[size=5]தமிழ்மொழி வாழ்த்து [/size] [size=1][size=5]தான தனத்தன தான தனத்தன [/size] [size=5]தான தந்தா னே [/size] [size=5]வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே! [/size] [size=5]வான மளந்த தனைத்தும் [/size][size=5]அளந்திடும் வண்மொழி வாழிய வே! [/size] [size=5]ஏழ்கடல் வைப்பினுந [/size][size=5]தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே! [/size] [size=5]எங்கள் தமிழ்மொழி! [/size][size=5]எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழிய வே! [/size] [size=5]சூழ்கலி நீங்கத் [/size][size=5]தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையக மே! [/size] [size=5]தொல்லை வினை தரு [/size][size=5]தொல்லையகன்று சுடர்க தமிழ்நாடே! [/size] [size=5]வாழ்க தமிழ்மொழி! வாழ்க [/size][size=5]தமிழ…
-
- 10 replies
- 1.5k views
-
-
ஒரு அழகான காலைப்பொழுது !சூரியன் மலைகளில் பட்டுத் தெறித்ததில் பூமியெங்கும் பரவசம் ! மலை விட்டு இறங்கிய அருவி மெதுவே தரை தட்டி நதியானது. பார்வை பட்ட இடமெல்லாம் திரும்ப மனமின்றி பதிந்து நின்றது. நதி நிலை அருகே தனி வழி நடந்தேன். கண் முன்னே கடவுளின் உலகம் போல் கரும் கல் மலை! நிமிர்ந்து பார்க்கும் போதெல்லாம் அந்த இயற்கை கட்டிய சுவரின் பின்னே இன்னுமோர் உலகமும், மனிதர்களும் இருக்கிறார்கள் என்கிற பிரமை எழுவதை தவிர்க்க முடியவில்லை. உயர்ந்து நின்ற அந்த மலை மௌனத்தின் பரிமானம் எனக்கு உணர் த்தி நின்றது. அடிவாரத்தில் போய் அப்படியே தங்கி விடலாமா, மனம் கேட்டது..! உற்றுப் பார்த்த போதெல்லாம் என்னை வாவென்று அழைக்கிறதோ, என்ணத் தோன்றியது. ' உனக்கும் எனக்கும் அதி…
-
- 10 replies
- 11.3k views
-
-