கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
காண வல்லாயோ ? ------------------------------------------------------ நீ இக்கணத்தில் ஒரு ஆற்றங்கரையிலோ அன்றில் ஒரு கடற்கரையிலோ உலாவிக் கொண்டிருக்கிறாயென நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன். மிருதுவான ஒரு மணற்தரையில் உன் வெறும்பாதங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் நான் உன்னையெண்ணிக் கனவு கண்டுகொண்டிருக்கிறேனென நீ கனவு கண்டவாறே நிர்மலமான ஆகாயத்தையும் அடிவானத்தையும் மோகப் போதையுடன் பார்த்து முறுவலிப்பதாகவும் என் கனவுகள் விரிந்தவண்முள்ளன. நிறமிழந்து பெயர்களையிழந்து வயதிழந்து இருத்தலையும் இழந்து நித்தியமானவளாகவும் முழுமையானவளாகவும் ஆகிவிட்ட என் காதலியே ! காதலிப்போர் அனைவரினதும் காதலில் பதுங்கிக்கிடக்கும் என்னு…
-
- 4 replies
- 1.6k views
-
-
பிறந்தார் மரித்தார் உயிர்த்தார்!! மறுபடியும் பிறந்தார் மரித்தார் உயிர்த்தார்!! எனக்கோ பிறந்தான் காணவில்லை ஐயா..!!
-
- 2 replies
- 712 views
-
-
சப்பாத்தின் விலை ஒன்பது தொண்நூறு விற்பவனிடம் வாதாடிக் களைத்துவிட்டேன் குறையும் இருபது சதத்திற்காய் வாயாற முடியாது இருந்த காலங்களில் எல்லாம் வறுமையின் கோரத்தை போக்க நட்சத்திரங்களை எண்ணியபடி வயிறை நீரால் நிறப்பியதுண்டு இது சற்றே மாறுபட்டது ஆடம்பரம் என்றோ ஆசைஎன்றோ வரையறுத்து விட்டு விட்டால் கால்கள் தேவையற்றதாய் போய்விடும் ஊரென்றால் பறவாயில்லை சப்பாத்துமுள்ளும் சாணிப் பட்டியும் கிரவல் றோட்டும் பழகிப்போன ஒன்று இது சற்று மாறுபட்டது மண்ணில் கால் படுவதே இல்லை மாறிப்பட்டு விட்டால் குளிரின் கோரம் ஊசியாய் குத்த விறைத்த கால்கள் பாறைபோல் ஆகும். இருக்கும் பழசுகளிலும் இடையிடையே ஓட்டை எப்படியும் இந்தமாதம் …
-
- 6 replies
- 890 views
-
-
காதலை தேடினேன் காத்திருப்பு தந்த வலியினால் காணாமல் போனது கற்பனைகள் மட்டுமல்ல மகிழ்ச்சிகளும் தான்... அன்புள்ளங்களை தேடினேன் அத்தனையும் தந்த வலியினால் அறுபட்டு போனது ஆனந்தம் மட்டுமல்ல அரவணைப்புக்களும் தான் அன்பைத் தேடினேன் பாச உறவுகள் தந்த வலியினால் பறந்தே போனது பந்தங்கள் மட்டுமல்ல பாசங்களும் தான் அகிம்சையை தேடினேன் பொறுமை தந்த வலியினால் வற்றிப்போனது பொதுநலம் மட்டுமல்ல மனத நேயங்களும் தான் கனவுகளை தேடினேன் காலம் தந்த வலியினால் காணாமல் போனது நிஐங்கள் மட்டுமல்ல நிழல்களும் தான் :?
-
- 15 replies
- 3.2k views
-
-
தீபச்செல்வனின் கவிதை :- விபூசிகா கடத்தப்பட்டாள்! இன்று வெளியான (13.03.2014) ஆனந்த விகடனில் வெளியான இரண்டு கவிதைகளில் ஒன்று விபூசிகாவைப் பற்றியது. "காணாமல் போன அண்ணன்" என்பது அக் கவிதை. அந்தக் கவிதை இன்று வெளியாகியிருக்கிறது என்று நான் அறியும்போது அந்த விபூசிகாவும் கடத்தப்பட்டிருக்கிறாள் என்று செய்தியையும் அறிகிறேன். குழந்தைகள் காணாமல் போகும் தேசத்தில் என்னதான் இருக்கும்? காணாமல் போன அண்ணன் ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என…
-
- 0 replies
- 910 views
-
-
ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்வில்லை யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும் கொண்டாட்டநாட்கள் வரும்போதும் அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தூங்கி எழும்பும்போதும் பள்ளிக்கூடம்செல்லும்போதும் அண்ணா எப்பொழுது வருவான்? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை வருடங்கள் பல ஓடிய பின்னரும் யாரைப் பார்த்தாலும் எங்காவது அண்ணாவைக் கண்டீர்க…
-
- 3 replies
- 769 views
-
-
காணாமல் போன அண்ணன்! தீபச்செல்வன்… ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்வில்லை யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும் கொண்டாட்டநாட்கள் வரும்போதும் அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தூங்கி எழும்பும்போதும் பள்ளிக்கூடம்செல்லும்போதும் அண்ண…
-
- 0 replies
- 1.1k views
-
-
காணாமல் போனதாகவே முடிவு கட்டிவிட்டார்கள் காணவில்லையென்று விளம்பரமும் கொடுத்து விட்டார்கள் (காணாமல் போக அவனென்ன ஆடா மாடா பாலுசார்) சூழல் சரியில்லையெனக் கொஞ்ச காலம் சும்மா இருந்தான் நிலவரம் மோசமென நிரம்பக் காலம் ஒதுங்கிப் போயிருந்தான் சந்தை இரைச்சல் ஓயட்டுமென்று சம்மதமின்றித்தான் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருந்தான் அதற்காக ஓய்ந்து விட்டானென்று அர்த்தமில்லை சரிந்து விட்டானென்று கருதி விட முடியாது அருகிப் போனாலும் காணமற்போவதில்லை புலிகள். விக்ரமாதித்யன் நம்பி (via fb) ‘குமுதம் - தீராநதி’ 2012 மார்ச்
-
- 0 replies
- 559 views
-
-
கணவன் இந்திய இராணுவத்தால் அல்லது கூட இருந்தவரால் காணாமல் போனவர் தம்பி கடற்தொழிலில் கடற்பீரங்கி சத்ததிற்கு பின் காணாமல் போனவன் மூத்தவன் செம்மனிக்காலத்தில் காணாமல் போனவன் இளையவன் முள்ளிவாய்க்காலுக்குப்பின் சரணடைந்து காணாமல் போனவன் மருமகளும்,பேரக்குஞ்சுகளும் அவுஸ்ரேலியாவிற்கான கடற்பயணத்தில் காணாமல் போனவர் இவள் வானத்தையும் கடலையும் மாறி மாறி பார்க்கிறாள்
-
- 12 replies
- 810 views
-
-
யாரைத் தேடுகிறாய்? நான் யேசுவைத் தேடுகிறேன். எனக்கு நடை பழக்கிய யேசுவைத் தேடுகிறேன். கள்ள முதலாளிகளை சாட்டையால் சவட்டிய அந்த மனிதரைத் தேடுகிறேன். ஏதற்கு? நடுவழியில் என்னை தொலைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார். எனது கையில் துவக்கைத் தந்து தனது மந்தைகளை மேய்ச்சல் தறையில் விடும்படி பணித்து அவர் மட்டும் தலைமறைவாகி விட்டார். இப்போ அவரது சிலுவைகளையும் நானே சுமக்கிறேன். மந்தைகள் என்னவாயிற்று? அவை அந்த மனிதரின் கோத்திரத்தாருக்கு உணவாயிற்று. இப்போ எதற்கு யேசுவைத் தேடுகிறாய்? இந்தச் சிலுவைகளில் இரண்டை அவர் தோளில் சுமத்த. -தமயந்தி http://www.piraththiyaal.com/
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 34 replies
- 2.7k views
-
-
பூவனமே பொன்மலரே மறந்தாயா என்னை? புருவமதில் என் உருவமதில் இருக்கின்றாய் பெண்ணே! சிறு கவியாய் பெரும் கனவாய் சிதைக்கின்றாய் என்னை -போ வழி விடவா வரம் தரவா? வாடுதடி நெஞ்சு! காதலனாய் உன் கால் கொலுசாய் இருந்தேனே ஒரு பொழுது காலமெலாம் போனதடி என் கண்களை இனி சுட்டு தள்ளு! இருப்பேன் டா உனக்காய் இருப்பேன் டா என்றாயப்பொழுது இருக்கேன்மா இருக்கேன்மா நீதான் எங்கே இப்பொழுது? சிறுமலரே -பனிமழையே செண்பகமே - நான் பாவமா இல்லையா சொல்லு? உன் பார்வையதால் இந்த பாவியெனை- அன்று ஏன் கொன்றாய் சொல்லு! கேளடியோ-மயிலழகே என் வாசலதை மண்மூடி போனாச்சு -ஏனடியோ வண்ண கோலம் இனி அது எதுக்கு சொல்லு! :wink:
-
- 19 replies
- 3.2k views
-
-
இயற்கையை நீயும் கவி ஆக்கினாய் வாழ்க்கையை நீயும் இன்பமாக மாற்றீனாய் வழியில் வந்த காதலன் அவன் ஏன் இடையில் நின்று விட்டான் உன்கண்களைப் பார்தும் அவன் இரங்கவில்லையா உன் இதயத் துடிப்பு அவனுக்கு ஏன் கேட்கவில்லையா அவன் இதயத்தை இரும்பாக்க எப்படி முடிந்தது உன்னுடய மெளனம்தான் அவனை வாட்டவில்லையா நீ பேசும் மொழி அவன்காதில் கேட்கவில்லையா காதிருந்தும் செவிடனாக ஏன் இருக்கிறான் அவனும் இங்கே
-
- 7 replies
- 1.8k views
-
-
உன்னைக் கவிபாட எனக்கு வெக்கமடா உன்னைப்போல அழகன் யாரும் இல்லையடா கருமை நிற சுருள் முடியழகா உனக்கு நான் தான் பேரழகா அகன்ற தோழ்கள் வீர மார்பழகா அதில் என் முகத்தைப் புதைத்தேன் அது நாணமடா சிங்கம் போன்ற வீர நடையழகா உன் கருணையின் கண்கள் தானழகா என் கண்களின் ஒளி விம்பம் நீதானடா அன்புக்கு நீயும் என் தந்தையடா அரவணைப்பில் நீயும் என் தாய்தானடா உன்னைப்போல என்னைக் கவர்ந்தவர் இல்லையடா மொத்ததில் நீயும் என் இதயமடா
-
- 15 replies
- 1.9k views
-
-
கல்லரை முன் கண்ணீர் சிந்தி கண்துடைக்க என்னை எழுப்பிவிடாதே உன் கருவறையில் ஜனனிக்க வேண்டும் நான்! ......................... உன் உள்ளங்கையில் குடியேற ஆசைப்பட்டு முற்றத்தில் சொட்டியது அந்திமழை ....................... உதிர்ந்தது பூ வலியில் துடித்தாய் நீ! .................... சொட்டுச்சொட்டாக உள் இறங்கி உரைந்துப் பனிச்சிலையானது! மனசெல்லாம் நீ! ...................... தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடி நான் பூக்களை பரித்துவிட்டால் உன் பாதி உயிர் கரையுதடி நீ என்ன முரண்களின் மகளா! .................. என் உதடு யாத்திரீகன்கள் உன் …
-
- 0 replies
- 10.7k views
-
-
இது எதோ ஒரு காதலர் தினத்தில் எழுதிய கவிதை .... பெண்ணென்று பிறந்து கண் முன்னே அங்கம் அங்காங்கே காட்டி நடந்து கொல்லாமல் கொல்கின்றார் அம்மா கொழும்பில் எம் குலத் தமிழ்க் கிளிகள்! பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் என்று பறந்து கொட்டும் பனியில் கொட்டாவி விடக்கூட மறந்து அண்ணனுடன் அப்பா சேர்த்து அனுப்பும் பணம் கையில்லாச் சட்டை வாங்கவும் அங்கம் கொப்பளிக்கும் ஆடை வாங்கவும் உதட்டுக்குச் சாயம் அடிக்கவும் இன்னும் பலப்... பல... செய்யவும் வீணாகக் கரைகின்றது. இந்த 'மேக்கப்' பின் பின்னால் உள்ள உண்மை உருவம் அறியாது நீண்ட 'கியூ' வில் நிற்கின்றாரம்மா பாவம் எம் இளைஞர்! சி…
-
- 18 replies
- 2.5k views
-
-
காதலர் தினமும் காதலர் மனமும் அன்புள்ள காதலன் கி.பி 270 ல் ல் த கா....! தொடக்கி வைத்தான்! அன்புள்ள காதலிக்கு அன்பு நிறைத்து அனுப்பி வைத்தான் காதல் கடிதம்! அன்று தொடங்கி இன்று வரை தினம் தினம் எழுதிக் கொணடே இருக்கின்றான் மனிதன்! அறிவுக் கண்ணால் அவள் பார்த்தாள் அன்புக் கண்ணில் அவன் வீழ்ந்தான்! வலன்டைன் வாழ்க !! ஐPலியா வாழ்க வாழ்க!! காதல் வழிந்து கசியக் கசிய... கண்கள் அழகு பெண்கள் அழகு இரு விழிகள் இதயத்தில் எழுதும் இனிய வரிகள் காதல்! இதயத் தோட்டத்தில் இளமை ஊஞ்சலாடும் புதுமை வலிகள் காதல்! காலை முதல் மாலை வரை கவிதை தின்றால் காதல் வளரும் காதல் வளர்ந்தால் கவிதை இனிக்கும் உன்ன…
-
- 5 replies
- 1.3k views
-
-
காதலர்க்கு ஓர் தினம் காதலோ தினந்தினம் கனிவான செந்தமிழால் காதலர் தினந்தன்னை கவியாலே கனிய வைக்க களமமைத்துத் தந்த மொழிமேலே பற்றுவைத்து மின்னிணைய வசமாக்கி அழியாத செந்தமிழை அனைத்துலகம் அறிவதற்கு யாழிணையப் பெயர் தாங்கி மிளிர வைத்த எம்முறவே காதலர்க்கு ஓர் தினம் காதலோ தினமென்று விதவிதமாய் கவிதொடுப்போர் வரிசையிலே நானுமிங்கே மின்னிணைய தொடர்பாலே மனத்தெழுந்த பாமாலை கன்னித்தமிழ் கொண்டு சாற்றுகிறேன் காணீரோ! ஆணினமும் பெண்ணினமும் அன்பாலே அருகிணைந்து பேணிநிற்கும் புதுவுறவே காதலின் பிறப்பாகி கண்களைத் தூதுவிட்டு துணையின்பக் கூடமைத்து திண்மை நிலையினராய் உயர்புலத்து வாழ்வமைத்து ஏமக் கிழத்தியவள் மென்மையுறு இதயத்தில் தூமலரின் பண்பாகி ஞ…
-
- 5 replies
- 1.4k views
-
-
அனைவருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் ஒரு கவியரங்கம் செய்யலாம் என்று நினைத்து இந்தக்கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன். நீங்கள் எழுதிய உங்கள் புதிய, பழைய காதல் கவிதைகளை இங்கே இணையுங்கள். உடனடியாக கவிதை எழுதும் நிலமையில் இருப்பவர்கள் உங்கள் கவிதைகளையும் எழுதி இங்கு இணைத்துவிடுங்கள்.. நான் முன்பு சிலகாலம் முன்னம் எழுதிய கவிதை மாதிரி ஒன்றை இணைத்து கவியரங்கை ஆரம்பித்து வைக்கின்றேன். இதுவும் கவிதையோ எண்டு எல்லாம் கேட்கக்கூடாது. ஏதோ எங்களால முடியுமானதை தானே நாங்கள் செய்யலாம். தொடந்து புதிதாக ஏதும் எழுதக்கூடியதாக இருந்தால் அவற்றையும் இங்கு இணைக்கின்றேன். உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்!
-
- 22 replies
- 4.2k views
-
-
என்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் எனக்கு காதலர் தினம்... உன் கண்கள் காணும் காலை நேரம் எனக்கு காதலர் தினம்... உன் இதயத்திற்கள் நானிருக்கும் இனிய நிமடpமெல்லாம் எனக்கு காதலர் தினம்... உன் இடது பக்த்தில் என் இதயததையு; எனத இடது பக்கத்தில் உனது இதயத்தையும்... நாம் தாங்கும் நாளெல்லாம் எமக்கு காதலர் தினம்.. அப்பாடா ரெம்ப தேடுதல் வேட்டையில் சிக்கியது கலைஞனின் வேண்டுதலுக்காக இங்கே சுட்டு ஒட்டுகிறேன்.. சத்தியமா எனதல்ல.. சுட்டது...இங்கே http://kaathdal.tripod.com/
-
- 1 reply
- 923 views
-
-
-
- 89 replies
- 12.6k views
-
-
நம் வாய்ச் சண்டைகளை எல்லாம் முடித்து வைக்கிறது நம் இதழ்கள் ஒன்று சேர்ந்து * பலர் என் மேல் படர்ந்தபோதும் என்னுள் முளைத்தது நீ மட்டும்தான் * நீ நடுங்கி நடுங்கி தந்த உன் முதல் முத்தத்தை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை நிலா நடுக்கத்தில் பயந்து பயந்து வாங்கியதால் * நீ பூச் சூடி பொட்டு வைக்கும்போது முடித்து வைக்கிறேன் உனக்கான என் அன்றைய கவிதையை * அடிக்கடி நீ காணாமல் போகும் தருணங்களில்தான் உணர்கிறேன் நீ தேவதை என்பதை -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.1k views
-
-
தேடித்தான் உன்னை கண்டு பிடித்தேன் இருந்தும் இன்னும் தேடுகிறேன் உனக்குள் என் காதலை நான் பேசிக்கொண்டே இருக்க உன் கண்களிடம் கற்றுகொள்ள வேண்டும் நான் பேசாமல் இருக்க உன்னிடம் கற்றுகொள்ள வேண்டும் நீ காட்டும் யார் என்றாலும் சண்டை பிடிக்க தயார் உன் கண்களை காட்டத வரை உன்னை சிரிக்கவைத்து பாக்க ஆசைதான் இன்னும் முழுசாய் பாக்க விட்டதில்லை உன் கன்னக்குழி ஐந்து என்று எழுத தெரியாது அஞ்சு என்று எழுதத்தான் தெரியும் எழுத்து பிழைவிடும் கவிஞன் நான் நீ கிடைக்கத்தான் கவிதை எழுதுகிறேன் இருந்தும் காட்டமல் மறைக்கிறேன் கிடைக்காமல் போய்விடுவாயோ என்று உன்னை ஒருதலையாக காதலிப்பது முட்டாள்தனமாக இருந்தாலும் உன்னைக் காதலிக்கிறேன் என்பதே …
-
- 4 replies
- 1.5k views
-
-
நீ எழுதும் கவிதை அழகுதான் அதற்காக யார் கண்ணையும் நம்பி என்னைக் கைவிட்டுவிடாதே * நீ இல்லாத தருணங்களில் வாடிப்போகும் எனக்காக நீ கொடுத்த பூச்செடிதான் என்னை மலரவைத்துக் கொண்டிருக்கிறது * எதுவும் கேக்காமலே என் மடியில் நீ உறங்கியபோதுதான் தெரிந்தது உன் அன்பின் ஏக்கம் அதற்காக உன் குழந்தைதனத்தை கையிலுமா வைத்திருப்பாய் என்னை பிடித்தவாறே உறங்குகிறாய் * எவ்வளவு அவசரமாய் வாசல் கடக்கையிலும் உன்னை ஞாபகப்படித்தி விடுகிறது முதல் முதல் சந்திப்பில் நான் வரும்வரை நீ சாய்ந்து நின்ற வீதிச்சுவர் * நீ பிரியும்போது கவனமாய் இரு என்று சொன்னதற்கு பதிலாய் உன்…
-
- 4 replies
- 1.3k views
-
-
உன்னை எழுதுவதைவிட உன்னை வாசிப்பதில்தான் அதிக ஆர்வம் எனக்கு * உனக்காய் கவி எழுத கற்பனைக் குதிரையை தட்டிவிட்டேன் அது உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு தூங்கிவிட்டது * என் கண்கள் காட்டிக் கொடுத்ததில் துரோகமில்லாத ஒன்று என்றால் அது உன்னைக் காட்டிக் கொடுத்தது மட்டும்தான் * நீ குளிக்கையில் தண்ணீரோடு நானும் குளிக்கிறேன் * உன்னைக் கவிதையாய் வெளியிட விரும்பி இன்றுவரை உன் கண்களை பற்றித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 936 views
-