கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
என் தோளில் சாய்ந்து சிரிப்பாள், என் நெஞ்சில் முகம் புதைத்து அழுவாள், பலமுறை அவளைச் சுமந்திருக்கிறேன்! அப்பொழுதெல்லாம் சுமையாகத் தெரியாதாவள்... இப்பொழுது தன் நினைவுகளாலேயே பாரமாக்குகிறாள்! கனத்துத் தொங்கும் என் இதயம்... அறுந்துவிழத் துடிக்கிறது...! என் இதயத் துடிப்புகளின் கடைசி ஏக்கங்கள்கூட... அவளுக்குத் தெரியாமலே அடங்கிப் போகலாம்! ஊசலாடிக்கொண்டிருக்கும் என்னுயிரின் வலிகள், ஊஞ்சலாடி மகிழும் அந்த தேவதைக்கு... தெரியாமலேயே போகட்டும்! ஆடி முடிந்து வரும்போது... எல்லாமே அடங்கிப் போயிருக்கும்! பல காதல்களின் சரித்திரங்களைப் போலவே... என் காதலின் ஆத்மாவும்... கல்லறைக்குள்ளேயே முடங்கட்டும்!
-
- 4 replies
- 664 views
-
-
ஆண்டில நாளு 365 அதில நாங்க வைக்கிற பார்ட்டி 265 அதில "பாட்டிகளுக்கு".. "பார்டிகளுக்கு" வைக்கிற பார்ட்டி 165 அதில பேர்த்டே பார்ட்டி 125 அதில வெல்கம் பார்ட்டி 85 அதில உடான்சு பார்ட்டி 65 அதில வெடிங் பார்ட்டி 55 அதில சாமத்தியவீட்டுப் பார்ட்டி 35 அதில எக்ஸாம் பார்ட்டி 25 அதில ரிஸல்ட் டே பார்ட்டி 15 அப்புறம்.. கிரயுவேஷன் பார்ட்டி ஒரு மூணு.. அவவுக்கு மூட் அவுட்டானா அதுக்கும் ஒரு பார்ட்டி.. அட அழுகிற குழந்தையை அரவணைக்க அதுக்கும் ஒரு நாலு பார்ட்டி - அப்படியே ஆண்டு முழுக்க பார்ட்டி அதில கோலில வைக்கிற பார்ட்டி முக்கால்வாசி அருகில கோயில்ல வைக்கிற பார்ட்டி அரைவாசி அப்புறம் வீட்டில வைக்கிற பார்ட்டி கால்வாசி.. அங்கின ரெஸ்ரோரண்டு வழிய வைக்கிற பார்ட்டி அரைக்கால்வாசி…
-
- 8 replies
- 881 views
-
-
கை தவறிக் கீழே விழுந்த கடலை எல்லாம் சாமிக்கு. துறட்டிக்கு எட்டாமல் தூரப்போன முற்றல் முருங்கைக் காயெல்லாம் கிளிகளுக்கு. கறவைகளுக்குச் சுருக்காமல் காம்பில் எக்கின பால் எல்லாம் கன்றுக்கு. திருவினை ஆகாத முயற்சித் திராட்சை எல்லாம் பந்தலுக்கு. எட்டுவது....கிட்டுவது எல்லாம் எனக்கு. முடியாதது....படியாதது முழுவதும்... உனக்கே உனக்கு. ******************************************************* தண்ணீர்த் தொட்டியில் செத்துக் கிடந்த காக்கைக் குஞ்சுகளுக்கு மனதார வருத்தப் பட்டாயிற்று. வாசலில் நிற்கும் வயசாளிக்கு ..... "ஒன்றுமில்லை" என்று அனுப்பிவிடலாம். இன்றைக்கு ..... என்னால் முடிந்தது இவ்வளவே. **********************************…
-
- 0 replies
- 14.5k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்… தாயகக்கவிஞர் அ.ஈழம் சேகுவேராஃவிளம்பி "(வேட்டை நாய்களின் குரூரம்) அவர்கள் எங்கள் நிலங்களைத்தின்றுகொண்டே இருந்தார்கள்." 1. பசி (வேட்டை நாய்களின் குரூரம்) அவர்கள் எங்கள் நிலங்களைத்தின்றுகொண்டே இருந்தார்கள். நாம் உருண்ட முற்றத்தை உழுது புரட்டினார்கள். அங்கே எங்கள் வானத்தையும் அல்லவா உடைத்துப்போட்டார்கள். புலவுகளும் பொழுதுகளும் கலவரமாயிற்று. எப்படி மனசு வரும்? அவ்வளவு இலகுவில் சொந்தம் விட்டுப்போக. குட்டி ஈன்ற பூனையாக மனசு அந்த மண்ணையே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. லாந்தர் வெளிச்சத்திலும் பொருள் நகர்த்தினோம். பயணப்பட்ட…
-
- 3 replies
- 774 views
-
-
போய் வருக கண்ணீரோடு பிரார்த்திக்கிறோம். நீயில்லாது போய் இன்று இரண்டு ஆண்டுகள் முடிந்து போகிறது. எல்லாமுமாய் நீ வாழ்ந்த எங்கள் தேசத்திலொரு நினைவுக்கல் நாட்டியுன்னை நினைவு கூரவோ நெஞ்சழுத்தும் துயர் கரைய ஊர்கூடி அழுது துயர் போக்கவோ யாதுமற்றுப் போன விதியை மட்டுமே நொந்து சாகும் விதி பெற்றோம். பிரகாசமாய் ஒரு பெயரும் எழிலாயொரு பெயரும் உனக்காய் அடையாளம் தரும் பெயர்கள் ஆயிரம் கதைகளும் அழியாத நினைவுகளும்....! அப்பா ஐரோப்பாவில் இருப்பதாய் நம்பும் உனது குழந்தைகள் அப்பாவைத் தங்களிடம் அனுப்புமாறு கேட்கிறார்கள். அயல் வீட்டுப் பிள்ளைகள் விளையாடும் செல்பேசியொன்றும் விளையாட்டுக்களும் அப்பாவை அனுப்பச் சொல்லுமாறு கட்டளையிடுகின்றனர்.…
-
- 4 replies
- 1.5k views
-
-
காலம் கரைந்ததோடுகின்றது இன்னமும் வாழ்க்கை தடுமாறுகின்றது நாலுபேர் தூக்கிச் செல்லும் பாடையும் தள்ளாடியே சுடுகாடு செல்லும் இருந்தும் ஆட்கள் இல்லா ஊர்களில் அழுகிய பிணங்களாக நிறைய நேற்றய மனிதர்கள் இருந்தார்கள் மயானத்தை அடைய முடியாத ஆயிரமாயிரம் சவங்கள் குறித்து பின்னொரு நாளிலும் யாரும் ஒப்பாரி வைப்பதில்லை எட்டுச்செலவும் அந்திரட்டியும் அறியாத பாவப்பட்ட பிரேதங்களுக்கு படையல் செய்ய தப்பிய தாய்களும் எஞ்சிய பிள்ளைகளுக்காகவும் ஒரு நாளைக் கூட காலம் தரவில்லை இன்னும் பல நுறு கோயில்களும் சாமிகளும் படையல் இன்றி பட்டிணியாகத்தான் கிடக்கின்றது பொங்கிப் படைக்கவும் அல்லது மூன்று பழத்தை வெத்திலையில் வைக்கவும் ஊர் திரும்பும் எசமானர்கள் வருகைக்காக …
-
- 0 replies
- 663 views
-
-
அரசனின் நகரம் மாளிகை மற்றும் கடற்கரை தீபச்செல்வன் ____________________ அரசனின் நகரம் இரவு முழுவதும் சிரித்துக்கொண்டிருக்கிறது. நண்பனே, உரையாடலின் பின்னர் கடற்கரையில் வெகு நேரமாய் காத்திருந்தேன். அங்கிருந்து அகற்றப்பட்டு தங்கியிருந்த வாடி வீட்டிற்கு முன்னால் கடற்கரையுடன் முடிந்தவற்றை உனக்கு சொல்லியனுப்பிக்கொண்டிருக்கிறேன். நான் இனி என்ன செய்வது என்பதை உன்னால் கூற முடியுமா? கடற்கரை எதையோ செல்லிக்கொண்டிருக்கிறது. அதிகாரத்தின் பெருஞ்சிரிப்பு கடலை கடந்து எல்லாத் திசைகளுக்கும் சென்று கொண்டிருக்கிறது. கடல் மகிழ்ச்சியடையவில்லை. அது எல்லாப் பக்கங்களுக்கும் அலையை தள்ளி எதையோ பேசிக்கொண்டிருந்தது. விண்ணப்பங்கள் நிரம்பிய எல்லாக் கடிதங்…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஞாபகங்களுடன் இன்றும்.... மீண்டும் சந்திப்பதாய் ஒரு மாலைநேர ஈரக்காற்றின் உவர்ப்போடு அழுததாய் ஞாபகம். தாஜ்மகால் பற்றியும் தலைசிறந்த காதல் இலக்கியம் தந்த ஜிப்ரான் பற்றியும் நிறையவே பகிர்தல்கள். ஒரு தாஜ்மகால் ஒரு முறிந்த சிறகு எங்களுக்காயும் எழுதப்படுமெனும் எண்ணமேயில்லை கௌரவப் பிரிதலாய் அது நீண்டதொரு தசாப்தம் நிறைவாகிறது. என்றாவது நினைவு வரும் சிறுவயது ஞாபகம் போல் எப்போதாவது வந்துபோகும் ஞாபகங்களுடன் இன்றும்.... காதலென்ற சொல்லுக்காய் செய்து கொண்ட சத்தியங்கள் நினைவு இடுக்குகளிலிருந்து கழன்று விழுகிறது. சத்தியம் ää சபதம் சாத்தியமில்லாக் கனவுகள் எல்லா மனசிலும் காதலின் வலி உணர்வாயும் நினைவாயும் நிசம் உணர …
-
- 5 replies
- 1.8k views
-
-
தமிழன் !! ஒருவன் உழைப்பில் ஒன்பது பேர் உண்பான் தள்ளாடி அவர் விழும்வரை தந்தை உழைப்பில் வாழ்வான்! காதோரம் நரைமுடி தெரிகையில்தான் வேலை செய்ய நினைப்பான் ! காதலித்த பெண்ணை கூட கைபிடிக்க சீதனம் கேட்பான்! வெற்றிலை கடை யாரும் யாரும் திறந்தால் - தானும் அதையே செய்வான் - ! பாக்கு விற்க நினைக்கான் - ! செய்தால் இருவருக்கும் நன்மை .. என்று எண்ணான் - அவன் அழிந்தால் மட்டும் போதுமென்றே அசிங்கமாய் ஒரு சிந்தனை கொள்வான்! வீதி போட குவித்த - கல்லை அள்ளி தன் வீட்டுக்கு -வெள்ளம் வராமல் செய்வான் ! பள்ளம் வருமே - விழுவானே யாரும் என்றால் ....... எவனாவது செத்து போகட்டும் எனக்கென்ன என்பான்! பச்சை குழந்த…
-
- 10 replies
- 1.7k views
-
-
-
- 16 replies
- 2.9k views
-
-
மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கைகளோடு…… ஈரம் காயாத உனது குருதிச் சுவடுகளின் மீதேறிச் சென்று கொண்டிருக்கிறது வன்மங்களின் வெறியடங்கிய மெளனம்…… உறைந்து போன கனவுகளை அள்ளியபடி அலைகிறது உனது உயிரின் காற்று…… நீ நேசித்த நிலவும் நிசப்தம் நிறைந்த இரவும் உனது ஆத்ம அலைவின் எச்சமாய் இரவெல்லாம் காய்ந்து பகலில் பயங்களோடு தேய்கிறது….. கடைசிச் சாட்சியங்களுடன் கடல் கடந்திருப்பாயென்ற எங்களது நம்பிக்கையை கடைசிவரை உன்னோடிருந்து காலொன்றையிழந்து கடைசியாய் மீண்ட தோழனின் சாட்சியங்களுடன் நீயில்லையென்பதை நிரந்தரமாக நம்புகிறோம்…. கண்முன் இறந்த குழந்தைகளுக்காய் நீயழுததும் களத்தில் கூட நின்ற தோழர்களுக்காய் நீ வாழ்ந்ததும் கடைசிவரையும் நீ ந…
-
- 0 replies
- 679 views
-
-
இன்னுமா உறக்கம்?...... இன்னுமா....உறக்கம்? இடியேறு உன்னில் விழ.. ஈழத்தில் உன்னினம் அழிப்பு. இங்கு நீ இன்னும்..... இதமாய் உறங்கு! ஊருக்கொரு சங்கமென்று கூறுபோட்டதுதான் மிச்சம் ஊர்ச்சனத்தின் வாழ்வு உனக்கெதற்குப் போய் உறங்கு! நிலம்விட்டு வந்த உந்தன் புலன்போற திக்கைப் பார்த்து புல்லரிப்புப் பொங்குது! புூரிப்பாக் கிடக்குது! புளுகுக்குச் சொல்லவில்லை பக்குவமா உறங்கு! எல்லாம் முடிந்த பின்னால்எங்கே? ஏது பிழை? ஆயிரமாய்க்கூடி அங்கலாய்க்க வேண்டுமே.. அதற்காக உறங்கு! கறுப்புப் படிந்துவிடக் கதவோரம் நிற்கிறது களையாகக் கைகூப்பி வரவேற்க நிற்கவேணும் இப்போது கண்ணுறங்கு! பிடறியில கொண்டு வந்து வெடிகுண்டைப் போட்டாலும் புண்ணாக்குத் தின்னிகளே! போர்த்திக்கொண்டு உறங்குங்கள்! ம…
-
- 28 replies
- 3.5k views
-
-
அம்மா! நினைவினைப் பிழிந்து கொஞ்சம் நெஞ்சின் நெருப்பிலே போடுகின்றோம். தீயின் தீ கூட கசிந்து மெல்ல கண்ணீராய் வழியுதம்மா..!! தடம் மாறிப்போன தமிழை இடம் நோக்கி இழுத்து வர ஒரு பிள்ளை பெற்றாயம்மா! இன்று பாரின் திசையிருந்து அழுவோர்க்கெல்லாம் என்றும் நீயே அம்மா! மானத் தமிழன் தாயே அம்மா! இதமான மழையின் ஈரம் பலமான அலையின் ஓரம் கால் பட்ட தடங்கள் அழிய ஈமங்கள் முடியும் அங்கே! நாமங்கள் முடிவதில்லை! அம்மா உன் ஞாபகம் வளரும் எம்மில் ஈழப்போர் ஓய்வின்றித் தொடரும்..!
-
- 2 replies
- 2k views
-
-
விட்டகுறை தொட்ட குறை..... நாடும் சொந்தமாயில்லை.. நாமும் நாமாயில்லை....... எங்கோ பிறந்தோம் எங்கோ வாழ்கிறோம்...... உடையாதா மனசு? ஈசல் இறப்பிற்கும் எல்லை .... இருக்குமாம் சொல்வார்........ ஈழத்தமிழன் எமக்கு??? நாடிழந்த பறவைக்கெலாம்.... ஒரு கூடு தந்தீர். சுய நலத்தில் ... பொது நலம் காணுமாம் உலகம்... மாறாய் உம் பொது நலத்தில்... நாம் சுய நலம் கொண்டோம்! எம் முகத்தை நாமறிய... எம் அறிவை நாம் அறிய...! விழுதுவிட்ட ஆலமரமே... குடை தந்தாய் ....! பழங்களை தின்றுவிட்டு ... எச்சம் போட்டாலும்... தாயென தாங்கி நிற்பாய்.... ஆதலால்.......... உம் உடலில்... ஓடி மகிழும் ஒரு அணிலாய்... என்றும் வாழ...... விரும்புகிறே…
-
- 3 replies
- 1.4k views
-
-
உயர்ந்த மரம் அடியோடு -சாய குஞ்சுக் காகம் தொடர்ந்து -கரைய தோகை மயில் அழகாய்- ஆட ஆனால் இந்த ரோஜா மலரே எப்போது பூப் பூத்தது ? ரோஜாக்குள் அந்த முள் - அந்த முள்ளுக்குள் - நீ உனக்குள் நான் எதற்குள் நாம் ?
-
- 19 replies
- 2.2k views
-
-
ஜ“ரணிக்க முடியவில்லை; திரும்பத் திரும்ப ரணங்களின் ஜ“ரணம். நாங்கள் சாதாரணங்கள். எங்களுக்கு ஏன் சதா ரணங்கள்?
-
- 4 replies
- 1.3k views
-
-
சொல்லடுக்குகளில் பின்னிக்கிடக்கும் எது நீயென்று அறியமுடியவில்லை எப்படி நிராகரிப்பது. அலையும் நரம்புகளில் எந்த நரம்பில் நீ எப்படித்தான் நிறுத்துவது. சகி இந்தக் கவிதையில் எந்த இடத்தில் நிறைகிறாய். எந்த வார்த்தைகளில் வெளியேறுகிறாய் புரியவில்லை. முகிலிடை வெட்டும் மின்னல் மிதந்தலைந்துவரும் வாசம் பெருந்துயரொன்றின் மெல்லிய நீட்சி எதிர்பாராமல் மனதுக்குள் அவிழும் பாடலின் மெட்டு எழுதென்று கலைக்குமுணர்வு மீறி நிற்கும் சோம்பல் நீயும் இவைப்போல அல்லது இவையும் உன்னைப்போல. பேரன்பே, யுகஅழிவின் இறுதிக் கணத்தில் கிடைத்த பேழை நீ. ஆதியிலிருந்து சுமந்திருந்த பிரியத்தை இறக்கிவைத்து இளைப்பாறுகிறாய். வா ஓய்வெடு. யுகமீட்சியின் பரிபூரணத்துவம் அன்பாலே நிகழு…
-
- 8 replies
- 1.2k views
-
-
கனத்த மனதுடன் உங்களைக் கேட்கிறேன் கனிந்த மனதுள்ள உங்களைக் கேட்கிறேன் படித்த மனிதரே உங்களைக் கேட்கிறேன் பாரினில் புகழ்பெற்ற உங்களைக் கேட்கிறேன் இளகிய மனதது உங்களுக்குள்ளது இயற்கையின் அழிவையே தாங்கிடவற்றது பச்சை இலையதன் காடுகள் காப்பவர் பாசத்துடனே விலங்கினை பார்ப்பவர் விலங்கை விடவும் கேவலமாகிய விசயங்கள் ஈழத்தில் விஞ்சிக் கிடக்குது பச்சைக் குழந்தை செத்துக் கிடக்குது பாகம் பாகமாய் வெட்டிக் குவிக்குது நித்தம் நித்தமிங்கு சாவுகள் நடக்குது நினைத்திடாத பல கேவலம் நடக்குது உங்கள் கண்களில் ஏன்படவில்லை உங்கள் நெஞ்சினை ஏன்தொடவில்லை எங்கள் இனமது ஏதிலியான எதுவும் அடைந்திட அருகதையற்ற செத்துப் போகவே பிறந்த இனமென்று செய்வத…
-
- 14 replies
- 2k views
-
-
சேரனின் காடாற்று கவிதை தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக கனத்த அட்டையுடன் அழகான புத்தகமாக வெளிவந்திருக்கின்றது. அதிலிருந்து இரு கவிதைகள் . நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு தற்கொலை. காவற்பரணில் ஒரு கண்ணிழந்த போராளி.
-
- 8 replies
- 1.2k views
-
-
வசந்தகாலம் கலைகிறதுன் வரவில்லாமல் _என் இளமைகோலம் சிதைகிறது இளமயில் உனை சேராமல். எதிர்கால முகவரியாய் யுன்பெயர் எழுதிடமுனைகையில், முற்றுப்புள்ளியோடு முடிக்க முனைகிறாய் இறந்தகாலம் என்றே. பெண்ணே ,_காதல் பயணப்பாதையின் சருகுகளல்ல, பாடைவரை வருமென் உணர்வுகள் !! நேரிடும் பொழுதெல்லாம் எதோ வேரிடுகிறது_நீ கூறிடும் வார்த்தைகளெல்லாம் நெஞ்சை கீறிடுகிறது _இருந்தும் காதல் பீறிடுகிறது அணைக்கப்படுவதற்காய் காத்திருக்கும் விளக்கு நான் அணையாமல் பார்த்திருக்கிறாய் விடியலின் பின்னும், ஓடம்தெரிந்த மாலுமி நீ அலையிலாடும்படகு நான் கரைசேராமல் அல்லாடுகிறது காதல் ! உனைப்பெற எதையும் இழக்கலாம் எனையிழந்து உனை பெற்று என்ன செய்வேன் _என…
-
- 3 replies
- 927 views
-
-
மாலை வேளை மூளை ஓய்வுக்காய்.. முகம் கழுவிக் குந்துகிறேன் முகநூலின் முன் பக்கம்..! முக்கி எழுகிறது முகநூல் "சாட்" யன்னல்... Hi ASL pls... முகமறியா ஒன்று கதை கேட்க.. நானும் ஏதோ பதில் போட தொடர்கிறது... Foto pls... பதிலுக்கு நான்.. L8R podi vesai.... திட்டிக் கொண்டே மறுமுனை யன்னல் மூடுகிறது..! யோசிச்சுப் பார்க்கிறேன்.. புரோபைலில் நடிகையின் முகம் காட்டும்.. என் முகவரிக்கே இக் கதி என்றால் உண்மையில்.. அவள் கணக்கிற்கு...???!
-
- 43 replies
- 4k views
-
-
மலருக்கு மட்டுமல்ல……. ஊருக்குள் புகுந்த இராணுவத்தால் உருக்குலைந்த தெருக்கள் ஊமையாய் அழுதன தெருவில் தேடுவாரற்ற ஒரு கட்டாக்காலி நாயின் தீனமான ஊளைஒலி நிலவுகூட முகம் மறைத்து முக்காடிட்டக் கொண்டது விண்மீன்கள் மட்டும் விட்டுவிட்டு விழிமலர்த்தி என்னை நோட்டமிட்டன சோதிக்கவென்று கொண்டு சென்ற ஏன் அண்ணன் வேலிக்கு அருகில் பிணமாக பள்ளிக்குச் செல்லவென துள்ளிச் சென்ற என் தங்கை வெள்ளி முளைத்த பின்னும் வீடு திரும்பவில்லை வேலைக்குச் சென்ற வேளையில் என் அப்பா ஸெல் அடியில் சிக்கி சிதறிப் போய் விட்டார் அடுப்பங் கரையினிலே ஆரவாரமேதுமின்றி அடுத்த வீட்டுப் பூனையின் அமைதியான தூக்கம் அங்கு அம்மா மட்டும் அசைவதிலிருந்து இன்னும் உயிரிருப்பதை…
-
- 7 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 513 views
-
-
வான் புலி வலம் வான் புலி வலம் வரும் வானம் இதுவல்லவோ வாழ்த்து தமிழா எம் வான் புலி வருகிறான் வான் புலி தந்த எம் தலைவா வாழ்வாய் பலகாலம் வடக்கில் எழுந்திடுவார் ஓர் சொடுக்கில் முடித்திடுவார் இடரினை நீ தந்தாலும் தொடராக தொடுத்திடுவர் சப்புகஸ்கந்தை எரிகிறதாம் கட்டுநாயக்க நடுங்குகிறதாம் தூங்காது அவர் விழிகள் துயரங்கள் உனக்கு நிரந்தரம் வானவேடிக்கை காட்டி எம்மவரை நீ வாழ்த்திடுவாய் விரட்டிவரும் விமானம் வீணாக பறந்திடும் பின்னே நீ விலங்கிட்ட தமிழன் விலங்குடைத்து பறக்கிறான் ஈழம் மலர்கின்றதே எம் தேசம் விடிகின்றதே இந்திரா தூங்கிடும் எம்மவர் வான் வலம் வந்தால் ஒலிகனும் கனனும் நண்பர்கள் வான் புலிக்கு பசூக்கா நீ அடித்தாலும் பதுங்கிடார் எம் புலிகள் …
-
- 10 replies
- 5k views
-
-
புத்தாண்டே வா புதுவாழ்வு தா ஒரு வருடம் ஓடி உதிர்ந்தது. குருதிப்புனல்களில் இருந்து துளிர்விடும் புதிய தளிர்கள் புன்னகையோடு எட்டிப் பார்க்கட்டும் முகம் தெரியாத எம் உறவுகளுக்காய் வைகறைப் பொழுதுகள் தவமிருக்கட்டும் உலகத் தேசிய வரைபடத்திலே புதிய நாடாக தமிழீழம் இணையட்டும் எங்கள் வாழ்வே போராட்டமாகவும் போரட்டமே வாழ்வாகவும் மிளிரட்டும் நம்பிக்கை ஏந்திய நமது கைகள் வெற்றிப் பூக்களைப் பறிக்கட்டும் சூரியத் தலைவனின் முதிர்ச்சி விடுதலைப் பாதையில் ஒளிவீசட்டும் தமிழக எழுச்சியும் சிங்கள வீழ்ச்சியும் புலம்பெயர் தமிழர்க்கு பலமாகட்டும் கலைஞரின் கருணை வெள்ளம் எங்கள் தேசத்தை நனைக்கட்டும் கற்பனை வானிலே பறக்கும் கனவுகள் எங்கள் நனவாகட்டும் …
-
- 2 replies
- 758 views
-