Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 1987 அதுவும் ஒரு மே மாதத்தின் திகதி தெரிந்திராத, அன்றைய நாளின் ஒரு காலைப்பொழுது....! ஏன் வந்தது என தெரியாத ஐந்தே வயசு, எனக்கு... எதுவும் புரியாத பிஞ்சு மனசு! ஓடிக்கொண்டிருந்த அம்மாவின் கைகளுக்குள், பதகளிப்போடு என் பயணத்தினை ஆரம்பித்தேன்! அப்பாவின் கைகளுக்குள் என் தங்கை, என் அழகான கூடு முதன்முதலாய்க் கலைகின்றது!!! மந்திகை ஆஸ்பத்திரிக்கான ஊரோடு ஒத்த அவர்களின் பயணத்தில்... ஐந்து வயதிலேயே, "அகதி" என்று பெயரெடுத்தேன்!!! - எங்கே போகின்றோம்? என்று, இன்றுவரை தெரியாத அதே கேள்விகளும் என்னோடு கூடவே பயணிக்கின்றன!!!! பாதி வழி தாண்டும்போது... யாரோ சொன்ன வார்த்தைகள்... எனக்குப் புதிதாய்... புரியாத வார்த்தைகளாய்.... "ஒபரேஷன் லிபரேஷன்" என காதில் …

  2. வெறிச்சோடிப்போன வீடுகளும் வீதிகளும்.... பசித்து பின் நொந்துபோன அனாதை நாய்களின் ஈனக் குரைப்புகளுடன் அடங்கிப்போயின! கோயில் திருவிழாக்கள் காணாத மக்கள் கூட்டத்தினை - அகதி மக்கள் நிரப்பி வழிக்க... செஞ்சிலுவை சுமந்த சாலைகளும் அப்படியே! வான் பறவைகளின் இரைச்சல்களில்.. அதைவிடச் சத்தமாய்... ஓலமிட்டது நாங்கள்தான்! இரண்டுமாடி கட்டிடத்தின் "உயரிய பாதுகாப்பில்" நாமிருந்தபோதும், பயத்தினில் பரித்தவித்து உயிரை... கையில்தான் வைத்திருந்தோம்! வெஞ்சினமோடு வந்த பகையை வெறியேற்ற எண்ணாத வரிப்புலிகள் , பக்குவமாய்ப் பதுங்கிப் போன பின்னும், வெறியாட்டம் ஆடிக்கொண்டே... உள்நுழைந்த "விஜயன்கள்" துணைநின்ற பறவைகளின் குறியிலிருந்து, இந்த ஐந்து வயது கவிக்குஞ்சு ஐந்தடி தூரத்தில்…

  3. மாவீரரே! உங்கள் நினைவாக கனத்த மனத்துடன் - என் கரங்களில் தீபம் ஏற்றி வந்தேன். இதனை எங்கே ஏற்றிடுவேன்! ஏற்றுமிடம் தெரிய வில்லை ஏங்கித் தவிக்கிறேன். மாவீரரே! உங்களுக்கு தீபம் எங்கே ஏற்றுவேன்? ஏற்றுமிடம் தெரிய வில்லலை ஏங்கித் தவிக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள் யாரோ… கூவி அழைக்கும் சத்தம் கேட்கிறது. இங்கே வாருங்கோ நாங்கள் இருபது வருட அனுபவம் மிக்கவர்கள் நாங்கள்தான் மாவீரை நேசிப்பவர்கள் இங்கே வாங்கோ… மாவீரரே! இன்னும் கொஞ்சம் பொறுங்கள் மேலும் ஒரு திசையிலிருந்து சத்தம்… நாங்கள் புண்பட்ட காரணத்தால் புலம்பெயர்ந்து வந்தவர்கள். உண்மையின் வழி நின்;று உரிமைக்கு குரல் கொடுப்போம். தனிபட்டோர் நலம் பேணாத் தமிழீழ நலன் …

    • 0 replies
    • 588 views
  4. Started by nochchi,

    செயற்படுவோம்! -------------------------- கதைத்தோம் ஓடினோம் ஏறினோம் போனோம் கூடினோம் குரல்கொடுத்தோம் கலைந்தோம் ஆனாலும் ஓயோம் தமிழீக் கொடியதனை ஐநாவில் ஏற்றும்வரை ஓயோம்! ஓயோம்! என்றே நாம் உறுதிகொண்டே செயற்படுவோம்!

    • 3 replies
    • 735 views
  5. தமிழா! உனக்கேன் தூக்கம்? என்னடா தமிழா இன்னும் தூக்கமா? எதிரி உன் வாசலில் நிற்கிறான் தெரியுமா? உன் அன்னையின் காணியிலும்; அன்னியன் நிற்கிறான்; அதை அடுத்த காணியிலும் இன்னொருவன் நிற்கிறான் உறவுகள் எல்லாமே தெருவிலே நிற்குது உரிமைக் குரல் கொடுக்கத் தயாராகி வருகுது - இந்த நிலையிலும் தொடர்ந்து நீ தூங்கினால்; உன்னையும் தூக்குவான் உணர்ந்து நீ எழும்படா என்னடா தமிழா இன்னும் தூக்கமா? எதிரி உன் வாசலில் நிற்கிறான் தெரியுதா? சுதந்திர வாழ்வும் நீ பெற வேண்டும். சுயநிர்ணய உரிமையும் நீ பெறவேண்டும்;; இழந்த நிலங்களைப் மீட்டிட வேண்டும். இன்னல்கள் அனைத்தும் களைந்திட வேண்டும் சுதந்திரத் தமிழீழம் மலர்ந்திட வேண்டும் துணிந்து எங்கும் நீ தலை நிமிந்திட வேண்ட…

  6. இருக்கும் இருத்தலை நேசிக்காத இருத்தல் முரண் _இருந்தும் இருந்துகொண்டிருக்கும் இருப்பை இழந்துவிடும் துணிவுமில்லை , இருப்பதால் நுகரப்படுவது இருப்பின் மீதான வெறுப்பாக இருந்துகொண்டேயிருக்க , இருக்கிறேன் என்றே இயல்பாக இயம்புதல் வழக்காயிற்று . இப்படி இருத்தல் இருத்தலுகாகாது என்று அன்பில் இருக்கும் எல்லோரும் சொல்லியும் இருத்தல் அப்படியே .................! இருக்கிறது இன்னும் இருந்துவிடலாம் என்ற அவா . என்ன, இவர்களைப்போல் எப்படியும் இருந்திட துணிந்திடில் இருந்திடலாம் _உள் இருந்தொரு குரல் யாருக்கும்கேளாமல் , யார்சொல்லியும் கேளாமல், இருந்து மிரட்டுகிறது _இந்த இருப்பெல்லாம் இருப்பா என்று ?

  7. FACEBOOK பாவித்துப்பார்... உன்னை சுற்றி REQUEST தோன்றும்... நட்பு அர்த்தப்படும்...... நாளிகையின் நீளம் குறையும்.... உனக்கும் கவிதை வரும்... டைப்பிங்க் வேகமாகும்... INTERNET தெய்வமாகும்... உன் கைவிரல் பட்டே KEYBOARDS உடையும்... கண்ணிரண்டும் கமெண்ட் ஐ தேடும்... FACEBOOK பாவித்துப்பார்... நித்திரை மறப்பாய்... 6 முறை LOG I...N பண்ணுவாய்... LOG OUT பண்ணினால் நிமிசங்கள் வருஷங்கள் என்பாய்... LOG IN பண்ணினால் வருஷங்கள் நிமிசம் என்பாய்... காக்கை கூட உன்னை கவனிக்கும்... ஆனால் யாருமே உன்னை கண்டுகொள்ளவில்லை என் உணர்வாய்... உனக்கும் நண்பருக்கும் இடையில் இனந்தெரியாத உறவொன்று உருவாகக் காண்பாய்... இந்த போஸ்ட், இந்த கமெண்ட், இந்த லைக், எல்லாம் FACEBOOKஐ கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்... F…

  8. வணக்கம் என் அன்புறவுகளே! "ஊருக்குப் போக விருப்பமில்லை" என்ற இந்தக் கவிதை ஒரு .....தொடர் கவிதை! இதை தொடராக வாசிக்கும் பொறுமையும் பக்குவமும், யாழ் உறவுகளிடம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. கதையாக எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் கவிவரிகளில் பல விடயங்களை கதைபோலன்றி ஒரு சில வரிகளுக்குள் அடக்கிச் சொல்வது பொருத்தமானதாக அமையும் என்ற நம்பிக்கையில் இந்த கவித்தொடரை ஆரம்பிக்கின்றேன்! (இந்தக் கவிதைத் தொடரை முடிக்கும் முன்னரே "ஊருக்குப் போகப் போறன்" என்ற நிலை வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்!) என் சின்ன வயதின் நினைவுகள்,நிகழ்வுகளிலிருந்து ஆரம்பிக்கப்போகும் இந்தக் கவித்தொடர் என் நினைவறிந்த 1987 காலப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கிறது. என்னையும், என் மண்ணையும்...…

  9. நொண்டிச் சிந்து வ.ஐ.ச.ஜெயபாலன் ஒரு திருநங்கையின் காதல் கவிதைபோல என் மரபணுக்களில் இருந்து எழுகிறது ஒரு பாடல் பாணனாய்த் திரிகிறபோதெல்லாம் என் பாதங்களின் அசைவுக்குச் சுழல்கிறதே உலகம் என்னதாய். கிடைத்த கள்ளும் கூழும் சந்தித்த தோழ தோழியருமாய் குந்திய மர நிழல்களில் எல்லாம் சூழுதே சுவர்க்கம் காதலும் வீரமுமாய். வாழ்வு தருணங்களின் விலையல்ல தருணங்கள்தான் என்பதை மறக்கிற பொழுதுகளில் புயலில் அறுந்த பட்டமாகிறேன். காலமும் இடமும் மயங்க. தருணங்களின் சந்தையான உலகிலோ தங்க வில்லை சுமக்கிறவர்களுக்கே வாழ்வு இங்கு பல மரவில் வித்தைக்காரருக்கு கட்டைவிரல் இல்லை. எனினும் சிட்டுக் குருவிகளையே தொலைத்துவிட்ட இந்த சென்னைச் சுவர்க்காட்டில் சு…

    • 12 replies
    • 1.8k views
  10. வானுயரப் போக வாய் பிளந்து குதிக்க... வெடிக்கும் அந்தக் கந்தகத் துகள்கள் காற்றில் கலக்க.. மாசும் அங்கு தொன் கணக்கில் ஏற.. சுவாசக் காற்றும் உள்ளிளுக்கும் நச்சுப் புகையை.. மகிழ்வுற வாங்கி.. நாங்களோ.. பட்டாசு வெடித்து பண்டிகை செய்வோம். சொந்த இனத்தவன் சாவில் மாற்றான் காட்டிய வேதக் கணக்கில் சுய புத்தியற்று குதூகலித்தபடியே..! இந்த இடைவெளியில் பொருளீட்டும் முதலைகள் வாயில்.. "வண்டி" வலிக்க உண்டிக்கு ஏங்கி இருக்கும் மழலைகள் கூட மனித இரைகளாக..! வெடிக்கும் அந்தப் பட்டாசு ஓசைக்குள்.. விடுதலைக்காய் வாழ்வுக்காய் கதறும் இந்த குரல்கள் கேட்காது.. நாளை நமக்கும் இதுபோல் ஓர் நிலை வந்தால்.. நாலு பேரில் ஒருவராய் ந…

  11. ஓரு பயணம் தொடங்கினேன் பல வருடங்களுக்கு முன் பாதி தூரம் கடந்தாயிற்று ஏன் முக்கால்வாசித் தூரமாயுமிருக்கலாம் சிலவேளைகளில் முடியும் தருவாயிலுமிருக்கலாம். முன்பெல்லாம் திருவி‌ழாக்கூட்டமாய் பலர் உடன் வந்தார்கள் பயணங்கள் இனிமையாய் அமைந்தன பாதையின் விதிகள் கற்பிக்கப்பட்டன அவற்றை மீறியபடியும் விதிகளை கற்றுக கொண்டேன் பாதையின் கிடங்குகளைக் கடக்கையில் கைபிடித்து அழைத்தப்போயினர் சிலர் பாதையின் தன்மைகள் மாறிக்கொண்டே இருந்தன விழுந்தால் வலிக்காத மணற்பாதையில் தொடங்கி பாதுகாப்பான ஒழுங்கை, சாலை என்றாகி காலப்போக்கில் பாதைகள் அகன்று நெடுஞ் சாலையாயிற்று அதிலும் நடக்கக் கற்றுக் கொண்ட போது பயணத்தின் கால்வாசி கடந்திருந்தே…

  12. ஒரு உண்மையான காதலின் வலிகள் - வரிகளாய்........!!! ஒரு "கவிதை"யின் கண்ணீரில் வரித்த வரிகள் இவை! எழுத்தும் பகிர்தலும் ஆறுதல் அளிக்கும் என்ற நம்பிக்கையில்..............! பெருந்தெருவில் விழுந்த பச்சைப் புழுவாக நான்! காய்ந்து வரண்ட எனக்குள், என் பச்சை இதயம்... படபடத்து பரிதவிக்கும் பரிதாபம்! என்னை நான் ஒருமுறை நினைத்துப் பார்க்கின்றேன்...! இன்னும் உயிரோடு இருப்பதே எனக்கு ஆச்சரியந்தான்!!! நான் புரளும் மண்ணின் வெட்பம் என் மெல்லிய மேனியைச் சுட்டு அவிக்கின்றது! அவிந்து போகையிலும்... உன் நினைவுகளில் பசுமையாய் ஈரமாகின்றேன்...! உப்புக் கரிக்கும் கண் வழி நீரில்...!!! கரைந்து போகும் உன் காதல் கரைகளில்... பெருகிவரும் கடலாய் என் காதல் ! உன் …

  13. என் தலையெழுத்தினை பிழையாய், எழுதத் தொடங்கிய காதல்... என் தலைவாசல் தனைத் தட்டிநிற்கின்றது! வரவேற்க முடியாமலும்... தூக்கியெறிய முடியாமலும்... நான் படும் பாடு, என் எதிரிக்கு கூட... வந்துவிடக் கூடாது இந்த நிலைமை!!! பூட்டி வைத்த நான்கு சுவர்களுக்கு நடுவில்... நான் கதறி அழுத சத்தத்தையும், என் விரல் மொழிகள் வரைந்த குருதிச் சுவரோவியங்களையும், என் தலையணை தனைத் தோய்த்த நீரோவியங்களையும், மற்றவர் மனமறியாமல் புதைத்துவிட்ட... ரகசியமானவனாய் நான்!? எனக்கு, ஒரு இதயத்தினையும் ஒரேயொரு எண்ணத்தினையும் கொடுத்த, இறைவனுக்கும் என்மேல் இரக்கமில்லையோ!??? அன்பையும் ஆதரவையும் அன்போடு எதிர்பார்ப்பது... எத்தனை ஏமாற்றங்களைக் கொடுத்தாலும், அத்தனை வலியையும் நெஞ…

  14. மேஜர் சிட்டுவின் 40வது பிறந்தநாள் நவம்பர் 4ம் திகதி. எங்கள் இனத்துக்காக வாழ்ந்த மாவீரர் சிட்டுவின் 40வது பிறந்தநாள் வலைப்பூவில் சிட்டுவின் பாடல்கள் நினைவுக்குறிப்புகளை பதிவிடும் நோக்கில் ஏற்பாடுகள் ஒழுங்காகிறது. யாழ்கள கவிஞர்கள் கருத்தாளர்களிடமிருந்தும் உங்கள் எண்ணங்கள் கவிதைகள் நினைவுப் பகிர்வுகளை அனுப்பி உதவுமாறு வேண்டுகிறேன். எங்களுக்காக வாழ்ந்து எங்கள் நினைவுகளில் வாழ்கிற மாவீரர்களின் வரலாறுகளைப் பதிவிடுவோம். உங்கள் எண்ணங்கள் கவிதைகள் நினைவுப்பகிர்வுகளை கீழ்வரும் மின்னஞ்சலுக்கு அஞ்சலிடுங்கள். 2ம் திகதி நவம்பருக்கு முன்னர் கிடைக்குமாறு அனுப்புங்கள். மின்னஞ்சல் முகவரி - rameshsanthi@gmail.com சிட்டுவிற்கான வலைப்பூ - http://chiddu1997.wordpress…

    • 1 reply
    • 3.6k views
  15. படித்ததில் மனதுக்கு பிடித்திருந்துச்சு, இணைத்துவிட்டேன் எங்கோ பிறந்தோம்! எங்கோ வளர்ந்தோம்! அனைவரும் இங்கே! சந்தித்துக் கொண்டோம்! இதயத்தை நட்பால சிந்தித்துக கொண்டோம்! முகங்களைப் பற்றி யோசித்ததுமில்லை! இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை! எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை! ஏமாற்றங்கள் சிறிதுமில்லை! அவரவர் கருத்துக்களை இடம் மாற்றிக்க கொள்வோம்! பாரட்டுக்களை பரிமாறிக்க கொள்வோம் ! சின்ன‌ சின்ன‌ ச‌ண்டைக‌ள் இடுவோம் சீக்கிர‌த்திலேயே ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்! கவலைகளை கிள்ளி எறிவோம்! இலட்சியஙகளை சொல்லி மகிழ்வோம்! நன்மைகள் வளர முயற்சிப்போம்! நட்பால் உயர்ந்து சாதிப்போம்! நன்றி - adhikesan.blogspot.com

  16. Started by உடையார்,

    சிரிப்பு வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து கொள்கிறது வாழ்வின்மீது இயற்கை தெளித்த வாசனைத் தைலம் சிரிப்பு எந்த உதடும் பேசத் தெரிந்த சர்வதேச மொழி சிரிப்பு உதடுகளின் தொழில்கள் ஆறு சிரித்தல் முத்தமிடல் உண்ணால் உறிஞ்சல் உச்சரித்தல் இசைத்தல் சிரிக்காத உதட்டுக்குப் பிற்சொன்ன ஐந்தும் இருந்தென்ன? தொலைந்தென்ன? தருவோன் பெறுவோன் இருவர்க்கும் இழப்பில்லாத அதிசய தானம்தானே சிரிப்பு சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே துன்பம் வெளியேறிவிடுகிறது ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும் இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது சிரித்துச் சிந்தும் கண்ணீரில் உப்புச் சுவை தெரிவ…

  17. சிறகடிக்க ஆசைப்படும்... சிறைப் பறவை, உறவுக்காய் ஏங்கிக் கழிக்கும்.... தினம் இரவை! என் வரவுக்காய்... ஆசைப்படும் 'தாய்போல்' மடியும், காத்துக் காத்திருந்தே... தினம் இரவுகள் விடியும் ! வெற்று வார்த்தைகளில் எதுவுமில்லை, மற்றத் தேவைகளின் தேவையுமில்லை! கற்ற கல்விகூட அளவோடுதான், பெற்ற அனுபவம் இன்று வாழ்வோடுதான்! கண்ட தோல்விகள் கொஞ்சமில்லை, இன்றுவரை எதுவுமென்னை மிஞ்சவில்லை! எல்லாமே எமக்கொரு பாடமென, வெல்வோமே நாம்தான் வீரரென! சந்தித்த சரிவுகளை சாய்தளமாக்கி, நிந்தித்த வாழ்வுதனை போர்க்களமாக்கி... வந்து நின்ற எதையும் வென்று நின்று, நொந்து நின்று... குனிந்த தலை....................... நிமிர்ந்து நிற்போம்!

  18. நேர்காணல் – த.அகிலன் (ஞாயிறு தினக்குரல்) ஈழத்தின் அகோரமான போர்ச்சூழலில் உங்களின் வாழ்வின் ஆரம்பம் கழிந்திருக்கின்றது, அந்த வகையில் உங்களின் வாழ்வியலின் அந்த ஆரம்ப நாட்கள் குறித்து? நான் கிளிநொச்சியில் தான் பிறந்தேன், கிளிநொச்சியிலேயே வளர்ந்து அனேகமாக வன்னி மண்ணின் மகன் என்று கூடச் சொல்லலாம். கிளிநொச்சி மத்திய கல்லூரியிலே தான் என்னுடைய முதலாம் ஆண்டியிலிருந்து க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்றேன். அனேகமாக நான் ஈழத்தை விட்டு இந்தியாவுக்குப் புலம் பெயரும் வரை வன்னியிலே தான் வாழ்ந்திருக்கின்றேன். வன்னியின் அவலங்களோடு, வன்னியின் துயரங்களோடு வன்னியின் சகல விஷயங்களோடும் நான் வாழ்ந்திருக்கின்றேன். வன்னியில் இன்றைக்கிருக்கிருக்கின்ற எல்லோருக்கும் இருக்கின்ற துயரங்களோடு தான் எ…

  19. இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....! வெடிகுண்டுகளைச் சுமந்து சுமந்து மலடாகிப் போன மரண தேசத்தில் மறத்தமிழச்சியொருத்தியின் தாய்மை பறைசாற்றப்பட்டது அன்று.. "அக்கினி குண்டங்கள் மழையாய்ப் பொழிந்து எம் மக்கள் கூட்டம் மாண்டு மடியும் யுத்தக்களத்தில் ரத்தம் சிந்த இதோ ஓர் போராளி உதித்துவிட்டான்...! எம் குலப் பெண்களின் பெண்மையைக் கொன்ற ஆயுதம் ஏந்திய நாய்களின் சத்ருவாய் இதோ ஒர் போராளி உதித்துவிட்டான்....! போர்க்களத்தில் புதையுண்ட எம் இனத்தையும், மொழியையும் தோண்டியெடுத்து மகுடாபிஷேகம் செய்ய இதோ ஓர் போராளி உதித்துவிட்டான்......!" என பெருமிதிங் கொண்டவளாய் உணர்ச்சிப் பெருக்கில் தன் அறுபட்ட…

  20. அமைதியின் நிழல் மரணம் கொன்றடக்கப்படும் ஆயுதமாகும் பொழுது யார் யாரோ போராடத் தொடங்குகிறார்கள் சனங்கள் அமைதியின் நிழலை இப்பூமியில் என்றாவது ஒரு நாள் மீளவும் உருவாக்குவார்கள் இருள் கவிழந்த பொழுதில் இந்த வார்த்தைகளை எழுதி வைக்கிறேன் உனது போரைத் துடைத்து அதிகார நிழலை அடித்து விரட்டுகையில் இப்பூமியில் வெளிச்சம் படரும் இரத்தமும் காயமும் இல்லாத பூக்கள் பூத்துக் கொட்டும் அமைதியின் நிழலைப் பார்க்காது முடிக்கிறது இந்தக் காலம் அது எவ்வளவு அழகாயிருக்கும்? _________________________ தீபச்செல்வன்

    • 1 reply
    • 1.2k views
  21. தேடிப் பார்த்தது கிடைக்கவில்லை! பேசி முடித்ததில் திருப்தியில்லை! "கண்டவன்" என பெற்றவர் சொன்னதை, "வந்தவன்" கொண்டதாய் இல்லை! வாழ்ந்து கொண்டவரை... தொல்லை!!! வாழும் காலம் முழுதும், அவன் வாழ்வதைப் பார்த்து... கண்களைக் கசக்கியபடியே... கசக்கிய விழிகளிலும், "அவன்" என்பவனே வந்து நிற்கின்றான்!!! என்னவென்று சொல்லியழ முடியாமலும், "ஓ"வென்று கதறியழ இயலாமலும், இதயத்தின் நான்கறைகளுக்குள்ளும்... நசுங்கிப் போகின்றது - தேவதைகள் கசக்கி எறிந்த காதல்கள்!!! அதைப் பொறுக்கியெடுத்து... பொக்கிஷமாய் பாதுகாக்கும், தேவைகளின் தேவர்களுக்கு... தேவதைகளின் அழுகுரல்கள், என்றைக்கும் கேட்பதில்லை!!! தேவதைகளின் இரவுகள்... முதல் இரவிலிருந்தே தொடர் கதைதான்…

  22. தசையினைத் தீ சுடினும்... எழுத்தா ளரும் விடுதலைச் சிறுத்தைகள் முன்னாள் எம்.எல்.ஏவுமான ரவிக்குமாரின் "தமிழராய் உணரும் தருணம்" என்ற நூலில் வாசிக்க வாய்த்த கவிதை. 1983-ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனக் கலவரத்தின் ஒரு சம்பவத்தை சிங்களக் கவிஞர் பாஸில் ஃபெர்னாண்டோ கவிதையாகப் பதிவுசெய்திருக்கிறார். மொழியாக்கம் கவிஞர் சேரன். 'ஜூலை: மேலும் ஒரு சம்பவம் இறந்தவர்களைப் புதைப்பது ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில் இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக் காரணம் ஏதுமில்லை சத்தியமாகச் சொல்கிறேன் நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன். சித்தம் குழம்பியனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை. உங்களைப் போலவே நானும் உணர்ச்சிகளை வெளிக்கா…

    • 6 replies
    • 825 views
  23. காதலிக்க நேரமில்லை...... மண்ணை நேசித்தவள்(ன்) மரணப்படுக்கையில் கிடக்கும் போது உன்னைக் காதலிக்க எனக்கு நேரமில்லை.... சொல்லிக் கேட்டதற்கே என் கணங்கள் வேதனையில் துடிக்க..... பள்ளிவாசல் நின்று நீ புன்னகைப் பூக்கொடுக்க...... பதிலுக்கு என்னால் கண்ணீர் தான் தரமுடியும் கண்ணே...... ஒருகாலையில் தொடரும் வேதனைக் கணங்கள் மறுகாலைவரை தொடர்வதும் அதுவே மறுபடியும் மறுபடியும் தொடர்வதுமான சோகப் பொழுதுகளே அவருக்கு சொந்தமாக நான் மட்டும் உன் நினைவில் மிதப்பதா.... உன் நினைப்பைவிட அவர் உயிர் வதைப்புத்தான் எனை வாட்டுதடி.... இடம்தெரியா முகாமில் எங்கோ ஒர் மூலையில் மண் மீட்கச் சென்றவரின் மரண ஒலிகேட்க நாம் மட்டும் என்ன …

  24. வரவேற்ற உன் விழிகளால் வைகறை தெரிந்தது வலிகள் மறைந்துதொரு வாசமெழுந்தது, உருவேற்ற முடியாவுருவங்கள் உருவாகி உயிர்வதைத்தது _மறுகணம் விளைவுகளறியாத மலர்வுகள் மகிழ்வை விதைத்தது . களைப்பறியா பயணங்கள்..... சலிப்படையா காத்திருப்புக்கள் ....... அலுக்காத நினைவுநீட்சிகள் ...... அசைமீட்பில்_ உன் மீதான நினைவிசைமீட்பில் நிகழ்காலங்கள் கரைந்தழிந்துபோக , பகிராத வார்த்தைகள் தேடி ஞாபகங்கள் உலா போயின ............ பொருளற்ற பேச்சுக்களால் நழுவிய சமயங்களை மீளுருவாக்களில் நாட்கள் நகர , புரிந்தும் எல்லாம் அறிந்தும் வார்த்தையாடுதலில் வாகாய் தவிர்த்தெனை வதைத்துரசிக்கும் வகையறிந்து உன்முகமறிந்தேன் _கொண்ட காதல் தரமறிந்தேன். எனக்கும் பிடி…

  25. சுவரோரம் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் பதினெட்டாவது தென்னங்கன்றை நடுகிறார் தலையாரி சுப்ரமணி சிதிலமடைந்த மடப்பள்ளிக்குள் பசித்த எறும்புகளும் கொழுத்த எலிகளும் குடியிருக்கின்றன குதிரை வாகனத்தின் குறியை அசைத்து சிரிக்கும் சிறுவர்கள் செவ்வரளிச் செடிகளின் நிழல் மறைவில் திருட்டுப் புகையூதும் இளவட்டங்கள் பாத்திரங்களில் விழுந்த துளை அடைக்கும் பொருட்டு சிலைகளின் எண்ணெய்ப் பிசுக்கைச் சுரண்ட அபூர்வமாய் வரும் பெண்கள் எதிர்க்கடையிலிருந்து தேநீர் பீடிக்கட்டு வரவழைத்து நந்திக்குப் பின்புறம் வட்டமிட்டு சீட்டாடும் ஆண்கள் என எப்போதும் ஆள் நடமாட்டமுள்ள எங்கள் ஊர் சிவன் கோயிலில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.