வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
விமான நிலையத்தில் ஒன்றாகத் தென்பட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்! 1 சிம்மா விருது நிகழ்ச்சிக்காக சிங்கப்பூருக்குச் சென்றுள்ள நயன்தாரா, விமான நிலையத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஒன்றாகச் செல்லும் வீடியோவும் படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக 'நானும் ரவுடிதான்' என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இதனையடுத்து, நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் ச…
-
- 11 replies
- 791 views
-
-
அவமானத்தை வெற்றி கொள்ள.... பா.விஜயின் பாட்டு மனித வாழ்க்கை கவலை இல்லாமல் இல்லை அவன் பணக்காரனா அதானப்பா - கோடீஸ்வரனா இருந்தா என்ன, குடிசையில இருந்தா என்ன கவலை என்பதில்லாமல் இல்லை. இதனால யாருடைய வாழ்க்கையும் தினம் தினம் போராட்டம் நிறைஞ்சதாத் தான் இருக்கிறது. வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான் என்பதிலிருந்து என்ன தெரிகிறது? ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விதத்தில அதாவது படிப்பிலோ. பதவியிலோ, அந்தஸ்திலோ,அறி்விலோ, சண்டித்தனத்திலோ அதானப்பா- வீ...ரம் என்பகிறாங்களே அதிலேயோ, ஒருத்தனை விட இன்னொருத்தன் குறைவாக கணிக்கப்படுகிறான் என்பதுதான். இதனால என்ன பாதிப்பு ஏற்படுகிறது? வலியோர் மெலியோரை ஏளனம் செய்வது, அவமானப் படுத்துவது சகசமாகிவிடுகிறது. வலியோனைப் போல தானும் முன்னுக்க…
-
- 6 replies
- 3k views
-
-
`கபாலி' மலாய் மொழி பதிப்பில் கிளைமாக்ஸ் மாறியது ஏன்? ரஜினிகாந்த் நடிப்பில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட கபாலி திரைப்படத்தின் மலாய் மொழி பதிப்பில், இறுதிக் காட்சிகள் மாற்றப்பட்டதால் மலேசிய ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மலாய் மொழியில் வெளியான கபாலியில் மாறுபட்ட கிளைமேக்ஸ் மலேசிய செய்தித்தாளான 'தி மலாய் மெயில்' பத்திரிக்கையில், மலேசியவில் வெளியான கபாலி மலாய் பாதிப்பு முற்றிலும் மாறுபட்ட முடிவுடன் கூடியதாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, பிபிசி மானிட்டரிங் பிரிவு தகவல் கூறுகிறது. கபாலி திரைப்படத்தின் மூல பதிப்பான தமிழில், கபாலி என்ற தாதா கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ரஜினிகாந்த்தை சுட்டுவிடுமாறு ஒரு கதாப…
-
- 0 replies
- 413 views
-
-
கடவுள் காப்பாற்றினாரா குமாரை? - 'கடவுள் இருக்கான் குமாரு' விமர்சனம் “வாழ்க்கையில நாம என்னவேணாலும் ப்ளான் பண்ணலாம், ஆனா அத விட பயங்கரமா எதாவது நடக்கும்” போன வாரம் பார்த்த படத்தோட டயலாக், இந்த வாரமும் உங்களுக்கு ஃபீல்லாகுதுன்னா, நீங்க கடவுள் இருக்கான் குமாரு படத்தில் இருக்கீங்கனு அர்த்தம். ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், நிக்கி கல்ராணிக்கும் நிச்சயதார்த்தம். இரண்டு நாட்களில் திருமணம். அதற்கு நடுவே பேச்சிலர் பார்ட்டிக்காக பாண்டிச்சேரி செல்கிறார்கள் ஜி.வியும், ஆர்.ஜே.பாலாஜியும். பார்ட்டியை முடித்துவிட்டு, திரும்பும் போது, எல்லை தாண்டும் பியர் பாட்டில்களால் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்ராஜிடம் சிக்கிக்கொள்கிறார்கள். அடுத்த நாள் திருமணம் என தெரிந்துக் கொண்டு ஜிவ…
-
- 0 replies
- 319 views
-
-
செல்வராகவன் இயக்கிய முதல் படத்தில் இருந்தே தனக்கென்று தனிப்பாணியைப் பின்பற்றி படம் எடுத்து வருகிறார். மயக்கம் என்ன படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படம் இரண்டாம் உலகம். இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், அனுஷ்கா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் பற்றிய டாப் சீக்ரெட் தகவல் ஒன்று தற்போது வெளியே கசிந்துள்ளது. See more at: http://www.vuin.com/news/tamil/arya-landed-in-a-new-planet
-
- 0 replies
- 296 views
-
-
ஓடிடி உலகம்: நான்கு காதல்கள்! ஓடிடி உலகின் அண்மைக்கால ஈர்ப்பு ஆந்தாலஜி படைப்புகள். அந்த வரிசையில் கடந்த வாரம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது ‘அஜீப் தாஸ்தான்ஸ்’ திரைப்படம். ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’, ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ வரிசையில் பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களுடைய கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இந்தப் புதிய ஆந்தாலஜியை கரண் ஜோகர் தயாரித்துள்ளார். கறுப்பும் வெள்ளையுமாக நாம் எதிர்கொள்ளும் வாழ்வின் அபத்தங்கள் பலவும், உண்மையில் இந்த இரண்டுக்கும் இடையில், எளிதில் பிடிபடாத எண்ணற்ற சாயல்களைக் கொண்டிருக்கும். அப்படியான வினோத சாயல்களின் சில தெறிப்புகளை வினோதக் கதைகள் எனப் பொருள்படும் தலைப்பில் வெளியாகியிருக்கும் ‘அஜீப் தாஸ்தான்ஸ்’ ஆந்தாலஜியில் காணலாம…
-
- 1 reply
- 420 views
-
-
இந்த பாடல் இடம் பெற்ற படம் தமிழ்படம், அட படத்தின் பெயரே "தமிழ்படம்" தான் படம் பார்த்தால் தான் இப்பாட்டின் அர்த்தம் புரியும்! http://www.youtube.com/watch?v=UTUC1PpWJZs
-
- 21 replies
- 31.5k views
-
-
“தடை பல தாண்டி... தீபாவளிக்கு ‘மெர்சல்’ ரிலீஸ் உறுதி!” ‘தேனாண்டாள்’ முரளி ‘தெறி’ படத்தைத் தொடர்ந்து விஜய்யுடன் அட்லி மீண்டும் இணையும் படம், தேனாண்டாள் நிறுவனத்தின் 100 வது தயாரிப்பு... இப்படி ஏகப்பட்ட பரபரப்புடன் தயாராகிவரும் ‘மெர்சல்’ படத்துக்கு அது தொடங்கிய நாளிலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்பபு. காளை மாட்டுடன் விஜய் இருக்கும் புகைப்படம், படத்தின் முதல் பார்வையாக வெளியானபோது எதிர்பார்ப்பு இன்னும் எகிறியது. தொடர்ந்து ‘ஆளப்போறான் தமிழன்’ பாட்டு வெளியானபோது, ‘கமர்ஷியலில் இது வேறு லெவல் சினிமா’ என்ற எண்ணம் உருவானது. இப்படிப் படிப்படியாக எகிறிக்கொண்டு இருந்த ‘மெர்சல்’ படத்தின் எதிர்பார்ப்பை இறக்கும் வகையில் வழக்குடன் வந்தா…
-
- 6 replies
- 794 views
-
-
கதர்ர்றா! முதலில் கதற கதற ஒரு கதை சொல்கிறேன். ஒரு ஊரில் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் ஏழைகள் இருந்தனர். அவர்கள் குடிசையில் இருந்தனர். ஏழைகளில் ஒரு ஏழைப்பங்களான் இருந்தான். மக்களுக்கு கக்** வந்தாலும் அவன் துணை வேண்டும். அதே ஊரின் ஊரில் பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஹோட்டல் கட்ட இடம் கிடைக்காமல் குடிசைகளை அகற்ற வேண்டியிருந்தது. குடிசைக்கு தீ வைத்தான். நடுவில் காதலியோடு நாலு பாட்டு , அம்மாவோடு சென்டிமென்ட். மக்கள் கதறல் சோகம். ஏ.பங்களான் கோபப்பட்டான். வஞ்சகமாக பணக்காரனை ஏமாற்றி பணம் சம்பாதித்து ஏழைகளுக்கு கொடுத்தான். பின் மகிழ்ச்சியாக காதலியோடு டூயட் பாடினான். சுபம். பார்ர்றா! தமிழ்சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் இந்த முற்போக்கு சிந்…
-
- 6 replies
- 1.5k views
-
-
மன்னிப்பு கேட்கவில்லை... அசின் மீது நடவடிக்கை [^] நிச்சயம்! - ராதாரவி சென்னை: நடிகர் சங்கம் மற்றும் திரையுலக அமைப்புகளின் எதிர்ப்பு [^]களையும் மீறி இலங்கைக்குப் போன நடிகை அசின் மீது நடவடிக்கை நிச்சயம் என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கூறினார். தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கு நடிகர், நடிகைகள் செல்லக் கூடாது என திரைப்பட கூட்டமைப்பு தடை விதித்தது. ஆனால் இதனை மீறி இலங்கையில் நடந்த ரெடி என்ற இந்தி படப்பிடிப்புக்கு அசின் சென்றார். படப்பிடிப்போடு நிற்கவில்லை அவர். அங்குள்ள தமிழர் பகுதிகளில் அதிபர் ராஜபக்சே மனைவியுடன் இணைந்து சுற்றுப்பயணமும் செய்தார். இலங்கை அரசு தமிழர்களைச் சிறப்பாகப் பராமரிப்பதாக…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஹைதராபாத்தில் நடிகை தமன்னா மீது காலணி வீச்சு.. கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம். நடிகை தமன்னா மீது காலணி வீசப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. தமிழில் கல்லூரி, அயன், பையா, தர்மதுரை, பாகுபலி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் தமன்னா. தமன்னா நேற்று ஹைதராபாத்தின் ஹிம்யாத் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார்.அப்போது அவரை பார்க்க பெரும் கூட்டம் கூடியிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமன்னா, ஜுவல்லரியில் இருந்து வெளியே வந்தபோது அங்கே நின்றிருந்த வாலிபர் ஒருவர் தமன்னாவை நோக்கி செருப்பை வீசினார். அந்த செருப்பு, அதிருஷ்டவசமாக தமன்னாவின் மீது படவில்லை…
-
- 0 replies
- 517 views
-
-
குருவியார் பதில்கள் குருவியாரே, ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டும்? (உமைய கணேஷ், மாயாகுளம்) சிவப்பு தோலுடன், 6 அடி உயரத்தில், இந்தி பேச தெரிந்தவராக இருக்க வேண்டுமாம்! *** விஜய் நடிக்கும் ‘கத்தி’ எப்படி இருக்கும்? (எச்.பகதூர், சென்னை) ‘பஞ்ச்’ வசனங்களுடன் ரொம்ப கூர்மையாக இருக்கும்! *** குருவியாரே, ஷங்கர் டைரக்டு செய்த முதல் படம் எது, அவர் யாரிடம் உதவி டைரக்டராக பணியாற்றினார்? (எஸ்.சந்திரசேகரன், முதியம் பாளையம்) ஷங்கர் டைரக்டு செய்த முதல் படம், ‘ஜென்டில் மேன்.’ எஸ்.ஏ.சந்திரசேகரன், பவித்ரன் ஆகிய இருவரிடமும் அவர் உதவி டைரக்டராக பணிபுரிந்தார்! *** ‘ராமானுஜன்’ படத்தில் அம்மா வேடத்தில் நடித்த சுஹாசினி, தொடர்ந்து அம்மா வேடங்களில் நடிப்பாரா? (ஆர்.பிரபு, க…
-
- 1 reply
- 1.4k views
-
-
என்றும் கனவுக்கன்னியாக நீடிக்க என்ன விலை கொடுக்கிறார்கள் நடிகைகள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES சின்ன திரை பெரிய திரை என்கிற பாரபட்சமே இல்லாமல், எல்லா திரைகளிலுமே பெண்களுக்கு ஒரு மிக பெரிய நிர்பந்தம், அவர்கள…
-
- 0 replies
- 621 views
-
-
சினிமா விமர்சனம்: பாஸ்கர் ஒரு ராஸ்கல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் அரவிந்த் சாமி, அமலா பால், பேபி நைனிகா, மாஸ்டர் ராகவன், சூரி, ரோபோ ஷங்கர், நாசர், அஃப்தாப் ஷிவ்தாசனி, நிகிஷா படேல் இசை அம்ரீஷ் …
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ் திரைப்படத்துறையின் பழம் பெரும் இயக்குநர் சி.ருத்ரய்யா (67), சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். சி.ருத்ரய்யாவின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியான “அவள் அப்படித்தான்” என்ற திரைப்படம் தமிழ் திரையுலகின் மைல்கல்லாக போற்றப்படுகிறது. ரஜினிகாந்த், கமலஹாசன், பிரியா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த அந்த படம், இந்தியாவில் வெளியான மிகச்சிறந்த 100 படங்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தை பூர்வீக மாகக் கொண்ட ருத்ரய்யா, மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற அவருக்கு ஒரு மகள் உண்டு. அவர் வெளிநாட்டில் வசிக்கிறார். தனது இறுதிக் காலத்தை சென்னை லாயிட்…
-
- 12 replies
- 2.7k views
-
-
நார்வே திரைப்பட விழா: எந்திரனுக்கு மூன்று விருதுகள்! [பிரசுரித்த திகதி: 2011-04-26 11:05:11 AM GMT ] ஆஸ்லோ: நார்வே சர்வதேச தமிழ்த்திரைப்பட விழாவில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்தன. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த மேக்கப் மற்றும் சிறந்த தயாரிப்புக்கான விருதுகளை எந்திரன் வென்றது. நார்வே சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ஆஸ்லோவில் துவங்கி 25-ம் தேதி வரை நடந்தது. வசீகரன் சிவலிங்கம் என்ற நார்வே தமிழரின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் எனும் நிறுவனத்தின் அயராத முயற்சியால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த திரைப்பட விழா ஆஸ்லோவில் நடந்தது. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமே சர்வதேச அளவில் நடக்கும் ஒரே தி…
-
- 1 reply
- 1.1k views
-
-
மகன் தனுஷை மாமனார் ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் செய்ய ஆரம்பித்துள்ளார் காஸ்தூரிராஜா. தெலுங்கில் செல்வராகவன் இயக்கிவரும் படம் 'ஆடவாரி மாட்டலுகு அர்த்தலே வேறு' தமிழ் தெரிந்த ஒரு தெலுங்குகாரிடம் இதன் அர்த்தம் கேட்டபோது 'பெண்களின் பேச்சுக்கு அர்த்தமே வேறு' என்று மொழி பெயர்த்தார். வெங்கடேஷ்-த்ரிஷா நாயகன், நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நம்மூர் ஸ்ரீகாந்த், பிரச்சன்னா ஆகியோருக்கும் துக்டா கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி ராஜா தயாரிப்பில் இப்படம் தமிழில் தயாராகிறது. மகன் தனுஷ்தான் நாயகன். சமீபத்திய சர்ச்சை புகழ் நயன்தாரா நாயகி. செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்த ஜவஹர் இயக்கும் இப்படத்திற்கு 'யாரடி நீ மோகினி' என பெயரிட்பபட்டுள்ளது. சென்னை பிரதாப் ஸ்டுடி…
-
- 1 reply
- 1.2k views
-
-
செக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும். அப்படி படத்திற்கு படம் எதிர்ப்பார்ப்பை எகிற வைப்பவர் தான் மணிரத்னம். அவருடைய இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது செக்கச்சிவந்த வானம். ரகுமான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருப்பார், இது நாயகன் ஸ்டைல் படம் என்று, மேலும் மணிரத்னம் புல் ஃபார்மில் உள்ளார் என்றும் தெரிவித்தார், அவரின் வார்த்தைகள் உண்மையானதா? பார்ப்போம். கதைக்களம் பிரகாஷ்ராஜ் தமிழகத்தின் மிகப்பெரும் புள்ளி, விஜய் சேதுபதி ட்ரைலரில் சொல்வது போல் மதிப்பிற்கு உரிய கிரிமினல் தான் பிரகாஷ்ராஜ்.…
-
- 4 replies
- 3.2k views
-
-
-
சின்சியர் டீச்சர்’ அவதாரம் எடுத்த டி டி
-
- 1 reply
- 565 views
-
-
ஈழத்தமிழ் இனத்திற்கு Bigg Boss அவசியமா?
-
- 4 replies
- 1k views
-
-
எதிர்பாராத திசையிலிருந்து பாய்ந்திருக்கும் ஏவுகணையால் கோலிவுட், டாலிவுட் என்று தென்னிந்திய சினிமா உலகம் விக்கித்து நிற்கிறது. தென்னிந்திய நடிக, நடிகைகள் 200 பேருக்கு அமெரிக்காவுக்கு வர நிரந்தரத் தடை விதித்திருக்கிறது அமெரிக்க அரசு. இதற்குக் காரணம் கவர்ச்சி நடிகை ஃப்ளோரா..! மும்பைப் பெண்ணான ஃப்ளோரா மாடல் அழகியாக இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 'கஜேந்திரா', 'குஸ்தி' ஆகிய படங்களில் நடித்திருப்பவர். தெலுங்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆன 'நரசிம்ம நாயுடு' படத்தில் சுப்ரீம் ஸ்டார் பாலகிருஷ்ணாவுக்கு இவர்தான் ஜோடி. நாயகி வாய்ப்புகள் குறைந்து சிங்கிள் பாட்டுக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சிக் காட்டி ஆட ஆரம்பித்தார்.…
-
- 4 replies
- 2k views
-
-
தமிழ் சினிமாவில் கார்பரேட் கம்பெனிகள் செய்ய முனையாத முயற்சிகளையெல்லாம் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் தான் செய்வார்கள். ஆனால் சமீப காலமாய் அம்மாதிரியான சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்களூம், வழக்கமான கதைகளையே எடுத்துக் கொண்டிருக்க, இப்படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் அட்டகத்தி போன்ற வித்யாச படத்தை எடுத்து வெற்றி பெற, இதோ அவரது அடுத்த வித்யாச படைப்பு. த்ரில்லர், ஹாரர், படங்களைப் பார்த்து அதிர்ந்து போய், வாய் பிளந்து படம் பார்த்து மாமாங்கமாகிவிட்டது. அதிலும் தமிழில் அதை விட அதிகமாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் இந்த பிட்சாவில் படம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்களுக்கு பிறகு நடைபெறும் விஷயங்கள் உங்களை திரைக்குள்ளேயே இழுத்துவிடக்கூடிய அளவிற்கு சுவாரஸ்யம். மிகைப்படுத்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
மும்பை, இந்தி நடிகை அலிஷாகானின் ஆபாச படம் இணையதளத்தில் வெளியானதால் அவரை வீட்டில் இருந்து விரட்டி விட்டனர். இதனால் அவர் சாப்பாட்டுக்கு கூட வழி இன்றி ரோட்டிலும், கோவில்களிலும் படுத்து தூங்குகிறார். இந்தி நடிகை டெல்லியை சேர்ந்த மாடல் அழகி அலிஷாகான். இவர் ‘மை ஹஷ்பன்ட் வைப்’ என்ற இந்தி படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் அலிஷாகான் இளைஞர் ஒருவருடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். தன்னுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞரே அந்த வீடியோவை வெளியிட்டு விட்டதாக அந்த புகாரில் கூறி இருந்தார். அனாதையாக சுற்றுகிறார் …
-
- 0 replies
- 631 views
-
-
நிஷ்காம்ய கர்மம்! – வாலி ‘கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை!’ -சிவாஜி, பிரபு நடித்த ‘சுமங்கலி’ என்னும் படத்தில் இந்தப் பாட்டு! எழுதியது நான்; இசையமைத்தது திரு.எம்.எஸ்.வி; பாடியது திரு. டி.எம்.எஸ். நாங்கள் மூவரும் அக்மார்க் ஆத்திகர்கள். பிரபு நடித்து – இந்தப் பாட்டு, தி.நகர் பஸ் நிலையம் அருகே இருக்கும் பெரியார் சிலை யைச் சுற்றிப் படமாக்கப்பட்டது, டைரக்டர் திரு.யோகானந்தால்! கடுமையான கடவுள் நம்பிக்கை உடைய நானும், எம்.எஸ்.வி-யும்; டி.எம்.எஸ்-ஸும் இந்தப் பாடலை – நூறு விழுக்காடு ஈடுபாட்டோடு உருவாக்கினோம். இதற்குப் பெயர்தான் ‘நிஷ்காம்ய கர்மம்’. விருப்பு வெறுப்பின்றி – நமக்கிட்ட பணியைச் செவ்வனே செய்வது தான், ‘நிஷ்காம்ய கர்மம்’. ‘க…
-
- 0 replies
- 668 views
-