வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
என்னோடு நடிக்க முன்னணி நடிகைகள் மறுக்கிறார்கள்- கருணாஸ். காமெடி நடிகர் என்பதால் தன்னுடன் முன்னணி நடிகைகள் யாரும் நடிக்க மறுப்பதாக கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ரகளபுரம் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் கருணாஸ். இதில் அவருக்கு ஜோடி அங்கனா என்ற புதுமுக நடிகை. ஏற்கெனவே திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நாயகனாக நடித்தார். இந்தப் படங்களில் நாயகியாக நடிக்க பல முன்னணி நடிகைகளை அவர் அணுகியும் அவர்கள் மறுத்து விட்டார்களாம். இதுகுறித்து கருணாஸ் கூறுகையில், "என் படங்களில் எனக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளை அணுகினேன். அவர்களோ மறுத்து விட்டனர். தற்போது ‘ரகளபுரம்' படத்தில் புதுமுக நாயகியை ஜோடியாக்கி உள்ளேன். எனது படங்கள் நன்றாக ஓடினாலும் காமெ…
-
- 2 replies
- 834 views
-
-
உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் தான் கதைக்களம். கோவில் புரோகிதரின் மகன் தனுஷ். கல்லூரியில் பேராசிரியரின் மகள் சோனம் கபூர். சிறு வயதிலிருந்து சோனம் கபூர் மீது தனுஷுக்கு ஒருவிதமான ஈர்ப்பு இருந்து வருகிறது. அது இளம்பருவத்தை அடைந்ததும் காதலாக மாறுகிறது. சோனம் கபூரும் தனுஷ் மீது காதலில் விழுகிறார். இந்நிலையில் மேல்படிப்புக்காக டெல்லிக்கு செல்கிறார் சோனம் கபூர். பிறகு ஒருவருடம் கழித்து இருவரும் சந்திக்கும்போது தனுஷ் மீதான காதலை வெறும் ஈர்ப்புதான் என்று கூறி மறுக்கிறார். இதனால் மனமுடையும் தனுஷ் சோனம் கபூருடனான நட்பை விடாமல் தொடர்ந்து பழகி வருகிறார். இந்நிலையில் சோனம் கபூரின் விருப்பமின்றி அவருடைய பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். இந்த திருமணத்தை நிறுத்த த…
-
- 0 replies
- 834 views
-
-
ஸ்லம்டாக் மில்லியனர் ஆங்கில படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு லண்டன் விமர்சகர்கள் விருது வழங்கப்பட்டது.லண்டனை சேர்ந்த டேனி போய்லே இயக்கியுள்ள ஆங்கில படம் ஸ்லம்டாக் மில்லியனர். மும்பை குடிசை பகுதியில் வாழும் 18 வயது இளைஞன், டிவியில் நடக்கும் கேம்ஷோவில் பங்கேற்கிறான். அதில் அவன் ஜெயித்து மில்லியனர் ஆவதுதான் படக்கதை. கேம் ஷோ நடத்துபவராக அனில் கபூர் நடித்துள்ளார். இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். லண்டன் சினிமா விமர்சகர்கள் சங்கத்தினர் இப்படத்தை பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளனர். அதில் சிறந்த இசைக்காக ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், Ôஇப்பட இயக்குனர் டேனி போய்லே எனது நண்பராகிவிட்டார். இப்படத்தில் பின்னணி இசை, அதி…
-
- 0 replies
- 833 views
-
-
'இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உங்கள் இரவுகளை ரணமாக்க வருகிறார்கள்' இப்படி மிரட்டுவது நாமல்ல. திக் திக் பட அழைப்பிதழ்தான் அக்கா புருஷன் மீது தங்கை ஆசைப்படுவதாக கதை சொன்ன 'கலாபக் காதலன்' படத்தை எடுத்து பரபரப்பூட்டிய இகோர் அடுத்து பயமுறுத்தும் படம்தான் 'திக்..திக்..' தலைப்பிலேயே திரில்லர் சஸ்பென்ஸ் தெரியும்போது கதைக்கருவைப்பற்றி சொல்லவேண்டியதில்லை. பாக்யராஜின் மகள் சரண்யாவும், மும்தாஜும்தான் நாயகிகள். நாயகனாக புதுமுகம் ஒருவர் அறிமுகமாகிறார். குரு.முனீஸ்வரன் தயாரிப்பில் உருவாகவுள்ள 'திக்திக்'ல் இமான் இசையமைக்க, சண்டோனியோ ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள பழைய பிள்ளையார் கோவிலில் இன்று காலை நடந்தது. பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, த…
-
- 0 replies
- 832 views
-
-
Robot திரைப்பட பாடல்கள் ஓர் சிறிய விமர்சனம் அண்மையில் சில நாட்களாக நான் உடல்நலம் குறைவாக இருந்தேன், ஒழுங்கான தூக்கமும் இல்லை. இன்று அதிகாலை தூக்கம் கலையவே மின்னஞ்சலை பார்த்தபோது, அதில் ஒன்றில் என்னை புதிய ஒருவர் Twitterஇல் பின் தொடர்வதாக காணப்பட்டது. யார் அவர் என்று பார்ப்பதற்காக Twitterஇனுள் உள்நுழைந்து நானும் அவரை பின்தொடர்வதற்கான பொத்தானை அழுத்தியபின் அவர் வலைத்தளத்தை நோட்டமிட்டேன். அங்கு புதிய தமிழ்த் திரைப்படப்பாடல்கள் ஒலிவடிவில் காணப்பட்டன. அங்கு Robot பாடல்களை கண்ணுற்றேன். நீண்டகாலமாக Robot / எந்திரன் பற்றி பரபரப்பாக பேசப்பட்டதனால் சரி கேட்டுப்பார்ப்போம் என்று நினைத்துவிட்டு play பொத்தானை அழுத்திவிட்டு மீண்டும் தூக்கத்திற்கு சென்றேன். கந்தசஷ்டி கவசம்…
-
- 0 replies
- 832 views
-
-
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது ஏன் கமல்ஹாசன் வீடியோ மூலம் விளக்கம் சென்னை தமிழ்ப்பட உலகில், ‘இயக்குனர் சிகரம்’ என்ற பட்டத்துடன் 100-க்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்து மிகப்பெரிய சாதனைகளை செய்தவர் கே.பாலசந்தர். காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ,அற்றும் நடிகர் நடிககள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மாலை 3 மணிக்கு, கே.பாலசந்தரின் இறுதி ஊர்வலம் சென்னை மைலாப்பூர் வாரன் சாலையில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து புறப்பட்டது. இறுதி ஊ…
-
- 0 replies
- 832 views
-
-
சிபிக்காக சத்யராஜ் செய்த முதலீடு! சினிமாவில் என்னதான் பெரிய நடிகரின் வாரிசாக இருந்தாலும் தனிப்பட்ட திறமை இருந்தால் தான் தாக்குப் பிடிக்க முடியும் என்பதற்கு இங்கே நிறைய உதாரணங்களை சொல்லலாம். அந்த வகையில் சத்யராஜின் வாரிசு சிபியும் ஒருவர். இருபத்தி ஐந்து வருஷமாக சினிமாவில் இருக்கும் சத்யராஜ் "வல்லவனுக்கு வல்லவன்" படத்தை எடுத்து கையை சுட்டுக் கொண்ட பிறகு படம் தயாரிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். தன் வாரிசுக்காக அந்த கொள்கையை தளர்த்தி அவர் எடுத்த படம்தான் "லீ". மொத்த படத்துக்கும் செய்யப்பட்ட செலவு மூன்று கோடியே இருபது லட்சம் ரூபாய். ஆனால் படம் ரிலீஸாகும் போது வியாபாரம் செய்த வகையில் சத்யராஜின் கைக்கு திரும்பி வந்த பணம் ஒரு கோடியே இருபது லட்சம் மட்டும…
-
- 0 replies
- 832 views
-
-
சென்னை புறநகரில் உள்ளது காசி திரையரங்கம் (இது கோடம்பாக்க பாக்ஸ் ஆபீஸ் வரையறை). ஒரு படம் குறித்த மக்களின் நாடித் துடிப்பைத் தெரிந்து கொள்ள சரியான இடம் இதுதான். இந்தத் திரையரங்கில் ஜூலை 6-ம் தேதி வெளியானது நான் ஈ. செமத்தியான கூட்டம். தொடர்ந்து நான்கு காட்சிகளும் ஹவுஸ் புல்லாகவே ஓடிக் கொண்டிருந்த படத்தை, அடுத்த ஆறு நாட்களில் தூக்கிவிட்டார்கள்... காரணம், அஜீத்தின் பில்லா 2. இந்தப் படத்தா ஜூலை 13-ம் தேதி திரையிட்டார்கள். ஆனால் 12-ம் தேதி இரவுக் காட்சிகூட நான் ஈ ஹவுஸ்புல்லாக ஓடியது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு கூட்டம் குவிந்தும் நான் ஈயைத் தூக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடுதான் பில்லாவைத் திரையிட்டார்களாம். பில்லா 2-ன் வசூல் நிலவரம் என்ன என்பது கோடம்பாக்கத்துக்கே த…
-
- 0 replies
- 831 views
-
-
மாற்றமே மாறாதது என்ற மார்க்ஸின் புகழ்பெற்ற வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ... சிம்புவுக்கு நூறுசதம் பொருந்தும். கதாநாயகியை மாற்றுவது, ஒளிப்பதிவாளர்களை மாற்றுவது, சமயத்தில் தயாரிப்பாளர்களையே மாற்றுவது சிம்புவின் சினிமா கேரியரில் சகஜம். 'வல்லவன்' படத்திற்குப் பிறகு தருண்கோபியின் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. இப்போது இதிலும் சிறிய மாற்றம். சிம்புவின் புதிய படத்தை ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்குகிறார். படத்திற்கு 'சிலம்பாட்டம்' என பெயர் வைத்திருக்கிறார்கள். சிம்புவின் புதிய படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிப்பதாக இருந்தது. இப்போது இதுவும் மாறியிருக்கிறது. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தருண்கோபியிடம் கதை கேட்டிருந்தார். அவர் இயக்கும் படத்தைதான் தயாரிப்…
-
- 0 replies
- 831 views
-
-
இணையதளத்தில் எந்திரன்: அதிர்ச்சியில் தியேட்டர் அதிபர்கள் First Published : 07 Oct 2010 08:59:33 AM IST Last Updated : 07 Oct 2010 09:57:25 AM IST சென்னை, அக். 6: இணையதளத்தில் "எந்திரன்' திரைப்படம் தெளிவான காட்சிகளாக வெளியாகி இருப்பதால் பல திரையரங்கு அதிபர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். பல லட்ச ரூபாய் கொடுத்து தங்கள் தியேட்டர்களில் இந்தப் படத்தைத் திரையிட்டுள்ள தியேட்டர் அதிபர்கள், படம் வெளியாகி ஒரு வாரமே ஆகியிருக்கும் நிலையில் "எந்திரன்' திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுவதாகவும் கூறப்படுகிறது. ÷சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள "எந்திரன்' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் திரையிடப…
-
- 2 replies
- 831 views
-
-
விமர்சனம் : இட்லி கடை! 2 Oct 2025, 1:18 PM இது ‘பீல்குட் மூவி’யா?! தமிழில் பாக்யராஜ், பாண்டியராஜன், டி.ராஜேந்தர், பார்த்திபன் என்று வெகு சிலரே தாம் இயக்கிய படங்களில் நாயகனாக நடித்து வெற்றிகளைச் சுவைத்திருக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்றவர்கள் அம்முயற்சிகளில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றனர். இன்னொருபுறம் நாயகர்களாக விளங்கிய சிலர் நடிப்பைத் தாண்டி தமது திறமைகளை வெளிக்காட்ட அல்லது இதர சில காரணங்களுக்காக இயக்குனர்களாகக் களமிறங்கியிருக்கின்றனர். எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், அர்ஜுன், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் என்று அந்தப் பட்டியலும் கொஞ்சம் பெரியதுதான். அந்த வரிசையில் இடம்பெறுகிற இளைய நட்சத்திரங்களில் ஒருவர் தனுஷ். பவர் பாண்டி, ராயன், நிலவுக்…
-
-
- 8 replies
- 830 views
- 1 follower
-
-
Posted Date : 12:20 (12/06/2014)Last updated : 12:22 (12/06/2014) சென்னை: இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் இந்து முறைப்படி சென்னையில் இன்று நடந்தது. 'தெய்வத் திருமகள்' படத்தில் நடித்த போது இயக்குநர் விஜய்க்கும், அமலா பாலுக்கும் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மலர்ந்தது. காதலை மறுத்துவந்த இருவரும் சில வாரங்களுக்கு முன்புதான் தங்கள் காதலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 7ஆம் தேதி விஜய் - அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. அமலா பால் கிறிஸ்தவர் என்பதால், அவர்கள் முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து. இந்நிலையில், இந்து முறைப்படி இருவருக்கும் சென்னையில் இன்று காலை திருமணம் நடந்தது. சென்னை ச…
-
- 4 replies
- 830 views
-
-
தொடர்ந்து தன்னைத் தேடி வருகின்ற எல்லா மொழிப்படங்களையும் அப்படியே கவ்விக் கொண்டு படங்களில் பிஸியாக நடித்து நயன் தாரா தற்போது உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறார். ஆமாம், நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸ் சினிமாவில் பெரிய ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்தாலும் அதில், அவருக்கு திருப்தியே இல்லையாம். காரணம் சமீபகாலமாக அவர் கமிட்டாகி நடித்து வரும் எல்லா படங்களிலும் அவரை ஒரு ஹெஸ்ட்ரோல் மாதிரி தான் பயன்படுத்துகிறார்களாம். அதே படத்தில் நடிக்கும் இளம் நடிகைகளுக்குத் தான் முக்கியமான கேரக்டர்களை கொடுக்கிறார்களாம் டைரக்டர்கள். குறிப்பாக நயன்தாரா நடித்து வரும் "வலை படத்தில், டாப்சிக்கும், "ராஜா ராணி" படத்தில், நஸ்ரியா நஸிமுக்கும், ஹீரோக்களுடன் டூயட் ஆடும் கேரக்டர்களாம். மேலும் படத்தின் கதைகளு…
-
- 4 replies
- 830 views
-
-
[size=5]கரிகாலன் - கழற்றி விடப்பட்ட இயக்குனர் [/size] [size=4]300 ஹீரோ கெட்டப்பில் விக்ரம் நடித்த கரிகாலன் சரித்திரப் படம் நினைவிருக்கிறதா? படப்பிடிப்பு தொடங்கிய சிறிது நாளில் தெய்வத்திருமகள், தாண்டவம் என்று பிஸியானார் விக்ரம். கரிகாலன் கதை கந்தலாகி நின்றது. சரி, தாண்டவத்துக்குப் பிறகு நம்ம படத்துக்கு வருவார் என்று தயாரிப்பாளர்கள் காத்திருக்க, ஷங்கரின் ஐ பட அறிவிப்பு தலையில் இடி இறக்கியது. அதற்காக சும்மா இருக்க முடியாதே? எப்போ கரிகாலனுக்கு வர்றீங்க என்று விக்ரமை கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் சொன்ன பதில், இயக்குனரை மாற்றி கதையில் கரெக்சன் செய்யுங்க. ஹீரோ சொன்னால் தட்ட முடியுமா? கரிகாலனின் இயக்குனர் கண்ணனை மாற்றி படத்துக்கு வசனம் எழுத வந…
-
- 0 replies
- 830 views
-
-
துப்பாக்கி மிலிட்டரியை ஓவர்டேக் செய்திருக்கிறதா 'தெறி' போலீஸ்..?! - தெறி விமர்சனம் #theri கேரளாவில் பேக்கரி நடத்திக்கொண்டு தன் மகள் நைனிகாவுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் விஜய். நைனிகாவின் பள்ளி டீச்சரான எமி ஜாக்சன், ஒரு சின்ன விபத்தின்போது, இடித்தவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்துவிட, ’எந்தப் பிரச்னையும் வேண்டாம்’ என்று புகாரை வாபஸ் செய்ய விஜய் செல்ல, அங்கே விஜயைப் பார்க்கும் ஒரு ‘பேட்ச் மேட்’ மூலம் ’ஜோஸப் குருவிலா என்று தன்னை சொல்லிக் கொள்ளும் இவர் யார்?’ என்ற கேள்வி எமி ஜாக்சனுக்கு எழுகிறது. அதற்கான விடையை, கமர்ஷியல் ஐஸ்க்ரீமில், செண்டிமெண்ட் டாப்பிங் கலந்து தந்திருக்கும் படம்தான் ‘தெறி’ நடிப்பிலும் சரி அழகிலும் சரி விஜய்க்கு…
-
- 1 reply
- 830 views
-
-
[size=4]பில்லா 2 படத்தின் வசூல் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லாததால், அந்தப் படத்தை வெளியிட்ட கேரள விநியோகஸ்தருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்லதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.[/size] [size=3][size=4]பில்லா 2 படம் கேரளாவில் பெரிய அளவில் வெளியிடப்பட்டது. அஜீத்துக்கு கேரளாவில் பெரிய அளவு ரசிகர்கள் வட்டம் கூட கிடையாது. ஆனாலும், பில்லா 2 படத்துக்கு கொடுக்கப்பட்ட பெரும் விளம்பரங்களைப் பார்த்து பெரும் விலைக்கு வாங்கி வெளியிட்டிருந்தார் அந்த விநியோகஸ்தர்.[/size][/size] [size=3][size=4]ரூ 1.50 கோடிக்கு இந்தப் படத்தை அவர் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது.[/size][/size] [size=3][size=4]முதல் இரு தினங்கள் மட்டும் ஓரளவு கூட்டம் வந்ததாகவும், அடு…
-
- 0 replies
- 830 views
-
-
ஆடு ஜீவிதம்.. 14 வருட காத்திருப்புக்குப் பின் வெளியாகும் படம்..! March 11, 2024, 1:18 pm IST பிருத்விராஜ் நடிப்பில் பிளெஸ்ஸி இயக்கியிருக்கும், ஆடு ஜீவிதம் (தி கோட் லைஃப்) திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராக பிருத்விராஜ் நடித்திருக்கும் காட்சிகள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. ஒளிப்பதிவு, கதைக்களம், எடிட்டிங், இசை, நடிப்பு, இயக்கம் என அனைத்தும் ட்ரெய்லரில் உலகத்தரத்தில் அமைந்துள்ளது. 2008 ல் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த நஜீப் முகமது சவுதி அரேபியாவுக்கு ஆடு மேய்க்கும் வேலைக்குச் சென்று அங்கு மாட்டிக் கொள்வதை அடிப்படையாக வைத்து ஆடு ஜீவ…
-
-
- 2 replies
- 830 views
-
-
சென்னை: தளபதி விஜய் டபுள் ஆக்ஷனில் மிரட்டியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படம் செப்டம்பர் 5ம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, ஜெயராம், லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பிஜிஎம் பக்காவாக அமைந்துள்ளது. விசில் போடு மற்றும் மட்ட பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். பீஸ்ட், வாரிசு, லியோ என வரிசையாக விஜய் நடிப்பில் வெளியான படங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில்,…
-
-
- 5 replies
- 828 views
- 1 follower
-
-
சார் ஏன் இந்த கொலை வேறி? நடிகர் கார்த்திக்கிற்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் தான் பிடிக்குமாம். காக்கா பிடிக்கிறதுக்கு இந்த கூத்தாடியளுக்கு உலக சம்பியன் பட்டமே கொடுக்கலாம். www.youtube.c...d&v=m51jQffSb34
-
- 0 replies
- 828 views
-
-
கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு! இரா.சரவணன் சமீபத்தில் வெளியான கங்குவா படம் குறித்து சமூக வலைத்தளங்களில் வன்மத்தை கக்கும் விமர்சனங்கள் வெளிப்பட்டன. அவை கங்குவா என்ற படத்தைக் கடந்து நடிகர் சூர்யா குடும்பத்தை தாக்கும் விமர்சனமாகவும் தூக்கலாக வெளிப்பட்டது. இந்தச் சூழலுக்கு இயக்குனர் இரா.சரவணன் மிக சிறப்பாக எதிர் வினையாற்றி இருக்கிறார்; இவர் மிகச் சமீபத்தில் வெளியான நந்தன் படத்தின் இயக்குனர். இந்தப் படம் உள்ளாட்சிகளில் பட்டியலினத் தலைவர்கள் தற்காலத்தில் சந்திக்க நேரும் அவமானங்கள் குறித்து மிகுந்த சமூக அக்கறையுடன் கவனப்படுத்தி இருந்தது. இவரது முந்திய படங்களான கத்துக்குட்டி, உடன்பிறப்பே போன்றவையும் சரவணனின் சமூக அக்கறைக்கு சாட்…
-
-
- 7 replies
- 827 views
-
-
பொது இடங்களில் மிகமிகக் குறைச்சலான உடையில்தான் வருவேன், என்று நடிகை ஸ்ரேயா சபதம் எடுத்துள்ளார் போலிருக்கிறது.ஏற்கெனவே சிவாஜி பட விழா, கந்த சாமி பட விழாக்களில் தம்மாத்துண்டு உடையோடு மேடையேறி, ‘தமிழ் கலாச்சாரக் காவலர்களின்’ கடும் கண்டனத்தைச் சம்பாதித்துக் கொண்டவர் ஸ்ரேயா. ஆனாலும் அம்மணி தனது உடை விஷயத்தில் தொடர்ந்து பிடிவாதமாக கஞ்சத்தனம் காட்டி வருகிறார். சமீபத்தில் ஒரு நிறுவனம், சென்னையில் தங்கள் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்த ஸ்ரேயாவை அழைத்திருந்தது. விஷயம் அறிந்ததும் ஸ்ரேயாவை காண பெருங்கூட்டம் கூடியது. விழாக் குழுவினர் அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்க வில்லை. அந்த நேரம் பார்த்து மகா குட்டையான ஸ்கர்ட் மற்றும் லோ நெக் டாப்ஸ் அணிந்து வந்திருந்தார் ஸ்ரேயா. அவ்வளவ…
-
- 1 reply
- 826 views
-
-
- நீரை.மகேந்திரன் படம் : செங்கடல் ஆண்டு : 2011 மொழி : தமிழ் - ஆங்கிலம் - சிங்களம் - தெலுங்கு இயக்கம்: லீனா மணிமேகலை. செங்கடல்... நீண்ட சட்ட மற்றும் தணிக்கைப் போராட்டங்களை சந்தித்த திரைப்படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. ஏற்கெனவே சென்னையில் சில முறை திரையிடப்பட்ட பொழுது (இரண்டு தடவை என நினைக்கிறேன்) பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையாததால் இந்த முறை தவற விட்டுவிடக்கூடாது முதல் நாளே முடிவு செய்து விட்டேன். இந்தப் படம் குறித்து ஏற்கெனவே ஊடகங்கள் வழி கேள்விப்பட்டிருந்த தகவல்கள், தணிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்ததாக வெளியான செய்திகள், தமிழின் முக்கியமான ஆவணப்பட இயக்குநர் இ…
-
- 2 replies
- 826 views
-
-
[size=6]விஸ்வரூபத்தில் கமலின் சம்பளம் ரூ. 45 கோடி[/size] [size=4][/size] [size=4]விஸ்வரூபம் படத்தில் கமல் ஹாசனின் சம்பளம் ரூ. 45 கோடி என்று தயாரிப்பு வட்டம் தெரிவித்துள்ளது.[/size] [size=3][size=4]தமிழ் மற்றும் இந்தியில் மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் விஸ்வரூபம். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் உலக அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. படத்தில் கமல் ஹாசன் கதக் கலைஞர், தீவிரவாதி உள்ளிட்ட பல கெட்டப்களில் வருகிறார்.[/size][/size] [size=3][size=4]படத்தில் கிராபிக்ஸ் எது, நிஜம் எது என்று தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் செய்துள்ளார்களாம். இந்த படத்தின் வியாபாரம் ரூ.120 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…
-
- 1 reply
- 826 views
-
-
-
- 2 replies
- 825 views
-
-
Posted by சங்கீதா on 29/06/2011 in புதினங்கள் இந்த வருடம் நடந்த (2011) 58ம் இந்திய தேசிய திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்கள் 14 விருதுகளைப் பெற்றுள்ளன. இந்த வரலாறு காணாத சாதனையை வட இந்தியத் திரைப்படவுலகம் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. எந்திரன், ஆடுகளம், மைனா, தென் மேற்குப் பருவக் காற்று ஆகிய நான்கு தமிழ்ப் படங்களும் இந்த 14 விருதுகளையும் பெற்றுள்ளன. எந்திரன், ஆடுகளம் ஆகிய படங்களை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. மைனா என்ற படத்தைக் கருணாநிதியின் மகன் ஸ்ராலினின் புதல்வன் உதயநிதி தயாரித்தார். சிறந்த நடிகராக ஆடுகளம் படக் கதாநாயகன் தனுஷ் பெற்றுள்ளார். ரஜினிகாந்தின் முதலாவது மகளின் கணவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தென் மேற்குப் பருவக் காற்ற…
-
- 0 replies
- 825 views
-