வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
"கடவுள் இருக்கிறார்" என்கிறார் ரஜனிகாந் 40514089da49c9eacbc393905cc43715
-
- 3 replies
- 1.1k views
-
-
அரசியல் பிரச்சனையால் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தலைகாட்டும் வடிவேலுவின் புதிய படம், "ஜெக ஜால புஜபல தெனாலிராமன். இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி முடித்துள்ளது படக்குழு. இதற்காக ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் பிரமாண்ட வடிவில் செட் அமைத்து 12 நாட்கள் இந்தப் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். முதலில் பாடல் காட்சியை படமாக்கிய அவர்கள் அதில் வடிவேலுவுக்கு, 42 மனைவிகளும், 56 பிள்ளைகளும் இருப்பது போன்று எடுத்துள்ளனர். இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக்கொண்டு நடித்தாராம் வடிவேலு. தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பை தென்மாவட்டங்களில் நடத்திட திட்டமிட்டுள்ளனர். இதனிடையே வடிவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
என் அம்மா சரிகா, நான் ஏன் கௌதமியை அம்மான்னு கூப்பிடணும்?: ஸ்ருதி. சென்னை: எனக்கு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. நான் ஏன் கௌதமியை அம்மா என்று அழைக்கணும் என ஸ்ருதி ஹாஸன் கேள்வி எழுப்பியுள்ளார். கமல் ஹாஸன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா. இந்நிலையில் கமல், சரிகா விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு கமல் நடிகை கௌதமியுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார். இந்நிலையில் இது குறித்து ஸ்ருதி கூறுகையில், பிரிந்து செல்ல வேண்டும் என்பது என் பெற்றோரின் சொந்த விஷயம். அதனால் அது குறித்து நான் பேச விரும்பவில்லை. எனக்கு என் பெற்றோரின் சந்தோஷம் தான் முக்கியம். அவர்களே சந்தோஷமாக பிரிந்துவிட்டதால் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை. என் தாய் மற்றும் தந்தையுடன் …
-
- 2 replies
- 938 views
-
-
எண்டர் தி டிராகன் படத்தில் வில்லியம்ஸ் வேடத்தில் நடித்தார் ஜிம் கெல்லி எண்டர் தி டிராகன் எனும் பிரபலத் திரைப்படத்தில் புரூஸ் லீயுடன் நடித்த நடிகரும் கராத்தே வல்லுநருமான ஜிம் கெல்லி புற்றுநோய் காரணமாக தமது 67 ஆவது வயதில் காலமானார். 1973 ஆம் ஆண்டில் வெளியான எண்டர் தி டிராகன் திரைப்படத்தில், வில்லியம்ஸ் எனும் பாத்திரத்தில் நடத்த அவர் அதில் பேசிய ஒற்றை வசனங்களுக்காக நன்கு அறியப்பட்டார். பிளாக் பெல்ட் ஜோன்ஸ், த்ரீ த ஹார்ட் வே, கோல்டன் நீடில்ஸ் மற்றும் பிளாக் சமுராய் ஆகியவை அவர் நடித்த இதர பிரபலப் படங்கள். குங் ஃபூ தற்காப்பு கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில், மிகப் பிரபலமாவைகளில் ஒன்றாக எண்டர் தி டிராகன் கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் புரூஸ் லீ நடித்த முதல் படமு…
-
- 0 replies
- 442 views
-
-
கமல் மகள் சுருதிஹாசன் படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. 'டிடே' என்ற படத்தில் விலைமாது கேரக்டரில் ஆபாசமாக நடிப்பதற்கும் எதிர்ப்புகள் வந்துள்ளன. இதற்கு பதில் அளித்து சுருதிஹாசன் ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கமல் மகள் எல்லை தாண்டி கவர்ச்சியாக நடிக்கிறார் என்று என்னை விமர்சிக்கின்றனர். சினிமா என்பது ஒரு தொழில் நடிக்க வந்த பிறகு கதை என்ன கேட்கிறதோ அதில் முழுமையாக ஈடுபடவேண்டும். நீச்சல் உடையில் நடிக்க வேண்டிய நிலை வரும் போது நடிக்கத்தான் வேண்டும். அது தவறல்ல. விலைமாது கேரக்டரில் நான் ஆபாசமாக நடிக்கிறேன் என்கின்றனர். கலைகண்ணோட்டத்தோடு அதை பார்க்க வேண்டும். நிறைய நடிகைகள் விலைமாது கேரக்டரில் கவர்ச்சியாக நடித்துள்ளனர். அவர்களை யாரு…
-
- 0 replies
- 919 views
-
-
சென்னை: இசை படம் இளையராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் எடுக்கப்படுகிறதாம். இதில் ஏ.ஆர். ரஹ்மான் தோற்றத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி, இசையமைத்து, நடிக்கும் படம் இசை. இந்த படத்தில் அவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தோற்றத்தில் நடிக்கிறாராம். படம் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையைப் பற்றியது தானாம். இசைஞானி என்பதில் ஞானியைத் தூக்கிவிட்டு இசை என்று படத்திற்கு தலைப்பு வைத்துள்ளாராம் சூர்யா. படத்தில் இளையராஜாவை ரசிகர்கள் கடவுளாக நினைத்து வணங்கியது, போஸ்டர் அடித்து ஒட்டியது உள்ளிட்ட பல சம்பவங்கள் இடம்பெறுள்ளதாம். http://tamil.oneindia.in/movies/news/2013/07/isai-is-ilayaraja-s-biopic-178188.html
-
- 0 replies
- 400 views
-
-
உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் தான் கதைக்களம். கோவில் புரோகிதரின் மகன் தனுஷ். கல்லூரியில் பேராசிரியரின் மகள் சோனம் கபூர். சிறு வயதிலிருந்து சோனம் கபூர் மீது தனுஷுக்கு ஒருவிதமான ஈர்ப்பு இருந்து வருகிறது. அது இளம்பருவத்தை அடைந்ததும் காதலாக மாறுகிறது. சோனம் கபூரும் தனுஷ் மீது காதலில் விழுகிறார். இந்நிலையில் மேல்படிப்புக்காக டெல்லிக்கு செல்கிறார் சோனம் கபூர். பிறகு ஒருவருடம் கழித்து இருவரும் சந்திக்கும்போது தனுஷ் மீதான காதலை வெறும் ஈர்ப்புதான் என்று கூறி மறுக்கிறார். இதனால் மனமுடையும் தனுஷ் சோனம் கபூருடனான நட்பை விடாமல் தொடர்ந்து பழகி வருகிறார். இந்நிலையில் சோனம் கபூரின் விருப்பமின்றி அவருடைய பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். இந்த திருமணத்தை நிறுத்த த…
-
- 0 replies
- 834 views
-
-
வித்தகன், துரோகி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூர்ணா. தற்போது ‘படம் பேசும்‘ என்ற படத்தில் சக்தி ஜோடியாக நடிக்கிறார். ராகவா இயக்குகிறார். இதனை நாராயணபாபு, பூர்ணிமா, வாசன் எஸ்.எஸ். தயாரிக்கின்றனர். இதில் நடிப்பது பற்றி பிரஸ் மீட்டில் பூர்ணா கூறியதாவது: இதுவரைக்கும் ஆறு படங்களில் நடிச்சுட்டேன். எதுவுமே ஓடல. ஆனால் இந்த படம் எனக்கு தமிழ்சினிமாவில் பெரிய இடத்தை கொடுக்கும். இப்படத்தின் கதையை இயக்குனர் ராகவா எனக்கு மெயிலில் அனுப்பி 2வது ஹீரோயினாக நடிக்க கேட்டிருந்தார். அந்த கேரக்டரை படித்ததும் வித்தியாசமாக இருந்தது. 2வது ஹீரோயின் பாத்திரமாக இருந்தாலும் நடிக்க சம்மதித்தேன். இதைவிட ஹீரோயின் வேடம் நன்றாக இருந்தது. அந்த கதா பாத்திரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மனது…
-
- 0 replies
- 543 views
-
-
ஒரு அழகான ஹீரோயின் கூட நான் டூயட் பாடறது கூட பொறுக்கல பல ஹீரோக்களுக்கு! - வடிவேலுஒரு அழகான ஹீரோயினுடன் நான் டூயட் பாடினா கூட இங்குள்ள பல ஹீரோக்களுக்கு பொறுக்கவில்லை, என்று கூறியுள்ளார் வடிவேலு. 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்கும் படம் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன். இதில் அவர் தெனாலிராமன், மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆகிய இரு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு இந்தப் படத்தில் ஏகப்பட்ட ஜோடிகள். குறிப்பாக கிருஷ்ணதேவராயராக வரும் வடிவேலுவுக்கு 36 மனைவிகளாம்! படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தவர் பில்லா 2 படத்தில் நடித்த பார்வதி ஓமணக் குட்டன். ஆனால் இப்போது அவர் இல்லை. மீனாட்சி தீக்ஷித் என்பவர் நடிக்கிறார். இதுகுறித்து வடிவேலு கூறுகையில், "அந்தப் புள்ளை தாங…
-
- 4 replies
- 781 views
-
-
நடிகை ஸ்ரேயா இப்போது சந்திரா, பவித்ரா என கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சந்திரா படத்தில் இளவரசியாக அசத்தினாலும் பவித்ரா படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார். அழகாக இருந்தாலும் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆகி தமிழில் சரியான வாய்ப்புகள் இன்றி இருக்கிறார் ஸ்ரேயா. தெலுங்கில் இஷ்டம், தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, சிவாஜி படத்தில் ரஜினியுடன் ஜோடி என்ற அளவிற்கு உயர்ந்தார். அடுத்தடுத்த படங்கள் ஹிட் ஆகாமல் ஏமாற்றவே சரியான வாய்ப்புகள் இல்லை. ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், விஷால், என பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் சந்திரா, பவித்ரா படங்கள் தனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில…
-
- 20 replies
- 3k views
-
-
வாழ்க்கையில் குறைந்த பட்ச ஒழுக்கத்தை கூட கடைபிடிக்காதவர்களின் வாழ்வு இப்படி தான் இருக்கும். – எயிட்ஸ் பிடித்த ஒரு பிரபல நடிகையின் கதை.. June 29, 2013 9:15 am பதிந்தவர் Supes கமலோடு டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதா நாயகி யாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்க வில்லை. அப்படியே சில நாட்கள் அனாதை யாகக் கிடந்தார் நடிகை நிஷா. எய்ட்ஸ் நோய் இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்தார்…
-
- 11 replies
- 4.3k views
-
-
இங்கிலாந்தின் பிரபல மாடல் டமாரா எக்கிள்ஸ்டோன், கடந்த வாரம் தன் காதலரைக் கரம் பிடித்தார். மூன்று கோடி ரூபாய் வாடகையைக் கொட்டிக்கொடுத்து ஹைடெக் படகு ஒன்றை ஹனிமூனுக்காக அமர்த்தினார். இத்தாலி கடலில் மிதக்கும் படகில் இருந்தபடி ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்டுத் தன் திருமணத்தை டமாரம் அடித்து மகிழ்ந்தார் டமாரா எக்கிள்ஸ்டோன்.http://www.dinaithal.com/cinema/16573-honeymoon-photos-ekkilston-published.html
-
- 0 replies
- 418 views
-
-
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் – பின்னணிப் பாடகி சைந்தவி திருமணம் சென்னையில் நடந்தது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரு தரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தனர். அதன்படி இருவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம். ஹோட்டல் ரெயின் ட்ரீயில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சைந்தவிக்கு மோதிரம் அணிவித்தார் ஜிவி பிரகாஷ். இன்று காலை இருவருக்கும் சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமகள் சைந்தவிக்கு ஜிவி பிரகாஷ் தாலி கட்டினார். திருமணத்துக்கு திரளான நட்சத்திரங்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்…
-
- 1 reply
- 2.1k views
-
-
தனுஷ் ஆச்சர்யக்குறி ராஞ்சனாவின் தமிழ்ப் பதிப்பான அம்பிகாவதி பார்த்தேன், தனுசைப் பற்றி சிறிது பேச ஆசை, தனுசைப் பற்றிய முதல் அறிமுகம் எனக்கு கிடைத்தது தின முரசு பத்திரிகை மூலம் ,தின முரசு பத்திரிகை ஈ பி டி பி யின் பத்திரிகை ,அரச சார்பானது ,ஆனால் அந்தப் பத்திரிகையை கடும் புலி ஆதரவாளர்கள் ,தேசப் பற்றாளர்கள்,உணர்வாளர்கள் என அனைவருமே வாங்குவார்கள்,வாங்கி ஒளிவு மறைவாகப் படிப்பார்கள் காரணம் சிம்பிள் பத்திரிகை கொஞ்சம் கொஞ்சம் அஜால் குஜாலானது ,இந்தியாவில் இருப்பது போல செக்ஸ் கதைகளுக்கு என சரோஜா தேவி போன்ற புத்தகங்கள் ஈழத்தில் திரைகடல் ஓடினாலும் கிடைக்காது ,இன்டெர் நெட்டில் அறிவை வளர்க்கலாம் என்றால் கிரகம் …
-
- 3 replies
- 2.1k views
-
-
சூர்யாவின் சம்மதத்துடன், ஜோதிகா மீண்டும் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா 2006ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு நடிப்பதில்லை என்று திரையுலக வாழ்க்கையை விட்டு ஒதுங்கியிருந்தார். ஆனால் நீண்ட நாள் இடைவெளிக்கு பின்பு சூர்யாவுக்காக ஒரு விளம்பர படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்தார் ஜோதிகா. இதனைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்கப்போகிறாராம். 'ஹரிதாஸ்' சினேகா கதாபாத்திரம், 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' ஸ்ரீதேவி கதாபாத்திரம் போல் கிடைத்தால் நடிப்பதற்கு தயாராக உள்ளாராம். இதற்கு சூர்யாவும் தன்னுடைய சம்மதத்தை தந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபடியும் ஜோதிகாவின் "ரா ரா"!!! http://dinaithal.com/c…
-
- 10 replies
- 5.7k views
-
-
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் – பின்னணிப் பாடகி சைந்தவி திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரு தரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தனர். அதன் படி இருவருக்கும் நேற்று ஹோட்டல் ரெயின் ட்ரீயில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மோதிரம் அணிவித்துக் கொண்டனர். இன்று காலை இருவருக்கும் சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. மணமகள் சைந்தவிக்கு ஜி.வி பிரகாஷ் தாலி கட்டினார். திருமணத்துக்கு திரளான நட்சத்திரங்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.…
-
- 0 replies
- 660 views
-
-
ஆதிபகவன் திரைப்படத்திற்குப் பிறகு ஃபெப்சி தலைவராகவும், இயக்குனர் சங்க தலைவராகவும் பதவி வகித்துக்கொண்டிருந்த அமீர், தனது திறமை பதவிகளுக்கு அடியில் சிக்கிவிடக் கூடாது என முடிவெடுத்து ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே’ திரைப்படத்தில் ஒப்பந்தமானார். ஆதாம்பாவா தயாரிப்பில் ‘கொள்ளைக்காரன்’ திரைப்பட இயக்குனர் சந்திரன் இயக்கத்தில் உருவாகிறது பேரன்பு கொண்ட பெரியோர்களே திரைப்படம். மதுரையைச் சேர்ந்த இளைஞன் அரசியலில் முன்னேறும் கதையை அலப்பறைகளுடன் சொல்கிறதாம் பேரன்பு கொண்ட பெரியோர்களே திரைப்படம். பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்தியின் பாடி லாங்குவேஜ் மொத்தமும் அமீர் இறக்கியது என்பதால், இந்த கதையை அமீர் தைரியத்துடன் கையில் எடுத்திருந்தார். ஆனால் சமீபத்தில் பேரன்பு கொண்ட பெரியோர்களே படப்பி…
-
- 0 replies
- 435 views
-
-
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பாடகராக அவதாரம் எடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் போன்ற படங்கள் வெற்றி அடைந்ததால் கொலிவுட்டில் சிவகார்த்திகேயனுக்கு மவுசு கூடிவிட்டது. இதனை தொடர்ந்து நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராம் ஜாவ் இயக்குகிறார், இவர் ஓகே.ஓகே, பாஸ் என்ற பாஸ்கரண் போன்ற படங்களில் ராஜேஷின் உதவியாளராக பணியாற்றியவர். இதில் பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் டி.இமானின் இசையில் இப்படத்தில் பாடலொன்றையும் பாடியுள்ளாராம் சிவகார்த்திகேயன். பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த மாத…
-
- 0 replies
- 487 views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து விரைவில் ரிலீஸாக இருக்கும் ‘கோச்சடையான்’ பற்றிய புதியபுதிய தகவல்கள் எல்லாமே அவ்வப்போது கசிந்து கொண்டுதான் இருக்கின்றன.அந்த வகையில் இந்தப்படத்தில் அப்படி என்னதான் விசேஷம் உள்ளது என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்க, தற்போது கோச்சைடையானில் ராட்சத சுறாவுடன் ரஜினிகாந்த் சண்டை போடுவது போல மிகப்பிரம்மாண்டமான சண்டைக்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் திரைப்படம் கோச்சடையானில் ரஜினி அப்பா, மகன் இரட்டை கேரக்டரில் வருகிறார். ரஜினிக்கு ஜோடியாக முதன்முறையாக இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. மேலும் ப…
-
- 0 replies
- 520 views
-
-
எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துடுச்சு- அஞ்சலி மகிழ்ச்சி. ஹைதராபாத்: என்னைச் சூழ்ந்திருந்த எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டன. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்கிறார் அஞ்சலி. சித்தி கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறி, சில நாட்கள் தலைமறைவாக இருந்து, பரபரப்பைக் கிளப்பி பின் போலீசில் ஆஜரானார். தமிழ் - தெலுங்குப் படங்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் தன் சித்தியுடன் சமரசமும் ஆகிவிட்டார். இதுவரை தன் வாழ்க்கையில் நடந்தவை குறித்து செய்தியாளர்களிடம் அஞ்சலி கூறுகையில், "இதுவரை என் வாழ்வில் நடந்தவற்றை மறக்கவே விரும்புகிறேன். என்னால் சமாளிக்க முடியாத ஒரு சூழ்நிலையில்தான் வீட்டை விட்டு வெளியேறினேன். இந்த முடிவுதான் என் பிரச்சினைகளுக்கு முற்றுப் …
-
- 7 replies
- 815 views
-
-
குத்துப்பாடல் ஒன்றுக்கு டி.ஆர்.ராஜேந்திரனுடன் ஆட்டம் போட முடியாமல் திணறினாராம் முமைத் கான். சிறையில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிப்பில் உருவான "ஆர்யா சூர்யா" படத்தில் குத்துப்பாட்டுக்கு நடனமாடுகிறார் டி.ஆர். இந்த பாடலை அவரே எழுதி இசையமைத்தும் பாடியிருக்கிறார். இதன் படப்பிடிப்பானது சமீபத்தில் சென்னையில் நடந்தபோது டி.ஆரின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி போனராம் முமைத் கான். முதல் நாள் ஆட்டத்திலேயே திணறிய அவர், இரண்டு நாட்கள் கழித்து ஒருவழியாக ஆடி முடித்து விட்டாராம். இது குறித்து முமைத் கான் கூறுகையில், இன்றைய இளவட்ட நடிகர்களையே ஒரு கை பார்த்துவிடும் நான், முன்னாள் நாயகன் ஒருவருடன் ஆட முடியாமல் திணறி விட்டேன். இதற்கு காரணம் இந்த வயதிலும் டி.ஆர் த…
-
- 1 reply
- 514 views
-
-
தனுஷை பாலிவுட் கொண்டாடுவதன் இரகசியம் தெரியுமா? தனுஷின் முதல் ஹிந்தி படமான ராஞ்ஹனாவைப் பார்த்த வட இந்திய மக்கள் அவரின் நடிப்பை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுகின்றனராம். தனுஷ், சோனம் கபூர் நடித்த ராஞ்ஹனா திரைப்படம் கடந்த 21ம் திகதி வெளியானது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் தனுஷின் நடிப்பில் அசந்துவிட்டனர். அடடா என்ன அருமையாக நடித்திருக்கிறார், படத்தை தனுஷுக்காக பார்க்கலாம் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். என்னடா, நம்ம தனுஷை நமக்கு தெரியாதா, இவர்கள் என்ன இப்படி கொண்டாடுகிறார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? காரணம் இருக்கிறது. பாலிவுட்டில் இளம் கதாநாயகர்கள் தொடங்கி வயதாகியும் கதாநாயகனாகவே நடிப்பவர்கள் வரை அனைவரும் 6 பேக்கை காட்டுவதில் தான் குறியாக…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஸ்ருதி நடித்துள்ள படத்துக்கு பிராமணர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வி தேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம் பலுபு. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதற்கு பிராமணர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி ஏ. பி. பிராமண சேவா அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் துரோனம்ராஜு ரவிகுமார் கூறும்போது, கடந்த ஆண்டு எங்கள் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு எதிராக ஒரு படம் திரைக்கு வந்தது. அதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில வெளியான பலுபு' பட டிரைலரை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். கடந்த ஆண்டு நாங்கள் நடத்திய நியாயமான போராட்டதை கிண்டல் செய்யும் விதமாக…
-
- 5 replies
- 809 views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=SuuypjzzqRw#at=55 ஆட்டத்துக்கு நல்ல பாட்டு!!! அர்த்தமில்லா குத்துப்பாட்டு!!! யாரும் பொழிப்புரை எழுதத் தேவையில்லை. அவங்களே எழுதிட்டாங்க!!!!
-
- 1 reply
- 687 views
-
-
வாடகை வீடுதான்.. அந்த வீட்டின் பெயரே சரஸ்வதிதான்.. வாசலில் ஒரு பிள்ளையார் கோவில். பழுத்த நாத்திகரான, பெரியாரின் அருட்பெருந்தொண்டரான நாத்திக மணிவண்ணனின் வீடு ஆத்திகமும் கலந்துதான் இருக்கிறது.. ஒரு பக்கச் சுவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், டார்வின், காரல்மாக்ஸ், ஏங்கல்ஸ், தந்தை பெரியார், தம்பி பிரபாகரன் இவர்களைச் சுமந்து கொண்டு நிற்கிறது. இதனாலேயே அந்த வீட்டுக்குள் யாரும் செருப்பு சுமந்து நடக்கக் கூடாது என்பது விதியாம்..! அதே சுவரின் அடுத்தப் பக்கம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து சாமிகளின் புகைப்படங்களும் அணிவகுத்திருக்கின்றன..! தன் பாதியான திருமதியாருக்கு உரிய மரியாதையும் அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறார் மணிவண்ணன்..! பக்திப் பழம் சொட்டுகிறது வீட்டின் மற்ற பகுதிகளில்..! பாவம் இய…
-
- 9 replies
- 2.8k views
-