Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. கமல் இயக்கி நடிக்கும் 'உத்தம வில்லன்' திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க மறுத்ததை அடுத்து திவ்யா ஸ்பாந்தனாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கும் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிப்பதற்கும் காஜல் அகர்வாலிடம் கால்சீட் பேசி வந்தனர். ஆனால், பேச்சுவார்த்தையில் என்ன பிரச்னை ஏற்பட்டது என்பதை வெளியில் சொல்ல மறுக்கும் காஜல், தன்னிடம் அதுபற்றி விசாரிப்பவர்களிடம், அந்த படத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக இருந்தேன். ஆனால் அவர்கள் கேட்ட தேதியில் எனக்கு வேறு படம் இருப்பதால் என்னால் கால்சீட் தர முடியவில்லை என்று சொல்லி சமாளித்து வருகிறார். இந்நிலையில் காஜலுக்கு பதிலாக திவ்யா ஸ்பாந்தனா(குத்து படத்தில் நடித்த ரம்யாதான் இந்த திவ்யா ஸ்பாந்தனா…

  2. பாலிவுட் நடிகை ஜியாகானின் மறைவிற்கு நீதி கிடைக்க வேண்டி போராட பேஸ்புக்கில் ஒரு பக்கம் உருவாக்க பட்டுள்ளது. சொந்த வாழ்கையில் ஏற்பட்ட சில ஏமாற்றங்களால் மன விரக்திக்கு உள்ளான அவர் சில நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று "Justice for Jiah Khan", (URL:https://www.facebook.com/Justice.For.Jiah.Khan). என்ற பக்கம் துவங்கப்பட்டு உள்ளது. இது செய்தி மற்றும் இணையதளம் மூலம் எடுக்கப்படும் ஒரு முயற்சி ஆகும். அநேக திரை உலக கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் இதனைப்பெரிதும் ஆதரிக்கின்றனர். ஜியா கானின் மரணமானது யாரும் எதிர் பாராதது என்றும், நொடியில் திடீர் என்று நடந்து முடிந்து விட்டது என்றும் அந்தப்பக்கத்தில் த…

  3. உடுமலை ஒன்றியப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில், முதல்வகுப்பு ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கையினை அதிகரிக்கும் வகையில், ஆங்கில வழி கல்வி வகுப்பு துவங்க திட்டமிடப்பட்டது. இதற்காக அரசு ஒன்றியங்களுக்கு குறிப்பிட்ட பள்ளிகள் தேர்வு செய்து பட்டியல் வழங்க உத்தரவிட்டது. இதற்கான கருத்துரும் உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து, தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டன. உடுமலையில், காமராஜ் நகர், கண்ணமநாயக்கனூர், பெரியவாளவாடி, எலையமுத்தூர், சிவசக்தி காலனி, சுண்டக்கம்பாளையம், சின்ன பூலாங்கிணர், கிளுவங்காட்டூர் உள்ளிட்ட ஒன்பது பள்ளிகளில…

    • 0 replies
    • 483 views
  4. பெரும்பாளும் இயக்குநர் கவுதம் மேனனின் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதில் தவியாய் தவிப்பார்கள் ஹீரோயின்கள். ஏன் எனில் அவரது திரைப்படங்கள் எல்லாம் கதநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கதையம்சமுள்ள படங்களாக இருக்கும். இந்நிலையில் கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர அமலா பாலுடன் போட்டி போடுகிறார் த்ரிஷா. ஏற்கனவே கவுதம் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து அசத்தியவர் த்ரிஷா, இதனால் துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுடன் ஜோடியாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இதில் த்ரிஷா நடிப்பது 50 சதவீதம்தான் உறுதியாகியுள்ளது. காரணம், பட ஹீரோயின் வேடத்துக்காக அமலா பால் பொருத்தமாக இருப்பார் என்றும் யூ…

    • 0 replies
    • 321 views
  5. நடிகர் சிம்பு சென்னை தி.நகரில் புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறாராம். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நாளை நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ள சினிமாத் துறையைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகை ஹன்சிகா மோத்வானி கலந்து கொள்ள இருக்கிறாராம். விழாவின் முக்கிய அம்சமாக சிம்புவின் திருமணம் குறித்தும் பேசப்படுகிறதாம். சிம்புவை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் பெயரை இந்த விழாவில் அறிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வருவதாக சமீப காலமாக பல்வேறு ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் இந்த செய்தியை இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் சிம்புவின் புதிய வீட்டின் கிர…

    • 0 replies
    • 440 views
  6. ராம்சரண் தேசா மற்றும் ஸ்ருதி ஹாசன் மெயின் கேரக்டரில் நடிக்கும் ஏவடு என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க எமி ஜாக்சன் புக் ஆகியுள்ளார். சுவிட்சர்லாந்து கடற்கரையில் எமிஜாக்சன் மற்றும் ராம்சரண் இருவரும் கடற்கரையில் நடித்த பாடல் காட்சி ஒன்று சென்ற வாரம் படமாக்கபட்டது. இந்த பாடலில் படுகவர்ச்சியாக நீச்சலுடையில் நடித்து கலக்கியிருக்கிறார் எமி ஜாக்சன். அவருடைய காஸ்ட்யூமை பார்த்து ராம்சரணே அதிர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் தனது கவர்ச்சியால் தெலுங்கு படவுலகை ஒரு கலக்கு கலக்கலாம் என்ற எண்ணத்தில் திடீரென மண் அள்ளிப்போட்டிருக்கிறார் எமிஜாக்சன். இதனால் தனக்கும் ஒரு கவர்ச்சியான பாடல் வைக்கும்படி இயக்குனர் வம்சியை இம்சித்து வருகிறார். எமிஜாக்சனின் சுவிஸ் …

    • 9 replies
    • 1.2k views
  7. பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் அவர்கள் சென்னையில் காலமானார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் அவர் மிகவும் இனிமையான பாடல்களை பாடியிருக்கின்றார். அதேவேளை, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகவும் அவர் திகழ்ந்தார். தமிழ் திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவையாக இன்றும் திகழ்கின்றன. 1930 ஆம் ஆண்டு ஆந்திராவில் காக்கிநாடாவில் இவர் பிறந்தார். அவரது இயற்பெயர் பிரதிவாதி பயங்கரா ஸ்ரீனிவாஸ் ஆகும். http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2013/04/130414_srivasdied.shtml

  8. சிங்கமுத்துவை தவிர தன் பழைய கூட்டத்தை அப்படியே மீண்டும் உள்ளே கொண்டு வந்துவிட்டாராம் !வடிவேலு. 'இந்திரனே... சந்திரனே...' ஜால்ராக்களும் கூடவே செட்டுக்குள் இறக்கப்பட, தெனாலிராமன் ஷுட்டிங் எங்கிலும் ஒரே ஜிங்சாக் சப்தம்தான் என்கிறார்கள். இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தை இயக்கும்போது 'பங்காளி பங்காளி' என்று வடிவேலுவும், தம்பி ராமய்யாவும் பாசத்தோடு பழகி வந்தார்கள். படம் பப்படா என்றானதும்தான் தனது சொந்த வாயை திறந்து சோக கீதம் வாசித்தார் தம்பி. 'என்னைய ஷுட்டிங் எடுக்கவே விடல என்னோட பங்காளி. அவரே ஷாட் வச்சார். அவரே டயலாக் சொல்லிக் கொடுத்தார். அவரே மானிட்டர் பக்கத்துல ஒக்கார்ந்து சரி தப்பு சொல்லிக்கிட்டு இருந்தார்' என்று இவர் சொல்ல சொல்ல, படத்தின் தோல்வி செய்தி அப்படியே வடிவேல…

    • 0 replies
    • 540 views
  9. விஸ்வரூபம் 2 படத்துக்கு பின் கமல் நடிக்கும் புதிய படத்துக்கு “உத்தம வில்லன்” என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கமலை வைத்து படம் எடுக்கப் போவதாக லிங்குசாமி அறிவித்து இருந்தார். மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகும் என்றும் கூறியிருந்தார். தற்போது இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இந்த படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். எனவே காமெடி கதையம்சத்தில் இப்படம் இருக்கும் என தெரிகிறது. காமெடி கேரக்டரில் விவேக் நடிக்கிறார். விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. விரைவில் இப்படத்தை முடித்து விட்டு உத்தம வில்லன் படத்துக்கு கமல் வருகிறார். Share this posthttp://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15588:kamal-s-ne…

  10. பாலிவுட் நடிகை ஜியா கான் (வயது 25) மும்பையில் உள்ள தனது வீட்டில் கடந்த 3-ம்தேதி இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக் குறிப்பு எதுவும் எழுதி வைக்காத நிலையில், அவரது செல்போன் உரையாடல்களை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, ஜியா கானுடன் கடைசியாக அவரது நண்பர் சூரஜ் பஞ்சோலி (வயது 21) பேசியது தெரியவந்தது. ஜியா கானும், சூரஜ் பஞ்சோலியும் நெருங்கி பழகியதாகவும், அந்த நட்பு முறிந்ததால் ஜியா கான் தற்கொலை செய்ததாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக கடந்த 4-ம் தேதி சூரஜ் பஞ்சோலி மற்றும் அவரது தந்தை ஆதித்யா பஞ்சோலி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஜியா கானும், அவரது தாயாரும் எங்கள் நண்பர்கள் என்று கூறிய ஆதித்யா பஞ்சோலி, ஜியா தற்கொலை வ…

    • 2 replies
    • 663 views
  11. தொடர்ந்து பெருத்துக் கோண்டே போகும் உடம்பால் அப்செட்டாகியிருக்கும் ஹன்ஷிகா மோத்வானி தற்போது தீவிர எடைக்குறைப்பில் இருக்கிறாராம். எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம் படங்களில் நடித்தபோது அநியாயத்துக்கு பெருத்துப் போயிருந்தார் நடிகை ஹன்சிகா. அந்த குண்டு உடம்பே அவருக்கு ப்ளஸ்ஸாக இருக்கும் என்று பலரும் சொன்னதால், உடம்பை அப்படியே பராமரித்து வந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கூட அவரைப் பார்த்த எல்லோரும் ‘குட்டி குஷ்பு’ போல இருக்கிறார் என்று சொல்ல ரொம்பவே குஷியான ஹன்ஷிகா அந்த சந்தோஷத்திலேயே உடம்பை இன்னும் கொஞ்சம் பெருக்க வைத்தார். ஆனால் அதைப்பார்த்த சில டைரக்டர்கள் இப்போ உங்களைப் பார்த்தா ‘குட்டி குஷ்பு’ மாதிரி இல்ல.., ‘குண்டு ஆன்ட்டி’ மாதிரி இருக்கீங்க என்று அவரிடம் …

    • 9 replies
    • 5.4k views
  12. தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு சென்னை திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் விசு மற்றும் விக்ரமன் போட்டியிட்டனர். அதே போல் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர். 2700 உறுப்பினர்களை கொண்ட இயக்குநர் சங்கத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் இன்று மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது இந்த தேர்தலில் விக்ரமனுக்கு 716 வாக்குகளும், விசுவுக்கு 556 வாக்குகளும் கிடைத்தது. 716 வாக்குகள் வாங்கிய விக்ரமன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.http://www.d…

  13. இம்சை அரசன், இரும்புக்கோட்டையில் முரட்டு சிங்கம் என தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொண்டு வீறு நடை போட்ட டைரக்டர் சிம்பு தேவனுக்கு கோடம்பாக்கத்து மார்க்கெட்டில் இது கடையடைப்பு நேரம்! மீண்டும் வடிவேலுவை வைத்து அவர் இயக்க நினைத்தாலும் புயலின் கதவு மூடியே கிடப்பதால் வேறு யார் யாரையோ சந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. இவரிடம் சிஷ்யனாக பணியாற்றிய டைரக்டர் பாண்டிராஜே 'நான் உங்களுக்கு வாய்ப்பு தர்றேன். என் தயாரிப்பில் நீங்க படம் இயக்குங்க' என்றாராம். ஆனால் ஹீரோ கிடைக்க வேண்டுமே! அறிமுகப்படுத்தியவர் என்ற முறையில் சிவகார்த்திகேயனை அழைத்த பாண்டி, 'சிம்புதேவன் படத்துல நடிச்சுக் கொடுங்க. நான்தான் தயாரிக்கிறேன்' என்று சொல்ல முள்ளு கரண்டிய…

    • 0 replies
    • 781 views
  14. பத்தாம் வகுப்பு தேர்வில் 'கடல்' துளசி பாஸ்: 500க்கு 458 மதிப்பெண்கள். மும்பை: ராதாவின் இளைய மகள் துளசி பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 458 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ராதாவின் இளைய மகள் துளசி மணிரத்னத்தின் கடல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அவர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். தற்போது தேர்வு முடிவுகள் வந்துள்ளது. அதில் அவர் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். நன்றி தற்ஸ்தமிழ்.

  15. AFTER EARTH - திரை விமர்சனம் இன்னும் ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மனிதர்களால் மாசுபடுத்தப்பட்டு மனித இனமே வாழத் தகுதியற்றதாகிவிடும் புவியை விட்டுவிட்டு சூரிய குடும்பத்திற்கு அப்பால் பல மைல் தொலைவில் இருக்கும் நோவா ப்ரைம் எனும் இடத்தைத் தேர்ந்தெடுத்து வாழும் மனிதர்களுக்கு தொல்லை உர்ஸா எனப்படும் பிரிடேட்டர் வகை ஜந்துவால் ஏற்படுகிறது. இவர்களின் பாதுகாவலனாய் இருக்கும் சைபர் (வில் ஸ்மித்), அவரது மகன் கிட்டாய் ( ஜேடன் ஸ்மித்) மற்றும் சில வீரர்களுடன் ஒரு விண்கலத்தில் செல்லும்போது ஏற்படும் ஒரு விபத்தில், பூமியில் விழும் இவர்களில் வீரர்கள் அனைவரும் இறந்துவிட, சைபரின் கால்களில் முறிவு ஏற்பட நோவாவிற்கு சிக்னல் அனுப்பும் கருவி பல …

    • 0 replies
    • 474 views
  16. அஜித் படத்தில் படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தேன் என்று வந்த செய்தியை மறுத்திருக்கிறார் நடிகை தமன்னா. கேடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த தமன்னா. அதன்பிறகு கல்லூரி, வியாபாரி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் பையா, ஆகிய படங்கள் தான் அவருக்கு ஹிட் ஹீரோயினாக மாற பாதை அமைத்துக் கொடுத்தது. அதன்பிறகு விஜய்யுடன் நடித்த சுறா, தனுஷுடன் நடித்த வேங்கையும் வெற்றி பெறாததால், தெலுங்கு பக்கம் போனார். அதனால் தமிழ்சினிமாவை விட்டு விட்டு முழுக்க முழுக்க தெலுங்கு படங்களில் மட்டும் நடித்த தமன்ன நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத் படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தில் நடிகை தமன்னா படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தார் என்று சொல்ல…

  17. சந்தானம் ஜோடியாக விசாகா நடித்த கண்னா லட்டு தின்ன ஆசையா படத்தை அடுத்து மீண்டும் அதே ஜோடியயை வைத்து சாய் கோகுல் நாம்நாத் என்பவர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இவர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்தவர். இந்த படத்திற்கு வாலிப ராஜா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சந்தானம், விசாகாவுடன் மற்றொரு ஹீரோயினாக சூது கவ்வும் படத்தின் விஜய் சேதுபதியின் கற்பனைக் காதலியாக நடித்த சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இதில் சந்தானம் மனநல மருத்துவராக வருகிறாராம். விசாகா மனநோயாளியாகவும், சந்தானத்தின் காதலியாகவும் வருகிறார். சஞ்சிதா ஷெட்டிக்கு கிட்டத்தட்ட வில்லி வேடம். காதல், காமெடி செண்டிமெண்ட் கலந்த ஒரு பொழுதுபோக்கான படமாக இது அமைகிறது என இயக்குனர் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பி…

    • 0 replies
    • 436 views
  18. வைகைப்புயல் வடிவேலு மீண்டும் நடிக்க வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் குஷியோடு வெயிட் பண்ணிக் கொண்டிருக்க, வடிவேலோ அதுபற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏழரையைக் கூட்டிக் கொண்டு அளப்பறையைக் கொடுக்கிறாராம். இரண்டு வருடங்களுக்குப் பிறகு வடிவேலு தமிழ்சினிமாவில் ரீ- என்ட்ரி ஆகிறார் என்றதும் ஒட்டுமொத்த திரையுலகமே மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த சந்தோஷம் இன்னும் ஒரு மாசம் கூட நீடிக்காது போலிருக்கிறது. காரணம் அந்தளவுக்கு வடிவேலுவின் அளப்பறை ஓவராக இருக்கிறதாம். யுவராஜ் டைரக்ட் செய்து வரும் 'கஜபுஜராஜ தெனாலிராமனும், கிருஷ்ணதேவராயரும்' படத்தில் நடிக்கும் வடிவேலு சமீபத்தில் தான் அந்தப்பத்துக்காக ஒரு பாடலையும் பாடினா…

    • 0 replies
    • 572 views
  19. தமிழில் புதிய படம் ஒன்றில் நடிகர் சிவ கார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் ஹன்சிகா மோத்வானி. தமிழ் திரையுலகில் சிவ கார்த்திகேயனுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது இவர் தமிழில் அதிகளவு படங்களை பண்ணாவிட்டாலும் இவர் கொடுத்த அனைத்துபடங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். இதனால் தான் என்னமோ, தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்புவென கொண்டாடும் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது சிவா கார்த்திகேயனுக்கு தமிழில் சிங்கம் 2 ,தீயா வேலை செய்யணும் குமாரு . இந்த படங்களத் தொடர்ந்து ஒரு சில ஸ்கிரிப்ட்களை கேட்டு வந்த ஹன்சிகாவுக்கு ஏ.ஆர்.முருகதாஸுடன் பல ஆண்டு காலம் அசோஸியேட் டைரக்டராக பணி புரிந்த திருக்குமரன் இயக்கும் படத்தில், முருகதாஸின் ஸ்க்…

  20. கல்கி பட கதாநாயகி நடிகை ஸ்ருதி தன்னுடன் கல்வி பயின்றவரை இன்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தென்கன்னட மாவட்டம் புத்தூரைச் சேந்தவர் பிரியதர்ஷினி (எ) ஸ்ருதி. இவர் 1990-ல் வெளியான கன்னட திரைப்படத்தில் நடிகர் சிவராஜ்குமாரின் தங்கையாக அறிமுகமானார். பின்னர் இயக்குனரும், நடிகருமான துவாரகேஷ் இயக்கத்தில் ஸ்ருதி என்கிற படம் வெற்றி அடைந்தயடுத்து அதில் கதாநாயகியாக நடத்ததால் பிரியதர்ஷினி என்ற தனது பெயரை ஸ்ருதி என்று மாற்றி கொண்டு, தமிழில் பாலசந்தரின் கல்வி உள்பட மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 120 படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் மகேந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் , ஒரு குழந்தை பெற்றெடுத்தப்பிற்கு, ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் தன்…

    • 14 replies
    • 1.3k views
  21. சுவில் நாட்டில் இருந்து நண்பர் பாடகர் ரகு அவர்கள் தமிழ்நாடு சென்று சினிமாவில் நுழைந்துள்ளார். அவர் தற்சமயம் தோரணம் என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கின்றார். புலம்பெயர் நாடுகளில் இருந்து சென்று தென் இந்திய சினிமாவில் ஜெயித்தவர்கள் சிலரே அதில் அண்ணன் ரகுவும் ஒருவர் என்பதால் எமக்கு மகிழ்வே. பலர் அங்கு தமது பணத்தை காலி ஆக்கியவர்கள். தொடர்ந்து சுவிஸ் ரகு அண்ணா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.

  22. நயன்தாரா தற்கொலையா? : டுவிட்டரில் பரவிய வதந்தியால் பரபரப்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா, அசின் மற்றும் நயன்தாரா நடித்த படம் கஜினி. இந்த படம் ஹிந்தியிலும் இதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அப்போது தமிழில் நயன்தாரா நடித்த வேடத்தில் ஹிந்தியில் ஜியாகான் நடித்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் ஹிந்தி நடிகை ஜியாகான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியானபோது, சிலர் கஜினி படம் என்றதும் நயன்தாராவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு பேஸ்புக், டுவிட்டர்களில் செய்தி பரப்பி விட்டார்களாம். இதனால் கேரளாவில் உள்ள நயன்தாராவின் பெற்றோரும், உறவினர்களும் பலத்த அதிர்ச்சியடைந்தார்களாம். அதனால் உடனடியாக நயன்தாராவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளனர். …

  23. தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்வது குறித்து சந்தோஷப்பட்ட ரஜினி, எங்களை வாழ்த்தினார், என்றார் படத்தின் ஹீரோ மிர்ச்சி சிவா. கே பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படம் 1981-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தற்போது மிர்ச்சி சிவா நடிக்க ரீமேக் ஆகிறது. பத்ரி இயக்குகிறார். சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடந்த தில்லு முல்லு பட பிரஸ்மீட்டில் சிவா பேசுகையில், "ரஜினியின் தில்லு முல்லு பட ரீமேக்கில் அவர் கேரக்டரில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. படம் திருப்தியாக வந்துள்ளது. தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்ய முடிவானதும் ரஜினியை நேரில் சந்திக்க விரும்பினோம். ஒரு நாள் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அரைமணி நேரத்தில் ராகவேந்திரா மண்டபத்துக்கு …

    • 0 replies
    • 717 views
  24. கண்ணா லட்டு தின்ன ஆசையா', படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் ஒரு வழக்கு உள்ளது. மதுரை உள்பட வெளி மாவட்டங்களிலும் அவர் மீது மோசடி வழக்குகள் குவிந்துள்ளன. தமிழகத்தை தாண்டி வெளிமாநிலங்களிலும் வழக்கு பாய்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அடுத்து ஆந்திர மாநில போலீசாரும், அவரை பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை தமிழகத்தை பொறுத்தமட்டில் ரூ.7 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீதான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், வெளிமாநில வழக்குகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் மேலும் பல கோடி…

    • 0 replies
    • 415 views
  25. ஹரியின் இயக்கத்தில், சூர்யா- அனுஷ்காவின் நடிப்பில் வெளிவந்த சிங்கம் மாபெரும் வெற்றி பெற்றது. எனவே சிங்கம் 2 பாகத்தை எடுக்க முடிவு செய்தார் ஹரி. இப்படத்திலும் அனுஷ்காவே நாயகியாக நடித்துள்ளார். ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டில் நடப்பது போன்று கதை பண்ணியுள்ளார்களாம். அதனால் அனுஷ்கா பகுதி ரொம்ப சிறியதாகி விட்டதாம். அதேசமயம், படத்தில் இன்னொரு நாயகியாக நடித்துள்ள ஹன்சிகாவின் கதாபாத்திரம் தான் கதையையே நகர்த்தி செல்கிறதாம். இதனால் அவருக்குத்தான் கதையில் அதிக முக்கியத்துவமாம். இதை போகப்போக தெரிந்து கொண்ட அனுஷ்கா, பின்னர் தான் ஓரங்கட்டப்பட்டதை தெரிந்து கொண்டு பீல் பண்ணியிருக்கிறார். அத்துடன் சில நாட்களில் தனக்கான காட்சிகள் படமாக்கி முடிந்தது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.