வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
திரை விமர்சனம்: திரி கெட்ட அரசியல்வாதியால் பாதிக்கப்படும் நல்ல மாணவன், புத்திசாலித்தனமாகப் பாடம் கற்றுக்கொடுக்கும் கதை. கட்டப்பஞ்சாயத்து, கழுத்தை அறுக்கும் ரவுடியிஸம், ரியல் எஸ்டேட், கட்சித் தாவல் என அரசியலை அழுக்காக்கி அதன்மூலம் கல்வி வியாபாரியாகவும் மாறிய ஒரு வில்லன் அரசியல்வாதி அங்கண்ணன் (ஏ.எல்.அழகப்பன்). இவருக்கு நேர்மாறான ஒழுக்கசீலர் அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெயப்பிரகாஷ். தன் மகன் ஜீவாவை(அஸ்வின்) பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஆக்க வேண்டும் என கனவு காண்கிறார். இதற்கிடையில், அங்கண்ணனின் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி ஆளும் அவரது மகன் கிஷோரை (அர்ஜெய்) எதிர்பாராத சூழ்நிலையில் அறைந்துவிடுகிறார் ஜீவா. அங்கண்ணனின் கல்லூரி…
-
- 0 replies
- 673 views
-
-
சினிமா விமர்சனம்: மேயாத மான் தமிழ் சினிமா சில ஆண்டுகளாக பேய் பட அலையில் சிக்கித் தவித்ததில் ரொமான்டிக் காமெடி படங்கள் வருவதே முற்றிலும் குறைந்துவிட்டது. இப்போதுதான் மீண்டும் அவ்வகைப் படங்கள் தலைகாட்ட ஆரம்பித்திருக்கின்றன. மேயாத மான் படத்தையும் அந்த வரிசையில் சேர்க்கலாம். மெல்லிசைக் குழு நடத்தும் 'இதயம்' முரளிக்கு (வைபவ்) தன்னுடன் படித்த மதுமிதா (பிரியா) மீது ஒருதலைக் காதல். அந்தக் காதலைச் சொல்வதற்குள் மதுமிதாவுக்கு கல்யாணம் நிச்சயமாகிவிடுகிறது. முரளியின் காதலைப் பற்றி தெரியவந்த பிறகு, ஒரு வருடம் தன் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறாள் மதுமிதா. இதற்கிடையில் முரளின் தங்கையான சுடரொளிக்கு(இந்துஜா) அண்ணனின் நண்பர் வினோத் (விவேக் ப…
-
- 1 reply
- 667 views
-
-
அல்ஜீரியப் போர் - -The Battle of Algiers அல்ஜீரியா என்பது வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் சூடானுக்கு அப்புறம் இரண்டாவது பெரிய அரேபிய தேசம். பரப்பளவில் உலகின் பதினோராவது இடம். 130 ஆண்டுகளாக பிரான்ஸின் காலனியாக இருந்து வந்தது. இந்த அடிமைத் தளையிலிருந்து சுதந்திரம் பெற அல்ஜீரியர்கள் 1954-ல் போராடத் துவங்கினார்கள். FLN (National Liberation Front) என்ற அமைப்பு அதற்குத் தலைமை வகித்தது. கொரில்லாத் தாக்குதல்கள் மூலம் தங்கள் விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள். பிரான்ஸ் தன் இராணுவத்தைக் கொண்டு அதை அடக்க முயற்சித்தது. பொதுமக்களை தாக்குவது சித்தரவதை செய்வது என இராணுவம் ஈடுபட வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது, பொதுச் சொத்துகளுக்கு நாசம் விளைவிப்பது என FLN பதிலடிக் கொடு…
-
- 0 replies
- 673 views
-
-
சூர்யா - ஸ்ருதி கமல் இணையும் ஏழாம் அறிவு on 04-08-2010 22:14 சூர்யாவும் ஸ்ருதி கமலும் இணைந்து நடிக்கும் படம் 7 ஆம் அறிவு. இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சூர்யாவும், முருகதாஸும் இணையும் இரண்டாவது படம் ஏழாம் அறிவு. இந்தப் படத்தை முழுக்க முழுக்க வெளிநாடுகளில் எடுக்கத் திட்டமிட்டுள்ளது ஏழாம் அறிவு படக்குழு. ஏழாம் அறிவு - க்கு இசையமைக்க இருப்பது ஹாரீஸ் ஜெயராஜ். படத்தின் அதிகபட்சக் காட்சிகளை சீனாவில் படம் பிடிக்கத் திட்டமிட்டுள்ளார் முருகதாஸ். இப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் சர்க்கஸ் கம்பெனியில் விலங்குகளுக்கு ட்ரெய்னிங் கொடுக்கும் கதாபாத்திரம் என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது. இதுபற்றித் தெரிவித்த ஏ.ஆர்.முருகதாஸ், இந்தப்படம் உலகையே திரும்பிப் பா…
-
- 26 replies
- 4.3k views
-
-
என்னுடன் நடிக்க ரொம்பவே கூச்சப்பட்டார் சூப்பர் ஸ்டார்! சோனாக்ஷியின் ஷூட்டிங் அனுபவம். மைசூர்: என்னுடன் நடிக்க ரொம்பவே நெர்வஸாக இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார் அவருக்கு புதிய ஜோடியாகியுள்ள சோனாக்ஷி சின்ஹா. ரஜினியின் லிங்கா படத்தின் ஷூட்டிங் கடந்த மே 2-ம் தேதி மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் பூஜையுடன் ஆரம்பித்தது. ரஜினி - சோனாக்ஷி சின்ஹாவின் டூயட் காட்சிதான் எடுத்த எடுப்பில் படமாக்கப்பட்டது. ரஜினியுடன் முதல் முதலில் நடித்த அனுபவம் குறித்து சோனாக்ஷி சின்ஹா பேட்டியளித்துள்ளார். ரஜினியுடன் சிறப்பான துவக்கம். அவர் கூறுகையில், "தமிழ் சினிமாவில் இதை விட ஒரு சிறப்பான துவக்கம் எனக்கு அமையாது. இந்தியில் என் முதல் படம் சல்மான்கானுடன் தொடங்கியத…
-
- 0 replies
- 674 views
-
-
பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஜெனிலியா. இவர், கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அவருடைய கணவர் ரிதேஷ் தனது டுவிட்டரில் ஊறுதிப்படுத்தியுள்ளார். தங்கள் வீட்டிற்கு புதிதாக வரக்கூடிய தேவதையை இருவரும் பெரிதும் எதிர்நோக்கி காத்திருப்பதாக ரித்தீஷ் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலர் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த வருடமும் இதேபோல் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால…
-
- 14 replies
- 1.3k views
-
-
பிரபல சினிமா இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராமநாராயணன் சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 9 மொழிகளில் 125 படங்களை ராமநாராயணன் இயக்கியுள்ளார். விலங்குகளை ஹீரோவாக காண்பித்து சாதனை படைத்தார். அவருக்கு வயது 67 தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் என்ற சாதனையை தன்வசம் கொண்டிருந்த ராம. நாராயணன், பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் விலங்குகளை வைத்து பல வெற்றி படங்களை இயக்கியவர் . குறிப்பாக, பக்திப் படங்கள் பலவற்றை கொடுத்தவர் இவர். வீரன் வேலுதம்பி, ஆடி வெள்ளி, துர்கா, ராஜ காளியம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர…
-
- 13 replies
- 2k views
-
-
'சொடக்கு' பாட்டு போடாததால்... பஸ் கண்ணாடியை உடைத்த, சூர்யா ரசிகர்கள்! சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு' பாடலை போடாததால் பஸ் கண்ணாடியை உடைத்துள்ளனர் சூர்யா ரசிகர்கள். பஸ் கண்ணாடியை உடைத்து, ஓட்டுநரையும் நடத்துநரையும் தாக்கிய கல்லூரி மாணவர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகி வருகிறது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் குறைவான வசூலை மட்டுமே பெற்றதாகக் கூறப்படுகிறது.விருதுநகர் மொட்டமலையில் இரு…
-
- 0 replies
- 627 views
-
-
அரசியல் கோதாவில் இருந்து விலகி விட்ட குஷ்பு இப்போது சின்னத்திரையில் மட்டும் ஒரு சில நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். அதனால் முழுநேர தயாரிப்பாளராக முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே கிரி, ரெண்டு, நகரம் மறுபக்கம், கலகலப்பு ஆகிய படங்களை தயாரித்திருப்பவர், அஜீத்தை வைத்து ஒரு படம் தயாரிக்க கல்லெறிந்தார். ஆனால், அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதனால் அந்த முயற்சியை தற்காலிகமாக கைவிட்டுவிட்டார். ஆனால், இப்போது ஒரே நேரத்தில் 5 படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் குஷ்பு. அப்படி தான் தயாரிக்கும் படத்தை தனது கணவர் சுந்தர்.சி மட்டுமின்றி மற்ற இயக்குனர்களுக்கும் இயக்க வாய்ப்பு கொடுக்கப்போகிறாராம். அதோடு ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன்-ஹன்சிகாவை புக் பண்ணி வ…
-
- 2 replies
- 608 views
-
-
ஆஸ்கார் விருது வென்ற Piper என்ற 3 மூன்று நிமிட அனிமேஷன் திரைபடம்
-
- 0 replies
- 348 views
-
-
சாரதா... அப்பவே அப்படி கதை! பீம்சிங், பி.ஆர்.பந்துலு காலத்தில், தனக்கென தனியிடம் பிடித்த இயக்குநர்களில் முக்கியமானவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். மனித உணர்வுகளுக்கும் குடும்பக் கட்டமைப்புகளுக்கும் முக்கியத்துவம் எடுத்து படமாக்குவதில், மனிதர் அந்தக் கால கே.பாக்யராஜ். ஒரு சின்ன விஷயம்தான், கதையின் முடிச்சாக இருக்கும். அந்த முடிச்சை வைத்துக் கொண்டு, தொய்வில்லாத திரைக்கதையையும் மிக மிக இயல்பான வசனங்களையும் தந்து, நடிகர்களை நம் மனதுக்கு நெருக்கமானவர்களாக்கிவிடுவார் கே.எஸ்.ஜி. இவரின் பல படங்களைப் பல முறை பார்த்திருக்கிறேன். தேவையற்ற நகைச்சுவை, அச்சுப்பிச்சு காமெடி, சிகரெட் குடிக்கப்…
-
- 50 replies
- 19.8k views
-
-
இப்படியான சினிமா எங்களுக்கு வேண்டாம் : சஞ்ஜயன் நேற்று இங்கிலாந்துத் தமிழர்களின் தயாரிப்பான ”யாவும் வசப்படும்” என்னும் முழு நீ(ல)ளத் திரைப்படத்தை பார்க்கக்கிடைத்தது. அண்மையில் NorTamil.no என்னும் இணையத்தளத்தில் ஈழத்து திரைப்படத்துறையின் இயக்குனர்களில் ஒருவரும், பெரும் அனுபவசாலியும், நோர்வேயில் வாழ்பவுருமான சிவபாலன் காசிநாதர் அவர்கள் ”ஈழத்தமிழரும் சினிமாவும் – ஒரு முதியவனின் சில அனுபவக் குறிப்புக்கள்” என்னும் கட்டுரையில் சிறந்த திரைப்படங்களைப் பாருங்கள், என பலதையும் வகைப்படுத்தி, அவை உங்களுக்கு பலதையும் கற்றுத்தரும் என்று மறைமுகமாக சில கருத்துக்ளை தற்போதைய திரைப்படக்கலைஞர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். அவரின் கருத்து மிகவும் கச்சிதமாக ”யாவும் வசப்படும்” குழுவின…
-
- 4 replies
- 928 views
-
-
கை முளைத்து கால் முளைத்து வந்த கிசுகிசுக்களுக்கெல்லாம் இன்று முற்றுப்புள்ளி வைத்தது சோனியா அகர்வால் கழுத்தில் செல்வராகவன் போட்ட மூன்று முடிச்சு. 'காதல் கொண்டேன்' படத்தின்போதே செல்வாவும் - சோனியாவும் ஒருவரையொருவர் காதல் கொண்டார்கள். இதனையடுத்து கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர் என செய்திகள் கசிந்துகொண்டே இருந்தது. இதனிடையே கடந்த மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற காசிப்புகள் கப்சிப் ஆனது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தில் காலை 8.30 மணியிலிருந்து 10 மணிவரை முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது. சரியாக 8.25 மணிக்கு மணமக்கள் மேடைக்கு வர சம்பிரதாய சடங்குகள் ஆரம்பமானது. பொன்நிற பட்டுப்புடவை, ஒட்டியாணம், நெற்றிச்சுட்டி, கை…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கைத் தமிழ்த் திரைத்துறை | சில கருத்துகள்! | அ.யேசுராசா இலங்கைத் தமிழ்த் திரைப்பட வளர்ச்சியை மூன்றுப்பிரிவுகளாகப் பார்க்கலாம் .i) 1962 – 1983 Ii) 1990 – 2009 iii) 2009 இற்குப் பின். 1. முதலாவது காலகட்டத்தில், 1962 இல், முதலாவது தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ உருவாக்கப்பட்டது; பிறகு 28 திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்ப் படங்களைத் தயாரித்த பெரும்பாலானவர் சினமா மீதான கவர்ச்சியினாலேயே இதில் ஈடுபட்டனர். இத்துறையினால் வரக்கூடிய விளம்பரமும் புகழும் அவர்களின் உந்துசக்திகளாகும்! திரைக்கலை நுட்பங்கள் பற்றிய அறிவு, கலைநோக்கு, உலகத் திரைப்பட வளர்ச்சிநிலை பற்றிய விழிப்புணர்வு போன்றவை அவர்களிடம் இருக்கவில்லை. தமிழகத் திரைப்படங்கள் மற்றும் ஹி…
-
- 0 replies
- 300 views
-
-
கடிகார மனிதர்கள் திரைவிமர்சனம் கடிகார மனிதர்கள் திரைவிமர்சனம் கடிகார மனிதர்கள் தலைப்பை பார்த்ததும் புரிந்திருக்கும் படத்தின் கதை காலத்தின் பின்னால் ஓடும் ஏழை மனிதர்களை பற்றியது என்று. நடிகர் கிஷோர், கருணாகரன் மற்றும் லதா ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வாடகை வீட்டில் உள்ளவர்கள் படும் இன்னல்களை காட்டியுள்ளது. கதை: வறுமை காரணமாக சென்னையை தேடி வருகிறது கிஷோர் மற்றும் லதா ராவ் குடும்பம். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். வண்டியில் வீட்டு சாமான்களை ஏற்றிக்கொண்டு புரோக்கர் உதவியுடன் தெருத்தெருவாக வீடு தேடுகின்றனர். 5 பேர் கொண்ட குடும்பம…
-
- 1 reply
- 853 views
-
-
இந்தி பட கதாநாயகர்கள் குடிகாரர்கள்; குளிக்கவும் மாட்டார்கள் காத்ரீனா கயூப் தாக்கு மும்பையில் தனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த அவரிடம் உங்களுக்கு பொருத்தமான கதாநாயகன் யார் யாரோடு நடிப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறீர்கள் என்று கேள்விகள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த கத்ரினா கைப் இந்தி கதாநாயகர்களை தாறுமாறாக திட்டி தீர்த்தார். அவர் பேட்டி வருமாறு:- இந்தி கதாநாயகர்கள் மோசமானவர்கள். அவர்களுடன் நடிக்கும் ஒவ்வொரு நாளும் நரக வேதனை அனுபவிக்கிறேன். கதாநாயகர்கள் இரவு முழுவதும் குடிக்கிறார்க்ள. பகலில் படப்பிடிப்புக்கு எழுந்து வரும்போது குளிப்பது கூடஇல்லை. அப்படியே வந்து விடுகின்றனர். உடம்பில் வாசனை திரவியங்கள் அடித்துக் கொள்வதும் இல்லை. காதல் காட்சிகளில் அவர்க…
-
- 15 replies
- 1.3k views
-
-
ஈழத்தமிழர்களின் இன்னல்களில் அனு அளவு அனுதாபம் காட்டினாலும் இலங்கை ராணுவத்தின் முரட்டுகரங்கள் அதனை முறித்துப்போட்டுவிடுகிறது. அந்தவகையில் மனசை கனக்க வைக்கும் ஒரு குறும்படத்தை எடுத்ததற்காக இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரை முப்பத்திமூன்று நாட்கள் சிறைக்குள் தள்ளி இம்சித்திருக்கிறது இலங்கை ராணுவம். அந்த இளைஞர் செல்வன். இலங்கையின் திரிகோணமலையை சொந்த ஊராக கொண்ட இவர் 'மண்', 'காதல் கடிதம்' போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்த அனுபவத்தை கொண்டு 'விழி' என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். ராணுவ வீரர் ஒருவரின் குடும்பம் அவரது மறைவுக்கு பிறகு சூழ்நிலை சுனாமியால் சுக்குநூறாவதே படத்தின் கதை கரு. நிலாப்ரியனின் கதைக்கருவுக்கு திரைக்கதை வடிவம் கொடுத்து வசனம் எழ…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
சிம்பு நடித்து வெளியாகியுள்ள காளை படு 'கொம்பாக' வந்திருப்பதால் அவரது தந்தை விஜய டி.ராஜேந்தர் பெரும் கோபமாக உள்ளாராம். இயக்குநர் தருண் கோபியை கடுமையாக விமர்சித்து திட்டினாராம். சிம்பு நடிக்க ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கு படப்பிடிப்பை தொடங்கினார்கள். அதில் முதலில் ஆரம்பித்தது கெட்டவன். பின்னர் வந்தது காளை, லேட்டஸ்டாக தொடங்கியது சிலம்பாட்டம். இதில் கெட்டவன், சில பல காரணங்களால் தள்ளிப் போய் விட்டது. இதையடுத்து காளையை வேகம் வேகமாக எடுத்து முடித்தனர். திமிரு என்ற மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்த தருண் கோபி இயக்கிய படம் இது. சிம்புவுக்கு ஜோடியாக வேதிகா நடித்திருந்தார். சங்கீதா கிளாமர் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வல்லவனுக்குப் பிறகு வரும்…
-
- 0 replies
- 816 views
-
-
விநாயகா http://www.rajtamil.com/2012/02/watch-vinayaga-movie-online/ கார்திக் அனிதா http://www.uyirvani.com/forums/index.php/topic/23000-karthik-anitha-watch-tamil-live-movie/ ...தொடரும்
-
- 7 replies
- 1.5k views
-
-
தமிழகத்தில் இனி ஒன் லைனில் மட்டுமே சினிமா ரிக்கற் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி.! சென்னை: தமிழகத்தில் ஒன் லைனில் மட்டுமே சினிமா ரிக்கெற் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், உள்பட பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குனர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் ரிக்கெற் கட்டணம் அதிகமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுவது வாடிக்கையாக உள்ளது.குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு மேல் ரிக்கெற் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிக புகார்கள் எழுகிறது. …
-
- 0 replies
- 454 views
-
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்! 17 Apr 2025, 5:18 PM இரண்டாவது திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. கர்நாடகாவில் பிறந்தவரான இவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். அதனைத் தொடர்ந்து தனது நீண்டநாள் நண்பரான பிரவீன் குமாரை கடந்த 2016ஆம் ஆண்டு மணந்தார். எனினும் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பிரவீன் குமாரை விவாகரத்து செய்தார். விஜய் டிவியின் கலக்க போவது யாரு, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூச…
-
-
- 23 replies
- 1.2k views
-
-
ஜெயிக்காமலே இருந்திருக்கலாம்- மனம் வருந்தும் ஆனந்த் அரவிந்தக்ஷன்! விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரச்னை , அட இன்னுமா முடியவில்லை என்றால் முதலும் முக்கியஸ்தருமான வெற்றிக்குச் சொந்தக்காரர் ஆனந்த் இப்போதுதானே மனம் திறந்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் தனது வெற்றி மற்றும் அதற்காகப் பட்ட கஷ்டங்கள் என அனைத்தையும் பதிவிட்டுள்ளார், அவர் கூறியுள்ளதாவது, கடந்து இரண்டு நாட்களாக நான் கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். இப்போதும் கனவு போல் இருக்கிறது. எனக்கு ஆதரவாக இருந்த சேனல் மற்றும் மக்களுக்கு நன்றி. பத்து வருடங்கள் காத்திருந்து பத்து மாதங்கள் போட்டி, இசைப் பயிற்சி, என அனைத்தையும் கடந்து இந்த வெற்றியை அடைந்துள்ளேன். இத்தனை ஆண்டுகளாக …
-
- 4 replies
- 618 views
-
-
http://youtu.be/SV4oEP4QUY8 எரியும் பனிக்காடு என்று Red Tea நாவலினை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த நாவலை கடந்த ஆண்டு வாசித்தேன். தேனீரின் பின் இருக்கும் கண்ணீர் பற்றி மிகவும் முக்கியமான நாவல் அது. இத் திரைப்படத்தினை பார்க்க விரும்புகின்றவர்கள் முடிந்தால் எரியும் பனிக்காட்டினையும் ஒரு முறை வாசித்த பின் பாருங்கள். எரியும் பனிக்காடு: http://www.sramakrishnan.com/?p=435 வாங்குவதற்கு: http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
-
- 3 replies
- 1.6k views
-
-
“ஏண்டா இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்தோம்...” என்று புலம்பித்தவிக்கும் அளவுக்கு ஜெயம்ரவிக்கு டென்ஷனை உண்டு பண்ணிய டைரக்டர் அமீர் ஒருவழியாக ‘ஆதிபகவன்’ படத்தை முடித்து விட்டார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேல் புரொடக்ஷனில் இருந்த இந்தப்படத்தின் டப்பிங் உட்பட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எல்லாமே முடிந்து விட்டது. ஜெயம்ரவிக்கு ஜோடியாக இந்தப்படத்தில் நீதுசந்திரா நடித்திருக்கிறார். அதிபயங்கரமான சண்டைக்காட்சிகளிலும் துணிச்சலுடன் இந்தப்படத்தில் நடித்திருக்கிறார் நீது. நிஜ வாழ்க்கையில் தற்காப்புக் கலைகளை கற்றுவரும் நீது சமீபத்தில் தான் கொரிய தற்காப்புக்கலையில் மூன்று ப்ளாக் பெல்ட்டுகளை வாங்கியிருந்தார். அந்த பயிற்சி அனுபவம் இந்தப்படத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்தபோது என…
-
- 0 replies
- 557 views
-