வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5563 topics in this forum
-
இலங்கையில் விஸ்வரூபத்தை திரையிட அரசாங்கம் அனுமதி By Nirshan Ramanujam 2013-02-10 11:50:20 விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க சற்றுமுன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். விஸ்வரூபம் படத்தில் ஒரு சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் இத் திரைப்படத்தை திரையிட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=2958
-
- 0 replies
- 305 views
-
-
* சிறுமி மலாலா இஸ்லாம் மதவெறியர்களால் சுடப்பட்டப்போதும், தவறிழைக்காத ரிசானாவிற்கு சவூதி அரசு தூக்குத் தண்டனை அளித்தபோதும் உங்கள் மதம் களங்கப்படவில்லையா ?? * ஆயிரமாயிரம் மக்களை கொன்று பெண்களின் கற்பை கொடூரமாக சூறையாடிய இடிஅமினுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே நாடு சவூதி அரேபியாதான். அப்பொழுது உங்கள் மதம் களங்கப்படவில்லையா ?? * தாலிபான்கள் மற்றும் அல்கொய்தாக்கள் ஆங்காங்கே நடத்திவரும் தாக்குதல்களால் அப்பாவி மக்களும் குழந்தைகளும் தினந்தினம் கொல்லப்படுகிறார்களே இது உங்கள் மதத்திற்கு களங்கமில்லையா ?? * தலாக் விவாகரத்து முறை,சிறுவயது திருமணம்,பெண்கள் விளையாட்டுக்களில் கலந்துக்கொள்ளத் தடை,உடம்பு முழுக்க பர்தா அணிய வைத்தல்,குற்றம் சரியாக விசாரிக்கப் படாமலேயே மரணத் தண்டனை மற்றும் உ…
-
- 6 replies
- 1.7k views
-
-
விஸ்வரூபம் இரண்டாம் பாகம்! கடைசி கட்ட படப்பிடிப்பு! கமல் இயக்கத்தில் உருவான விஸ்வரூபம் படத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகிறது. கமல்ஹாசன் நீண்ட நாட்களாக உருவாக்கிக்கொண்டிருந்த படமே இப்போது தான் ரிலீஸாகவிருக்கிறது. ஆனால் அதற்குள் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் விரைவில் ரிலீஸ் செய்யவிருக்கிறாராம். விஸ்வரூபம் படத்தின் புரமோஷன் வேலைகளில் ஒரு சமயத்தில் மும்மரமாயிருந்த கமல் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் “ அடுத்த படத்திற்கு ‘மூ’ என்று பெயர் வைத்துள்ளேன். விரைவில் அந்த பெயரை பதிவு செய்யவிருக்கிறேன்” எனக் கூறினார். ’மூ’ என்றால் மூன்று பேர் என்று பொருள். இதனால் கமல் இந்த படத்தில் மூன்று …
-
- 3 replies
- 2.7k views
-
-
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள 'கடல்' திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளதால் இழப்பீடு வழங்கக் கோரி அவரது வீட்டை முற்றுகையிடப்போவதாக விநியோகஸ்தர்கள் அறிவித்தையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவான 'கடல்' திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். தனது சொந்த படமான 'கடல்' கடந்த 1ஆம் தேதி வெளியானது. கிறிஸ்தவர்களை அவமதிக்கும் வகையில் கடல் படம் இருப்பதாக கூறியுள்ள கிறிஸ்தவ அமைப்புகள், படத்தை தடை செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்த நிலையில் 'கடல்' திரைப்படம் படு…
-
- 4 replies
- 613 views
-
-
இனி அவன் - விமர்சனம் இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான 'இனி அவன்' இம்முறை கொழும்பில் இடம்பெறும் 2012ஆம் ஆண்டுக்கான ஐரோப்பா திரைப்பட விழாவில் முதல் படமாக காண்பிக்கப்பட்டது. இது தவிர ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழா, டொரொன்டோ திரைப்பட விழா, லண்டன் திரைப்பட விழா போன்றவற்றிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமா என்ற மாயையிலிருந்து விடுபட்டு இப்படத்தினை பொறுத்தளவில் ஒப்பீடு கடந்த பார்வை எம்மவர்களை வளர்க்க உதவும். ஏனெனில் சினிமா தொழில்நுட்பங்களில் பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கையில் இவ்வாறானதொரு முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியவை என்பதை மனதில் நிறுத்த முயற்சிப்பது நன்று. இலங்கையின் மு…
-
- 0 replies
- 429 views
-
-
-
அது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்ளிய காலம். நான் அதிகம் பார்த்த தமிழ் படங்களுள் மணிரத்னத்தின் படங்களே டாப் டென்னில் வரும். அவர் மீது பல விமர்சனங்கள் இருக்கலாம், கதையை அங்கே சுட்டார், இந்தக் கோணம் இங்கே சுட்டார் என்று, ஆனால் அதை எல்லாம் மீறி அவர் படங்களின் மீதான ஈர்ப்பு என்பது குறையவே இல்லாத காலம் அது. முதலில் அது உடைந்து சுக்குநூறாகிப்போனது திருடா திருடா படத்தில்தான், கிட்டத்தட்ட அதே மனநிலையில் இன்று முதல் காட்சி பார்த்த இந்தக் கடல் படமும். என்ன ஆயிற்று அவரின் மேஜிக் மேக்கிங்கிற்கு? நல்ல மியூஸிக் டைரக்டர், நல்ல கேமரா மேன், அருமையான பாடல்கள், அழகான இரண்டு புதுமுகங்கள…
-
- 15 replies
- 3.6k views
-
-
நிஷ்காம்ய கர்மம்! – வாலி ‘கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை!’ -சிவாஜி, பிரபு நடித்த ‘சுமங்கலி’ என்னும் படத்தில் இந்தப் பாட்டு! எழுதியது நான்; இசையமைத்தது திரு.எம்.எஸ்.வி; பாடியது திரு. டி.எம்.எஸ். நாங்கள் மூவரும் அக்மார்க் ஆத்திகர்கள். பிரபு நடித்து – இந்தப் பாட்டு, தி.நகர் பஸ் நிலையம் அருகே இருக்கும் பெரியார் சிலை யைச் சுற்றிப் படமாக்கப்பட்டது, டைரக்டர் திரு.யோகானந்தால்! கடுமையான கடவுள் நம்பிக்கை உடைய நானும், எம்.எஸ்.வி-யும்; டி.எம்.எஸ்-ஸும் இந்தப் பாடலை – நூறு விழுக்காடு ஈடுபாட்டோடு உருவாக்கினோம். இதற்குப் பெயர்தான் ‘நிஷ்காம்ய கர்மம்’. விருப்பு வெறுப்பின்றி – நமக்கிட்ட பணியைச் செவ்வனே செய்வது தான், ‘நிஷ்காம்ய கர்மம்’. ‘க…
-
- 0 replies
- 679 views
-
-
ரயில் பயணத்தைக் கதைக்களமாகக் கொண்டு நிறையப்படங்கள் வெளிவந்துள்ளன, அந்த வரிசையில் மிக முக்கியமானதொரு படம் John Frankenheimer இயக்கிய The Train, 1964ம் ஆண்டு வெளியான கறுப்பு வெள்ளைப் படமிது, இரண்டாவது உலக யுத்த காலத்தில் புகழ்பெற்ற ஒவியங்களைக் கடத்திச் செல்லும் ஜெர்மனிய ரயில் ஒன்றினை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளபடும் தீவிர முயற்சிகளே படத்தின் கதைக்கரு, 133நிமிஷங்கள் ஒடுகின்ற இப்படத்தில் ரயில் கிளம்பிய மறுநிமிசம் முதல், கடைசிக்காட்சி வரை நம்மால் அடுத்து என்ன நடக்குமென என்று யோசிக்க முடியாது. விறுவிறுப்பான திரைக்கதை என்பது இப்படத்திற்கே பொருத்தமானது, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் திருப்பங்கள், வெற்றி தோல்வி என்று மாறிமாறிச் சுழலும் விதியின் பகடையாட்டம், படம் பா…
-
- 0 replies
- 391 views
-
-
பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இப்படத்தை ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்குகிறார். இதுகுறித்து ரமேஷ், கூறியுள்ளதாவது, ´´விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். விடுதலைப்புலிகள் தரப்பில் இந்த படத்தை எடுப்பதற்காக ஆட்சேபனை இருக்காது என்று கருதுகிறேன். இதற்கான நிறைய தகவல்களை அவர்கள் எனக்கு கொடுத்துள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், ‘’வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் படமாக எடுத்துள்ளேன். பதினோரு வருடங்கள் வீரப்பன் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வீரப்பனிடம் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர்…
-
- 5 replies
- 2k views
-
-
இந்தி நடிகை ஜீனத் அமன், மறுமணம் செய்ய முடிவு செய்து இருக்கிறார். இவருக்கு வயது 61. கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் இந்தி சினிமா உலகின் கவர்ச்சி கன்னியாக நடிகை ஜீனத் அமன். இருந்தார். அவர் சினிமாவுக்கு வரும் முன்பு மாடல் அழகி. இந்திய அழகிப் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தவர். யாதோங்கி பாரத், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா போன்ற படங்களில் பாடல் காட்சிகளின் மூலம் பிரபலமானார். முதலில் நடிகர் சஞ்சய்கானுடன் கிசுகிசுக்கப்பட்ட ஜீனத் அமன், பின்னர் நடிகர் மாசர்கானை திருமணம் செய்து கொண்டார். கடந்த 1998 ஆம் ஆண்டில் மாசர்கான் இறந்துவிட்டார். ஜீனத் அமனுக்கு அஜான் (வயது 26), ஜகான் (23) என இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், 60 வயதை தாண்டிய ஜீனத் அமன் மீண்டும் திருமணம் செய்ய முடிவு செய்து…
-
- 2 replies
- 992 views
-
-
சென்னையில் இன்று நடைபெறும் யுரேனியம் திரைப்படம் விழா 'Asian College of Journalism' மையத்தில் நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழா-வை ஆதரிக்கிறோம். ஆனால் அது நடைபெறும் இடம் 'Asian College of Journalism'. இதனுடைய 'Trustee' ஆகா இந்து இராம் உள்ளார் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று...இராஜபக்சேவின் குரலை இந்துவில் வெளியிட்டவர்... The Trustees of the Foundation are: Sashi Kumar (Chairman), journalist, TV anchor and filmmaker; N. Ram, Director and former Editor in chief, The Hindu; C. P. Chandrasekhar, Professor of Economics, Jawaharlal Nehru University, and newspaper columnist; and Radhika Menon, founder and Managing Editor of Tulika Publishers. www.asianmedia.org/aboutus/…
-
- 0 replies
- 462 views
-
-
மன்மத லீலை கைலாசம் பாலச்சந்தர், அதாங்க, நம்ம கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் இது. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்தார். ஏகப்பட்ட நாயகிகள். பெண் பித்தனின் கதை இது. பாதி நேரம் *******- பிளவுஸ்தான்... இதில் நடித்த நாயகிகள் சேலையை பெரும்பாலும் அணிந்திருக்கவே மாட்டார்கள். பாதி நேரம் பிரா அல்லது பிளவுஸில்தான் காட்சி தருவார்கள். அப்படி ஒரு களேபரக் காட்சிகள் நிறைந்த படம் இது. பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்றாலும கூட படம் ஹிட் ஆகிப் போனது. ஜெயப்பிரதாவின் முதல் லீலை மன்மதலீலைதான் ஜெயப்பிரதாவுக்கு முதல் படம். இதில் அவர் கண்ணகி என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார். ராதாரவிக்கும் இதுதான் முதல் படம் என்பது இன்னொரு சுவாரஸ்யமான தகவல். ராங் நம்பர் விஜயா... ஒய்.விஜ…
-
- 0 replies
- 3.3k views
-
-
ரொம்ப தேங்க்ஸ்ங்ணா... சினிமாவுல நான் பாட்டுக்கு ஓடிட்டே இருக் கேன். அப்போ நடிக்கிற படங் களைப் பத்தி மட்டும்தான் மனசுல நினைப்பு ஓடிட்டு இருக் கும். ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சு 20 வருஷமாயிருச்சுனு ஃப்ரெண்ட்ஸ் சொன்னப்போ, 'அட’னு சின்ன ஆச்சர்யமா இருந்துச்சு. சிறந்த நடிகனுக்கான விகடன் விருது அந்த ஆச்சர்யத்தைப் பெரிய சந்தோஷமாக்கிருச்சு!''- நெஞ்சில் கைவைத்துச் சிரிக்கிறார் விஜய். 'துப்பாக்கி’யின் 100 கோடி வர்த்தகம், அடுத்த படத்துக்கான எதிர் பார்ப்பை ஏகத்துக்கும் எகிறச் செய்திருக்கிறது. ''அந்த எதிர்பார்ப்பை ஒவ்வொரு நிமிஷமும் நான் உணர்றேன். பிசிக்கல் ஸ்ட்ரெய்ன், மென்ட்டல் ஸ்ட்ரெஸ்... இது இரண்டுமே சேர்ந்ததுதான் ஒரு நடிகனோட வாழ்க்கை. 'Life of an actor gets tough and tougher' சொல்வாங்க…
-
- 0 replies
- 708 views
-
-
'சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை. சென்னை: சூர்யா நடிக்கும் 'சிங்கம்- 2' திரைப்படத்தில் முஸ்லிம்களை கடல் கொள்ளையர்களாகவும், கொடூரமான வில்லன்களாகவும் சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தை மனதில் கொண்டு, சர்ச்சைக்குரிய காட்சிகளை இயக்குனர் ஹரி நீக்க முன் வர வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை ஓய்வதற்குள் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் 'சிங்கம்-…
-
- 1 reply
- 783 views
-
-
விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தில் விவாதங்கள் பல முனைகளில் நடைபெற்று வருகின்றன. படைப்பாளியின் சுதந்திரம் என்று சிலரும், இஸ்லாமியர்கள் எதிர்த்தால் உடனே தடை விதிக்கவேண்டுமா என்று சிலரும், முதலில் தடை என்ற செயலே தவறு என்று சிலரும் வாதிட்டு தடைக்கு எதிர்ப்பு காட்டுவதில் ஒன்றிணைகின்றனர். இது ஏதோ கருத்து/படைப்புச் சுதந்திரத்திற்கும்/ இஸ்லாமிய உணர்வுகளுக்குமான ஈரினை/எதிர்மறையாக (Binary Opposition) கட்டமைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தி எடுக்கும் ஒரு படத்தையோ, எழுதப்படும் கதையையோ, கட்டுரையையோ அல்லது எந்த ஒரு அநீதியையும் நியாயப்படுத்தி செய்யப்படும் காரியத்தையோ நாம் கருத்துச் சுதந்திரம் என்ற அளவுகோலை வைத்து…
-
- 1 reply
- 1.3k views
-
-
'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் எதிர்க்கும் 7 காட்சிகளை நீக்குவதாக அத்திரைப்படத்தை இயக்கி நடித்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன் இணக்கம் தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு, கமல் தரப்பு மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கிடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூகமாக நிறைவுக்கு வந்துள்ளது என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்,இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தெரிவித்த கமல்ஹாஸன், திரைப்படம் வெளியாகும் திகதியை இன்று இரவே அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, மேற்படி 7 இந்தக் காட்சிகள்இஸ்லாமியரை அவமதிப்பதாகவும், இஸ்லாம் மதத்துக்கு எதிரானதாகவும் உள்ளது என முஸ்லிம் தலைவர்கள் சொன்னதை கமல் ஏற்றுக்கொண்டார்…
-
- 5 replies
- 940 views
-
-
போர்ப்ஸ் என்ற பத்திரிகையின் இணைய தளத்தில் கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தற்போது 62 வயதாகும் ரஜினிகாந்த், சுமார் 24 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவர் இரண்டு வருடத்துக்கு ஒரு படம் என்று பட எண்ணிக்கையை குறைத்து வருகிறார். அதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் என்ற தகுதி தமிழ் சினிமாவில் யாருக்கு இருக்கிறது? என்றொரு கேள்வியையும் முன் வைத்துள்ளது. ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக தற்போது விஜய், அஜீத் இருவரும்தான் இருக்கிறார்கள். இவர்களில் அதிக ரசிகர்கள் யாருக்கு இருக்கிறார்கள். யாருக்கு ரசிகர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகமாக இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு அவரை சூப்பர்…
-
- 11 replies
- 4.3k views
-
-
விஸ்வரூபம் பாணியில் அமீரின் ஆதிபகவன் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அமீர் இயக்கத்தில், ஜெயம் ரவி, நீத்து சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபகவன். மாபியா கும்பலை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. ஆதிபகவன் படத்தில் இந்து கடவுளை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக ஐகோர்ட் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, அமீர் தன்னுடைய ராம் படத்தில், இந்து கடவுளான ராமரை, ராம் என்று சுருக்கி ஹீரோ ஜீவாவை சைக்கோ போன்று காட்டினார். இப்போது ஆதிபகவன் என்ற படத்தை …
-
- 4 replies
- 946 views
-
-
விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு நஷ்டம் ஏற்பட்டால், கமலின் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிப்பேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். கமல்ஹாசனின் விஸ்வரூபம் வெளியாவதில் தடை நீடித்து வருகையில், பேச்சுவார்த்தைக்கு பின்னர் படம் வெளிவந்தாலும் கமலுக்கு நஷ்டம் தான் ஏற்படும் என்று கூறப்படுகின்றது. இந்த படத்திற்காக கமல், தனது சொத்துக்கள் அனைத்தையும் எழுதி கொடுத்து பெரும் செலவில் இந்த படத்தை எடுத்துள்ளார். இந்த நிலையில் கமலின் நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், கமலுக்கு விஸ்வரூபம் படத்தால் நஷ்டம் ஏற்பட்டால், கமலின் இயக்கும் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து அந்த நஷ்டத்தை ஈடுசெய்வேன் என்று கூறியுள்ளார். ரஜினியின் இந்த பேச்சு அனைத்து …
-
- 7 replies
- 962 views
-
-
எனது தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன். இந்தியாவில் எங்குமே எனக்கு இடம் கிடைக்காவிட்டால் வேறு ஏதாவது நாட்டுக்குப் போய் குடியேறுவேன். எங்கு போனாலும் தமிழனாகவே இருப்பேன் என்று பரபரப்பாக பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். தனது வீட்டில் இன்று செய்தியாளர்களைச் ச்ந்தித்த கமல்ஹாசன் மிகவும் உருக்கமாக, கண்களில் நீர் மல்க தனது விஸ்வரூபம் படம் குறித்தும், சர்ச்சை குறித்தும், கோர்ட் வழக்கு குறித்தும் பேசினார். அவர் பேசுகையில்,விஸ்வரூபம் தொடர்பாக பல்வேறு பேச்சுக்கள் உலவுகின்றன. அதுகுறித்து எனக்குத் தெரியாது. அவற்றை நான் நம்பவும் இல்லை. தாமதப்படுத்தப்பட்ட நீதியும், தடுக்கப்பட்ட நீதியும் ஒன்றே என்று ஆங்கில…
-
- 12 replies
- 2.2k views
-
-
விஜய் பேர் இருந்தாலே இப்போ வெற்றி என்கிற மாதிரியே போயிட்டு இருக்கு. இளையதளபதி விஜய் நடித்த துப்பாக்கிக்கு முன் வந்த விஜய் சேதுபதி நடித்த பீட்சா சூப்பர் வெற்றி. துப்பாக்கி சூப்பர் டூபர் வெற்றி. இப்போ மறுபடியும் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் வெளியாகியுள்ளது. படம் வெளியாகும் முன்பே படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலர் இயக்குநரையும், இதில் நடித்த விஜய் சேதுபதியையும் வெகுவாக பாராட்டி உள்ளார்கள். லியோ விஷன் சார்பில் ராஜ்குமார் என்பவர் தயாரித்திருக்கும் இப்படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையை நடிகர் பிரஷாந்தின் தந்தை, நடிகர் தியாகராஜன் படம் வெளியாகும் முன்பே வாங்கியிருக்கிறார். இவற்றுக்கு மேல…
-
- 3 replies
- 868 views
-
-
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் சென்னை: விஸ்வரூபம் படம் மீது தமிழக அரசு விதித்த தடையை நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இன்று நடந்த இறுதிக்கட்ட விசாரணைக்கு பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் சுமார் இரவு 10 மணியளவில் கமல் தொடர்ந்த வழக்கில், படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். நடிகர் கமல் நடித்த, சர்ச்சைக்கு உள்ளான, விஸ்வரூபம் படத்தை, தமிழக தியேட்டர்களில் திரையிட, 15 நாட்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள், தடை விதித்தனர். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், "ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். படத்தை, 26ம் தேதி, திரையிட்டு காட்டும்படி உத்தரவிட்டு, விசாரணையை, 28ம் தேதிக்…
-
- 7 replies
- 1k views
-
-
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அரசு விருந்தினராக வருமாறு அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாண அரசு அழைப்பு! மேரிலான்ட் மாகாணத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலர் (அமைச்சர் ) டாக்டர் ராஜன் நடராஜன் இந்த அழைப்பினை ரஜினியை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வழங்கினார். அமெரிக்க அரசியலில் இத்தனை உயரிய பதவியில் இருக்கும் முதல் இந்தியர் – தமிழர் அதுவும் நம்ம புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் ராஜன்தான் என்பதை அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் தெரிவித்தார். ரஜினிடம் டாக்டர் ராஜன் பேசும்போது, “தமிழர்களின் பெருமை நீங்கள்.. உங்கள் ப்ளட்ஸ்டோன் படத்தை அமெரிக்கர்கள் பார்த்து ரசித்தனர். ஹாலிவுட்டிலேயே கோலோச்சும் அளவுக்கு உங்களுக்கு வாய்ப்புகள் இருந்தும், அவற்றை ஏற்காமல் தமிழுக்காகவும் த…
-
- 0 replies
- 403 views
-
-
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தை ஆதரித்துப் பேசியுள்ளார் சிவசேனா கட்சியின் தமிழகப் பிரதிநிதி குமார ரஜா! திரையுலக நண்பர்கள் நீங்கலாக தொழில்முறை சினிமா கலைஞர்களின் ஆதரவுக்குப்பிறகு அரசியல் ஆதரவும் கமல் படத்திற்கு கிடைத்துள்ளது. விஸ்வரூபம் படத்தில் பயங்கரவாத சம்பவங்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது என்று கூறுகிறார் குமார ராஜா. மற்ற மாநிலங்கள் சட்டம், ஒழுங்கு பிரச்சனை இல்லாதபோது தமிழகத்தில் ஏன் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார் குமாரராஜா. ஆகவே, கமலுக்கு தங்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்றும், படத்தை ரிலீஸ் செய்ய கமலுடன் இணைந்து போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1301/29/1130129045_1.htm
-
- 3 replies
- 673 views
-