வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை! மின்னம்பலம்2022-05-24 உடல்நலக் குறைவு காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தரை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்ல அவசர ஆலோசனை நடந்து வருகிறது. தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர் டி.ராஜேந்தர். நடிப்பு, இசை, இயக்கம் என பன்முகத் தன்மை கொண்டவர். தீவிரமாக அரசியல் களத்தில் குதித்த டி.ராஜேந்தர் தமிழ்நாடு எங்கும் திமுகவிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்தவர். திமுகவில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். லட்சிய திமுகவை உருவாக்கி தலைவராக செயல்படுகிறார். இவ்வாறு பல துறைகளிலும் போராடி தனக்கென தனி இடத்தை பிடித்த டி.ராஜேந்தர்,…
-
- 12 replies
- 878 views
- 1 follower
-
-
கவுண்டமணியும் நானும் -- செந்தில் நன்றி : சினிமா விகடன்
-
- 5 replies
- 1.8k views
-
-
நடிகை காஜல் அகர்வால் அக்டோபர் 30 ஆம் தேதி தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். 2004 ஆண்டு இந்தி திரையுலகில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால்., 4 ஆண்டுகள் கழித்து 2008ல் நடிகர் பரத் நடித்த ‘பழனி’ படத்தில் தமிழில் முதன்முறையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி என பல மொழி படங்களில் நடித்தாலும், 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘மஹதீரா’ படம் அவருக்கு அனைத்து ரசிகர்களிடத்திலும் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். தற்போது பாரீஸ்-பாரீஸ் படத்திலும், கமலுடன் இந்தியன்…
-
- 266 replies
- 33k views
- 3 followers
-
-
2021ஆம் ஆண்டின் முதல் 10 தமிழ் படங்கள் Time Stamps : 10 - 1:25 Vaazh - Arun Prabhu 9 - 2:22 Rocky - Arun Matheswaran 8 - 3:13 Writer - Franklin Jacob 7 - 4:12 Doctor - Nelson Dilipkumar 6 - 5:16 Master - Lokesh Kanagaraj 5 - 6:20 Maanaadu - Venkat Prabhu 4 - 7:33 Karnan - Mari Selvaraj 3 - 8:40 Mandela - Madonne Ashwin 2 - 9:48 Sarpatta Parambarai - Pa. Ranjith 1 - 11:07 Jai bhim - TJ Gnanavel
-
- 1 reply
- 470 views
-
-
May 11, 1973. 49 ஆண்டுகள் கழிந்து 50 வது ஆண்டில் இப்போது.. காலத்தால் அழியா மிக சிறந்த பொழுது போக்கு சித்திரம். இது போல படங்கள் இனி எப்போதும் வரப் போவதில்லை. MSV பார்த்து பார்த்து இசையை இழைத்து செய்த அற்புத காவியம். எல்லா பாடகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பாட வைத்திருந்தார். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் எனும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
தீவிரவாதி உமர் ஃபாருக்கை கைது செய்து அழைத்துவரும் ஸ்பெஷல் ஆபரேஷனில் ஈடுபடுகிறார் 'ரா' பிரிவு ஏஜெண்ட் வீரராகவன். கைது செய்யப்பட்ட உமர் பாரூக்கை விடுவிக்க வலியுறுத்தி மால் ஒன்றை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். மக்களை வீரராகவன் (விஜய்) மீட்டாரா? அவர் கையாண்ட உத்திகள் என்னென்ன? கைது செய்யப்பட்ட உமர் ஃபாருக் என்ன ஆனார்? - இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது 'பீஸ்ட்'. வீரராகவனாக விஜய். படத்துக்கு படம் வயதைக் குறைக்கும் மேஜிக்கை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார். அதே ஃபிட்னஸுடன் மிடுக்கும் கூடிக்கொண்டே செல்கிறது. தனது லுக்கில் ரசிகர்களைக் கவரும் விஜய், எனர்ஜியுடன் நடனக் காட்சிகளில் தெறிக்க விடுகிறார். ஒட்டுமொத்த படத்தையும் 'ஒன்மேன் ஆர்மி'யாக சும…
-
- 8 replies
- 751 views
-
-
ரத்தம் தெறிக்க, அலறல் சத்தம் ஒலிக்க, வெறி அடங்கும் வரை தேடித் தேடி நடத்தப்படும் பழிவாங்கும் படலம்தான் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'சாணிக் காயிதம்' படத்தின் ஒன்லைன். கடலை வெறித்துப் பார்த்தபடி, பீடியை பற்றவைத்துக்கொண்டு ஆசுவாசமாக நின்றுகொண்டிருக்கிறார் சங்கய்யா (செல்வராகவன்). அருகிலிருந்த அறையிலிருந்து சங்கரய்யாவை நோக்கி பொறுமையாக நடந்து வருகிறார் பொன்னி (கீர்த்தி சுரேஷ்). எந்த வித பதற்றமும் இல்லாமல், 'உயிரோட எரிக்கணும் மண்ணெண்ணய கொடு' என கேட்கிறார். பொறுமையாக சம்பந்தபட்டவரை எரித்து முடித்து அவர்கள் அங்கிருந்து நடந்து செல்லும் வரை அந்த 'சிங்கிள் ஷாட்' நீண்டுகொண்டேயிருக்கிறது. திரையிலிருந்து அகலாமல் பார்த்துக்கொள்ளும் அந்த 'சிங்கிள் ஷாட்' மூலமாக ந…
-
- 7 replies
- 702 views
-
-
ராக்கி - திரை விமர்சனம் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROWDY PICTURES படக்குறிப்பு, ராக்கி திரைப்படம் நடிகர்கள்: பாரதிராஜா, வசந்த் ரவி, ரோகிணி, ரவீனா ரவி; ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா; இசை: தர்புகா சிவா; இயக்கம்: அருண் மாதேஸ்வரன். இந்த ஆண்டின் துவக்கத்தில் 'ராக்கி' படத்தின் டீஸர் வெளியானபோது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள். அந்த டீசரில் நின்று கொண்டிருக்கும் ஒரு நபர், உட்கார்ந்திருக்கும் ஒரு நபரை துருப்பிடித்த ரம்பத்தை வைத்து நிதானமாக அறுக்கும் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்தது. டீஸரே இப்படியிர…
-
- 2 replies
- 613 views
-
-
இளையராஜாவின் நிறைவேறாத ஆசைகளுக்கு வாய்ப்புள்ளதா..? -சாவித்திரி கண்ணன் பணம், அதிகாரம், புகழ் இவற்றோடு இசை தெய்வமாக தான் ஆராதிக்கப்பட வேண்டுமென்ற இளையராஜாவின் ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அந்த மனிதருக்குள் இருக்கும் உண்மையான ஒரு சில ஆதங்கங்கள் தாம் தீர்ந்தபாடில்லை! ‘உண்மை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அது அவசியமேயில்லை. என் கற்பனையும், நம்பிக்கையுமே எனக்கு உண்மை’ என வாழும் சில மனிதர்களின் பிரதிநிதி தான் இளையராஜா! ஒரு பத்திரிகையாளனாக உருவாவதற்கு முந்தியில் இருந்தே அவர் பெல்பாட்டம் அணிந்து சுற்றிக் கொண்டிருந்த அந்த இளமைக் காலம் முதல் அவரைப் பார்த்து வருகிறேன். அவரை சில முறை பிரசாத் ஸ்டுடியோவிலும், ஒரே ஒரு முறை அவரது வீட்டிலும்…
-
- 1 reply
- 494 views
- 1 follower
-
-
இது சவாலான நேரம்: சமந்தா மின்னம்பலம்2022-04-18 தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் அவர் நடித்துள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' விரைவில் வெளிவர இருக்கிறது. தெலுங்கில் 'சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்துவிட்டார். திருமணம் செய்து கொண்ட பின்னும் சமந்தா முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில்தான் இருக்கிறார். கணவருடன் பிரிவு அறிவித்த பின்னும் சமந்தாவின் சினிமா வாய்ப்புக்கள் குறையவில்லை. இருந்தபோதிலும் தன்னை எப்போதும் பொதுவெளியில் பரபரப்புக்குரிய நடிகையாக வைத்துக்கொள்ளுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆடை குறைப்பு செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதிகமாகவ…
-
- 0 replies
- 299 views
-
-
சாப்பாட்டுக்கே வழியில்லை...பீஸ்ட்டுக்கு செலவு செய்யும் இலங்கைவாசிகள்.? சென்னை : இலங்கையில் மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், பீஸ்ட் படம் பார்க்க அந்நாட்டு மக்கள் அடித்துக் கொண்டு பணம் செலவு செய்வது பார்ப்பவர்களை ஆச்சரியப்படவும், குழப்பமடையவும் வைத்துள்ளது. விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பீஸ்ட் படத்திற்கான டிக்கெட் புக்கிங் இரண்டு நாட்களுக்கு முன் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 படங்கள் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் எந்த படம் அதிக வசூலை குவிக்கும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. பீஸ்ட் டேஃபர்ஸ்ட் ஷோ …
-
- 2 replies
- 385 views
-
-
காவல்துறை பயிற்சிக்கூடத்தில் நடக்கும் அடக்குமுறைகளையும் அதைத் தொடர்ந்து நாயகனுக்கு நடக்கும் சிக்கல்களையும் பேசுகிறது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் 'டாணாக்காரன்'. 90களின் இறுதியில் காவல்துறை பயிற்சிக்குச் செல்லும் இளைஞர்களுடன் 80களில் இருந்து ஒரு குழுவும் பயிற்சிக்கு வருகிறது. வெவ்வேறு ஸ்குவாட்களாகப் பயிற்சிக்கு வந்தவர்கள் பிரிக்கப்பட, அறிவு இருக்கும் ஸ்குவாட் எப்போதும் கடுமையாக நடந்துகொள்ளும் காவல்துறை அதிகாரி ஈஸ்வரமூர்த்தியின் கீழ் வருகிறது. மிகவும் கண்டிப்பான அவருக்கு தன் குழுவில் இருக்கும் வயதானவர்களையும் பிடிக்கவில்லை, அவர்களுக்கு ஆதரவாக அறத்தின் பக்கம் நிற்கும் அறிவையும் பிடிக்கவில்லை. சின்ன சின்ன பிரச்னைகளும் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. மரணங்கள் …
-
- 0 replies
- 216 views
-
-
'ஜல்சா' திரைப்படம்: செரிப்ரல் பால்சியுடன் பாலிவுட்டில் ஜொலிக்கும் சூர்யா காசிபட்லா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PRIME VIDEO படக்குறிப்பு, ஜல்சா திரைப்படத்தில் நடித்த வித்யா பாலன் மற்றும் ரோஹிணி அத்தங்காடியுடன் சூர்யா காசிபட்லா. சமீபத்தில் வெளியான 'ஜல்சா' பாலிவுட் திரில்லர் திரைப்படத்தில் செரிப்ரல் பால்சியால் (பெருமூளை வாத நோய்) பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா காசிபட்லா, தன் நிஜ வாழ்க்கையில் தினந்தோறும் அத்தகைய பாதிப்புடன் வாழ்ந்து வருபவர். ஆனால், உலகின் மிகப்பெரிய திரைத்துறையான பாலிவுட்டில் அவரை நடிக்க வைப்பதென்பது, எல்லோருக்கும் வாய்ப்பளிப்பதில் அரிதான ஒரு நிக…
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் ஒஸ்கார் அமைப்பிலிருந்து விலகினார் ஒஸ்கார் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் பதவி விலகினார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் தலையை முழுக்க மொட்டை அடித்திருந்தமை பற்றி நகைச்சுவையாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் ப…
-
- 0 replies
- 255 views
-
-
ஆஸ்கர் விருதுகள் - சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் வில் ஸ்மித் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறந்த நடிகர் - வில் ஸ்மித் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதுவரை வழங்கப்பட்ட விருதுகளில், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த சவுண்ட், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில், 'டுன்' என்ற திரைப்படம் விருதுகளை குவித்துள்ளன. சிறந்த அனிமேஷன் படமாக, டிஸ்னி தயாரித்த 'என்காண்டோ' (Encanto) திரைப்படம் தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகரு…
-
- 9 replies
- 631 views
- 1 follower
-
-
பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தால் ஏற்படும் ஆபத்தை நட்பு, காதல், விஸ்வாசத்துக்கு இடையே ரத்தம், ரணம், ரௌத்திரம் கொண்டு எதிர்ப்பதே 'ஆர்ஆர்ஆர்'. வேட்டைக்காக காட்டுக்கு வரும் ஆங்கிலேய அதிகாரி மற்றும் அவரின் மனைவி அங்கிருக்கும் பழங்குடியின சிறுமியை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். அந்த இனத்தின் காப்பான் கொமரம் பீம், சிறுமியை மீட்க ஆங்கிலேயர்களை நெருங்க முயல்கிறார். அதேநேரம், ஆங்கிலேயர்களுக்கு விஸ்வாசமாக இருந்து, சொந்த மக்களையே எதிர்க்கும் கண்டிப்புமிக்க காவல் அதிகாரி ராமராஜுவுக்கு, கொமரம் பீம்மை கைது செய்யும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. பீம்மை பிடித்துக் கொடுத்தால், அவரின் பல நாள் ஆசையான சிறப்பு அதிகாரி பதவி கொடுக்கப்படும். இப்படி இருவருமே தங்கள் நோக்கங்களுக்காக நகரும்போது ஏற்பட…
-
- 1 reply
- 393 views
-
-
மறுமணம் செய்து கொள்வீர்களா? - மனம் திறக்கும் இமான்
-
- 0 replies
- 731 views
-
-
பாலு மகேந்திரா: என்றும் அழியாத கோலம் சமஸ் திடீரென்று அழைக்கிறார்: “இன்னைக்கு அலுவலகம் வர முடியுமா?” பொதுவாக, சரியான நேரத்தைப் பின்பற்றுவார் என்பதால், அவர் குறிப்பிட்டபடி சரியான நேரத்தில் அங்கிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக அவருடைய நாற்காலியில் அமராமல், சோபாவில் அமர்ந்திருக்கிறார். நாற்காலியை இழுத்துப்போட்டு அருகில் அமருமாறு சைகைசெய்கிறார்: “உடம்பு சரியில்லை, டாக்டரைப் போய்ப் பார்த்தேன். என்ன மருந்து எழுதினார்னு தெரியலை. மாத்திரை முழுங்கினதிலேர்ந்து மயக்கமாவே இருக்கு'' என்றவர், சத்யாவை அழைக்கிறார். சத்யா வந்ததும் அவரிடம் சாப்பிட எடுத்துவரச் சொல்லி சைகை காட்டுகிறார். சத்யா அகன்றதும், “சத்யா என்னோட மகன் மாதிரி. தப்பு. அவன் என்னோட வளர்ப்பு மகன்'' என்கிற…
-
- 9 replies
- 941 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், வினய், இளவரசு, தேவதர்ஷினி, புகழ்; இசை: டி. இமான்; ஒளிப்பதிவு: ஆர். ரத்னவேலு; இயக்கம்: பாண்டிராஜ். 'சூரரைப் போற்று', 'ஜெய் பீம்' ஆகிய படங்கள் ஓடிடியிலேயே வெளியாகிவிட்டவிட்ட நிலையில், 'காப்பான்' படத்திற்குப் பிறகு சூர்யா நடித்து திரையரங்கில் வெளியாகும் படமாக அமைந்திருக்கிறது இந்த 'எதற்கும் துணிந்தவன்'. படத்தின் துவக்கத்தில் பல கொலைகளைச் செய்கிறார் கதாநாயகன் கண்ணபிரான் (சூர்யா). பிறகு கதை பின்நோக்கி நகர்கிறது. தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டங்களில் ஒன்று. அங்கே தமிழ் சினிமாவுக்கே உரிய ஊர். அந்த ஊரின் பெரிய மனிதரின் (சத்யராஜ்) மகன் …
-
- 0 replies
- 281 views
-
-
கீதா பாண்டே பிபிசி நியூஸ் மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BHAVANA MENON படக்குறிப்பு, பாவனா தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையான பாவனா மேனன், தன் மீதான பாலியல் தாக்குதல் விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு மௌனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் "இதிலிருந்து மீண்டு வரும் பயணம் மிகவும் கடினமாக இருந்தது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்திய திரையுலகில் சுமார் 80க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய பாவனா, கடந்த 2017ஆம் ஆண்டு திருச்சூரிலிருந்து கொச்சிக்கு பயணித்துக்கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார். அந்தச் சமயத்தில் , இது பெர…
-
- 0 replies
- 643 views
-
-
கணவரைப் பிரிய வழிதேடும் மனைவி, இன்னொரு பெண்ணை தனது கணவரைக் காதலிக்குமாறு நடிக்கச் சொன்னால், அதுவே 'ஹே சினாமிகா'. துல்கர் சல்மான், அதிதி ராவ் இருவரும் முதல் சந்திப்பிலேயே காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள். இரண்டு வருட இல்லற வாழ்க்கைக்குப் பிறகு துல்கரின் அதீத காதல் மற்றும் நியாயமான செயல்களால் சலிப்படையும் அதிதி, அவரை பிரிய நினைக்கிறார். அதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கும்போது, உளவியல் நிபுணரான காஜல் அகர்வாலை சந்திக்கிறார். அவரிடம் கணவரை விவாகரத்து செய்ய ஐடியா கேட்கும் அதிதி, ஒருகட்டத்தில் காஜலையே கணவரைக் காதலிக்குமாறு நடிக்கச் சொல்கிறார். இதன்பிறகு இவர்கள் மூவர் வாழ்க்கையிலும் என்ன நடக்கிறது என்பதே 'ஹே சினாமிகா' திரைக்கதை. யாழன் கதாபாத்திரத்தில் துல்கர்…
-
- 0 replies
- 437 views
-
-
நடிகர்கள்: அஜீத், ஹிமா குரேஷி, சுமித்ரா, கார்த்திகேயா, சுந்தர்; இசை: யுவன் ஷங்கர் ராஜா, ஜிப்ரான்; ஒளிப்பதிவு: நீரவ் ஷா; இயக்கம்: எச். வினோத். 'நேர் கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு அஜீத்தும் எச். வினோத்தும் இணைந்திருக்கும் படம் இது. அஜீத்தின் திரைப்படங்களிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றுகூடச் சொல்லலாம். எச். வினோத்தின் முந்தைய படங்களான 'சதுரங்க வேட்டை', 'தீரன்: அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை' படங்கள் சிறப்பாக அமைந்திருந்ததும் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. அர்ஜுன் (அஜீத்) ஒரு சிறப்பான காவல்துறை அதிகாரி. குற்றம்செய்பவர்களின் கையை உடைத்துவிட்டு, அவர்கள் குடும்பத்திற்கு பணம் உதவிசெய்யும் நல்ல மனம் படைத்தவர். ஆனால், அண்ணன் குடிக…
-
- 3 replies
- 1k views
-
-
ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GANGAIAMAREN@ME.COM/TWITTER படக்குறிப்பு, இசைக் கடலோடு மீண்டும் சங்கமித்திருக்கிறது 'கங்கை'. ஆம் பல ஆண்டுகள் கழித்து தன் அண்ணன் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்திருக்கிறார் இசையமைப்பாளர், இயக்குநர் கங்கை அமரன். இருவரும் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று இரவு 8.30 மணியளவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று நடந்த சந்திப்பு, இறை அருளுக்கு நன்றி! உறவுகள் தொடர்கதை…!!!' என எழுதி, இளையராஜாவை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்த…
-
- 3 replies
- 478 views
-
-
மனசாட்சியுள்ளவர் காவல் துறையில் இயங்க முடியுமா? – ‘ரைட்டர்’ - தயாளன் அப்பாவிகளை குற்றவாளியாக சித்தரிக்க, சம்பவங்களை ஜோடித்து எழுதும் காவல்துறை ரைட்டர் பணியில் ஒரு மனசாட்சியுள்ள போலீஸ்காரன் எதிர்கொள்ளும் உளவியல் போராட்டங்களை வெகு துல்லியமாக காட்சிப்படுத்திய வகையில், புதிய விவாதங்களை எழுப்புவதோடு, மனசாட்சியை உலுக்குகிறது..! காவல் துறையின் சீரழிவை எழுத்தர் ஒருவரின் பார்வையில் விவரிக்கிறது, நீலம் தயாரிப்பில் இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ரைட்டர்’ திரைப்படம்! படத்தின் திரைக்கதையில் இது நல்ல சினிமா என்பதற்கான உதாரணங்கள் நிறையவே வெளிப் படுகின்றன! இதற்கு முன் தமிழில் போலீஸ் கதைகள் என்பவை எப்படிப்பட்டவையாக இருந…
-
- 1 reply
- 401 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா, துருவ் விக்ரம், சனாந்த், வேட்டை முத்துக்குமார், ஆடுகளம் நரேன்; ஒளிப்பதிவு: ஷ்ரேயாஸ் கிருஷ்ணா; இசை: சந்தோஷ் நாராயணன்; இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்றெல்லாம் அறிவிப்பு வெளியானபோது, இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்கிறதா? படத்தின் கதை இதுதான்: காந்தி மகானின் (விக்ரம்) குடும்பமே காந்தியவாதிகள். இதனால், சிறுவயதிலிருந்தே மிகுந்த கட்டுப்பாட்டோடு வளர்க்கப்படுகிறார் காந்தி. வளர்ந்து திருமணமாக…
-
- 7 replies
- 734 views
-