Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பிரபல ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்கிய கை ஹாமில்டன் காலமானார் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் சிலவற்றை இயக்கிய பிரிட்டிஷ் இயக்குநர் கை ஹாமில்டன் தனது 93ஆவது வயதில் காலமானார். இந்த மூன்றண்கள் திரையுலகில் மிகவும் பிரபலமானது ஷான் கானரி நடித்த கோல்ட் ஃபிங்கர் மற்றும் டயமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர் ஆகிய படங்களை அவர் இயக்கியுள்ளார். பின்னர் ரோஜர் மூர் நடித்த லிவ் அண்ட் லெட் டை மற்றும் மேன் வித் தி கோல்டன் கன் ஆகியப் படங்களையும் இயக்கியுள்ள கை ஹாமில்டன் மத்தியதரை கடலில், ஸ்பெயினினுக்கு சொந்தமான மயோக்ரா தீவில் காலமானார். ஜேம்ஸ் பாண்டாக நடித்த ஷான் கானரி தனது திரை வாழ்க்கையின் முற்பகுதியில், அவர் தர்ட் மேன் திரைப்படத்த…

  2. நயன்தாராவின் காதலர்களின் வரிசையில் புதிதாக ஒரு பிரபலமான தயாரிப்பாள மற்றும் நடிகராகவுள்ள அரசியால் வாரிசு பிரபலத்தின் பெயர் ஒன்றும் சேர்ந்துள்ளது. காதல் சர்ச்சைகளுக்கும் நயன்தாராவுக்கும் அப்படி என்ன பொருத்தமோ தெரியவில்லை. நயன்தாரா விட்டாலும் ஊடகங்களின் கிசுகிசுக்கள் அவரை விடுவதாக இல்லை. அண்மையில் தமிழகத்தின் குமுதல் ரிப்போட்டரில் நம்பர் நடிகைக்கும் அரசியல் வாரிசு நடிகருக்கும் காதல் என புதியதொரு பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே சிம்புவுடன் காதல் முறிவு. பின்னர் திருமணம் முடித்த பிரபுதேவாவுடன் திருமணம் வரையில் சென்ற நயன்தாராவின் காதலும் பிரிவில் முடிந்தது. இதன்போது நயன்தாராவுக்கு ஏகப்பட்ட பொருளாதார நஷ்டம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இவற்றுக்கிடையே …

  3. இசைஞானி இளையராஜா. இணையற்ற திரை இசை மேதைகளில் ஒருவர். திரைப்படங்களின் காட்சிகளின் வசனங்களைத் தன் பின்னணி இசை மூலம் பேச வைத்தவர். தென்கோடி கிராமத்தில் பிறந்து தேம்ஸ் நதி நகரை இந்தியா நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பெருமை இவருக்கு உண்டு. தினமும் சரியாகக் காலை ஏழு மணிக்கெல்லாம் தன் ஒலிப்பதிவு கூடத்திற்கு வந்துவிடுகிறார். நாள் முழுதும் நடக்கும் இசைப் பணிகளுக்கிடையே யாரையும் சந்திப்பதில்லை. ‘தி ஹிந்து’ இதழுக்காக அவரைப் பிரசாத் ஸ்டுடியோவில் சந்தித்தோம். பிரகாஷ் ராஜின் ‘உன் சமையலறையில்’ படத்திற்கான பின்னணி இசையமைக்கும் பணிக்கு இடையில் பேசினார் இசை ஞானி. உங்கள் பார்வையில் ஒரு பாடல் என்பது எப்படி இருக்க வேண்டும் நினைக்கிறீர்கள் ? பாடல் பாடலாக இருக்க வேண்டும். அது உள்ளத்த…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் & நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் மலையாள சினிமாவை உலுக்கிய நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் எதிரொலிக்கிறது. தமிழ் திரைத் துறையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவை நடப்பதாக விவாதங்கள் கிளம்பியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8ஆம் தேதி) நடந்த தமிழ் சினிமா நடிகர்களின் கூட்டமைப்பான தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் 68வது பேரவைக் கூட்டத்தில், பெண்களுக்கு எதிரான புகார்களை விசாரிப்பதற்கான குழு பற்றி அறிவிக்கப்பட்டது. இந்தக் குழு தமி…

  5. ஆட்டு தலை, மனித உடம்பு. யார் இந்த ஆட்டு குழந்தை?

  6. தலைவரின் சினிமா கனவை நிறைவேற்றிய "சினம்கொள்" :

  7. விஸ்வரூபத்திற்கு கொதிக்கும் நடிகர்கள் தேன்கூடு, ஆணிவேர் படத்திற்கு குரல் கொடுக்காதது ஏன்?...உச்சிதனை முகர்ந்தால் வெளிவேந்தபோது அந்த படத்தின் விளம்பரம் மற்றும் பாடல் காட்சிகள் எப்.எம். மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவில்லை...எங்கே போனது கருத்துரிமை?...எங்கே போனது உங்கள் குரல்?... கமலுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தார், பார்த்திபன் குரல் கொடுத்தார், அஜித் குரல் கொடுத்தார்...இனி விஜய் குரல் கொடுப்பார்... திரிஷா கொடுப்பார்... காவிரி டெல்டாவில் எங்கள் விவசாயி தண்ணீர் இல்லாமல் சாகிறானே எங்கே உங்கள் குரல்... அணுவுலைக்கு எதிராக 500 நாட்களுக்கு மேல் போராடுகிறானே எங்கே உங்கள் குரல்... முல்லை பெரியாரில் விடயத்தில் எங்கே உங்கள் குரல்... பல தடுப்பணைகளை கட்டி பாலாற்றை …

  8. லியோ படத்தில் கை வைத்த சென்சார்! விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடலின் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த பாடலின் சில வரிகளை சென்சார் போர்டு நீக்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் சர்ச்சை வருவதற்கு முன்பு பாடல் வரிகளை சென்சார் போர்டு ஏன் நீக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 19 ஆம் தேதி லியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. …

  9. திரை விமர்சனம்: இஞ்சி இடுப்பழகி உடல் பருமனான ஸ்வீட்டியை (அனுஷ்கா) திருமணக் கோலத்தில் பார்க்க அம்மா ராஜேஸ்வ ரிக்கு (ஊர்வசி) ஆசை. அனுஷ்காவின் உடல் எடையைப் பார்த்து மாப்பிள்ளைகள் பின்வாங்குகிறார்கள். அப்படிப் பெண் பார்க்க வரும் அபியும் (ஆர்யா) அனுஷ்காவும் திரு மணப் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டாலும் நட்பு தொடர்கிறது. அனுஷ் காவுக்கு ஆர்யா மீது காதல் வரும்போது அவர் இன்னொரு பெண்ணை விரும்புவ தாகத் தெரிகிறது. ஆர்யா தன்னை விரும்பாத தற்குத் தனது உடல் எடைதான் காரணம் என நினைக்கும் அனுஷ்கா, உடனடி எடை குறைப்புக்கு உத்தரவாதம் தரும் ஒரு நிலை யத்துக்குப் போகிறார். அங்கு அதிர்ச்சியான உண்மைகளைக் கண்டறிந்து போராட்டத்தில் குதிக்கிறார்…

  10. ஜே.கே.ரவுலிங் எழுதிய ஹாரிபாட்டர் நாவல்கள் அனைத்தையும் ஹாலிவுட் பிரித்து மேய்ந்துவிட்டது. ரஜினி படத்துக்கு முதல்நாள் இரவே காத்திருப்பது போல் இந்த நாவலுக்கு அமெரிக்காவில் தூக்கம் விழித்த ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஹாரிபாட்டராக இதுவரை திரையில் தோன்றியவர் நடிகர் டேனியல் ரெட்ஃகிளிப். ஹாரிபாட்டர் என்றதும் இவரது உருவம்தான் யாருடைய மனதிலும் வரும். டீன்ஏஜ் பருவத்துக்கு முன்பே இங்கிலாந்தின் அதிகம் சம்பாதிக்கும் நடிகராக ரெட்ஃகிளிப்பை உயர்த்தியது ஹாரிபாட்டர் கதாபாத்திரம்தான். ரவுலிங் அடுத்து ஒரு கதையை எழுதி வருகிறார். அதில் ஹாரிபாட்டராக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு யோசிக்காமல் உடனே நோ சொன்னார் ரெட்ஃகிளிப். ஹாரிபாட்டரின் குணாம்சங்களை அவரது குணங்களாக கருதுகி…

  11. பகாசூரன் - சினிமா விமர்சனம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BAGASURAN TEASER நடிகர்கள்: செல்வராகவன், நட்டி, ராதாரவி, தரக்ஷி, தேவதர்ஷினி; இசை: சாம் சி.எஸ்.; இயக்கம்: மோகன் ஜி. பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பகாசூரன். மோகன் ஜியின் முந்தைய படங்களில் வெளிப்பட்ட ஜாதி சார்ந்த பார்வைக்காக பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தப் படம் குறித்தும் எதிர்பார்ப்பு நிலவியது. இளம் பெண் ஒருவர் தனது காதலனின் வற்புற…

  12. இளையராஜாவுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது "இசைஞானி' இளையராஜாவுக்கு 2012ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கப்பட இருக்கிறது. இசைத் துறையில் அவரது படைப்புத் திறன், புதுமையான முயற்சியில் வெற்றி பெற்றது ஆகிய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரத்தினால் ஆன பாராட்டுப் பத்திரம் அளிக்கப்பட்டு, அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு கெüரவம் வழங்கப்படும். இளையராஜா தவிர இசைத் துறையைச் சேர்ந்த மேலும் 8 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜசேகர் மன்சூர், அஜய் போகன்கர் (இந்துஸ்தானி இசைப் பாடல்), சபீர்கான் (தபேலா), பஹாஉத்தீன் தாகர் (ருத்ர வீணை), ஓ.எஸ். தியாகராஜன் (கர்நாடக இசை), மைசூர் எம். நாகராஜ…

  13. என் படத்தை யாரும் பாா்க்காதீா்கள் - சன்னி லியோன் 2016-12-21 21:18:28 ஆபாச படங்­களில் நடித்து வந்த சன்னி லியோன் இந்­தியில் கவர்ச்சி படங்­களில் நடிக்­கிறார். தமி­ழிலும் ‘வட­கறி’ படத்தில் குத்து பாட­லுக்கு நடனம் ஆடினார். சன்னி லியோனால் இந்­திய கலாச்­சாரம் பாதிக்­கப்­ப­டு­கி­றது என்று அவர் மீது பொலிவூட் ஹீரோ­யின்கள் பலர் தொடக்க நாட்­களில் விமர்­சித்­தனர். தற்­போது இணைய தளங்­களில் பலர் சன்­னியை விமர்­சித்து கருத்து வெளி­யிட்டு வரு­கின்­றனர். இதில் கோபம் அடைந்த சன்னி லியோன் திடீ­ரென்று விமர்­ச­கர்கள் மீது பாய்ந்­தி­ருக்­கிறார். ‘நான் நடிக்கும் படத்­தையோ, அல்­லது எனது புகைப்­ப­…

  14. திரை விமர்சனம்: தொடரி கட்டுப்பாட்டை இழந்து ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு காதல் பயணமே ‘தொடரி’. டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் ரயில் கேன்டீனில் வேலைபார்க்கும் ஊழியர், பூச்சியப்பன் (தனுஷ்). அதே ரயிலில் பயணிக்கும் நடிகை ஷாவின் (பூஜா ஜாவேரி) ஒப்பனை உதவியாளர் சரோஜா (கீர்த்தி சுரேஷ்). முதல் பார்வையிலேயே கீர்த்தியின் மீது காதலைப் படர விடுகிறார் தனுஷ். ஆரம்பத்தில் பிடி கொடுக்காத கீர்த்தி ஒரு கட்டத்தில் மனம் மாறுகிறார். அதே ரயிலில் மத்திய அமைச்சர் ராதாரவி பயணிக் கிறார்.ரயில் ஓட்டுநர் ஆர்.வி.உதயகுமாருக்கும், உதவியாளர் போஸ் வெங்கட்டுக்கும் மோதல் ஏற்படுகிறது. அதன் பிறகு ரயில் மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறது. அந்த ஆபத்து …

  15. தணிக்கை மற்றும் கருத்துச் சுதந்திரம்: கலையும் அரசியலும் யமுனா ராஜேந்திரன் இன்றைய தகவல் தொழில்நுட்ப, இணைய, உலகவயமாதல் உலகில் ஒரு குறிப்பிட்ட கலைப்படைப்பிற்கு அல்லது திரைப்படத்திற்கு முற்றிலுமான தடை என்பது நடைமுறையில் சாத்தியம் என்பது இல்லை. ஒரு குறிப்பிட்ட நாடு தனது எல்லைக்குள் தடை செய்யலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலுள்ள நாட்டின் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் அமைப்பு தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடைசெய்யலாம். ஒரு படைப்பாளி தனது படைப்பை தானே முடக்கிக் கொள்வது அல்லது அழித்துவிடுவது அல்லாது இந்த உலகில் ஒரு கலைப்படைப்பை அல்லது திரைப்படத்தைத் தடைசெய்ய முடியாது. பிரதி செய்யும் மின்னணுத் தொழில்நுட்பமும் வலைப்பின்னலான இணையமும், நாடுகள்-பிரதேசங்களின் எ…

  16. சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது. நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள்இருப்பதாகக் கூறி எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, படத்தை தமிழகத்தில் திரையிடமாநில அரசு தடை விதித்தது. தடைக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு நேற்று முன்தினம் விஸ்வரூபம் படத்தை பார்த்து ஆய்வு செய்தது. இதில், தயாரிப்பு நிறுவனம், ரசிகர்கள் மற்றும்மனுதாரர்கள் தரப்பிலும் பிரதிநிதிகள் அந்தப் படத்தை பார்த்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது…

  17. ‘சிறந்த சர்வதேச நடிகர்’ - மெர்சல் காட்டிய விஜய்! மெர்சல் படத்துக்காக சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருதை பெற்றுள்ளார் நடிகர் விஜய். சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு, சர்வதேச கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை 2014-ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது. நாடகம், சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. முன்னதாக, சிறந்த நடிகர் பிரிவில் `மெர்சல்' படத்தில் நடித்தற்காக விஜய் 'ஏஜென்ட்' திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, 'சைட் சிக் கேங்' நடிகர…

  18. திரை விமர்சனம்: உப்புக் கருவாடு முதல் படம் தோல்வி. இரண்டா வது படம் பாதியில் கைவிடப் பட்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மூன்றாவதாக ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக் கிறது கருணாகரனுக்கு. ஆனால் ஒரு நிபந்தனை. படத்தைத் தயாரிக்க முன் வரும் எம்.எஸ். பாஸ்கரின் செல்ல மகள் நந்திதாவைப் படத்தின் கதாநாயகியாக அறிமுகப்படுத்த வேண்டும். பட வாய்ப்பைப் பெற்றுத்தந்த மயில்சாமி பரிந்துரைக்கும் கிராமத்து இளைஞன் ‘டவுட்’ செந்திலை உதவி இயக்குநராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சமரசங்களைச் செய்துகொள் ளும் இயக்குநர் கருணாகரன், தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து படத்தை இயக்கத் தயாராகிறார். அவ ரால் தயாரிப்பாளரின் மகளை நடிக்க வைக்க முடிந்தத…

  19. 2016-ல் திரும்பிப் பார்க்க வைத்த பெண் இயக்குநர்கள்! சென்சிட்டிவ் படங்கள் முதல் சென்டிமென்ட் படங்கள் வரை, திரைப்படங்களில் புதிய முயற்சிகளில் முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டார்கள் பெண் இயக்குநர்கள். 2016-ம் ஆண்டு, திரையரங்குகளை தங்கள் படைப்புகளால் அழகாக்கிய பெண் படைப்பாளிகளில் சிலர் இவர்கள்! அஷ்வினி ஐயர் 'அம்மா கணக்கு' சொன்னவர், அஷ்வினி ஐயர். அமலா பால் கதாபாத்திரத்தின் மூலம், சிங்கிள் பேரன்டின் அன்பையும், ஆதங்கத்தையும், போராட்டத்தையும் அழகாகச் செதுக்கியிருப்பார். தன் மகள் மீதான கனவுகள் சுமந்து, கலெக்டரிடம், 'நீங்க எந்த காலேஜ்ல படிச்சீங்க, எவ்வளவு பணம் செலவாகும் இந்தப் படிப்புக்கு?' எனக் கேட்பதில் இருந்து, இடைவேளையின்போது அறிவுரை வழங்குவது வரை, ப…

  20. Started by P.S.பிரபா,

    இந்திய பாகிஸ்தான் பிரிவினை ஆரம்பித்த காலப்பகுதியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படம். கடந்த சித்திரையில் திரைக்கு வந்தது. இந்தி சினிமாவிற்கே உரிய பாணியில் எடுக்கப்பட்டது. Madhuri Dixit, Sonakshi Sinha, Alia Bhatt, Varun Dhawan, Aditya Roy Kapur மற்றும் Sanjay Dutt என இந்த சினிமாவின் பிரபல்யமான நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்டது. பிரமாண்டமான காட்சியமைப்புகள் மனதோடு ஒட்டவில்லை ஆனால் ஆடை அலங்காரங்கள் எப்போதும் போலவே மனதை மயக்குகிறது. இரண்டே இரண்டு பாடல்களை தவிர மற்றவை மனதை கவரவில்லை. படம் பெரிய வெற்றியை பெறவில்லைதான் ஆனாலும் இதன் கதை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இதில் வரும் கதாபாத்திரங்களை போல மனிதர்கள் எங்களிடையே வாழ்கிறார்கள். இவர்கள் யார் என்றும் பார்ப்போம். Zafa…

  21. 3 கட்சிகளிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருப்பதால் நான் அரசியலுக்கு வருவேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார். நடிகை நமீதா அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்திகள் தமிழ்நாட்டில் ஓயாத அலைகளாய் எழுந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவர் நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் அரசியலுக்கு வருவது உறுதி. 3 கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. இப்போது அதுபற்றி அதிகமாக பேசமுடியாது. நல்ல விடயம் நடக்கும் முன்பு, அதுபற்றி வெளியே எதுவும் பேசக்கூடாது’’ என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள் என்றும் எனக்கு தேசிய அரசியலில் ஆர்வமில்லை. என் உயிர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது தமிழ்நாட்டில்தான் பிரியவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், 16 வயதில் நான…

    • 0 replies
    • 492 views
  22. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் 10-ம் தேதி தொடங்குகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சர்கார்’. விஜய் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்தார். வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு, ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படம் அரசியல் சம்பந்தப்பட்டது எனவும், அதற்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அதை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார். இதுவரை …

  23. கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும் பங்கேற்பு கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் வரும் டிசம்பர் 12-ம் தேதியில் இருந்து 19-ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. தொடர்ந்து 19-வது ஆண்டாக நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் உலக மொழிகளில் உருவாக்கப்பட்ட சிறந்த படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த வரிசையில் இடம்பெறும் இந்திய மொழிப் படங்களை தேர்வு செய்ய பிரபல சினிமா இயக்குனர்கள் லெனின் ராஜேந்திரன், கே.மதுபால், எம்.சி.நாராயணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட 55 படங்கள் இந்த தேர்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றில் இருந்து 7 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 3 இந்தி, 2 வங்காளம், ஒரு மர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.