வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
தனிநபர் ஆதிக்கத்தில் நடிகர் சங்கமா?... வில்லங்க புகார்கள்...விறுவிறு காட்சிகள்! நடிகர் சங்கத்தில் நடந்துவரும் களேபரங்கள் ஒரு நிஜ சினிமாவை விஞ்சி பல நுாறு நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படத்தை விடவும் சுவாரஸ்யமாக பல பாகங்களில் நடப்பதுதான் வேடிக்கை. முதல் பாகத்தில் முந்தைய நிர்வாகம் வெர்சஸ் பாண்டவர் அணி என அளப்பரையை தந்தன. இரண்டாம் பாகத்தில் முந்தைய நிர்வாகம் வெர்சஸ் புதிய நிர்வாகம் என ரவுண்ட் கட்டியது. மூன்றாவது பாகத்தில் புதிய நிர்வாகம் வெர்சஸ் வாராகி என்ற தனிநபர் என பட்டையை கிளப்பியது. இப்போது நான்காம் பாகத்தில் அதிரடி திருப்பம்...நிர்வாகிகள் மத்தியிலேயே புகைச்சல் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். கலைவாணர், இயக்குனர் கே.ச…
-
- 0 replies
- 454 views
-
-
சிக்கலில் வடிவேலுவின் தெனாலிராமன்? இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு வடிவேலு நடிக்கும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இப்படத்தில் கிருஷ்ணதேவராயர்-தெனாலிராமன் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு. பட்டாபட்டி படத்தை இயக்கிய யுவராஜ் படத்தை இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் 22 நாட்கள் நடைபெற்றது. அதையடுத்து படப்பிடிப்பு நடைபெறுவதற்கான அறிகுறிகளே இல்லை. இதுபற்றி அப்பட யூனிட் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது, படப்பிடிப்பு நடந்தபோது சில பிரச்னைகள் ஏற்பட்டு விட்டது என்கிறார்கள். என்ன காரணம் எனறால், தினமும் 9 மணி படப்பிடிப்பு என்றால் 11 மணிக்குத்தான் ஸ்பாட்டில் தலைகாட்டினார் வடிவேலு. இதுமாதிரி இன்னும…
-
- 0 replies
- 454 views
-
-
ஒரு என்கவுன்டர், பின்னணி, விசாரணை, பாடம்! ‘களத்தூர் கிராமம்’ விமர்சனம் Chennai: மூவரின் தனிப்பட்ட விரோதத்திற்கு ஒரு கிராமமே பலிகடா ஆகி, அதிலிருந்து மீண்டு வரும் கதையே 'களத்தூர் கிராமம்'. போலீஸ் வெறுக்கும், போலீஸை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கும் கிராமம் களத்தூர். தமிழக எல்லையின் முடிவில், ஆந்திர எல்லையின் தொடக்கத்தில் அமைந்திருக்கிறது. வாழ்வாதாரத்திற்காக களவுத் தொழிலைச் செய்யும் அந்த கிராமத்து மக்களுக்கு கிஷோரும், அவரது நண்பர் சுலில் குமாரும்தான் எல்லாம். சுலில் குமாரின் சபலத்தால், நண்பர்கள் இருவருக்குள்ளும் பகை மூள்கிறது. துரோகத்திற்காக சுலீலைக் கொலை செய்கிறார் கிஷோர். பாவத்திற்குப் பரிகாரமாக சுலீலின் தாத்தா பாட்டியிடமே தன் குழந்…
-
- 0 replies
- 453 views
-
-
இலங்கை தமிழ் சமூகத்தில் வாழும் திருநங்கைகள் தொடர்பாக கனடிய தமிழ் இயக்குநர் லெனின் எம் சிவம் இயக்கிய (கனடிய) தமிழ் சினிமா 'ரூபா' வில் Lead role லில் நடித்து இருக்கும் திருநங்கையின் உரை
-
- 3 replies
- 453 views
-
-
தமிழகத்தில் இனி ஒன் லைனில் மட்டுமே சினிமா ரிக்கற் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி.! சென்னை: தமிழகத்தில் ஒன் லைனில் மட்டுமே சினிமா ரிக்கெற் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், உள்பட பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குனர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் ரிக்கெற் கட்டணம் அதிகமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுவது வாடிக்கையாக உள்ளது.குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு மேல் ரிக்கெற் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிக புகார்கள் எழுகிறது. …
-
- 0 replies
- 453 views
-
-
விஸ்வரூபம் ரிலீஸாவதில் பிரச்சனை ஏற்பட்டபோது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் இருந்து முதன்முதலாக கைகொடுத்தவர் லிங்குசாமி. அதற்கு நன்றிக்கடனாக லிங்குசாமியில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக கமல் இயக்கி நடிக்கும் ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் கமல் ஜோடியாக தீபிகா படுகோனே நடிப்பார் என லிங்குசாமியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாஸன் நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்கித் தயாரிக்கிறார் என்று செய்திகள் கிளம்பியுள்ளன. விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சிகளில் தீவிரமாக உள்ளார் கமல்ஹாஸன். இந்தப் படத்துக்குப் பிறகு ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஒரு படம் செய்து கொடுப்பார் என்று கூறப்…
-
- 0 replies
- 453 views
-
-
`மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன்!' - பிக்பாஸ் 2 டீசரை வெளியிட்டார் கமல் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் 2 டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளார். `பிக்பாஸ்’. கடந்தாண்டு தமிழ்த் தொலைக்காட்சி உலகில் அதிகம் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி. ஷோ தொடங்குவதற்க்கு முன் ஆங்கர் யார், பங்கேற்பவர்கள் யார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. யாரும் எதிர்பாராத ஆங்கராக நடிகர் கமல்ஹாசன் களமிறங்கினார். `பங்கேற்பவர்கள்’ என சமூக வலைதளங்கள் பல பட்டியல்களை வெளியிட்டன, கடைசியில் விஜய் டிவி அதிகாரபூர்வ லிஸ்டை வெளியிட்டது. ஓவியா, வையாபுரி உள்ளிட்ட சினிமாவில் வாய்ப்பில்லாதவர்களே அதிகம் இடம்பிடித்திருந்தனர். ஆனாலும் ஷோ பிக் அப் ஆகி, `ஓடவும் முடியாது …
-
- 0 replies
- 453 views
-
-
சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு நவீன வசதியுடன் ஐநாக்ஸ் என்ற பெயரில் 4 தியேட்டர்கள் உள்ளன. வணிக வளாகம் மற்றும் சினிமா தியேட்டர்கள் உள்ளதால் இந்த காம்ப்ளக்ஸ் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஐநாக்ஸ் தியேட்டரில் வருகிற 9ந் தேதி விஜய் நடித்துள்ள தலைவா படம் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை என்ற பெயரில் இந்த தியேட்டருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், தலைவா படத்தை திரையிட்டால் ஐநாக்ஸ் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து மயிலாப்பூர் போலீசில் தியேட்டர் மானேஜர் விக்னேஷ் புகார் செய்தார். இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் தலைமையில் போலீசார் அ…
-
- 1 reply
- 452 views
-
-
தனுஷூக்கு நல்ல மனைவியாக இருப்பேன் – அமலாபால் இயக்குநர் விஜய்யிடம் இருந்து அமலாபால் பிரிவதற்கு தனுஷ்தான் காரணம் என்று கூறப்படும் நிலையில் விஐபி 2 பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அமலாபால், ‘முதல் பாகத்தில் எனது கேரக்டரை கொல்லாமல் விட்டதற்கும், இரண்டாம் கட்டத்தில் என்னைச் சேர்த்துக் கொண்டதற்கும் தனுஷூக்கு நன்றி. வேலையில்லா பட்டாதாரி 2 ஆம் பாகத்த்தில் தனுஷூக்கு டார்ச்சர் கொடுக்கும் மனைவியாக நடித்துள்ளேன். ஆனால் ‘விஐபி’ 3ஆம் பாகம் உருவானால் அதில் கண்டிப்பாக அவருக்கு நல்ல மனைவியாக நடிப்பேன்’ என்று கூறியுள்ளார். இந்த பேச்சின்மூலம் அமலாபால் இந்த படத்தில் தனுஷூக்கு டார்ச்சர் கொடுக்கும் மனைவியாக நடித்திருக்கின்றார் என்ற சஸ்பென்ஸ் வெளியே தெ…
-
- 1 reply
- 452 views
-
-
தமிழ் சினிமாவில் 17 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக இருப்பவர் நடிகை த்ரிஷா, தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகளை பாதியில் நிறுத்திட்டு பிரபலங்கள் பலரும் வீட்டில் முடங்கி போயுள்ளனர. ஆயினும் வீட்டில் இருப்பது போர் அடிக்காமல் இருக்க ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். அவ்வாறு நடிகை த்ரிஷா தற்போது ரசிகர்களுக்கு ஒரு டெஸ்ட் வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது “என்னுடன் டேட்டிங் வர விருப்பப்பட்டால் என்னை பற்றியும், என்னுடனான நேரத்தை வீணாக்காமல் எப்படியெல்லாம் செலவிடுவீர்கள் என 500 வார்த்தைகளுக்கு…
-
- 1 reply
- 452 views
-
-
சினிமா செய்திகள்: கலகலப்பை இழந்த சுந்தர், இந்தி மொழியாக்கத்தில் ஜோதிகா பகிர்க கோலிவுட்டில் இந்த வார சினிமா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைTWITTER/GVPRAKASH நாச்சியார் படத்தை தொடர்ந்து ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த தும்ஹாரி சூலு (Tumhari Sulu) படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார். அழகியதீயே, மொழி, அபியும் நானும், பயணம் போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன் ஜோதிகாவின் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கான முதல்கட்ட வேலைகள் தற்போது வேகமாக நடைபெற்றுகொண்டிருக்கின்றன. அதிலும் நடிகர்கள் தேர்வில் இயக்குனர் மும்முரமாக இருக்கிறார். இந்த நிலையில் ஜோதிகாவின் …
-
- 0 replies
- 452 views
-
-
கமல் விஸ்வரூபம் படத்தை ஆரம்பித்தது முதல் பலவித சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கின்றார். தற்போது அவர் ஒரு புதுவிதமான எதிர்ப்பில் இருக்கிறார். அதற்காக அவர் இன்று சென்னையில் டிஜிபி அலுவலகம் சென்று புகாரும் கொடுத்துள்ளார். அதாவது விஷயம் இதுதான். விஸ்வரூபம் டி.டி.எச் என்ற தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பு செய்யும் நேரத்தில் உள்ளூர் மின்வாரிய அதிகாரிகளை கைக்குள் போட்டு அந்த நேரத்தில் மின்சாரத்தை கட் செய்யப்போவதாக திடீரென ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. இது எதற்குமே கலங்காத கமல்ஹாசனை அதிர வைத்துள்ளது. அந்த நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் இல்லாமல் செய்துவிட்டால், அவருடைய திட்டம் தவிடுபொடியாகிவிடும்., மீண்டும் ஒரு காட்சி போடுவதற்குள் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகிவிடும். பணம் கொ…
-
- 0 replies
- 452 views
-
-
எப்போதாவது மணிரத்னம் படங்கள் மட்டும் இந்தியாவுக்கு வெளியே நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும். இன்று அந்த நிலைமையில் நல்ல முன்னேற்றம். அட்டைக்காப்பியான தெய்வத்திருமகள்கூட ஐப்பானில் விருது வாங்கியதாக ஃபிலிம் ஓட்டினார்கள். முன்னேற்றம்தானே…? அடுத்த மாதம் 16 முதல் 19 ஆம் தேதி வரை பாரிஸில் தெற்காசிய திரைப்பட விழா நடக்கிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள் போன்ற நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. நல்லவேளையாக இந்தமுறை காப்பி படங்களை அனுப்பாமல் தமிழிலிருந்து வழக்கு எண் படத்தையும், பீட்சாவையும் அனுப்பியிருக்கிறார்கள். இரண்டுமே நல்ல படங்கள், அசலானவை. ஏதாவது விருது கிடைத்தால்கூட ஆச்சரியமில்லை. http://123tamilcinema.com/2013010223410.ht…
-
- 0 replies
- 452 views
-
-
தொண்டிமுதலும் த்ருக்சாக்சியும்.... வெளியிடப்பட்டது: 07 ஜூலை 2017 ஃபகத் ஃபாசில் நடித்து திலிஸ் போத்தன் இயக்கத்தில் பிரபல மலையாள இயக்குனர் ஆசிக் அபு தயாரித்து வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம் "மகேஷிண்டே பிரதிகாரம்". இறங்குமுகமாக சென்று கொண்டிருந்த ஃபகத்தின் கேரியரை மீட்டெடுத்த படம். சிறந்த மலையாளத் திரைப்படம் மற்றும் சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்காக தேசியவிருதும் பெற்றது. இப்பொழுது மீண்டும் அதே கூட்டணி இணைந்து "தொண்டிமுதலும் த்ருக்சாட்சியும்" திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். மகேஷின்டே பிரதிகாரம் மிகவும் பசுமையான பின்னணியில் எடுக்கப்பட்ட கண்களுக்கு குளிர்ச்சியான ஒரு படம். ஆனால் இந்தப் படம் கர்நாடக எல்லையிலுள்ள கேரளத்தின் ஒரு வறண்ட…
-
- 0 replies
- 451 views
-
-
-
கபாலி திரைப்படம் இன்று காலை 4 மணிக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடனும், வரவேற்புடனும் வெளியான இந்த திரைப்படம் நல்ல குவாலிட்டியுடன் இணையதளம் ஒன்றில் வெளியாகி உள்ளது. கபாலி திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவதை தடுக்க அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சில இணையதளங்கள் முடக்கப்பட்டன. ஆனால், நேற்று கபாலியில் ரஜினி வரும் ஒப்பனிங் காட்சி இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினர். இது வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவியது. பின்னர் இணையதளங்களில் இருந்து அந்த காட்சி நீக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு கபாலி திரைப்பட…
-
- 1 reply
- 451 views
-
-
மலையாள மூத்த எழுத்தாளரான M.T. Vasudevan Nair இன் தெரிவு செய்யப்பட்ட 9 சிறுகதைகளை Anthology முறையில் எடுக்கப்பட்ட அருமையான Web series இது. போன கிழமை பார்க்க தொடங்கி ஒரு நாளுக்கு ஒரு கதையென பார்த்து முடித்தேன். வழக்கமான த்ரில் மற்றும் வன்முறை சார்ந்த வெப் சீரியல்களுக்கிடையே ஒரு குளிர்ச்சியான மழை போல பொழிந்து மனசை நிரப்பியது இந்த கதைகள். ஒரு மிக யதார்த்தமான சிறுகதை ஒன்றை வாசிக்கும் போது அது சாதாரண வாசிப்பு போல இருக்கும்., ஆனால் அடுத்த நாள் காலையில் இருந்து அந்த கதையும் அதில் வந்த மாந்தர்களும், சம்பவங்களும் அடிக்கடி மனசுக்குள் வந்து அருட்டிக் கொண்டே இருக்கும். இந்த web series சின் ஒவ்வொரு கதையும் அவ்வாறே என்னை அருட்டின. பச்சை பசேல் என இருக்கும் மலையாள ம…
-
- 1 reply
- 451 views
-
-
திரை விமர்சனம்: டார்லிங் 2 நண்பனின் துரோகத்தால் தான் தங்களது காதல் தோற்றது என்று கருதும் காதல் ஜோடி ஆவியாக வந்து நண்பனைப் பழிவாங்கத் துடிப்பதே ‘டார்லிங் 2’. ஒரு பெண்ணுக்குப் பேய் பிடிப்பது போன்ற திகில் காட்சியுடன் தொடங்கு கிறது படம். அடுத்த காட்சியில் தற்கொலை. அடுத்து, கலையரசன், காளி, ஹரி (மெட்ராஸ் ஜானி), அர்ஜுன், ரமீஸ், ஆகிய நண்பர்கள் வால்பாறைக்குச் சுற்றுலா போகிறார் கள். வால்பாறையில் ஒரு பெரிய பங்களாவில் தங்குகிறார்கள். நண் பர்கள் ஒவ்வொருவராக ‘காட்டு காட்டு’ என்று காட்டுகிறது ஆவி. ஒரு கட்டத்தில் கலையரசனின் உடலில் புகுந்துகொள்ளும் ராமின் ஆவி, கலையரசனைக் கொல்லப்போவ தாக மிரட்டுகிறது. ஆவிக்கு ஏன் கலையரசன் மீது கோபம்? கலையரசனால் ஆவ…
-
- 0 replies
- 450 views
-
-
புதிய மலையாள வரவு மலையாளத்திலிருந்து தமிழுக்கு படையெடுத்து வரும் நடிகையரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில், லேட்டஸ்ட் வரவு, நமிதா பிரமோத். கேரளாவின் பிரபல சுற்றுலா தலமான, குமரகோம் தான், மேடத்துக்கு சொந்த ஊர். டிராபிக், விக்ரமாதித்யன், சந்திரேட்டன் எவிடே போன்ற ‘ஹிட்’ படங்களில் நடித்திருந்தாலும், தமிழுக்கு சற்று தாமதமாகத் தான் அடி எடுத்து வைத்துள்ளார். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிமிர் படத்தில் நடிக்கிறார் நமிதா. இவர் விஷயத்தில் கோலிவூட்டை விட டோலிவூட் முந்திவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏற்கனவே சில தெலுங்கு படங்களில் நடித்து அங்கு பிரபலமாகிவிட்டார். தமிழ் சி…
-
- 0 replies
- 450 views
-
-
ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் எழுதிய நாவல் ஹாலிவுட்டில் சினிமாவாக எடுக்கப்படுகிறது. ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் 24 வருடங்கள் ஈராக்கை ஆண்டார். ஆனால் ரசாயண குண்டுகளைத் தேடுவதாக சொல்லிக் கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தூக்கிலிட்டு கொல்லப்பட்டார். இவர் அதிபராக இருந்த போது 1979 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் 4 கதைகளை எழுதி புத்தகங்களாக வெளியிட்டார். அவை ஈராக்கில் பெருமளவில் விற்று சாதனை படைத்தன. இந்த நிலையில் அவர் எழுதிய 'ஷபீபா அண்டு தி கிங்', 'புரூனோ' ஆகிய கதைகள் திரைப்படமாக தயாரிக்கப்படுகன்றன. இவற்றை பிரபல பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் படங்களாகத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இவற்றை இயக்குனர் சாஜா பரோன் கோகென…
-
- 0 replies
- 450 views
-
-
உலக சினிமா - அப்பாஸ் கிராஸ்தமி.! உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் திருப்பியதில் முக்கியமானவர் அப்பாஸ் கிராஸ்தமி (Abbas Kiarostami). 1940-ல் டெஹ்ரானில் பிறந்த இவர் ஆரம்பகாலத்தில் விளம்பரப் படங்களை வடிவமைக்கும் ஓவியராக இருந்தார். 1969-ல் இவர் இயக்கிய 12 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமே இவரது முதல் திரைமுயற்சி. ‘Taste of Cherry’, ‘Where is the friends Home’, ‘Through the Olive trees’, ‘Close up’, ‘Life and nothing more’, ‘Ten’ ஆகியவை அப்பாஸ் கிராஸ்தமி இயக்கிய முக்கியமான திரைப்படங்களில் சில. டெஹ்ரானை சுற்றியுள்ள கிராமங்களே இவரது படங்களின் முக்கிய கதைக் களன்களாக இருந்து வருகின்றன. கிராமத்து மனிதர்களையே இவர் பெரும்பாலும் தனது படங்களில் நடிக்க வைக…
-
- 0 replies
- 450 views
-
-
மீண்டும் நடிக்க வந்திருக்கும் வடிவேலு.. ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ என்ற முழுநீள நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார்.. முதல் கட்டப்படப்பிடிப்பில் மன்னர் குதிரையில் நகர்வலம் வருவது, குதிரையில் பயணம் செய்வது, போரில் பங்குபெறுவது, பாடல்காட்சியில் குதிரையில் வருவது போன்ற பல காட்சிகளை தேனியில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். See more at: http://vuin.com/news/tamil/vadivelu-beaten-by-a-horse
-
- 0 replies
- 450 views
-
-
-
ஆரம்பித்த இடத்திலேயே முடியும் இந்த தமிழ் படங்களை உங்களுக்குத் தெரியுமா? திரைப்படங்கள் என்றால் எப்படி இருக்கும்? ஒரு தொடக்கம், படத்தின் இடையில் ஒரு பிரச்னை, இறுதியில் அப்பிரச்னையின் முடிவு. இதுதான் நாம் பார்க்கும் பெரும்பாலான படங்களின் அமைப்பு முறை. சில இயக்குனர்கள் அவற்றில் இருந்து வேறுபட்டு படம் எடுப்பார்கள். அவ்வகையில், சில படங்கள் மட்டும் ஆரம்பித்த இடத்திலேயே முடிவும் அமையும். எந்த புள்ளியில் கதை ஆரம்பித்ததோ அதே புள்ளியில் படத்தின் முடிவும் இருக்கும். அப்படிபட்ட சில தமிழ் படங்களின் தொகுப்பு இங்கே: ‘24’ சூர்யாவின் மூன்று கேரக்டர்களில் கலக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் கதையம்சமும் கிட்டத்தட்ட இந்த ரகம்தான். கடைசியில் அந்த 24 சிம்பல்…
-
- 0 replies
- 450 views
-
-