வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
தத்தளிக்கும் தமிழ் சினிமா – 1000 கோடி இழப்பு! 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலால், கடந்த மார்ச் 17 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் இரண்டு மாதத்துக்குப் பிறகாவது திரையரங்குகள் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து அன்றாட தேவைகளுக்குத் தவித்து வருகின்றனர். 50 படங்கள் விஜய்யின் மாஸ்டர் சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் ஜகமே தந்திரம் ஜெயம் ரவியின் பூமி நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் என பெரிய பட்ஜெட் பட…
-
- 0 replies
- 410 views
-
-
நீர்ப்பறவை திரை விமர்சனம் நீர்ப்பறவை திரை விமர்சனம் நீர்ப்பறவை திரை விமர்சனம் -அமிர்தம் சூர்யா (கல்கி-வார இதழில் பிரசுரமானது) ------------------------------------------ ‘குழந்தைக்குப் பாலூட்டும் அழகிய பெண்ணின் கலைப்படைப்பு சிற்பம், தானொரு தாய்என்பதை பிரச்சாரம் செய்தபடியே இருக்கும்’ என்பார் அறிஞர் அண்ணா. அதுபோல கோலிவுட் குத்தாட்ட, வெற்று குண்டு சப்தங்களுக்கிடையே அழகிய கடலும், கடல் சார்ந்த நெய்தலும் வாழ்க்கையைக் கூவியபடி வந்திருக்கும் கலைப்படைப்பு ‘நீர்ப் பறவை’. அப்பறவை இரு விஷயங்களைப் பிரசசாரம் செய்கிறது. 1. ‘திகட்டும்படி’ குடியின் கேகட்டைச் சொல்லித் திருத்தும் வழியைச் சொல்வது. 2. கடல் எல்லையில் தினம் தினம் இல…
-
- 0 replies
- 640 views
-
-
விசாரணை - என்னுடைய FIR வழக்கம் போல நல்ல படங்களுக்கு வரும் குறைவான மக்கள் கூட்டத்தோடு சிட்னியிலுள்ள திரையரங்கில் விசாரணை படம் பார்த்தேன். இப்படியான வகையில் நம்பிக்கை கொடுக்கும் ரசிகர்களால் தான் முன்னர் "அவதாரம்" படத்தின் ஆஸி விநியோகஸ்தருக்கும் அதுவே கடைசிப் படம் ஆனது. அப்போது 15 பேருடன் மெல்பர்ன் திரையரங்கில் பார்த்திருந்தேன். "அங்காடித் தெரு" பட சிட்னி விநியோகஸ்தரும் மூன்று பேருடன் படம் காட்டிய அனுபவத்தில் அப்படியான விஷப் பரீட்சைக்கே பின்னர் இறங்கும் நிலை இல்லாமல் போனது. இதுதான் நல்ல படங்களுக்கும் அவற்றைத் திரையரங்கில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்குமான இடைவெளியை ஏற்படுத்தும் சமாச்சாரங்கள். சரி இனி "விசாரணை" க்கு வருவோம். …
-
- 1 reply
- 813 views
-
-
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் அருமையான கிராமிய மணம் கமழும் ஓர் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் P.விருமாண்டி. ஏற்கெனவே நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை இது. இவ்வாறான பல சம்பவங்கள் நிஜமாகவே நிகழ்ந்திருந்தாலும், இத்திரைப்படத்தின் மையக்கருவை ஒத்த கதையினை வேறெந்தத் திரைப்படத்திலும் இதுவரை நான் பார்த்ததில்லை. தமிழகத்தில் கிராமத்து மக்களின் கடினமான வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான சவால்களையும் இத்திரைப்படம் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. கலகலப்பும், கலக்கமும் நிறைந்த காட்சிகள் மாறிமாறி இத்திரைப்படத்தின் முதற்பாதியை சற்று மசாலாத்தனத்துடன் நிறைத்திருந்தாலும் ரசிக்கும்படியாகவே இருந்தது. பரப…
-
- 14 replies
- 1.5k views
-
-
சிவா கார்த்தி கேயன் நடித்து வெளிவர இருக்கும் எதிர் நீச்சல் [ Ethir Neechal Official Theatrical Trailer ] http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14037:official-theatrical-trailer&catid=39:cinema&Itemid=107
-
- 0 replies
- 459 views
-
-
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஞ்சலி கலந்து கொண்டார். ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் படம் 'சிங்கம் 2'. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இவரது இசையில் இப்படத்தில் ஒரு குத்துப்பாட்டு இடம் பெறுகிறது. இப்பாடலில் நடிகை அஞ்சலியை நடனம் ஆட வைக்க ஹரி முடிவு செய்திருந்தார். இதற்காக தூத்துக்குடி வந்து குத்துப்பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார் அஞ்சலி. சில நாட்களுக்கு முன் சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு பின் முதன் முறையாக தமிழகம் வந்து நடித்துள்ளார் அஞ்சலி. இதற்கிடையே நேற்று அவரது சித்தி தொடர்ந்து ஹேபியர்ஸ் கார்பஸ் வழக்கில் அஞ்சலி உடனடியாக ஆஜராக வேண்டாம் என்று கோர்ட்…
-
- 0 replies
- 467 views
-
-
உத்தரகாண்ட் வெள்ளத்தில் தந்தையை இழந்த 4 குழந்தைகள்: தத்தெடுத்த நடிகர் சோனு சூட் - குவியும் பாராட்டு உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் ஜோஷிடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ந் தேதி திடீரென உடைந்ததால் பெரும் பனிச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் அலெக்நந்தா ஆற்றில் பெரும் பிரளயமே ஏற்பட்டது. இதனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த ரிஷிகங்கா நீர்மின் நிலையம் முற்றிலுமாக அடித்துச்செல்லப்பட்டது. மேலும் தபோவன்-விஷ்ணுகாட் அனல்மின் நிலைய சுரங்கங்கள் சேதமடைந்தன. இதனால் அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்க…
-
- 0 replies
- 268 views
-
-
கண்ணா லட்டு தின்ன ஆசையா', படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் ஒரு வழக்கு உள்ளது. மதுரை உள்பட வெளி மாவட்டங்களிலும் அவர் மீது மோசடி வழக்குகள் குவிந்துள்ளன. தமிழகத்தை தாண்டி வெளிமாநிலங்களிலும் வழக்கு பாய்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அடுத்து ஆந்திர மாநில போலீசாரும், அவரை பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை தமிழகத்தை பொறுத்தமட்டில் ரூ.7 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீதான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், வெளிமாநில வழக்குகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் மேலும் பல கோடி…
-
- 0 replies
- 412 views
-
-
அஞ்சலியை டுவிட்டரில் கொஞ்சிய ஜெய் ஜெய் - அஞ்சலி இருவரும் தற்போது பலூன் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். அதனோடு அவர்களின் காதலும் இணைந்துள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதற்கு ஏற்ப இருவரும் டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜெய்-அஞ்சலி நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘எங்கேயும் எப்போதும்’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, அந்த நேரத்தில் ஜெய்-அஞ்சலி இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் பேசப்பட்டது. இந்தநிலையில் ஐந்து வருடங்களுக்கு பின்னர் சினிஷ் இயக்கும் `பலூன்´ படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படம் காதல் கலந்த திகில் படமாக உருவாகி வருகிறது. மேலும் பல பிரச்சனைகளை தாண்டி இப்படத்தில் அஞ்சலி ரீஎன்ட…
-
- 0 replies
- 397 views
-
-
படுக்கைக்கு வராவிட்டால் படத்தில் இருந்து நீக்குகிறார்கள்: ராய் லட்சுமி பகீர் தகவல். வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என்று நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார். ராய் லட்சுமிக்கு கோலிவுட்டில் மார்க்கெட் டல்லடித்துள்ளது. இந்நிலையில் அவர் நடித்துள்ள ஜூலி 2 பாலிவுட் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார். திரையுலகம் பற்றியும், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றியும் அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்கு அந்த பிரச்சனை ஏற்படவே இல்லை.சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள், முன்னேறத் துடிக்கும் நடிகைகளை தயாரிப்பாளர்க…
-
- 0 replies
- 221 views
-
-
பிரபாகரன் இரண்டு படங்கள் ! பிரபாகரன் - தமிழர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பெயர். இப்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவாகின்றன. ஒரு படத்தை ஈழ ஆதரவாளரும் 'மகிழ்ச்சி'படத்தின் இயக்குநருமான வ.கௌதமன் இயக்குகிறார். இன்னொரு படத்தினை இயக்குவது ஏ.எம்.ஆர்.ரமேஷ். வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ரமேஷ் இயக்கிய 'வனயுத்தம்’ படமோ, 'போலீஸின் பார்வையில் இயக்கப்பட்ட படம்’ என்ற விமர்சனத்தைச் சந்தித்தது. இப்படி வெவ்வேறு துருவங்களாய் இருக்கும் இரண்டு இயக்குநர்கள் ஒரே கதையைப் படமாக எடுத்தால்..? அவர்களிடமே பேசுவோமே! ''கரு முதல் உரு வரை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறை செதுக்கணும்னுதான் கடந்த பத்து வருஷமா பல தலைவர்கள், போராளிகளை…
-
- 0 replies
- 679 views
-
-
நடிகர் விஜய் திரைப்படத்தை விமர்சித்த பெண் பத்திரிகையாளருக்கு தொடரும் தாக்குதல் கணைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் குறித்தும் அவரது நடிப்பு குறித்தும் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த `தி நியூஸ் மினிட்’ பத்திரிகையின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் மீது டிவிட்டரில் ஆபாச சொற்களால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவுசெய்துள்ளது. …
-
- 3 replies
- 485 views
-
-
இளையராஜாவின் புதல்வர் யுவன் சங்கர்ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார்... (இன்னுமொரு றஹ்மானாக மாறும் எண்ணமோ?????)
-
- 100 replies
- 10.5k views
-
-
ரோமானிய அழகி லூலியாவை மணக்கவிருக்கிறார் சல்மான்கான். பாலிவுட்டில் 48 வயதை தொட்டாலும் இன்னும் பெண்களின் கனவு நாயகனாகவே வலம் வருகிறார் சல்மான்கான். இந்நிலையில் ரோமானிய அழகி லூலியா வந்தூருக்கும், சல்மான் கானுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியானது. இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் லூலியாவை திருமணம் செய்து கொள்ள சல்மான்கான் திட்டமிட்டு உள்ளார். இதனை சமீபத்திய பேட்டியொன்றில் மறைமுகமாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என் வாழ்க்கை இப்போது திடீர் பிரகாசமாகியுள்ளது. 15 வயதில் இருந்து இது போன்ற கால கட்டம் எனக்கு அமைந்தது இல்லை. முதல் தடவையாக இந்த மாற்றத்தை அனுபவிக்கிறேன். விரைவில் என் வாழ்வில் நல்ல விடயம் ஒன்று ந…
-
- 0 replies
- 599 views
-
-
நெடுஞ்சாலை (Highway) பயணங்கள் எப்போதும் சுவாரசியத்தைத் தரக்கூடியவை. பயணத்தில் இலக்குகள் அல்ல, பயணத்தைத் தொடங்குவதே எல்லாவற்றையும் விட முக்கியமானதென புத்தரிலிருந்து லா-சூ வரை பலர் தொடர்ந்து கூறி வந்திருக்கின்றனர். அதுவும் பயணங்கள் -எவ்விதத் திட்டமிடலும் இல்லாமல் வாய்க்கும்போதும்- அவை இன்னும் அழகாகிவிடுகின்றன. இவ்வாறான பயணங்களில் மனம் எதையும் எதிர்பார்க்காதிருப்பதால், கிடைக்கும் சந்தர்ப்பங்கள் அனைத்தும், மறக்க முடியாதவையாக ஆகிவிடுகின்றன. இவ்வாறு எதிர்பாராது நிகழும் பயணம் ஒன்றைத்தான் 'ஹவே' எங்களுக்குக் காட்சிப்படுத்துகின்றது. கழுத்தை நெரிக்கும் திருமணச் சடங்குகளாலும், உறவுகளாலும் திணறும் ஓர் இளம பெண், திருமணத்திற்கு முதல் நாளிரவு, தன்னை ஆசுவாசப்படுத்த தன் நண்பரோடு …
-
- 0 replies
- 468 views
-
-
’’ ‘அந்த’ நடிகரும், ’சிரிப்பு’ நடிகரும் 'எப்படி வாழக்கூடாது’னு உதாரணம்..!’’ – 'அண்ணாதுரை' விழாவில் பரபரப்பு Chennai: விஜய் ஆண்டனியின் 'எமன்' பட வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படமான 'அண்ணாதுரை' வருகிற நவம்பர் 30-ந் தேதியன்று திரைக்கு வர இருக்கிறது. தற்போது திரைக்கு வருவதற்கு முன்பே படங்களை பற்றிய பல்வேறு சர்ச்சைகள் இணையத்தில் உலா வருவது வழக்கமாகிவிட்டது. இதற்கு அண்ணாதுரை படமும் விதிவிலக்கல்ல. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாற்றுப் படம் போன்ற செய்திகள் உலா வந்த நிலையில், படக்குழு அதனை மறுத்து , இது சமூக பிரச்னையை பொதுவாக சாடும் படம் என்ற தகவலை தெரிவித்தார்கள். மேலும், படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வின் போது படத்திலிருந்து …
-
- 0 replies
- 472 views
-
-
ஷங்கரின் தடாலடி முடிவு - சரிகிறதா சினிமா சாம்ராஜ்யம்? ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுகிறார் என்றொரு பரபரப்பு செய்தி சினிமா உலகத்தை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்த செய்தி உண்மையா என்பது குறித்து ஷங்கர் தரப்பு இன்னும் விளக்கமளிக்கவில்லை. ஷங்கர் ஒருபோதும் எஸ் பிக்சர்ஸை மௌனமாக்கப் போவதில்லை, நஷ்டத்தை கண்டு பதறுகிற மனிதரல்ல அவர் என இன்னொரு தரப்பு நம்பிக்கையூட்டுகிறது. இந்த இரண்டில் எது உண்மை என்பதை ஆராய்வதல்ல நம் நோக்கம். இப்படியொரு பிரச்சனை எதனால் கிளம்பியது என்பதே இன்றைய கவலைதரும் விஷயம். காதல், வெயில், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, ஈரம் போன்ற நல்ல பல சினிமாக்கள் தமிழில் வரக் காரணமாக இருந்ததும், பாலாஜி சக்திவேல், வசந்தபால…
-
- 0 replies
- 792 views
-
-
“ஓவியாவும் நானும் நிறைய பேசிக்கிறோம், அடிக்கடி அவுட்டிங்!” - ‘பிக்பாஸ்’ ஆரவ் இப்போ என்ன பண்றார்? #VikatanExclusive பிக்பாஸ் ஃபீவர் முடிஞ்சு, நம்மளோட வழக்கமான வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சிருக்கோம். அதுல, டைட்டில் வின் பண்ண ஆரவ் இப்போ ஆளையே காணோம். சீக்ரெட்டா நிறைய பிளான் வெச்சிருப்பார்னு நெனச்சு அவர்கிட்ட சில கேள்விகளைக் கேட்டோம். “பிக் பாஸ்ல இருந்து வெளிய வந்ததுக்குப் பிறகு லைஃப் எப்படி இருக்கு?” “என்னை எங்க ஃப்ரீயா விட்டீங்க? பிக்பாஸ் வீட்ல இருந்து வெளிய வந்த உடனே, எந்தப் பக்கம் திரும்பினாலும் இன்டர்வியூ மயம்தான். இனி நான் பெரிய ஹீரோவா மாறுனாகூட இந்த அளவுக்குப் பேட்டி எடுப்பார்களானு தெரியலை. பிக்பாஸ்ல வர்றதுக்கு …
-
- 0 replies
- 502 views
-
-
சிம்புவின் அடுத்தப் படம் வானம். தெலுங்கில் வெளியான வேதம் படத்தின் ரீமேக். வேதத்தில் நடித்த அனுஷ்கா இதிலும் நடித்திருக்கிறார். இதுபற்றி கூறிய சிம்பு, நான் அனுஷ்காவின் ரசிகன், அவர் நடித்த அருந்ததியைப் பார்த்து அப்படியே அசந்துட்டேன் என்றார். அனுஷ்காவை பிடிக்கும் என்பதாலேயே வானத்தில் அவரை ஹீரோயினாக்கியிருக்கிறார். இவர்கள் தவிர வேகா, பரத், சோனியா அகர்வால், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். வேதத்தை இயக்கிய கிரிஷ் வானத்தையும் இயக்கியுள்ளார். இசை யுவன் ஷங்கர் ராஜா. செல்வராகவனுடனான திருமணம் மற்றும் விவாகரத்துக்குப் பிறகு சோனியா அகர்வால் நடிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. பரத்துடன் நடித்தது பற்றி குறிப்பிட்ட சிம்பு, எந்த ஹீரோவுடனும் இணைந்து நடிக்க…
-
- 0 replies
- 612 views
-
-
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு இந்தி திரையுலகம் வரை சென்று தன் காலடியைப் பதித்தவர். ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். மரண செய்தியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. ரஜின…
-
- 57 replies
- 7.7k views
- 1 follower
-
-
காந்தாரா - சினிமா விமர்சனம் 14 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,RISHABH SHETTY நடிகர்கள்: ரிஷப் ஷெட்டி, கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி, சப்தமி கௌடா; ஒளிப்பதிவு: அரவிந்த் எஸ். காஷ்யப்; இசை: அஜனீஷ் லோக்நாத்; இயக்கம்: ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் 'காந்தாரா' திரைப்படம், இந்த வாரம் முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு அக்டோபர்16இல் வெளியாகிறது. கடந்த சில ஆண்டுகளில் 'கவலுதாரி', 'கருட கமனா க்ருஷப வாகனா' என கன்னட திரையுலகிலிருந்து கவனிக்கத்தக்க திரைப்படங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், காந்தாரா இந்தப் போக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
டிசம்பரில் பூஜாவுக்கு திருமணம்... ஈழத் தமிழரைக் கரம் பிடிக்கிறார்! சென்னை: வரும் டிசம்பர் மாதம் நடிகை பூஜாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் ஜெ.ஜெ. படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா. இவரது தாய் பெங்களூர், தந்தை சிங்களர் ஆவார். உள்ளம் கேட்குமே, ஜித்தன், தம்பி, நான் கடவுள், விடியும் முன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்திருந்த நான் கடவுள் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்த பூஜாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. விடியும் முன்... இந்நிலையில், சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பூஜா, மீண்டும் விடியும் முன் படம் மூலம் தமிழில் மறு பிரவேசம் செய்தார். திருமணம்... இனி தொடர்ந்து தமிழ்ப் ப…
-
- 14 replies
- 2.4k views
-
-
7 அடி கமல் அன்னார்ந்து பார்த்த ரஜினி ஹைடெம்ப்பரேச்சரில் தமிழ்நாட்டையே ‘சிவாஜி’ ஃபீவர் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்க, சிவாஜி the boss ஐ அண்ணாந்து பார்க்க வைத்து அசர வைத்திருக்கிறது கமல்ஹாசனின் அசத்தல் அவதாரம். தற்போதைய சூழ்நிலையில் தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என்றால் அது ரஜினிகாந்த், கமல்ஹாசன் மட்டுமே. ரஜினி casual. கமல் unusual. அதிகம் மெனக்கெடாமல் ஸ்டைலில் அசத்துவது ரஜினி ஃபார்முலா. வித்தியாசமாக இருந்தே ஆக வேண்டுமென்பதற்காக மெனக்கெடுவது கமல் பாணி. இப்படி ரஜினிக்கும் கமலுக்கும் இடையில் பட்டியலிட நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் இடையில் ஒருவரையருவர் தட்டிக் கொடுக்கிற நட்பு இருக்கிறது. இந்த ஆரோக்கியமான நட்பின் அடிப்படையில்தா…
-
- 0 replies
- 1.6k views
-
-
சாதி குரூரம் பிணங்களைக்கூட விட்டுவைக்காது!" - 'மனுசங்கடா' படம் எப்படி? சாதிக்கு எதிரான முக்கியமான பதிவாக உருவாகியிருக்கிறது, தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமாரின் 'மனுசங்கடா' படம். சாதியை சிதைக்கும் சினிமாக்களின் காலம் இது. குறிப்பாக, தமிழ் சினிமாவில் சாதிக்கு எதிரான படைப்புகள் ஆர்ப்பாட்டமான வரவேற்பைக் கண்டுகொண்டிருக்கிறது. அந்த வகையில், 'மனுசங்கடா' ஒரு புது முயற்சி. ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கு ஒருமுறை தலித்துகளுக்கு எதிரான வன்முறை இங்கே நடைபெறுகிறது என்ற விபரீதத்தை, ஒரு பிணத்தை வைத்துப் பேசியிருக்கும் படம். சிதம்பரம் அருகேயுள்ள குக்கிராமம் ஒன்றிலிருந்து வந்து, சென்னையில் இருக்கும் ஸ்டீல் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறார், கோலப்பன். ஓர் இரவு, அப்பாவின் ம…
-
- 0 replies
- 442 views
-
-
படக்குறிப்பு, தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 71-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 71-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். நூறு வருடத்தைக் கடந்து, பல்லாயிரக்கணக்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கனவோடும், உழைப்போடும் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் கறுப்பு நிறம், பளீர் சிரிப்பு, வீர நடை, எப்பொழுதும் சிவந்த கண்கள், கணீர் குரல் என தனது தனித்தன்மைகளால் 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து தமி…
-
- 1 reply
- 434 views
- 1 follower
-