வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
2012-ம் ஆண்டிற்கான நார்வே தமிழ் திரைப்பட விழா ஏப்ரல் 25ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் தொடங்கியது. லொரன்ஸ்கூவில் உள்ள அரங்கிலும் படங்கள் திரையிடப்பட்டன. சனிக்கிழமை குறும்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. விழாவின் இறுதிநாளான நேற்று பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தமிழ் திரையுலகிலிருந்து இயக்குநர் சற்குணம், நடிகை ரிச்சா, தூங்கா நகரம் இயக்குநர் கவுரவ், பாலை திரைப்பட நடிகர் சுனில், இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு, புன்னகைப்பூ கீதா, தயாரிப்பாளர் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரபல பின்னணி பாடகிகள் சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா, விஜிதா சுரேஷ், பிரபா பாலகிருஷ்ணன் சூப்பர் சிங்கர் புகழ் அண் சந்தியா(நோர்வே), பிரவீனா(நோர்வே), மாளவி சிவகணேஷ…
-
- 1 reply
- 1k views
-
-
2015 ல் முத்திரை பதித்த அறிமுக இயக்குநர்கள்! 2015, தமிழ் படங்களுக்கு வெற்றியும், தோல்வியும் நிறைந்த ஆண்டு. முன்னணி ஹீரோக்களின் படங்கள் கூட சுமாராக போக, இளம் ஹீரோக்களின் பல படங்கள் வெற்றி கண்டன. குறிப்பாக, லோ பட்ஜட் படங்கள், அதிக அளவு வசூலை பெற்றன. கமர்ஷியல் திரைப்படங்கள் மட்டுமின்றி, சமூகம் சார்ந்த திரைப்படங்களும் வெளியாகி, விருதுகளையும் பெற்றன. இந்த ஆண்டு, இருநூற்றுக்கும் அதிகமான தமிழ் படங்கள் வெளிவர, அதில் கால்வாசிக்கும் அதிகமான திரைப்படங்கள், அறிமுக இயக்குநர்களால் இயக்கப்பெற்றவை. முதல் படத்திலேயே, தங்கள் திறமையை நிரூபித்து, சாதித்தும் காட்டிய அறிமுக இயக்குனர்கள் சிலர் இங்கே… மணிகண்டன் – காக்கா முட்டை 2015 - ம் ஆண்டின் மிகச்சிறந்த தி…
-
- 0 replies
- 652 views
-
-
சிறுவயதிலிருந்தே நண்பர்களாக வளரும் எழுத்தாள தந்தை மற்றும் தீவிர கம்யூனிசவாதியான அண்ணன் என்கிற குடும்பப்பின்னணி கொண்ட சரத், சதா குடித்துவிட்டு தாயையும் தன்னையும் அடிக்கும் ஒரு குடிகார அப்பா இப்படியான பின்புலத்துடன் சன்னி மற்றும் மனைவியைப் பிரிந்து மகள் வயதுடைய ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் வாழும் அப்பா, ஓடிய கணவன் திரும்ப வருவான் என்கிற நம்பிக்கையில் வாழும் அம்மா இவர்களின் மகளான வர்ஷா, இந்த மூன்று நண்பர்களையும், அவர்களது கனவையும் கூடவே கார்ப்பரேட் வாழ்க்கையையும் சொல்கிற படம்தான், ரிது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த இந்த மூவரில், நண்பர்களைப் பிரிய மனமில்லாமல் அமெரிக்கா சென்ற சரத் இந்தியாவிற்கே திரும்பி வருகிறான். மீண்டும் சொந்த ஊரில், தன் மனதிற்கு இணக்கமா…
-
- 0 replies
- 521 views
-
-
திருமணத்திற்கு தயாராகும் அசின்! [Monday 2016-01-11 22:00] மலையாள அழகியான நடிகை அசின் வட மாநல மருமகளாகிறார். நடிகை அசீனுக்கும், டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் வருகிற 23–ந்தேதி திருமணம் நடக்கிறது. டெல்லியில் திருமணம், மும்பையில் வரவேற்பு விழா என்று திட்டமிட்டு உள்ள அசின் திருமண ஏற்பாடுகளை தனது வருங்கால கணவர் ராகுல் சர்மாவுடன் இணைந்து தீவிரமாக செய்து வருகிறார். சமீபத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது அசினுக்கு காதலர் ராகுல்சர்மா ரூ.6 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை பரிசாக அளித்தார். இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு நெருங்கிய நண்பர்களுக்கு ‘‘எங்கள் திருமணத்துக்காக உங்கள் 3 நாட்களை சேமித்து வையுங்கள்’’ என்ற பொருள்…
-
- 1 reply
- 426 views
-
-
நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 8 அணிகளின் பெயர் மற்றும் கேப்டன் விவரம் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடைபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் 8 அணிகளின் பெயர்கள் மற்றும் கேப்டன்கள் விவரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் புதிததாக கட்டிடம் கட்ட பல்வேறு திட்டங்களுடன் புதிய நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள். இதில் முதல் திட்டமாக ஏப்ரல் 17ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. இக்கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்க இருக்கிறது. ஒவ்வொர் அணியிலும் 6 வீரர்கள் இருப்பார்கள். இந்த 8 அணிகளுக்கு தமிழ்நாட்டின் முக்கியமான மாவட்டங்களின் பெயர்களை சூட்டியிருக்கி…
-
- 34 replies
- 3.9k views
- 1 follower
-
-
[size=2] ‘தாண்டவம்’ படத்தை முடித்துள்ள விக்ரம் ஷங்கரின் ‘ஐ’, இந்தியில் டேவிட் என பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறார். முறுக்கு மீசை வைத்து முரட்டு தனமாக காட்சி தந்தவர் தற்போது இளமையாகிறார்.[/size] [size=2] "போட்டியில் நீங்கள் எத்தனாவது இடம்?”[/size][size=2] "நான் சினிமாவிற்குள் வரும் போது வசந்தம் என்னை வரவேற்கவில்லை. சினிமா உலகின் போட்டியில் நான் என்றைக்கும் இருந்ததில்லை. ஏனெனில் வெற்றி என்பதை விட திறமைகள் காலத்தையும் தாண்டி நிற்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படமும் போராடி வந்து வாழ்க்கை இது. நான் நடிக்க வந்த பிறகு முதல் வரிசையில் கிடைக்காமலும், கடைசி வரிசை இல்லாமலும் இருந்தேன்.”[/size] [size=2] ‘தாண்டவம்’ படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடிப்பது …
-
- 0 replies
- 1.1k views
-
-
காதலில் சொதப்புவது எப்படி படம் வெற்றி பெற்றபோதும், அதன்பிறகு அமலாபாலின் தமிழ் சினிமா மார்க்கெட் சொதப்பி விட்டது. அதனால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கு போன வேகத்திலேயே ராம்சரண்தேஜா, அல்லு அர்ஜூன் போன்ற நடிகர்களை அமலாவை அரவணைத்துக்கொண்டனர். அதனால் அதையடுத்து ஆந்திராவிலேயே செட்டிலான அமலாபாலை, சமுத்திரகனி தான் ஜெயம்ரவியைக்கொண்டு இயக்கி வரும் நிமிர்ந்து நில் படத்துக்காக தமிழுக்கு கூட்டி வந்தார். அதையடுத்து மீண்டும் தமிழில் நம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கினார் அமலாபால். இந்நிலையில் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திலும் தற்போது கமிட்டாகி ஏகதெம்மில் மேல்தட்டு நாயகி என்கிற அங்கீகாரத்தை பெற்று விட்டார். அதனால் இனிமேல் முன்னணி நடிகர்களின் படங்களில…
-
- 0 replies
- 576 views
-
-
தத்துவத் தேரோட்டியின் வித்தகப் பாடல்கள்! ஜூன் 24 : கவியரசர் கண்ணதாசன் 89-வது பிறந்த தினம் திரைப் பாடல்களை ஒரு இலக்கிய வகையாகக் கொள்ள முடியுமா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. அப்படியொரு அங்கீகாரம் திரைப்பாடல்களுக்குக் கிடைக்குமானால் அதில் முதலில் இடம்பிடிப்பவை கவியரசு கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களாவே இருக்கும். இது ஒரு ரசிகனின் உணர்ச்சிகரமான வாதம் அல்ல. கண்ணதாசனின் திரைத்தமிழைத் தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக உள்வாங்கிக்கொண்ட தமிழர்கள் தரும் நியாயமான கவுரவம். பாடாத பொருளில்லை கவிதைத் தமிழை எளியமையாகவும் நயத்துடனும் திகட்டத் திகட்டத் திரையில் அள்ளித் தெளித்த முத்தையா கசப்பான…
-
- 1 reply
- 565 views
-
-
நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு பரபரப்பு புகார் நடிகர் வடிவேலு மற்றும் சிங்க முத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்ற நிலையில், படங்களிலும் தற்போது இந்தக் கூட்டணி இணைந்து நடிப்பதில்லை. சமீபத்தில் நடிகர் மனோபாலா நடத்திய யூடியூப் பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் சிங்க முத்து, வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறினார். இந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி வடிவேலு, நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் ம…
-
- 1 reply
- 2.1k views
-
-
இப்படி ஒரு தாலியைப் பார்த்திருக்கிறீர்களா விஸ்வப்பிரம்ம குலத்தவரே, ராமாயணத்தில் வரும் அரக்ககுலத்தவர் அணியும் தாலி இப்படி நீளமும் அகலமும் எந்தக் கணக்கின் கீழ் வருகிறது? தாலி செய்பவர்களை மட்டுமல்ல தாலியணியும்,பெண்களையும் நமது கலாச்சாரத்தையும்,சீரழிக்கும் இவரது செயலை,வன்மையாகக் கண்டிக்கிறோம், தாலியின் பெருமை தாலி அணிந்தவர்களுக்குத்தான் தெரியும்.தாலியையும் சினிமாவாக மாற்றி தாலியின் மகத்துவத்தைக் கேலிக் கூத்தாக்கி புது இலக்கணம் வகுத்த நடிகை தாலி, அணியும் பெண்களின் பெருமையை ஒரு அபசகுனமாகக் கருதி தாலியை ருத்திராட்சத்தில் இணைத்து முழு இந்துக்கழும் இந்துக்களின் சமயக் கோட்பாட்டையும் சிதைப்பதற்கு எடுத்துள்ள முடிவை முழு இந்துக்களும் வன்மையாகக் கண்டிக்கவேண்டும், இது வெறும் விளையாட…
-
- 19 replies
- 1.8k views
-
-
பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா வேடத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. அவர் கூறியதாவது:பில்லா படத்தில் நயன்தாரா கவர்ச்சியாக நடித்திருந்தார். தெலுங்கில் அதே வேடம் எனக்கு தரப்பட்டுள்ளது. நானும் இதில் நீச்சல் உடையில் நடிக்கிறேன். அதனால் நயன்தாராவுக்கு போட்டியா எனக் கேட்கிறார்கள். போட்டி போட¢டு நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். பொங்கலுக்கு வெளியாகும் வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். இப்போது வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளீர்களே என்றெல்லாம் ஒப்பிடுகிறார்கள். அதையெல்லாம் நான் யோசிப்பதில்லை. ஒவ்வொரு நடிகைக்கும் ஓர¤டம் சினிமாவில் இருக்கிறது. எனக்கான இடத்தில் நான் இருக்கிறேன். என்னைப் பற்றி கிசு கிசு அதிகம் வெளியாவதை பற்றி எத…
-
- 0 replies
- 1.2k views
-
-
எண்டர் தி டிராகன் படத்தில் வில்லியம்ஸ் வேடத்தில் நடித்தார் ஜிம் கெல்லி எண்டர் தி டிராகன் எனும் பிரபலத் திரைப்படத்தில் புரூஸ் லீயுடன் நடித்த நடிகரும் கராத்தே வல்லுநருமான ஜிம் கெல்லி புற்றுநோய் காரணமாக தமது 67 ஆவது வயதில் காலமானார். 1973 ஆம் ஆண்டில் வெளியான எண்டர் தி டிராகன் திரைப்படத்தில், வில்லியம்ஸ் எனும் பாத்திரத்தில் நடத்த அவர் அதில் பேசிய ஒற்றை வசனங்களுக்காக நன்கு அறியப்பட்டார். பிளாக் பெல்ட் ஜோன்ஸ், த்ரீ த ஹார்ட் வே, கோல்டன் நீடில்ஸ் மற்றும் பிளாக் சமுராய் ஆகியவை அவர் நடித்த இதர பிரபலப் படங்கள். குங் ஃபூ தற்காப்பு கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில், மிகப் பிரபலமாவைகளில் ஒன்றாக எண்டர் தி டிராகன் கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் புரூஸ் லீ நடித்த முதல் படமு…
-
- 0 replies
- 442 views
-
-
அயன் படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தர் கே.வி.ஆனந்த்! மாற்றான் படம் படுதோல்வியாக அமைந்தாலும், அந்தப்படத்தை பார்த்த ரஜினி, கே.வி.ஆனந்தை வீட்டுக்கு அழைத்து பாராட்டினார். அந்தகேப்பில் ரஜினிக்கு கே.வி.ஆனந்த் சொன்ன கதை பிடித்து விட்டது! ஆனால் கோச்சடையன் படத்துக்குப் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது தனுஷை இயக்க தயாராகிவிட்டார் கே.வி.ஆனந்த்! இடையில் தனுஹை இயக்கும் முன்பு விக்ரம் படத்தை இயக்கவும் முடிவ்பு செய்தார். ஆனால் ஐ படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் முடியும் என்ற சூழல் இருப்பதால் தற்போது தனுஷை வைத்து படத்தை ஆரம்பித்து விட்டார்! கதை யாரை ஹீரோவாக கேட்கிறதோ அவரை மட்டுமே தேடிப்போகும் கே.வி.ஆனந்த், தற்போது தனுஷுக…
-
- 0 replies
- 707 views
-
-
ஒளிரும் நட்சத்திரம்: த்ரிஷா ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. ‘நம்ம சென்னை பொண்ணு’ எனக் கொண்டாடப்படும் த்ரிஷா, நடிக்க வந்து 15 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 15 வயதில் மூன்று வயதுச் சிறுவனுக்கு அம்மாவாக, அனைத்து இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் 1998-ல் நடித்தார். 2. 1999-ல் ‘ஜோடி’ தமிழ்ப் படத்தில் சிம்ரனின் தோழியாகச் சில காட்சிகளில் வந்துபோனார். பிறகு, 2000-வது ஆண்டில் ‘மிஸ் சென்னை’யாகவும் 2001-ல் ‘மிஸ் இந்தியா பியூட்டிஃபுல் ஸ்மைல்’ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். அழகிப் பட்டங்கள் தந்த புகழ் வெளிச்சத்தால், குஜராத்தின் புகழ்பெற்ற பெண் இசையமைப்பாளரும் பாடகியுமான ஃபால்குனார்…
-
- 0 replies
- 636 views
-
-
புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார்! புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார். கே.வி. சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் இளங்கோவன் கதை, வசனம் எழுதி தயாரிக்கும் புதிய படம் ‘தனுஷ் 5-ம் வகுப்பு'. இப்படத்திற்கு கதாக.திருமாவளவன் திரைக்கதை எழுதி இயக்குகிறார். அகில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அஷ்ரிதா நடிக்கிறார். ஒரு அழகான குடும்பத்தில் வேலைக்குப் போகும் அப்பா, அம்மா. அவர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன ஈகோ பிரச்சினைகளால் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கருவாக வைத்து படத்தை உருவாக்கி வருகிறார் கதாக.திருமாவளவன். இவர் நான்கு மொழிகளில் இயக்கப்பட்ட அஜந்…
-
- 19 replies
- 5.5k views
-
-
கய்தே, கஸ்மாலம், பேமானியிலிருந்து பவுடர், மர்டர் என்று பிரமோஷன் ஆகியிருக்கும் ஸ்லம் கதை. அதில் ஜம்மென்று அறிமுகமாகியிருக்கிறார் அமீர். வாங்க குப்பத்து ராஜா... கூவக்கரையோரத்தில் குடியிருப்பதாலேயே அழுக்கும், ஆவேசமுமாக திரிகிறது இந்த இளைஞர் கோஷ்டி. தப்பு செஞ்சாலும் தமுக்கடிக்கிற மாதிரி செய்யணும் என்பது சக நண்பனான சினேகனின் ஆசை. அந்த ஊர் இன்ஸ்பெக்டரிமே ஆட்டைய போடுகிறார்கள். தப்பி ஓடும்போது ஒரு காரை கடத்திக் கொண்டு ஓடுகிறார் அமீர். காருக்குள்ளே... அழகான குழந்தை ஒன்று. அதுதான் அமீரின் சந்தோஷ ஆரம்பம். ஆயுளின் முடிவு. அது தெரியாமல் குழந்தையை தானே வளர்க்க வேண்டும் என அவர் முனைப்பு காட்டுகிறார். இன்னொரு பக்கம் குழந்தைக்கு அம்மாவான சுவாதி படுத்த படுக்கையாக கிடக்க, அவளது இரண்டாம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக பி.ரமேஷ், இமானுவேல் தயாரிக்கும் படம் “வாராயோ வெண்ணிலாவே” இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் - ஹரிப்ரியா – சானியா ஷேக் ஆகியோர் கதாநாயகன்,கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் மற்றும் சந்தானபாரதி, சரித்திரன்,புதுமுகம் சரவணன்,நமோ நாராயணன்,கானாபாலா,சோனியா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ராணா இசை – கார்த்திக் ராஜா பாடல்கள் – பா. விஜய், கபிலன் நடனம் – ராஜ்விமல், ராபர்ட் ஸ்டன்ட் – மிராக்கிள் மைக்கேல் கலை – தா. ராமலிங்கம் எடிட்டிங் – வி.டி. விஜயன் தயாரிப்பு மேற்பார்வை – அருணாசலம் தயாரிப்பு –பி. ரமேஷ், இமானுவேல் எழுதி இயக்கி இருப்பவர் ஆர்.சசிதரன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது “உன்னிடம் ஒன்றை …
-
- 0 replies
- 456 views
-
-
தமிழில் கட்டுக்கோப்பாக நடித்து வரும் திரிஷா , மும்பையில் தனது கவர்ச்சி யை கட்டவிழ்த்து சுதந்திரமாக நடமாட விட்டுள்ளார். நம்ம ஊர் நடிகைகள் எப்போதுமே இரண்டு விதமான பாலிசிகளை வைத்திருப்பார்கள். ஒன்று தமிழில் நடிக்கும்போது 'டியூப்லைட்' கவர்ச்சி, 2வது, தெலுங்குக்குப் போனால் 'டபுள் மடங்கு டிலைட்' என்பதே அந்த இரட்டைப் பாலிசி. திரிஷாவும் இதில் விதி விலக்கல்ல. தமிழில் அவர் கவர்ச்சிகரமாக நடிக்க மாட்டார். லேட்டஸ்டாக நடித்த சில படங்களில் மட்டும் லேசான கவர்ச்சி காட்டியிருந்தார். ஆனால் தெலுங்கில் அவர் நிறையப் படங்களில் கவர்ச்சிகரமகாகவே நடித்துள்ளார். இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் விட்டாராம். இந்தி மீடியாக்களுக்காகவே பிரத்யேகமாக எடுக்கப்பட்ட தனது கவர்ச்சி ஸ்டில்களை …
-
- 4 replies
- 4.5k views
-
-
சண்டக்கோழி' வெற்றிவிழாவை கலர் புல்லாக்கிய நடிகைகள் மேகம் மறைக்காத வானத்தில் விண்மீன்கள் கூட்டத்தை பார்த்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு வண்ணமயமாய் காட்சியளித்தது 'சண்டக்கோழி' வெற்றிவிழா மேடை. தமிழ் சினிமாவின் கனவு கன்னிகள் ஒட்டுமொத்தமாக ஆஜராகியிருந்ததுதான் இதற்கு காரணம். 'செல்லமே' படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு விஷால் கதாநாயகனாக நடித்த படம் 'சண்டக்கோழி' இப்படத்தை விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டியும், அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவும் தயாரித்தனர். லிங்குசாமி இயக்கியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த இப்படத்தின்…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 577 views
- 1 follower
-
-
ஸ்ரேயாவுடன் மோதல் இல்லை- திரிஷா கிரீடம் படத்தில் அஜீத் ஜோடியாக ஆரம்பத்தில் ஸ்ரேயா நடிப்பதாக இருந்தது. பின்னர் அந்த வாய்ப்பு திரிஷாவுக்கு கிடைத்தது. ஸ்ரேயாவுக்கு வந்த வாய்ப்பை நீங்கள் பறீத்தீர்களா...? அல்லது அவர் வேண்டாம் என்று கைவிட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களா? என்று திரிஷாவிடம் கேட்டபோது. அஜீத்துடன் கிரீடம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தானாக வந்தது. இதைப்பற்றி யார் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. ஒரு படத்தின் கதை சிலருக்கு பிடித்திருக்கும் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். இந்த படத்தின் கதை எனக்கு நன்றாக பிடித்திருக்கிறது. எனவே இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். வேறு காரணம் எதுவும் இல்லை. ஸ்ரேயா எனது நெருங்கிய தோழி. இதுபோல் என் …
-
- 0 replies
- 843 views
-
-
ஒரு தப்பான போலீஸ் நல்ல போலீஸ் ஆனால், அந்த மாற்றத்துக்கு கொடூரமான ஒரு பாலியல் பலாத்காரம் இருந்தால் அதுவே 'அயோக்யா'. சென்னையில் சில முறையற்ற தொழில்களில் ஈடுபடுகிறார் ரவுடி பார்த்திபன். தனக்குச் சாதகமாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அமைச்சரின் பரிந்துரையின் பேரில் இன்ஸ்பெக்டர் விஷாலை சென்னைக்கு மாற்றலாகி வரவழைக்கிறார். பார்த்திபனும் விஷாலும் ராசியாகின்றனர். இருவரும் அண்ணன் - தம்பி அளவுக்குப் பழக, பார்த்திபனின் எந்தத் தொழிலுக்கும் விஷால் இடையூறாக நிற்கவில்லை. இதனிடையே ராஷி கண்ணாவைப் பார்க்கும் விஷால் அவரைக் காதலிக்கிறார். தன் பிறந்த நாளில் வித்தியாசமான பரிசு ஒன்றை ராஷி கண்ணா, விஷாலிடம் கேட்கிறார். இதனால் பார்த்திபனுக்கும் விஷாலுக்கும் மோதல் வெடிக்க…
-
- 0 replies
- 485 views
-
-
ரூ. 120 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கப் போகும் ரோபோ படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்துக்காக அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். பிரமாண்டப் படங்களை மட்டுமே கொடுப்பது என்ற வழக்கத்தைக் கொண்டுள்ள ஷங்கர், கடைசியாக இயக்கிய சிவாஜி பெரும் வசூலை கொடுத்தது. இதைத் தொடர்ந்து ரஜினியும், ஷங்கரும் மீண்டும் இணைந்து ரோபோ என்ற படத்ைதக் கொடுக்கவுள்ளனர். ஏற்கனவே பலமுறை ஒத்திப் போடப்பட்ட படம்தான் ரோபோ. இப்போது ஒரு வழியாக அதற்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 120 கோடி பட்ஜெட்டில் உருவாகப் போகும் ரோபோ படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க ஷங்கர் தீர்மானித்தார். ஆனால் ஏற்கனவே படையப்…
-
- 4 replies
- 1.5k views
-
-
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பிரபுதேவாவை கட்டியணைத்து த்ரிஷா வாழ்த்து சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 வருடமாக காதலித்து வந்த பிரபுதேவா, நயன்தாரா திடீரென்று பிரிந்தனர். இதனையடுத்து நடிக்காமல் ஒதுங்கி இருந்த நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்நிலையில் கடந்த 3ம் திகதி பிரபுதேவாவுக்கு பிறந்த நாள். அன்று நெருங்கிய நண்பர்களுக்கு சென்னையில் உள்ள தனது பங்களாவில் விருந்து கொடுத்தார். நெருக்கமான நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த விருந்தில் நடிகை த்ரிஷாவும் நேரில் வந்து இன்ப அதிர்ச்சி தந்தார். அவரை கைகுலுக்கி வரவேற்றார் பிரபுதேவா. இருவரும் கட்டிப்பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இது அங்கிருந்தவர்களுக்கு…
-
- 0 replies
- 922 views
-
-
இயக்குநர் ராஜகுமாரனின் தாய், தேவயானி யின் மாமியார் கடிதம் மகனே ராஜகுமாரா! நீ நல்லா இருக்கியாப்பா? எத்தனை வருஷமாச்சு உன்னைப் பார்த்து! அம்மா, அம்மான்னு பாசமா இருப்பியே, இப்ப உன் குரலைக்கூட கேக்க முடியலையே! உனக்கு இரண்டாவதா பெண் குழந்தை பொறந்திருக்குதாமே! அந்த விவரம் கூட இப்பதான் தெரிந்தது! விவரம் தெரிஞ்சதும் பாசத்தோடு போன் பண்ணினேன். ஆனால் யாரோ மலையாளத்தில் இது மருந்துக் கடை, ராஜகுமாரன் வீடில்லைன்னுட்டாங்க. ஏம்ப்பா என்கூட பேசமாட்டியா? உனக்குப் பொறந்த இரண்டு பெண் குழந்தைகளையும் என் கண்ணுலயாவது காட்டக் கூடாதா? பேத்திகளைப் பாக்கணும்னு எனக்கும் ஆசை இருக்காதா? இன்னைக்கு யார் யாரோ புதுசு புதுசா சொந்தம் கொண்டாடிக்கிட்டு உன்னத் தேடி வரலாம். ஆனா வடை, போண்டா, முறுக…
-
- 1 reply
- 1.1k views
-