வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
"முருங்கைக்காய் சிப்ஸ்" திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு! முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். ரீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். https://athavannews.com/2021/1217423
-
- 1 reply
- 498 views
-
-
சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் விதமும், அப்போது எடுக்கும் முடிவுகளுமே நம்முடைய வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கின்றன. சில சூழ்நிலைகள் நம்முடைய வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போடும் வல்லமை பெற்றவை. அத்தகைய அசாதாரணச் சூழ்நிலையைச் சந்திக்கும் காவலர்கள் மூவரின் இன்னல்களும், அவற்றிலிருந்து மீள அவர்கள் எடுக்கும் முயற்சிகளும், அந்த முயற்சிகளின் ஊடே நீளும் அவர்களுடைய வாழ்க்கையுமே 'நாயாட்டு' மலையாளத் திரைப்படம். நெட்ஃபிளிக்ஸில் வெளியான சில நாட்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தப் படம், அதன் அரசியல் நிலைப்பாட்டுக்காகப் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அரசியல் பலியாடுகள் மார்டின் பிரபாகட் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், குஞ்சாக்கோ போபன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் வெள…
-
- 1 reply
- 639 views
-
-
நடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி! தே.மு.தி.கவின் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தே.மு.தி.கவின் 16-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடந்த 15ம் திகதி கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் அறிகுறிகள் இல்லாமலேயே விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நிலையில் கொரோனா பரவல் காரணமாக விஜயகாந்த் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நடிகர்-விஜயகாந்திற்கு-க…
-
- 6 replies
- 721 views
-
-
6 மாதம் நடிப்பு பயிற்சி பெற்று தனுஷின் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் இந்திய நடிகை நடிகர் தனுஷ் ஏற்கனவே ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘தி கிரே மேன்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இப்படத்தை இயக்குகிறார்கள். இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நட…
-
- 0 replies
- 331 views
-
-
அண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள் அண்மைக்காலமாக தமிழ் திரையுலகச் சேர்ந்த கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் 2021 ஆம் ஆண்டு நாம் இழந்த திரையுலக நட்சத்திரங்களின் பட்டியலை இங்கு காணலாம். இயக்குனர் எஸ்பி.ஜனநாதன் http://static2.tamilmirror.lk/assets/uploads/image_fe3a3d52e0.jpg தமிழ் திரையுலகில் "இயற்கை" படத்தில் அடியெடுத்து வைத்து, பேராண்மை, பொதுவுடைமை என சமூக கருத்துகளை வலுவாக பேசியவர் இயக்குனர் எஸ்பி.ஜனநாதன். இவர் கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி மூளையில் ஏற்பட்ட கசிவினால் உயிரிழந்தார். நடிகர் விவேக் …
-
- 1 reply
- 1.6k views
-
-
ஏழு ஆண்டுகளுக்குப் பின் ஓடிடியில் ‘இனம்’ ! மின்னம்பலம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பி ஒரு வாரத்தில் நிறுத்தப்பட்ட இனம் திரைப்படம் ஏழு ஆண்டுகள் கழித்து ஓடிடியில் வெளியாக உள்ளது. சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியானது 'இனம்' திரைப்படம். சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக ஒரு வாரத்தில் நிறுத்தப்பட்டது. ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஓடிடியில் வெளியாக உள்ளது 'இனம்' தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், திரையிடல் இவை மூன்றும் கடந்த மார்ச் முதல் இன்றுவரை அபாய கட்டத்திலேயே இருக்கிறது. எப்போது சினிமா தொழில் இயல்புநிலைக்கு வரும் என்பதை எவராலும் அறுதியிட்டு கூற முடியாத நிலைதான். இனம், மொழி, சாதி கட்டமைப்புகளில் ஊறிப்ப…
-
- 0 replies
- 527 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NIZHAL நடிகர்கள்: குஞ்சகோ போபன், நயன்தாரா, இஸின் ஹஷ், லால், திவ்யா பிரபா, ரோனி டேவிட்; இசை: சூரஜ் எஸ். க்ரூப்; இயக்கம்: அப்பு என். பட்டாத்ரி. மலையாளத்தில் கடந்த சில மாதங்களில் திரையரங்குகளிலும் ஓடிடிகளிலும் பல த்ரில்லர் படங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்த நிழல் படத்தையும் வைக்கலாம். ஏற்கனவே திரையரங்கில் வெளியாகி விட்டாலும் தற்போது அமெஸானில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம். நீதிபதியாக இருக்கும் ஜான் பேபி ஒரு விபத்தில் சிக்கி மீள்கிறான். அந்த விபத்தால் ஏற்பட்ட மன நல பாதிப்புகளில் இரு…
-
- 0 replies
- 795 views
-
-
சிரேஷ்ட தென்னிந்திய நடிகர் சிவகுமார் தனது இரண்டு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியுடன் இணைந்து தமிழக முதல்வரின் கொவிட்-19 நிவாரண நிதிக்கு ஒரு கோடி இந்திய ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர். அண்மையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு முதல்வரின் நிவாரண நிதிக்கு முடிந்தவரை பங்களிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந் நிலையில் நேற்று சிவகுமார் தனது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியுடன் ஸ்டாலினை முதல்வர் அலுவலகத்தில் சந்தித்து இந்த நன்கொடையை வழங்கியுள்ளனர். கொவிட் -19 இலிருந்து மக்களைப் பாதுகாப்பதே காலத்தின் தேவை, நாங்கள் எங்கள் தரப்பிலிருந்து ஒரு சிறிய தொகையை வழங்கியுள்ளோம். எல்லோரும் தங்கள் சொந்த ம…
-
- 0 replies
- 267 views
-
-
கங்கை அமரன் மனைவி மறைவு! மின்னம்பலம் திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களில் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. இயக்குநர்கள் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர்கள் விவேக், பாண்டு என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். ‘மௌன கீதங்கள்’, ‘வாழ்வே மாயம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், ‘கோழி கூவுது, கரகாட்டக் காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இது தவிர நூற்றுக்கணக்கான பாடல்களையும் எழுதியுள்ளார். கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்க…
-
- 4 replies
- 955 views
-
-
ஆட்டோகிராஃப் பாடகர் கோமகன் கொரோனாவால் மரணம். சென்னை: ஆட்டோகிராஃப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் மூலம் புகழ் பெற்ற பாடகர் கோமகன் கொரோனாவால் மரணமடைந்தார். கடந்த 2004ஆம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த திரைப்படம் ஆட்டோகிராஃப். இந்தப் படத்தில் ஸ்னேகா, கோபிகா, மல்லிகா, என பலர் நடித்திருந்தனர். ஒவ்வொரு பூக்களுமே .. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் பாடலில் இடம்பெற்ற மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் என்ற வரிகளை பாடி புகழ் பெற்றவர் பாடகர் கோமகன் பார்வை குறைபாடு இப்பாடலில் நடித்த கோமகன் அந்த வரிகளை கடைசியில் உணர்வுபூர்வமாக பாடி கலங்குவார். அவரது நடிப்பு பலரின் கவனத்தையும் பெற்றது. பி…
-
- 3 replies
- 846 views
-
-
ஒளிப்பதிவாளர் இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார் மின்னம்பலம் புகைப்பட கலைஞர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் கொண்ட கே.வி.ஆனந்த், திடீர் மாரடைப்பு காரணமாக இன்று(ஏப்ரல் 30) அதிகாலை 3மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.அவருக்கு வயது 54. கே.வி.ஆனந்த் 90களில் ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தை துவக்கினார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து கோபுர வாசலிலே, மீரா, திருடா திருடா, தேவர் மகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றினார். பின்னர் 1994ஆம் ஆண்டு மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்து’ படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
நானும் நீயுமா? - 1 : உச்சத்தில் ஒருவர், ஒரு படி கீழே இன்னொருவர்... தொடரும் இருபெரும் ஆளுமைகளின் கதை! சுரேஷ் கண்ணன் நானும் நீயுமா? - 1 தமிழ் சினிமாவில் தொடரும் இருபெரும் ஆளுமைகள் குறித்து சுரேஷ் கண்ணன் எழுதும் புதிய தொடர்... நானும் நீயுமா? இந்த இருமைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து பிரிக்க முடியாத இணைப்பாக அமைந்து இருக்கும். ஒன்றையொன்று சார்ந்திருக்கும். தொடர்ச்சியாக அமைந்திருக்கும். எதிரெதிர் முனைகளில் நின்று கொண்டிருப்பதான பாவனையைத் தரும். ‘'இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்து விடு'’ என ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய வரியில் இதை அற்புதமாக உணரலாம். …
-
- 1 reply
- 665 views
-
-
3 ஒஸ்கார் விருதுகளை அள்ளிய ’ நோ மேட்லாண்ட்’ க்ரோய் சாவ் எனும் சீனப் பெண்ணின் இயக்கத்தில் உருவான நோ மேட்லாண்ட் எனும் திரைப்படத்துக்கு 93ஆவது ஒஸ்கார் விழாவில் 3 விருதுகள் கிடைத்துள்ளன. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெறும் ஒஸ்கார் விருது விழாவிலேயே இந்த விருதுககள் வழங்கப்பட்டுள்ளன. http://static2.tamilmirror.lk/assets/uploads/image_0914993212.jpg அதற்கமைய, சிறந்த படத்துக்கான விருதை சுவீகரித்த இந்த திரைப்படம், சிறந்த நாயகிக்கான விருதையும் சிறந்த இயக்குனருக்குமான விருதையும் சுவிகரித்துள்ளது. ஒஸ்கார் 2021: விருதுகள் விபரம் உலகளாவிய ரீதியில் திரைப்படத்துறையினரால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 93 ஆவது ஒஸ்கார் விருதுக…
-
- 0 replies
- 361 views
-
-
93 ஆவது ஒஸ்கர் விருது : சிறந்த இயக்குநர் விருது வென்றார் சீனப் பெண் இயங்குனர் 93 ஆவது ஒஸ்கர் விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை 'Nomadland' படத்துக்காக சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றார். திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஒஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இன்று காலை 5.30 மணியளவில் ஆரம்பமாகிய இந்த நிகழ்ச்சி, தொகுப்பாளர் இன்றி இடம்பெற்று வருகிறது. லொஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி தியேட்டர் ஆகிய 2 இடங்களில் ஒஸ்கர் விருது விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் விருந்தினர்களாக பங்கேற்க உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ப…
-
- 0 replies
- 300 views
-
-
விஜய் சேதுபதி பாடல் படைத்த சாதனை விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், யாழா யாழா என்ற முதல் சிங்கில் பாடலும் டிரெண்டிங்கில் இடம்பெற்றது. விஜய் சேதுபதி இதையடுத்து யாமிலி யாமிலியா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடல் வெளியான 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. …
-
- 1 reply
- 1k views
-
-
ஓடிடி உலகம்: நான்கு காதல்கள்! ஓடிடி உலகின் அண்மைக்கால ஈர்ப்பு ஆந்தாலஜி படைப்புகள். அந்த வரிசையில் கடந்த வாரம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது ‘அஜீப் தாஸ்தான்ஸ்’ திரைப்படம். ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’, ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ வரிசையில் பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களுடைய கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இந்தப் புதிய ஆந்தாலஜியை கரண் ஜோகர் தயாரித்துள்ளார். கறுப்பும் வெள்ளையுமாக நாம் எதிர்கொள்ளும் வாழ்வின் அபத்தங்கள் பலவும், உண்மையில் இந்த இரண்டுக்கும் இடையில், எளிதில் பிடிபடாத எண்ணற்ற சாயல்களைக் கொண்டிருக்கும். அப்படியான வினோத சாயல்களின் சில தெறிப்புகளை வினோதக் கதைகள் எனப் பொருள்படும் தலைப்பில் வெளியாகியிருக்கும் ‘அஜீப் தாஸ்தான்ஸ்’ ஆந்தாலஜியில் காணலாம…
-
- 1 reply
- 421 views
-
-
அஞ்சலி: விவேக் (1961-2021) - சமூகத்தின் கலைஞன்! அகால மரணங்கள் எப்போதும் ஆழமான வடுக்களை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாகப் பொதுவாழ்வில் இருப்பவர்கள் சிலரை நாம் என்றைக்கும் நம்முடன் இருக்கப்போகிறவர் என்று கற்பனை செய்துவைத்திருப்போம். அப்படிப்பட்டவர்கள் திடீரென்று நம்முடன் இல்லை என்றாகும்போது ஏற்படும் அதிர்ச்சியையும் துன்பத்தையும் அளவிடவே முடியாது. விவேக்கின் மறைவு அத்தகையதே. கோவில்பட்டியில் பிறந்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்று, சென்னைத் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிவந்த விவேகானந்தன்,திறமையாளர்கள் பலரைப் பட்டை தீட்டிய கே.பாலசந்தரால் கண்டெடுக்கப்பட்ட வைரம். விவேக் என்னும் பெயர் மாற்றத்துடன் ‘மனதில் உறுதி வேண்டும்’ (1987) திரை…
-
- 0 replies
- 323 views
-
-
சிந்திக்க வைக்கும் சனங்களின் கலைஞர் பத்மஸ்ரீ திரு.விவேக்
-
- 0 replies
- 355 views
-
-
சமீபத்தில் மறைந்த... என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி மனம் திறக்கச் சொல்கிறார்கள். இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது. கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது. இதயம் சோர்ந்துவிடுகிறது. அடுக்கடுக்காக அவன் நினைவுகள் கண்ணீர்மேகமாய் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன. பிரசன்ன குமார் - என் பிரசன்னா. 13 வருடங்கள் ஆயிற்று; 14 -ம் வருட வாழ்வு போயிற்று. அக்டோபர் 23 -ல் பிறந்தவன். அக்டோபர் 29 -ல் விடைபெற்றான். 14 வருடங்களின் வருடல் இனி என் நினைவுப்பரப்பில் என்றும் கதறல். இன்னும் கொஞ்சம் அதிகம் பழகி இருக்கலாமோ? இத்தனைக்கும் அவன் நிறையப் பேசுபவன் அல்ல. அவன், அவனது பியானோ, அமர்சித்ரகதா, வீடியோ கேம்ஸ், கால்பந்து, குறிப்ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
அன்பிற்கினியாள் கேட்பவர்கள் மனதை கொள்ளை கொள்ளும் அழகான பெயர். பெயரை போலவே படமும் அருமையாக உள்ளது. மிக சிறந்த கதை. நீண்ட நாட்களுக்கு பிறகு அருண்பாண்டியன் நடித்திருக்கிறார். மலையாளத்தில் வெளிவந்த ஹெலன் திரைப்படம் "அன்பிற்கினியாள்" என்ற பெயரில் மீள் தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளரும் அருண் பாண்டியனே. படத்தின் இயக்குனர் கோகுல். 2020 ன் ஆரம்பத்தில் படப்பிடிப்பு தொடக்கப்பட்டு இறுதிக்காட்சிகள் லொக்டவுனால் தடைப்பட்டது. தளர்வின் பின்னர் மிகுதிக் காட்சிகள் படமாக்கப்பட்டு மார்ச் மாதல் படம் திரைக்கு வந்தது. படத்தின் முன் பகுதி அப்பா, மகளுக்கு இடையே நடைபெறும் பாசத்தையும் அவர்களின் இனிமையான நாட்களையும் காட்டுகிறது. அப்பா மீது பாசத்தை பொழியும் மகள். அ…
-
- 14 replies
- 1.5k views
-
-
மண்டேலா 'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு அழுத்தமான ஒரு பாத்திரம் யோகிபாபுவுக்கு. காமெடியனாகத் திரிந்தவர், கதைக்கான நடிகனாக ஒரு படி மேலேறி முத்திரைப் பதித்திருக்கிறார். எதுவும் அறிந்திராத அப்பாவியாகச் சாதிய தீக்கு இரையாகி அப்பாவி முகம் காட்டும்போது பரிதாபத்தை ஏற்படுத்துபவர், பின்னர் அரசியல்வாதிகளை பெண்டெடுக்கும்போது நம்மையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறார். வெறும் ஹீரோவாக நடிப்பதற்கும் கதையின் நாயகனாக நடிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை இந்தப் படம் உணர்த்துகிறது. அந்த வகையில் யோகி பாபுவுக்கு ஸ்பெஷல் ஹார்ட்டின்! ஊர் போஸ்ட் மாஸ்டர் தேன்மொழியாக ஷீலா ராஜ்குமார். யோகி பாபுவுக்கு 'மண்டேலா' பெயர்க் காரணம் தொடங்கி, அடையாள அட்டை, சேமிப்புக்…
-
- 28 replies
- 2.3k views
-
-
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.! சென்னை: நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திரைப்படப்படப்பிற்காக சமீபத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் விவேக். நேற்றைய தினம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் தயக்கம் காட்டக்கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் விவேக். இன்று காலையில் அவரது உடல் நலம் பாதிக்கப்படவே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். விவேக்கிற்கு மூச்சுத்திணறலும் இருப்பதாக மருத்துவமனை வட்…
-
- 4 replies
- 799 views
-
-
முதல் பார்வை: கர்ணன் ஊர் மக்களின் நன்மைக்காக நாயகன் உரிமைக் குரல் எழுப்பினால், அதனால் போராட்டங்களைச் சந்தித்தால் அதுவே 'கர்ணன்'. நெல்லை மாவட்டத்தில் உள்ள பொடியங்குளம் ஒரு குக்கிராமம். பஸ் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அந்த ஊர் மக்கள் அல்லல்படுகின்றனர். பக்கத்து ஊரான மேலூருக்கு நடந்து சென்று போய் பஸ் ஏறினால்தான் வெளியூருக்குப் போக முடியும். அப்படிப்பட்ட நிலையில் மேலூர்க்காரர்கள் பொடியங்குளம் மக்களைச் சம்பந்தமில்லாமல் சண்டைக்கு இழுக்கின்றனர். இளம்பெண்ணை கேலி செய்கின்றனர். அதைக் கண்டிக்கும் ஆண்களை இழுத்துப் போட்டு அடிக்கின்றனர். இதனால் வெகுண்டெழும் கர்ணன் (தனுஷ்) மேலூரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினரின் அகந்தைக்குத் தகுந்த பாடம் ப…
-
- 6 replies
- 1.6k views
-
-
ஏ.ஆர்.ரஹ்மான் கதையாசிரியர் ஆனது எப்படி? மின்னம்பலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், முதன்முறையாக கதை எழுதி தயாரித்திருக்கும் படம் “99 சாங்ஸ்”. இப்படம் ஏப்ரல் 16 இல் தமிழ், தெலுங்கு இந்தி உட்பட பல மொழிகளில் உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்துக்கான கதை எழுதியது எப்படி? தயாரிப்பாளரானது எப்படி? என்பவை உட்பட படத்தைப் பற்றிய பல அனுபவங்களை ஏ.ஆர்.ரகுமான் கூறியிருக்கிறார். 1. 99 சாங்ஸ் படம் பற்றி…? பழைய மற்றும் புதிய உலகத்துடன் ஒரு மனிதனின் போராட்டமே 99 சாங்ஸ்-ன் மையக்கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறி…
-
- 5 replies
- 1k views
- 1 follower
-