Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

மண்டேலா - யோகி பாபுவின் `மண்டேலா'... இந்தப் படத்தை ஏன் கொண்டாடவேண்டும்?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
மண்டேலா
 
மண்டேலா

'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு அழுத்தமான ஒரு பாத்திரம் யோகிபாபுவுக்கு. காமெடியனாகத் திரிந்தவர், கதைக்கான நடிகனாக ஒரு படி மேலேறி முத்திரைப் பதித்திருக்கிறார். எதுவும் அறிந்திராத அப்பாவியாகச் சாதிய தீக்கு இரையாகி அப்பாவி முகம் காட்டும்போது பரிதாபத்தை ஏற்படுத்துபவர், பின்னர் அரசியல்வாதிகளை பெண்டெடுக்கும்போது நம்மையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறார். வெறும் ஹீரோவாக நடிப்பதற்கும் கதையின் நாயகனாக நடிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை இந்தப் படம் உணர்த்துகிறது. அந்த வகையில் யோகி பாபுவுக்கு ஸ்பெஷல் ஹார்ட்டின்!

 

ஊர் போஸ்ட் மாஸ்டர் தேன்மொழியாக ஷீலா ராஜ்குமார். யோகி பாபுவுக்கு 'மண்டேலா' பெயர்க் காரணம் தொடங்கி, அடையாள அட்டை, சேமிப்புக் கணக்கு, இந்திய ஜனநாயகத்தில் ஒரு வாக்கின் அருமை பெருமையை உணர்த்துவது என எதையும் போரடிக்கும் மெசேஜாகப் பதிவு செய்யாமல் கதையின் போக்கிலேயே புரியவைக்கும் பாத்திரம். படம் நெடுக யோகிபாபுவுடன் உலாவரும் அந்த கிர்தா 'கான்' சிறுவன், ஊர் பெரியவராகப் பெரியாரின் சீடனாகச் சங்கிலி முருகன், வேட்பாளர்களாக ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி என எல்லோரும் தங்களின் பாத்திரங்களுக்குச் சரியாகப் பொருந்திப் போயிருக்கின்றனர். எந்தச் சண்டையென்றாலும் செருப்பைக் கழற்றிவிட்டுவிட்டு கோதாவுக்குள் குதிப்பவர், யார் என்ன செய்தாலும் வேண்டுமென்றே குறை சொல்லும் பக்கத்து ஊர்க்காரர், காசைக் கொடுக்காமல் ஓசியிலேயே எல்லாவற்றையும் சாதித்துக்கொள்ளும் திருடன் இசக்கி, தேர்தல் அதிகாரி ஜார்ஜ் மரியன், சாதியை விடாமல் தூக்கிப்பிடிக்கும் மனிதர்கள் என அச்சு அசலாக யதார்த்தமான மனிதர்களைப் படம் நெடுக வெவ்வேறு தன்மையுடன் உலாவவிட்டிருக்கிறார் இயக்குநர். இது படத்துக்குப் பெரும்பலம் சேர்த்திருக்கிறது.

மண்டேலா
 
மண்டேலா

இந்தியாவில் ஓர் ஓட்டுக்கு இருக்கும் பலம், ஒரு வாக்காளர் அடையாள அட்டை நினைத்தால் என்னவெல்லாம் செய்யும், அதன் பவர் என்ன என்பதை உணர்த்த நினைத்திருக்கிறார் இயக்குநர். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சாதி பாகுபாட்டைக் களைந்து அனைவரையும் ஒரே தராசில் நிறுத்தும் ஒருவரின் தேர்தல் வாக்கின் சக்தி, அதுவரை கீழாக நடத்தப்பட்ட 'மண்டேலா'வைக் கொண்டாட வைக்கிறது. வாக்கரசியலுக்காக எதையும் செய்வார்கள் அரசியல்வாதிகள் என்பதை வெளிப்படையாகப் போட்டு உடைக்கிறது. அதேபோல், ஒரு பேருந்தில் அருகருகே உட்கார்ந்துகூடப் பயணிக்காதவர்கள், மது அருந்தும்போது மட்டும் காசில்லாததால் வேறு வழியின்றி ஒன்றுகூடி கொண்டாடும் காட்சி சமகால சமூகத்தின் நுண் பகடி!

 

விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு பொட்டல் கிராமத்தின் மண்ணை அள்ளி வந்திருக்கிறது. ஊறுகா பேண்டு பரத் ஷங்கரின் இசையில், யுகபாரதியின் வரிகளில் ஒலிக்கும் 'ஒரு நீதி ஒன்பது சாதி' பாடல் படத்தின் மையக்கருத்தை அற்புதமாகப் பிரதிபலித்திருக்கிறது. இப்படியொரு படத்தைத் துணிந்து தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சசிகாந்த், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் இயக்குநர் பாலாஜி மோகனுக்குப் பாராட்டுகள்.

மண்டேலா
 
மண்டேலா

அதே சமயம், சாதிய அரசியல், வாக்கரசியல், தேர்தல் கலாட்டா என எல்லாவற்றையும் கச்சிதமாக ஒரு தெளிவுடன் அணுகிய இயக்குநர் ஒரு சில இடங்களில் சறுக்கவும் செய்திருக்கிறார். யோகி பாபு தன் வாக்குக்கு லஞ்சமாகப் பெறும் பொருள்கள், தேர்தலுக்கு முன் ஊர் மக்களுக்குத் தரப்படும் பணம், அன்பளிப்பு போன்றவற்றைச் சட்டத்துக்குப் புறம்பான ஒரு விஷயமாக மட்டுமே பார்க்கவேண்டும். ஆனால், அதை அரசின் சார்பாக மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருள்கள் மற்றும் திட்டங்களுடன் ஒப்பிட்டுக் காட்டியிருப்பது சற்றே நெருடல். விலையில்லா பொருள்களும் அத்தகைய திட்டங்களும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கருவிகள். அவர்களின் வரிப்பணத்திலிருந்தே அரசின் சார்பாக மக்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள் என்ற புரிதல் இங்கே அனைத்து கலைஞர்களுக்கும் இருப்பது அவசியம். அதை வாக்குக்குக் கொடுக்கும் பணத்துடன் ஒப்பிடுவது ஆபத்தான அரசியல்.

ஊர் பெரியவர் பாத்திரம் அந்த ஊரிலிருக்கும் சாதியப் பிரச்னைகளை முடிக்காமல் இருதரப்புக்கும் மையமாக நின்று சமரசம் பேசுவதாய் காட்டப்படுவது உறுத்தல். இரண்டு சாதிகளும் ஆபத்துதான், இங்கே இரண்டுமே தேவையில்லை என்ற தெளிவே அவசியமானது. ஆனால், அவர் இரண்டு சாதிகளுக்கும் பொதுவான ஆள் என்று சொல்வதற்காக இரண்டு சாதியிலும் ஒவ்வொரு பெண்ணைத் திருமணம் செய்திருப்பதாய் காட்டுவது பெண்களை வெறும் பொருளாக மட்டுமே பார்க்கும் அபத்தத்தின் உச்சம்!

யோகி பாபுவின் `மண்டேலா'... இந்தப் படத்தை ஏன் கொண்டாடவேண்டும்?! ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்! | Yogi Babu Mandela Movie Plus Minus Report (vikatan.com)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மண்டேலா - யோகிபாபு படத்தின் சினிமா விமர்சனம்

 • முரளிதரன் காசி விஸ்வநாதன்
 • பிபிசி தமிழ்

நடிகர்கள்: யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி மருகன், ஜி.எம். சுந்தர்; இசை: பரத் சங்கர்; இயக்கம்: மடோன்னே அஸ்வின்.

தமிழில் அரசியல் தொடர்பான திரைப்படங்கள், அரசியலைச் சொல்லும் திரைப்படங்கள் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், தேர்தல் அரசியலை மையமாக வைத்து வெளியாகியிருக்கிறது 'மண்டேலா'.

சூரங்குடி என்ற கிராமத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், பதவியைப் பிடிப்பதற்காக இரண்டு ஜாதியினர் மோதிக்கொள்கிறார்கள். வாக்குகள் இரு தரப்புக்கும் இடையில் சரிசமமாகப் பிரியும் நிலையில், வெற்றிபெறுவதற்கு ஒரு ஓட்டு தேவைப்படுகிறது.

ஆகவே, அந்த ஊரில் உள்ள முடிதிருத்துபவரான மண்டேலாவின் (யோகிபாபு) வாக்கு மிக முக்கியமானதாக உருவெடுக்கிறது. அவரது வாக்கைப் பெற, இரு தரப்பும் இலவசங்களை அள்ளிக்கொடுக்கிறார்கள். மண்டேலா யாருக்கு வாக்களித்தார் என்பது மீதிக் கதை.

படத்தின் இயக்குநர் மடான்னே அஸ்வின் ஏற்கனவே தனது குறும்படங்கள் மூலம் பெரும் கவனத்தைப் பெற்றவர். அவரது முதல் முழு நீளப் படம் இது. தனது குறும்பட அனுபவத்தை இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார் அஸ்வின்.

கதை, திரைக்கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை என ஒரு திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்திருக்கின்றன. படத்தின் வரும் எல்லா காட்சிகளுமே சரியான இடத்தில் ஆரம்பித்து, சரியாக முடிகின்றன. ஒரு காட்சிகூட தேவையில்லாத நீளத்தில் இல்லை.

படத்தின் முதல் காட்சியில் ஆரம்பிக்கும் சுவாரஸ்யம், இறுதிவரை டெம்போ குறையாமல் இருப்பது படத்தின் இன்னுமொரு பலம். பல காட்சிகளை, கண்ணீர் சிந்தவைக்கும் உருக்கமான காட்சிகளாக மாற்றக்கூடிய சாத்தியம் இருந்தும்கூட, அந்த நிலைக்கு படத்தை எடுத்துச்செல்லாமல் தான் சொல்லவந்த களத்திற்குள், மெல்லிய நகைச்சுவையுடன் படத்தை எடுத்துச் சென்று, முடித்திருக்கிறார் மடான்னே அஸ்வின்.

படத்தின் நாயகன் யோகிபாபு. இதற்கு முன்பாக பல படங்களில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அந்தப் படங்களில் அவரது முழுத் திறன் வெளிப்பட்டதில்லை. அவரது நகைச்சுவை கதாபாத்திரங்களின் நீட்சியாகவே இந்தப் பாத்திரங்கள் அமைந்திருந்தன. ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவையை முதன்மையாகக் கொள்ளாமல், இயல்பான ஒரு மனிதராக நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பில் பின்னியெடுத்திருக்கிறார் யோகிபாபு.

மண்டேலா - யோகிபாபு படத்தின் சினிமா விமர்சனம்

இவருக்கு அடுத்தபடியாக, அஞ்சல்துறை பணியாளராக வரும் ஷீலா, ஊர்ப் பெரியவராக வரும் சங்கிலி முருகன், அவரது மகன்களாக நடித்திருப்பவர்கள், மண்டேலாவின் உதவியாளராக வரும் சிறுவன் ஆகியோர் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து, சின்ன பிழைகூட இல்லாமல் நடித்திருக்கிறார்கள். ஷீலா இதற்கு முன்பாக பல படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படம் அவரை சிறந்த கோணத்தில், சிறந்த நடிகையாகக் காட்டுகிறது.

முக்கியப் பாத்திரங்கள் மட்டுமல்லாமல் சின்னச்சின்ன ரோல்களில் நடித்திருப்பவர்கள்கூட சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதுபோன்ற படங்களில், திரைக்கதை நன்றாக இருந்தாலும்கூட, நடிப்பவர்கள் தங்களது சொதப்பலான நடிப்பால் படத்தை கைவிட்டுவிடுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் அந்தப் பிரச்சனையே இல்லை.

ஆனால், படம் என்ன சொல்லவருகிறது என்பதில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அடிப்படையில் இந்தப் படம், வாக்காளர்கள் இலவசங்களுக்காக மனம் மயங்கிவிடாமல், உண்மையான பிரச்னைகளை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும் என்கிறது. சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு உணவே பிரச்னையாக இருக்கும் இடத்தில், அந்த உணவை இலவசமாகக் கொடுப்பதையும் பெறுவதையும் தவறு என்பதைப்போலக் காட்டுகிறது படம்.

தவிர, படத்தில் வரும் ஊர் பெரியவர் பெரியார் மீது பற்றுகொண்டவர். இரண்டு மனைவிகளுடன் வாழ்கிறார். அவரது இரண்டு மகன்கள், அவரது வாரிசு யார் என்பதற்காக அடித்துக்கொள்கிறார்கள். இதுவும் ஒரு குறியீடா எனத் தெரியவில்லை.

படம் தற்காலத்தில் நடக்கிறது. ஆனால், படத்தில் காட்டப்படும் கிராமம் 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட கிராமத்தைப்போல காட்டப்படுகிறது. இடிந்து விழுந்துகிடக்கும் பள்ளிக்கூடங்கள், அம்பாசிடர் கார்கள் என தற்காலத்தில் இல்லாத பல விஷயங்களைப் படம் காட்டுகிறது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் போலியோ முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அந்நோயால் பாதிக்கப்பட்டதாக ஒரு குழந்தை படத்தில் வருகிறது. கதையில் எந்த அம்சத்தையும் கூடுதலாகச் சேர்க்காத இந்த அம்சங்கள் படத்தில் எதற்காக வருகின்றன எனத் தெரியவில்லை.

ஆனால், மேலே சொன்ன விஷயங்களைவிட்டுவிட்டு வெறும் சினிமா என்ற வகையில் பார்த்தால் ரசிக்கக்கூடிய சினிமாதான் இது. திரையரங்கில் வெளியாகியிருந்தால் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கக்கூடிய படம். ஆனால், தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.

மண்டேலா - யோகிபாபு படத்தின் சினிமா விமர்சனம் - BBC News தமிழ்

Link to post
Share on other sites

போன ஞாயிறு, யோகிபாபு கதாநாயகனாக நடித்த படம் நல்லா இருக்குமா என்ற சந்தேகத்துடன் மண்டேலா படத்தை பார்க்கத் தொடங்கினேன். ஆரம்ப காட்சியிலேயே புதுசா கட்டின ஒரு கக்கூஸ்சை காட்டியவுடன் "இதென்ன கக்கா படம்... ஞாயிறு பின்னேரம் இதை ஏன் பார்ப்பான் " என்று பாட்டுகள் பார்க்க தொடங்கி விட்டேன். ஆனால் மண்டேலா பற்றிய விமர்சனங்கள் நல்லா வந்து கொண்டு இருந்ததால் நேற்று இரவு பார்த்தேன்.

படம் சூப்பர்...! ஒரு வாக்கு சீட்டை வைத்துக் கொண்டு தமிழக / இந்திய அரசியலை வைத்து நகைச்சுவையாக, அதே நேரம் யதார்த்தமாக எடுத்துள்ளனர்.

யோகி பாபு...! இவரைத் தவிர இந்த படத்துக்கு யாரும் இந்தளவுக்கு பொருந்த மாட்டார்கள்.

தவறவிடக் கூடாத பொழுது போக்கான அதே நேரம் யதார்த்தமான ஒரு படம்

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

போன ஞாயிறு, யோகிபாபு கதாநாயகனாக நடித்த படம் நல்லா இருக்குமா என்ற சந்தேகத்துடன் மண்டேலா படத்தை பார்க்கத் தொடங்கினேன். ஆரம்ப காட்சியிலேயே புதுசா கட்டின ஒரு கக்கூஸ்சை காட்டியவுடன் "இதென்ன கக்கா படம்... ஞாயிறு பின்னேரம் இதை ஏன் பார்ப்பான் " என்று பாட்டுகள் பார்க்க தொடங்கி விட்டேன். ஆனால் மண்டேலா பற்றிய விமர்சனங்கள் நல்லா வந்து கொண்டு இருந்ததால் நேற்று இரவு பார்த்தேன்.

படம் சூப்பர்...! ஒரு வாக்கு சீட்டை வைத்துக் கொண்டு தமிழக / இந்திய அரசியலை வைத்து நகைச்சுவையாக, அதே நேரம் யதார்த்தமாக எடுத்துள்ளனர்.

யோகி பாபு...! இவரைத் தவிர இந்த படத்துக்கு யாரும் இந்தளவுக்கு பொருந்த மாட்டார்கள்.

தவறவிடக் கூடாத பொழுது போக்கான அதே நேரம் யதார்த்தமான ஒரு படம்

எங்கு பார்த்தீர்கள்?
நான் இந்திய இணைய தளங்களில் பார்ப்பது இல்லை 
(பெரிதாக சினிமா படம் பார்ப்பதும் இல்லை)
இந்த விமர்சனங்களை வாசித்தால் பார்க்க ஆவல் 
ஓ மை கடவுளே படமும் ஓரிடமும் கிடைக்கவில்லை 

யாரவது தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி 

Link to post
Share on other sites
18 minutes ago, Maruthankerny said:

எங்கு பார்த்தீர்கள்?
நான் இந்திய இணைய தளங்களில் பார்ப்பது இல்லை 
(பெரிதாக சினிமா படம் பார்ப்பதும் இல்லை)
இந்த விமர்சனங்களை வாசித்தால் பார்க்க ஆவல் 
ஓ மை கடவுளே படமும் ஓரிடமும் கிடைக்கவில்லை 

யாரவது தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி 

மண்டேலா Netflix இல் உள்ளது மருது. நல்ல படம்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

மண்டேலா Netflix இல் உள்ளது மருது. நல்ல படம்.

ஓகே நன்றி 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓ மை கடவுளே படம் YouTube இல் உள்ளது. (Simply south print)

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Eppothum Thamizhan said:

ஓ மை கடவுளே படம் YouTube இல் உள்ளது. (Simply south print)

இரு மாதம் முன்பு தேடினேன் இருக்கவில்லை 
யூடூபில் இப்போ படம் பார்க்கவும் முடியாது ஒரே விளம்பரம் 
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

எங்கு பார்த்தீர்கள்?
நான் இந்திய இணைய தளங்களில் பார்ப்பது இல்லை 
(பெரிதாக சினிமா படம் பார்ப்பதும் இல்லை)
இந்த விமர்சனங்களை வாசித்தால் பார்க்க ஆவல் 
ஓ மை கடவுளே படமும் ஓரிடமும் கிடைக்கவில்லை 

யாரவது தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி 

ஒ மை கடவுளே Tentkotta தளத்தில் உள்ளது. ஆனால் சந்தா கட்டவேண்டும். அதை  விட  you tube ல் முழுப் படமும் உள்ளது. பார்தது மகிழலாம். எனக்கு பிடித்த சிறந்த படம். 

ஆனால் படம் பார்தது முடிந்த பின்னர் அட கடவுளே! இப்படி எனக்கும் ஒரு சான்ஸ் தரக்கூடாதா,  என்று அந்த கற்பனையை நினைத்து ஏங்கக் கூடாது. 😂

 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மண்டேலா சாதியத்தையும் இந்திய தேர்தலையும் தோலுரித்து காட்டி இருக்கும் படம் யோகி பாபு  கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார் என்றே சொல்லலாம் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2021 at 14:08, பிழம்பு said:

இரண்டு சாதியிலும் ஒவ்வொரு பெண்ணைத் திருமணம் செய்திருப்பதாய் காட்டுவது பெண்களை வெறும் பொருளாக மட்டுமே பார்க்கும் அபத்தத்தின் உச்சம்!

இதைத்தானே கருணாநிதி செய்தார் படத்தில் அபத்தத்தின் உச்சம் என்கிறார்கள் வாய்ஜால  கருணாநிதி செய்தால் தலீவார் .😄

On 7/4/2021 at 20:11, Maruthankerny said:

எங்கு பார்த்தீர்கள்?
நான் இந்திய இணைய தளங்களில் பார்ப்பது இல்லை 
(பெரிதாக சினிமா படம் பார்ப்பதும் இல்லை)
இந்த விமர்சனங்களை வாசித்தால் பார்க்க ஆவல் 
ஓ மை கடவுளே படமும் ஓரிடமும் கிடைக்கவில்லை 

யாரவது தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி 

உங்கள் பிரைவேட் மெயிலை பாருங்கள் .

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2021 at 14:30, நிழலி said:

மண்டேலா Netflix இல் உள்ளது மருது. நல்ல படம்.

மீண்டும் நன்றி 
தரமான திரைக்கதை இந்த திரைக்கதைக்கு விருதுகொடுக்கலாம் 
காதல் படம் பார்த்த போது வந்த அதே பிரமை எனக்கு இந்த படத்திலும் வந்தது 
ஊரிலேயே எந்த முக்கியத்துவமும் இல்லாத கடைநிலை கதாபாத்திரத்தை கொண்டு 
சலிப்பில்லாமல் கதையை நகர்த்திய விதம் அருமை 

நான் பெரிதாக படங்கள் பார்ப்பதில்லை விஜய் சேதுபதி  விஜய் இருவரும் இணைந்து 
நடித்து இருந்ததால் ஏதும் இருக்கும் என்ற ஆவலுடன் மாஸ்டர் படம் பார்த்து ஏமாந்து போனேன்  
உண்மையில் மண்டேலாவை விட .. மாஸ்டர் கதையின் கரு நல்லது 
ஆனால் அதை திரையில் வைத்து சிதைத்து விட்டிருந்தார்கள் 

மண்டேலா காதாபாத்திரங்களின்  வடிவமைப்பு காடசிக்கு காட்சி கதை நகர்த்திய விதம் எல்லாமே அருமை. 

9 hours ago, பெருமாள் said:

.உங்கள் பிரைவேட் மெயிலை பாருங்கள் .

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் சிறுவயதில் ஒரு சினிமா பைத்தியம். அதனால் பலவற்றை இழந்தும் இருக்கின்றேன்.ஊர் தொடக்கம் புலம்பெய்ர்ந்த பின்னரும் தமிழ்படங்கள் தொடர்ந்து பார்த்து மகிழ்ந்தவன். என்று பிரமாண்டம் அது இது என கதையும் இல்ல்லாமல் ஒரு வரி கதையை வைத்தும் பாடலை மட்டும் வைத்து படம் எடுத்தார்களோ அன்றிலிருந்து தமிழ் படங்கள் பார்ப்பதில்லை.
பாலச்சந்தர் பாரதிராஜா மகேந்திரன் என நல்ல இயக்குனர்களின் படங்கள் இல்லாமல் போனதுடன் தமிழ் சினிமாவில் கதை தொய்வும் எற்பட்டு விட்டது. அது தவிர எல்லா படங்களிலும் பிராமணியம் புகுந்து விடும். வெள்ளை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இன்று வரும் படங்கள் அப்படி தெரியவில்லை. பிரமாண்டம் இல்லை. வெள்ளை நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. முகவெட்டு அவசியமில்லை. கதை அதற்கேற்ற கதாபாத்திரம். இன்று வரும் கதாபாத்திரங்களுக்கு நடிப்பு  தேவையில்லை. வாழ்க்கையை வாழ்ந்து காட்டினாலே போதும்.சண்டை கூட நிஜமாகவே எடுக்கின்றார்கள்.

ஒரு மனிதனின் அடிமட்ட வாழ்க்கையை விவரணப்படம் போல் எடுக்கின்றார்கள். மிக அழகாக கதையை சொல்கின்றார்கள். இசையும் கிராமத்து இசைக்கருவிகளை முன்னிலை படுத்துகின்றது.

அன்று பாரதிராஜா போன்றவர்கள் ஒரு பெரிய கோட்டை தாண்டினார்கள். அவர்களின் பாணியில் இன்றைய இயக்குனர்கள் இன்னொரு பெரிய கோட்டை தாண்டி விட்டார்கள்.

அன்று கமலகாசனின் கோவணம் பெரிசாக பேசப்பட்டது.
இன்று கோவணம் கட்டுபவனே கதாபாத்திரமாகிவிட்டான்.
அவர்களின் நடிப்பு இயற்கையாகவே இருக்கின்றது.

நீண்ட காலத்தின் பின் நல்ல படம் பார்த்த திருப்தி.
 

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2021 at 08:55, tulpen said:

ஒ மை கடவுளே Tentkotta தளத்தில் உள்ளது. ஆனால் சந்தா கட்டவேண்டும். அதை  விட  you tube ல் முழுப் படமும் உள்ளது. பார்தது மகிழலாம். எனக்கு பிடித்த சிறந்த படம். 

ஆனால் படம் பார்தது முடிந்த பின்னர் அட கடவுளே! இப்படி எனக்கும் ஒரு சான்ஸ் தரக்கூடாதா,  என்று அந்த கற்பனையை நினைத்து ஏங்கக் கூடாது. 😂

 

கடவுளே! இப்படி எனக்கும் ஒரு சான்ஸ் தரக்கூடாதா என்று கேட்டு, அவோட கலியாணத்தோடை, நொந்துபோன ஒரு திரி ஒண்டு, பட்டி , தொட்டி எல்லாம் ஓடியதே... 😍 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் சிறுவயதில் ஒரு சினிமா பைத்தியம். அதனால் பலவற்றை இழந்தும் இருக்கின்றேன்.ஊர் தொடக்கம் புலம்பெய்ர்ந்த பின்னரும் தமிழ்படங்கள் தொடர்ந்து பார்த்து மகிழ்ந்தவன். என்று பிரமாண்டம் அது இது என கதையும் இல்ல்லாமல் ஒரு வரி கதையை வைத்தும் பாடலை மட்டும் வைத்து படம் எடுத்தார்களோ அன்றிலிருந்து தமிழ் படங்கள் பார்ப்பதில்லை.
பாலச்சந்தர் பாரதிராஜா மகேந்திரன் என நல்ல இயக்குனர்களின் படங்கள் இல்லாமல் போனதுடன் தமிழ் சினிமாவில் கதை தொய்வும் எற்பட்டு விட்டது. அது தவிர எல்லா படங்களிலும் பிராமணியம் புகுந்து விடும். வெள்ளை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இன்று வரும் படங்கள் அப்படி தெரியவில்லை. பிரமாண்டம் இல்லை. வெள்ளை நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. முகவெட்டு அவசியமில்லை. கதை அதற்கேற்ற கதாபாத்திரம். இன்று வரும் கதாபாத்திரங்களுக்கு நடிப்பு  தேவையில்லை. வாழ்க்கையை வாழ்ந்து காட்டினாலே போதும்.சண்டை கூட நிஜமாகவே எடுக்கின்றார்கள்.

ஒரு மனிதனின் அடிமட்ட வாழ்க்கையை விவரணப்படம் போல் எடுக்கின்றார்கள். மிக அழகாக கதையை சொல்கின்றார்கள். இசையும் கிராமத்து இசைக்கருவிகளை முன்னிலை படுத்துகின்றது.

அன்று பாரதிராஜா போன்றவர்கள் ஒரு பெரிய கோட்டை தாண்டினார்கள். அவர்களின் பாணியில் இன்றைய இயக்குனர்கள் இன்னொரு பெரிய கோட்டை தாண்டி விட்டார்கள்.

அன்று கமலகாசனின் கோவணம் பெரிசாக பேசப்பட்டது.
இன்று கோவணம் கட்டுபவனே கதாபாத்திரமாகிவிட்டான்.
அவர்களின் நடிப்பு இயற்கையாகவே இருக்கின்றது.

நீண்ட காலத்தின் பின் நல்ல படம் பார்த்த திருப்தி.
 

கடைசி வரை என்ன படமென்று சொல்லவேயில்லை.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

கடைசி வரை என்ன படமென்று சொல்லவேயில்லை.

அவரே மறந்துட்டார்  படத்தின்ற பெயர😍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

கடைசி வரை என்ன படமென்று சொல்லவேயில்லை.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவரே மறந்துட்டார்  படத்தின்ற பெயர😍

நாங்கள் இப்ப எங்கை நிக்கிறம்? 😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:
23 hours ago, ஈழப்பிரியன் said:

கடைசி வரை என்ன படமென்று சொல்லவேயில்லை.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவரே மறந்துட்டார்  படத்தின்ற பெயர😍

நாங்கள் இப்ப எங்கை நிக்கிறம்

சுப்பற்ரை கொல்லைக்க.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2021 at 08:55, tulpen said:

ஒ மை கடவுளே Tentkotta தளத்தில் உள்ளது. ஆனால் சந்தா கட்டவேண்டும். அதை  விட  you tube ல் முழுப் படமும் உள்ளது. பார்தது மகிழலாம். எனக்கு பிடித்த சிறந்த படம். 

ஆனால் படம் பார்தது முடிந்த பின்னர் அட கடவுளே! இப்படி எனக்கும் ஒரு சான்ஸ் தரக்கூடாதா,  என்று அந்த கற்பனையை நினைத்து ஏங்கக் கூடாது. 😂

ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை மற்றவர்களுக்கு மட்டும் மனிதவுரிமை நீதி நியாயம் தான்  பார்ப்பது திருட்டு தளம்களில் திருடிய படங்கள் .😄

இதைவிட திருட்டு விசிடி பார்க்கிறம் என்று  உண்மையை சொல்லி வாழ்வது எவ்வளவோ மேல் .

Link to post
Share on other sites
20 minutes ago, பெருமாள் said:

ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை மற்றவர்களுக்கு மட்டும் மனிதவுரிமை நீதி நியாயம் தான்  பார்ப்பது திருட்டு தளம்களில் திருடிய படங்கள் .😄

இதைவிட திருட்டு விசிடி பார்க்கிறம் என்று  உண்மையை சொல்லி வாழ்வது எவ்வளவோ மேல் .

YouTube இல் படங்கள் பார்ப்பது திருட்டுத்தனமா? எப்ப இருந்து?

ஏனெனில் YouTube இல் நானும் நிறையப் படங்கள் பார்கின்றனான். அத்துடன் ஓ மை கடவுளே படமும், இந்த திரியை வாசித்த பின் மீண்டும் ஒரு தடவை YouTube  இல் தான் பார்த்தேன்.

Edited by நிழலி
எழுத்துப் பிழை
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

YouTube இல் படங்கள் பார்ப்பது திருட்டுத்தனமா? எப்ப இருந்து?

ஏனெனில் YouTube இல் நானும் நிறையப் படங்கள் பார்கின்றனான். அத்துடன் ஓ மை கடவுளே படமும், இந்த திரியை வாசித்த பின் மீண்டும் ஒரு தடவை YouTube  இல் தான் பார்த்தேன்.

அவர் இணைத்ததை   இப்போ போய்  PLAY  பண்ணி பாருங்க விளங்கும் .

படம் வெளியிடுபவர்களின்  அனுமதி இன்றி இந்த காளான் இணையங்கள் செய்யும் தகிடுதத்தம் .

Link to post
Share on other sites
1 minute ago, பெருமாள் said:

அவர் இணைத்ததை   இப்போ போய்  PLAY  பண்ணி பாருங்க விளங்கும் .

படம் வெளியிடுபவர்களின்  அனுமதி இன்றி இந்த காளான் இணையங்கள் செய்யும் தகிடுதத்தம் .

இப்பதான் கவனித்தேன். கட்டணம் கட்டி பார்க்கும் வண்ணம் மாற்றியுள்ளார்கள்.

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இப்பதான் கவனித்தேன். கட்டணம் கட்டி பார்க்கும் வண்ணம் மாற்றியுள்ளார்கள்.

இல்லை சரியாக கவனியுங்கள் .

Video unavailable

This video is no longer available due to a copyright claim by Aiplex Software Private Limited.

Link to post
Share on other sites

காளான் இணையத்தளங்கள் மட்டுமல்ல, படத் தயாரிப்பு நிறுவனங்கள் கூட பல நூறு தமிழ் படங்களை இங்கு பகிர்ந்துள்ளார்கள். முக்கியமாக நல்ல பழைய படங்களை பார்க்க வேண்டும் என்றால் YouTube இல் பார்க்க முடியும். முன்னர் பல ஈரானிய திரைப்படங்களும் இருந்தன.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கொப்பி  ரைட்ஸ் சிங்கன் இணைத்த அன்றே கவனித்ததில் தெரியும் தனிப்பட்ட விளம்பர வருவாய்க்கு இணைத்துள்ளார்கள் என்று .

அதாவது களவு தளம் என்று யூடுப் தளம்  வெளியிடுவது வேறு இது வேறு .

Edited by பெருமாள்
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இருண்ட யுகத்தை நோக்கி நகரும் ஊடக சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு உரிமையும் – பி.மாணிக்கவாசகம்    89 Views ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. அது ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகும். எங்கு ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றதோ அங்கு அராஜகம் தலைதூக்கும்; அநியாயங்களே கோலோச்சும். இதற்கு உலக வரலாறுகள் அழிக்க முடியாத சான்றுகளாகத் திகழ்கின்றன. ஜனநாயகம் நிலவுவதாகக் கூறப்படுகின்ற நாடுகளில் தொடர்ச்சியாக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் மதிப்பதில்லை. அவற்றைப் பேணுவதில் உரிய கவனம் செலுத்துவதுமில்லை. ஆனால் ஊடகவியலாளர்களையும், ஊடக நிறுவனங்களையும் தங்கள் கைகளுக்குள் வைத்துக் கொள்வதற்காகவும், தமது அதிகார எல்லைக்குள் பொத்திப் பேணிக் கொள்வதற்காகவும் பல்வேறு தந்திரோபாய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஊடகவியலாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதாகவும், உரிமைகளை வழங்குவதாகவும் கூறி அவர்கள் தொடர்பிலான பல்வேறு வேலைத் திட்டங்களைத் தொடங்குவார்கள். ஆனால் அந்த வேலைத்திட்டங்களின் உள்ளே வஞ்சனை நிறைந்த நிகழ்ச்சித் திட்டங்களை அவர்கள் வகுத்திருப்பார்கள். அவர்களுடைய திட்டங்களை மேலோட்டமாக நோக்கும் போது, ஊடக சுதந்திரத்துக்கு உரிய மதிப்பளித்து அவர்கள் செயற்படுவதாகவே தோன்றும். ஆனால் கூர்ந்து கவனித்தாலே அவர்களுடைய வஞ்சனையான முகம்களைக் காண முடியும். ஊடக சுதந்திரம் பேணப்படுவதாகவும், ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படுவதாகவும் அவர்கள் பிரசாரங்களை முன்னெடுத்திருப்பார்கள். அதேவேளை தங்களுடைய அதிகாரப் பிடியில் அகப்பட்டுள்ள ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் பயன்படுத்தி நாட்டு மக்கள் மீது கருத்துத் திணிப்பை மேற்கொள்வார்கள். உண்மைகளை மறைத்து திரித்து தமக்கு ஏற்ற வகையில் தங்களுக்கு நன்மையளிக்கும் வகையிலான கருத்துக்களை மக்கள் மத்தியில் அவர்கள் மிகவும் நுட்பமான முறையில் பரவச் செய்வார்கள். உண்மைகள் மறைக்கப்படுவதையும், உண்மைகள் மறுக்கப்படுவதையும் நாட்டு மக்கள் உணரமுடியாத வகையில் தமது அரசியல் தன்னலம் கருதிய பிரசாரங்களை இலாவகமாக முன்னெடுப்பார்கள். கருத்துத் திணிப்பதையும், உண்மைகளை மறைப்பதையும் ஆட்சியாளர்கள் தமது ஆட்சி அதிகாரச் செயற்பாட்டின் முக்கிய அம்சமாகக் கொண்டிருப்பார்கள். ஆட்சியாளர்களுக்கு சாதகமான முறையில் கருத்துக்கள் தம்மீது திணிக்கப்படுவதையும், உண்மையான ஆட்சி மற்றும் நாட்டு நிலைமைகள் தங்களிடம் இருந்து முழுமையாக மறைக்கப்படுவதையும் நாட்டு மக்கள் அறியாதவாறு பார்த்துக் கொள்வார்கள். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் நாட்டு மக்கள் உண்மைத் தகவல்களை அறிகின்ற உரிமையை இழந்து விடுவார்கள். ஏமாற்று அரசியல் ஆட்சியின் மூலம் அவர்களுடைய நியாயமான உரிமைகள் மறுக்கப்படுவதையும் அவர்கள் உணர முடியாமற் போய்விடும். அதற்காக உண்மைகளைத் தேடிக் கண்டறிந்து வெளிக் கொண்டுவர முயற்சிக்கின்ற ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அவர்கள் தமது அதிகார பலத்தைப் பயன்படுத்தி அடக்கி விடுவார்கள். தேவையாயின் அவர்களை அழிப்பதற்கும் அவர்கள் தயங்க மாட்டார்கள். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் பிழையாக வழிநடத்தப்படுகின்ற மக்கள் ஆட்சியாளர்களை நல்லவர்களாகவும், அவர்களுடைய ஆக்கிரமிப்பு ஆட்சியை நல்லாட்சியாகவும் கருதி அவர்களுக்குப் பின்னால் அணி திரண்டிருப்பார்கள். அவர்களுடைய ஆட்சியை நல்லாட்சியாகக் கருதி அவர்களுக்குத் தங்களுடைய ஆதரவை வழங்குவார்கள். இத்தகைய ஆட்சிப் போக்கையும் ஊடக சுதந்திர நிலைமையையும் சிறீலங்காவில் நிதர்சனமாகக் காண முடிகின்றது. இந்த வருடத்திற்கான சர்வதேச ஊடக சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விடுத்திருந்த செய்தியில் “நாங்கள் ஆட்சியில் இருந்த போதெல்லாம்  ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தோம். தகவல் அறியும் உரிமையையும் ஊடக சுதந்திரத்தைப் பேணுவதற்கும் நடவடிக்கை எடுத்தோம் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகின்றேன்” என்று தெரிவித்திருந்தார். “இந்த நாட்டின் ஊடக சுதந்திரம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விசித்திரமான காலங்களை நாம் நினைவுபடுத்தத் தேவையில்லை. நாம் ஆட்சியில் இருந்த போதெல்லாம் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தோம். முழு உலகமும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ‘தகவல்கள் பொது மக்களின் நலனுக்கானது’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படுவது மிகப் பொருத்தமானதாகும்” என்றும் அவர் கூறியிருந்தார். ‘தகவல்கள் பொதுமக்களின் நலனுக்கானது’ என்ற சர்வதேச தொனிப்பொருளை எடுத்துக் கூறியிருந்த அவருடைய அந்த ஊடக சுதந்திர தினத்துக்கான செய்தியின் மை காய்வதற்கு முன்னதாகவே ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று சட்டமா அதிபர் திணைக்களம் யாழ். நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து அந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 6 சந்தேக நபர்களையும் விடுவிப்பதற்கு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்காகக் காத்துக் கிடந்த இந்தக் கொலை வழக்கில் குற்றவியல் நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று சிறீலங்காவின் சட்டத்துறை அறிவித்திருப்பது ஊடக சுதந்திரத்தின் மீது இந்த அரசு எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த வேளை, யாழ். கச்சேரியடியின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த பகுதிக்குள்ளே தனது வீட்டில் செய்திக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த நிமலராஜன் அவருடைய வீட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவர் எழுதிக் கொண்டிருந்த பேனையும் அவர் எழுதியிருந்த வரிகளும் குருதியில் தோய்ந்தன. அவரைச் சுட்டுக் கொன்றவர்கள் அத்துடன் நிற்கவில்லை. அவருடைய வீட்டின் உள்ளே கைக்குண்டு ஒன்றை வீசி வெடிக்கச் செய்துவிட்டுச் சென்றார்கள். இந்தக் குண்டு வெடிப்பினால் நிமலராஜனின் தாய், தந்தை, மனைவி மற்றும் மருமகன் ஆகியோர் படுகாயமடைந்தனர். கொலையாளிகள் நிமலராஜனின் வீட்டிற்கு வருவதற்காகப் பயன்படுத்தியதாகக் கருதப்பட்ட துவிச்சக்கர வண்டியொன்றும் அவருடைய வீட்டருகில் கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளில் 6 பேர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கொலை வழக்கு விசாரணைகள் இழுபறி நிலையில் இருந்த நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டிருந்தது. பதினைந்து வருடங்களின் பின்னர் நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கில் குற்றவியல் நடவடிக்கையைத் தொடர முடியாது என்று தெரிவித்துள்ளதுடன், சந்தேக நபர்களை விடுவித்து 14 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல் துறையின் சட்டப்பிரிவினருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார். நிமலராஜன் மட்டுமல்ல. இந்த நாட்டின் ஊடகத் துறைக்கும் நீதித் துறைக்கும் இருண்ட யுகமாகக் கருதப்பட்ட ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் இடம்பெற்ற முக்கிய தமிழ் ஊடகவியலாளர்களான தராக்கி என்ற தர்மரத்தினம் சிவராம், நடேசன் உள்ளிட்டவர்களின் படுகொலைகள் தொடர்பிலான நீதி விசாரணைகளும் கிடப்பில் போடப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. ஊடக அடக்குமுறை தாண்டவமாடிய காரணத்தினால் நாற்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும் காணாமல் போயும் உள்ளார்கள். ஊடகவியாளர்கள் மீதான அச்சுறுத்தலினால் பல ஊடகவியலாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். அவர்கள் மீண்டும் நாடு திரும்ப முடியாத நிலைமையே நிலவுகின்றது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு தேர்தல்களில் தோல்வியைத் தழுவி பின்னர் 2019 ஆம் ஆண்டு கருத்துத் திணிப்பு மற்றும் உண்மைகளை மறைத்தல் உத்திகளைக் கொண்ட பிரசாரத்தின் மூலம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராஜபக்சக்களின் ஆட்சியில் ஊடகத்துறை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் பிரவேசித்திருப்பதாகவே ஜனநாயகவாதிகளும் ஊடக சுதந்திரத்தின் மீதும் நல்லாட்சி மீதும் பற்றுக் கொண்டுள்ளவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள். இராணுவ முனைப்புடனான சர்வாதிகார ஆட்சிப் போக்கைக் கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. அண்மையில் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன தேசத்தின் பாதகாப்பு அமைச்சர் பயணம் செய்த வாகனத் தொடரணிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக முன்னறிவித்தல் எதுவுமின்றி தலைநகர் கொழும்பின் முக்கிய வீதிச் சந்தியொன்றில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் பொறுமை இழந்து ஆத்திரமுற்ற இளைஞன் ஒருவர் தனது வாகனத்தின் ஹோர்ன் ஒலியை எழுப்பி ஆட்சேபணை தெரிவித்ததுடன், சக வாகன சாரதிகளையும் அவ்வாறே ஒலியெழுப்புமாறு கோரியதையடுத்து வாகங்களின் ஒலி அந்தப் பிரதேசத்தையே அதிரச் செய்திருந்தது இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகி பொது மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. சம்பவம் நடைபெற்று இரண்டு தினங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட அந்த இளைஞன் மீது சட்ட விரோதமாகக் கூட்டம் கூடி பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதாக காவல் துறை பேச்சாளர்  அஜித் ரோகண தெரிவித்திருந்தார். ஆனால் அந்த சம்பவம் பற்றிய காணொளியில் அந்த இளைஞனோ அல்லது தமது பயணத்தைத் தொடர்வதற்காகக் காத்து நின்ற வாகன சாரதிகளோ சட்ட விரோதமாகக் கூட்டம் கூடியதாகவோ அல்லது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு இடையூறு விளைவித்ததாகவோ காணப்படவில்லை. அவர்கள் தங்களுடைய இடங்களில் நின்றிருந்தவாறு வாகனங்களின் ஒலியை எழுப்பியதையும், இவ்வாறு வீதிகளில் முன்னறிவித்தலின்றி தடுக்கப்படுவதற்காகவோ தாங்கள் இந்த ஆட்சியாளர்களுக்கு வக்களித்தோம் என கேள்வி எழுப்பியதையுமே அந்தக் காணொளியில் காண முடிந்தது. கைது செய்யப்பட்ட அந்த இளைஞன் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் காவல் துறையினரிடமும், அரசாங்கத்திடமும் மன்னிப்பு கோரியிருந்தார். ஆனால் இவ்வாறு பொது மக்கள் அரசு மீதான தமது அதிருப்தியைத் தெரிவிப்பதற்கு வேறு எவருக்கும் அந்தவித இடையூறுமின்றி சத்தம் எழுப்புவது மக்களுடைய அடிப்படை உரிமை என்றும், அதனை ஒரு குற்றச் செயலாகக் கருதி எதிர் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் இலங்கையின் உச்ச நீதிமன்றம் 1993 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில் கூறியிருந்ததை இந்த சம்பவம் குறித்து ஆட்சேபணை வெளியிட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இதே போன்றதொரு சம்பவத்தில் தற்போதைய நாட்டின் பிரதமராகிய மகிந்த ராஜபக்சவே அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக ஊதுகுழல் ஒன்றைப் பயன்படுத்தி பலத்த ஒலி எழுப்பி போராட்டம் நடத்தியிருந்தார். அந்த வழக்கிலேயே இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. மக்கள் கோசம் என்ற பெயரிலான அந்த ‘ஒலி எழுப்பும்’ போராட்டத்தை அன்றைய எதிரணியில் இருந்த அரசியல்வாதிகளாகிய மகிந்த ராஜபக்சவே முன்னின்று நடத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே ராஜபக்சக்கள் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சுகையில் முன்னெச்சரிக்கையோ, முன்னறிவித்தலோ இன்றி ஒரு முக்கிய பிரமுகருடைய வாகனப் பேரணிக்காகப் பொது மக்களை முக்கிய வீதியில் தடுத்து நிறுத்தியமைக்காகத் தமது அதிருப்தியை ‘ஒலி எழுப்பி’ வெளிப்படுத்தியதற்காக சட்ட விரோதமாகக் கூட்டம் கூடி காவல் துறையினருக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கையானது மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அடக்கி ஒடுக்கியதையே எடுத்துக்காட்டி இருக்கின்றது. அது மட்டுமல்ல. ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கையும் சர்வாதிகார ஆட்சி முறையையுமே வெளிப்படுத்தி உள்ளது. இதன் காரணமாகவே நாடு மீண்டும் ஓர் இருண்ட யுகத்திற்குள் பிரவேசித்திருக்கின்றது என்று அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது.     https://www.ilakku.org/?p=49251
  • குருந்தூர்மலை விகாரையின் மீள்நிர்மாணம் இன்று ஆரம்பம் – இராணுவத்தினர் ஏற்பாடு    33 Views முல்லைத்தீவு – குருந்தூர்மலை தொல்லியல் பகுதியில் பௌத்த விகாரைக்கான புனர்நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன. இந்த தொடக்க நிகழ்வை தொடக்கி வைப்பதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் ஜெகத் சுமதிபால குருநதூர்மலைப் பகுதிக்கு வருகை தரவுள்ளார் என்று அறிய வருகின்றது. புனர்நிர்மாணப் பணிகளை இன்றைய தினம் ஆரம்பிப்பதற்காக நேற்றிரவு முழுவதும் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில், 29 பௌத்த பிக்குகள் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், அப்பகுதியில் நிலைகொண்டுள்ள முப்படையினர், முப்படைகளின் கட்டளையிடும் அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும், அவர்கள் குருந்தூர் மலைப் பகுதியில் பந்தல்கள் அமைத்தல்இ தோரணங்கள் கட்டுதல் எனப் பல அலங்கார வேலைகளில் நேற்று முழுவதும் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த நிகழ்வு குறித்து பொலிஸாருக்கோ அல்லது மாவட்ட நிர்வாகம், சுகாதாரப் பிரிவினருக்கோ எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்று அந்த துறைகள் சார்பில் பேசவல்லவர்கள் தெரிவித்தனர். அத்துடன், இந்நிகழ்வு முழுமையாக இராணுவத்தினராலேயே ஒழுங்குபடுத்தப்பட்டதாக உள்ளது என்று தெரியவருகின்றது. சைவ மக்களின் வழிபாட்டிடமாக காணப்பட்ட குருந்தூர்மலை பகுதியில் பௌத்த தொல்லியல்கள் உள்ளன என்று கூறி தொல்லியல் திணைக்களம், பௌத்த பிக்குகள் சிலர் அப்பகுதியை தம்வசப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆராய்ச்சிகளை பகிரங்கப்படுத்தாமலேயே, அது பௌத்த தொல்லியல் பிரதேசம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழர் தரப்பின் வரலாற்றறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்பகுதி நாகர்கால சிவன்கோயில் என்று யாழ். பல்கலைக்கழக வேந்தரும் வரலாற்றுப்பேராசிரியருமான எஸ். பத்மநாதன் கூறியிருந்தார். இந்நிலையில் நாட்டில் கொரேனா பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில், அவசர அவசரமாக குருந்தூர் மலையில் பௌத்த விகாரை புனர்நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளன. இதனிடையேஇ இந்த நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்கவோ அல்லது அங்கு செல்லவோ தமிழ் ஊடகவியலாளர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.   https://www.ilakku.org/?p=49248  
  • கல்வி அமைச்சு ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு    11 Views தொற்றுநோய் பரவலால் ஸ்தம்பிதமடைந்துள்ள பாடசாலை மாணவர்களின்  கல்வி செயற்பாடுகளுக்கு எந்தவொரு பயனுள்ள ஏற்பாடுகளையும் அரசாங்கம்  மேற் கொள்ளவில்லை என நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலாக தோல்வியுற்ற இணையவழி கல்வியை வழங்க அரசாங்கம் பல்வேறு வழிகளில் ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. “தற்போது, கல்வி அமைச்சு, மாகாண கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களின்  அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.” பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கும்வரை, ஆசிரியர்கள் தோல்வியுற்ற இணையவழி கற்றல் முறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என சுட்டிக்காட்டியுள்ள, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,  இணையவழி கல்வி தோல்வி என்பதை, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவும் ஒப்புக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். தோல்வியடைந்த திட்டமென தெரிந்தும், ஆசிரியர்களை அதனை செய்யும்படி கட்டாயப்படுத்துவது கல்வி அதிகாரிகளின் ஒரே கொள்கையாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சிரேஷ்ட தொழிற்சங்கத் ஜோசப் ஸ்டாலின், பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் வரை முறையான அட்டவணை மூலம் தொலைக்காட்சியைப் பயன்படுத்தி கல்வியை வழங்குவது ஒரு நடைமுறைத் சாத்தியமான திட்டமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். “ஊடக நிறுவனங்களின் தலைவர்களை வரவழைத்து இதற்கான திட்டத்தை வகுப்பது கல்வி அதிகாரிகளின் பொறுப்பாகும்.” கோவிட்-19 தொற்றுநோய் நாட்டில் பரவியுள்ள நிலையில், 4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களின் கல்வி ஸ்தம்பித்துள்ளதோடு, மேலும் பாடசாலைகள் காலவரையின்றி மூடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலை சுகாதார பாதுகாப்பு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவர்களுக்கு தரமான முகக்கவசங்களை வழங்குதல் உள்ளிட்ட பாடசாலைகளுக்கென ஒரு சுகாதாரத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் எனவும், எனினும், இந்த நோக்கத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய அரசாங்கம், 54.70 பில்லியன் ரூபாய் செலவில் ருவன்புர அதிவேக வீதியை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதோடு, 625 மில்லியன் ரூபாய் செலவில் 500 உடற்பயிற்சி மையங்களை அமைக்கவும் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆசிரியர் சங்கம் விமர்சித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில், இதுபோன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி செலவிடுவதற்கு முன்னர், கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது. தடுப்பூசி வழங்கலில்போது  முன்னுரிமை அளிக்க வேண்டிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு மீண்டும் பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னர் தடுப்பூசியை வழங்குவது அவசியமான விடயம் என அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது. “அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பேராதெனிய பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய கழுவி பயன்படுத்தக்கூடிய நனோ தொழில்நுட்பத்துடன் சுடிய முகக்கவசங்களை இலவசமாக வழங்குதல், பாடசாலைகளுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், பாடசாலைகளுக்கு போதுமான கிருமிநாசினிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் விடயத்தில் முன்னுரிமைளித்து செயற்பட வேண்டும், ” என லங்கை ஆசிரியர் சங்கம் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேவேளை, பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக வைத்திய நிபுணர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் புதன்கிழமை கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக, அநுராதபுரத்தில் பௌத்த பிக்குகளை சந்தித்த பின்னர், கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/?p=49262  
  • அமைச்சர்கள்... தவறு செய்தால், பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் – மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைமை செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘அமைச்சர்கள் தங்கள் துறையில் ஏதேனும் தவறு செய்தால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்.  தொகுதிக்குள் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிடவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். மிகச் சிறப்பாக செயல்பட்டு, மக்களிடம் நல்லபெயர் வாங்க வேண்டும். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த புள்ளி விபரங்களை நன்கு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1214982
  • மூன்று முறை . . . முதல் அமைச்சர் . . .    என்றும் பாராமல் . . . சொந்த கட்சியினரே . . .        
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.