வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5562 topics in this forum
-
மிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம்! - யூ டர்ன் விமர்சனம் #Uturn கண்ணாடியும் ஃப்ரெஞ்சு தாடியுமாக என்ட்ரியான அந்த இளைஞரை 'யாரு சாமி நீங்க? எங்க இருந்து வந்தீங்க?' என ஆச்சரியமாக பார்த்தது கன்னட திரைப்பட உலகம். இன்று அதே இளைஞர் தமிழில் காலெடுத்து வைத்திருக்கிறார். 'லூசியா' என்ற மேஜிக்கல் படம் கொடுத்த பவண்குமாரின் பை-லிங்குவல் படமான 'யூ'டர்ன்' நம்மையும் அப்படி கேட்க வைக்கிறதா? இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு ஆங்கில இதழில் இன்டெர்னாக சேரும் சமந்தாவுக்கு வீட்டிலிருந்து கல்யாண பிரஷர், அலுவலகத்திலிருந்து வேலை பிரஷர். தன்னை நிரூபித்தாகவேண்டிய கட்டாயத்தில் ஒரு வித்தியாச அசைன்மென்ட்டை கையிலெடுக்கிறார். வேளச்சேரி பாலம் பற்ற…
-
- 6 replies
- 1.8k views
-
-
சாதி குரூரம் பிணங்களைக்கூட விட்டுவைக்காது!" - 'மனுசங்கடா' படம் எப்படி? சாதிக்கு எதிரான முக்கியமான பதிவாக உருவாகியிருக்கிறது, தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமாரின் 'மனுசங்கடா' படம். சாதியை சிதைக்கும் சினிமாக்களின் காலம் இது. குறிப்பாக, தமிழ் சினிமாவில் சாதிக்கு எதிரான படைப்புகள் ஆர்ப்பாட்டமான வரவேற்பைக் கண்டுகொண்டிருக்கிறது. அந்த வகையில், 'மனுசங்கடா' ஒரு புது முயற்சி. ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கு ஒருமுறை தலித்துகளுக்கு எதிரான வன்முறை இங்கே நடைபெறுகிறது என்ற விபரீதத்தை, ஒரு பிணத்தை வைத்துப் பேசியிருக்கும் படம். சிதம்பரம் அருகேயுள்ள குக்கிராமம் ஒன்றிலிருந்து வந்து, சென்னையில் இருக்கும் ஸ்டீல் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறார், கோலப்பன். ஓர் இரவு, அப்பாவின் ம…
-
- 0 replies
- 448 views
-
-
கூத்தன் திரை விமர்சனம் இழந்த இடத்தை மீட்கத் துடிக்கும் நடனக் கலைஞர், இருக்கும் வீட்டை காப்பாற்றத் துடிக்கும் நடனக் கலைஞி... இந்த இருவரையும் ஒன்றிணைத்து என்ன சொல்ல வருகிறது 'கூத்தன்'. ஃபிலிம் நகரில் வாழ்ந்து வரும் 'பேட்டரி பாய்ஸ்' டான்ஸ் ட்ரூப்பின் தலைவராக, ரானா (ராஜ்குமார்). பெரிய நடிகராக வேண்டுமென்று போராடிக்கொண்டிருக்கும் இளைஞர். அம்மாவாக கலையரசி (ஊர்வசி). பெரிய நடிகையாக வேண்டுமென்ற எண்ணத்தில் சினிமாவுக்குள் வந்து, ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துக்கொண்டிருப்பவர். பல காலமாக தான் வசித்து வரும் ஃபிலிம் நகருக்கு ஆபத்து ஏற்பட, சிங்கப்பூரில் நடக்கும் டான்ஸ் போட்டியில் வென்று, அதில் வரும் பணத்தை வைத்து ஃபிலிம் நகரை விலைக்கு வாங்கிவிடலாம் என ஓவர் நைட்டில் ஒரு டஸன் டான…
-
- 0 replies
- 580 views
-
-
போர்முனையும் பேனா போராளியும் எஸ்.சுமன் ‘த சண்டே டைம்ஸ்’ என்ற இங்கிலாந்து நாளிதழின் போர்க்களச் செய்தியாளராகப் பணியாற்றிய மேரி கால்வின் ஒரு அமெரிக்கர். துணிச்சல் அவரது தனி அடையாளம். உலகத்தில் எங்கே போர் மூண்டாலும் அங்கே களமிறங்கி ரத்தமும் சதையுமாகப் போரின் அவலங்களை ஆதாரத்துடன் வெளியிடுவார். சொந்த மக்களைக் கொன்றொழிக்கும் அரசுகளின் கோர முகத்தை வெளிப்படுத்தியதற்காக அச்சுறுத்தலுக்கு ஆளானார். பரிசாக உடலில் பல காயங்களைப் பெற்றதுடன் ஒரு கண்ணையும் இழந்திருக்கிறார். கொசோவோ, செசன்யா, ஜிம்பாப்வே அரபு நாடுகள் எனத் தொடர்ந்த போர்முனைகளின் வரிசையில் அவர் இலங்கையில் செய்தி சேகரிக்கச் சென்றபோதுதான் அந்தக் கோரம…
-
- 0 replies
- 505 views
-
-
முதல் பார்வை: ஆண் தேவதை உதிரன் பெருநகர வாழ்க்கையில் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் சிக்கிய மனைவிக்கும், தேவைகளைச் சுருக்கிக்கொண்டு வாழ நினைக்கும் கணவனுக்கும் இடையே பிரச்சினை வெடித்தால் அதுவே 'ஆண் தேவதை'. மெடிக்கல் ரெப்பாக பணிபுரியும் இளங்கோ (சமுத்திரக்கனி) மாதாமாதம் இலக்கைத் தொட வேண்டி வேலையைத் துரத்திக் கொண்டே ஓடுகிறார். அவரது மனைவி ஜெஸ்ஸிகா (ரம்யா பாண்டியன்) நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை, பிள்ளைகளுக்கான நல்ல கல்வி ஆகியவற்றுக்காக ஐடி வேலையில் மிளிரத் துடிக்கிறார். இருவரும் பரபரப்பு மிகுந்த வேலையிலேயே கவனம் செலுத்துவதால் இவர்களின் இரட்டைக் குழந்தைகளானா ஆதிரா, அகர முதல்வனை யார் பார்த்துக்கொள்வது என்ற பிரச்சினை எழுகிறது. பிள்ளைகளின் நலனுக்காக வேலையை விட்ட…
-
- 0 replies
- 411 views
-
-
ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவில் சில சிறு பட்ஜெட் படங்கள் களத்தில் இறங்கத்தான் செய்கின்றன. அதிலும் நல்ல கதையுள்ள படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுவது நிச்சயம். அந்த வகையில் ராஜா ரங்குஸ்கி என பெயர் தாங்கி வந்துள்ள படம் ராஜா போல நின்று விளையாடுமா என பார்க்கலாம். கதைக்களம் ஊரில் போலிஸ் இளைஞனாக கதையின் ஹீரோ சிரிஷ். இவருக்கு பெரிதாக குடும்ப பின்னணியெல்லாம் இல்லை. வழக்கம் போல தன் காவல் ரோந்து பணிகளை செய்து வருகிறார். அவருக்கு நண்பனாக சக போலிஸ் தோழன் கல்லூரி வினோத் மட்டுமே. இடையில் ஹீரோயின் சாந்தினியை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். எழுத்துதுறைய…
-
- 2 replies
- 1k views
-
-
வெல்கம் விஜய் தேவரகொண்டா... அந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்களேன்! - நோட்டா விமர்சனம் | NOTA Movie review நடப்பு அரசியல் கூத்துகளை வைத்து ஸ்ஃபூப் படம் எடுக்கலாம். இல்லையென்றால் அரசியல் மர்மங்களை வைத்து த்ரில்லர் படம் எடுக்கலாம். ஆனந்த் ஷங்கரின் `நோட்டா' இதில் இரண்டாவது வகை. விஜய் தேவரகொண்டாவின் அறிமுகப் படம், பரபரப்பான ட்ரெய்லர் என நல்ல ஓபனிங் இருந்தது படத்துக்கு... முடிவு எப்படி இருக்கிறது? தமிழக முதல்வரான நாசர் மேல் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. தீர்ப்பு வரும்வரை முதல்வர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு. அதனால் பப், பார்ட்டி, பாரீன் எனச் சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகன் விஜய் தேவரகொண்டாவை முதல்வராக்குகிறார். அதுநாள் வரை …
-
- 0 replies
- 419 views
-
-
வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கின்றார் பாபி சிம்ஹா! தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளது. வெங்கடேஷ்குமார் இயக்கும் இந்த படத்துக்கு ‘சீறும் புலிகள்’ என்று பெயரிட்டுள்ளனர். ஸ்டுடியோ 18 பட நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. பட வெளியீடு தொடர்பாக உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பிரபாகரனின் இளம் வயது வாழ்க்கை, குடும்பம், போராளியாக அவர் மாறிய சூழ்நிலை, சிங்கள இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போர் என்று அனைத்தையும் இந்த படத்தில் காட்சிப்படுத்துகின்றனர். பெரும்பகுதி படப்பிடிப்பை காட்டுப்பகுதிகளில் நடத்துகின்றனர். இந்த படத்தில் நடிகர் பாபி சிம்ஹா தமிழீழ விடுத…
-
- 2 replies
- 942 views
-
-
இன்றைய படங்களில் ஏன் பெண் பார்ப்பதில்லை? Abilash Chandran 1993இல் வெளியான படம் “ஏர்போர்ட்”. மலையாள இயக்குநர் ஜோஷி எடுத்தது. மட்டமான அலுப்பூட்டும் படமே. ஆனால் எதேச்சையாய் அதைப் பார்த்த போது ஒரு விசயம் சிந்தனையை தூண்டியது: பெண் பார்க்கும் சடங்கு. அப்படத்தின் நாயகன் சத்யராஜ். சத்யராஜிடம் அவரது அம்மா தங்கைக்கு (அழகான சுஜித்ரா) வரன் பார்த்துள்ளதாய் சொல்கிறார். தங்கை ஊமை. அவரை பெண் பார்க்க வந்தவர்களுக்கு பிடித்து விட்டது; எத்தனையோ பேர் பார்த்து நிராகரித்த பின் இப்போது இது நடந்திருக்கிறது; ஆகையால் எப்படியாவது இத்திருமணத்தை நடத்தி விட வேண்டும். சத்யராஜ் தனக்கு விமான ஓட்டியாக பதவி உயர்வு கிடைத்ததும் நிச்சயமாய் தங்கை திருமணத்தை நடத்தி விட முடியும் என …
-
- 1 reply
- 824 views
-
-
கமல் கட்சியில், இணைந்து... செயல்படுகிறேன் - ஸ்ரீபிரியா. கமல் கட்சியில் இணைந்து செயல்படுவது ஏன் என்பது குறித்து ஸ்ரீப்ரியா விளக்கம் அளித்துள்ளார். ரஜினி அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக கூறியுள்ளார். இந்த ஆண்டுக்குள் அவர் கட்சியைத் தொடங்கிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனிடையே ரஜினிக்கு முன்பே சினிமாவுக்கு வந்ததை போல் அவருக்கு முன்பே கமல் கட்சியை தொடங்கிவிட்டார். கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியில் பாடலாசிரியர் சினேகன், நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர்நாசரின் மனைவி கமீலா நாசர் உள்ளிட்டோர் இணைந்து கட்சி பணிகளை ஆற்றி வருகின்றனர். ரஜினி, கமல் ஆகியோருடன் ஆரம்ப காலங்களில் நடித்த, ஸ்ரீப்ரியா... ரஜினியுடன் இணை…
-
- 1 reply
- 902 views
-
-
சிவாஜியின் நிறைவேறாத ‘தமிழ்த் தேசிய அரசியல்' தமிழ் திரை உலகின் அடையாளமாக கொண்டாடப்படுகிற நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91ஆவது பிறந்த நாள் இன்று. திரை உலகின் உச்சி வானைத் தொட்ட அந்த நடிப்பு சிகரம் அரசியலில் ‘வனவாசம்’தான் அனுபவிக்க நேர்ந்தது என்பது வரலாற்றின் விசித்திரம்தான். ”இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது”... இது சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம். ஆம், தமிழக அரசியலும் கூட பல விசித்திரம் நிறைந்த நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறது... இந்த விசித்திரங்களில் அதிகம் பந்தாடப்பட்டவர்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஒருவர். திரை உலகில் சிவாஜி கணேசன் கோலோச்சிய காலங்களில் கலைஞர், எம்ஜிஆர், சிவ…
-
- 0 replies
- 688 views
-
-
செக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும். அப்படி படத்திற்கு படம் எதிர்ப்பார்ப்பை எகிற வைப்பவர் தான் மணிரத்னம். அவருடைய இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது செக்கச்சிவந்த வானம். ரகுமான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருப்பார், இது நாயகன் ஸ்டைல் படம் என்று, மேலும் மணிரத்னம் புல் ஃபார்மில் உள்ளார் என்றும் தெரிவித்தார், அவரின் வார்த்தைகள் உண்மையானதா? பார்ப்போம். கதைக்களம் பிரகாஷ்ராஜ் தமிழகத்தின் மிகப்பெரும் புள்ளி, விஜய் சேதுபதி ட்ரைலரில் சொல்வது போல் மதிப்பிற்கு உரிய கிரிமினல் தான் பிரகாஷ்ராஜ்.…
-
- 4 replies
- 3.2k views
-
-
விஜய் நடித்துள்ள சர்கார்: ரஹ்மான் இசையமைப்பில் முதல் பாடல் வெளியீடு! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்தடுத்த கட்டங்களாக இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த சிம்டாங்காரன் என்கிற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சிம்டாங்காரன் எ…
-
- 5 replies
- 1.7k views
- 1 follower
-
-
இயல்பு மாறாத மலையாள சினிமா... ஓர் அறிமுகம்..! - ‘மலையாள கிளாசிக்’ - பகுதி 1 'விகதகுமாரன்' மலையாளத்தின் முதல் படம் என்று அறிய முடிகிறது. வெளிவந்த ஆண்டு 1928. ஜெ சி டானியல் இயக்குநர். அவர் ஒரு தமிழர். மலையாளிகள் அவரைப் பற்றியும் படம் எடுத்து விட்டார்கள்; பெரும்பாலானோர் பார்த்திருப்போம். பின்னர் வெளிவந்த படங்களின் பட்டியலோ வரலாறோ இந்த கட்டுரைக்கு அவசியம் இல்லாத பட்ஷம் மலையாள சினிமா பொதுவில் எவ்வாறு தோற்றம் தந்தது என்பதை பார்க்கலாம். உத்தேசப்படி, சினிமா வந்ததும் அதில் பங்கு பெறுவதற்கு கலைஞர்கள் முண்டியிருக்க மாட்டார்கள். அதனால் எல்லோருக்கும் தெரிந்த புராணக்கதைகள், நல்லத்தங்காள் போன்ற தொன்மக் கதைகள் படமாக்கப்பட்டன. படம் பிடிப்பதே பெரிய வி…
-
- 23 replies
- 19k views
-
-
``நாகேஷுக்கு மிளகு ரசம்னா உயிர்'' - சச்சு! #HBDNagesh வெடித்துச் சிரிக்க வைப்பார், கசிந்துருக வைப்பார், கண்கள் வலிக்க அழ வைப்பார், எழுந்து நடனம் ஆட வைப்பார்.... அவர்தான் நாகேஷ். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, யாராலும் தொட முடியாத நடிப்புக்குச் சொந்தக்காரர். அவருடைய பிறந்ததினம் இன்று. அவருடன் நடித்த மிகப்பெரும் பாக்கியத்தைப் பெற்ற சச்சு பேசினார் ``நாகேஷ் சார், அவரைப் பற்றிய நல்ல நல்ல நினைவுகளை என்கிட்ட கொடுத்துட்டு போயிருக்கார். அவருடைய டைமிங் வாய்ப்பே இல்ல. ஒரு நடிகரா டைரக்டர் பேப்பர்ல காண்பிக்கிற டயலாக்கை மட்டும் பேசாமல், அந்த டயலாக்குக்கு உயிர் கொடுக்குறதுதான் நாகேஷ் சாருடைய பலமே. அவருடைய வேகம் யாருக்கும் வராது. பாடிலேங்குவேஜ், டயலாக் டெலிவர…
-
- 0 replies
- 694 views
-
-
காலமெல்லாம் கண்ணதாசன்- ஆர்.சி.மதிராஜ் திரைப்பாடல்களில் எப்போதும் பட்டொளி வீசிப் பறப்பது கவியரசு கண்ணதாசன் கொடி. அவரின் நிழலில் நாம் ஆறுதல் பெறலாம். அமைதியுறலாம். காதலிக்கலாம். கண்ணீர் உகுக்கலாம். கவிஞரின் ஒவ்வொரு பாடல் வரியிலும் ஒரு கதை இருக்கும். கதைக்குள் ஒரு வாழ்க்கை இருக்கும். வாழ்க்கைக்குள் நாம் இருப்போம். நமக்காக, நம்மைப் பற்றி எழுதப்பட்டவை கண்ணதாசனின் பாடல்கள். பிறப்பு, வளர்ப்பு, சடங்கு, சம்பிரதாயம், காதல், காமம், திருமணம், சிக்கல், பிரச்சினை, வாழ்க்கை, உறவு, பிரிவு, வெறுப்பு, அமைதி, தத்துவம், மரணம் என்று அவர் தொடாத எல்லை, இல்லை! ஒரு படைப்பு, நம் ஆன்மாவைத் தொடவேண்டும். …
-
- 16 replies
- 21k views
-
-
பப்பிம்மா... இன்னும் வாழ்ந்துகொண்டே இருப்பார்! பத்மினி அ+ அ- திருவாங்கூர் சகோதரிகள் என்று அவர்களைச் சொல்லுவார்கள். கேரளாவில் பிறந்தார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவர் பிரபலம் அடைவதே பெரும்பாடு. அப்படிப் பிரபலமாவதற்கு திறமை ரொம்பவே முக்கியம். அந்த வீட்டில் உள்ள சகோதரிகள் மூவருமே, நடனத்திறமையுடன் திகழ்ந்தார்கள். நாட்டிய சகோதரிகள் என்றே அறியப்பட்டார்கள். அவர்களை எல்லோருக்கும் தெரியும். லலிதா, பத்மினி, ராகினியைத் தெரியாதவர் உண்டா என்ன? இதில் பத்மினிக்கு, கடவுள் இன்னொரு வரத்தையும் தந்திருந்தார். நாட்டியத்துடன் நடிப்பும் ஒருசேர அமைந்தது அவருக்கு. …
-
- 0 replies
- 681 views
-
-
``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும் #VikatanExclusive ``22 வருஷம் ஓடிடுச்சு. ஒருவேளை அன்னிக்கு இரவு சில்க்கை சந்திக்க நான் போயிருந்தால், அவளின் பிரச்னைக்குத் தீர்வு சொல்லியிருப்பேன். அதனால சில்க் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டிருக்கலாம். அப்படி நடக்கலை. அதனால, சில்க்கின் மரணத்துக்கு நானும் ஒரு காரணம்னு குற்ற உணர்வு இன்னைக்கு வரை எனக்கிருக்கு." சில்க் ஸ்மிதா... சினிமாவில் இவர் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. 1980, 90-களில், இவர் பெயரை உச்சரிக்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை தன் வசீகர நடிப்பாலும், நடனத்தாலும…
-
- 5 replies
- 7.1k views
-
-
ராக யாத்திரை: திசை வேறானாலும்... “இசை ஒரு எல்லையற்ற கடல். அதன் கரையினில் வியப்போடு வேடிக்கை பார்க்கும் குழந்தை நான்.” ஐன்ஸ்டைன் அறிவியலைப் பற்றிச் சொன்னதுபோல் ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ பட ஒலித்தட்டில் மோகன்லால் மலையாள நாசி ஒலியோடு ‘சங்கீதம் ஒரு அனந்த சாகரமாணு’ என இசையைப் பற்றிச் சொல்லும் வாசகங்கள் இவை. சிறு வயதிலேயே அந்தக் கடல் என்னை மிகவும் வசீகரித்திருந்தது. அதன் அலைகளில், கரைகளில் விளையாடி நனைந்து மகிழ்ந்திருந்தாலும் அக்கடலின் …
-
- 22 replies
- 12.9k views
-
-
ஷோபா - அதிசய தேவதை! ஷோபா மகாலக்ஷ்மி மாதிரிதான் அவரின் முகம் அமைந்திருந்தது. அதனால்தானோ என்னவோ மகாலக்ஷ்மி என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், அந்த மகாலக்ஷ்மி, பின்னாளில் தேவதையென நம் மனதில் இடம்பிடித்தார். அப்போது அவரின் பெயர் வேறானது. அந்தப் பெயரே... வேரென இன்றைக்கும் ஊன்றி நிற்கிறது. அந்தப் பெயர்... ஷோபா! தட்டுங்கள் திறக்கப்படும் எனும் வாசகம் ஷோபாவுக்கும் பொருந்தும். 1962ம் வருடத்தில் பிறந்தவருக்கு 1966ம் ஆண்டில், அதாவது நான்கு வயதிலேயே கதவு திறந்து கலைத்தாய் இவரை வரித்துக்கொண்டாள். தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற தமிழ்ப் படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்…
-
- 0 replies
- 602 views
-
-
‘சிறந்த சர்வதேச நடிகர்’ - மெர்சல் காட்டிய விஜய்! மெர்சல் படத்துக்காக சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருதை பெற்றுள்ளார் நடிகர் விஜய். சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு, சர்வதேச கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை 2014-ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது. நாடகம், சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. முன்னதாக, சிறந்த நடிகர் பிரிவில் `மெர்சல்' படத்தில் நடித்தற்காக விஜய் 'ஏஜென்ட்' திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, 'சைட் சிக் கேங்' நடிகர…
-
- 0 replies
- 494 views
-
-
டிஜிட்டல் மேடை 01: அரேபிய பேயும் தேசபக்தி அரசியலும் டிஜிட்டல் தொழில்நுட்பம், கட்டற்ற இணைய வேகம் இரண்டும் இணைந்து ஒரு பெரும் புரட்சியைத் தொடங்கி வைத்திருக்கின்றன. கைக்குள் அடங்கிய ஸ்மார்ட் கைபேசித் திரைகள், இந்தப் புதிய புரட்சியால் பொழுதுபோக்கு மற்றும் நவீனப் படைப்புகளின் புதிய முகத்தைத் திரையரங்குகளுக்கு வெளியேயும் விரியச் செய்திருக்கின்றன. திரைப்படங்கள், குறும்படங்கள், பலவகையான தொடர்கள், ஆவணப் படங்கள் என இந்தக் கடலில் அவரவர் ரசனைக்கு ஆசை தீர முத்துக்குளிக்கலாம். மேலும், இந்தத் தளங்கள் வாயிலாகத் தனது படைப்பை முழுச் சுதந்திரத்துடன் வெளிப்படுத்தும் உரிமையும் படைப்பாளிக்கு வாய்த்திருக்கிறது. படைப்பின் இன்னொரு முனையில் இருந்தபட…
-
- 0 replies
- 335 views
-
-
புதிய பகுதி: சி(ரி)த்ராலயா அறுபது, எழுபதுகளில் தமிழகத்தைக் கலக்கிய திரைப்பட நிறுவனங்களில் ஒன்று சித்ராலயா. அதை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். மறந்தவர்களும் கூட, அதன் தயாரிப்புகளைப் பட்டியலிட்டால் ''அட ஆமாம்..சித்ராலயா..!'' என்று பரவச நினைவுகளில் ஆழ்ந்து போவார்கள். ‘தேனிலவு’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சிருக்கும்வரை’, ‘உத்தரவின்றி உள்ளே வா’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’,'' என்று தங்களுக்குப் பிடித்த சித்ராலயா படங்களின் காட்சிகளை நினைவுபடுத்திக்கொள்வார்கள். குடும்பக்கதைகளை மட்டுமே மக்கள் விரும்புவார்கள் என்ற நிலை…
-
- 36 replies
- 10.2k views
-
-
ரஜினியை ராமாபுரத்தில் தாக்கினாரா MGR ? : நடிகை லதா மனம் திறந்த பேட்டி
-
- 0 replies
- 417 views
-
-
ரி இயக்கத்தில், விக்ரம் – த்ரிஷா நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான சாமி படம், சியான் விக்ரமுக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு, ஹரி – விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் படம் மாஸ் மசாலா படமாக மாறியுள்ளது. முதல் பாகத்தில் இருந்த கிளாஸ் நிறையவே மிஸ்சிங்! கதைக் களம்: பெருமாள் பிச்சையை ஆறுச்சாமி கொன்று 26 ஆண்டுகள் ஆன நிலையில், அவனது மூன்று மகன்கள் தந்தையை கொன்றவனை பழி வாங்க துடிக்கின்றனர். தந்தை ஆறுச்சாமியும், மகன் ராம்சாமியும் இணைந்து சமூகத்தில் விஷ பூச்சிகளாக இருக்கும் அம்மூவரையும் வேரோடு வதம் செய்வதே திரைக்கதையின் சுருக்கம். அம்மா கதாபாத்திரம் என்பதால், த்ரிஷா ’நோ’ சொல்ல ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். பிளாஷ்பேக்கில், ”கல்யாண…
-
- 0 replies
- 630 views
-