வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
சிங்கமுத்துவை தவிர தன் பழைய கூட்டத்தை அப்படியே மீண்டும் உள்ளே கொண்டு வந்துவிட்டாராம் !வடிவேலு. 'இந்திரனே... சந்திரனே...' ஜால்ராக்களும் கூடவே செட்டுக்குள் இறக்கப்பட, தெனாலிராமன் ஷுட்டிங் எங்கிலும் ஒரே ஜிங்சாக் சப்தம்தான் என்கிறார்கள். இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தை இயக்கும்போது 'பங்காளி பங்காளி' என்று வடிவேலுவும், தம்பி ராமய்யாவும் பாசத்தோடு பழகி வந்தார்கள். படம் பப்படா என்றானதும்தான் தனது சொந்த வாயை திறந்து சோக கீதம் வாசித்தார் தம்பி. 'என்னைய ஷுட்டிங் எடுக்கவே விடல என்னோட பங்காளி. அவரே ஷாட் வச்சார். அவரே டயலாக் சொல்லிக் கொடுத்தார். அவரே மானிட்டர் பக்கத்துல ஒக்கார்ந்து சரி தப்பு சொல்லிக்கிட்டு இருந்தார்' என்று இவர் சொல்ல சொல்ல, படத்தின் தோல்வி செய்தி அப்படியே வடிவேல…
-
- 0 replies
- 532 views
-
-
கோவிலுக்குள் ஷூட்டிங் - பொங்கிய பக்தர்கள் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கோவிலில் நடந்த வடிவேலு நடிக்கும் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் பட ஷூட்டிங்கால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. 1,000 ஆண்டு பழமையான இந்தக் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் வடிவேலு நாயகனாக நடிக்க, தீத்தா ஷர்மா ஜோடி போட, தம்பி ராமையா இயக்க,ஷ்ரியா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ள இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தின் ஷூட்டிங்கை இங்கு நடத்தி வருகின்றனர். இதற்காக 500க்கும் மேற்பட்ட படக்…
-
- 10 replies
- 3.7k views
-
-
பெரும் எதிர்பார்ப்புகளோடு படம் பார்க்க வந்த தன் ரசிகர்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கிவிட்டார் வைகைப் புயல் வடிவேலு. மதுரையில் சாதாரண நாடகக் கம்பெனி நடத்தும் ஆசாமி அழகப்பன் (வடிவேலு). தியாகு, மனோபாலா, அல்வா வாசு ஆகியோர் அவரது நண்பர்கள். சுமித்ரா அவருடைய தாயார். ஒரு நாள் தேவலோக சுந்தரிகளான ஊர்வசி, ரம்பை, திலோத்தமை ஆகியோர் பூமிக்கு வருகிறார்கள். சேர்ந்து வந்த மூவரில் இருவர் மட்டும் குறித்த நேரத்தில் இந்திரனுக்கு அட்டன்டென்ஸ் கொடுத்துவிட, ரம்பை மட்டும் பூலோக அழகில் மயங்கி தாமதமாகச் செல்கிறாள். கோபமான இந்திரன் சாபத்தால் ரம்பையை பூமியிலேயே கற்சிலை ஆக்கிவிடுகிறான். ஒரு நாள் அந்த சிலைக்கு மாலை போடுகிறான் அழகப்பன். அவனுடைய ஜாதகத்தில் இரட்டைப் பெண்டாட்டி என்று தோஷம் இருக…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்திரலோகத்தில் நா.அழகப்பன். இந்தப் படத்தில் வடிவேலுவின் சம்பளம் இரண்டு கோடி ரூபாயாம். புது புது இளம் நாயகிகளாகப் பார்த்து தேர்வு செய்து கடலை போடுகிறார் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து எப்போதும் பிஸியாகவே உள்ளார் வடிவேலு. அடுத்து வரப்போகும் அவரது படம் இந்திரலோகத்தில் நா.அழகப்பன். இந்தப் படத்தில் வடிவேலுவின் சம்பளம் இரண்டு கோடி ரூபாயாம். கோடம்பாக்கத்தை கலக்கும் தற்போதைய பரபரப்புச் செய்தி இந்த 2 கோடி. இதைத் தொடர்ந்து, புது புது இளம் நாயகிகளாகப் பார்த்து தேர்வு செய்து கடலை போடுகிறார் வடிவேலு. என்ன வடிவேலு, நீ இப்படி மாறிட்டே என்று பழக்கமான சீனியர் நடிகர்கள் யாராவது கேட்டால் பட்டென்று அவர் கூறும் பதில் என்ன அண்ண…
-
- 4 replies
- 1.7k views
-
-
இந்தியப் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்ற கொலையாளிகளைப் போற்றும் வகையிலான பஞ்சாபி திரைப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்திரா காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு பஞ்சாபி மொழியில், "கெளம் தே ஹீரே' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்திரா காந்தியை படுகொலை செய்த கொலையாளிகள் பேயாந்த் சிங், சத்வந்த் சிங், கேஹர் சிங் ஆகியோரைப் புகழ்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இத்திரைப்படத்தை வெளியிட்டால் நாட்டில் சட்டம்-ஒழுங்கு கடுமையாகப் பாதிக்கும் என்பதால், இத்திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கும்படி பஞ்சாப் மாநில காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம், மத்திய உள்துறை அ…
-
- 1 reply
- 371 views
-
-
இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர் சென்னை : ஓடிடி தளமான ஜீ 5ல் வெளியாகி உள்ள 'காட்மேன்' டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவிற்கு அடுத்து இப்போது வெப்சீரிஸிலும் தலைதூக்க தொடங்கி உள்ளது. சினிமாவின் அடுத்த தளம் வெப்சீரிஸ். இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னணி திரைப்பிரபலங்களும் இதில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் டிவி நிறுவனமான ஜீ டியின் ஓடிடி தளமான ஜீ5யில் 'காட்மேன்' என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர்…
-
- 0 replies
- 459 views
-
-
ஒரு மலையாளியால் தமிழனாக சிந்திக்க முடியாது என்பதனை மீண்டும் நிருபித்திருக்கிறார் சந்தோஷ் சிவன். முன்னதாக படத்தில் ஏதேனும் குறை யிருந்தால் பார்த்து விட்டு கூறுங்கள், அதனை நீக்கிக்கொள்ளலாம் என லிங்குசாமி உறுதியளித்திருந்தார். அதன் பேரில் தோழர்கள் சிலர் பார்த்தோம். ஒளீப்பதிவு, இசை, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு என சகல விஷயத்திலும் தான் ஒரு சிறந்த கலைஞன் என நிருபித்துள்ளார். ஆனால் எந்த வித புரிதலுமின்றி அம்மக்களை அனுகியிருக்கிறார். (எனக்கென்னவோ ராஜபக்ஷ தான் பணம் கொடுத்திருப்பான் என தோன்றுகிறது). அவர் எதற்காக இந்த படம் எடுத்தார், எதனை சொல்ல வந்தார் என என்னால் புரிந்துக்கொள்ள இயலவில்லை. அகதியாக ஒரு சிறுமி வருகிறாள். இந்திய அதிகாரி அவளை விசாரிக்கிறார். அவள் நடந்ததை கூறுக…
-
- 16 replies
- 4.4k views
-
-
இனம் படத்தை புறக்கணித்த அமெரிக்க தமிழர்கள் - 14 தியேட்டர்களில் 2385 டாலர்கள் மட்டுமே வசூல்! [Monday, 2014-04-07 07:44:42] சந்தோஷ்சிவன் இயக்கத்தில் வெளியான படம் இனம். இலங்கைத்தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு உலகத்தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அதோடு, தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் வலுத்ததால் திரையிட்ட நான்காவது நாளிலேயே அனைத்து தியேட்டர்களில் இருந்தும் படத்தை திரும்பப் பெற்றார் லிங்குசாமி. இருப்பினும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் இனம் படம வெளியானது. இதில் அமெரிக்காவில் 14 தியேட்டர்களில் வெளியிடபட்ட அப்படத்தை அங்கு வாழும் தமிழர்கள் புறக்கணித்து விட்டார்களாம். அதனால் அன…
-
- 0 replies
- 399 views
-
-
தமிழ் திரையுலகில் இனி அமலா அலை அடித்தாலும் ஆச்சர்யமில்லை! மைனா படத்திற்கு பிறகு முக்கியமான படங்களில் எல்லாம் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் அமலா. களவாணி பட இயக்குனர் சற்குணம் இயக்கவிருக்கிற புதுப்படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்பது தெரிந்தது. இப்போது மேலும் ஒரு முக்கியமான படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் இவர். மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில்தான் இந்த சந்தர்ப்பம். விக்ரமுக்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இன்னொரு முக்கியமான கதாபாத்தில் நடிக்க அமலாவை கேட்டாராம் விஜய். இது விக்ரமின் ஒப்புதலோடுதான் நடந்திருக்கிறது. சிந்து சமவெளி பார்த்த பின் இந்த கதாபாத்திரத்தற்கு இவர் பொருத்தம் என்றாராம் வ…
-
- 7 replies
- 1.6k views
-
-
'நான் புலம்பெயர் தமிழர் மத்தியில் வாழ்ந்தவன். 5 வருடங்கள் நோர்வே, லண்டனில் வாழ்ந்து இருக்கிறேன். போராட்டத்தில் வந்த அழிவுகளுக்கும் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் இன்று இருக்கும் நிலைமைகளுக்கும் புலம்பெயர் தமிழர்தான் நூற்றுக்கு தொன்னூற்றி ஐந்து வீதம் பதில் சொல்ல வேண்டிய உண்மை உள்ளது. அதை அசோக ஹந்தகம பயமில்லாமல் கேட்க விளைகிறார். அதை நான் ஆமோதிக்கிறேன்' என்கிறார் கிங் தேவசாந்தன். இலங்கையில் பல வெற்றிப்படங்களை தந்த புகழ்பெற்ற சகோதர மொழி இயக்குநரான அசோக ஹந்தகமவின் இயக்கத்தில் வெளியாகி பல்வேறு பாராட்டுதல்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கிறது 'இனி அவன்'. கடந்த 30 வருடகால இருண்ட சூழல் எமக்கே உரித்தான திரைப்படத்துறையை வளர்ப்பதற்கு வழிசமைத்துகொடுக்கவில்லை என்றாலும் கூட, அ…
-
- 5 replies
- 979 views
-
-
திரைப்படம் "இனி அவன்": இறுதி யுத்தத்தின் பின் யுத்த வடுக்கள் மாறாத இடங்கள் ஈழ யுத்தம் முடிந்து மூன்றரை ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனால் யுத்த வடுக்கள் மாறாத இடங்கள் மட்டுமல்ல மனிதர்களும் நடைப்பிணங்களாய் வாழும் நிலை தொடரும் சூழலில் “இனி அவன்” என்ற தமிழ் பேசும் திரைப்படம் வெளிவந்திருக்கிறது. சமுதாயம் என்ற இலங்கையில் தயாரிக்கப்பட முதல் தமிழ்த் திரைப்படத்தைத் தொடர்ந்து எழுபதுகளில் ஈழத்துத் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லக்கூடிய நிலை இருந்து, எடுத்த படங்களும் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்டு, ஆங்காங்கே எஞ்சியது என்று எண்ணிப்பார்த்தால் பத்துக்கும் குறைந்த படங்களே நம் ஈழ சினிமாவின் கதை சொல்லும். ஈழப்போராட்ட காலத்தில் நிதர்சனம் என்ற தொலைக்காட்சியை …
-
- 1 reply
- 816 views
-
-
இனி அவன் - விமர்சனம் இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான 'இனி அவன்' இம்முறை கொழும்பில் இடம்பெறும் 2012ஆம் ஆண்டுக்கான ஐரோப்பா திரைப்பட விழாவில் முதல் படமாக காண்பிக்கப்பட்டது. இது தவிர ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழா, டொரொன்டோ திரைப்பட விழா, லண்டன் திரைப்பட விழா போன்றவற்றிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமா என்ற மாயையிலிருந்து விடுபட்டு இப்படத்தினை பொறுத்தளவில் ஒப்பீடு கடந்த பார்வை எம்மவர்களை வளர்க்க உதவும். ஏனெனில் சினிமா தொழில்நுட்பங்களில் பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கையில் இவ்வாறானதொரு முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியவை என்பதை மனதில் நிறுத்த முயற்சிப்பது நன்று. இலங்கையின் மு…
-
- 0 replies
- 423 views
-
-
இனி அவன் : பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம் யமுனா ராஜேந்திரன் 07 அக்டோபர் 2012 இனி அவன் திரைப்படம் எடின்பர்க் திரைப்பட விழாவிலும் தொறான்ரோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டதனையடுத்து அப்படத்தினை அக்டோபர் இலண்டன் திரைப்பட விழாவுக்கு எதிர்பார்த்தேன். திரைப்பட்டியலி;ல் இனி அவன் இருக்கவில்லை. படத்தைப் பார்க்க வேண்டும் எனும் எனது இயல்பான அவஸ்தை எனக்கு இருந்தபடியால் எனது ஆவலை ஹந்தகமாவுக்கு மின்னஞ்சலில் தெரிவித்தேன். மின்னஞ்சல் அனுப்பப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் அதற்கு ஏற்பாடு செய்வதாக அவரிடமிருந்து பதில் வந்தது. அதற்கு அடுத்த நாள் அவரது படத்தயாரிப்பாளர் 24 மணிநேரம் பார்ப்பதற்காக மட்டும் எனக்கு ஒரு இணைப்பைப் பிரத்யேகமாக அனுப்பியிருந்தார். விமர்சனத…
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்த மே மாதத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த மாதம் நாம் ஓடிடியில் பார்த்த படங்கள் என்னென்ன? இதில் எத்தனை நாம் தியேட்டர்களுக்கு விரும்பிச் சென்று பார்க்கும் நடிகர்களின் படங்கள், எத்தனை வேற்று மொழிப்படங்கள், மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஓடிடியில் பார்க்கும்போது எப்படி இருக்கிறது, மாஸ் ஹீரோக்களின் பில்ட் அப் காட்சிகளை ஓடிடியில் பார்க்கும்போது எப்படி இருக்கிறது, இடையில் வரும் பாடல்களை ரசிக்கிறோமா, ஓடிடியில் படம் பார்க்கும்போது நம்முடைய தேர்வு கதையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா அல்லது நடிகர்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா?! இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் பட்டியிலிட்டாலே சினிமா என்னவாக மாறிக்கொண்டிருக்கிறது, இனி என்னவாக மாறும் என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம…
-
- 0 replies
- 317 views
-
-
தமிழ் திரையுலகில் விட்ட இடத்தை பிடிக்க வீறுகொண்டு எழுந்திருக்கிறார் சினேகா. ஏகப்பட்ட கிசுகிசுக்கள், கதவு தட்டாத படவாய்ப்புகள் உட்பட கடந்த வருடம் பிரச்சனைகளையே பெட்சீட்டாக போட்டு தூங்கினார் சினேகா. அதையெல்லாம் கெட்ட கனவாக மறந்துவிட்டு மீண்டும் புத்துணர்வுடன் புறப்பட்டிருக்கிறார் சினேகா. தங்கர்பச்சான் இயக்கும் 'பள்ளிக்கூடம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் சினேகா, பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய சர்வே ஒன்றில் தென்னிந்திய அளவில் அதிகமான விளம்பர படங்களில் நடிப்பது சினேகாதான் என விளம்பர ராணி பட்டம் கொடுத்து பாராட்டியுள்ளது. முன்பைவிட உடம்பை குறைத்து ஜொலி ஜொலிக்கும் சினேகாவிடம் கூடுதல் அழகின் ரகசியம் பற்றி கேட்டால் நீண்ட பட்டியலை தருகிறார். "முன…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=2] ‘களவாணி’, ‘கலகலப்பு’, ‘சில்லுனு ஒரு சந்திப்பு’ என விமலும். ஓவியாவும் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்துவிட்டதால், இருவரைப் பற்றியும் ஏககிசுகிசு.இந்நிலையில் ‘சில்லுனு ஒரு சந்திப்பு’ படத்தின் அறிமுக விழாவில் இனி ஓவியாவுடன் நடிக்க மாட்டேன் என கோபமாக சொன்னார் விமல்.[/size] [size=2] விமலின் இந்த மேடைப்பேச்சு ஒவியாவை மிகவும் காயப்படுத்திவிட்டது. தற்போது விமலுடன் நடிக்க மாட்டேன் என அறிவித்து இருக்கிறார் ஒவியா. எனக்காக எந்த நடிகரும் வாய்ப்பு தேடவில்லை.[/size] [size=2] "எனக்கு விமல் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. அதற்கான அவசியமும் இல்லை. கதைக்கு பொருத்தமாக இருப்பேன் என்று என்னை அணுகி வாய்ப்பு தருகிறார்கள். நானும் இனி விமலுடன் நடிக்கமாட்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
இனி தங்கை வேடங்களில் நடிக்க மாட்டேன். ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்றார் சரண்யா மோகன்.இதுபற்றி அவர் கூறியதாவது: யாரடி நீ மோகினி, ஜெயம் கொண்டான் படங்களில் தங்கை வேடங்களில் நடித்தேன். இப்போது உருவாகி வரும் ஆறுமுகம் படத்திலும் பரத்தின் தங்கையாக நடித்திருக்கிறேன். இப்படம் நான் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பு ஒப்புக்கொண்டது. இனிமேல் ஹீரோயினாகத்தான் நடிப்பேன். தமிழில் ஹீரோயினாக நடித்த முதல்படம் பஞ்சாமிர்தம். திரைக்கு வந்து நல்ல பெயர் பெற்று தந்தது. அடுத்து ‘அ ஆ இ ஈ’ படத்தில் நடித்தேன். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஈரம், வெண்ணிலா கபடி குழு படங்களில் ஹீரோயினாக நடிக்கிறேன். இரண்டுமே இரு மாறுபட்ட கதைக்களம். வெண்ணிலா கபடி குழு கிராமத்து பின்னணியில் உருவாகிறது. கல…
-
- 1 reply
- 1.5k views
-
-
பொங்கலுக்கு திரைக்கு வந்த அனைத்துப் படங்களுமே திருப்திகரமான வசூலைத் தரவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. பொங்கலுக்கு விக்ரமின் பீமா, பரத்தின் பழனி, சிம்புவின் காளை, மாதவனின் வாழ்த்துகள், சேரனின் பிரிவோம் சந்திப்போம், அசோக்கின் பிடிச்சிருக்கு ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. ஆனால் ஆறு படங்களுமே வசூலில் சரிவர இல்லை என்று விநியோகஸ்தர்கள் ஏமாற்றமாக உள்ளனராம். குறிப்பாக பீமா, காளை ஆகிய படங்களை வாங்கிய விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றத்தையும், நஷ்டத்தையும் சந்தித்துள்ளனராம். விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள பீமா, பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே திரைக்கு வந்தது. படத்தைப் பொறுத்தவரை விக்ரம்தான் படு பிரஷ்ஷாக இருக்கிறார். ஆனால் கதையில் எந்தப் புதுமையும் இல்ைல என்று பேச்சு நிலவுகிற…
-
- 2 replies
- 1.3k views
-
-
இனிது இனிது- திரைவிமர்சனம் விரலும் விரலும் உரசிக்கொள்வதையே ஒரு திருவிழாவாக்கி ஆயிரம் தாமரை மொட்டுகளை மலரச்செய்த அந்தகால காதல் போயே போச்! கட்டிப்பிடிச்சுப்போம்… இது நட்பு. விட்டு விலகிப்போம்… இது காதல்னு சொல்ற 2010 ன் ‘நொடி முள்’ லவ்தான் இனிது இனிது. ஒரு என்ஜினியரிங் கல்லு£ரியில் சேரும் முதலாண்டு மாணவ மாணவிகளுக்குள் முகிழ்க்கிற காதலும், அதற்கு மூன்றாமாண்டு மாணவர்கள் செய்கிற இடையூறும்தான் முழுநீள படம். அதை சொல்லியிருக்கிற விதம் இருக்கிறதே, அறுபதை தாண்டியவர்களை கூட ஃபுட் போட்டில் நின்றாவது ஒரு முறை பிளாஷ்பேக் அடிக்க வைக்கும்! ஆதித், ரேஷ்மி இருவருக்கும் நடுவே துளிர்க்கிற நட்பு அதையும் தாண்டி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிற நேரத்தில் ஆதித்துக்கு அவசரம். ‘…
-
- 2 replies
- 990 views
-
-
[size=3]'அது ஒரு கனாக்காலம்' படத்திற்கு பிறகு பாலுமகேந்திரா இயக்கி வரும் புதிய படத்திற்கு 'தலைமுறைகள்' என்று பெயரிட்டு இருக்கிறார்.[/size] [size=3]'தலைமுறைகள்' பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கும் தனது ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாவுடன் மீண்டும் இணைகிறார் பாலு மகேந்திரா.[/size] [size=3]இப்படத்தில் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார். அவரைத் தவிர பெரும்பாலான பாத்திரங்களுக்கு புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளாராம் பாலு மகேந்திரா.[/size] [size=3]இது குறித்து பாலுமகேந்திரா தனது வலைப்பூவில் "மூடுபனியில் தொடங்கி அது ஒரு கனாக்காலம் வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர்.[/size] [size=3]நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சசிகுமார் தயாரிப்பில் இ…
-
- 0 replies
- 791 views
-
-
பீமா படத்தில் நான் சாவது போல நடித்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. எனவே இனிமேல் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் திரிஷா. சீயான் விக்ரமும், திரிஷாவும் நடித்த பீமா படத்தில், திரிஷாவை சுட்டுக் கொல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இது அவரது ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும், தோழியருக்கும், நட்பு வட்டாரத்திற்கும் பெரும் அதிருப்தியைக் கொடுத்து விட்டதாம். இப்படியெல்லாமா நடிக்க சம்மதிப்பது, இனிமேல் இதுபோல நடிக்கக் கூடாது என்று அனைவரும் திரிஷாவை வலியுறுத்தினார்களாம். குறிப்பாக அவரது அம்மா உமாவுக்கு திரிஷாவின் இறப்புக் காட்சியைப் பார்த்து அழுகையே வந்து விட்டதாம். இதனால் இனிமேல் இறப்பது போன்ற காட்சியில் நடிப்பதில்லை என்ற முடிவுக்க…
-
- 9 replies
- 1.9k views
-
-
சமீபத்தில் வெளிவந்த 'கோமாளி' படத்தின் டிரெய்லர் பல்வேறு விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, டிரெய்லரின் இறுதியில் இடம்பெற்றிருந்த ரஜினிகாந்த்தின் அரசியல் வருகையை கலாய்க்கும் காட்சிக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகளும் கிளம்பின. தமிழ்நாட்டில் மட்டுமில்லை, ஒட்டுமொத்த உலகத்திலும் எவர்கிரீன் டாப்பிக்காக இருப்பது 90'ஸ் குழந்தைகளின் வாழ்வியல். அதைத் தூண்டும் வகையான ஏதோவொரு நினைவுகளைக் கடக்கும்போது மொத்த 90'ஸ் நினைவுகளும் மின்னலென வெட்டிச் செல்லும். ஸ்கூலில் ஆரம்பித்து 90'ஸ் நினைவுகளைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. அப்போதிருந்த சூழல், தற்போது அப்படியே நேரெதிராக மாறிவிட்டது. முக்கியமாக வளர்ந்த சூழலும், டெக்னாலஜியும் அசுர வேகத்தில் வளர்ந்துவிட்டன. அப்படியான …
-
- 0 replies
- 322 views
-
-
இனிமேல் பாட மாட்டேன் : பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு மைசூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா, இசை மேடைகளில் தான் பாடப் போவதில்லை என்று பிரபல பின்னணி பாடகி ஜானகி மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் நெஞ்சை விட்டு அகலாத பல இனிமையான பாடல்களை பாடியவர், எஸ். ஜானகி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரை இசை பாடல்கள் பாடி பிரபலமானவர். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். ஆனால் நெருங்கியவர்களின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் சினிமாவில் பாடினார். கடந்த ஆண்டு 10 கல்பனைகள் என்ற மலையாள படத்திலும் …
-
- 0 replies
- 260 views
-
-
விஜய், நயன்தாரா நடிப்பில் பிரபு தேவா இயக்கியுள்ள படம் வில்லு. இந்தியில் ட்டான சோல்ஜர் படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சி டியூப் தமிழ் என்ற வெப்சைட்டில் வெளியாகியுள்ளது. இதில் வில்லன் கூட்டத்தாருடன் விஜய் மோதுவது போன்ற சண்டைக் காட்சி இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்த வில்லு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படப்பிடிப்பு முடியாத நிலையில் சண்டைக் காட்சி எப்படி இன்டர்நெட்டில் வெளியானது என படக்குழு குழப்பத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ரஜினியின் சிவாஜி படத்தின் மூன்று பாடல்கள் இதே போல இன்டர்நெட்டில் வெளியானது. சில மாதங்களுக்கு முன் வாரணம் ஆயிரம் படத்தின் இரண்டு பாடல…
-
- 0 replies
- 1.5k views
-
-
மேக்-அப் மேனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியாமணி! சினிமாவில் நடிக்க வந்த காலத்திலிருந்து தனக்கு சரியான பிரேக் கிடைக்கவில்லை என்பதில் வருத்தமாக இருந்த பிரியாமணிக்கு பருத்திவீரன் படம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. வழக்கமாக ஒரு படத்துக்கு அதிகபட்சம் இருபது நாள் தான் கால்ஷீட் கொடுப்பார். ஆனால் இந்தப் படத்துக்கு கிட்டத்தட்ட நூறு நாள் வரை கால்ஷீட் கொடுத்திருந்தார். இதனால் டென்ஷனான பிரியாமணிக்கு அப்போது ஆறுதல் சொன்னவர் படத்தின் மேக் அப் மேன் ஹரி. இந்தப் படம் உங்களுக்கு மிகப்பெரிய பேர் வாங்கித் தரும்... கவலைப்படாதீங்க என்று சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே அப்படி நடந்தால் உங்களுக்கு தங்கத்தில் செயின் வாங்கி போடுகிறேன் என்று சொன்னாராம். அதன் பிறகு …
-
- 2 replies
- 1.6k views
-