Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ”எனக்கு எல்லாமே நல்ல‘மாரி’ நடக்குது !” தியேட்டர் வட்டாரங்களில் 'மாரி’ ஜுரம் எகிறிக்கொண்டிருக்கும்போது, அந்த கெட்டப் கலைத்து, இயக்குநர் பிரபு சாலமன் படத்துக்காக வேற மாரி இருந்தார் தனுஷ். ''ஆக்ச்சுவலா 'மாரி’க்காக வேற கெட்டப்தான் ஐடியா. ஆனா, அதுக்குத் தேவைப்பட்ட தாடி, மீசையோடு குறிப்பிட்ட நேரத்துக்குள் தயாராக முடியலை. அதான் இருக்கிறதுல என்ன பண்ணலாம்னு யோசிச்சு இந்த கெட்டப் பிடிச்சோம். நாங்க எதிர்பார்த்ததைவிட சூப்பர் ஸ்பெஷலா அமைஞ்சிருச்சு. ஒரு புராஜெக்ட் நல்லா வரணும்னா, எல்லாமும் நல்லா அமையணும்னு சொல்வாங்க. அப்படி 'மாரி’க்கு எல்லாமே அமைஞ்சிருக்கு'' - நெஞ்சில் கைவைத்துச் சொல்கிறார் தனுஷ். அவரிடம் ஒரு தடதட பேட்டி... '' 'எட்டு வருஷத்துக்கு முன்ன நடந்ததாச் சொல்றாங்க சார்…

  2. காவியத் தன்மை கொண்ட கதைகளை, பிரம்மாண்டமான திரைப்படங்களாக இந்தியா வாலும் தயாரிக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறது எஸ்.எஸ்.ராஜ மவுலியின் இயக்கத்தில் வந்திருக்கும் பாகுபலி. பல இந்தியக் காவியங்களில் கையா ளப்படும் அரியணைக்கான போட்டியும், உறவுகளை வீழ்த்தும் ரத்தக் கறை படிந்த துரோகப் பக்கங்களும்தான் பாகுபலியின் கதை. பிரம்மாண்டமான மலை, காட்டருவி, காட்டருவியைத் தாண்டினால் மகிழ்மதி ராஜ்ஜியம், அங்கே 25 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசி தேவசேனா என, பழைய அடிமைப் பெண் படத்தின் கதையை ஞாபகப்படுத்தும் கதை. மகாராணி சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) ஒரு கைக்குழந்தையைக் காப்பாற்றிவிட்டு மரணமடையும் காட்சி யுடன் தொடங்குகிறது படம். மலைப்பகுதி மக்களில் ஒருவரான ரோகிணியால் வளர்க்கப்படும் குழந்தை சிவா…

  3. விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘மிஷன் இம்பாசிபிள் 5’ என்ற ஹாலிவுட் படத்திற்காக மரணத்தை பரிசளிக்கக்கூடிய காட்சியில் விமானத்திலிருந்து தொங்கியபடி நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் டாம் குரூஸ். தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் டாம் குரூஸ் விமானத்தில் தொங்கியபடி பறப்பதற்கு தயாராகும் காட்சிகளும், அது பற்றி சண்டைப் பயிற்சி கலைஞர்கள் அளித்த பேட்டிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவின் இறுதியில் மிக சிரமத்திற்கு இடையில் டாம் குரூஸ் விமானத்தில் தொங்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுவரை வந்துள்ள மிஷன் இம்பாசிபிள் படங்களின் 4 பாகங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில் வரும் ஜூலை 31 அன்று வெளிவரும் இதன் 5-ம் பாகத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. - See …

    • 0 replies
    • 360 views
  4. (2006ல் எழுதியது) 1991ல் எச் எம் வி இசை நிறுவனம் 'லெஜென்ட்ஸ்' என்ற தலைப்பில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசைத்தொகையொன்றை வெளியிட்டது. அதற்கு ஒரு தொலைக்காட்சி விளம்பரம் தயாரிக்கும் வேலை எனக்கு அளிக்கப்பட்டது. எம் எஸ் விஸ்வநாதனின் பேட்டித்துணுக்குகளும் அதில் இடம்பெற்றன. விஸ்வநாதனை நேரில் சந்திக்கும் அனுபவத்தைப்பற்றிய உள்ளக்கிளர்ச்சியுடன் நான் சென்னை சாந்தோம் ஹைரோடில் இருந்த அவரது இல்லத்துக்கு ஒளிப்பதிவுக்குழுவுடன் விரைந்தேன். நிச்சயிக்கபப்ட்ட நேரத்துக்கு முன்பே அவர் படப்பிடிப்புக்குத் தயாராக இருந்தார், வெள்ளையும் வெள்ளையும் உடையும் அவருடன் எபோதுமே இருக்கும் அந்த ஆர்மோனியமுமாக. மறக்கமுடியாத எத்தனையோ பாடல்களை உருவாக்கியவர்... இந்தியாவின் இணையற்ற இசைமேதைகளில் ஒருவர்... என் கண்ம…

  5. இந்திய பெண்ணை நேசிக்கும் பிரெட்லீயின் காதல் வெற்றி பெற்றதா? - 'அன் இந்தியன்' டிரெய்லர் ! பிரபல ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சளார் பிரெட் லீ 'அன் இந்தியன்' என்ற படத்தில், இந்திய பெண்ணை காதலிக்கும் வேடத்தில் நடித்து கலக்கியிருக்கிறார். காதல், காமெடி என பிரெட்லீ பின்னி எடுத்திருக்கிறார். 'அன் இந்தியன்' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா வம்சாவளி இயக்குநர் அனுபம் சர்மா இயக்கத்தில் இந்த படம் தயாராகியுள்ளது. வரும் அக்டேபர் 15ஆம் தேதி 'அன் இந்தியன்' படம் வெளியாகிறது. http://www.vikatan.com/news/article.php?aid=49409

  6. பூட்டப்பட்ட கழுத்துச் சங்கிலியோடு ஒரு பூர்வகுடியின மனிதன் நடத்திச் செல்லப்படும் The Tracker எனும் ஆஸ்திரேலிய நாட்டுத் திரைப்படத்தின் ஆரம்பமே நம்மை அச்சுறுத்துகிறது. இந்த முதல் காட்சி இது ஒரு மாறுபட்ட சினிமா என்பதை நமக்குக் காட்டிவிடுகிறது. ஆஸ்திரேலிய பாலைவன பொட்டல்காடுதான் படத்தின் களம். ஏகாதிபத்திய காகசிய (whites) இனத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மூவர் ஆளுக்கொரு குதிரையில் வருகின்றனர். முதல் குதிரையில் வரும் போலீஸ் உயரதிகாரியின் கையில் பூர்வகுடி வழிகாட்டியின் கழுத்தில் கட்டப்பட்ட சங்கிலியின் மறுமுனை. உயர் போலீஸ் அதிகாரி அடிக்கடி துப்பாக்கியெடுத்து அவனை உருட்டி மிரட்டுகிறார். அவருக்குப் பின்னால் இரண்டு குதிரைகளிலும் இரண்டு இளம் போலீஸ்காரர்கள். வழிகாட்டிச் செல்லும் பூ…

    • 0 replies
    • 217 views
  7. எம்.எஸ்.வி. உடல்நிலையில் முன்னேற்றம்.. ஒரு வாரத்தில் வீடு திரும்புவார்! - மகன் பேட்டி. சென்னை: இன்னும் ஒரு வாரத்தில் அப்பா நலமுடன் வீடு திரும்புவார் என அவரது மகன் கோபி தெரிவித்தார். மூத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் சில நாட்களுக்கு முன்பு திடீர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். உடனடியாக அவர், சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். சிகிச்சைக்குப்பின், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜா ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உடல் நலம் விசாரித்ததுடன், அவருக்கு தன் கையால் சாப்பாடு ஊட்டியும் விட்டார். பி வாசு, சிவகுமார் உள்ளிட்ட திரையுலகினர் …

  8. நேற்று வந்த நடிகர் சூர்யா கூட "அகரம் அறக்கட்டளை" தொடங்கி......... ரஜினி என்னும் மகா அரசியல்வாதி : 2014- ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன். சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது. உங்களை பற்றி பேசினாலும் ஹிட். ஏசினாலும் ஹிட் என்ற கணக்கில் இந்த கடிதத்தை நான் நிச்சியமாக எழுதவில்லை. உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும் இல்லை. ஏனென்றால், ஓவர் ஆக்டிங் இல்லாமல், கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில் தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து. "ஆறிலிருந்து அறுபது வரை", "ஜானி" போன்ற படங்களில் உங்களது நடிப்பை பார்த்து விய…

  9. பக்தர்கள் பாவத்தைத் தலைமுழுகத் தாமிரபரணியைத் தேடிவரும் ஊர் பாபநாசம். அங்கே குடும்பத்துடன் வசிக்கிறார் சுயம்புலிங்கம் (கமல்). கேபிள் டி.வி தொழில் செய்கிறார். நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் நடைமுறை அறிவு மிக்கவர். சினிமாவின் மீதான அவரது அதீத மான காதல் அவருக்குப் பல விஷ யங்களைச் சொல்லிக்கொடுத்திருக் கிறது. மனைவி ராணி (கவுதமி), மகள்கள் செல்வி (நிவேதா தாமஸ்), மீனா (எஸ்தர் அனில்) ஆகியோர்தான் அவரது உலகம். நிலையான தொழில், திகட்டத் திகட்ட அன்பு என்று அமைதி யாக நகரும் இந்தக் குடும்பத்தின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது ஒரு சம்பவம். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் சுயம்புலிங்கம், பயந்து நடுங் கியபடி அழுதுகொண்டிருக்கும் மனைவி, குழந்தைகளைப் பார்த்து அதிர்ந்து போக…

  10. "பாகுபலி" வெற்றிக்காக, தியேட்டர் வாசலில் ஆடு பலி கொடுத்த ரசிகர். ஹைதராபாத்: பாகுபலி படம் வெற்றி பெற வேண்டி ஹைதராபாத் அருகே உள்ள தியேட்டர் வாசலில் ரசிகர் ஒருவர் ஆடு ஒன்றை பலி கொடுத்துள்ளார். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பாகுபலி படம் இன்று உலகம் முழுவதும் தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளில் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் மற்றும் வெளிநாடுகளிலும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. பாகுபலி டிக்கெட் வாங்க ரசிகர்கள் முந்தியடிக்கிறார்கள். ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பை பார்த்து பாகுபாலி படக்குழுவினர் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் செய்த செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைத…

  11. 'பாகுபலி' ரிலீஸையொட்டி கல்லூரிக்கு விடுமுறை விடுங்கள், இல்லாவிட்டாலும் வரமாட்டோம்: பி.இ. மாணவர்கள். ஹைதராபாத்: பாகுபலி படம் ரிலீஸாவதையொட்டி ஜூலை 10ம் தேதி அன்று விடுமுறை விடக் கோரி தெலுங்கானாவைச் சேர்ந்த என்ஜினியரிங் மாணவர்கள் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் மெட்சல், ஹைதராபாத்தில் உள்ள சிஎம்ஆர்ஐடி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் முதல்வருக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது, மதிப்பிற்குரிய ஐயா, சிஎம்ஆர்ஐடி கல்லூரியில் உள்ள சிஎஸ்இ டிபார்ட்மென்ட்டைச் சேர்ந்த மாணவர்கள…

  12. திருமண உறவை இன்னும் நம்புகிறீர்களா? திரிஷாவுக்கும் பட அதிபர் வருண்மணியனுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி பிறகு அது முறிந்தது. இருவரும் பிரிந்து விட்டனர். திரிஷா தற்போது சினிமாவில் பிசியாக உள்ளார். திரிஷா அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி: திருமணம் முறிந்தால் நிறையபேர் ஓய்ந்து போவது உண்டு. நீங்களோ பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். வாழ்க்கையை இப்போது எப்படி பார்க்கிறீர்கள்? பதில்: இது போன்ற சூழலில் பலரும் உடைந்து போவது உண்மைதான். ஆனால் என்னை எளிதில் இவை பாதிப்படைய செய்யாது. நான் எல்லா விஷயங்களிலும் ‘பாசிட்டிவ்’ ஆக இருக்கிறேன். எனது வாழ்வின் முடிவு களை மனமும் இதயமும் சேர்ந்தே எடுக்கின்றன. நான் எனது குடும்பத்தினருடன் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன். அவர்கள…

  13. விஜய் டிவியில் டிடி இல்லை: வெளியேறினாரா... வெளியேற்றப்பட்டரா? சென்னை: விஜய் தொலைக்காட்சியில் இருந்து நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்டவர் தொகுப்பாளினி டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் காபி வித் டிடி' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம். இந்த நிலையில், அண்மையில் விஜய் தொலைக்காட்சி நடிகர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தியது. இந்த விழாவில் கோபிநாத், திவ்யதர்ஷினி ஆகியோர் தொகுப்பாளர்களாக இருந்தனர். அப்போது, திவ்யதர்ஷினி நிகழ்ச்சியை சொதப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில…

    • 27 replies
    • 4.2k views
  14. முத்தக் காட்சியில், முக்கி... முக்கி.... 36 டேக் - ”டி.இ.என்” டீம் காதில் புகை வரவைத்த ஜி.வி.பிரகாஷ்! சென்னை: முத்தக் காட்சி ஒன்றில் நடிக்க திரும்பத் திரும்ப டேக் வாங்கி படக்குழுவினர் அனைவரது காதிலும் புகையை வரவழைத்துள்ளார் இசையமைப்பாளராக இருந்து நடிகர் ஆகியுள்ள ஜி.வி.பிரகாஷ். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் "டார்லிங்" படத்திற்கு பின்னர் தற்போது நாயகனாக நடித்துவரும் படம் "திரிஷா இல்லைன்னா நயன்தாரா". ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் நாயகிகளாக நடித்து வருகின்றனர். மேலும்,முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரனும், சிறப்பு தோற்றத்தில் ஆர்யா மற்றும் நடிகை பிரியா ஆனந்தும் நடிக்கின்றனர். இப்படத்தின் முக்கிய காட்சிக்காக மனிஷா யாதவுடன் லிப் டூ லிப் மு…

  15. ‘‘எழுதும் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு ரோல் இருக்கிறது. அதை மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற முயற்சியைத்தான் ஒவ்வொரு பாடல் எழுதும்போதும் செய்துவருகிறேன்’’ என்கிறார், பாடலாசிரியர் மதன் கார்க்கி. ‘பாகுபலி’ படத்துக்குப் பாடல்கள் மற்றும் வசனம் எழுதுவதை முடித்த கையோடு பாரதிராஜா நடித்து இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு வசனம் எழுதும் வேலையைத் தொடங்கியிருக்கிறார். பாடல்கள், வசனம் ஆகியவற்றைத் தாண்டிக் கதை விவாதம், கணினி வழி மொழி ஆளுமை என்று எப்போதும் பிஸியாக இருப்பவரை ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்காகச் சந்தித்தோம். ‘பாகுபலி’ படத்தில் பங்களிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது? ‘நான் ஈ’ படத்துக்குப் பாடல்கள் எழுதினேன். அப்போது தெலுங்குப் பாடல்களைவிடத் தமிழ்ப் பாடல்கள் நன்றாக இருப்பதாகக் கூ…

    • 3 replies
    • 700 views
  16. கால இயந்திரம் வழியாக ஒரு பெண், தான் பிறந்த அந்த நாளுக்குப் போகிறாள். பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருக்கும் தன் தாயை மருத்துவமனையில் சேர்த்து, அங்கு பிறக்கும் தன்னையே செவிலியரிடம் இருந்து வாங்கி உச்சிமுகர்கிறாள். ‘இன்று நேற்று நாளை’ படத்தில் இப்படியொரு காட்சி. இந்த வியப்பை படம் முழுவதும் தருகிறார் அறிமுக இயக்குநர் ரவிகுமார். கால இயந்திரத்தின் வழியே கடந்த காலத்திலும் எதிர்காலத் திலும் பயணம் என்னும் சிக்கலான களத்தில் சரளமாக விளையாடுகிறார். யாரிடமும் வேலை பார்க்காமல் சொந்தத் தொழில் செய்து முன்னுக்கு வர நினைப்பவர் விஷ்ணு விஷால். அதற்காகப் புதிய புதிய திட்டங்களுடன் கடனுக்காக வங்கிகளின் படியேறி ‘பல்பு’ வாங்கிக்கொண்டிருப்பவர். அவரது நண்பர் கருணா, ராசியில்லாத ஜோசியர். விஷ்ணு…

    • 0 replies
    • 408 views
  17. எம்.ஜி.ஆரை நெகிழ வைத்த சாண்டோ சின்னப்ப தேவர்! ( நூற்றாண்டு விழா சிறப்பு பதிவு) நடிகர்கள் சம்பளப் பிரச்னை, வெளியீட்டில் தாமதம், நடிகர்கள் ஆதிக்கம் என பற்பல பிரச்னைகளில் திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தயாரிப்பாளர் 4 முழ வேட்டியுடனும், சட்டை போடாத வெற்று உடம்போடும் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தார் என்பதும், பரபரப்பான அந்த கதாநாயகர்கள் அவருடைய படங்களில் நடிக்கும்போது பெட்டிப்பாம்பாய் நடந்து கொண்டார்கள் என்பதும் இப்போது வியப்புக்குரிய ஒன்றாக உள்ளது. அரைகுறை ஆங்கிலத்தோடும் அடித்துவீசும் வார்த்தைகளோடும் அத்தனை நடிகர்களையும் கையாண்ட அவர் - சாண்டோ சின்னப்ப தேவர். கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேத…

  18. முகநூலில் இருந்து நடிகர் சிவகுமார் திடீர் விலகல்! சென்னை: சிலர் சாதி பற்றிய கருத்து பரிமாற்றத்தை முன்வைத்ததால், முகநூலில் (ஃபேஸ் புக்) இருந்து விலகுவதாக நடிகர் சிவகுமார் அறிவித்துள்ளார். நடிகர் சிவகுமார், தனது முகநூலில் தந்தை பெரியார், ஜான்சி ராணி, வேலுநாச்சியார், முத்துவடுகநாதன், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா ஆகியோரை பற்றி தொடர்ந்து எழுதி வந்தார். இதை தொடர்ந்து தீரன் சின்னமலை பற்றி சமீபத்தில் அவர் எழுதினார். இதைத் தொடர்ந்து, அவரது முகநூலில் சாதி பற்றிய கருத்துக்களை சிலர் பரிமாறியதோடு நிற்காமல், ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் வகையிலான வார்த்தைகளையும் வெளியிட்டார்கள். இதைத் தொடர்ந்து, முகநூல் கணக்கில் இருந்து நடிகர் சிவகுமார் விலகிக்கொள்வதாக தெரிவித்து உள்ளார…

  19. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக் (ஜெயம் ரவி) ஜிம் பயிற்சியாளர். பணக்காரனைக் காதலித்து வசதியாக வாழவேண்டும் என்று நினைக்கும் விமானப் பணிப்பெண் ஐஸ்வர்யா (ஹன்சிகா). பணக்காரர் என்று நினைத்து கார்த்திக்கை காதலிக்கிறார். உண்மை தெரியும்போது பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகி, காதலை முறித்துக்கொள்கிறார். உண்மையாகக் காதலித்த கார்த்திக்கால் அதுபோல உதறித் தள்ள முடியவில்லை. ஐஸ்வர்யா எதிர்பார்த்ததுபோல பணக்காரத் தொழிலதிபர் அர்ஜுனுடன் (வம்சி கிருஷ்ணா) அவருக்கு திருமணம் நிச்சயமாகிறது. தன் காதலை இழக்க விரும்பாத கார்த்திக், காதலியை மீட்க வித்தியாசமான உத்தியைக் கையாள்கிறார். அது அவருக்கு கைகொடுத்ததா, இல்லையா என்பது படத்தின் கதை. காதலை முடிவு செய்வதில் பணம், அந்தஸ்துக்கு பங்கிருக்கிற…

  20. தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்த சினேகா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு பெரியளவில் நடிக்காமல் இருந்த சினேகா தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இவருக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் வளைகாப்பு நடைபெற்றது. நடிகர்கள் நரேன், சிபிராஜ், நடிகைகள் மீனா, சங்கீதா, பிரிதா ஹரி மற்றும் பல பிரபலங்களும் கலந்து கொண்டு பிரசன்னா- சினேகா ஜோடியை வாழ்த்தி சென்றனர். http://www.virakesari.lk/

  21. கமல் சார் வணக்கம்...! மீடியா என்னும் அசுரனின் வளர்ச்சியை பல வருடங்களுக்கு முன்பே கண்டுகொண்ட நடிப்பின் அசுரன் நீங்கள். எனவே, இந்த கடிதம் உங்களை வந்து சேரும் என நம்புகிறேன், வந்து சேராமலும் போகலாம்... இந்த பதிவை படிக்கும் உங்களின் ரசிகர்கள் பாதியிலேயே இந்த பதிவை படிப்பதை நிறுத்தலாம்... ஆனாலும், நான் நினைத்ததை பதிவு செய்ய நினைக்கிறேன்.. ஈரோடு பாரதி தியேட்டரில் 'அபூர்வ சகோதரர்கள்' படத்திற்காக இரண்டடி அகலமுள்ள டிக்கெட் கவுண்டரில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மூச்சு முட்ட காத்திருந்து, வேர்வையில் நனைந்து, கசங்கிய ஆடையுடன் அந்த படத்தை பார்த்தபோதும் தங்களின் மீதான ஆச்சரியம் குறையவில்லை ஈரோடு ஆனூர் தியேட்டரில் பெண்களைப்போல் கண்ணீர் சிந்தியபடி 'மகாநதி' படத்தை பார்த்தபோதும் தங்கள…

  22. சினிமாவால் கண்டங்கள் தாண்டிய நட்புக்கு சாத்தியமுண்டு என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம்தான் ஆலனும் இசாக்கும். யார் இவர்கள்? ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் உகாண்டா நாட்டில் கிடைத்த பொருட்களை வைத்து மிக எளிமையாக குறும்படங்களின் தரத்தில் சினிமாக்கள் எடுப்பவர்தான் இசாக் நப்வானா. இணையத்தில் இவரின் உகாண்டா சினிமாக்களை ‘வகாலிவுட்’ சினிமாக்கள் என்று அழைக்கிறார்கள். காரணம் அவர் வசிக்கும் இடத்துக்குப் பெயர் வகாலிகா. மிக மிக சொற்பச் செலவில் இவர் எடுக்கும் படங்கள் இப்போது இணையத்தில் அதிகம் ஷேர் ஆகின்றன. இசாக்கின் வீட்டையே ‘ராமோன் ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் ஸ்டுடியோவாக்கி, கிடைத்த பழைய கம்ப்யூட்டர் உதிரிபாகங்களை வைத்து எடிட்டிங் டெஸ்க் உருவாக்கி, கேமராக்களை வாடகைக்கு எடுத்து த…

    • 0 replies
    • 497 views
  23. சென்னையின் குப்பம் ஒன்றில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தின் இளைய பிள்ளை ‘சின்ன காக்கா முட்டை’ (ரமேஷ்), மூத்த பிள்ளை ‘பெரிய காக்கா முட்டை’ (விக்னேஷ்). அப்பா ஏதோ குற்றத்துக்காகச் சிறை யில் இருக்கிறார். அவரை மீட்டு வரப் போராடுகிறார் அவர்களுடைய அம்மா (ஐஸ்வர்யா). ஒத்தாசையாக இருக்கிறார் பாட்டி (சாந்திமணி). சிறு வர்கள் இருவரும் தண்டவாளங்களின் ஓரங்களில் தவறி விழும் நிலக்கரியைப் பொறுக்கி விற்று ஐந்தோ பத்தோ சம்பாதிக்கிறார்கள். இவர்களது குப் பத்துக்கு அருகே புதிதாக பீட்சா ஹட் ஒன்று உதயமாகிறது. டிவி விளம் பரம் வாயிலாக பீட்சா சாப்பிட ஆசைப் படுகிறார்கள். 300 ரூபாய் பெறுமான பீட்சாவை அவர்கள் வாங்கவோ, சாப்பிடவோ முடிந்ததா என்பதை சுவாரஸ்யமான திரைப்படமாகத் தந்திருக்கிறார் புது இயக்குநர் மணிகண்ட…

    • 9 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.