வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
தி வே ஹோம் | The Way Home - மலைக்கிராமக் காட்சிகளாய் நம் கண்முன் விரிகிற இக்கொரிய மொழித் திரைப்படம் குழந்தைகள் திரைப்படத்திற்கான சிறந்த வகை மாதிரியாய் திகழ்கிறது. கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளிக்கூட நாட்களின் பரபரப்புகள் முடிந்துவிட்டன. கொஞ்சம் இளைப்பாற கோடையும் வந்துவிட்டது. இப்போதிருக்கும் ஊரைவிட இன்னொரு ஊருக்கு செல்வதுதான் நல்லது. அங்குதான் நமக்கு அழகான அனுபவங்கள் காத்துக்கிடக்கின்றன. தி வே ஹோம் எனும் கொரிய திரைப்படத்தில் வரும் சிறுவன் சாங் வூ தனது பாட்டியின் கிராமத்திற்கு செல்லும்போது பெற்ற அனுபவங்களும் இத்தகையதுதான். கணவனைப் பிரிந்திருக்கும் ஒரு இளம்பெண் தற்போது சியோலில் பார்த்துவரும் வேலையையும் ஏதோ ஒரு காரணத்தினால் விட்டுவிட்டுகிறாள். வேறு புதிய வேலை ஒன்றை …
-
- 0 replies
- 314 views
-
-
இந்த வருடமாவது டைட்டானிக் நாயகனுக்கு விருது உண்டா? முழுமையான ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்! உலகஅளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விருதான ஆஸ்கார் விருதுக்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 24 பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருது, வரும் பெப்ரவரி 28ம் தேதி, கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட்டில், டோல்பை திரையரங்கில் நடைபெறவுள்ளது. இதனை அமெரிக்காவின் எபிசி தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.இந்தியாவில் ஸ்டார்மூவீஸ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியினை இரண்டாவது முறையாக தொகுத்து வழங்க உள்ளார் நடிகர், காமெடியன், வாய்ஸ் ஆர்டிஸ்ட், டைரக்டர், எழுத்தாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகங்களைக் கொண்ட கிரிஸ் ராக், முன்னதாக 2005ல் நடைபெற்ற 77வ…
-
- 0 replies
- 501 views
-
-
தெறி' அப்டேட்ஸ்: 7 பாடல்களும் பின்னணி தகவலும் விஜய் நடிப்பில் உருவாகும் 'தெறி' படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'தெறி' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்து வருகிறார். விஜய்க்கு மனைவியாக சமந்தாவும், தோழியாக ஏமி ஜாக்சனும் நடித்திருக்கிறார்கள். விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருக்கிறார். வில்லனாக மகேந்திரன் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டை மார்ச் 20ம்…
-
- 0 replies
- 253 views
-
-
ஈராக்கில் ஸத்தாம் ஹஸைன் தயாரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்ட ‘பயாலஜிகல் வெப்பன்ஸ் - உயிர்கொல்லி ஆயுதங்களைக்’ கண்டுபிடிக்க ஈராக்கினுள் நுழைந்து அலைந்த ஐக்கிய நாடுகள் சபை சோதனையதிகாரியின் பெயர் பெலிக்ஸ் (Felix). ‘எப்’அவரது பெயரின் முதலெழுத்து. கமல்ஹாஸனின் தசாhவதாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸின் நோக்கத்திற்கு மாறாக உயிர்கொல்லி ஆயுதங்களை தீவிரவாதிகளிடம் விற்க அலையும் முன்னாள் சிஐஏ அதிகாரியின் பெயர் பிளெச்சர் (Fletcher). பிளெச்சரின் முதல் எழுத்து ‘எப்’ எனவே துவங்குகிறது. பிளெச்சர்-பெலிக்ஸ். பிளெச்சர்-பெலிக்ஸ். பிலெ-பெலி-. பிலெ-பெலி. தொடர்ந்து மாற்றி மாற்றி உச்சரித்துப் பாதருங்கள். ஒன்று போலவே இருக்கிறது இல்லையா? பெலிக்ஸ் அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றை நிராகரித…
-
- 1 reply
- 2.6k views
-
-
பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மதுரையில் உள்ள இரயில்வே மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் பிரபல இயக்குனர்கள் மணிரத்னம்,பாலுமகேந்திரா,பாக்யராஜ்,சேரன், மணிவண்ணன், மகேந்திரன் மற்றும் பல முக்கிய திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள மதுரை வந்தவண்ணம் இருக்கின்றார்கள். இசைத்தட்டினை மணிரத்னம் வெளியிட, பாலுமகேந்திரா பெற்றுக் கொள்ள இருக்கின்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் குஷ்பு,சுஹாசினி,ராதிகா போன்ற பிரபல நடிகைகளும் கலந்து கொண்டு பேச இருக்கின்றார்கள். நாளை இசை வெளியீட்டோடு, டிரைலரும் வெளியிடப்படுகிறது. அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு அழைப்பிதழ் படங்கள்...
-
- 0 replies
- 663 views
-
-
திரைப்பட விமர்சனம்: மரகத நாணயம் மீண்டும் ஒரு நகைச்சுவை கலந்த பேய்ப் படம். ஆனால், பேய்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சாகச படங்களுக்கான பாணியில் தன் முதல் படத்தை அளித்திருக்கிறார் சரவன். திரைப்படம் மரகத நாணயம் நடிகர்கள் ஆதி, மைம் கோபி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், ஆனந்த் ராஜ், எம்.எஸ். பாஸ்கர், கோட்ட சீனிவாசராவ் இசை திபி நினன் தாமஸ் ஒளிப்பதிவு,இயக்கம் ஏ.ஆர்.கே. சரவண். …
-
- 1 reply
- 628 views
-
-
நா.கதிர்வேலன் தியாகராஜன் அதற்கு பிறகு அவர் இயக்கிய இரண்டு படங்கள் அது குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. மாநகர காவல்,பொண்ணு பார்க்கப்போறேன், வெற்றி மேல் வெற்றி முதலிய படங்களை இயக்கிய எம்.தியாகராஜன் இன்று காலை மரணமடைந்தார். அநாதரவான நிலையில் ஏவி.எம்.ஸ்டுடியோவிற்கு எதிரில் இறந்துகிடந்தார். நீண்ட நேரமாக அவர் அப்படி கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து பார்த்து விசாரித்தபோது தான் அவர் தியாகராஜன் என்பது தெரியவந்தது. விஜயகாந்த் நடித்த 150 வது படத்தை யார் டைரக்ட் செய்வது என பலர் பரிசீலிக்கப்பட்டபோது விஜயகாந்த் தேர்ந்தெடுத்தது இவரைத்தான். படம் மாபெரும் வெற்றிபெற்று அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்…
-
- 0 replies
- 395 views
-
-
இனிமேல் பாட மாட்டேன் : பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு மைசூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா, இசை மேடைகளில் தான் பாடப் போவதில்லை என்று பிரபல பின்னணி பாடகி ஜானகி மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் நெஞ்சை விட்டு அகலாத பல இனிமையான பாடல்களை பாடியவர், எஸ். ஜானகி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரை இசை பாடல்கள் பாடி பிரபலமானவர். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். ஆனால் நெருங்கியவர்களின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் சினிமாவில் பாடினார். கடந்த ஆண்டு 10 கல்பனைகள் என்ற மலையாள படத்திலும் …
-
- 0 replies
- 260 views
-
-
எந்திரனைப்’பற்றி மனம்திறந்த இயக்குநர் ஷங்கர்,இந்த வாரம் ரஜினியின் புது அவதாரத்திற்காக பயன்படுத்திய புதிய நுட்பங் களையும்,சுஜாதா பற்றியும், தனது வெற்றிக்கான தன்னம்பிக்கை ரகசியங்களைப் பற்றியும் தொடர்கிறார். எந்திரனைப் பொறுத்தவரை கமல்தானே உங்களின் முதல் சாய்ஸ், தற்போது சூழ்நிலைகளால் ரஜினி நடிக்கிறார்.இந்த இரு ஜாம்பவான்கள் பற்றி? ”‘ஜென்டில் மேன்’ படத்தை முதலில் சரத் குமாரை வைத்து எடுப்பதாகத்தான் இருந்தது. ஆனால், சில சூழ்நிலைகளால் அர்ஜுன் நடித்தார். இதனால் ஸ்கிரிப்டை, வசனங்களை அர்ஜுனுக் கேற்ற மாதிரி மாற்றிய பிறகே ஷூட் செய்தேன்.அதேபோல் எந்திரனை கமல் சாருக்காக தயார் பண்ணினாலும்,ரஜினி சார்தான் என்று முடிவானதும், அவருக்கேற்றபடி ஸ்கிரிப்டை முழுவதுமாக மாற்றி எடுத்திருக்க…
-
- 1 reply
- 963 views
-
-
ஹைதராபாத்: போதை மருந்து கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடைய நடிகர் நடிகர்கள் யார் யார் என்று ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கும்பலுடன் தொடர்பில்லை என்று நடிகை த்ரிஷா மறுத்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பிகளும், நடிகர்களுமான ரகுபாபு, பரத்ராஜ், இவர்களின் நண்பர் நரேஷ் ஆகியோரை கடந்த 19ம் தேதி 'கோகைன்' என்ற போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆந்திரா போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு அந்த போதை பொருளை சப்ளை செய்ததாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த விக்டர் என்கிற பிரட்லர் சிமா கிளமெண்ட் என்பவர் பிடிபட்டார். நைஜீரியா வாலிபரிடம் இருந்து ஒரு 'லேப் டாப்' கம்ப்ïட்டர், செல்போன், 50 ஆயிரம் ரூபாய், பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள், ந…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாமக்கல் அருகே, நடிகை நமீதா பங்கேற்ற, நாடக விழா மேடை சரிந்ததால், லேசான காயத்துடன் அவர், பாதியிலேயே கிளம்பினார். நாமக்கல் அடுத்த, ரெட்டிப்பட்டியில் நடந்து வரும் பகவதியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில், மணவாழ்க்கை எனும் சமூக நாடகம் நடந்தது. அதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக, சினிமா இயக்குனர், பாக்யராஜ் மற்றும் நடிகை நமீதா அழைக்கப்பட்டிருந்தனர். இரவு 10:30 மணிக்கு, நமீதா, நாடக மேடைக்கு வந்தார். நமீதாவை பார்த்ததும், அங்கிருந்த ரசிகர்களும், மேடையில் ஏறினர்; அதனால், மேடை ஒருபுறம் சரிந்தது. மேடையில் அமர்ந்திருந்த, நமீதா, நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சரிந்து விழுந்தனர். அதிர்ச்சியடைந்த, நமீதா, சிறு காயத்துடன், காரி…
-
- 5 replies
- 2.2k views
-
-
மறக்காத முகங்கள்: சிதம்பரம் ஜெயராமன் “எம்.ஆர். ராதாவுக்காக கடைசியில் நான் பாடிய பாட்டு” “சங்கீத சௌபாக்யமே...” என்று சம்பூர்ணராமாயணக்’ குரல் வளைய வந்தபோது ரொம்ப சுகமாய்த் தலையாட்டியவர்கள் நிறையபேர். “ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே...” கேட்டு, “காவியமா... ஓவியமா...” கேட்டு ஒன்றிப் போய் சிலாகித்தவர்கள் அநேகம் பேர். நெறுநெறுவென்ற குரல். நல்ல உச்சிக்குப் போய் சாவகாசமாக கீழிறங்கும் ராக ஒழுக்கு. வயதாகியும் குரல் உடையாமலிருக்கிற சிதம்பரம் ஜெயராமனைப் பார்த்தோம். ஒடிசலான வீட்டின் முன் அறை. அடிக்கடி வெற்றிலையும், சீவலையும் மென்று கொண்டு உற்சாகமாகப் பேசுகிறார். செழிப்பான தஞ்சை மாவட்டத்தின் திருவிடை மருதூர். பாரம்பரியமான சங்கீதக் குடும்பத்தில் மூன்று ஆண்பிள்ளைகளில் ஒருவ…
-
- 1 reply
- 2k views
-
-
திரைப் பார்வை: காவிக்கும் கம்யூனிஸ்டுக்கும் இடையே ஒரு காதல்! - ‘ஈட’(மலையாளம்) க ண்ணூர், கேரளத்தின் அரசியல் முக்கியத்துவமிக்க பகுதி. தற்போது ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பகுதியின் வழியாக வலுவடைந்து ஆட்சியைப் பிடித்தது. கர்நாடகத்தின் எல்லையிலிருக்கும் இந்தப் பகுதி வழியாக ஆர்.எஸ்.எஸ்ஸும் நுழைந்தது. இந்தப் பகுதியில்தான் இந்த இரு அரசியல் இயக்கங்களுக்கு இடையிலான படுகொலைகளும் அதிகம். இந்த இயக்கங்களுக்கு இடையே நடக்கும் காதல் கதைதான் ‘ஈட’. ‘இங்கு’ எனப் பொருள்தரும் ‘இவிட’ என்ற மலையாளச் சொல்லின் கண்ணூர் திரிபுதான் ‘ஈட’. ஆஎ.எஸ்.எஸ். சில பத்தா…
-
- 0 replies
- 202 views
-
-
TRACKS-2013/உலக சினிமா/ஆஸ்திரேலியா/ 2736 கிமீ தனியாக பாலைவனத்தை நடந்தே கடந்த பெண். நடிகர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை என்று வைரமுத்து எழுதிய பாடலில் கடைசியில் பாராவில்.... தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் ஆடல் போல தேடல் கூட ஒரு சுகமே... என்று முடியும்... தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் , தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும் என்று அற்புதமான வரிகளை எழுதி போட்டு தாக்கி இருப்பார் வைரமுத்து... வாழ்வில் ருசி இருக்க வேண்டும் என்றால் தேடல் அவசியமாகின்றது... அது எல்லோருக்கும் சாத்தியப்படாது... தான…
-
- 2 replies
- 1.2k views
-
-
வரும் ஜுலையுடன் அப்துல்காலமின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிகிறது. மீண்டும் அவரே ஜனாதிபதியாக வேண்டும் என்பது பலரது விருப்பம். தேசிய, மாநில கட்சிகள் சிலவும் இதையே விரும்புகின்றன. ஆனால், கலாமின் விருப்பம் வேறு. பதவியை துறந்து பேராசிரியராக வேண்டும் என்பது அவரது ஆசை! அப்படியானால் அடுத்த ஜனாதிபதி யார்? சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளரும் அமிதாப்பச்சனின் குடும்ப நண்பருமான அமர்சிங் அடுத்த ஜனாதிபதியாக அமிதாப்பச்சனின் பெயரை முன்மொழிந்திருக்கிறார். இதனை வழிமொழிந்திருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி. இந்தியர்களின் நல்ல நேரம், அரசியல்வாதிகளின் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை அமிதாப். "நண்பர்களின் இந்த பேச்சு மனதை தொட்டது. ஆயினும் ஜனாதிபதியாக நான் தகுதியி…
-
- 2 replies
- 1.3k views
-
-
விஜய் அவார்ட்ஸ்: இளையராஜா ஏமாற்றம், சிவகார்த்திகேயன் பதிலடி மற்றும் பல! நடப்பு ஆண்டின் 'விஜய் அவார்ட்ஸ்' நிகழ்ச்சி பெரும் சர்ச்சைகளையும், விடை தெரியா கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது. சிவகார்த்திகேயன் பதிலடி: நிறைய நிகழ்ச்சிகளில் எங்கள் குடும்பத்துப் பிள்ளை என்று சிவகார்த்திகேயனை முன்னிலைப்படுத்துவது விஜய் டிவி-யின் வாடிக்கை. கடந்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனை அழுததை மறுபடியும் மறுபடியும் போட்டு டிஆர்பி-யை எகிறவைத்தனர். ஆனால், இம்முறை சிவகார்த்திகேயன் பேசியதை அவர்களால் ஒளிபரப்ப முடியாது. ஏனென்றால், "இந்நிகிழ்ச்சி அதிகாலை 2 மணி வரை போகும். குடிக்க தண்ணிக் கூட தரமாட்டார்கள். அடுத்த முறை வரும்போது எல்லாம் புளி சோறு, தக்காளி சோறு கட்டிக் க…
-
- 0 replies
- 613 views
-
-
'வசூல் ராஜாக்களுக்கு' கமல் எச்சரிக்கை எனது பெயரைப் பயன்படுத்தி இணையதளம் ஒன்றின் மூலம் நடந்து வரும் வியாபாரத்திற்கு, எனது ரசிகர்கள் ஒத்துழைப்பு தரக் கூடாது என்று கலைஞானி கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தனது பெயரில் இணையதளம் ஒன்றில் நடந்து வரும் வியாபாரத்தை அவர் கண்டித்துள்ளார். அதற்கும் தனக்கும், தனது நற்பணி மன்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் விளக்கியுள்ளார். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில மாதங்களாக http://www.universalherokamal.com/ என்ற தலைப்புடன் இன்டர்நெட் மூலமாகவும், எஸ்.எம்.எஸ்கள் மூலமாகவும், எனது அனுமதி இல்லாமல், கமல்ஹாசன் ரசிகர்கள் என்ற போர்வையுடன…
-
- 0 replies
- 1.2k views
-
-
"திலீபன்" தமிழருக்கான படம்! விடுதலைப் புலிகளின் போராட்டக் களத்தை பின்னணியாகக் கொண்டு வெளியான ஆணிவேர் படத்தில் நடித்ததன் மூலம் உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களின் அபிமானத்தைப் பெற்றவர் நடிகர் நந்தா. பல படங்களில் நடித்துவிட்ட நந்தா, இப்போது தயாரிப்பாளராகியுள்ளார். அடுத்து 'திலீபன்' என்ற பெயரில் புதுப்படம் தயாரிக்கிறார். இதில் பிரபாகரன் கதையை படமாக்குவதாக செய்தி பரவியது. பிரபாகரன் வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஈழத் தமிழர் பிரச்சினைகள் பிரபாகரன், திலீபன் போராட்டங்கள் இதில் காட்சிப்படுத்தப்படுவதாக கூறினர். இதனால் உலகத் தமிழர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால், 'திலீபன்' படம் பிரபாகரன் கதையல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்…
-
- 0 replies
- 859 views
-
-
சிங்கள அரசையும், இந்திய அரசையும் ஒரு தட்டில் வைத்து அம்பலப்படுத்துவதால் தணிக்கையில் பிரச்சினை. சென்னை உலகத் திரைப்பட விழாவில் திரையிட புறக்கணிப்பு என்று எப்போது கேள்விப்படும் போதும் ஏதேனும் சர்ச்சை கச்சை கட்டிக் கொள்வதால் ‘செங்கடல்’ இயல்பாகவே ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. எங்கே புறக்கணிக்கப்பட்டதோ, அதே படவிழாவில் அரங்கு நிறைந்த கூட்டத்துக்கு இடையே தரையில் அமர்ந்து செங்கடலை கண்டோம். லீனாவின் ‘டயரி’தான் ஒருவரி கதை. 2009 மே மாத வாக்கில் ராமேஸ்வரத்தில் இயக்குனர் லீனா, மீனவர் பிரச்சினை குறித்த ஆவணப்படத்துக்காக தங்கியிருக்கிறார். காவல்துறையினர் லீனாவை விசாரிக்கிறார்கள். அவர் எடுத்த வீடியோ காட்சிகளை போட்டுப் பார்க்கிறார்கள். கடைசியாக ராமேஸ்வரத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள். …
-
- 1 reply
- 1.5k views
-
-
'நேர் கொண்ட பார்வை' திரைப்படமானது சராசரியான தமிழ்த்திரைப்படங்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு ஓர் தனித்துவமான படைப்பாகத் தரப்பட்டுள்ளது? ➡️பெண் சுதந்திரம், பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் இவை பற்றி வெறுமனே ஓரிரு வரிகளில் / காட்சிகளில் மட்டுமே மேலோட்டமாகச் சொல்லாமல், ஒரு இரவில் மூன்று பெண்கள் எதிர்கொண்ட இவ்வாறான ஓர் சம்பவத்தின் விளைவுகளை உணர்வு பூர்வமான பல காட்சியமைப்புக்கள் மூலமாகச் சித்தரித்தமை ஒரு காரணம். ➡️அடுத்து, படத்தின் இடைவேளையைத் தொடர்ந்து வந்த தொடர்ச்சியான நீதிமன்றக் காட்சிகள் அச்சம்பவம் தொடர்பான ஆணாதிக்க மனோநிலை, பாதிக்கப்பட்ட பெண்களின் ஏக்கம், தயக்கம், ஏமாற்றம் இவற்றை இரு பக்க வக்கீல்களின் வாதங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் தடுப்பு வாதங்கள் மூலமாக …
-
- 15 replies
- 1.9k views
- 1 follower
-
-
சமூக நலக்கருத்துக்களை அதிகம் வலியுறுத்திப் பாடியது கண்ணதாசனா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமா?
-
- 0 replies
- 510 views
-
-
பி.யூ.சின்னப்பா - வாழ்க்கை குறிப்பு சின்னப்பாவின் பூர்வீகம் புதுக்கோட்டை ஆகும். உலக நாதப்பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக சின்னப்பா வெள்ளிக்கிழமை அன்று பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பா பிறந்த தேதி 05.05.1916 ஆகும். சின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் சின்னப்பா முயற்சி எதுவுமின்றியே 5-ம் வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார். சிறு வயதிலேயே பல வேடங்களில் நடித்து ரசிகர்களை அசர வைப்பாராம். சதாரம் நாடகத்தில் அவர் குட்டித் திருடனாகத் தோன்றி பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார். தம் தந்தை நாடகத்தில் பாடி வந்த பாட்டுகளையெல்லாம் சின்னப்பா பாடிக்கொண்டிருப்பாராம். அத்துடன் புதுக்கோட்டையில் நடந்த பஜனைகளில் அவர் அடிக…
-
- 0 replies
- 706 views
-
-
குபேரா : விமர்சனம்! 20 Jun 2025, 6:11 PM ஹீரோயிசம் காட்டுவது நாகார்ஜுனாவா, தனுஷா? ’ஹீரோ ஸ்கிரீன்ல வந்தாலே தன்னால தீப்பிடிக்கும்’ என்று கதை சொல்கிற தெலுங்கு மசாலா பட இயக்குனர்களில் இருந்து நிறையவே வேறுபட்டவர் சேகர் கம்முலா. இவரது திரைப்படங்களில் ஹீரோயிசம் ‘அதீதமாக’த் தென்படாது. அதேநேரத்தில், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் தந்து திரைக்கதையை நகர்த்துவதில் பெயர் பெற்றவர். இப்படியொரு இயக்குனரின் கையில் தமிழ், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த இரண்டு நாயகர்கள் கிடைத்தால் என்னவாகும்? அவர்களில் ஒருவர் சீனியராகவும் இன்னொருவர் ஜுனியராகவும் இருந்தால் கதை சொல்லலில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும்? அப்படியொரு படமானது முழுக்க இயக்குனரின் பாணியில் அமையுமா அல்லது வழக்கமான ‘கமர…
-
- 0 replies
- 129 views
-
-
புதிய டார்ஸன் திரைப்படம் The Legend of Tarzan இன்று வெளியாகிறது சிறுவர்களையும் பெரியவர்களையும் மிகவும் கவர்ந்த திரைப்பட வரிசைகளில் ஒன்றான டார்ஸன் திரைப்பட வரிசையில் புதிய படம் இன்று வெளியாகவுள்ளது. The Legend of Tarzan (தி லெஜென்ட் ஒவ் டார்ஸன்) எனப் பெயரிடப் பட்டுள்ள இப்படத்தில் டார்ஸன் வேடத்தில் சுவீடனைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் (39) நடித்துள்ளார். டார்ஸ னின் மனைவி ஜொனி போர்ட்டர் வேடத்தில் அவுஸ்திரேலிய நடிகை மார்கோட் ரொபி (25) நடித்துள்ளார். இப்படத்தை டேவிட் யேட்ஸ் இயக்கியுள்ளார். ஹரிபொட்டர் திரைப்பட வரிசையில் இறுதியாக வெளியான 4 படங்…
-
- 0 replies
- 517 views
-
-
கொஞ்சம் நையாண்டியும் நிறைய கோபமுமாக ஓர் அரசியல் படம். வணிக அம்சங்களைத் தவிர்த்து சமூக அக்கறையுடன் இப்படி ஒரு படத்தைக் கொடுத்த துணிச்சலுக்காகவே இயக்குநர் ராஜு முருகனைப் பாராட்டலாம். தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் சாமானியக் குடிமகனான சோம சுந்தரத்தின் வீட்டில் ஒழுங்காக ஒரு கழிப்பறைகூட கிடையாது. ஆனால் அவர் தன்னை இந்திய ஜனாதிபதியாகக் கற்பித்துக் கொண்டு செயல்படுகிறார். அரசு அதிகாரிகள், காவல் துறையின ரிடம் ஜனாதிபதிக்குரிய தோரணை யுடன் பேசுகிறார். பொதுப் பிரச் சினைகளுக்காகப் போராடுகிறார், ‘உத்தரவுகள்’ பிறப்பிக்கிறார். யார் இந்த ‘ஜனாதிபதி’, அவ ருக்கு என்ன பிரச்சினை என்பதற் கான பதில்கள் சோமசுந்தரத்தின் பின்கதையில் உள்ளன. தனியார் தண்ணீர்…
-
- 2 replies
- 502 views
-