ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142921 topics in this forum
-
மாகாண சபை வேண்டுமா.? புதிய அரசமைப்பில் முடிவு.! – அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு. எந்தவொரு பயனும் இல்லாதவையாக மாகாண சபைகள் மாறிவிட்டன. எனவே, மாகாண சபை வேண்டுமா.? வேண்டாமா.? என்பதைத் தீர்மானித்தே புதிய அரசமைப்பு கொண்டுவர வேண்டும். அதேவேளை, மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டாம் என்பதே எமது தீர்க்கமான நிலைப்பாடு என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்…
-
- 3 replies
- 590 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இடமளிக்க வேண்டும் என்ற காரணிகளை உள்ளடக்கி அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொண்டுவந்த நிலையியற் கட்டளை 27/2இன் கீழான விசேட கூற்றை சபாநாயகர் சபையில் நிராகரித்ததால் சபையில் கடும் சர்ச்சை எழுந்தது. சபாநாயகரின் தீர்ப்பே இறுதியானது என ஆளும் கட்சியினர் வாதம் நடத்த, சபாநாயகர் சபையை தவறாக வழிநடத்தி சர்வாதிகாரியாக நடந்துகொள்கின்றார் என எதிர்க்கட்சிகள் சபையில் சீறிப்பாய்ந்தனர். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் முடிந்த பின்னர் கட்சி தலைவர் கொண்டுவரும் 27/2 இன் கீழான விசேட கூற்றை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்தார்…
-
- 5 replies
- 703 views
-
-
தியாகி திலீபனின் நினைவேந்தல்: நீதிமன்றத் தீர்ப்பு இன்று – தமிழ்க் கட்சிகளின் அறிவிப்பு தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) பிறப்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், அந்தத் தீர்ப்பின் பின்னரே, தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுமென்று கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் கட்சிப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு அரசு தடை விதித்திருக்கும் நிலையில், அந்தத் தடை உத்தரவை நீக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவும் இணைந்து அரசிட…
-
- 4 replies
- 587 views
-
-
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிங்களின் வாக்குரிமையை பறிக்க முயற்சி - ரிஷாத் பதியுதீன் (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிங்களின் பெயர்களை தேர்தல் இடாப்பில் இருந்து நீக்குவதற்கு உதவி தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பில் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 1990 இல் வடக்கில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிங்கள் புத்தளம்,குருணாகல்,அநுராதபுரம் போன்ற பகுதிகளில் குடியேறினார்கள். இதில் 50 வீதமானவர்கள் மீள் குடியேறினார்கள். 20-30 வீதமானவர்கள் புத்தளத்…
-
- 1 reply
- 414 views
-
-
இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 8 பேரை படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன இன்று (24) விலகியுள்ளார். மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக சுனில் ரத்நாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்குரிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தில் தாம் அங்கம் வகிப்பதால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக நீதியரசர் பிரியந்த ஜயவர்தன பகிரங்க நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார். ஜனாதிபதியால் கடந்த மார்ச் மாதம் சுனில் ரத்நாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமையை ஆட்சேப…
-
- 0 replies
- 746 views
-
-
கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 8 மணியளவில் பாடசாலை பிரதான வாயிலை மறித்து இடம்பெற்றது. நேற்று புதன்கிழமை பாடசாலை அதிபரை ஒரு தரப்பினர் தாக்க முற்பட்டதாக தெரிவித்து தமது பிள்ளைகள், அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறு கோரியே குறித்த போராட்டம் இடம்பெற்றது. பாடசாலை மாணவர்களின் பெற்றோரால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஒன்றரை மணிநேரம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. விடயம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, 262 பாடசாலை மாணவர்களை கொண்ட குறித்த பாடசாலையில் …
-
- 4 replies
- 936 views
-
-
அதாவுல்லா அணிந்திருந்த உடையால் நாடாளுமன்றில் குழப்பம் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/09/Athaulla.jpg அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல். எம். அதாவுல்லா அணிந்திருந்த உடை குறித்து இன்று நாடாளுமன்றத்தில் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. அதாவுல்லாவை நாடாளுமன்றத்திலிருந்து நீக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். எவ்வாறாயினும், உடையில் எந்த பிரச்சினையும் இல்லை என்று நாடாளுமன்ற செயலகம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்தது. இருப்பினும் அதாவுல்லாவின் உடையை தொடர்ந்து எதிர்த்த ஐக்கிய மக்கள் சக்தி வெளிநடப்பு செய்வதாகவும்…
-
- 15 replies
- 2.1k views
-
-
அரசியல் நோக்கத்திற்காக 13 ஐ பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர்; நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சாடல் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் தங்களது அரசியல் தேவைகளுக்காக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயத்தில் அரசாங்கம் இதுவரை எந்தவிதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “மாகாண சபை முறைமையானது எமக்குக் கிடைத்திருந்த காலந்தொட்…
-
- 2 replies
- 511 views
-
-
வெடுக்குநாரி ஆலயத்திற்குச் செல்வோரை பதிவுசெய்யும் பொலிஸார்! by : Litharsan http://athavannews.com/wp-content/uploads/2020/09/Vedukkunari-Aathilingeshwarar-Temple-festival.jpg வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, குறித்த பதிவு நடவடிக்கை கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இவ்வாறான செயற்பாடுகளால் ஆலயத்திற்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்க…
-
- 0 replies
- 389 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தன் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இந்த பதவியை பொறுப்பேற்றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் தற்போது விளக்கமறியில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/90467
-
- 23 replies
- 2.4k views
-
-
கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்.பல்கலை துணைவேந்தர் நியமனம் இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 2194/ 29 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி மூலம் இதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையினால் ஜனாதிபதிக்களிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகித்து, 2020.03.31 ஆந் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ‘இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணி’ க்கு அமைச்சுக்களுக்கும் ராஜாங்க அமைச்சுக்கள…
-
- 1 reply
- 446 views
-
-
20ஆவது திருத்தம் நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் – செல்வராசா கஜேந்திரன் 20ஆவது திருத்தம் நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் பாரிய ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அரச கம்பனிகளைக் கணக்காய்வு செய்யும் பொறுப்பு கணக்காய்வாளர் நாயகத்தில் பொறுப்புக்கள் அதிகாரங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.உறுப்புரை 154 (ஏஐ) இன் பிரகாரம் பகிரங்க கணக்குகளை கணக்காய்வு செய்து நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதற்கும் கணக்காய்வாளர் நாயகத்தின் கடமைகளும் பொறுப்புக்களும் அதிகாரங்களும் 20ஆவது திருத்தயோசனையில் பறித்தெடுக்கப்பட்டுள்ளது.எனவே, இவ்…
-
- 0 replies
- 277 views
-
-
மண்ணை மீட்போம் என கூறி வாக்கு கேட்டவர்கள் இப்போது பெட்டிப் பாம்பாக அடங்கி போயுள்ளனர்! - சிறிநேசன் September 23, 2020 கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருக்கின்றபோது ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டவர்கள் இப்போது பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கின்ற நிலைமையை காணக்கூடியதாக இருக்கின்றது என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த நாட்டிலே இறந்தவர்களை மறைந்தவர்களை எண்ணி அழுவதற்கான உரிமைகூட இல்லையா என்று கேட்கக்கூடிய நிலையில் மக்கள் இருக்கின்றார்…
-
- 0 replies
- 385 views
-
-
முப்படைகளின் பிரதானியை விசாரணை செய்த நிசாந்தசில்வாவை இடமாற்றுமாறு சிறிசேன உத்தரவிட்டார் – பூஜித் தகவல் மைத்திரிபால சிறிசேன சுயாதீனபொலிஸ் ஆணைக்குழுவின் விவகாரங்களில் தலையிட்டார்என முன்னாள் பிரதிபொலிஸ்மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்துவிசாரணைகளை மேற்கொண்டுள்ளஜனாதிபதி ஆணைக்குழுவின்முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனைதெரிவித்துள்ளார். சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பான விடயங்களில் சிறிசேன தலையிட்டார் என அவர்குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு பேரவையில் முன்னாள் முப்படைகளின் பிரதானியை கைதுசெய்வதற்கான முயற்சிகள் தொடர்பிலும்,இராணுவத்தினருக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணைகள் தொடர்பிலும் தீவிரம…
-
- 0 replies
- 354 views
-
-
இலங்கை மீது கவனம் செலுத்தியுள்ள, மிச்செல் பச்லெட்டுக்கு.. சி.வி. அனுப்பியுள்ள முக்கிய கடிதம்! இலங்கையின் சமாதானத்திற்கும் நிரந்தர அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்திருந்த குறைபாடுகளை நிவர்த்திசெய்வது இன்றியமையாதது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், “2020 செப்ரெம்பர் 14ஆம் திகதி உங்களால் வெளியிடப்பட்ட கருத்துரைக்கு இலங்கை என்ற தீபகற்பத்தின் தமிழ் மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியையும் வரவேற்…
-
- 0 replies
- 311 views
-
-
இரா.சம்பந்தன்.. விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர் – சரத் வீரசேகர இரா.சம்பந்தன் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர் என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கையில், வடக்கு மாகாணத்திற்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டு யுத்தத்தின் பின்னர் மீள் குடியேற்றம் இடம்பெறாத காரணத்தினால் சில விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. இதன்போது நான் ஒன்றினை கூறிக்கொள்ள விரும்புகின்றேன், யுத்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளினால் ம…
-
- 0 replies
- 945 views
-
-
நாமலுக்கு வாழ்த்து தெரிவித்தார் சார்ள்ஸ் நிர்மலநாதன்! பொருத்தமான நபருக்கு பொருத்தமான அமைச்சு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு பாராட்டு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முல்லைதீவு, மன்னார் மாவட்ட மைதானங்கள் மற்றும் மன்னார் நகர எல்லையிலுள்ள எமில் நகர பொது விளையாட்டு மைதானம் என்பவற்றை நிர்மாணிக்க அமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் 2021 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு கோருகிறேன். இரு வாரங்களுக்கு முன்னர் நான் பிரதமர் மஹிந்த ராஜபக்…
-
- 0 replies
- 351 views
-
-
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் மேலும் சில மனித எச்சங்கள் கண்டெடுப்பு! கிளிநொச்சி – முகமாலை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் பேராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படும் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் நேற்றும் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை 3.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதவான், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அகழ்வுப் பணி 5 மணியளவில் நிறைவடைந்தது. இதன்போது, தகடு 01, மண்டையோடு -02, பல்வரிகள், விடுதலைப்புலிகளின் வரி சீருடைகள், சீப்பு, பெற்றி, மகசின் 02 என்பன கண்டெடுக்கப்பட்டன. அதன் பின்னர் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்ததாக கிளிநொச்சி மாவட்ட நீதவான் அறிவித்தார். …
-
- 0 replies
- 368 views
-
-
நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்தியாவும் இலங்கையும் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும், இலங்கை அதிகாரிகளின் அறியாமை மற்றும் சர்வதேச சட்டத்தை பின்பற்றாததால் நாடு பல பில்லியன்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் விபத்து காரணமாக பிராந்திய கடல் நீர் மாசுபட்ட போதிலும் சம்பந்தப்பட்ட சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திடாத காரணத்தினால், இலங்கை இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என அரசாங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மத்திய கிழக்கில் இருந்து இந்தியாவுக்கு 270,000 தொன் எண்ணெயை கொண்டு சென்ற நியூ டயமண்ட் கப்பல், கடந்த 3ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் சங்கமன் கந்தவிலிருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில் தீப்பிடித்தது. இலங்கை கடற…
-
- 1 reply
- 403 views
-
-
திலீபனின் நினைவேந்தல் நடத்த தடை- யாழ்.நீதிமன்றம் உத்தரவு! by : Vithushagan நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை நடந்த வழக்கு விசாரணையின் போதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை ஆரம்பமாகவிக்கும் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கின் பி…
-
- 27 replies
- 2.8k views
-
-
வடக்கு கிழக்கில் மக்களின் நிலங்களை அரசாங்கம் ஆக்கிரமிப்பது மோசமானது- செல்வம் எம்.பி. by : Litharsan http://athavannews.com/wp-content/uploads/2020/08/Selvam-Adaikkalanathan-2.jpg வடக்கு கிழக்கில் மக்களின் நிலங்களை அரசாங்கம் ஆக்கிரமிப்பது மோசமான செயல் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “பிரதமருக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன், வன்னியைத் தாண்டி வடக்கிற்குச் செல்லும் அமைச்சர்கள்…
-
- 1 reply
- 451 views
-
-
சம்பந்தன் சமுகமளிக்காமையால் பாராளுமன்றக்குழு கூட்டம் இரத்து : வியாழனன்று கூடலாம்? (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சமூகமளிக்காமையின் காரணமாக நேற்று கூடவிருந்த பாராளுமன்றக்கு குழு கூட்டம் இறுதி நேரத்தில் இரத்தானது. அதேநேரம், எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவை கூட்டடுவதற்கு எதிர்பார்ப்புக்கள் இருப்பதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்புக்கள் இரா.சம்பந்தனிடத்திலிருந்து இன்னமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுகின்றது. இதேவேளை, இருபதாவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின…
-
- 6 replies
- 1.2k views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) யுத்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளினால் 25 ஆயிரம் சிங்கள குடும்பங்களும், 15 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களும் வடக்கில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களை மீண்டும் வடக்கில் குடியேற்றி அவர்களின் தேர்தல் உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார். 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றவேளையில் அவர் இதனைக் கூறினார். இத…
-
- 3 replies
- 484 views
- 1 follower
-
-
தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல் கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ரீதியில் போராட முடிவு செய்துள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலி தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில், கருத்து வேறுபாடுகளையும் கௌரவத்தையும் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, அவற்றையெல்லாம் புறந்தள்ளி, பொதுவான சிந்தனைக்குள் வேற்றுமையில் இவர்கள் ஒற்றுமை கண்டிருப்பது, தமிழின வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த ஒற்றுமையானது தொடர வேண்டும் என்பதில…
-
- 2 replies
- 639 views
-
-
தாக்கினால் திருப்பி தாக்குவோம். தேரருக்கு எச்சரிக்கை
-
- 0 replies
- 489 views
-