ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142738 topics in this forum
-
எதிர்வரும் காலத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதப்போரட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என நான் தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணைப்பாளர் திரு வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இனிமேல் ஆயுதப்போராட்டம் என்பது எமது அகராதில் இருக்காது என திரு உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளதாக இந்திய சஞ்சிகையான ஜுனியர் விகடனில் வெளிவந்த நேர்காணல் தொடர்பில் அதிர்வு இணையம் உருத்திரகுமாரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
- 9 replies
- 1.6k views
-
-
"இரண்டு வேளை... சாப்பிட பழகிக் கொள்ளுங்கள்", எனக் கூற... ஒரு பிரதமர் தேவையா? – அனுர கேள்வி. மக்களிடம் இரண்டுவேளை மட்டும் சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் எனக் கூறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த நெருக்கடியை உருவாக்கியவர் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த மாட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நெருக்கடியை உருவாக்கியவர்களை ரணில் விக்ரமசிங்க மறைத்து வருவதாகவும் இரண்டு வேளை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் எனக் கூற ஒரு பிரதமர் தேவையா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். அநுர திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், ‘இளைஞர்கள் ராஜபக்ஷக்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். மஹிந…
-
- 1 reply
- 219 views
-
-
"இராணுவ வெற்றி தினத்தைக் கொண்டாட இடமளிக்க மாட்டோம்" ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிபாரிசுகளை முழுமையாக இலங்கை அரசாங்கம் ஏற்றுகொண்டதன் விளைவாகவே இலங்கையில் இராணுவ வெற்றி தினம் நிறுத்தப்பட்டுள்ளது. இனியொருபோதும் இலங்கையில் இராணுவ வெற்றி தினத்தைக் கொண்டாட இடமளிக்க மாட்டோம் என இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் வாக்குறுதி வழங்கியுள்ளது என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இலங்கையில் இராணுவ வெற்றி விழாக்கள் இடம்பெறக்கூடாது என மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள நிபந்தனைகள் வெளிவந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இலங்கையின் பிரதிநிதியாக மனித உரி…
-
- 2 replies
- 689 views
-
-
செய்தியாளர் சத்தியன் 01/09/2009, 14:39 "இராசபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது படுபயங்கரமானது" அமெரிக்கப் பேராசிரியர் பாய்ல் (நேர்காணல்) பேராசிரியர் பிரான்சிஸ் அந்தோணி பாய்ல், பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், உலகமெங்கும் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏராளமாக எழுதியும், பேசியும் வருகிறார். இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். செப்டம்பர் 2000-ல் இதழில் பாய்ல் எழுதிய கட்டுரை, உலக ஒழுங்கியல் பற்றிய வரலாற்று ஆவணமாக உலக அரசியல் வல்லுநர்களால் கருதப்படுகிறது. உலகளவில் மனித உரிமைகள் அமைப்பான "அம்னஸ்டி இன்டர் நே…
-
- 0 replies
- 858 views
-
-
"இராஜதந்திர உறவுகளில் தோல்வியைக் கண்டுள்ள அரசாங்கம்" : கோத்தபாய ராஜபக்ஷ மத வழிபாட்டுத் தளங்களின் ஊடாக வலுவான இராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்ப முடிந்துள்ள போதிலும் அரசாங்கம் இதில் தோல்வி கண்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியினர் ஜப்பானில் வாழும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில் இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மெற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில மற்றும் ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்டவர்களே இவ்வாறு ஜப்பானில் சந்திப்புகளில் கலந்துக் கொண்டுள்ளனர். வெளிநாடுக…
-
- 0 replies
- 348 views
-
-
"இராஜதந்திர விடயத்தை தாண்டி மக்கள் நலனே முக்கியம்" (ஆர்.ராம்) வடக்கு, கிழக்கு பகுதிகளில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடடம்பெயர்ந்த இலங்கை மக்களுக்கு 40 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்தமையானது இராஜதந்திர விவகாரங்களை தாண்டி மக்கள் நலனையே மையப்படுத்தியதாகும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், வடகிழக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தினூடாக இருவருட காலத்துக்குள் அப் பகுதி மக்களுக்கு 15 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன. அத்துடன் வேலையாள் ஒருவருக்கு சாதாரணமாக 4…
-
- 0 replies
- 370 views
-
-
"இராணுவ உதவிகளை நிறுத்துங்கள்' இந்தியாவுக்கு கூறும் இலங்கை அரசியல்வாதி இலங்கைப் படையினருக்கான சகல இராணுவ உதவிகளையும் இந்தியா உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு உதவ வேண்டும் என்று இலங்கை அரசியல்வாதியான சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை புதுடில்லியில் சிவில் சமூக குழுக்களின் ஏற்பாட்டில் இந்திய பத்திரிகை கழகத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிதுங்க ஜயசூரிய, இலங்கை அரசாங்கத்திற்கான தனது சகல இராணுவ உதவிகளையும் நிறுத்துவதன் மூலம் இந்திய அரசு சாதகமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று கூறியதாக "இந்து' பத்திரிகை நேற்று தெரிவித்தது. வடபகுதியில் …
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது. அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்கஇராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் இராணுவதளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவருடைய கட்டளை பொறுப்பு காரணமாக பாரியமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் காரணமாக, குறிப்பாக 2009 இல் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தின் 58 வது படைப்பிரிவு மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 பிரிவின் கீழ் கோரப்பட்டிருப்பதன் அடிப்படையில் அமெரிக்க இ…
-
- 35 replies
- 4.2k views
- 1 follower
-
-
"இரு வாரங்களில் ஊடகங்களில் வெளிப்படுவார் ஞானசார தேரர்" பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விரைவில் ஊடகவியலாளர்களை சந்திப்பார். இருவாரங்களில் அவர் ஊடக சந்திப்புகளில் வெளிப்படுவார் என அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலாந்த விதானகே தெரிவித்தார். ராஜகிரிய சத்தர்மாராஜித விஹாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்னும் இரு வாரங்களில் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுவார். தற்காலத்தில் நாட்டில் எழுந்…
-
- 1 reply
- 343 views
-
-
வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த இன்னொரு மக்கள் பாதுகாப்பு வலயமான "இருட்டுமடு மக்கள் பாதுகாப்பு வலயம்", தேராவில், மயில்வாகனம், வள்ளிபுனம், மற்றும் தேவிபுரம் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 83 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 409 views
-
-
வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த இன்னொரு மக்கள் பாதுகாப்பு வலயமான "இருட்டுமட்டு மக்கள் பாதுகாப்பு வலயம்", தேராவில் மற்றும் மயில்வாகனம் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 3 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 317 views
-
-
வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த இன்னொரு மக்கள் பாதுகாப்பு வலயமான "இருட்டுமட்டு மக்கள் பாதுகாப்பு வலயம்", தேராவில், மயில்வாகனம், வள்ளிபுனம் மற்றும் தேவிபுரம் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 81 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 326 views
-
-
"இறுதி வரைபுக்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டும்" தற்போது புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையே வெளிவந்துள்ளது. இதில் மாற்றங்கள் நிகழ்வதற்கு இடமுண்டு. ஆகவே இறுதி வரைபுக்காக நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தமிழ் மக்கள் ஏற்காத எந்த விடயத்தினையும் தாமும் ஏற்கப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதிகாரப்பகிர்வு என்பது இனம்சார்ந்த விடயம் அல்ல. அனைத்து தரப்பினருக்கும் அவசியமானது எனக்குறிப்பிட்ட சம்பந்தன் வடகிழக்கு இணைப்பு விடயத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றபோது முஸ்…
-
- 0 replies
- 288 views
-
-
(நா.தனுஜா) கொத்தணிக்குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை, தமது நாட்டில் அத்தகைய கொத்தணிக்குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என்று துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பில் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உலகலாவிய ரீதியில் கொத்தணிக்குண்டு பாவனையினால் பொதுமக்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்காக 100 உறுப்பினர்கள் உள்ளடங்கியதாக உருவாக்கப்பட்ட கொத்தணிக்குண்டு தொடர…
-
- 1 reply
- 516 views
-
-
"இறுதிக்கணங்கள் வரை பிரச்சனைகள் இருந்த போதும் கூட்டமைப்பின் ஒற்றுமையை நினைவில் கொண்டு அமைதியான முறையில் தீர்வு கண்டுள்ளோம்." "வன்னி மாவட்டத்தில் வவுனியா நகர சபை மற்றும் துணுக்காய் பிரதேச சபை இரண்டிலும் தமிழீழ விடுதலை கட்சியின் சார்பில் நேரடி வட்டாரத் தேர்தலில் நாம் எந்தவொரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை. இரண்டு சபைகளிலும் விகிதாசாரப் பட்டியலில் கிடைக்கின்ற முதல் உறுப்பினர் எமது கட்சிக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது." என அக்கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சில சபைகளில் ரெலோ கட்சி போட்டியிடாமை குறித்து அவரிடம் கேட்ட போதே அவர் அவ…
-
- 0 replies
- 439 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக அரசியல் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட சிறிலங்காவின் அனைத்துக் கட்சிக் குழுவானது "இறுதித்தீர்வை" எட்டிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 770 views
-
-
"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைROBERT NICKELSBERG தான் ஒரு "தேச துரோகி" என்று ஒப்புக்கொள்கிறார் திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்னம். இவர் ஒரு தமிழர். எனினும் இலங்கைப் போரின் போது நடந்த பல அட்டூழியங்களுக்கு காரணம் விடுதலை புலிகள் அமைப்புதான் என்று குற்றஞ்சாட்டுகிறார் இ…
-
- 40 replies
- 5.8k views
-
-
"ஈழத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார இதழான 'ஆனந்த விகடன்' வலியுறுத்தியிருக்கின்றது. இது தொடர்பாக 'இறக்கமற்ற இறையாண்மை!' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிந்து, வாக்குகளை எண்ணிக்கொண்டு இருந்த அதே நேரம், இலங்கை மண்ணில் செத்து விழுந்த தமிழர்களின் சடலங்களைக் கணக்குப் பார்த்துக்கொண்டே முன்னேறியது சிங்கள இராணுவம். 'முந்தைய தேர்தலைவிட வலுவாக வென்றுவிட்டோம்' என்று ஆளும் கூட்டணியினர் இங்கே வெடி போட்டுக் கொண்டாடிய அதேவேளை... 'இறுதி வெற்றியை நெருங்கிவிட்டோம்' என…
-
- 1 reply
- 1.2k views
-
-
"இலங்கையில் போர்க் குற்றங்கள் நடக்கவில்லை" நன்றி கடிதம் அனுப்பினார் ஜனாதிபதி இலங்கையில் போர்க் குற்றங்கள் நடக்கவில்லை என்று பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய நெஸ்பி பிரபுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசியமாக நன் றிக் கடிதம் அனுப்பியுள்ளார் என்று கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள் ளார். இறுதிப் போரில் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டது போல 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றும், இறுதிப் போரில் 7000 தொடக்கம் 8000 வரையானவர்களே கொல்லப்பட்டனர் என்றும், அவர்களில் கால்வாசிப் பேர் சாதாரண உடையில் இருந்த புலிகள் என்றும் கடந்த ஒக்டோபர் மாதம் பிரித்…
-
- 4 replies
- 596 views
-
-
"இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் காட்டிக்கொடுப்புக்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்" "விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போது நாட்டை சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக போரிட்டு வெற்றி வாகை சூடினோம் . இதற்காக செய்த உயிர் தியாகங்கள் இன்று காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டை பாதுகாக்க மீண்டும் ஒன்றிணைய வேண்டும்." என போர் முடிவடைந்து 9 ஆண்டுகள் பூர்த்தியாகியூள்ள நிலையில் விஷேட அறிக்கையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில், " உலகில் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பிடமிருந்து எமது…
-
- 0 replies
- 181 views
-
-
Yoshita sails away By Vimukthi Yapa Ere the spit had dried on President Mahinda Rajapakse's much publicised verbal rhetoric to treat his second son no different from the other naval cadets, Yoshita was shipped off to the UK last week on a full naval scholarship to Dartmouth, just two weeks after joining as a cadet officer the Sri Lanka Navy. Dartmouth in UK is one of the most prestigious academies for naval personnel and the dream of every young cadet. The December 2006 recruitment batch - the only one for that year - consisted of 24 young cadets of which Yoshita was one. According to web based naval sources normally selections for limited berth…
-
- 7 replies
- 2.4k views
-
-
நவ. 30: இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையை இந்தியா வகுக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சி. மகேந்திரன். திருச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "இலங்கைப் பிரச்னை- சிக்கலும் தீர்வும்' என்ற சிறப்புக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது: ""இலங்கையில் சிங்களர்கள் தோன்றுவதற்கு முன்பாகவே அங்கு தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மையை, சிங்கள ஆய்வாளர்களே தெரிவித்துள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வசித்துவரும் தமிழர்களை, அங்கே இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதுகிறார்களே? என்பதுதான் கேள்வி. ஆயுதம் தாங்கியப் போராட்டம் ஏதோ உடனே வந்ததல்ல. தமிழ் மக்களின் 60 ஆண்டு காலப் ப…
-
- 1 reply
- 1.6k views
-
-
"இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்று வித்தையாகும்" (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அரசியலமைப்பு தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்று வித்தையாகும். சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் எடுக்கும் போது அதன் மத்திய குழுவில் 950 அங்கத்தவர்களில் 46 பேர் மாத்திரமே இருந்துள்ளனர். எனவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் செயற்பட்டு வருவதாக புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க குற்றம் சுமத்தினார். அதேபோன்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களில் 40 அங்கத்தவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். என…
-
- 0 replies
- 346 views
-
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் Image caption மைத்திரிபால சிறிசேன இலங்கையில் நாடாளுமன்றத்தை கலைத்து, வரும் ஜனவரி 2019 தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்ல தலைவராக இல்லை என்றும், நாட்டின் பின்னடைவுக்கு வித்திட்ட மனிதராகிவிட்டார் என முன்னர் செயல்பாட்டில் இருந்த இலங்கை நாடாளுமன்றத்தின் குழுக்களின் தலைவராக விளங்கிய செல்வம் அடைக்கலநாதன் கூறுகிறார். …
-
- 4 replies
- 739 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னையில் நாளை மௌன விரத கறுப்புக்கொடி போராட்டம் நடத்த "இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்" முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 582 views
-