ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
“தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்பி தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரை ஓட ஓட விரட்டி அடிப்போம்” இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேலும், “இலங்கையில் முதல் இனமும் முதல் மொழியும் சிங்களம். அதேபோல முதல் மதம் பௌத்தம். மற்று இனங்களும், மொழிகளும், மதங்களும் இரண்டாம் பிரிவை சார்ந்தவையாகும். இதை விக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதையும் மீறி அவர் நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் அவரை சபையிலிருந்து வெளியேற்றுவோம்; ஓட ஓட விரட்டி அடிப்போம். தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் ஊளையிடலாம். ஆனால் அதியுயர் சபையான நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் பயணம் அவர்களுக்கு கிடைக்காது. முதலமைச்சராக பதவி …
-
- 231 replies
- 18.7k views
- 1 follower
-
-
பிரேமலால் ஜயசேகர குறித்த தீர்ப்பு திங்கட் கிழமை அறிவிப்பு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணியால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் கடந்த தினம் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே அவரது சட்டத்தரணியால் பாராளுமன…
-
- 0 replies
- 408 views
-
-
20 ஆவது திருத்த சட்டமூலம்: உயர் நீதிமன்றத்தை நாடும் சஜித் தரப்பு அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூல வரைவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “19 ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது அமைச்சர் தினேஷ் குணவர்தன ஒவ்வொரு சரத்திற்கும் திருத்தங்களை முன்வைத்தார். அதேபோன்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் அவரைப்போ…
-
- 0 replies
- 258 views
-
-
விக்னேஸ்வரனுக்கு அங்கஜன் சவால். தேர்தல் பிரசார காலத்தில் ஒருவருக்கேனும் சாராயம் கொடுத்ததையோ அல்லது 5000 ரூபா பணத்தைக் கொடுத்ததையோ சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு போவேக தாம் தயாராக உள்ளதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அண்மையில் யாழ். மாவட்டத்தில் இருந்து இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்தார். இதன் போது அங்கஜன் ராமநாதன் அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்றுள்ளமை குறித்து அந்த ஊடகம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த சி.வி. விக்னேஸ்வரன், சாராயம் மற்றும் பணத்தைக் கொடுத்ததன் மூலமே அது சாத்தியமானதாக கருத்து வெளி…
-
- 0 replies
- 362 views
-
-
வடக்கில் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறுதல் குறைகிறது- இனப் பரம்பல் பாதிக்கும்- கலாநிதி நிமால் கிஸ்ரொபல் வடக்கு மாகாணத்தில் பொதுவாக இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறுகின்றமையானது குறைந்து செல்கின்றமையால் எமது இனப் பரம்பலை நிச்சயமாக பாதிக்கும் எனவும் கிளிநொச்சி மாவட்டத்தில் எவருக்கும் குடும்பக் கட்டுப்பாட்டை வற்புறுத்துவதில்லை என்றும் தாய், சேய் குடும்பநல மருத்துவர் வைத்திய கலாநிதி நிமால் கிஸ்ரொபல் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் 2020ஆம் ஆண்டில் ஐந்து பிள்ளைகளுக்கு மேல் பெற்ற குடும்பங்களுக்கான சத்துணவு வழங்கும் விசேட வேலைத் திட்டத்தில் அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக…
-
- 3 replies
- 513 views
-
-
இரணைமடு விசாரணை அறிக்கையை மறைத்த பெருச்சாளிகள் யார்..? தெருவில் எறியப்பட்ட 340 கோடி, அதிகாரிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்.. 2018ம் ஆண்டு இரணைமடு குளத்தின் நீர்மட்டம் உயர்வினால் வடிநிலப்பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அழிவுகளுக்கான காரணம் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டு பிரதம செயலரிடம் கையளிக்கப்பட்ட நிலையில், அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாணத்தின் மிகப்பெரிய குளமான இரணைமடுக்குளம் பெருக்கெடுத்த மையால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களும் பயிர்களும் அழிந்து நாசமாயின. உலகவங்கி…
-
- 0 replies
- 231 views
-
-
5 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய பிள்ளையான் September 3, 2020 சிவநேசத்துரை சந்திரக்காந்தன் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவில் இன்று காலை 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அவர் வாக்குமூலம் வழங்கியன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி அவர் இன்று முற்பகல் 9.45 அளவில் குறித்த ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவ…
-
- 3 replies
- 587 views
-
-
தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அரசாங்கத்துடன் இணைய முயற்சியா? அரசாங்கம் கொண்டு வரும் அரசியலமைப்பு திருத்தத்தின் போது எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவதற்கு கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளவர்களில் 13 பேர் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் எம்.பிக்களை அரசாங்க பக்கத்திற்கு எடுப்பதில்லையென்று அரசாங்க தரப்பினர் உறுதியாக இருப்பதாகவே கூறப்படுகின்றது. ஆனால் பழனி திகாம்பரம் , இராதாகிருஷ்ணன் , மனோ கணேசன் ஆகியோர் ஆளும் தரப்புக்கு செல்வது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தகவல்களை ஆதாரம் காட்டி, சிங்கள ச…
-
- 0 replies
- 368 views
-
-
19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் முயற்சியை கூட்டமைப்பு எதிர்க்கும்; சுமந்திரன் அறிவிப்பு September 3, 2020 ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாம் 19 ஆவது திருத்தத்தை உருவாக்கினோம். தற்போதைய அரசு இதை இல்லாதொழிக்க முயல்கிறது. இது நாட்டுக்குக் கேடு, ஜனநாயக விரோத செயல். இதை நாங்கள் எதிர்ப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சியில் தனது அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்- “எமக்கு முன்பாக பாரிய சவால் உள்ளது. எந்த மோசமான ஆட்சியாளர்களை வீழ்த்தினோமென மார்தட்டினோமோ, அவர்கள் அதைவிட மோசமான விதத்தில், அதிக பலத்துடன…
-
- 4 replies
- 594 views
-
-
சாதாரண அரசியல்வாதிகளுக்கு, எழுந்து நிற்க.. வாய்ப்பு வழங்காமல் இருப்பது கொடுமை- ஹிருணிகா நாட்டில் ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது மிகவும் கொடுமையான விடயமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் மனங்களில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அத்துடன் இன்று ஜனாதிபதி, கிராமப்பகுதிகளுக்கு சென்றால், கடவுள் வருகிறார் எனக் கூறும் நாடு இது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் பலத்த மழை ப…
-
- 0 replies
- 335 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைப்பு.! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சி (தமிழ் தேசிய கூடடமைப்பின்) வடமராட்சி காரியாலயம் வடமராச்சியில் தமிழ் தேசிய கூடடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சடடத்தரணியும் ma சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமராட்சி காரியாலய திறப்பு விழாவில் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர். http://aruvi.com/article/tam/2020/09/03/16264/
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
விக்னேஸ்வருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி தர்சன வெரதுவேஜ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சமூகங்களிடையே இன அல்லது மத வெறுப்பைத் தூண்டும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கியதற்காக விக்னேஸ்வரன் மீது அவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 30ம் திகதி இரண்டு தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளின் மூலம் விக்னேஸ்வரன் மோசமான கருத்துக்களை வெளியிட்டதாக தர்ஷன வெரதுவேஜ் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று விக்னேஸ்வர…
-
- 2 replies
- 574 views
-
-
20 வது அரசியல் யாப்புத் திருத்த வரைவு தயார் – 19 இல் பாரிய மாற்றங்கள் இலங்கையின் அரசியலமைப்பின் 20 வது திருத்த வரைவு தயார் செய்யப்பட்டு நீதியமைச்சினால், வர்த்தமானி மூலம் இன்று பொது அறிவிப்பிற்கு விடப்படுகிறது. இதில், 19 வது திருத்தத்திலுள்ள முக்கிய அம்சங்கள் பல மாற்றப்படுகின்றன என அறியப்படுகிறது. இவ் வரைவில் முன்மொழியப்பட்ட முக்கிய மாற்றங்கள்: அரசியலமைப்புச் சபை (Constitutional Council) அரசியலமைப்புச் சபை (Constitutional Council) பாராளுமன்றச் சபை (Parliamentary Council) எனப் பெயர் மாற்றப்படுகிறது. தற்போது இருக்கும் அரசியலமைப்புச் சபையில் 10 அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரும் எதிர்க்கட்சித் …
-
- 2 replies
- 420 views
-
-
தீப்பற்றி எரியும் கப்பலில் இருந்து காயமடைந்த மாலுமி ஒருவர் மீட்பு தீப்பற்றி எரிந்துக் கொண்டுள்ள கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் மாலுமி ஒருவர் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் இருந்து இதுவரை 18 ஊழியர்கள் வேறு ஒரு கப்பல் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பல் ஒன்றில் இன்று காலை 7.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. பனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பலே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்பு பணிகளுக்காக இலங்கை கடற்படையின் மூன்று கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்ப…
-
- 2 replies
- 456 views
-
-
“மரமொன்றை அடியோடு வெட்டினாலும் அதன் வேர்கள் பரவியிருந்தால், அம்மரம் மீண்டும் முளைக்குமெனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அதற்குச் சில காலமெடுக்கும்; அதுவரையிலும் நான், உயிருடன் இருப்பேனா, இல்லையா என்பது தொடர்பில் தெரியாது. ஆனால், இளைஞர்களை ஒன்றிணைத்து, மரத்துக்கு உயிர்கொடுப்பேன்” என்றார். அதிக ஆண்டுகள் ஆட்சியிலிருந்து ஒரே கட்சி; நாட்டுக்காகப் பல நல்ல விடயங்களைச் செய்த கட்சியே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எனத் தெரிவித்த அவர், அவ்வாறானதொரு கட்சியின் தலைவிதியை எண்ணி, மனவருத்தம் அடைகின்றேன் என்றார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவு நேற்றாகும் (02). அதனையொட்டி, தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர்…
-
- 2 replies
- 504 views
-
-
முஹம்மது நபியென கூறி மீண்டும் கேளி சித்திரம் வரைந்துள்ள “ஷார்லி ஹெப்டோ” பத்திரிக்கைக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்து, பத்திரிக்கை ஆசிரியர் உள்ளிட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் இறுதி இறைத் தூதராவார். முஹம்மது நபியவர்களின் வழிகாட்டல்களை உலகின் 125 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பின்பற்றி வருகின்றனர். முஸ்லிம்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை தம் உயிருக்கும் மேலாக நேசிப்பதுடன், வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் முஹம்மத் நபியின் வழிகாட்டல்களை செயல்படுத்தும் வகையில் அவருடைய சொல், செயல், அங்கீகாரம் அனைத்தையும் முழுமையாக மனிதர்கள் பின்பற்ற வேண்டும் என இஸ்லாம் மனிதர்களுக்கு கற்றுத் தருகின்றது. தமது வாழ்வின் அனை…
-
- 0 replies
- 358 views
-
-
நடுத்தர வருமானம் பெறுவோருக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு! நாடளாவிய ரீதியில் அரச, தனியார் துறைகளில் பணியாற்றும் நடுத்தர வருமானம் பெறுவோர் சொந்த வீடொன்றை வாங்குவதற்கு வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கும் வகையிலான புதிய செயற்திட்டமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுகின்ற நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு, அவர்களுடைய வருமானத்திற்கு ஏற்றவாறாக வீடொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு கடந்த மே மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஆரம்ப மூலதனத்தைத் திரட்டிக்கொள்வதற்கான 5 வருடகாலத்திற்கு செல்லுபடியாகக…
-
- 0 replies
- 327 views
-
-
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகள் முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஒத்துழைப்பு நல்குவோமெனத் தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க, அடுத்த அரசமைப்புத் திருத்தத்திலேயே அதை உட்புகுத்தினால் ஜே.வி.வி முழுமையாக ஆதரவளிக்கும் என்றார். தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், 13,19ஆவது திருத்தங்களைப் போலவே 20ஆவதும் ஒரு திருத்தமாகும் என்றார். “திருத்தங்களின் ஊடாக, அவற்றைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். திருத்தவேண்டிய ஆவணங்கள், புதிய கடிதங்களை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். அவ்வாறான ஆவணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும்” என்றார…
-
- 0 replies
- 365 views
-
-
தென்மராட்சி – சரசாலை குருவிகள் சரணாலய பகுதிகளில் தனியார் வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதனால் அப்பகுதியில் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சரசாலை பகுதியில் குருவிக்காடு என அழைக்கப்படும் குருவிகள் சரணாலயம் உள்ளது. அப்பகுதி ஊடாக செல்லும் வீதியின் இருமருங்கிலும் கழிவு பொருட்கள் வீசப்பட்டு வந்தமையால் சரணாலய காடு துர்நாற்றம் வீசும் பகுதியாக காணப்பட்டதுடன், அவ்வீதி வழியாக செல்வோரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். அது தொடர்பில் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டதுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் தன்னார்வ அடிப்படையில் இளைஞர்களும் இணைந்து பிரதேச சபையின் உதவியுடன் அப்பகுதியை சிரமதானம் மூலம…
-
- 0 replies
- 407 views
-
-
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்பட மாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உறுதியளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வாக்குறுதிக்கமைய நாடளாவிய ரீதியில் வறிய குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் அரசாங்க வேலை வாய்ப்பினை பெற்றுக்கு கொடுக்கும் செயற்றிட்டம் வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேச…
-
- 0 replies
- 283 views
-
-
(நா.தனுஜா) வடக்கு - கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வொன்றை வழங்கும் நோக்கிலேயே மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் அவை கடந்த இரண்டு வருடகாலமாக இயங்காத போதிலும், அதற்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து எந்தவொரு போராட்டங்களோ எதிர்ப்புக்களோ எழவில்லை என்பதால் புதிய அரசியலமைப்பு தயாரிப்பின் போது இதுகுறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கேள்வி…
-
- 0 replies
- 307 views
-
-
(எம்.மனோசித்ரா) காணி உறுதிப்பத்திரம் இன்மையால் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாட்டுக்கும் பொருளாதார கொள்கைக்கும் பொருத்தமான வகையில் காணி கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச வியாபார காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், பரம்பரையாக வாழ்ந்து வந்தாலும், பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் உறுதிப்பத்திரம் இல்லாமையினால் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பிரச்சி…
-
- 0 replies
- 246 views
-
-
(நா.தனுஜா) நாட்டுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்காக அமைச்சர்கள் உள்ளடங்கலாக அரச உத்தியோகஸ்தர்கள் அனைவரும் ஒவ்வொரு புதன்கிழமையும் தத்தமது அலுவலகங்களிலேயே இருக்கவேண்டும் என்றும் அன்றைய தினம் வேறு வேலைகளுக்காகச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருக்கிறார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்கான நேரம் போதுமானதாக இல்லை என்றும் அமைச்சரவை உபகுழுவின் பணிகள் உள்ளடங்கலாக தினமும் பல்வேறு வேலைகள் இருப்பதாகவும் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்தே மக்களின் குறைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிவதற்காக நாளொன்றை ஒதுக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜன…
-
- 0 replies
- 243 views
-
-
பூட்டிய விடுதியைத் திறந்து வாயடைத்து நின்றார் எம்.பி க. அகரன் தனக்கு வழங்கப்பட்ட விடுதியைத் திறக்கும் போது, அங்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் அவருடைய ஆதரவாளர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தமையைப் பார்த்து, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் வாயடைத்து நின்றுவிட்டார். அந்த விடுதி, சிவசக்தி ஆனந்தன் எம்.பிக்கு வழங்கப்பட்டிருந்தது. கடந்த பொதுத் தேர்தலில் மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, விடுதியைப் பூட்டிவிட்டு, அதன…
-
- 3 replies
- 537 views
-
-
சபாநாயகருடன் நோர்வே தூதுவர் சந்திப்பு பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவை இலங்கைக்காக நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல் இன்று (03) காலை சந்தித்தார். 9 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன், பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவம் தொடர்பில் இவர்கள் கலந்துரையாடியிருந்தனர். எதிர்காலத்தில் பாராளுமன்ற அங்கத்தவர்களின் பகிர்வுகள் தொடர்பான பரஸ்பர நிலைபாடுகளையும் தூதுவரும் சபாநாயகரும் கலந்துரையாடியிருந்தனர். முன்னர் ஒஸ்லோ நிலையத்தின் நிகழ்ச்சித்திட்டமொன்றின் அடிப்படையில், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நோர்வே பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்து, வெவ்வேறு கட்சிக…
-
- 1 reply
- 395 views
-